அஸ்திவாரம்

Sunday, February 13, 2011

கிறிஸ்துவம் உருவாக்கிய மாற்றங்கள்

இராமநாதபுர மாவட்டத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்க ஏன் இந்த சாதி வேறுபாடுகளை விலாவாரியாக பேசிக் கொண்டிருக்கிறோம்?  காரணம் இன்று வரையிலும் ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் வணிகத்திற்காக உள்ளே வந்து படிப்படியாக தங்களை ஆட்சியாளர்களாக மாற்றிக் கொண்டார்கள் என்பதை பார்க்கும் போது இது போன்ற பல காரணிகள் இவர்களுக்கு பலவிதங்களிலும் உதவியாய் இருந்தது.  ஒருவருடன் ஒருவர் ஒன்று சேராமல் இருந்ததற்கு காரணம் ஆங்கிலேயர்கள் அல்ல.  இந்த சாதி என்ற ஒரு வார்த்தையே காரணமாகும்..  

'சும்மா வரவில்லை சுதந்திரம்' என்றொரு வாசகத்தை படித்த நாம் மற்றொன்றையும் இப்போது கவனத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். ஆங்கிலேயர்களும் அத்தனை எளிதாக இந்த நாட்டை ஆண்டு விடவும் இல்லை.  காரணம் நம் மக்களிடம் இருந்த மூடநம்பிக்கைகள் மேலும் உள்ளே ஒவ்வொரு இன மக்களிடமும் இருந்த ஏற்றத்தாழ்வுகளை கணக்கில் கொண்டு மிகக் கவனமாகத்தான் கையாண்டிருக்கிறார்கள். இங்கு தொடக்கத்தில் பாளையக்காரர்களாக, ஜமீன்களாக பல்வேறு கூறுகளாக பிரிந்து ஓற்றுமையில்லாமல் இருந்தவர்களை விரட்ட எப்படி பிரித்தாளும் சூழ்ச்சியை பயன்படுத்தி வென்றார்களோ அதன் பிறகு பல சவாலான விசயங்களையும் இங்குள்ளவர்களை வைத்தே சாதித்து இருக்கிறார்கள்.  ஒவ்வொரு பகுதியிலும் அந்த வட்டார சமூக அமைப்பை முன்னிலைப்படுத்தி தான் அதிகார வரம்புகளை உருவாக்கி ஆட்சி செலுத்தி உள்ளனர்.   

இன்று நகரமயமாக்கல், புலம் பெயர்தல் என்ற இந்த இரண்டு காரணங்களால் சாதி மூலக்கூறுகளை எவரும் பொறுமையாக கண்டு கொள்ள வாய்ப்பும் இல்லை.  அதற்கான வசதிகளும் மிகக் குறைவு.  உனக்கு வேலை தெரியுமா? அனுபவம் இருக்கிறதா? என்று கேட்கும் இன்றைய பொருளாதார போட்டியுலகில் எவரும் நீ இந்த சாதியா? என்று கேட்பது குறைவு.  இன்றைய சூழ்நிலையில் நம் அரசாங்கம் மட்டுமே இதை ஒரு ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.  அரசாங்கத்தை சார்ந்து வாழ வேண்டும் என்பவர்களுக்கு மட்டுமே இந்த பித்து தலைவரைக்கும் ஏறி இன்று வரைக்கும் பல வகையிலும் தடுமாற வைத்துக் கொண்டிருக்கிறது. அரசாங்கம் சாராத தனி நபர்களின் நிர்வாகத்தில் உள்ளவர்களின் பார்வையில் 70 சதவிகிதம் இன்று சாதி என்ற அமைப்பே தேவையில்லாமல் போய்விட்டது. 


ஆனால் தொடக்கம் முதல் ஒவ்வொருவரின் பொருளாதாரம் தான் இந்த சாதி மூலக்கூற்றை தீர்மானிப்பதில் முக்கிய காரணியாக இருந்தது என்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உருவாக்கிய பிரச்சனைகள் தான் தொடக்கத்தில் பலரையும் மதம் மாற வைத்தது.  ஆனால் அதிலும் ஆயிரெத்தெட்டு பிரச்சனைகளை சந்தித்து எப்படியோ பலரும் மேலேறி வந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள கடற்கரையோர மக்கள் தான் மத மாற்றத்திற்கு முதல் காரணமாக இருந்தனர்.  இப்போது நாம் பயணித்துக் கொண்டிருக்கும் இராமநாதபுர மாவட்டத்தில் தொடக்கத்தில் ஒன்று சேர்ந்திருந்த திருநெல்வேலியைச் சுற்றியுள்ள பகுதிகள் ஆகும். இங்கு ஆதிக்கம் செலுத்திய நாடார் இன மக்கள் மற்றும் அவர்கள் வாழ்வியலில் சந்தித்த சவால்களில் இருந்து நம்மால் பல பாடங்களை கற்றுக் கொள்ள முடியும்... தொடக்கத்தில் ஆங்கிலேயர்கள் இது போன்ற இடத்தில் இருந்து தான் தங்களின் புனிதப் பணிகளை தொடங்கினர். 

1600 ஆம் ஆண்டு இந்தியாவிற்குள் உள்ள வந்த ஆங்கிலேயர்கள் வணிகத்தில் எப்படி கவனம் செலுத்தி முன்னேறிக் கொண்டிருந்தார்களோ அதைப் போலவே 1680 முதல் கிறிஸ்துவ பாதிரியார்கள் ஒரு பக்கம் அவர்கள் வேலையை காட்டிக் கொண்டிருந்தார்கள். ஒரு கையில் கல்வி என்ற சேவை மனப்பான்மை.  மற்றொரு கையில் பைபிள் என்ற மதமாற்றம்.  இவர்களிடம் அடைக்கலம் புகுந்தவர்கள் சமூக வாழ்விலும் பல வகையிலும் முன்னேறத் தொடங்கினர். ஈழத்திலும் குறிப்பாக யாழ்பாணபகுதியில் வாழ்ந்த மக்கள் இப்படித்தான் இரண்டு தலைமுறைக்குள் முறையான இடத்தை பிடித்தனர்.  இது போன்ற சமயத்தில் தான் ஈழத்திற்கும் இந்த பகுதிகளுக்கும் மிக நெருக்க உறவு உருவானது. 

1830 முதல் ஈழத்தில் உருவாக்கப்பட்ட காபி தேயிலை தோட்டங்களுக்குத் தேவைப்படும் ஆட்கள் இந்த அகண்ட இராமநாதபுர மாவட்டத்தில் இருந்து தான் புலம் பெயரத் தொடங்கினர். 1843 முதல் 1867 முதல் ஏறக்குறைய 15 லட்சம் பேர்கள் ஈழத்திற்கு புலம் பெயர்ந்தனர். சம்பாரித்தவர்கள் திரும்பவும் வந்து பல இடங்களில் இடம் வாங்குதல், வீடு கட்டுதல் போன்றவற்றில் ஈடுபட்டு சமூகத்தின் பார்வையில் தங்களை மேம்பட்டவர்களாகவும் மாற்றிக் கொண்டனர். இதன் தொடர்ச்சி தான் 1833 ஆம் ஆண்டு மலேசியாவிற்கு ரப்பர் தோட்டம் அமைக்க ஆட்கள் இங்கிருந்து வலுக்கட்டாயமாக நகர்த்தப்பட்டனர்.

இலங்கை, மலேசியாவில் தொடக்கத்தில் குடியேறியவர்கள் அத்தனை பேர்களும் நாடார் இன மக்களே. குறிப்பாக வாழ வழியில்லாமல் இருந்த திருச்செந்தூர், நாங்குநேரி, ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வாழ்ந்தவர்கள் தான் அதிக அளவில் இது போன்ற வேலைக்கு நகரத் தொடங்கினர்.

