என் நெருங்கிய நண்பர் சில மாதங்களுக்கு முன்பு சித்ரா லெஷ்மணன் காணொளிக் காட்சிகளைப் பாருங்கள் என்று பரிந்துரைத்தார். நான் பார்த்து விட்டு "எனக்கு இது போன்ற காட்சிகளைப் பார்த்து நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. அந்தச் சமயத்தில் கூடுதலாக 300 வார்த்தைகள் கொண்ட சமூக நிகழ்வைப் பதிவு செய்யவே விரும்புவேன்" என்றேன்.
Sunday, February 28, 2021
Saturday, February 27, 2021
இந்தியா முழுக்க கொண்டு சேர்த்த ரயில்வே துறை அமைச்சர்
கொரோனா பகவான் அருள் வழங்கத் தொடங்கிய மாதம் முதல் பிறந்த ஊருக்குப் போவதையே மறந்து விட்டேன். அங்கே சென்று நாம் என்ன பேசினாலும் செல்லுபடியாகாது. நாம் ஏன் வம்பை விலைக்கு வாங்க வேண்டும் என்று செல்ல வேண்டிய சூழல் வந்தால் சபாநாயகர் சென்று விடுவார்.
Thursday, February 25, 2021
வங்கியில் கடன் அட்டை வாங்கியவரின் கதை
ஜெயலலிதா முதன் முறையாக ஆட்சிக்கு வந்த போது தமிழக அரசியலும், அதிகார இயக்கங்களும் அதுவரையிலும் காணாத அனைத்து கெட்ட சகுனங்களையும் சந்தித்தது.
ஆனால் தற்போது அதனை விட எல்லை கடந்து போய்க் கொண்டிருக்கிறது என்பதனை மத்திய அரசு எப்படி சகித்துக் கொண்டிருக்கிறது என்பதே புரியவில்லை. ஓர் இடம் இரண்டு இடம் அல்ல. தமிழகத்தின் அனைத்துத் துறைகளும் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. சுரண்டச் சுரண்ட இன்பம் என்பது போலக் கேள்வி கேட்பார் இன்றி எவரால் அடக்க முடியும்? எவரால் இவர்களை வழிக்குக் கொண்ட வர வாய்ப்புள்ளது என்பது அறியாமல் அனைத்துத் தரப்புகளும் தனக்கென்ன லாபம் என்ற ஒற்றைப்புள்ளியில் அமைதி காத்து வருகின்றார்கள் என்றே தோன்றுகின்றது.
தேர்தல் நெருங்க கொள்ளைக்கூட்டத்தின் துணிச்சல் எல்லை கடந்து போய்க் கொண்டேயிருக்கிறது.
குரூப் 1 முதல் குரூப் 4 வரைக்கும் முறைப்படியான தேர்வுகள், நேர்முகத் தேர்வு என்று உருவாக்கி வைத்திருந்த அனைத்து பதவிகளும் இப்போது வாய்மொழி வழியாக வாங்கும் தொகையின் பொருட்டு ஏலம் இட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
அரசுத்துறையில் எந்தப் பதவிகள் உள்ளதோ? அதற்குத் தேவை இருக்கிறதோ? இல்லையோ? அனைத்தையும் ஏலமிட்டுச் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
கடந்த ஆண்டு எந்தந்த துறைக்கு எத்தனை கோடிகள் ஒதுக்கினார்கள்? அதனை எப்படி செலவழித்தார்கள்? என்ன விபரங்கள்? என்பதனை எங்கேயாவது பார்த்து இருக்கின்றீர்களா?
சமீபத்தில் பெய்த பெரும் மழையில் கடலூர் மாவட்ட அரசுப் பள்ளிகளைப் பற்றி அங்கிருப்பவர்கள் சொல்லும் போது எத்தனை உயிர்கள் பலியாகுமா? எப்போது நடக்குமோ? என்கிற அளவிற்கு பள்ளிக்கட்டிடங்கள் ஒவ்வொன்றும் சிதிலமடைந்து சில்லு சில்லாக அந்தரத்தில் இருப்பதைப் பயன்படுத்தி டெண்டர் விடுகின்றோம் என்ற பெயரில் தொகை சூறையாடப்படுகின்றது.
கொரோனா காரணமாகச் சுத்தப்படுத்தினோம் என்ற வகையில் ஒரு தொகை. உருமாறிய கொரோனா வந்த பின்பு மற்றொரு தொகை. ஆனால் இன்று வரைக்கும் ஒன்பதாம் வகுப்பு வரைக்கும் பள்ளி திறக்க வாய்ப்பில்லை என்பதனை ஒரு புண்ணியவான் போகின்ற இடங்களெல்லாம் மனப்பாடச் செய்யுள் போலவே ஒப்புவித்துக் கொண்டிருக்க மாணவர்கள் வீட்டிலிருந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருப்பது நம் அதிர்ஷ்டம்.
Subscribe to:
Posts (Atom)