ட்விட்டரில் திமுகவிற்கு எதிராக ஆதாரப்பூர்வமாகத் தகவல்களை வைத்து, கொடுத்துக் களமாடுவது குறிப்பிட்ட சிலர் மட்டுமே. அவர்களின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது என்றால் அமைச்சர்கள் நடுங்குகின்றார்கள். பயப்படுகின்றார்கள். கொலைவெறி காண்டாகி மிருகமாக மாறுகின்றார்கள்.
தமிழகத்தில் உள்ள சிறிய, பெரிய அரசியல்வாதிகள் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ள ஏராளமான காரியங்கள் செய்வது வாடிக்கை. நாம் அனைவரும் பலரையும் பார்த்துக் கொண்டு தான் வருகின்றோம்.
ஆனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னைப் பற்றி, தன் குடும்பத்தை, குழந்தைகளை, தன் காதல் திருமணம், அப்பா, அம்மா குறித்து எங்கும் பேசி நான் பார்த்ததே இல்லை.
நேற்றைய முன் தினம் ரேடியோ சிட்டி வானொலிக்குப் பேட்டி கொடுத்து இருந்ததைப் பதிவேற்றியிருந்தேன்.
இது அதன் தொடர்ச்சி.
இதில் தன் அந்தரங்க விசயங்கள் இன்னும் பலவற்றைப் பேசியுள்ளார்.
பல நண்பர்கள் ஒன்று சேர்ந்து, "கற்றுக் கொள் களத்தில் இறங்கு" என்ற குழுமத்தைத் தொடங்கி அதன் மூலம் "கற்று களத்தில் இறங்கு" என்ற வலையொளிக் காட்சி ஊடகத்தைத் தொடங்கிய போது எங்கள் எண்ணம் ஒன்றே ஒன்று தான். சிலவற்றை ஆவணப்படுத்த வேண்டும். 100 பேர்கள் பார்த்தால் கேட்டால் போதும். அண்ணாமலை தமிழக பாஜக தலைவராகப் பதவியில் அமர்ந்த போது இதனைத் தொடங்கினோம். பலரின் உழைப்பு, ஒத்துழைப்பு இதில் உள்ளது.
ஆனால் சராசரியாக 100 பார்வையாளர்கள் முதல் அதிகபட்சம் 1500 வரை வந்து முழுமையாகக் கேட்டு உள்ளனர். மின் அஞ்சல் வழியாக வருகின்ற கூகுள் அறிக்கை பலவற்றைச் சொல்லும். நாம் சரியான பாதையில் தான் செல்கின்றோம் என்றே யூகித்துக் கொண்டதுண்டு.
அண்ணாமலை தமிழகத்திற்கு வருவதற்கு முன்பு இரண்டு விசயங்கள் தமிழ் இணையத்தில் நடந்து கொண்டு இருந்தது. திமுக மற்றும் சார்ந்த பினாமிக் கூட்டத்தை எவரும் எதிர்க்கவே முடியாது. இப்போது பல எழுத்தாளர்கள் ஏன் பாஜக வை சம்மந்தமே இல்லாமல் நக்கல் செய்து பிச்சையெடுத்துச் சம்பாதிக்கும் கலையை கற்றுக் கொண்டது போல எவரும் இந்த நாசகார சக்தியை எதிர்ப்பதில்லை.
நமக்கேன் வம்பு என்று ஒதுங்கி விடுவர்.
ஒரு கோமாளியை அலங்காரம் செய்து அழைத்துச் சென்ற போதிலும், நடந்து கொண்டிருக்கின்ற அயோக்கியத்தனங்கள் அப்பட்டமாகத் தெரிந்த போதிலும், அவரவர் வீட்டுத் தாலி அறுபட்டாலும் ஏன் சங்கறுத்தாலும் பாஜக ஒழிக என்று சொல்லக்கூடிய நெருக்கமான நண்பர்களை இந்த வருடம் நான் பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளேன்.
இணையப் பரப்பில் இந்த பினாமிக்கூட்ட ஆதிக்கத்தைச் சீமான் ஒழித்தார் என்றால் அது மிகையல்ல. கிழித்துத் தொங்க விட்டு ஊறுகாய் போட்டு அனுப்பி வைத்தார்கள். ஆழத் தோண்டி அகலக் குழி வெட்டி கருணா முதல் தலைமுறைகளைத் தோண்டி யோசிக்காமல் கருமாதி செய்தார்கள்.
இணையத்தில் முதல்வர் தேர்தல் நடந்தால் சீமான் தான் நிரந்தர முதல்வர் என்கிற வரைக்கும் பல விதங்களில் ஆச்சரியத்தை நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் தந்தனர். ஆனால் ஒரே ஒரு பிரச்சனை அத்தனை பேர்களுக்கு உணர்ச்சி பூர்வமானவர்கள். சீமான் சொல்வது போல "நான் உன்னை எப்போது வேண்டுமானாலும் தூக்கி எறிந்து விடுவேன்" என்கிற அளவுக்குப் பாதி புத்தியோடு இருந்தவர்களை வியப்போடு பார்த்துள்ளேன்.