நாடார் இன மக்கள் முறைப்படியான கல்வியறிவு இல்லாமல் உடல் உழைப்பை மட்டுமே நம்பி வாழ்ந்த காரணத்தால் வெள்ளையர்களின் பார்வையில் நாடார்கள் இன மக்கள் சற்று விகாரமாகத்தான் தெரிந்தார்கள். பனைமர தொழில்களை வைத்துக் கொண்டு வாழ்ந்து வந்த இந்த பகுதி மக்களின் கால் கைகள் போன்றவைகள் கூட வினோத வடிவில் இருந்தது.

ஏறக்குறைய நாடார் இன மக்களின் தொடக்க கால வாழ்க்கை என்பது  மற்றவர்களால் வெறுக்கப்பட்ட குணாதிசியங்கள் உள்ளவர்களாகத்தான் வாழ்ந்து இருக்கின்றனர். தங்கள் அன்றாட வாழ்க்கைப்பாடுகளுக்கு தேவைப்படும் திறமையைத் தவிர வேறு எதையும் கண்டு கொள்ளவும் இல்லை.  வளர்த்துக் கொள்ள ஆசையில்லாமல் ஒவ்வொருவரும் ஒரு சிறிய வட்டத்திற்குள் தான் வாழ்ந்து இருக்கின்றனர். கருப்பு நிறத்தோற்றமும், காதுகளில் கனமாக ஈயத்திலான ஆபரணங்களும் போட்டு பழகிய காரணங்களினால் பெண்களின் காதுகள் தோள் வரைக்கும் தொங்கிக் கொண்டு வினோத வடிவில் இருந்தது. இதைத்தவிர பெண்கள் ரவிக்கை அணியக்கூடாது என்றொரு சட்டம் வேறு. அதையும் திருவிதாங்கூர் பகுதிக்கு பொறுப்பாக இருந்த ஆங்கிலேயப் பெண்மணி தான் மாற்றி கடைசியாக தொள தொள ரவிக்கையை அறிமுகம் செய்து ஒரு மாற்றத்தை உருவாக்கினார்.  

19 ஆம் நூற்றாண்டில் தான் நாடார் இன மக்களின் சமூக வாழ்க்கை சற்று மேலேறத் தொடங்கியது.  காரணம் ஆங்கிலேயர்கள் இந்த பகுதிகளுக்குள் உள்ளே வருவதற்குள் ஆண்டு கொண்டிருந்த பாளையக்காரர்கள், ஜமீன்தாரர்கள் என்று ஒவ்வொருவருக்கும் நடந்து கொண்டிருந்த பகையும் விட முடியாத போர்களும் பல விதத்திலும் தொந்தரவாக இருந்தது.  இதற்கு மேலும் பாரபட்சமான அணுகுமுறைகள் பலதும் உண்டு. 

எந்த சாதியாக இருந்தாலும் பொருளாதார ரீதியாக மேலே இருந்தவர்களின் கெடுபிடிதனத்தை மீறி சாதாரணமக்கள் மேலே வரவேண்டும் என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. சாதாரண மக்கள் தங்களின் வணிக மேம்பாட்டிற்காக ஒரு இடத்திலிருந்து அடுத்த இடத்திற்கு செல்லும் போது ஒவ்வொரு பகுதியிலும் இருந்த கொள்ளையர்களின் அட்டகாசம் போன்றவற்றை ஆங்கிலேயர்கள் உள்ளே வந்ததும் தான் கண்டதும் சுட உத்தரவு என்று உருவாக்கி ஒரு வழிக்கு கொண்டு வந்தனர்.  

கிறிஸ்துவ பாதிரிமார்கள் தூத்துக்குடியில் உள்ள முத்துக்குளித்தலைத் தொழிலாக கொண்டவர்களிடத்தில் தான் முதன் முதலாக கிறிஸ்துவத்தை பரப்ப ஆரம்பித்தனர்.  1680 ஆம் ஆண்டு இப்போது நாங்குநேரி தாலூகாவில் உள்ள வடக்கன்குளத்தில் தான் தொடங்கினர்.  முதல் முதலாக நாடார்  இனத்தில் ஒரு பெண்மணி தான் கிறிஸ்துவத்திற்கு மாறினார். இதைப் போல ராயப்பன் என்பவர் 1784 ஆம் ஆண்டு இரு குடும்பங்களை திருமுழுக்கு அளித்து திருச்செந்தூர் அருகே உள்ள கிராமமக்களை புரொட்டஸ்டான்ட் என்ற கிறிஸ்துவ மதப்பிரிவின் தொடக்கத்தை தொடங்கி வைத்தார். ஆனால் இந்த மதமாற்றம் அத்தனை எளிதாக நடக்கவில்லை. பணம் படைத்தவர்களின் அச்சுறுத்தல்கள் அந்த அளவிற்கு இருந்தது.  சாத்தான்குளத்தில் பிறந்த சுந்தரம் என்பவர் தான் தன்னுடைய பெயரை டேவிட் என்று மாற்றிக் கொண்டு நாடார் சமூகத்தில் முதல் மத போதகராக மாறியவர். இவரின் சாவும் மர்மத்தில் தான் முடிந்தது. 

1810 ஆம் ஆண்டு இராமநாதபுர மாவட்டத்தில் உருவான வெள்ளப்பெருக்கில் உருவான காலரா, மலேரியா நோய்க்குப் பிறகு உண்டான அழிவுகளைப் பார்த்த மதகுருமார்கள் பள்ளிக்கூடங்களை கட்ட கிறிஸ்துவம் இந்த பகுதியில் வேகமாக பரவத் தொடங்கியது. நிலங்களும், பனை மரங்களும் தராத வாழ்க்கையை இந்த கல்விக்கூடங்கள் கொடுக்க ஆரம்பித்தது. பலரும் மதம் மாறத்தொடங்கினர். 1877 ஆம் ஆண்டு உருவான பஞ்சத்திற்குப் பிறகு திருநெல்வேலி சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளவர்களின் மதமாற்றம் இரண்டு மடங்கு அதிகமாகி தங்களின் பராம்பரிய கலாச்சாரத்தை விட்டொழித்து முழுமையாக கிறிஸ்துவத்திற்கு அர்பணிக்கும் தலைமுறையாக மாறத் தொடங்கினர். இதில் மற்றொரு சிறப்பு அம்சமும் இருந்தது.  எவர் மதம் மாறுகின்றார்களோ அவர்களின் குலத் தாழ்ச்சி போன்றைவற்றை அறவே மறக்கடிக்கப்பட்டு புதிய மனிதராக சமூகத்தில் மாறத் தொடங்கினர். அவர்களின் எண்ணங்களில் ஆழமாக இந்த கிறிஸ்துவம் ஒன்றிப் போனதாக மாறத் தொடங்கியது..

