அஸ்திவாரம்

Saturday, January 10, 2015

உங்களுக்கு (மட்டும்) இந்தப் பரிசு

சென்ற வருடத்தில் (2014) சில சாதனைகள் செய்ய முடிந்தது. கூடவே அவசியம் கற்றுக் கொள்ள வேண்டிய பல பாடங்கள் மூலம் புதிய அனுபவங்களும் கிடைத்தது.

சென்ற வருடம் நான் எழுதிய டைரிக்குறிப்புகள் ஏராளமான பேர்களுக்கு போய்ச் சேர்ந்தது.  இன்று வாசித்தாலும் இயல்பாக உள்ளது.

2014 ஆம் ஆண்டு உடல் ஆரோக்கியம் படம் காட்டத் தொடங்கியது. அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பவர்களும், செய்தே ஆக வேண்டிய நிலையில் இருப்பவர்களும் வாழும் பூமி திருப்பூர்.  ஆனால் இது நாள் வரைக்கும் பழக்க வழக்க கட்டுப்பாட்டில் ஆரோக்கியத்தை கட்டுக்குள் வைத்திருந்த காரணத்தால் இழுத்த இழுப்புக்கு வளைந்து கொடுத்துக் கொண்டிருந்தது. தற்போது "ராசா வேகத்தை குறைத்துக் கொள்" என்று அன்பான எச்சரிக்கை மணி அடிக்கத் தொடங்கியுள்ளது. "பணம் தான் வாழ்க்கையில் பிரதானம்" என்று வாழக்கூடியவர்களுடன் சேர்ந்து வாழும் போது நமக்கு உருவாகும் மன உளைச்சலை குறைக்க வலைபதிவு எழுத்து வாழ்க்கை அமைந்த காரணத்தால் இன்னமும் சில ஆண்டுகள் எழுத முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

ன்ன தான் ஆரோக்கியமான பழக்கங்கள் இருந்தாலும், பொருளாதார ரீதியாக அடிப்படை விசயங்கள் சரியாக இருந்தாலும் நாற்பது வயது முதல் ஐம்பது வயது வரைக்கும் உண்டான உடல் சார்ந்த மனம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து "வயசு ஏறுது மனசு மாறுது" என்ற தொடர் மூலம் சிலவற்றை எழுதி வைக்க விரும்புகின்றேன்.  எப்போதும் போல என் வாழ்க்கையின் வழியாக நான் பார்த்த மனிதர்களின், அவர்களின் மாறிய பழக்க வழக்கங்கள், தடுமாறும் உள்ளங்கள், மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் தடுமாறுதல் போன்றவற்றை எழுத விரும்புகிறேன்.

விரைவில் அதைப் பற்றி எழுதுகின்றேன்.

சென்ற வருட மத்திம பகுதியில் எங்கள் குழந்தைகள் மூவரில் இருவரை பள்ளியில் படிப்பு மற்றும் பல திறமைகள் சார்ந்த விசயங்களுக்குத் தேர்ந்தெடுத்தனர். குழந்தைகள் படிக்கும் பள்ளியில் ஆயிரம் மாணவ மாணவியர்கள் படிக்கின்றார்கள். இதில் ஐந்து பெற்றோர்களைச் சில தகுதிகள் அடிப்படையில் தேர்ந்தெடுத்துச் சிறப்பு விருந்தினராக அழைத்து இருந்தனர்.

ள்ளியில் மொத்தமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 250க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குப் பரிசு வழங்க அழைத்தனர். என்னையும் சிறப்பு விருந்தினராக அழைத்து இருந்தனர். எங்கள் குழந்தைகள் இருவரும் என் கையால் பரிசுகள் வாங்கும் அற்புத நிகழ்ச்சி நடந்தது. எனக்கே கொஞ்சம் ஆச்சரியம். கூடவே கூச்சம். 

டந்த ஒன்பது ஆண்டுகளில் இந்தப் பள்ளியின் வளர்ச்சிக்கென என்னாலான கருத்துக்களை ஒவ்வொரு முறையும் தயங்காமல் தெரிவிப்பதும், சண்டை பிடித்துப் பல விசயங்களை மாற்றியதில் எனக்கும் பங்குண்டு. பள்ளியின் நிர்வாகத்திற்கு எங்கள் குடும்பத்தின் மீது, எங்கள் குழந்தைகள் மீது தனிப்பட்ட அக்கறையுண்டு. 

ள்ளியின் தாளாருக்கு, அவர்களின் துணைவியாருக்கு நான் எழுதிக் கொண்டிருப்பது தெரியும் என்பதால் விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த மற்ற சிறப்பு விருந்தினருக்கு என்னை அறிமுகம் செய்து வைத்த போது என் தொழில் சார்ந்த பதவியைச் சொல்லிவிட்டு என் சிறப்புத்தகுதி என்பதை எழுத்தாளர் என்று அறிமுகப் படுத்தினார். தொழில் அதிபர்கள் என்ற நிலையில் வந்த மற்றவர்கள் எப்போதும் போல நீங்கள் இருக்கும் பதவியில் இருந்து கொண்டு எப்படி எழுத முடிகின்றது? என்று எப்போதும் நான் சந்திக்கும் கேள்வியை மறக்காமல் கேட்டனர்.

