பல நண்பர்கள் ஒன்று சேர்ந்து, "கற்றுக் கொள் களத்தில் இறங்கு" என்ற குழுமத்தைத் தொடங்கி அதன் மூலம் "கற்று களத்தில் இறங்கு" என்ற வலையொளிக் காட்சி ஊடகத்தைத் தொடங்கிய போது எங்கள் எண்ணம் ஒன்றே ஒன்று தான். சிலவற்றை ஆவணப்படுத்த வேண்டும். 100 பேர்கள் பார்த்தால் கேட்டால் போதும். அண்ணாமலை தமிழக பாஜக தலைவராகப் பதவியில் அமர்ந்த போது இதனைத் தொடங்கினோம். பலரின் உழைப்பு, ஒத்துழைப்பு இதில் உள்ளது.
ஆனால் சராசரியாக 100 பார்வையாளர்கள் முதல் அதிகபட்சம் 1500 வரை வந்து முழுமையாகக் கேட்டு உள்ளனர். மின் அஞ்சல் வழியாக வருகின்ற கூகுள் அறிக்கை பலவற்றைச் சொல்லும். நாம் சரியான பாதையில் தான் செல்கின்றோம் என்றே யூகித்துக் கொண்டதுண்டு.
அண்ணாமலை தமிழகத்திற்கு வருவதற்கு முன்பு இரண்டு விசயங்கள் தமிழ் இணையத்தில் நடந்து கொண்டு இருந்தது. திமுக மற்றும் சார்ந்த பினாமிக் கூட்டத்தை எவரும் எதிர்க்கவே முடியாது. இப்போது பல எழுத்தாளர்கள் ஏன் பாஜக வை சம்மந்தமே இல்லாமல் நக்கல் செய்து பிச்சையெடுத்துச் சம்பாதிக்கும் கலையை கற்றுக் கொண்டது போல எவரும் இந்த நாசகார சக்தியை எதிர்ப்பதில்லை.
நமக்கேன் வம்பு என்று ஒதுங்கி விடுவர்.
ஒரு கோமாளியை அலங்காரம் செய்து அழைத்துச் சென்ற போதிலும், நடந்து கொண்டிருக்கின்ற அயோக்கியத்தனங்கள் அப்பட்டமாகத் தெரிந்த போதிலும், அவரவர் வீட்டுத் தாலி அறுபட்டாலும் ஏன் சங்கறுத்தாலும் பாஜக ஒழிக என்று சொல்லக்கூடிய நெருக்கமான நண்பர்களை இந்த வருடம் நான் பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளேன்.
இணையப் பரப்பில் இந்த பினாமிக்கூட்ட ஆதிக்கத்தைச் சீமான் ஒழித்தார் என்றால் அது மிகையல்ல. கிழித்துத் தொங்க விட்டு ஊறுகாய் போட்டு அனுப்பி வைத்தார்கள். ஆழத் தோண்டி அகலக் குழி வெட்டி கருணா முதல் தலைமுறைகளைத் தோண்டி யோசிக்காமல் கருமாதி செய்தார்கள்.
இணையத்தில் முதல்வர் தேர்தல் நடந்தால் சீமான் தான் நிரந்தர முதல்வர் என்கிற வரைக்கும் பல விதங்களில் ஆச்சரியத்தை நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் தந்தனர். ஆனால் ஒரே ஒரு பிரச்சனை அத்தனை பேர்களுக்கு உணர்ச்சி பூர்வமானவர்கள். சீமான் சொல்வது போல "நான் உன்னை எப்போது வேண்டுமானாலும் தூக்கி எறிந்து விடுவேன்" என்கிற அளவுக்குப் பாதி புத்தியோடு இருந்தவர்களை வியப்போடு பார்த்துள்ளேன்.
முப்பது லட்சம் ஓட்டுக்கள் காசு கொடுக்காமல் வாங்கினாலும் தமிழகத்தை எந்த சலனத்தையும் சீமானால் உருவாக்க முடியவில்லை என்பது முற்றிலும் உண்மையாகும்.
ஆனால் கடந்த பல மாதங்களாக "அண்ணாமலை அலை" என்பது களத்தில் மட்டுமல்ல இணையத்திலும் சுனாமி போல தாக்கிக் கொண்டு இருக்கின்றது.
"என் கடமை பணி செய்து கிடப்பதே" என்பதாக இன்று அண்ணாமலை அவர்கள் வானொலியில் பேசிய உரையாடலைக் காலையில் வெளியிட்டு வைத்தேன்.
மிரண்டு போகும் அளவிற்கு 3000 பேர்களுக்கு மேல் சில மணி நேரத்திற்குள் போய்ச் சேர்ந்துள்ளது. இதுவரையிலும் (கடந்த பதினான்கு மாதங்களில்) 75 000 பேர்களை இந்த தளம் சென்று சேர்ந்துள்ளது.
வாய்க்காலில் ஓடுகின்ற நீர் மெல்லிதாக இருந்தாலும் தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தால் நிச்சயம் வயலில் வசந்தம் உருவாகும் என்பது இயற்கை உருவாக்கிய விதி.
அண்ணாமலை வானொலி பேட்டி/Radio City No Politics 2.0/சிங்கம் என்று பெயர் வரக் காரணம்/கர்நாடக காவல்துறை
(Link below)
No comments:
Post a Comment
கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.