104 comments:

  1. //இன்று நகரமயமாக்கல், புலம் பெயர்தல் என்ற இந்த இரண்டு காரணங்களால் சாதி மூலக்கூறுகளை எவரும் பொறுமையாக கண்டு கொள்ள வாய்ப்பும் இல்லை. அதற்கான வசதிகளும் மிகக் குறைவு. உனக்கு வேலை தெரியுமா? அனுபவம் இருக்கிறதா? என்று கேட்கும் இன்றைய பொருளாதார போட்டியுலகில் எவரும் நீ இந்த சாதியா? என்று கேட்பது குறைவு. இன்றைய சூழ்நிலையில் நம் அரசாங்கம் மட்டுமே இதை ஒரு ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அரசாங்கத்தை சார்ந்து வாழ வேண்டும் என்பவர்களுக்கு மட்டுமே இந்த பித்து தலைவரைக்கும் ஏறி இன்று வரைக்கும் பல வகையிலும் தடுமாற வைத்துக் கொண்டிருக்கிறது. அரசாங்கம் சாராத தனி நபர்களின் நிர்வாகத்தில் உள்ளவர்களின் பார்வையில் 70 சதவிகிதம் இன்று சாதி என்ற அமைப்பே தேவையில்லாமல் போய்விட்டது//

    இந்தக்கூற்றை கடுமையாக எதிர்க்கிறேன், நகரத்தில் சாதி பார்க்கவில்லையென்றால் நகரங்களில் இருப்பவர்கள் இந்நேரம் சாதிமாறிய திருமணங்களும் நடந்தேறி நகரத்தில் சாதியே இல்லாமல் ஆகியிருக்க வேண்டும், ஆனால் நகரம் அப்படியில்லை என்பதே உண்மை, சென்னை நகரத்தில் ஏரியா ஏரியாவாக சாதிஆக்கிரமிப்பு உண்டு, நீண்ட காலமாக (திருவல்லிக்கேணி, அய்யோத்திகுப்பம் போன்ற மீனவர் பகுதிகள்)இருப்பவர்கள் போக ஒரே சாதிக்காரர்கள் ஒன்றாக குடியேறும் இடங்கள் உண்டு... ஒருவர் ஒரு இடத்தின் உள்ளே போக அதைத்தொடர்ந்து சொந்தக்காரர்கள் உள்ளே போக அதன் பின் நம்ம சாதிக்காரங்க அங்கே அதிகம் என்று பிறரும் உள்ளே போக ஏ அங்க அந்த சாதிக்காரனுங்க மெஜாரிட்ட நம்ம அங்கே போகவேண்டாமென மற்ற சாதி நினைக்க அங்கே ஒரு சாதி கிளஸ்டர்(தொகுதி) உருவாகின்றது... அதன் தொடர்ச்சியாக சாதி சங்கம் அதற்கொரு கட்டிடம் என பரவலாகின்றது... பெரு நகரங்களிலேயே இம்மாதிரி என்றால் சிறுநகரங்கள் சொல்லவே வேண்டாம்...

    டூ-லெட் சைவம் மட்டும் என்பது போன்ற வெளிப்படையாக மட்டும் அல்லாமல் மறைமுகமாகவும் சாதி நகரத்தில் ஆண்டுகொண்டு தான் இருக்கின்றது...

    சாதி என்பது சாதிக்க முடியாத இடத்தில் மட்டுமே சாதி பார்க்கப்படவில்லை, ஒரு குறிப்பிட்ட வேலையை செய்து முடிக்க சாதி பார்த்தால் செய்ய முடியாது என்ற சூழலில் மட்டுமே சாதி பார்க்கப்படாமல் இருக்கிறது, சாதி பார்த்தாலும் ஒரு வேலையை செய்ய முடியுமென்றால் அங்கே சாதி மட்டுமே பார்க்கப்படும் என்கிற நிலைதான் இதுவரை....

    மிக எளிய உதாரணம் சரவணபவன் அண்ணாச்சி கொலைக்கேசில் விழுந்த போது பல்வேறு சாதிகளை சேர்ந்த ஓட்டல் முதலாளிகள் ஒன்றிணைந்து சரவணபவன் வியாபாரத்தை ஒழிக்க முயற்சித்தனர் இது பொருளாதார மற்றும் பிசினஸ் அடிப்படை ஆனால் நாடார் சமூகத்தை சேர்ந்த பிற தொழிலதிபர்கள் ஒன்று சேர்ந்து அதை முறியடித்தனர்... பிற பிசினஸ்மேனுக்கு பிசினஸ் ஆக தரும் ஒத்துழைப்பை தாண்டி பெரும் ஒத்துழைப்பை சரவணபவனுக்கு நல்கி அந்த சரவணபவன் பிசினசை காப்பாற்றினார்கள் இது எதனால்??

    நேரம் கிடைக்கும்போது விரிவாக பேசலாம்...

    ReplyDelete
  2. காதலர் தின சிறப்பு பதிவு போடுங்க..

    ReplyDelete
  3. எத்தனை மாற்றங்கள்!! ஆச்சரியம்தான் மிஞ்சுகிறது!

    ReplyDelete
  4. ம்ம்.. இராமநாதபுரம் மாவட்டத்தைப் பற்றி மற்றுமொரு விரிவான படைப்பு. தொடருங்கள்.

    ..

    /Vinoth said...
    காதலர் தின சிறப்பு பதிவு போடுங்க.//

    யாரு கிட்ட என்ன கேட்கறீங்க வினோத்..

    ஜோதிஜி.. அப்படி ஒரு பதிவு போட்டா நல்லாத் தான் இருக்கும்னு தோணுது.

    ReplyDelete
  5. வயிற்றெரிச்சலுக்கு டைஜின் அல்லது ஜெலுசில் சாப்பிடுவது நல்லது.

    ReplyDelete
  6. குழலியின் பின்னூட்டத்தை வழிமொழிகின்றேன்.

    //உனக்கு வேலை தெரியுமா? அனுபவம் இருக்கிறதா? என்று கேட்கும் இன்றைய பொருளாதார போட்டியுலகில் எவரும் நீ இந்த சாதியா? என்று கேட்பது குறைவு.//

    திருப்பூரில் வேண்டுமானால் நீங்கள் கூறுவது போல் இருக்கலாம். ஆனால், (இன்றும்) சில கார்ப்பரேட் நிறுவனங்கள் கூட தத்தம் சாதியினரையே வேலைக்கு அமர்த்துகின்றன.

    //1843 முதல் 1867 முதல் ஏறக்குறைய 15 லட்சம் பேர்கள் ஈழத்திற்கு புலம் பெயர்ந்தனர்.//

    அவர்கள் மலையகத் தமிழர்கள் என்று அழைக்கப்படுபவர்கள். ஈழத் தமிழர்கள் மண்ணின் பூர்வ குடிகளாக அங்கேயே இருந்து வருபவர்கள். ஈழ வரலாறு அறியாத சிலர், உங்கள் வாக்கியங்களைப் படித்தால், ஈழத்தில் இருக்கும் தமிழர்கள் அனைவருமே தமிழகத்திலிருந்து சென்றவர்கள் என்று எண்ணிவிடக்கூடும்.

    // அதையும் திருவிதாங்கூர் பகுதிக்கு பொறுப்பாக இருந்த ஆங்கிலேயப் பெண்மணி தான் மாற்றி கடைசியாக தொள தொள ரவிக்கையை அறிமுகம் செய்து ஒரு மாற்றத்தை உருவாக்கினார். //

    போராட்டத்தின் மூலமே அந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. விளைவுக்கான முக்கியமான காரணியை விட்டுவிட்டு, ஆங்கிலேயப் பெண்மணியின் செயலை மட்டுமே குறிப்பிட்டால், ஏதோ அவரே பார்த்து அளித்தது போன்ற தோற்றம் வருகின்றது.


    //எவர் மதம் மாறுகின்றார்களோ அவர்களின் குலத் தாழ்ச்சி போன்றைவற்றை அறவே மறக்கடிக்கப்பட்டு புதிய மனிதராக சமூகத்தில் மாறத் தொடங்கினர். //

    ஹிஹி

    ----
    மன்னிச்சுக்குங்க ஜோதிஜி. தவறான தகவல்களை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.

    ReplyDelete
  7. குழலி கும்மி அடேங்கப்பா கு வில் ஆரம்பித்து இரண்டு பேரும் கும்முறீங்களா? இருங்க இருங்க. ராவுக்கு வர்றேன். அவ்வளவு சீக்கிரம் விடமுடியுங்களா?

    ReplyDelete
  8. யோசிக்க வேண்டிய இடுகை என்பதால் மீண்டும் வந்து படிக்கிறேன்.