வீட்டில் ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையும் இரண்டு தமிழ் தினசரிகளும் வாங்குகின்றோம்.  இது தவிர வார இதழ்கள், குழந்தைகள் இதழ்கள் வாங்குகின்றோம்.  கடந்த நாலைந்து மாதமாக காலையில் எழுந்தவுடன் அவரவர்களும் பத்திரிக்கை படிக்க ஒரு போட்டியை உருவாக்கி வெற்றியடைந்துள்ளேன்.  நான் சிறுவயதில் படித்தது போல இவர்களும் பத்திரிக்கைகள் வாசிக்கத் தொடங்கியுள்ளனர். சமூகம் சார்ந்த அனைத்து விசயங்களையும் இயல்பாக உரையாட பழகியுள்ளனர். பத்தாம் வகுப்பு முடிப்பதற்குள் நிச்சயம் வெளி உலகத்தை புரிந்து கொண்டு விடுவார்கள் என்று நம்புகிறேன்.

துவரையிலும் ஐந்து மின் நூல்கள் வெளியிட்டுள்ளேன். எதிர்பார்க்காத அளவுக்கு ஆதரவு கிடைத்தது. விரைவில் காரைக்குடி உணவகம் என்ற பெயரில் மற்றொரு மின் நூல் வரப் போகின்றது. பலரும் மகிழ்ச்சியுடன் பாராட்டிய இஞ்சித்தேன், நெல்லித்தேன், சத்துமாவு போன்ற விசயங்கள் இந்த மின் நூலில் உள்ளது.  இது தவிர இன்று "ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்" என்ற மின் நூல் வெளியிடப்படுகின்றது. தேவைப்பட்டவர்கள் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு மின் நூல் ஆக்கத்தில் 90 சதவிகித வேலைகளை நான் முடித்து சீனிவாசனிடம் கொடுத்து விடுவதுண்டு. ஆனால் இந்த முறை மின் நூல் ஆக்கத்தை சீனிவாசன் தான் முடித்துக் கொடுத்துள்ளார். அவருக்கும் அட்டைபடம் வடிவமைத்துக் கொடுத்த நண்பர் மனோஜ்க்கும் என் நன்றி.

2014 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் வலைத்தமிழ் இணையத் தளத்தில் திருப்பூர் தொழிலாளர்கள் மற்றும் ஆயத்த ஆடைத்துறை சார்ந்த நிர்வாக முறைகள், சிக்கல்கள், சவால்கள் போன்றவற்றை என் அனுபவம் வாயிலாக "ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்" என்ற பெயரில் இருபது வாரங்கள் எழுத வாய்ப்புக் கிடைத்தது. 

ப்போது அவசரம் அவசரமாக இரவு நேரங்களில் எழுதி, அதனைப் பிழை திருத்த முடியாமல் வலையேற்றி பலரும் சுட்டிக்காட்டும் போது மனதளவில் சங்கப்பட்டுள்ளேன். இது தவிர எழுதிய கட்டுரைகளில் கோர்வையில் கவனம் செலுத்தாமல் இருந்துள்ளேன். இந்த முறை "ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்" எழுதத் தொடங்கிய போது பலவற்றை மனதில் கொண்டு மூன்று முறை திருத்தி, சில அத்தியாயங்கள் நண்பரிடம் கொடுத்து, அவரின் விமர்சனங்களைக் கேட்டு, படிப்படியாக உணர்ந்து, உள்வாங்கி மூன்று நாட்கள் வைத்திருந்து செப்பனிட்டு வலைத்தமிழ் தளத்திற்கு அனுப்பி வைத்தேன். 

ஓ.தொ.கு. பலருக்கும் போய்ச் சென்று சேர்ந்துள்ளது. இதனை விட ஆச்சரியம் திருப்பூரில் இதே துறையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நண்பர்களின் அக்கறையும், விமர்சனமும், வாழ்த்துகளும் எனக்குக் கிடைத்துள்ளது. ஆச்சரியமாக இருந்தது. பலரும் வெளிப்படையாகப் பாராட்டினர்கள். 

"நாங்கள் பலவற்றை இந்தத் தொடர் மூலம் கற்றுக் கொண்டோம். ஒவ்வொரு நாளும் இதனைப் படித்தே ஆக வேண்டிய அளவுக்குப் பயன் உள்ள தகவல் உள்ளது" என்றனர். "நிர்வாகத்திறமையை வளர்த்துக் கொள்ளப் பல விசயங்கள் உள்ளது. கோப்பாக மாற்றிவிடுங்க" என்றனர். 

நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. 

