அஸ்திவாரம்

Wednesday, September 14, 2011

பண்ணையடிமைகள்.


சென்ற அத்தியாயத்தில் பண்ணை அடிமைகள் என்றொரு பெயர் வந்தது நினைவில் இருக்கலாம்.  யாரிவர்கள்?

தமிழ்நாட்டில் வாழ்ந்த அடிமைகளின் மற்றொரு பெயர்.  இந்தியா கிராம பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டிருந்த காரணத்தால் நாம் பார்க்கப் போகும் தமிழ்நாட்டில் வாழ்ந்த அடிமைகள் பெரும்பாலும் வயல்களைச் சார்ந்த வேலைகளில் தான் இருந்தார்கள். ஒவ்வொரு நிலப்பிரபுக்கும் ஏராளமான நிலங்கள் இருந்தது. தமிழ்நாட்டில் தீண்டாமை என்பது எப்படி ஒரு முக்கிய காரணியாக இருந்ததோ அதைப் போலவே அவரவர் சார்ந்த பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் இதில் முக்கியப் பங்கு வகித்தன.

நிலப்பிரபுகளில் பிராமணர், பிள்ளை, முதலியார், செட்டியார், நாயுடு, படையாச்சி, தேவர் என்ற பல இனங்களும் இருந்தது.  இவர்களைப் போலவே பண்ணையடிமைகளிலும் இதே போன்ற பல ஜாதிகளில் இருந்து வந்தவர்களும் இருந்தனர். நம் ஜாதிக்காரன் என்பதற்காக இந்த பண்ணையடிமைகளுக்கு சிறப்பான சலுகைகள் எதுவுமில்லை. எல்லாநிலையிலும் மொத்தத்தில் பொருளாதாரமே முக்கிய காரணமாக இருந்தது.

பண்ணையடிமைகள் தாங்கள் சார்ந்திருந்த நிலப்பிரபுகளை என்னங்க சாமி, என்னங்க ஆண்டை, என்னங்க எசமான் என்று அழைத்தனர்.  இவ்வாறு அழைப்பதும் கூட ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு விதமாக இருந்தது.  குறிப்பாக அவர்வர் சமூக அந்தஸ்து பொறுத்து இருந்தது.

ஒரு பண்ணையடிமையின் ஒரு நாள் வாழ்க்கையென்பது எப்படியிருந்தது என்பதை பார்க்கலாம். 


அதிகாலையில் கோழி கூவுவதற்கு முன்பு ஒரு கொம்பு ஓலி ஊருக்குள் இருந்து கேட்கும்.  ஊரின் ஓதுக்குப் புறத்தில் உள்ள சேரிப்பகுதிகளில் உள்ள குடிசைகளில் உள்ளவர்கள் அவசரமாக எழுந்து வழியில் பார்க்கும் ஓடைகளில் முகத்தை கழுவிக் கொண்டு நிலங்களுக்கு வந்து சேர்ந்து விட வேண்டும்.

ஆண்கள் உடுத்தியிருக்கும் ஆடையென்பது வெறும் கோவணமே மட்டுமே.  குளிர்காலம் என்றால் மேலே போர்த்திக் கொள்ள பழைய சாக்குப்பைகளைக் கொண்டு உடம்பை போர்த்திக் கொள்ள வேண்டும். பெண்கள் உடையென்பது ஓட்டுப் போட்ட கந்தலாடையினால் ஆன ஒரு சேலை.  அதுவும் முழங்காலுக்கு மேல் கட்டியிருக்க வேண்டும்.  அவரவர் பணிபுரியும் நிலத்திற்குள் இறங்கி வேலையை தொடங்கியவுடன் ஓ...... வென்று கத்த வேண்டும். 
இவர்கள் எழுப்பும் இந்த ஒலியை வைத்து தூரத்தில் இருந்து இவர்களை கவனித்துக் கொண்டிருப்பவர்களுக்கு வேலையை தொடங்கி விட்டார்கள் என்று தெரிந்து கொள்வார்கள்.