    ReplyDelete
  9. இந்த வாரம் முழுவதும் வலைச்சரத்தில் டேரா போட்டிருக்கேன். வந்து எட்டி பார்த்துட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க பாஸ்
    ஹையா....நானும் வலைச்சரத்தில் வந்துட்டேன்ல......

    ReplyDelete
  10. பல தெரியாத விடயங்கள் அறிந்து கொண்டேன்.
    *இதில் மற்றொரு சிறப்பு அம்சமும் இருந்தது.எவர் மதம் மாறுகின்றார்களோ அவர்களின் குலத் தாழ்ச்சி போன்றைவற்றை அறவே மறக்கடிக்கப்பட்டு புதிய மனிதராக சமூகத்தில் மாறத் தொடங்கினர்* என்று நீங்கள் சொன்னது ஆச்சரியமாக இருந்தது. கும்மி மூலம் விளக்கம் கிடைத்தது.

    ReplyDelete
  11. அண்ணே கைகுடுங்க ... பிரமாதம் ...

    ReplyDelete
  12. //கிறிஸ்துவ பாதிரிமார்கள் தூத்துக்குடியில் உள்ள முத்துக்குளித்தலைத் தொழிலாக கொண்டவர்களிடத்தில் தான் முதன் முதலாக கிறிஸ்துவத்தை பரப்ப ஆரம்பித்தனர். 1680 ஆம் ஆண்டு இப்போது நாங்குநேரி தாலூகாவில் உள்ள வடக்கன்குளத்தில் தான் தொடங்கினர். முதல் முதலாக நாடார் இனத்தில் ஒரு பெண்மணி தான் கிறிஸ்துவத்திற்கு மாறினார்.//

    என்ன சொல்ல வர்றீங்கண்ணே புரியல .முத்துக்குழித்தலை தொழிலாக கொண்டிருந்தவர்கள் பரவர்கள் ..அவர்களை பிரான்சிஸ் சவேரியார் 1545 -க்கு முன்னரே கத்தோலிக்க கிறித்துவர்களாக மாற்றியிருந்தார் .அவர்களை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் இருந்த இன்னொரு மீனவர் சமுதாயமும் கத்தோலிக்கர்களாக மாறினர் . நெல்லை , குமரி மீனவர்கள் முழுக்க கத்தோலிக்கர்களாக மட்டுமே மாறினர் .அவர்களில் புரட்டஸ்டாண்டு கிடையாது ..அதே நேரத்தில் பிற்காலத்தில் நாடார்கள் சிலர் கத்தோலிக்கர்களாகவும் ,சிலர் புரட்டஸ்டேண்டுகளாகவும் மாறினர்

    ReplyDelete
  13. அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..
    வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  14. ஜோ/Joe said...

    //என்ன சொல்ல வர்றீங்கண்ணே புரியல .முத்துக்குழித்தலை தொழிலாக கொண்டிருந்தவர்கள் பரவர்கள் ..அவர்களை பிரான்சிஸ் சவேரியார் 1545 -க்கு முன்னரே கத்தோலிக்க கிறித்துவர்களாக மாற்றியிருந்தார் .அவர்களை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் இருந்த இன்னொரு மீனவர் சமுதாயமும் கத்தோலிக்கர்களாக மாறினர் . நெல்லை , குமரி மீனவர்கள் முழுக்க கத்தோலிக்கர்களாக மட்டுமே மாறினர் .அவர்களில் புரட்டஸ்டாண்டு கிடையாது ..அதே நேரத்தில் பிற்காலத்தில் நாடார்கள் சிலர் கத்தோலிக்கர்களாகவும் ,சிலர் புரட்டஸ்டேண்டுகளாகவும் மாறினர்//


    உண்மை . ஆனால் சிறு மாற்றம். பரவர்கள் பிரான்சிஸ் சவேரியார் வருகைக்கு சில ஆண்டுகள் முன்பே மதம் மாறி விட்டார்கள் . பூவார் (கேரளா) -இல் இருந்து மணக்குடி வரை இருந்த கடலோர மக்களை தான் சவேரியார் மாற்றினார்

    ReplyDelete
  15. மக்களிடம் ஓட்டு இருக்கும் வரை அரசாங்கத்திடம் சாதி இருக்கும். அப்பொழுது தான் சாதீய அரசியல்வாதிகள் உருவாகுவார்கள்.

    தான் ஒரு மனிதனாக மாற மதம் மாறியவர்கள் எல்லாம் இன்னமும் அவர்கள் எந்ததகுதியில் மதம் மாறினார்களோ அதே தகுதிதான்.

    இன்றைக்கும் தாழ்த்தபட்ட சாதியிலிருந்து கிறித்துவ மதத்துக்கு மாறியவர்கள் ஒரு நாள் தோ் இழுக்கிறார்கள்.ஆரம்பத்திலிருந்து இருந்தவர்கள் என நினைப்பவர்கள் ஒரு நாள் தேர் இழுக்கிறார்கள்.

    ReplyDelete
  16. //டூ-லெட் சைவம் மட்டும் என்பது போன்ற வெளிப்படையாக மட்டும் அல்லாமல் மறைமுகமாகவும் சாதி நகரத்தில் ஆண்டுகொண்டு தான் இருக்கின்றது...//

    உண்மைதான்.

    ReplyDelete
  17. http://www.jeyamohan.in/?p=12220

    ஜெயமோகனின் வணங்கான் சிறுகதை வாசித்தீர்களா ? நாடார் இனம் மேலெழுந்ததை அபாரமாக சொல்லியிருப்பார்

    ReplyDelete
  18. //பரவர்கள் பிரான்சிஸ் சவேரியார் வருகைக்கு சில ஆண்டுகள் முன்பே மதம் மாறி விட்டார்கள் . பூவார் (கேரளா) -இல் இருந்து மணக்குடி வரை இருந்த கடலோர மக்களை தான் சவேரியார் மாற்றினார்//
    பிரான்சிஸ் சேவியருக்கு முன் எல்லா பரவர்களும் மாறிவிட்டிருந்தனரா ? மணப்பாடு போன்ற ஊர்களில் ஏற்கனவே மாறியிருந்தனர் .பின்னர் மணப்பாடு குகையில் வந்து தங்கியிருந்து பணியாற்றிய பின்னரே முழுவதுமாக பரவர்கள் மாறினார்கள் என கேள்விப்பட்டேன் ..பூவாறு முதல் மணக்குடி வரை மாறியது குறித்து நீங்கள் கூறியது உண்மை .ஆனாலும் பூவாறு- மணக்குடி-க்கு இடையிலும் 6 மீனவ கிராமங்களில் பரவர்கள் இருக்கிறார்கள். மற்ற ஊர்களில் முக்குவர்கள் இருக்கிறார்கள்.

    ReplyDelete
  19. //மணப்பாடு குகையில் வந்து தங்கியிருந்து//
    மணப்பாடு குகையில் சேவியர் வந்து தங்கியிருந்து

    ReplyDelete
  20. //இன்று நகரமயமாக்கல், புலம் பெயர்தல் என்ற இந்த இரண்டு காரணங்களால் சாதி மூலக்கூறுகளை எவரும் பொறுமையாக கண்டு கொள்ள வாய்ப்பும் இல்லை. அதற்கான வசதிகளும் மிகக் குறைவு. உனக்கு வேலை தெரியுமா? அனுபவம் இருக்கிறதா? என்று கேட்கும் இன்றைய பொருளாதார போட்டியுலகில் எவரும் நீ இந்த சாதியா? என்று கேட்பது குறைவு.//

    மிகவும் தவறான பேச்சு.
    இந்தக்காலத்தில் எல்லாம் யாரு சாதி பாக்குறா என்று சொல்லும் மேம்போக்குவாதிகளின் சொல் இது. உண்மையில் உங்களுக்குத் தெரியவில்லையா அல்லது நடிக்கிறீர்களா?

