அஸ்திவாரம்

Thursday, February 17, 2011

தோல் சேலை தொடக்க உரிமைப் போராட்டம்

இந்தியாவில் தொடக்கத்தில் சாதி என்ற பெயரால் எவ்வளவு பாரபட்சம் நிலவியதோ அந்த அளவிற்கு அந்த சாதியை வைத்துக் கொண்டே பல திருகுதாள வேலைகளும் நடந்து கொண்டுருந்தது. நீ இந்த சாதியில் பிறந்து இருக்கிறாயா?  இப்படித்தான் வாழ வேண்டும் என்பதில் தொடங்கி உன்னுடைய வட்டம் இதற்குள் தான் முடிகின்றது.  இதற்கு மேல் நீ வெளியே வரமுடியாது என்பதாக ஒவ்வொரு இன மக்களுக்கும் ஆதிக்க சாதியினர் கோடு கிழித்து வைத்திருந்தனர்.  தீண்டத்தகாதவர்கள் என்று சொல்லி இந்தியாவில் அடக்கி வைக்கப்பட்ட இன மக்களின் வாழ்வியல் சோகத்தை எந்த வார்த்தைகளாலும் எழுதி விட முடியாது. வாழ்க்கை முழுக்க மிருகங்களை விட கேவலமாக நடத்தப்பட்டவர்கள் தான் அதிகம். சங்ககால மன்னர்கள் காலம் முதல் இருந்து வந்த இது போன்ற கொடூரங்கள் இன்று வரைக்கும் அங்கங்கே இருந்து கொண்டு தான் இருக்கிறது.  மனிதர்களை மனிதர்களாக பார்க்காமல் அவனின் குலத்தை அடிப்படையாக வைத்து, ஒருவர் செய்து வந்த வேலைகளை வைத்தே இது போன்ற பிரிவினைகள் உருவாக்கப்பட்டது.


இன்று நாடார்கள் என்பவர்கள் சமூகத்தில் தங்களை மையப்புள்ளியாக மாற்றிக் கொண்டவர்கள்.  பொருளாதார ரீதியாக தங்களை வளப்படுத்திக் கொண்டவர்கள். இன்று இவர்களுக்குள்ளும் பல பிரிவுகள் இருந்தாலும் இவர்கள் தாங்கள் பெற வேண்டிய சமூக உரிமைகளை அத்தனை எளிதாகவும் பெற்றுவிட வில்லை. ஒவ்வொரு சமயததிலும் உருவான அத்துமீறல்களும், இதனால் உருவான கலவரங்களும் தான் இவர்களின் இன்றைய வளமான வாழ்க்கைக்கு அடித்தளமாக உள்ளது.  

முற்பட்ட சாதியினர், ஆதிக்க சாதியினர் என்ற நிலையில் உள்ளவர்கள் அத்தனை பேர்களும் இந்த நாடார் இனமக்கள் மேலே வந்து விடமுடியாதபடி உருவாக்கிய பல வலைபின்னல்களைப்பற்றி சரித்திரம் விலாவாரியாக சொல்லிக் கொண்டே செல்கிறது.  அதில் ஒன்று தான் இந்த 'தோள்சேலை' போராட்டம்.  நாடார் இன பெண்கள் ரவிக்கை அணியக்கூடாது என்பதாகும். ஆனால் இன்று வரையிலும் நடந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு கலவரத்தையும் நாம் கூர்ந்து கவனித்துப் பார்த்தால் மனித மனங்களில் உள்ள வக்கிரங்கள் தான் நாம் கண்கூடாக பார்க்கமுடியும். வெறும் சாதிக்கலவரம் என்று மேலோட்டமாக பார்த்தாலும் ஒவ்வொரு கலவரங்களின் அடிப்படை நோக்கமே பொறாமை என்ற வார்த்தையில் இருந்து தான் உருவாகின்றது.  

