Friday, August 27, 2021

மெல்லக் கொல்லும் விஷம்

கடந்த சில தினங்களில் அனைவரும் உற்றுக் கவனித்து சாபமிடும் அளவுக்குச் செயல்பட்ட மதன் ரவிச்சந்திரனின் முதல் காணொளி எனக்கு எவ்வித வருத்தத்தையும் உருவாக்கவில்லை.  திராவிட அரசியல் குஞ்சுகளின் பலாக்கிரமத்தை ஒவ்வொரு காலகட்டத்திலும் இது போலப் பார்த்தது தான்.  


Thursday, August 26, 2021

அவசியம் கேளுங்கள். முழுமையாக கேளுங்கள்.

தமிழ் இணைய உலகில் என்னை ஆச்சரியப்படுத்தும் ஆளுமைகளில் இவரும் ஒருவர். இவரை நான் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் போது இந்தியாவின் ஜூலியன் அசாஞ்சே! என்று சொல்லித் தான் அறிமுகம் செய்வதுண்டு. இவர் ஃபேஸ்புக்கில் எழுதுவதைப் பொறுமையாக நேரம் ஒதுக்கி முழுமையாக உள்வாங்கி படிங்க என்று சொல்வதுண்டு.

ஒரு தகவல், அதற்குப் பின்னால் உள்ள உண்மை, அதற்குள் இருக்கும் அரசியல், மேலும் உள்ளே நுழைந்தால் எங்கிருந்து சர்வதேச அரசியல் தொடங்குகின்றது என்பதனை படிப்படியாக கொண்டு போய் நம்மை நிறுத்தித் திகைக்க வைப்பது இவரின் வாடிக்கை.
Selva Nayagam இவரின் பதிவுகளைப் படிக்க எனக்கு எப்போதும் அதிக நேரம் பிடிக்கும். கற்றுக் கொள்ள விரும்புபவர்களுக்கு இவர் ஓர் என்சைக்ளோபீடியா. கொரோனா அதற்குப் பின்னால் உள்ள சர்வ தேச அரசியல் என்று பல தளங்களில் சென்ற வாரம் பேசினார்.
முதல் பகுதியில் நீங்கள் கடந்த 18 மாதங்களில் இந்தியாவில் கொரோனா தொடர்பாக நடந்த அனைத்து விசயங்களையும் புரிந்து கொள்ள முடியும்.

அவசியம் கேளுங்கள். முழுமையாக கேளுங்கள்.

Tuesday, August 24, 2021

சுவையான கனிந்த பழம்

குஜராத்தில் மோடி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்பு ஒரு வார்டு தேர்தலில் கூட அவர் நின்று இருக்கவில்லை.  அவர் ஒரு சாதாரண ஆர்எஸ்எஸ் பிரச்சாரக்.  அவ்வளவு தான். டெல்லி தலைமை என்ன வேலை கொடுக்கின்றதோ அதைத் தான் செய்து கொண்டு இருந்தார்.