சூரியன் உதயமாவதற்குள் இவர்களின் வேலைகள் முழு வீச்சில் தொடங்கியிருக்க வேண்டும்.  முதல் கொம்பு ஒலி ஒலிக்கும் போது ஆண்கள் வயலுக்குள் வந்து இருப்பதைப் போல இரண்டாவது கொம்பு ஒலி ஒலிக்கும் போது பெண்கள் வேலைக்கு வந்து விட வேண்டும்.  பெண்கள் வரும் போது தனக்கும் தன் கணவருக்கும் உண்டான சாப்பாட்டை எடுத்து வருவாள்.  ஒரு சிறிய மண்பானை. அந்த பானைக்குள் இருக்கும் கஞ்சி, மூடுச்சு போட்டு கட்டி வைக்கப்பட்டுள்ள உப்பும் பச்சை மிளகாயும் இருக்கும்.  பானையை அருகே மண்ணுக்குள் புதைத்து வைத்து விட்டு வயலுக்குள் இறங்கி வேலையை தொடங்கி விடுவார்கள்.  

சூரியன் உச்சிக்கு வரும் போது சாப்பாட்டுக்கான நேரம்.  மறுபடியும் வயலுக்குள் இறங்கினால் சூரியன் மறைந்து நன்றாக இருள் வந்த பிறகே வயலை விட்டு வெளியே வர முடியும்.  வேலை முடியாத போது வயலுக்குள் நடுவே கம்பு கட்டப்பட்டு அதில் அரிக்கேன் விளக்கு ஏற்றப்பட்டு அந்த வெளிச்சத்தில் மீதியுள்ள வேலையை முடித்து விட வேண்டும்.  இந்த வயல் வேலையைப் போலவே மற்ற ஒவ்வொரு வேலைக்கும் இரவு வரைக்கும் நீடீக்கும்.

இந்த பண்ணை அடிமைகளை கவனிக்க தனியாக ஒரு படை உண்டு. அவர்களுக்கு மணியக்காரன், ஏஜெண்ட், தலையாரி போன்றவர்கள் உண்டு. வயல்வேலை முடியும் வரைக்கும் இவர்களும் வீட்டுக்குச் சென்றுவிட முடியாது.  மதிய சாப்பாட்டு நேரத்திற்கு மட்டுமே வீட்டுக்கு சென்று வர முடியும்.  பண்ணையடிமைகள் வேலை முடிந்ததும் மணியக்காரனை பின்தொடர்ந்து அவர்களின் நிலப்பிரபு வீட்டுக்குச் செல்ல வேண்டும். 

குறிப்பிட்ட இடத்தில் தூரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பார்கள். நிலப்பிரபு முன்னால் கைகட்டி நிற்க வேண்டும்.

ஆண்களுக்கு சம்பளமாக 2 படி நெல்லும், பெண்களுக்கு மூன்று நாள் வேலைக்கு மூன்றேகால் லிட்டர் நெல் ( ஒரு மரக்கா) வழங்கப்படும். இவர்கள் இந்த நெல்லை அவித்து, அரிசியாக மாற்றி  கஞ்சி தயாரிப்பதற்குள் இரவு 11 மணி ஆகிவிடும்.  ஆண்கள் வரும் வழியில் ஓடையில் பிடித்து வரும் நண்டு, நத்தை மூலம் உருவாக்கப்படும் திரவத்துடன் சேர்த்து இரவு சாப்பாட்டை முடித்து மறுநாள் அதிகாலைக்குள் வயலுக்குள் சென்று விட வேண்டும். 

இவர்களின் குழந்தைகள் ஏதோவொரு மூலையில் பசி மயக்கத்தில் கிடக்க எழுப்பி ஊட்டி அந்த தரையில் படுத்துறங்க ஒரு நாள் முடிந்து அடுத்த நாள் பயணம் தொடங்கும்.. பண்ணையடிமைகளின் குழந்தைகள் ஆணாகயிருந்தாலும் பெண்ணாகயிருந்தாலும் எட்டு வயது வரைக்கும் ஆடையின்றி தான் திரிந்து கொண்டிருக்கும்..  பகல் முழுக்க புழுதியில் விளையாடி விட்டு பெற்றோர்கள் வருவதற்குள் ஏதோவொரு மூலையில் முடங்கி தூங்கிக் கொண்டிருக்கும். 