தங்களுக்கு கீழே வாழ வேண்டியவர்கள், தாங்கள் சொல்லும் செர்ல்லுக்கு கட்டுப்பட்டு வாழ வேண்டிய கடமைப்பட்டவர்கள் என்று கருதிக் கொண்டு வாழும் ஆதிக்க சாதியினர் மனதில் உருவாகும் பொறாமைத்தீயே இது போன்ற கலவரங்களை உருவாக்க காரணமாக இருக்கிறது.  தங்கள் உழைப்பால் உயர்ந்த நாடார் இன மக்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் அடைந்த பொருளாதார வளர்ச்சி ஏனைய சாதிக்காரர்களின் பார்வையில் விகாரமாகத் தெரிந்தார்கள்.  இத்துடன் நாடார்களின் வாழ்க்கையில் கிறிஸ்துவம் உருவாக்கிய மாற்றத்தினால் பல தாக்கங்கள் உருவானது. சமூகத்தில் தங்களின் சமூக பிடிமானங்களை ஆழ அகல ஊன்றி கிளை பரப்பி மேலேறி வந்த நாடார் இன மக்களை மற்றவர்கள் அத்தனை எளிதாக ஏற்றுக் கொள்ள எவருக்கும் மனமில்லை. 


தொடக்கத்தில் தென் திருவிதாங்கூர் பகுதியில் லண்டன் மதகுருமார்கள் உருவாக்கிய மாற்றங்கள் ஆச்சரியமானது.  பல காலமாக சிந்தனையாலும் செயலாலும் தாழ்ந்து கிடந்த இந்த இன மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போட ஆரம்பித்தனர். 1820 ஆம் ஆண்டு நாகர்கோவிலில் கிறிஸ்துவ ஆலயம் தொடங்கப்பட்டது.  அன்றைய சூழ்நிலையில் 3000 நாடார் இன மக்கள் இந்த கிறிஸ்துவ மதத்தை தழுவிக் கொண்டனர். நெல்லை மாவட்டத்தில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களைப் போலவே திருவிதாங்கூர் பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்தவர்களும் பனை தொழிலை நம்பியே வாழ்ந்து வந்தனர். ஆனால் இதற்குள்ளும் அவரவர் பெற்றிருந்த பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் இரண்டு பிரிவாக இருந்தனர். திருவிதாங்கூரில் தென் பகுதியில் வாழ்ந்து வந்தவர்கள் நாயர் நிலபிரபுகளின் நிலங்களை எடுத்து குத்தககைதாரர்களாக வாழ்ந்து வந்தனர். இவர்கள் மற்றவர்களை விட சற்று மேம்பட்ட பொருளாதார வளர்ச்சியை அடைந்து இருந்தனர்.  இதைப் போலவே நெல்லை மாவட்டத்தின் எல்லையோரமாக அதாவது தென் திருவிதாங்கூரின் கிழக்குப் பகுதியில் வாழ்ந்து வந்த நாடார்கள் வேளான் நிலபிரபுகளிடம் இருந்து பெற்ற நிலங்கள் மூலம் குத்தகைதாரர்களாக வாழ்ந்து வந்தனர். 

மொத்தத்தில் நாடார் என்பது ஒற்றைச் சொல்லாக இருந்தாலும் அவரவர் பெற்றிருந்த பொருளாதாரத்தைக் கொண்டு தான் நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்று கருதும் நிலையில் தான் இவர்களுக்குள்ளும் பல பிரிவுகள் இருந்தது.  