வ்வொரு அத்தியாயத்தை எனது தளத்தில் வெளியிட்டு விட்டு அதற்கு வருகின்ற விமர்சனத்திற்குப் பதில் அளிக்க முடியாத அளவுக்குக் கடந்த நான்கு மாதங்கள் உடல் ரீதியாகப் பாதிப்பு (முதல் முறையாக) வருமளவிற்கு வேலைப்பளூ இருந்த போதிலும் மிகுந்த அக்கறையும் தொழிற்சாலை குறிப்புகளை எழுதியதற்குச் சில நண்பர்கள் காரணமாக இருந்தனர் என்பதனை இந்த இடத்தில் எழுதி வைக்க விரும்புகின்றேன். 


வர்கள் இருவரும் ஒவ்வொரு வாரமும் வலைத்தமிழ் தளத்தில் இவர்கள் கொடுக்கின்ற விமர்சனத்தைப் பார்த்து மிரண்டு போயுள்ளேன். ஆழ்ந்த வாசிப்புடன் அக்கறையுடன் வரிக்கு வரி படித்தால் மட்டுமே தெளிவான விமர்சனத்தைக் கொடுக்க முடியும் என்பதை நிரூபித்தனர். கடைசியாக மொத்தமாக இருவரும் விமர்சனம் தந்தனர். முரளி தனது தளத்தில் வெளியிட்டு எனது உழைப்புக்கு அங்கீகாரம் கொடுத்தார்.

நண்பர்களின் விமர்சனங்கள் படிக்க

துரையில் இருந்து ரவீந்திரன், மொத்தமாக ஒரே நாளில் பொறுமையாக விட்டுப் போன அத்தியாயங்களைப் படித்து விட்டு எனது தளத்தில் விமர்சனம் தந்த கிரி, நண்பர் சிவகுமார் கோபால்ராம், திருப்பூர் நண்பர்கள் விஸ்வநாதன், நிகழ்காலத்தில் சிவா, சாமிநாதன். இவர்களுக்கு என் நன்றி. 

கடுமையான வேலைப்பளூ இருந்த போதிலும் எங்கள் குடும்பத்தின் மேல் அதிக அக்கறை காட்டும் திருமதி ரஞ்சனி நாராயணன் அளித்த விமர்சனப் பார்வைக்கு என் நன்றி. 

திருப்பூரில் பணிபுரிந்து கொண்டிருக்கும் பலரும் இதனைப் படித்துக் கொண்டே வந்தனர் என்பதை அவர்களை அந்தந்த அத்தியாங்களில் கொடுத்த விமர்சனம் வாயிலாகக் கண்டு கொண்டேன். "டாலர் நகரம்" என்ற தொடர் 4தமிழ் மீடியா தளத்தில் வெளிவந்த போது எந்த அளவுக்கு ஆதரவு இருந்ததே அந்த அளவுக்கு உலகம் முழுக்கக் கொண்டு போய்ச் சேர்ந்த வலைத்தமிழ் குழுவினருக்கு என் நன்றி. 

ந்தத் துறை சார்ந்த எவருமே இந்தத் தொடர் குறித்து எவ்வித விமர்சனங்களையும் கொடுக்கவில்லை. "சரியாகத்தான் உள்ளது" என்றனர். ஆனால் பலரும் "நீளமாக உள்ளது, இழுத்துக் கொண்டே சென்றீர்கள், உங்களைப் பற்றிய தகவல்கள் அதிகம்" போன்ற பல விமர்சனங்களைத் தந்தனர். 

னக்கும் முதலில் குழப்பமாக இருந்தது. நெருங்கிய நண்பர்களிடம் கொடுத்து கேட்ட போது "இது போன்று துறை சார்ந்து எழுதும் போது உங்களை முன்னிலைப்படுத்தி எழுதித்தான் ஆக வேண்டும்" என்றனர். குறிப்பாக எழுத்தாளர் அமுதவன் இது குறித்த என் சந்தேகங்களை அழகாக நிவர்த்திச் செய்து உதவினார். சென்ற வருடத்தில் அவர் மூலம் எழுத்துலகத்தில் பல படிகள் ஏறியுள்ளேன்.

ந்தத் தொடரின் வெற்றிக்கு முக்கிய காரணம் இதில் வந்துள்ள புகைப்படங்கள்.  நானும் இந்தத் தொழிலில் இருந்தேன் என்பதை உணர்த்தும் அளவிற்கு இந்தத் துறையில் உள்ள ஒவ்வொரு துறை சார்ந்த விசயங்களையும் மிக அழகாக புகைப்படம் எடுத்தவர் சென்னையில் வசிக்கும் புகைப்படக்கலைஞர் நெருங்கிய நண்பர் அகலிகன்.  என் வலைபதிவு எழுத்தின் மூலம் அறிமுகமாகி என் நலம் விரும்பியாக மாறியவர்.  இந்தத் தொடர் மூலம் கிடைக்கக்கூடிய அனைத்து பாராட்டுகளும் அவருக்குத் தான் போய்ச் சேர வேண்டும்.  

லைத்தமிழ் நிர்வாகம் இதனைப் புத்தகமாகக் கொண்டு வரவும், இதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப் போவதாகவும் சொல்லியுள்ளனர். திருப்பூரில் உள்ள நெருங்கிய நண்பரின் வேண்டுகோளின் படி இதனை அவசரமாக மின் நூலாக மாற்றியுள்ளேன். காரணம் இது அவசியம் இங்குள்ள ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம் என்று வாழ்த்தியத்திற்கு இந்த மின் நூலை காணிக்கையாக அளிக்க விரும்புகின்றேன். 