    பிரசாத லட்டு கூட ‘அவா’ தான் பிடிக்கணும் – உயர்நீதிமன்ற தீர்ப்பு !
    http://www.vinavu.com/2011/02/10/hrpc-thiruvannamalai/

    ‘இங்கு பிராமனர்கள் அல்லாதவர்களுக்கு அனுமதியில்லை’
    http://balabharathi.blogspot.com/2007/03/no-comments.html

    :‍-(((((

    பொருளாதாரப் போட்டியில் நாய் வேறு சட்டை போட்டுகொண்டு உலவுகிறது. நாய் அழிந்துவிடவில்லை.

    ***********

    // இன்றைய சூழ்நிலையில் நம் அரசாங்கம் மட்டுமே இதை ஒரு ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

    மிகவும் தவறான கருத்து. அரசு இதை ஆயுதமாக எதற்குப் பயன்படுத்துகிறது? காயப்பட்டவனுக்கு மருந்துபோட மட்டுமே.

    கல்யாணத்த்திற்கு இந்தச் சாதிப்பெண்/ஆண்தான் வேண்டும் என்று கேட்கும் சாம்பிராணித் தலையன்கள் தரும் கிண்டு (The Hindu) அட்வர்ரைசிங் என்னா அரசின் வேண்டுதலா?

    பூணுலையும், அய்யர் , தேவை, பிள்ளை என்று சாதிப்பெயரை வெட்கம் இல்லாமல் போட்டுக்கொள் என்று அரசாங்கம் சட்டமா போட்டுள்ளது?

    **************

    // அரசாங்கத்தை சார்ந்து வாழ வேண்டும் என்பவர்களுக்கு மட்டுமே இந்த பித்து தலைவரைக்கும் ஏறி இன்று வரைக்கும் பல வகையிலும் தடுமாற வைத்துக் கொண்டிருக்கிறது. //

    ஆகா அப்படியா? அரசாங்கம் சாராத திருமணங்களில் ஏன் இன்னும் அய்யங்காரும் அம்பட்டையனும் சேரவில்லை? சட்டமா தடுக்குது?

    ***************

    // அரசாங்கம் சாராத தனி நபர்களின் நிர்வாகத்தில் உள்ளவர்களின் பார்வையில் 70 சதவிகிதம் இன்று சாதி என்ற அமைப்பே தேவையில்லாமல் போய்விட்டது. //

    நீங்கள் வேற்றுக்கிரகவாசியாகிவிட்டீர்கள் போல. :-(((

    உத்தப்புரச் சுவரும், சிதம்பரமும், தேவிப்பிரச்சனைகளும், வாயில் பீ ஊத்தும் விசயங்களும் செவ்வாய்கிரகத்தில் நடக்கிறது போலும்.

    :-(((

    ReplyDelete
  21. ஜோ, முக்குவர்களுக்கும் பரவர்களுக்கும் என்ன வேறுபாடு ?

    இருவருமே மீன்பிடி தொழிலை கைக்கொள்ளுவபர்தானே ?

    ReplyDelete
  22. "கிறிஸ்துவ பாதிரிமார்கள் தூத்துக்குடியில் உள்ள முத்துக்குளித்தலைத் தொழிலாக கொண்டவர்களிடத்தில் தான் முதன் முதலாக கிறிஸ்துவத்தை பரப்ப ஆரம்பித்தனர். 1680 ஆம் ஆண்டு இப்போது நாங்குநேரி தாலூகாவில் உள்ள வடக்கன்குளத்தில் தான் தொடங்கினர். முதல் முதலாக நாடார் இனத்தில் ஒரு பெண்மணி தான் கிறிஸ்துவத்திற்கு மாறினார். இதைப் போல ராயப்பன் என்பவர் 1784 ஆம் ஆண்டு இரு குடும்பங்களை திருமுழுக்கு அளித்து திருச்செந்தூர் அருகே உள்ள கிராமமக்களை புரொட்டஸ்டான்ட் என்ற கிறிஸ்துவ மதப்பிரிவின் தொடக்கத்தை தொடங்கி வைத்தார். ஆனால் இந்த மதமாற்றம் அத்தனை எளிதாக நடக்கவில்லை. பணம் படைத்தவர்களின் அச்சுறுத்தல்கள் அந்த அளவிற்கு இருந்தது. சாத்தான்குளத்தில் பிறந்த சுந்தரம் என்பவர் தான் தன்னுடைய பெயரை டேவிட் என்று மாற்றிக் கொண்டு நாடார் சமூகத்தில் முதல் மத போதகராக மாறியவர். இவரின் சாவும் மர்மத்தில் தான் முடிந்தது. "

    தூத்துக்குடியில் முத்துக்குளித்தவர் (இப்போது இல்லை) மட்டுமல்ல, அனைத்து மீனவர்களும் கத்தோலிக்கர்கள். முதலில் புனித சவேரியார் பின்னர் புனித வீர்மாமுனிவர் போன்றோர் இவர்களை கத்தோலிக்கத்தை ஏற்றுக்கொள்ளும்படி செய்தனர். ஜோ சொன்னது போல, சவேரியார் மணப்பாட்டில் தங்கியிருந்து பின்னர் நாகர்கோயில் கொட்டாரத்தில் தேவாலயம் ஒன்றைக்கட்டினார். அதற்கு திருவிதாங்கூர் ராஜா வர்மாவின் ஆதரவு நல்கினார். இங்கிருந்து கொண்டே கடலோரச் சிற்றூர்களில் குறிப்பாக மீனவமக்களிடையே கத்தோலிக்கத்தைப்பரப்பினார் அவர்.

    நீங்கள் சொல்லுபவர்கள் தூத்துக்குடி நாடார்களே. இவர்களுடன் குமரி, நெல்லை மாவட்ட நாடார்களும், இராபர்ட்டு கால்டுவெல் ஐயர், மற்றும் மர்காசியஸ், ஜி.யு.போப் ஐயர் போன்றோரால், புராட்டஸ்டெண்டு என்னும் கிருத்துவப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்ட்டனர். இன்று இவர்கள் csi நாடார்கள் என அழைக்கப்படுகின்றனர்.

    உங்கள் பதிவில் கத்தோலிக்கத்தையும் புராட்டஸ்டெண்டும் குழப்பபபடுகின்றன.

    இராபர்ட்டு கால்டுவெல் தங்கியிருந்து ஊழியம் செய்த சிற்றூர் இடையங்குடியாகும். அங்கிருந்து 10 யே மைல்கல்லின் உவரி சிறிது அப்பால் மணப்பாடும் வரும்.

    எனினும் கால்டுவெல் கடலோர மீனவ மக்களிடம் வரவேயில்லை. கரணியம் அவர்கள் ஏற்கனவே கிறுத்துவை ஏற்றுக்கொண்டதால் கத்தோலிக்கமாக இருப்பினும்.

    மீனவமக்கள் இன்று இந்துக்களாயிருப்பினும் அவர்களும் தலித்துகள் படும் வன்கொடுமைக்குத்தான் ஆளாகியிருப்பர்.

    ReplyDelete
  23. மீனவமக்கள் இன்று இந்துக்களாயிருப்பினும் அவர்களும் தலித்துகள் படும் வன்கொடுமைக்குத்தான் ஆளாகியிருப்பர்.


    இந்துக்காளாயிருந்திருந்தால்...என திருத்தி வாசிக்கவும்.

    ReplyDelete
  24. // நாகர்கோயில் கொட்டாரத்தில் தேவாலயம் ஒன்றைக்கட்டினார். //
    சவேரியார் கட்டிய கோவில் அமைந்துள்ள இடம் கொட்டாரம் அல்ல ..கோட்டாறு .

    கொட்டாரம் என்னும் கன்னியாகுமரி அருகே உள்ளது

    ReplyDelete
  25. ஜோதிஜி, நண்பர்கள் கல்வெட்டு, கும்மி, குழலி போன்றவர்கள் சுட்டிகாட்டிய பகுதிகளில் நானும் உடன்படுகிறேன்.