திருவிதாங்கூர் பகுதி மற்ற பகுதிகளை விட சற்று வளமாக இருந்த பகுதியாகும். மன்னர்கள் ஆட்சி புரிந்த 16 ஆம் நூற்றாண்டு முதல் குடியேறிய நாடார்கள் மற்ற இடங்களை விட சற்று அதிகமாக கூலி பெற்று வாழ்ந்து வந்த போதிலும் சமூக இழிநிலைகளை பொறுத்துக் கொண்டு இந்த பகுதியில் பனை தொழிலாளர்களாக வாழ்ந்தனர். இந்த பகுதியில் தீண்டாமை கொடுமை என்பது உச்சமானது. தாழ்ந்த சாதியினர், நாயர்களிடம் பேசும் போது 12 அடிகள் தள்ளி நின்று தான் பேச வேண்டும். குடைகள் பயன்படுத்தக்கூடாது. காலணிகள், தங்க ஆபரண்ங்கள் எதுவும் அணியக்கூடாது. கட்டும் வீடுகளில் மாடி வைத்து கட்டக்கூடாது. பசுக்களில் பால் கறக்க அனுமதியில்லை. தண்ணீர் குடங்களை இடுப்பில் வைத்து தூக்கிக் கொண்டு செல்லக்கூடாது. மேலாடைகளை அணிந்து கொள்ள போர்த்திக் கொள்ள அனுமதியில்லை. இது தவிர தாழ்ந்த சாதியினருக்கு கடுமையான வரிகள் என்று தனியாக உண்டு. பறையர்களுக்கு ஒரு படி மேலாக வாழ்ந்து கொண்டிருந்தாலும் நாடார்களையும் தள்ளி வைத்து தான் பார்த்தனர். உழைப்புக்கேற்ற ஊதியமின்றி நாட்டு நலன் என்ற போர்வையில் நாடார்களின் உழைப்பு ஊதியம் கொடுக்காமல் சுரண்டப்பட்டது.  

ஆனால் ஒவ்வொரு காலகட்ட வளர்ச்சியிலும், நெல்லை மாவட்டத்தின் மற்ற பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்தவர்களை பார்த்துக் கொண்டு வந்தவர்கள் தாங்கள் நாயர்களின் அடிமையாக வாழ்ந்து கொண்டிருப்பதை உடைக்கத் தலைப்பட்டனர். மற்ற இடங்களில் வாழ்ந்து கொண்டுருப்பவர்களிடம் சமூக ரீதியான தொடர்புகள் உருவாக அப்போது தான் கிறிஸ்துவ மத குருமார்களின் தொடர்பும் இவர்களுக்கு உருவாகத் தொடங்கியது.  இதுவே தான் இங்கிருந்த மதகுருமார் லண்டன் தலைமையகத்திற்கு எழுதிய கடிதத்தில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் நாடார்கள் நம் பக்கம் இருக்கிறார்கள் என்று எழுதியிருந்தார்.  காரணம் ஒவ்வொருவரும் ஏதோவொரு வழியில் நாம் இந்த இழிவான நிலையில் இருந்து மேலே வந்து விட முடியாதா? என்று காத்துக் கொண்டிருந்தனர். 


கிறிஸ்தவ மதத்தை தழுவிய நாடார்களும், மத குருமார்களுடன் நெருங்கிய தொடர்பை உருவாக்கிக் கொண்டவர்களுக்கும் அரசாங்க ஆதரவு எளிதாக கிடைத்தது. பல வரிகளில் இருந்து தங்களை காத்துக் கொண்டனர். ஏராளமான பொருள் உதவிகளும் கிடைக்கத் தொடங்கியது.  நிலங்களும், வணிகத் தொடர்புகளும் உருவாக தங்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் சுய தொழில் மூலம் வரத் தொடங்கியது.  சமூகத்தில் விரைவாக முன்னேறத் தொடங்கினார்கள். ஆதிக்க சாதியினரின் கோபப்பார்வை நாடார்கள் மேல் திரும்பிய அளவிற்கு இந்த மத குருமார்களின் மேலும் திரும்பத் தொடங்கியது.  மற்றொரு அம்சம் மத குருமார்களின் ஆதரவுடன் கல்வி கற்றவர்களின் முயற்சியினால் அடுத்து வருபவர்களுக்கு வழிகாட்ட பல விதங்களிலும் இவர்களின் வளர்ச்சி பிரமிக்கக்கூடியதாக இருந்தது.  இந்த சூழ்நிலையில் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வளர்ந்து விட்ட சமூகமாக நாடார்கள் தங்களை கருதிக் கொள்ள மேலாடை அணிவது பற்றிய வாக்குவாதத்தை எழுப்பத் தொடங்கினர்.