மேலும் புத்தகமாகக் கொண்டு வரும் போது அது சார்ந்த நடவடிக்கைகளுக்காக நாம் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். பல சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும். எழுதுகின்றவனுக்குச் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வருமானம் வருவதும் இல்லை. ஒரு புத்தகத்திற்கு ராயல்டி என்று கிடைக்கும் தொகையைப் பார்த்து (நான் வாங்கிக் கொண்டிருக்கும் சம்பளத்தை ஒப்பிட்டு) சிரித்து விட்டேன். அடக் கொடுமையே? இதற்குத் தான் இத்தனை அடிதடியா? என்று. மேலும் படிக்க விரும்புவன் எதிர்பார்க்கும் விலையும் பல சமயம் அமைந்து விடுவதில்லை. இது போன்ற பல சிக்கல்கள் காரணமாக உருப்படியான எந்த விசயமும் விரும்பியவர்களின் கைக்குப் போய்ச் சேர்வதே இல்லை.  புத்தக சந்தைக்கு, புத்தகங்களுக்கு என்று இங்கே தனிப்பட்ட பெரிய மரியாதை இல்லை.

ற்ற மாநிலங்களில் எப்படி? என்று தெரியவில்லை.  நிச்சயம் தமிழ்நாட்டில் இல்லை. பதிப்பக மக்கள் பலவிதங்களில் போராடித்தான் தங்கள் முதலீடுகளை காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கின்றார்கள். அவர்களை எந்த விதங்களிலும் குறை சொல்ல முடியாது.

ஏற்கனவே இதைப் பற்றி எழுதி உள்ளேன். 

ணைய தளம், ஜால்ரா கோஷ்டிகள், பரஸ்பரம் சந்தனம் தடவுதல், புகழ்ந்து எழுதுவது போன்ற பலதரப்படட விளம்பர யுக்தி மூலம் மட்டுமே இங்கே புத்தக விற்பனை நடக்கின்றது.  மற்றபடி அச்சடித்த புத்தகங்கள் அனைத்தும் (விற்பனையாக பட்சத்தில்) ஏதோவொரு குடோனில் பாதுகாப்பாக இருக்கும்.  இது தான் உண்மை. இது தான் எதார்த்தம். காகிதத்திற்காக வெட்டப்பட்ட மரங்கள் பாவம். ஒரு புத்தகம் என்பது உங்களை உங்கள் எண்ணங்களை மாற்ற உதவுவது.  அப்படி மாற்ற உதவாத புத்தகங்கள் என் பார்வையில் வெறும் காகிதமே. 

ணையம் என்றால் நினைத்த நேரத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும். கணினியில் தொடர்ச்சியாகப் படிக்க முடியாதவர்கள் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ள முடியும். கைபேசியில், டேப்லேட் பிசி மூலம் படிக்க என்று பல வாய்ப்புகள் இருப்பதால் மின் நூலாகக் கொண்டு வந்துள்ளேன். 

புத்தகமாக வரும் போது குறிப்பிட்ட சிலரின் கைக்குத்தான் போய்ச் சேரும். அதைப் பெறுவதில் பல சங்கடங்கள் உள்ளது. தனியார் மற்றும் அரசுத்துறை என்றாலும் அவர்களின் சேவை மனப்பான்மை என்பது மாறி காசு சார்ந்த நோக்கங்கள் என்பதால் ஒரு கொரியர் குறிப்பிட்ட ஆளிடம் போய்ச் சேர்ப்பதில் கூட இங்கே கடைசி வரைக்கும் பின் தொடர வேண்டியதாக உள்ளது. 

பகல் முழுக்க அலுவலகம் சார்ந்த வேலையில் இருப்பதால் புத்தகச் சந்தை சார்ந்த எந்த விசயத்திலும் என்னால் கவனம் செலுத்த முடியாத நிலையில் உள்ளேன். 

சென்ற வருடம் இரண்டு தொலைக்காட்சியில் இருந்து பேச அழைத்தனர். அதற்கென்று என்னைத் தயார் படுத்திக் கொள்வதும், அவர்கள் விரும்பும் நாளில் சென்று வருவதும் மிகுந்த சவாலைத் தரக்கூடியதாக இருப்பதால் தவிர்த்து விட்டேன். குடும்பம், தொழில் இந்த இரண்டுக்கும் பிறகு தான் மற்ற எனது விருப்பம் சார்ந்த துறை என்பதைக் கவனமாக வைத்துள்ளேன். 

ரு புத்தகத்தை மின் நூலாக வெளியிடும் போது உலகம் முழுக்கப் பரவியுள்ள தமிழர்கள் வாசிக்க விரும்பும் அத்தனை பேர்களின் கைக்கும் போய்ச் சேர்ந்து விடும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. 