முப்பது லட்சம் ஓட்டுக்கள் காசு கொடுக்காமல் வாங்கினாலும் தமிழகத்தை எந்த சலனத்தையும் சீமானால் உருவாக்க முடியவில்லை என்பது முற்றிலும் உண்மையாகும்.
ஆனால் கடந்த பல மாதங்களாக "அண்ணாமலை அலை" என்பது களத்தில் மட்டுமல்ல இணையத்திலும் சுனாமி போல தாக்கிக் கொண்டு இருக்கின்றது.
"என் கடமை பணி செய்து கிடப்பதே" என்பதாக இன்று அண்ணாமலை அவர்கள் வானொலியில் பேசிய உரையாடலைக் காலையில் வெளியிட்டு வைத்தேன்.
மிரண்டு போகும் அளவிற்கு 3000 பேர்களுக்கு மேல் சில மணி நேரத்திற்குள் போய்ச் சேர்ந்துள்ளது. இதுவரையிலும் (கடந்த பதினான்கு மாதங்களில்) 75 000 பேர்களை இந்த தளம் சென்று சேர்ந்துள்ளது.
வாய்க்காலில் ஓடுகின்ற நீர் மெல்லிதாக இருந்தாலும் தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தால் நிச்சயம் வயலில் வசந்தம் உருவாகும் என்பது இயற்கை உருவாக்கிய விதி.
அண்ணாமலை வானொலி பேட்டி/Radio City No Politics 2.0/சிங்கம் என்று பெயர் வரக் காரணம்/கர்நாடக காவல்துறை
20 ஆகஸ்ட் 2022 அன்று முரசொலியில் சிலந்தி என்ற புனை பெயரில் எழுதுகின்றவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் குறித்து தரம் தாழ்ந்து ஒரு கட்டுரை எழுதி வெளிவந்துள்ளது. அதற்குப் பதிலாகத் தமிழக பாஜக வில் இருந்து இரண்டு கட்டுரைகள் வெளிவந்துள்ளது. ஒன்று குளவி என்ற பெயரில் ஒரே நாடு இதழில் வெளியாகி உள்ளது. (முரசொலி என்னும் முடைநாற்றக் காகிதம் – குளவி) மற்றொன்று காவி மகன் எழுதிய கட்டுரையிது.
"அப்பா இதுவரையில் ட்விட்டரில், அலைபேசி உரையாடலில் சென்னையில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளை வறுத்து எடுத்துக் கொண்டு இருந்தார். இனி உயர் கல்வித்துறை அதிகாரிகளைப் படாதபாடு படுத்தப் போகின்றார்:" என்றார்.
ஊழலுக்கு புது அத்தியாயம் வகுத்துள்ள ஆவின் பால்வளத்துறை அமைச்சர் பெருமகன் படித்த அரசு பள்ளிக்கூடமிது. நீங்கள் சென்னை ஆவடி சென்றால் இதனை இப்போதே பார்க்கலாம். இன்னமும் இப்படியே தான் உள்ளது. இந்தப் பள்ளியில் தான் அமைச்சர் பெருமகன் படித்து வளர்ந்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியேற்றுவது இது 9-வது முறையாகும்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரதமர் நரேந்திர மோடி 82 நிமிடங்கள் சுதந்திர தின உரையை ஆற்றினார். இந்த உரையின்போது பிரதமர் மோடி டெலி ப்ராம்ப்டரை தவிர்த்து உரையாற்றினார்.
1. தேசத்தை வளர்ந்த நாடாக்கும் பெரிய இலக்கோடு நாம் முன்னேறிச் செல்ல வேண்டும்.
2. எல்லா வகையான அடிமைத்தனத்தையும் நாம் வேரறுக்க வேண்டும்.
3. இந்திய பாரம்பரியத்தை எண்ணி நாம் பெருமிதம் கொள்ள வேண்டும்.
4. ஒற்றுமையின் பலத்தை உறுதியாக பற்றிக் கொள்ள வேண்டும்.
5. குடிமக்கள் அனைவரும் தத்தம் கடமைகளை நிறைவேற்ற வேண்டும். முதல்வர்கள், பிரதமருக்கும் இந்தக் கடமை பொருந்தும்.
விடுதலை வீரர்களை நினைவு கூர்வோம்:
* நாடு சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில் இந்தியர்கள் அனைவருக்கும் நான் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். இது புதிய திசையில், புதிய இலக்குகளுடன் பயணப்பட வேண்டிய தருணம்.