30 comments:

  1. தோள் சீலை போராட்டம் பற்றி நீங்கள் தொடர காத்திருக்கிறேன்..விரிவான அலசல்..

    ReplyDelete
  2. முலைவரின்னு கூட ஒன்னு கட்டணுமுன்னு கேள்விப்பட்டதுண்டு:(

    வாழ்வது சுலபமில்லை......

    ReplyDelete
  3. விரிவாக தொடங்கியுள்ளீர்கள். சிறப்பாக உள்ளது.

    அடுத்தப் பதிவிற்கு காத்திருக்கின்றேன்.

    ReplyDelete
  4. கும்மியாரே நேத்து ராசாவிடம் பேசியது தான் நினைவுக்கு வருது. இப்படியே போய்க் கொண்டு இருந்தால் நான் எப்ப என்னோட பள்ளிக்கூடத்திற்கு வந்து சேர்வது(?)

    ReplyDelete
  5. அண்ணாச்சி கடை என்று இப்பொழுது சாதரணமாக சொல்லி விடுகிறோம்... எத்தனை தடைகளை...அடக்கு முறைகளை கடந்து வந்து இருக்கிறார்கள் என்று தெரிய வரும் போது.... மேலும் மதிப்பு கூடுகிறது.

    ReplyDelete
  6. இந்த வாரம் நாணயம் விகடனில் மார்பு வரி பற்றிச் சொல்லிருந்தார்கள். அதாவது மார்பை மறைப்பதற்கு கட்ட வேண்டிய வரி. படித்ததும் ஒரு கணம் அதிர்ச்சியாகஇருந்தது.
    நல்ல பகிர்வு.

    ReplyDelete
  7. சிந்தனை செய்யத் தூண்டும் பதிவு.

    ReplyDelete
  8. முலைவரின்னு கூட ஒன்னு கட்டணுமுன்னு//

    எவ்வளவு வசதியா தன்னோட வக்கிரபுத்திக்கு டாக்ஸ்ம் போட்டு சம்பாரிச்சிக்கிட்டே மனுசனை விலங்கா வைச்சிருந்திருக்காய்ங்க... எங்க அவிங்க எல்லாம் இப்போ - எங்கனாயாவது எலும்பு துண்டா கிடப்பாய்ங்க!

    தொடருங்க, தொடருங்க, ஜி!!

    ReplyDelete
  9. சிறப்பான பதிவு.நன்று ஜோதிஜி

    ReplyDelete
  10. ஜோதிஜி, நீங்க இனி காரைக்குடி பள்ளிக்கோடத்துக்கு வர கொறைஞ்சது பத்து எபிசோடாவது ஆவும். நாடார் பத்தி ஆரமிச்சிட்டீங்க.. இப்போதான் தோள்சீலைப்போராட்டம் பத்தி உள்ள வந்திருக்கீங்க... அப்புறம் முலைவரி, நாடார்களை எந்தளவு கொடுமைப்படுத்தி இருக்காங்க அப்டீங்குறதுக்கு வரலாற்று ஆவணமான திருவாங்கூர் ஸ்டேட் மேனுவல், அவங்களுக்கு சமூக,ஆன்மீக மறுமலர்ச்சிய ஏற்படுத்துன அய்யா வைகுண்டர்... ஹப்பா.. சொல்றதுக்கே மூச்சு வாங்குதே... நடத்துங்க ராசாங்கத்தெ!

    ReplyDelete
  11. ஜோதிஜி!மிக முக்கியமான வரலாற்று ஆவணப்பதிவு.

    ReplyDelete
  12. புதுசா ஒரு வரலாறு அறியும் ஆவல் ஜோதிஜி.
    மிச்சம் சொல்லுங்க !

    ReplyDelete
  13. சாணப்பயல் என்று நாடார்களை நோக்கிய வசைச்சொல் உண்டு.

    வரலாறு அனைவருக்கும் தெரியவேண்டும். நாடார்கள் பற்றி இணையத்தில் தேடுபவர்களுக்கு தகவலாக மையும். நன்றி!

