அஸ்திவாரம்

Monday, March 01, 2021

நவீன உலகில் வாழ தேர்ந்தெடுக்கப் பழகிக் கொள்

"என் உயிர் உள்ளவரை கடைசி மூச்சு இருக்கும் வரையிலும் பாஜக வை தொடர்ந்து எதிர்ப்பேன். எந்த அச்சுறுத்தலுக்கும் நான் பயப்படமாட்டேன்" என்று எங்கள் அய்யா ப.சி அவர்கள் இன்று பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசியுள்ளதைப் பார்த்தேன். 




பெரிய ஆச்சரியம் என்னவெனில் அவரின் ஆரோக்கியம் மேம்பட்டு இருக்கிறது. வார்த்தை உச்சரிப்புகள் இன்னமும் கம்பீரமாக வந்து விழுகின்றது. ழ ள உச்சரிப்புகள் அசரடிக்கின்றது. எப்போதும் போல புள்ளி விபரங்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம். 

நாற்பது வருடங்களுக்கு மேலாக வெளிச்சத்திலேயே வாழ்ந்து பழகிய அய்யா ஒவ்வொரு கூட்டத்திலும் மறந்து கூட கூட்டணிக் கட்சி தலைமைக்கட்சியைப் பற்றியோ? யாரை முதல்வராக்க நாம் முயல வேண்டும் என்பது குறித்தோ? கட்சியின் எண்ணம் நோக்கம் குறித்தோ பேசுவதில்லை. எப்போதும் பாஜக என்பது விஷச்செடி என்பதில் தொடங்கி ஆசிட் வார்த்தைகளால் தொடர்ந்து அர்ச்சனை செய்கின்றார். 

இது தவறல்ல. 

எதிர்க்கட்சி என்றால் இங்கு இப்படித்தான் அரசியல் நாகரிகம் உள்ளது என்பதனை எளிய தமிழ்ப்பிள்ளைகள் அறிவார்கள்.

எனக்கு என்ன ஆச்சரியம் என்னவெனில் சிவகங்கையில் மொத்தம் ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. காங்கிரஸ் ல் இருந்து ஒரு பூத் கமிட்டிக்கு 20 பேர்கள் வேண்டும் என்று முயன்று அந்த அளவுக்கு ஆட்கள் சேர்வதில்லை என்று வருத்தப்படும் அய்யா அவர்கள் எப்போதும் போல ஒரு விசயத்தைக் குறிப்பிடத் தவறுவதில்லை. 

"இளைஞர்கள் வர வேண்டும்" என்கிறார். மற்றொரு பக்கம் ராகுல் குடிகார கணவன் செய்யும் லீலைகள் எப்படி உள்ளது என்பதனையும், ஏன் குடிக்கின்றார்கள்? குடித்த பின்பு எப்படி மாறுகின்றார்கள் என்பதனையும் கூட்டத்தில் பேசிய பெண்மணி மூலம் அறிந்து கொண்டு ஆச்சரியப்படுகின்றார். நல்லவேளை இங்குள்ள விஷ சரக்கின் ரெசிபி குறித்தோ? அது யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது? ஒரு பாட்டிலுக்கு எத்தனை ரூபாய் அதிகமாக விற்று கல்லா கட்டுகின்றார்கள் போன்ற சமூகவியல் பாடங்கள் குறித்து அவர் யாரிடமும் கேட்கவில்லை. கேட்டால் அவரின் தற்போதைய எளிய குணாதிசியம் மாற வாய்ப்பதிகம்.

ராகுல் பேசும் போது கூட எந்த இடத்திலும் கூட்டணிக் கட்சி குறித்துப் பேசுவதே இல்லை. சந்திக்க முயன்றதும் இல்லை. முயலும் எண்ணம் இருப்பதாகவும் தெரியவில்லை. "நாங்கள் போட்ட பிச்சையில் நீங்க எல்லாம் இன்னமும் வெளியே இருக்குறீங்க" என்ற ஆழ்மன எண்ணமாகவும் இருக்கலாம்.

ராகுல் என்ற இளைஞர் திரும்பத் திரும்பச் சலிக்காமல் தன் படைபரிவாரங்கள் இல்லாமல் எளிய சாதாரண மனிதராகத் தமிழகத்தில் முடிந்தவரைக்கும் இண்டு இடுக்கு வரைக்கும் சுற்றி வருகின்றாரே? ப.சி அய்யாவின் மகன் இப்போது எங்கே இருக்கின்றார்? தேர்தல் சமயத்தில் அவர் தானே அப்பாவை விடத் தொகுதி முழுக்க சுற்றி முன்னேற்பாடு நடவடிக்கைகளில் இறங்கியிருக்க வேண்டுமே? உங்களின் நியாயமான கேள்வி என் காதில் விழுகின்றது? 

அவர் நீதிமன்றம் கட்டச் சொன்ன பெரிய தொகையைப் பிணையாகக் கட்டிவிட்டு தன் தொழில் சார்ந்த விசயங்களுக்காக வெளிநாடு சென்று விட்டார். 

அப்பா பதவியில் இல்லாத போது வக்கீல் வேலை பார்க்கப் போவார். மகன் பதவியில் இருக்கும் போதே தொழிலில் கவனமாக இருக்கின்றார் என்றால் ஏன் ராகுல் இவர்கள் பக்கமே திரும்புவதே இல்லை என்பது உங்களுக்குப் புரியுமே? 😉

3 comments:

  1. பேசுவதற்கும் செய்யும் செயலுக்கும் சம்பந்தமில்லை...

    நவீன உலகில் தன்மானம் இழக்காதே... பிணம் பேசுவதை யாரும் பொருட்படுத்துவதில்லை...

    இதற்கான குறள் என்ன அண்ணே...?

    ReplyDelete
    Replies
    1. எனக்கு உங்க அளவுக்கு குறள் குறித்து அதிக அனுபவம் இல்லை. ஆனால் உங்களை விட சமூகவியல் நன்றாகவே அறிந்தவன். கடந்த 50 வருடமாக இல்லாத விசயங்களைச் சொல்லிச் சொல்லி ஏமாற்றி ஏமாற்றி இன்று நயன்தாராவிற்காக உழைக்கும் உன்னத குடும்பத்தை அறிந்தவன்.

      Delete
  2. நெஞ்சில் உரமும் நேர்மைத்திறமும் இல்லாத வாய்ச்சொல் வீரர்கள்.

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.