    நீங்கள் தற்காலிகமாக வாழ்ந்துகொண்டிருக்கும் தொழில் நகரம் உங்களின் பார்வையில் ஏனைய பகுதிகளில் அடிநாத ஊற்றாக கனந்து கொண்டிருக்கும் விசயங்களின் மீது ஒரு மெல்லிய சவ்வை படர வைத்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

    இப்பொழுது அரசாங்கம் தூக்கி பிடித்திருக்கும் இந்த இட ஒதுக்கீடு சார்பாக நடத்திக் கொண்டிருக்கும் விசயம் கூட ஒரு சமமான விளையாட்டு மைதானத்தை உருவாக்கிக் கொடுப்பதற்கான ஒரு சிறு முயற்சியே! இன்னும் பல நூற்றாண்டுகள் இது தொடர்ந்தாலும், தனி மனித மனங்களில் அகத் தேடலாக கடுமையான மன பயிற்சியின் பேரில் மட்டுமே இதனை வென்றெடுத்து கொள்ள முடியும். அதுவரையிலும், இந்திய நண்டு கதைதான் at play :(( ...

    ReplyDelete
  26. //ஜோ, முக்குவர்களுக்கும் பரவர்களுக்கும் என்ன வேறுபாடு ?
    இருவருமே மீன்பிடி தொழிலை கைக்கொள்ளுவபர்தானே ?//
    விவசாயம் செய்பவர்களெல்லாம் ஒரே சாதியா என்ன? அது போல தான் இதுவும்.

    நான் எந்த வேறுபாட்டையும் பார்க்கவில்லை .ஆனால் என்னவோ இவர்கள் வேறு வேறு சாதியாகவே இருக்கிறார்கள் ..ஜோ அமலன் ராயன் *ஃபெர்னாண்டோ* -வுக்கு தெரியாதா என்ன ? குசும்பு :)

    ReplyDelete
  27. //உண்மையில் உங்களுக்குத் தெரியவில்லையா அல்லது நடிக்கிறீர்களா?//
    புரிதல் இல்லை என்பதே காரணம் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  28. இன்னொரு விசயம் உங்க நேர்மறையான எண்ணம் (wishful thinking) இதில கொஞ்சம் உண்மைகளை தூர நிறுத்தி வைச்சு பார்த்திருக்கு. உங்க மனசு புரியுது! ஆனா, நிதர்சனம் அப்படி இல்லையே, ஜி!

    ReplyDelete
  29. Yes it is Kottaaru.

    The Churth that St Francis Xavier built, with the patrongage of Travancore Maharaja, is today called Xavier's Church.

    Even before the arrival of St Francis Xavier, certain sections of fishermen community in the coastal village of Tutocirin, Tirunveli and KK Dists changed their religion from Hinduism to Catholicism in exchange for the protection given by Portungues rulers of Cochin, from the attack of Muslims.

    The portuugese stood as god fathers in the marriages of the fishermen, giving them the portugues surnames like Fernando.

    So, the history of the fishermen and their conversion to catholicism predated the advent of St Francis Xavier. However, it is to that Saint goes the credit of making these fishermen wholeheartedly accept Jesus. Under St Francis Xavier, the conversion was from heart, not at all by any inducements. He did not give anyting to the fishermen, in turn.

    JARF

    ReplyDelete
  30. குழலி நம் பழக்கம் பழையது. ஆனால் என் தளத்தில் போடும் முதல் பின்னூட்டம் என்று நினைக்கின்றேன். சரிதானே?

    உங்க பஞ்சாயத்துக்கு வரும் முன் முதலில் சிலருக்கு நன்றி சொல்லி விடுகின்றேன்.

    Jo Amalan Rayen Fernando ..
    ஜோ/Joe...

    முஸ்லீம் நதி மூலம் என்ற பதிவில் கும்மியார் புரிய வைத்த பல விசயங்களைப் போலவே நீங்களும் எனக்கு புரியவைத்து இருக்கீங்க.

    நண்பர் பழமைபேசி ஏன் ராசா மற்நதுபோய்க்கொண்டு இருக்கின்ற விசயத்தை ஞாபகப்படுத்திக்கிட்டு இருக்கீங்க என்றார். ஆனால் இன்று கல்வெட்டு கும்மி தெகா போன்றவர்கள் குத்திக் கிழங்கெடுத்து இருப்பதை பார்க்கும் போது?

    இருங்க ஒவ்வொரு பஞ்சாயத்தையும் தாண்டி வருவோம்.

    ReplyDelete
  31. அதன் தொடர்ச்சியாக சாதி சங்கம் அதற்கொரு கட்டிடம் என பரவலாகின்றது... பெரு நகரங்களிலேயே இம்மாதிரி என்றால் சிறுநகரங்கள் சொல்லவே வேண்டாம்...

    கும்மி சொன்னது சரிதான். இங்குள்ள பல விசயங்களை வைத்து நான் பார்க்கும் உலகத்தை வைத்து தான் என் புரிதல்களை தெரியப்படுத்த முடியும். திருப்பூருக்குள்ளும் அந்தந்த மாவட்ட மக்கள் வாழும் பகுதிகள் உண்டு. ஆனால் எனக்குத் தெரிந்தவரையிலும் சேரி என்றொரு அமைப்பு இல்லை. தொழிலாளர் வர்க்கத்தில் பத்து வருடங்களுக்கு முன் இருந்த பாகுபாடு இல்லை. சில இடங்களில் பணியாளர்களில் இந்த மதம் குறித்த தாக்கம் உண்டு என்பதும் உண்மை தான்.

    குழலி நீங்க சொன்ன மாதிரி உருவாவது உண்மை. ஆனால் என் பார்வையில் எந்தமக்களும் முழுமனதோடு அதில் இணைந்து இருப்பதாக தெரியவில்லை. பணம், மிரட்டல் இன்னும் பல காரணிகள் உண்டு என்பதை உணர்வீர்களா? நான் படிக்கும் புத்தகங்களில் உள்ளதைப் போலத்தான் இன்னும் இந்த சாதி என்ற வார்த்தை குறிப்பிட்ட சிலரால் மட்டுமே வெறியூட்டப்பட்டு அது கடத்தப்படுகின்றது. கவுண்டர் சாதிப்பாகுபாடு என்று சொல்பவர்கள் பணம் இல்லாத மாப்பிளையை எவரும் மதிப்பதாக தெரியவில்லை. எல்லா சாதிகளிலும் இன்று பணம் தான் பிரதானமாக இருக்கிறது. நீங்க குறிப்பிட்ட அண்ணாச்சி விசயம் கூட பணம் பாதாளம் வரைக்கும் பாய்ந்த காரணமே. அவருக்கு பணம் இல்லாவிட்டால்? எல்லோரும் உதவிஇருப்பார்கள் என்று நம்புகிறீர்களா?

    என்னுடைய பார்வையில் சம காலத்தில் எல்லா இன மக்களிடத்தில் சாதி என்ற பாகுபாடு இரண்டாம்பட்சமே. பணம் இருப்பவன் இல்லாதவன் என்று இரண்டே கோட்பாடு தான்.

    ReplyDelete
  32. செந்தில் நீங்களும் வினோத் சொன்னதை வைத்து ?

    அட நீங்க வேற. யாராவது நான் காதலிக்கின்றேன் என்று சொன்னால் என் பார்வையில் வேறு விதமானவன் என்று அர்த்தம்.

    ஒன்று குறிப்பிட்ட வாய்ப்பை எதிர்பார்த்து காத்து இருப்பவன் இருப்பவள் அல்லது எப்படி கழட்டி விட முடியும் யோசித்துக் கொண்டு இருப்பவன் இருப்பவள்.