    ‍======
    ‍‍‍‍‍‍‍‍‍‍‍//தாழ்ந்த சாதியினர், நாயர்களிடம் பேசும் போது //

    யார் தாழ்ந்த சாதியினர்?
    எப்படி அவர்கள் பிறந்த மண்ணில் தாழ்த்தப்பாட்டார்கள்? யாரால்?

    //பறையர்களுக்கு ஒரு படி மேலாக வாழ்ந்து கொண்டிருந்தாலும் நாடார்களையும் தள்ளி வைத்து தான் பார்த்தனர். //

    பறையர்களுக்கு மேல் நாடார் சரி. நாடருக்கு மேல் யார்? யார்? எப்படி ?

    சாதிய ஏணி ஒன்று வரைந்து சொன்னால் யார் யாரைத் தாழ்த்தினார்கள்? எப்படி இது சாத்தியம் ஆனது என்று என்றாவது ஒரு நாள் பேச இயலும்.

    ***

    ReplyDelete
  14. சாதிய ஏணி ஒன்று வரைந்து சொன்னால் யார் யாரைத் தாழ்த்தினார்கள்? எப்படி இது சாத்தியம் ஆனது என்று என்றாவது ஒரு நாள் பேச இயலும்.


    இன்னும் இரண்டு பதிவோடு இதை விட்டு வெளியேறி விடலாம் என்று பார்த்தால் அடுத்த வேலையா? காரணம் நேற்று இவர்களின் சமூக வாழ்க்கையை ஊன்றி கவனித்து படிக்கும் இவர்களுக்குளேயே இருக்கும் உயர் தாழ்ந்த கேவல என்று ஏராளமான விசயங்கள் இழுத்துக் கொண்டே செல்கிறது. எப்பத்தான் இந்த பஞ்சாயத்தை முடிக்கிறது?

    ReplyDelete
  15. துளசி கோபால் திரு அற்புதமாக எழுதியுள்ளார்.

    சாந்தி என் எழுத்து தவற்றை நாகரிகமாக சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

    உண்மைதான் சித்ரா. பாட்டன் பூட்டன் பட்ட பாடுகள் இன்று ஒவ்வொருவரும் அனுபவித்துக் கொண்டு இருக்கும் இந்த வாழ்க்கை.

    வருக சண்முகவேல்.

    ஆங்கிலம் பேசலாம் பேசுவோம் நண்பரே. முதல் வருகைக்கு நன்றி.

    ராசப்பா இந்த தொடர் மூலம் கிடைக்கும் அத்தனை பெருமையும் உன்க்கே.

    ஹேமா நடராஜன் கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  16. எவ்வளவு வசதியா தன்னோட வக்கிரபுத்திக்கு டாக்ஸ்ம் போட்டு சம்பாரிச்சிக்கிட்டே மனுசனை விலங்கா வைச்சிருந்திருக்காய்ங்க... எங்க அவிங்க எல்லாம் இப்போ - எங்கனாயாவது எலும்பு துண்டா கிடப்பாய்ங்க!

    அட நீங்க வேற 5 தலைமுறைக்கு முன்னால் உள்ளவர்களின் எலும்பு கூட தேறும்ன்னு நினைக்கிறீங்களா? இந்த விமர்சனம் சும்மா நச்சுன்னு இருக்கு.

    ReplyDelete
  17. அன்பின் ஜோதிஜி முடிக்க நினைக்க விந்தைமனிதன் எடுத்து கொடுத்துவிட்டார்.

    ஏற்கனவே அன்பினுக்கு தூக்கம் பத்தலையாம் விந்தைமனிதன்.

    நீங்க எழுதுங்க அன்பின் நாங்க தெரிஞ்சுக்குறோம்.

    ReplyDelete
  18. சுக்கா,மிளகா சுதந்திரம் சும்மா கிடைக்க?
    ரத்தம் சிந்தியுத்தம் செய்து பெற்ற வரமல்லவா?? ,

    ReplyDelete
  19. இராஜராஜேஸ்வரி பெயரே கம்பீரமாக. உங்கள் வருகைக்கு நன்றிங்க. நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மையும் கூட.

