அமெரிக்காவின் விடுதலை வரலாற்றை படித்திருக்கிறீர்களா? வாஷிங்டன் தலைமையில் அமெரிக்கா பிரிட்டன்
ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்தது என்றும் அமெரிக்கர்கள் இந்த விடுதலைப்
போராட்டத்தில் பல தியாகத்தினை செய்தார்கள் என்றும் சரித்திரகுறிப்புகள்
தெரிவிக்கின்றன. ஆனால் இதில் மறைக்கப்பட்ட
உண்மைகள் பல உண்டு. இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான கருப்பின மக்களும் கலந்து
கொண்டனர். அவர்களுக்கு ஒரே நோக்கம்
மட்டுமே இருந்தது. பிரிட்டன் தோற்றால்
தங்களை குடியேற்ற நாடுகள் அடிமை முறையிலிருந்து விடுவிடுத்துவிடும் என்று
நம்பினார்கள். அவர்களின் நம்பிக்கைகள்
பொய்த்துப் போனது.
வரலாற்றிக் குறிப்புகளில் கூட இந்த கருப்பின மக்களின்
தியாகங்கள் வெளிவரவில்லை. 1776 ஆம் ஆண்டு பிலடெல்பியாவில் சுதந்திரப்
பிரகடனத்திற்குப் பிறகு சுட்டுக கொல்லப்பட்ட கறுப்பின மக்கள் மற்றும் கறுப்பர்
அல்லாத வெளிநாட்டு மக்களின் கைகளில் கால்களில் இருந்த அடையாளங்களை வைத்தே அவர்களை
அடிமைகளாக வாழ்ந்தவர்கள் என்ற அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.
1860 ஆம் ஆண்டு..
BLACK CODE என்றொரு சட்டத்தினை
அமெரிக்கா கொண்டு வந்த ஆண்டாகும்..
பிரிட்டிஷ் அரசாங்கம் தென்னாப்பிரிக்காவில்
அறிமுகப்படுத்திய இனவெறிக்கொள்கையை நமக்கு சரித்திர பக்கங்கள்
சுட்டிக்காட்டியுள்ளது. இந்த தென் ஆப்பிரிக்காவில் நடந்த இனிவெறி பாகுபாடு தான்
நமக்கு ஒரு மகாத்மா காந்தியை தந்தது. மோகன் தாஸ் கரம் சந்த் காந்தி இந்த இனவெறி
பாகுபாடால் பாதிக்கப்பட்டு தான் இந்தியாவில் தனது அகிம்சையை கொள்கை ஆழமாக
வேரூன்றினார்.
இதே போலத்தான் இன்றைய அமெரிக்காவின் நாகரிக வளர்ச்சியென்பது
பல அசிங்கங்களை உள்ளே வைத்துக் கொண்டு தான் இந்த அளவுக்கு நகர்ந்து வந்துள்ளது.. அமெரிக்காவிற்கு
வேலைக்காக அழைத்து வரப்பட்ட கருப்பின மக்களை அடக்கி ஓடுக்க அமெரிக்காவும் இந்த
ப்ளாக் கோட் என்ற சட்டத்தை பட்டவர்த்தனமாக அறிமுகப்படுத்தியது. இது ஏறக்குறைய தமிழ்நாட்டில்
நிலவிய தீண்டாமை என்கிற நிலையைப் போலவே இருந்தது. தொட்டால் பாவம்.
பார்த்தால் பாவம் என்கிற ரீதியில் கருப்பின மக்கள் பார்க்கப்பட்டு விலங்குகளைப்
போலவே நடத்தப்பட்டனர்..
இந்த சட்டத்தின்படி கருப்பினர்களுக்கு தனி வசிப்பிடம், தனி
பள்ளிக்கூடம், மருத்துமணை, மருத்துவர்கள் என்று தொடங்கி கருப்பின மக்கள் வணங்கும்
தேவாலயங்கள் வரைக்கும் தனித்தனியாக பிரித்து வைத்திருந்தனர். இதற்கும் மேலாக
அன்றாட வாழ்க்கையில் கருப்பின மக்கள் நடந்து செல்லும் சாலைகள் வரைக்கும் தனியாக
பிரித்து வைத்தனர்.