இணையம் தான் எனக்கு எழுத கற்றுத் தந்தது. நண்பர்கள் தான் உதவினர். அவர்களுக்கு உதவுவது என் கடமையும் கூட. 

ய்த்த ஆடைத்துறை சார்ந்த விசயங்கள் மட்டுமல்ல. எளிய மற்றும் பணம் படைத்தவர்களின் மறுபக்க வாழ்வை அலசும் வாழ்வியல் தொடராக இருப்பதால் அனைவருக்கும் பயன்படும் என்று நம்புகின்றேன். 

புத்தாண்டு கொண்டாட்டங்கள், பிறந்த நாள் கொண்டாட்டங்கள், சடங்கு சார்ந்த சம்பிராதாய நிகழ்வுகள் போன்ற எதிலும் எனக்கு விருப்பமில்லை. பல முறை இது குறித்த எனது பார்வையை எழுதியுள்ளேன். ஒவ்வொரு நாளையும் நாம் கொண்டாடி வாழ வேண்டும் என்ற விருப்பத்தில் இருப்பவன் என்பதால் ஒவ்வொரு நாளும் எனக்குப் புத்தாண்டு தினமே.

மற்றபடி "எண்ணம் போல வாழ்வு" என்பதனை எப்போதும் மனதில் வைத்திருங்கள். 


47 comments:

  1. மனம் திறந்து ஓர் சுய அலசல் செய்து விட்டீர்கள்! இந்த ஆண்டும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் தொழிலில் இருந்து கொண்டு எழுத்துத்துறையில் நீங்கள் காட்டும் வேகம் பிரமிப்பானது. அடுத்த கட்டத்திற்கு நகர வாழ்த்துகள் சுரேஷ்

      Delete
  2. மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  3. உங்கள் எழுத்து எங்கும் செல்ல வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. சென்ற ஆண்டில் நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகள் பற்றிய உங்கள் கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். ஆனாலும் எனக்கென்னவோ உங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் உங்களைச் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக அழைத்து உங்கள் பிள்ளைகளுக்கும் உங்களையே பரிசுகள் கொடுக்கப் பணித்திருக்கிறார்களே அந்த நிகழ்வுதான் முக்கியமானதாகவும் முதன்மையானதாகவும் தெரிகிறது. உங்களுக்கும் பிள்ளைகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி. ஆனால் சென்ற ஆண்டு தொழில் சார்ந்த பிரச்சனைகள், அதிகப்படியான வேலைகள் காரணமாக குழந்தைகள் விசயத்தில் அதிகம் கவனம் செலுத்த முடியாமல் போய் விட்ட வருத்தத்தை இந்த ஆண்டு நிறைவேற்ற முடியும் என்ற திட்டமிடுதலில் உள்ளேன்.

      Delete
  5. ஒரு அருமையான அலசல் அண்ணா...
    ஒரு தொழிற்சாலையின் குறிப்புக்களின் இருபது பகுதிகளையும் வாசித்திருக்கிறேன்.
    மின்னூலை எடுத்து மீண்டும் ஒரு முறை வாசிக்கிறேன்...
    இந்த ஆண்டும் தங்களுக்கு சிறப்பான ஆண்டாக அமைய வாழ்த்துக்கள் அண்ணா.
    குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. தாங்கள் மேன் மேலும் இந்த வருடமும் சிறக்கவும், இன்னும் நூல்கள் வெளிக் கொணருவும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. பாராட்டுகளும் வாழ்த்துக்களும். இந்த ஆண்டும் உங்கள் எழுத்துப் பணி தொடரட்டும். உடல் நலம் வாழ்க்கையில் மிக முக்கியம். அது போனால் திரும்ப வராது என்பதைக் கவனத்தில் கொள்ளவும். பணம் வரும் போகும்.

    ReplyDelete
    Replies
    1. அறிவுரைக்கு நன்றி. என் எண்ணமும் அதே. உங்களுக்கு என் இனிய நல்வாழ்த்துகள்.

      Delete
  8. இன்னமும் பல ஆண்டுகள் எழுத வேண்டும் - குழந்தைகளை முழுமையாக கவனித்துக் கொண்டு...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. என்னுடைய தளத்தில் பாலச்சந்தர் பற்றிய பதிவு ஒன்றை எழுதியிருக்கிறேன். தமிழ்மணத்தில் இணைப்பதில் ஏதோ சிக்கல். முடிந்தால் படித்துப் பார்க்கவும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றாக வந்துள்ளது. புத்தகமாக கொண்டு வரக்கூடிய கட்டுரையிது.