    நிறைய எழுத முடியும்? அப்புறம் பேசுவோம்.
    தொடக்கத்தில் இங்கே நிறம் பார்த்து கேரளா பெண்களை நிறைய பேர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்? ஆனால் முடிவு?

    ReplyDelete
  33. எஸ் கே ஒரு சின்ன விசயத்தைப் பற்றி எழுத எழுத எத்தனை பேர்களிடத்தில் இருந்து எத்தனை விதமான தாக்கம் வந்து கொண்டே இருக்கிறது? இது தான் உண்மையான ஆச்சரியம்.


    வயிற்றெரிச்சலுக்கு டைஜின் அல்லது ஜெலுசில் சாப்பிடுவது நல்லது.

    ராபின் படிக்கும் போதே சிரித்துவிட்டேன்.

    ReplyDelete
  34. தான் ஒரு மனிதனாக மாற மதம் மாறியவர்கள் எல்லாம் இன்னமும் அவர்கள் எந்ததகுதியில் மதம் மாறினார்களோ அதே தகுதிதான்.

    செந்தில் நீங்க கையை குடுக்க வேண்டியது நம் தவறு நண்பருக்குத் தான். இது தான் என் கருத்தும்.
    இங்கு நிறைய கிறிஸ்துவ நண்பர்கள் தங்கள் கருத்தை தெரிவித்து உள்ளார்கள். இந்து மதத்தில் நிறைய ஓட்டைகள் உண்டு என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். உண்மை என்ற போதிலும்?

    ஆனால் இன்று கிறிஸ்துவ பிரச்சார சுவரொட்டிகளில் நான் பார்த்துக்கொண்டிருப்பது உடையார் என்ற பெயரை தங்கள் கிறிஸ்துவ பெயருடன் இணைத்துக் கொண்டு இன்னும் பல சாதிப்பேர்களையும் இணைத்துக் கொண்டு. அடேங்கப்பா ....... தலை சுத்துகின்றது....... பாதிக்கப்படுவது அத்தனையும்இது போன்ற நபர்களை நம்பி பின்னால் சென்று கொண்டு இருப்பவர்கள் தான். ஆனால் இந்து முஸ்லீம் கிறிஸ்துவம் என்ற எந்த மதத்தை விரும்புபவனாக இருந்தாலும் இந்த மதம் என்ற போர்வையில் எவர் ஒருவர் உரக்க அழைக்கிறாரோ அந்த நபரின் தனிப்பட்ட வாழ்க்கையை நன்றாக கூர்ந்து கவனித்துப் பாருங்க.

    அவருக்கே மதம் குறித்த தெளிவு இருக்காது என்பதை நன்றாக உணர்ந்து கொள்ள முடியும்? இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி சாதாரண மக்களை ரணகளமாக்கி தவறு சொன்னது போல் மதம்மாறியவனும் இப்போது தலித் கிறிஸ்துவர் என்ற நிலைக்கு வந்து நின்று இன்னமும் அவஸ்த்தை பட்டுக் கொண்டே தான் இருக்கிறார்கள்.

    ReplyDelete
  35. நல்லதொரு பதிவு !ஆனால் வரலாற்றுப் பதிவு எழுதும் போது அந்தப் பதிவில் உள்ள பிழைகளை எழுதும்போது அவற்றை பல முறைத் திருத்த வேண்டி வரும் !!! கிருத்தவம் நாடார்களின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது. ஆனால் கிருத்தவம் முதலில் பரதவர்களைத் தான் தழுவிக் கொண்டது. தென் தமிழகத்தில் வாழ்ந்த மீனவர் குலங்களைத் தான் சவேரியார் உட்பட பிற கத்தோலிக்க பெரியவர்கள் பரதவர்களைத் தான் மதம் மாற்றினார்கள். அதே போல மலேயே இலங்கைப் போன்ற நாடுகளுக்கு நாடார்கள் புலம் பெயர முன்னரே மீனவர்கள் புலம் பெயர்ந்து உள்ளனர். 13 நூற்றாண்டில் மலேசியாவில் ஏற்படுத்தப் பட்ட இஸ்லாமிய பேரரசுக்கு வித்திட்டவர்கள் தமிழ் இஸ்லாமிய மீனவர் குலத்தவர்களே ! அதே போல 16ம் நூற்றாண்டிலே இலங்கையின் மன்னார் முதல் கள்ளுத்துறை வரை ஆயிரக்கணக்கான கிருத்துவ மீனவர்கள் போத்துகேயர் துணையொடு குடியேறினார்கள். இவர்களில் பலர் இன்று சிங்களவர்களாக மாற்றப்பட்டு விட்டனர். ஆயினும் சிலர் வீடுகளில் மட்டும் தமிழ் பேசியும், சிலரின் பெயர்களில் மட்டும் தமிழும் இருந்து வருவதைப் பார்க்கலாம். உதாரணமாக, சிங்களவர் மத்தியில் காணப்படும் அழகம்பெருமா, சிங்கப்புலி போன்ற பேர்கள் இதனை உணர்த்தும். நாடார் மக்கள் பாண்டி பேரரசு உருவாக முன்னர் வேடுவர்/வில்லவரகா இருந்ததாக சில தகவல்கள் கூறுகின்றன. அதே போல நாடார் இன மக்கள் ஆஸ்திரேலியா பழங்குடிகளொடு ஒத்து இருப்பதை விரிவாக ஆராய்ச்சி செய்யப்பட வேண்டியவை

    ReplyDelete
  36. பொருளாதாரப் போட்டியில் நாய் வேறு சட்டை போட்டுகொண்டு உலவுகிறது. நாய் அழிந்துவிடவில்லை.

    கல்வெட்டு சற்று உரிமையுடன் இங்கே சில விசயங்களை அப்பட்டமாக பேசுவோம்.

    இன்னும் எத்தனை காலத்திற்கு பார்ப்பனர்கள் சரியில்லை. அவர்களின் ஆதிக்கம் என்று புலம்பிக் கொண்டே இருக்கப் போகின்றோம். ஆறு கோடி தமிழர்களில் எத்தனை பேர்கள் ஹிண்டு வாங்கி படிக்கிறாங்க.

    கோவிலுக்கு யார் வெத்தலை பாக்கு வச்சு கூப்புடுறாங்க. ஏன் வீட்ல கும்பிட்டா சாமி குத்தமா? திருப்பதி போய் கும்ப்பிட்டாத்தான் அருள் கிடைக்குமா? ஒவ்வொருவரும் போய் விழ விழ அவர்களுக்குத் தெரிந்ததை அவர்கள் செய்து கொண்டே தான் இருப்பார்கள். நீங்கள் சொல்லும் தன்மான உணர்ச்சி ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தேவையில்லையா? திருமாவளவன் தங்கிய அறை என்று எவரும் பயன்படுத்தக்கூடாது என்கிறார்கள். போய் உள்ளே சோதித்தால் கத்தி கப்படா சமாச்சாரங்கள். படிக்கிற பயபுள்ளைங்களுக்கு இதெல்லாம் எதுக்கு. எல்லாரும்கோட்டாவுல தான் போய் படிக்கிறாங்க. எத்தனை பேர்கள் ஜெயித்து வர்றாங்க? அரசாங்கம் கடந்த காலங்களில் கொடுத்த இத்தனை சலுகைகளையும் முறைப்படி பயன்படுத்தி இருந்தா மாறுதல்கள் வந்து இருக்காதா? சரி மேலே வந்தவர்கள் எத்தனை பேர்கள் தன்னைப் போலவே இவர்களும் கஷ்டப் படுகிறார்கள் என்று கை தூக்கி விட்டு இருக்கிறார்கள். இளையராஜா கூட தன்னை தெய்வ உருவமாகத்தான் காட்டிக் கொள்ள விரும்புகிறாரே தவிர அவரால்முடிந்த உதவிகளை தன் இன மக்களுக்குசெய்ய மனம் வருதா? அய்யருங்க ஒவ்வொருவரும் உதவிக் கொள்கிறார்கள். அல்லது ஹிண்டு பத்திரிக்கையில் அவங்கள மட்டும் சேத்துக்கிறாங்க போன்ற புண்ணாக்கு காரணங்களை ஒதுக்கி விட்டு எத்தனை வளர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து மேலே வந்த மக்கள் தங்கள் இன மக்களின் நல மேம்பாட்டுக்காக தங்கள் பங்களிப்பபை செய்து இருக்காங்க. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி தேர்தலில் நின்றார்? என்ன ஆச்சு? அவரும் முதலில் ஒரு அரசியல் கட்சியில் தான் நுழைந்தார்? அவரால் மேலே வர முடிந்ததா? சரி இப்ப மாயாவதி என்ன சாதித்து விட்டார்? உலகிலேயே மிக கேவலமாக ஆட்சி நடத்தும் இந்த பெண்மணியைத்தவிர உங்களால் உதாரணம் காட்ட முடியுமா? இதற்கும்அய்யர்கள் தான் காரணமா?