    நண்பர் தவறு.

    பக்கத்தில் வந்து பார்ப்பது போல் ஒவ்வொன்றையும் வார்த்தைகளாக கொடுத்துக் கொண்டு இருக்கீங்க. இருக்கட்டும் ஒரு நாள் கண்டு பிடித்துவிடுவேன்.

    வருக சங்கவி.

    ReplyDelete
  20. சில வரலாற்று உண்ம்மைகள் மறைக்கப் பட்டுள்ளன.
    அகன்ற ராமநாதபுரம் என்ற மாவட்டமே கிடையாது.
    மதுரைக்கு தெற்கில் திருநெல்வேலி தான்.
    கடைசி பாண்டிய மன்னர்களுக்கு பின்னர் தெலுகு நாயக்கர்களாலும் இசுலாம் சமய வளர்ச்சியாலும் சமுதாயம் தாழ் நிலை சென்றது உண்மையே.
    முடிந்தால் முழு வரலாற்றையும் எழுதவும்..அரைகுறையாக வாந்தி எடுக்கவேண்டாம்.

    ReplyDelete
  21. முடிந்தால் முழு வரலாற்றையும் எழுதவும்..அரைகுறையாக வாந்தி எடுக்கவேண்டாம்.

    ரியோடி ஜெனிரா

    ஏன் வலைதளத்தை பாதியிலே உருவாக்கி விட்டு விட்டீங்க. இந்த ஊரை சிறுவயதில் தமிழ்வாணன் கதைகளில் படித்த ஞாபகம் வருகின்றது. அப்புறம் இன்று கூட உங்களை ஆன் லைனில் பார்த்தேன். மொத்த பதிவுகளை படிக்கும் போது நீங்க இங்கு சொன்ன விமர்சனம் சரியா தவறா என்று எனக்குத் தெரியப்படுத்துங்க.

    அதனால் தான் பக்கவாட்டில் உள்ள தொடர்கதை என்ற குறிசொல்லில் வினோத் சொன்னது போல சேமித்துக் கொண்டுருக்கின்றேன்.

    உங்கள் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  22. நல்லதொரு பதிவு.......... எந்தவொரு சமூகமும் முன்னேற வேண்டுமானால், தனது அடையாளத்தை மாற்ற வேண்டி இருக்கு, குறிப்பாக மத மாற்றம். மற்றொன்று செல்வ வளம்... வசதிகளையும், செல்வத்தையும் பெருக்கிக் கொண்டால், ஆதி திராவிடருக்கும் பெண்க் கொடுக்க முன் வருவார்கள் ஆதிக்கச் சாதியினர். ஆனால் பெண் எடுக்கத் தயங்குவார்கள்........ !!!

    ReplyDelete
  23. செல்வ வளம்... வசதிகளையும், செல்வத்தையும் பெருக்கிக் கொண்டால், ஆதி திராவிடருக்கும் பெண்க் கொடுக்க முன் வருவார்கள் ஆதிக்கச் சாதியினர். ஆனால் பெண் எடுக்கத் தயங்குவார்கள்........ !!!

    எதார்த்தம் செல்வன்.

    ReplyDelete
  24. மிக்க நன்றி.. தொடருங்கள்....
    ஏதேனும் ஆவணம் தேவைப்பட்டால் உதவ தயாராக இருக்கிறேன்..

    ReplyDelete
  25. sasero said...
    சில வரலாற்று உண்ம்மைகள் மறைக்கப் பட்டுள்ளன.
    முடிந்தால் முழு வரலாற்றையும் எழுதவும்..அரைகுறையாக வாந்தி எடுக்கவேண்டாம்.
    //
    இப்படி நீங்கள் வாந்தி எடுக்காமல்...உங்கள் கருத்துகளை சொல்லலாமே..நாங்களும் நிறைய தெரிந்து கொள்ளலாமே...

    தொடருங்கள் ஜோதிஜி ...

    ReplyDelete
  26. இந்த பதிவை இப்போது தான் படித்தேன்.
    நன்றி.

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.