      Delete
  10. அன்பு தோழனுக்கு, வணக்கம்,
    தங்கள் குழந்தைகள் பயிலும் பள்ளியில் தாங்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தாங்கள் பரிசளித்து அவர்கள் பெற்றுக் கொள்ளும் போது அவர்கள் முகத்தில் தெரியும் மகிழ்ச்சிக்கு விலை மதிப்பில்லை. அதை நானும் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். எட்டாம் வகுப்பில் என் முதல் மகள் முதல் மாணவியாக வந்தபோது அதனை தொடர்ந்து வந்த வார முதல் நாள் அசெம்பிளி நிகழ்வின் போது என்னை சிறப்பு விருந்தினராக அழைத்து தலைமையாசிரியர் அறையில் அமரவைத்து, அங்கு வந்து 4 என்சிசி மாணவர்கள் அணிவகுப்பு மரியாதையுடன் பள்ளியின் அசெம்பிளிக்கு அழைத்துச் சென்று கொடியேற்றச் சொன்னதுடன், ஒவ்வொரு வகுப்பின் முதலாவதாக வந்த மாணவரின் பெற்றோருக்கும் இவ்வாறு பெருமைப்படுத்தப்படும், இது போன்று நிகழ்வில் தங்கள் தந்தைக்கு இந்த பெருமை கிடைக்க வேண்டுமென்றால், நீங்களும் நன்றாக படியுங்கள் என
    பிற மாணவ, மாணவியருக்கு தலைமையாசிரியர் உரையாற்றினார். அந்த நாளில் என் மகளும் சில பரிசுகள் பெற்றாள். தங்கள் பெண்கள் (தேவியர் 3 பிளஸ் 1) அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    சில நாட்களாக தொடர்பில்லாமலிருந்ததற்கு மன்னிக்கவும். டிசம்பர் கடைசி கிறித்துமஸ் விடுமுறையிலிருந்து 3 தினங்கள் மருத்துவமனையில் உள் நோயாளியாகவும், பின்னர் இரண்டு நாட்கள் விடுப்பிலும், அதனை தொடர்ந்து வேலை நிறுத்தம் காரணமாகவும் தொடர்புகள் இயலவில்லை. அவை பற்றி பின்னர் தொலைபேசியில் பேசலாம்.
    தங்கள் தொழிற்சாலையின் குறி்ப்புகள் மின்நூலாக வருவதில் என்னைப் போன்றவர்களுக்குத் தான் மகிழ்ச்சி அதிகம், ஏனெனில் அவ்வப்போது நுனிப்புல் மேய்ந்து (திரை நடிகை எஸ்.வரலட்சுமி போல் அதான் எனக்குத் தெரியுமே என நகர்ந்திருப்போம்) நகர்ந்தவர்களுக்கு தொகுப்பாக படிக்கக் கிடைப்பது மிக்க நன்று.












    ReplyDelete
    Replies
    1. நன்றி. நேரம் இருக்கும் போது அழைக்கவும். (என்னைப் போலவே) நீங்கள் உடல் நலத்தில் அக்கறை கொள்ளவும்.

      Delete
  11. "புத்தாண்டு கொண்டாட்டங்கள், பிறந்த நாள் கொண்டாட்டங்கள், சடங்கு சார்ந்த சம்பிராதாய நிகழ்வுகள் போன்ற எதிலும் எனக்கு விருப்பமில்லை. பல முறை இது குறித்த எனது பார்வையை எழுதியுள்ளேன். ஒவ்வொரு நாளையும் நாம் கொண்டாடி வாழ வேண்டும் என்ற விருப்பத்தில் இருப்பவன் என்பதால் ஒவ்வொரு நாளும் எனக்குப் புத்தாண்டு தினமே."

    எனது எண்ணங்களையும் நடைமுறைகளையும் பிரதிபலிக்கும் வரிகள்.

    வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. வருக நண்பரே. நல்வாழ்த்துகள்.

      Delete
  12. I always give most preference to your writings. Understanding the complexity and your analytical
    analytical skills are your expertise. Give at most attention to your health. May God bless you for
    good health and long life. My advance Pongal greetings to you.

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து என் எழுத்து மேல் அக்கறை வைத்துள்ள உங்களுக்கு என் நன்றி. இனிய பொங்கல் தமிழர் திருநாள் வாழ்த்துகள் தவேஷ்.

      Delete
  13. உங்க பொண்ணுங்க மெடல் வாங்கலைன்னாத்தான் அது ஆச்சரியம் :)

    வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. சிரித்து விட்டேன் சிவா. நன்றி. வாழ்த்துகள்.

      Delete
  14. குழந்தைகளின் முகத்தில் இருக்கும் பெருமிதம் என்னை ரொம்பவும் கவர்ந்தது. தங்களது வகுப்புத் தோழிகளிடம் (அப்பாவிடமிருந்து பரிசு வாங்கியதைப் பற்றி) என்ன சொல்லியிருப்பார்கள் என்று அறியும் ஆவலும் ஏற்படுகிறது. பெரியவர்கள் யாரையாவது சுற்றிப் போடச்சொல்லுங்கள். நீங்கள் இவற்றின் மேல் நம்பிக்கை வைக்காவிட்டாலும்!

    இந்த வருடமும் உங்கள் எழுத்துப் பயணம் இனிதே தொடர வாழ்த்துக்கள். உடல்நலத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் தேவியர்களுக்கும் உங்களுக்கும் ஆசிகள்.
    அன்புடன்,
    ரஞ்சனி

    ReplyDelete
    Replies
    1. அவர்கள் என் கையால் பரிசு வாங்கும் போது என் விரலை கிள்ளிவிட்டு (யாருக்கும் தெரியாதவாறு) நகர்ந்தார்கள் என்பது கூடுதல் தகவல். ஆசிகளுக்கு நன்றி.