நடு இரவில் கஞ்சிக்காக எழுப்பும் போது பார்த்தால் மறு நாள் நடு இரவில் தான் மறுபடியும் பார்க்க முடியும். பண்ணையடிமைகள் தங்கள் குழந்தைகளுக்கு பத்து வயதானதும் தங்களது எஜமானர்களிடம் கொண்டு போய் சேர்த்து விட வேண்டும். எத்தனை மகன்கள் மகள்கள் இருந்தாலும் அத்தனை பேர்களையும் அவர்களிடம் தான் கொண்டு போய் விட வேண்டும்.  பிள்ளைகள் மாடு மேய்ப்பது, கன்றுக்குட்டிகளை பராமரிப்பது, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது என்று ஏதோவொரு வேலை இருந்து கொண்டேயிருக்கும். 

14 வயது தொடங்கும் போது வயல்களில் கொண்டு போய் விட்டு விடுவார்கள். ஒவ்வொரு பண்ணையடிமைகளும் ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் 14 மணி நேரம் உழைக்க வேண்டும்.  பண்ணையடிமைகளின் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாது. தலைமுறை தலைமுறையாக கல்வி வாசனையே இல்லாமல் நிரப்பிரபுகள் பள்ளிக்கு அனுப்பக்கூடாது என்று கட்டளையிட்டு விடுவார்கள்.

பண்ணையடிமைகளில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு நாவிதர் சவரம் செய்யமாட்டார். இந்த மக்கள் இதற்கென்று உடைந்த பாட்டிலின் பகுதியை மண்ணுக்குள் புதைத்து வைத்திருப்பார்கள். சில நாட்கள் கழித்து அந்த கூர்மையை வைத்து ஒருவருக்கொருவர் சவரம் செய்து கொள்வதுண்டு.

பண்ணை அடிமைகள் தங்கள் வீடுகளில் வளர்த்த மரங்களில் விளையும் பொருட்களை முதல் முறையாக பண்ணை வீட்டுக்கு கொடுத்த பிறகே தாங்கள் அனுபவிக்க முடியும்.  தாங்கள் வைத்திருக்கும் மாடு கன்று போட்டால் அந்த கன்றை பண்ணை வீட்டுக்கு கொடுக்க வேண்டும். அதற்காக ஒரு வேட்டியும் புடவையும் பண்ணையடிமைக்கு கொடுக்கப்படும். 


ஒவ்வொரு பொங்கலுக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சேர்த்து 2 படி நெல் கொடுப்பார்கள். 

பண்ணை அடிமைகளுக்கு நோய் வந்தால் இவர்களுக்கு வைத்தியம் பார்ப்பவர்களின் பெயர் வள்ளுவ பண்டாரம் என்றழைக்கப்படும் நாட்டு வைத்தியர்கள்.  இவர்களும் மேல் ஜாதி வர்க்கத்தை சேர்ந்தவர்களே. பண்ணையடிமைகள் தூரத்தில் நின்று கொண்டு தங்கள் நோய்கள் குறித்து சொல்ல வேண்டும். அவர் அய்யனார் முனி பயமுத்துகிறது என்று சொல்லிவிட்டு ஒரு கொத்து விபூதியை தருவார்.  அதை வாங்கி வாயில் போட்டுக் கொள்வார்கள்.  இதற்கு கூலியாக பண்ணையடிமைகள் ஒரு மரக்கால் நெல்லை வைத்தியருக்கு கொடுக்க வேண்டும்.

பண்ணையடிமைகள் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் நிலப்பிரபுகளிடம் முறைப்படி அனுமதி வாங்க வேண்டும்.  கல்யாணச் செலவுக்கு கல்யாண சிவந்த பணம் என்ற பெயரில் பண்ணையடிமைகள் நிலப்பிரபுகளிட்ம் முன் பணம் கேட்பார்கள்.  நிலப்பிரபுகள் ஒரு மூட்டை நெல் அல்லது முப்பது ரூபாய் கொடுத்து ஒரு பிராமிஸரி நோட்டு மூலம் எழுதி வாங்கிக் கொள்வார்.  பிறக்கப் போகும் குழந்தைகளும் இந்த பண்ணையிலே வேலை செய்யப்பட வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாகும்.