உச்சகட்டமாக கருப்பின மக்களால் தான் நோய்கள் பரவுகின்றது
என்று சொல்லி பொது இடங்களில் கருப்பின மக்கள் எச்சில் துப்பக்கூடாது என்பது
வரைக்கும் சட்டதிட்டமாக கொண்டு வந்தனர். சாலையில் பார்ப்பவர்களை அடித்து
நொறுக்குவது முதல் அவர்களை சாத்தான்கள் என்று அழைக்கப்படுவது வரைக்கும் அப்பட்டமான
நிறவெறிக் கொள்கை தலைவிரித்தாடியது. இதற்கு மேலாக தப்பி ஓடுபவர்களை, கலவரம்
செய்யும் கருப்பர்களை அடக்கி ஒடுக்க DOG FORCE என்றொரு சட்டத்தை உருவாக்கி வைத்திருந்தனர். இதற்கென்று சிறப்பு பயிற்சி
கொடுத்த நாய்களை வைத்திருந்தனர்.
ஒரே கவ்வு. கால்
கிலோ சதை தொங்கிவிடும் அளவுக்கு உள்ள நாய்களை கருப்பர்களை குறி வைத்து
ஏவிவிடப்பட்டது. கருப்பர்கள் வெளியே
நடமாடக்கூட அஞ்சினர். உணவக விடுதிகள், மற்ற வியாபார இடங்களில் கருப்பர்கள்
சென்றாலே விரட்டி அடிக்கப்பட்டனர்.
கைகளில் காசு இருந்தாலும் கூட எதுவும் வாங்க முடியாது. ஓரளவிற்கு மேல் வெள்ளையர்களை எதிர்க்க முடியாத
காரணத்தினால் தங்களின் வாழ்விடங்களை ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களில் அமைத்துக்
கொண்டனர். இப்போது நாம் பெருமையாக கருதிக் கொண்டிருக்கும் ஹாலிவுட் பகுதியும்
இப்படி கறுப்பினக் கழைக் கூத்தாடிகள் ஓடி ஒளிந்த பகுதியாகும்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் தொடர்ந்து கொண்டிருக்கும்
அப்பட்டமான இனவெறிக் கொள்கையை கருப்பர்கள் எதிர்த்தனர்.
இந்த இடத்தில் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால்
முற்போக்கு கொள்கையை உடைய வெள்ளையர்களும் இந்த பாகுபர்ட்டை எதிர்த்து குரல்
கொடுத்தனர். இந்த பிரச்சனையை நீதிமன்றம்
வரைக்கும் கொண்டு சென்றனர். நீதிமன்றங்கள்
கண்டித்த போதும் கூட கருப்பின மக்களின் வாழ்க்கையில் எந்த மாறுதல்களும்
உருவாகவில்லை.
15th Ammenment
அமெரிக்காவின் வரலாற்றுப் பக்கங்களை நீங்கள் தாண்டி வரும்
போது இந்த வாசகத்தை படித்திருக்கக்கூடும்.
அதாவது கருப்பின மக்கள் ஆட்சி அதிகாரத்தில் எங்களுடைய பங்களிப்பும்
வேண்டும் என்று பட்டவர்த்தனமாக கேள்வி கேட்கத் தொடங்கினர். பலவிதமான கிளர்ச்சியில்
ஈடுபட்டனர். இதை அடக்க அமெரிக்க அரசு
இராணுவத்தை ஏவிவிட்டது. பல்லாயிரக்கணக்கான
கருப்பர்கள் கொல்லப்பட்டனர். பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே போக மற்றொரு சட்டம்
உருவானது.