* நம் நாட்டின் விடுதலைக்கான போராட்டம் நடந்தபோது ஒரே ஒரு நாள் கூட விடுதலைப் போராட்ட வீரர்கள் கொடுமையை அனுபவிக்காமல் இல்லை. இன்று தான் அவர்களின் தியாகத்திற்கு நாம் மரியாதை செலுத்த வேண்டிய நாள்.
* சுதந்திரப் போராட்ட வீரர்களின் தொலைநோக்குப் பார்வையை அவர்களின் இந்தியாவிற்கான கனவை நாம் இன்று நினைவுகூர வேண்டும்.
* நமது தேசியக் கொடியின் பெருமை நமது தேசத்தைத் தாண்டி உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஒளிர்கிறது.
* நம் நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வீரர்களை நாம் நினைவு கூர்வோம். அவர்களை சில காலம் தேசம் மறந்துவிட்டது. நாம் இப்போது அவர்களுக்கான உரிய மரியாதையை செலுத்திக் கொண்டிருக்கிறோம்.
பெண் வெறுப்பை ஒழிக்க உறுதியேற்போம்:
* பெண்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அதுதான் இந்திய வளர்ச்சிக்கான தூண்.
* நம் பேச்சிலும், செயலிலும் பெண்களின் மாண்பைக் குறைக்கும் சிறு வெளிப்பாடு கூட இருக்கக் கூடாது.
* நம் தேசத்தின் மகள்கள், தாய்மார்கள் நாட்டுக்காக பெரும் பங்களிப்பை நல்கி வருகின்றனர்.
* சட்டம், கல்வி, அறிவியல், காவல்துறை என நம் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் பெண் சக்தியின் பங்களிப்பு அளப்பரியது.
* பெண் வெறுப்பை துடைத்தெறிய உறுதியேற்போம். பெண்கள் முன்னேற்றத்தை உறுதி செய்தால் தேச முன்னேற்ற இலக்கை சீக்கிரமாக அடையலாம்.
ஊழல், வாரிசு அரசியலை ஒழிப்போம்:
* ஊழலும், வாரிசு அரசியலும் தான் இந்தியா எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவால்கள். ஊழல் தேசத்தை அரிக்கும் கரையான். * ஊழலை ஒழிக்காமல், ஊழல்வாதிகளை தண்டிக்கும் மனநிலையை மக்கள் வளர்த்துக் கொள்ளாதவரை தேசம் அதன் முழுவேகத்தில் முன்னேற இயலாது.
* குடும்பத்தினர், உறவினர்கள், வேண்டியவர்கள் என்று காட்டப்படும் சலுகைகளும், செய்யப்படும் சிபாரிசுகளும் பெரிய தீமை.
* இது உண்மையான திறமைசாலிகளின் வாய்ப்பைப் பறித்துவிடும். தகுதியும், திறமையும் கொண்டவர்களுக்கு வாய்ப்பளித்தால் தான் நமது தேசம் வளர்ச்சி காணும்.
*வாரிசு நலன் அரசியலையும் தாண்டி பல துறைகளிலும் புகுந்துள்ளது.
கடினமாக உழைப்போம்:
* நம் கனவுகள் பெரிதாக இருக்கும்போது நாம் அதற்காக செலுத்த வேண்டிய உழைப்பும் கடினமாக, பெரிதாக இருக்கும்.
*நாம் அதற்கான உத்வேகத்தை நம் விடுதலைப் போராட்ட வீரர்களிடமிருந்து பெற வேண்டும்.
* நாம் நாட்டின் அனைத்து மக்களுக்காகவும் பாடுபட வேண்டும். மகாத்மா காந்தி சொன்னதுபோல், நாம் கடைசி மனிதனாக்காக போராட வேண்டும். அதுதான் நம் தேசத்தின் பலம்.
*உலக நாடுகள் நம் தேசத்தை இப்போது பெருமிதத்துடன், நம்பிக்கையுடன் பார்க்கின்றன.
* நாம் பிரச்சினைகளைத் தீர்க்கும் நாடாகப் பார்க்கப்படுகிறோம். இந்தியா கனவுகளை நினைவாக்கிக் கொள்ளும் களமாக அறியப்படுகிறது.
* நாம் புதிய இந்தியாவை வளர்க்க அனைவருக்குமான வளர்ச்சி என்ற காந்தியின் கனவை கொள்ள வேண்டும். அனைவரும் இணைந்து, நம்பிக்கையுடன், முயற்சியுடன் அனைவருக்குமான வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும்.
போட்டிமிகுந்த கூட்டாட்சி தேவை:
* நம் தேசம் வளர்ச்சி காண போட்டி மிகுந்த கூட்டாட்சி தேவை.
* பல்வேறு துறைகளிலும் வளர்ச்சி காண்பதில் மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி மனப்பாண்மை தேவை.
* இத்தருணத்தின் தேவை ஒருங்கிணைந்த போட்டிமிகு கூட்டாட்சி.
வாழ்க தமிழ் வளர்க பாரதம் | இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் | #aoh | #annamalai | #jothig