சில கிராமங்களில் புதுப்பெண் தனது முதலிரவை நிரப்பிரபுவோடு கழிக்க வேண்டும் என்ற நிலையும் இருந்தது.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு வணங்க கோவில் என்ற அமைப்பு தனியாக இருக்காது.  திருவிழக்காலங்களில் வேப்பமரம், உதியமரத்தின் கீழ் ஒரு கல்லை வைத்து அதற்கு முன்னால் ஒரு சட்டியில் கள்ளையும், கருவாடையும் வைத்து வணங்குவார்கள்.  பொதுவான திருவிழக்களில் நடக்கும் தெய்வ வழிபாடுகளை தூரத்தில் நின்றே வணங்க வேண்டும்.  இங்கு இவர்களுக்கு கடைசியாக கொடுக்கப்படும் கறிச் சாப்பாட்டை இலைவைத்து கட்டப்பட்ட மூட்டையை சுமந்து சென்று தங்கள் பகுதிக்குள் கொண்டு வந்து உருண்டை பிடித்து ஒவ்வொருவருக்கும் கொடுத்து சாப்பிட வேண்டும். 

இதிலும் பள்ளர், பறையர் என்ற பிரிவுகள் உண்டு.  இருவரும் தனித்தனியாகத் தான் செயல்படுவார்கள்.

பண்ணையடிமைகள் இறந்து விட்டால் சவ அடக்கத்திற்கு தேவைப்படும் பணத்தையும் நிலப்பிரபுவிடம் முன்பணமாக பெற்று அதற்குத் தனியாக பிராமசரி நோட்டு எழுதிக் கொடுக்க வேண்டும்.  சவ அடக்கத்தின் போது நெருக்கமான உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.  மற்றவர்கள் வேலைக்கு வந்து விட வேண்டும். 

பண்ணையடிமைகளின் குடிசை என்பது மூன்று அடி உயர்த்திற்கு மன்னால் பூச்சப்பட்டதாகும்.. வாசலின் உள்ளே நுழைய தனது உடம்மை முழுமையாக குனிந்தால் தான் செல்ல முடியும்.

கிராமங்களில் இரவில் நாடகங்கள் நடக்கும்.  இது போன்ற சமயங்களில் நாடகத்தின் முன்பாக முதல் வரிசையில் மேல்சாதியினரும், அடுத்ததாக பிற்பட்ட வகுப்பினரும் அமர்ந்திருப்பார்கள். 

கடைசியாக தாழ்த்தப்பட்டவர்கள் இருப்பார்கள்.  ஒவ்வொரு பகுதிக்கும் வைக்கோல் பிரியை தடுப்பாக போட்டிருப்பார்கள்.  தாழ்த்தப்பட்டவர்கள் எழுந்து நின்று விடக்கூடாது.  ஒரு வேளை எழுந்து நின்று பார்த்தால் பலத்த அடி கிடைக்கும்.  இதற்கு பயந்து கொண்டே தாழ்த்தப்பட்டவர்கள் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை. 


இதற்கு மேலாக அதிகாலையில் வயலில் இறங்கியிருக்க வேண்டும்.  எந்த காரணமும் சொல்லமுடியாது.  இல்லாவிட்டால் அதற்கு தனியான தண்டனை காத்திருக்கும்.

ஒவ்வொரு நாளும் இரவில் நிலப்பிரகளின் வீட்டில்  பண்ணையடிமைகள் நின்று அன்று செய்த வேலைகளைப் பற்றி சொல்ல வேண்டும்.  இவர்களை கண்காணிக்கும் தலையாரிகள் அன்று நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சியையும் பற்றி ஒப்பித்துக் கொண்டு வருவார். 

யார் தாமதமாக வந்தார்கள்? யார் எதிர்த்து பேசினார்கள்? போன்ற எல்லாவற்றையும் சொல்லிமுடித்தவுடன் மறுநாள் சம்மந்தப்பட்ட பண்ணையடிமை நிரப்பிரபு வீட்டுக்கு வந்து விட வேண்டும்.  சம்மந்தப்பட்ட நபர் பறையராக இருந்தால் பள்ளரைக் கொண்டும், பள்ளராக இருந்தால் பறையரைக் கொண்டும் மாட்டுத் தொழுவத்தில் உள்ள கம்பில் கட்டச் சொல்வார்கள். சட்டையால் அடிப்பது தொடங்கும்.  இந்த சாட்டை என்பது புளிய விளாரால் உருவாக்கப்பட்டதாகும். 

ஐந்து பிரிசாட்டை என்று பெயர்.  ஐந்து பிரியையும் முறுக்கேற்றி வைத்திருப்பார்கள். அத்துடன் முணையில் ஒரு கூழாங்கல்லையும் சேர்த்து கட்டியிருப்பார்கள்.