கருப்பின மக்களின் உரிமைகள் குறித்து பேசு அந்தந்த
மகாணங்கள் தான் சட்டமியற்ற வேண்டும் என்று கொண்டு வரப்பட்டது. இதில் தான் இடியாப்பச் சிக்கல் ஆரம்பம்
ஆனது. ஒவ்வொரு மகாணத்திலும் உள்ள நீதிபதி,
வக்கீல், ஆசிரியர் வரைக்கும் அணைவருமே கருப்பின மக்களை அடிமையாக வைத்திருக்க எவர்
தான் கருப்பின மக்களுக்கு விடுதலை தர சம்மதம் என்று சொல்வார்கள்?
தொடருங்கள் ...தொடர்கிறேன் .வாழ்த்துக்கள் .
ReplyDeletefollow up
ReplyDeleteஎங்கேயிருந்து இவ்வளவு செய்திகளைக் கொண்டு வருகிறீர்கள்!சொன்னா நாங்களும் இரண்டு பதிவு போட வசதியா இருக்குமில்ல:)
ReplyDeleteஏன் என்னை யூத்தா காண்பிக்கலைன்னு யானை சண்டைக்கு வந்திடப்போகுது:)
ReplyDeleteமனதளவில் விலங்குகளுக்கும் கீழான புத்தியோடு,விலங்குகளை விட கேவலமாக கருப்பினத்தவரை வெறித்தனமாக நடத்தியிருக்கிறார்களே....தொடருங்கள்.
ReplyDeleteநல்ல தொடர்...
ReplyDeleteதொடருங்கள்...
தொடர்கிறோம்...
தொடருங்கள் ...தொடர்கிறேன்...வாழ்த்துக்கள்..
ReplyDeleteசுமார் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு வரை நம் நாட்டிலும் ஏறக்குறைய இந்த மாதிரி நடைமுறை இருந்தது நினைவுக்கு வருகிறது. ஆனால் அதற்கு நாம் வேறு பெயர் கொடுத்திருந்தோம். அதன் தாக்கம் இன்றும் ஏதாவதொரு செயலில் வெளிப்படுகிறது.
ReplyDelete>>ராஜ நடராஜன் said...
ReplyDeleteஎங்கேயிருந்து இவ்வளவு செய்திகளைக் கொண்டு வருகிறீர்கள்!சொன்னா நாங்களும் இரண்டு பதிவு போட வசதியா இருக்குமில்ல:)
அஸ்கு புஸ்கு
நீட் போஸ்ட் சார்.
ReplyDeletePlease continue.
ReplyDeleteநண்பரே!
ReplyDeleteஅருமையான வரலாற்றுப் பதிவு
அனைவரும் அறியவேண்டியது.
தொடருங்கள் தொடர்வேன் நான்
நன்றி!
தொடர்கிறேன்ங்க.
ReplyDeleteநிறத்தை பார்த்து மனிதன் செய்யும் அளவில்லாத கொடுமைகளை அரிய செய்திகளை அறிய தந்தீர்....
ReplyDeleteஅன்பு வணக்கங்கள் ஜோதிஜி...
உங்க தளத்தில் இப்ப தான் வந்து பார்த்தேன்....
மனம் சட்டுனு பதறவைக்கிறது கருப்பினர்களுக்கு நடந்த கொடுமைகள் நம் நாட்டில் தீண்டாமை போல தான் என்று படிக்கும்போதும்....
அவர்களுக்கு கல்வியில் இருந்து எல்லாமே தனி தனியாக கொடுத்து ஆனாலும் வெளியே பொதுவில் எச்சில் துப்பக்கூடாது என்றும் எங்கும் பொதுவில் நடமாடினாலே கண்ணில் பட்டாலே அடிப்பதும் நாய்களை ஏவி விடுவதும் :( மிக மிக வேதனையாக இருக்கிறது.... மனித நேயம் இல்லாத கொடுங்கோலர்களாக இருக்கிறார்களே :(
அன்பு நன்றிகள் ஜோதிஜி பகிர்வுக்கு....