      Delete
  15. இன்னாபா நீ!
    எந்த டாபிக்லே எயுதினாலும் சும்மா கீ...கீ...கீன்னு கீச்சிடுரேபா.
    நூ இயர்லாம் கொண்டாட்றது கெடியாதுன்னு சொல்லிக்கினே போன வருசம் செஞ்சதெல்லாத்தயும் சூப்பரா சொல்லிக்கீரேபா.
    அப்பாலிக்கா... நம்ம கொயந்தகள நாமளே பாராட்டாத இந்தக்காலத்துலே, நீ அவங்கள்க்கு ஸ்கூலிலேயே ப்ரைஸ் கொடுத்திக்கிரேபாரு... டாப்பா!
    அப்புறமா முக்கியமா ஒண்ணு... ஹெல்த் ஈஸ் வெல்த்பா. ஞாபகம் வெச்சுக்க.
    கட்சியா ஒரு விஷயம். எனக்கே சொல்ல வெக்கமா கீது.
    நீ பாட்டுக்கு புக் புக்கா எய்திக்கினேகீரே. ஆனா எனக்குதான் அத்த படிக்க கூட டய்ம் இல்லேப்பா. ஆனா மனசு மட்டும் "நீ இன்னும் ஜாஸ்தியா எயுதனும்"னு துஆ செய்துபா.

    ReplyDelete
    Replies
    1. ரசித்தேன். சிரித்தேன்.மகிழ்ந்தேன்.

      Delete
  16. நான் வலைத்தளம் நடத்த ஆரம்பிப்பதற்கு முன்பு இணையத்தில் தமிழ்பதிவுகளை தேடி படிப்பதுண்டு. அப்படி தேடும் போது உங்கள் தளம் என் கண்ணில்பட்டது. உடனே நான் அதை என் புக்மார்க்கில் சேர்த்து கொண்டேன். அப்போது உங்கள் எழுத்துகளை நான் படிக்கும் போது ஒரு பெரிய ஆள்( முதியவர்) எழுதிகிறார் அதனால்தான் இத்தனை விஷயங்களை உள்வாங்கி அருமையாக எழுத முடிகிறது என்று நினைத்து கொள்வேன். ஆனால் உங்களுடன் பேசிய போதுதான் இந்த இளைஞரா இப்படி எழுதுகிறார் என வியந்தேன் இப்போது உங்கள் எழுத்துக்களை பார்க்கும் போதும் ஒரு பெரிய ஆள்தான் எழுதுகிறார் என நினைக்கிறேன் இப்போது நான் சொல்லும் பெரிய ஆள் என்பது வயதில் சொல்லவில்லை பெரிய எழுத்தாளர் ஆகிவிட்ட உங்களைதான் சொல்லுகிறேன்.

    உலகிற்கு ஒளி தருவது ஜோதி அது போல நல்ல சிந்தனைகளுக்கும் எழுத்துகளுக்கும் இணையத்தில் உலா வருவது ஜோதிஜி அந்த ஜோதிஜிக்கு என்பது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் என்றென்றும்.

    ReplyDelete
    Replies
    1. வயது பற்றியே நினைப்பே இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்தவனுக்கு சென்ற வருட நிகழ்வுகள் வயதைப் பற்றி ரொம்பவே யோசிக்க வைத்து விட்டது. தொடர்ந்து காட்டும் உங்கள் அக்கறைக்கு நன்றி நண்பா.

      Delete

  17. வெற்றியின் ஏணிபடிகளில் ஏறிய உங்கள் குழந்தைகளுக்கு எனது பாராட்டுக்கள்

    ReplyDelete
  18. உங்களுக்கு (மட்டும்) இந்தப் பரிசு = ஜோதிஜி திருப்பூர் - எனது பக்கத்தில் பகிர்கிறேன். தேவைப்படுபவர்கள் download செய்து கொள்ளுங்கள். அருமையான முயற்சி - நன்றி & வாழ்த்துகள் திரு ஜோதிஜி.

    ReplyDelete
  19. குழந்தைகளுக்கு எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள் ஜோதிஜி அவர்களே. ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் ஏற்கனவே சேமித்து வைத்திருந்தாலும் மின்னூலையும் தரவிறக்கியாயிற்று. எனது கருத்துக்களை எழுதலாம் என்றிருந்தேன். ஆனால் காலம் கடந்துவிட்டது அல்லவா? பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு வந்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இணையம் இல்லா பொங்கல் திருநாளுக்கு வாழ்த்துகள். நன்றி

      Delete
  20. வெகு தாமதமாக இன்றுதான் உங்களின் இந்தப் பகுதியை படிக்க நேர்ந்தது .மன்னித்துக் கொள்ளவும் .(அலுவலக இண்டர்வியூ வேலை) பெற்ற குழந்தைகளைச் சபையில் பார்ப்பதே பெருமைஅதிலும் தந்தை தன் கையில் பரிசு கொடுப்பது ஒரு தந்தைக்கு வரம் . உங்களுக்கும் அன்பு குடும்பத்திர்க்கும் எங்கள் வாழ்த்துக்கள் .