ஒவ்வொரு முறையும் அடித்து சாட்டையை இழுக்கும் போது அந்த கல்பட்டு தோல் பிய்ந்து ரம்பம் போல அறுத்து ரத்தம் பீறிட்டுக் கொண்டு வரும். இத்தனை அடி என்று கணக்கில்லை. 

அடிப்பவனின் கை சோர்ந்து போகும் வரைக்கும் அடிக்க வேண்டும். தொடர்ந்து தலையாரி அடிப்பான்.  தலையாரியும் சரியாக அடிக்காவிட்டால் நிலப்பிரபு சாட்டையை வாங்கி அந்த தலையாரியை பலங்கொண்ட மட்டும் அடித்து முடித்து தொடர்ச்சியாக அந்த பண்ணையடிமை பலங்கெண்ட வரைக்கும் அதே சாட்டையால் போட்டுத் தாக்குவான்.

அடி வாங்குபவன் கத்தக்கூடாது என்பதற்காகவும், முகத்தில் துப்பி விடக்கூடும் என்பதற்காகவும் வாயில் துணியை வைத்து கட்டியிருப்பார்கள்.  அடித்து முடித்ததும், அடிவாங்கியவனை வைக்கோலின் மேல் சாக்கு போட்டு படுக்க வைத்திருப்பார்கள். அடிவாங்கியவனுக்கு பண்ணை வீட்டு ரசம் சோறு கொடுக்கப்படும். 

அந்த உருண்டையை தீயில் காட்டி காயத்துக்கு மருத்தாக போட்டுக் கொள்ள வேண்டும். வேறு எவரும் உதவக்கூடாது.

பண்ணையடிமைகளை மகா கேவலமாக நடத்திய வகையில் தஞ்சை மாவட்டத்திற்கு தனியான இடமுண்டு.   அது தான் சாணிப்பால் குடிப்பது என்ற தண்டனையாகும்.  மாட்டுச் சாணத்தை மண்குடத்திலிட்டு தண்ணீரை ஊற்றி கரைப்பார்கள்.  பின்பு அதை துணியால் வடிகட்டி வடிக்ட்டப்பட்ட நீரை தண்டனை விதிக்கப்பட்ட பண்ணையடிமை குடித்தே தீர வேண்டும்.  குடிக்க மறுத்தால் சவுக்கடி கொடுத்து குடிக்க வைப்பார்கள்.  பல சமயம் இரண்டும் ஒரே சமயத்தில் நிறைவேற்றப்படும்.

இது போன்ற வாழ முடியாத சூழ்நிலையினால் தான் தமிழகத்தில் இருந்து மேற்கித்திய நாடுகளுக்கு தமிழர்கள் புலம் பெயர்தல் நடந்தேறத் தொடங்கியது.

10 comments:

  1. இது வரை நான் படிக்காத விஷயங்கள்...பகிர்ந்ததுக்கு நன்றி...

    ReplyDelete
  2. சில கிராமங்களில் புதுப்பெண் தனது முதலிரவை நிரப்பிரபுவோடு கழிக்க வேண்டும் என்ற நிலையும் இருந்தது. இது நான் படிக்காத விஷயங்கள்...

    ReplyDelete
  3. சமூகம் வேளாண்மையில் ஈடுபட ஆரம்பித்த பிறகு ஏற்பட்ட மாற்றம்தானே! அன்றைய சமூகத்தை கண் முன் நிறுத்துகிறது பதிவு.

    ReplyDelete
  4. அருமையான ப்திவு,
    படிக்கும் போது இப்படி உழைத்த சமூகம் மனித தன்மையற்று நடத்தப் பட்டது வரலாறாக பதிவு செய்யாமல் போனதும் மிகப் பெரிய தவறாகவே தோன்றுகின்றது.
    பல்ரின் உழைப்பு கூலி கொடுக்காம ச்ரண்டித்தான் சிலரிடம் மட்டும் பணம்,சொத்து சேர்ந்தது.

    சிலர் கடந்தகால் மன்னர்கள் பெருமை பேசுவது எரிச்சலை தருகிறது.இவர்கள் காலத்தில் இன்னும் சாதிக்கொடுமை அதிகம்.உழைப்பு சுரண்டல் மட்டுமனிறி மன்னர்களின் விருப்பு வெறுப்புக்கு பலர் போர் என்ற பெயரில் பலி கொடுக்கப் படுவர்.