    பொதுவாய் எழுதுவதை விமர்சிக்கும் அருகதை எனக்கு இருப்பதாய் நான் நினைப்பதே இல்லை எழுத்து ஒரு தவம் என்பதாய் புரிந்து வளர்ந்தவன் நான் .அதை ஒருவர் செய்யும்போது தள்ளி நின்று பார்ப்பதே வரம் என்பதை நம்புபவன் நான் .என்னை வேறு ஒரு தளத்திர்க்கு தள்ளி விட்டது நீங்கள்தான் .உங்களுக்கு நன்றி .

    என் எண்ணமும் எழுத்தும் காசு தரவில்லையென்றாலும் பரவாயில்லை போய்ச் சேரட்டும் என்ற உணர்வில் நூல் வெள்யிடும் முன் அதை மின் நூலாக முன்னரே தந்தால் அது அதன் வியாபாரத்தை வணிக ரீதியாகப் பாதிக்கும் என்று அறிந்த பின்னும் அதை வெளியிட்ட உங்கள் உணர்வு வாழ்த்துக்குரியது

    பழுக்கக் காய்ச்ச காய்ச்சத்தான் இரும்பு வேண்டிய விசயதிர்க்கு வடிவெடுக்கிறது .உங்கள் மனமும் சரியான கோணத்தில் அசையாத நம்பிக்கை வழியில் செழுத்தப்பட்டதால் இன்று உங்கள் எண்ணமும் எழுத்தாய் அற்புதமாக விளைந்து கொண்டு இருக்கிறது .

    என் இன்றைய படிப்பு முழுவதும் உடல் ஆரோக்கியம் பற்றிச் செழுத்தி கொண்டு் இருக்கிறேன் அதர்க்கு வேதாத்திரிய சிந்தனைய ஆராச்சியாகக்கி கொண்டும் இருக்கிறேன் அவசர வாழ்வின் அர்த்தமற்ற வாழ்வியல் நடைமுறைகள் நம்மை எங்கோ இழுத்து போக முயற்சி செய்து கொண்டு இருக்கிறது .விழிப்புடன் உடல் நலனை பார்த்து கொள்ளுங்கள. உங்கள் குடும்பத்திர்க்கு உங்கள் அன்பு தேவைப்படுவது போல உங்கள் வழிகாட்டல் எங்களுக்கு மிக அவசியம்.ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள் .
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி கிருஷ்ணமூர்த்தி. இருபது வாரங்கள் தொடர்ந்து எழுதியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியதில் நீங்களும் முரளியும் முக்கியமானவர்கள். நன்றி.

      Delete
  21. தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் அண்ணா.

    ReplyDelete
    Replies
    1. இனிய வாழ்த்துகள் குமார். நன்றி.

      Delete
  22. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி. இனிய வாழ்த்துகள்.

      Delete
  23. மிக்க நன்றி. இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
  24. அண்ணா,

    இதுவரை நான் தங்கள் தளத்தில் மறுமொழி இட்டது இல்லை.
    எப்போதெல்லாம் தங்கள் தளத்தை பார்வையிடும் போதெல்லாம் I feel like I am highly motivated.
    உங்களை முன்னிலைபடுத்தி எழுதுவது :-
    உங்களை முன்னிலைபடுத்தி எழுதுவது எங்களை போன்றோருக்கு நிச்சயம் inspiration அண்ணா.
    ஒரு சிலரின் பார்வையில் அப்படி தெரியலாம் அனால் பெரும்பான்மையினர் அப்படி நினைக்க வாய்ப்பில்லை என்றே எண்ணுகிறேன்.
    நிச்சயம் உங்கள் பதிவுகள் என்னை மாறுபட்ட கோணத்தில் சிந்திக்க வைக்கிறது.
    ""ஒரு புத்தகம் என்பது உங்களை உங்கள் எண்ணங்களை மாற்ற உதவுவது. அப்படி மாற்ற உதவாத புத்தகங்கள் என் பார்வையில் வெறும் காகிதமே. ""
    நூற்றுக்கு நூறு உண்மை அண்ணா.
    உங்கள் அனுபவம் சார்ந்த எழுத்துகளை வாசிக்கும் போது என் குடும்பத்தில் ஒருவராகவே என்னை உணர வைக்கிறது.
    ""இணைய தளம், ஜால்ரா கோஷ்டிகள், பரஸ்பரம் சந்தனம் தடவுதல், புகழ்ந்து எழுதுவது ""
    இதெல்லாம் இல்லாமல் மனதளவில் எழுதியிருக்கிறேன்.
    இன்னும் உங்கள் புத்தகங்களை வாசிக்கவில்லை வாசித்துவிட்டு வருகிறேன்.
    Praying god for your health and wealth as a brother.



    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி ரெங்கன். நல்வாழ்த்துகள்.

      Delete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.