    நம் நாட்டில் அனைவரும் சட்ட அளவிலாவது சம் உரிமை பெற்று இருப்பது கடந்த 50 வருடங்களாக் மட்டுமே.அதிலும் இம்மாதிரி சாதி பிரச்சினைகள் வந்து எதர்ர்த்த சூழ்நிலை மாறவில்லை என்பதை எடுத்து உரைக்கும்.

    தங்கள் தவ்றுகளை ஒத்துக் கொள்ளாத,பரிகாரம் தேடாத சமூகம் உருப்படாது.
    தொடருஙகள்.

    ReplyDelete
  5. தங்கள் தவ்றுகளை ஒத்துக் கொள்ளாத,பரிகாரம் தேடாத சமூகம் உருப்படாது.

    ரொம்ப நாளைக்குப்பிறகு ஆச்சரியப்படுத்திய விமர்சனம்.

    தவறுகளை ஏன் ஒத்துக் கொள்வதில்லை?

    ஒவ்வொரு மனிதருக்குள் இருக்கும் ஆசை, பேராசை, பொறாமை, இன்னும் பல. வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அப்புறம் எப்படி தன்னை உள்நோக்கி கவனிக்க முடியும். சாதீ என்பது இங்கு மறைபொருள். உள்ளே உள்ளே நுழைந்து பார்த்தால் இன்னும் பல விசயங்கள் வெளியே வரும். வளர்ச்சி அடைந்த நாடுகள் என்று மார்தட்டி கொள்ளும் (இங்கிலாந்து) நாடுகளில் கூட கலவரத்தை சாக்காக வைத்துக்கொண்டு செல்போன், வீட்டு உபயோகப் பொருட்களை சூறையாடிக்கொண்டு செல்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்.

    வாய்ப்புக்காக காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

    இங்கே உள்ளே புழுங்கிக்கொண்டிருக்கும் எண்ணங்களுக்கு வடிகால் தேடி வன்முறையாக வெளியே வெடித்து விடுகின்றது.

    ReplyDelete
  6. பதிவின் மூலம் 2000 வருடங்களிற்கு மேல் அனுபவித்த கொடுமைகளுக்கு பின் இப்போதுதான் சுதந்திரத்தின்,சமத்துவதின் மூச்சை ஒரளவு அனுபவிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் போல.ஆனால் அதற்கும் எவ்வளவு தனிநபர்,இயக்க போராட்டங்கள்,சட்டங்கள். இடையிடையே முட்டு கட்டைகள்........இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.இந்த விடயத்தில் பதிவு விலாவாரியாக எல்லாவ்ற்றையும் சொல்ல நிறைய உள்ளது.அது பல கிளைகளாக போய் கொண்டே இருக்கும் என தோன்றுகிறது.முடிந்த வரை எழுதுங்கள் சார்.நன்றி.

    ReplyDelete
  7. //சில கிராமங்களில் புதுப்பெண் தனது முதலிரவை நிரப்பிரபுவோடு கழிக்க வேண்டும் என்ற நிலையும் இருந்தது.//அதெபொல் பண்ணையடிமையும் நிலப்பிரபுவின் மணவின் படுக்கய்யிக்கு செல்லவெண்டும்

    ReplyDelete
    Replies
    1. சில கிராமங்களில் புதுப்பெண் தனது முதலிரவை நிரப்பிரபுவோடு கழிக்க வேண்டும் என்ற நிலையும் இருந்தது.//அதெபொல் பண்ணையடிமையும் நிலப்பிரபுவின் மணவின் படுக்கய்யிக்கு செல்லவெண்டும்,பண்ணை அடிமையும் நிலபிரபுவின் படுத்தே ஆக வேண்டும் இல்லாவிட்டால் சவுக்ககடி தான்

      Delete
    2. பண்ணைஅடிமைக்காக நிலப்பிரபுவின் மனைவி ஏங்கி கிடைப்பாள் , நிலப்பிரபுவிற்கு எதுவும் இருக்காது அதனால் நிலப்பிரபுவின் மனைவி படுப்பேன் பண்ணை அடிமை கூட தான்

      Delete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.