    முதலில் நாம் சரியில்லை என்பதை மனதில் இருத்திக் கொள்ளுங்க. மூன்று விரல்கள் யாரைக் காட்டுகிறது? அப்புறம் தான் ஒரு விரல் யாரைக் காட்டுகின்றது?

    ReplyDelete
  37. நண்பா அந்த ஆங்கிலோயே பெண்மணி சட்டத்தை அப்படி மாற்றியதற்கு
    விதையாக இருந்த சம்பவம் திவான்கூர் சமஸ்தானதிர்க்குட்பட்ட
    மலையாள நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் தலித் இன பெண்கள்
    உயர்சாதிக் கட்டுபாட்டை மீறி ஒரு பாதிரியாரின் உதவியோடு
    மேலாடை உடுத்த முயன்றனர்....
    அந்த தலித் இன பெண்கள் உயர்சாதி ஆண்களால் வன்புனர்சிகுட்படுத்த பட்டு
    மாண்டு போனார்கள்....
    அதில் கிளம்பிய சிறு பொறி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து
    நிறைய உயிர் பலிகளுக்கு நடுவே கடைசியாக சட்டமாக ஆக்க பட்டது....
    அதுவும் கூட கிறிஸ்தவத்திற்கு மாறிய தாழ்ந்த இனத்து பெண்களுக்கு மட்டுமே மேலாடை என்பதாக
    இருந்தது என அறிகிறேன்....!

    ReplyDelete
  38. இன்னொரு விசயம் உங்க நேர்மறையான எண்ணம் (wishful thinking) இதில கொஞ்சம் உண்மைகளை தூர நிறுத்தி வைச்சு பார்த்திருக்கு. உங்க மனசு புரியுது! ஆனா, நிதர்சனம் அப்படி இல்லையே, ஜி!


    தெகா நீங்க சொன்னது உண்மை தான். நான் நேர்மறையாகத்தான் பார்க்கின்றேன். இங்குள்ள மகா கேவலமான முதலாளிகளைப் பார்க்கும் போது படு மட்டமான தொழிலாளிகளையும் பார்த்து பழகிக் கொண்டு தான் இருக்கின்றேன். என்னால் பொத்தாம் பொதுவாக இது முற்றிலும் தவறு என்றோ இது சரி என்றோ கூறமுடியாது.

    நீங்க சொன்னது போல அகில பிரபஞ்சத்திலும்தேடினாலும் கிடைக்காத கொடூரமான விலங்கினம் இந்த மனித இனம். ஒவ்வொருவரும் ஒரு காரணம். ஒருவருக்கு குலப்பெருமை சிலரும் பெண் பலருக்கு வறட்டு கௌரவம்.

    ஆனால் இது அத்தனையையும் தூக்கி சாப்பிட்டு விடுகின்றது பணம் என்ற பாஸ்பரஸ் குண்டு.
    தன் இனத்திற்ககாக உழைக்கின்றேன் என்று சொன்னவர்கள் எவர் கடைசி வரையிலும் கட்சி மாறாத நபர்களை சுட்டிக் காட்டுங்க பார்க்கலாம்?

    இதே ராமதாஸ் என் உறவினர்கள் முதல் கொண்டு யாராவது தேர்தலில் நின்றால் முச்சந்தியில் நிறுத்தி செருப்பால் அடிங்க என்றார்? இப்ப யாரை அடிக்கலாம் என்றுசொல்லுங்க பார்க்கலாம். அவர்நடத்தும் கல்லூரில் எத்தனை வன்னிய இன மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்குறாங்க. அல்லது வருடம் வரும் குறிப்பிட்ட சதவிகிதம் இலவசமாக சோர்க்கிறார்கள் என்று தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்களேன்.

    வீரமணி நடத்தும் கல்லூரிகளில் எத்தனை தலித் மாணவர்களுக்கு வாழ்க்கை கொடுக்கப்படுகின்றது.

    பால் தினகரன் நடத்தும் கல்லூரிகளில் எத்தனை ஏழை கிறிஸ்துவ மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகின்றது?

    இதே வீரமணியிடம் ரபி பெர்ணார்ட் கேட்கிறார்?

    என்னங்க ஜாதி மதம் கடவுள் வெறுப்பு என்ற கொள்கை உடைய தந்தை பெரியார் திடலில் கிறிஸ்துவ கூட்டங்களை அனுமதிக்றீங்க, இது என்ன கான்செப்ட் என்றுகேட்க,

    அதுக்கு தன்மானத்தலைவர் கூறிய பதில் உளறலின் உச்சக்கட்டம்.

    அரசியல்வாதிகளை விடுங்க. அவங்க அப்பட்டமா சம்பாரிக்கத்தான் வந்து இருக்காங்க? இந்த இனமான காவல்ர்கள், இது போன்ற தாழ்த்தப்பட்ட உரிமைகளை மீட்டு எடுப்போம் என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர்கள் உண்மையிலேயே பாடுபட்டுக் கொண்டு இருக்காங்க?

    அட போங்க பாஸ். புள்ள குட்டிகளை இது போன்ற ஆட்களை கண்ணில் காட்டாமல் வளர்க்கப் பாருங்க.

    இன்னும் நிறைய எழுதுவேன். மேலும் மேலும் பதில் வந்து கொண்டு இருந்தால்?????????

    ReplyDelete
  39. கும்மி நீங்க தொட்ட ரவிக்கை சமாச்சரத்தை நண்பன் லெமூரியனும் கேட்டு இருக்கிறார். இதை இத்தோடு விட்டு விடலாம் என்று நினைத்தேன். அடுத்த பதிவில் விரிவாக எழுதுகின்றேன். திருப்தியா?

    ReplyDelete
  40. //இன்னும் எத்தனை காலத்திற்கு பார்ப்பனர்கள் சரியில்லை. அவர்களின் ஆதிக்கம் என்று புலம்பிக் கொண்டே இருக்கப் போகின்றோம்.//


    பார்ப்பனர்களைப் பற்றி மட்டும் அவர் கூறவில்லை. இருக்கும் அனைத்து சாதீய ஏற்றத்தாழ்வுகளையுமே அவர் நாய் என்று கூறியுள்ளார்.

    திருப்பூர் என்னும் நகரம் வேறு; தமிழகத்தின் மற்ற பகுதிகள் வேறு. முதலில் அதனை கவனத்தில் கொள்வோம்.

    வீடு வாடகைக்கு தொடங்கி அனைத்திலும் சாதி பார்க்கப்படுகின்றது. கார்ப்பரேட் நிறுவனங்களாக வளர்ந்துள்ள பல நிறுவனங்களிலும் அவர்களது சாதியினருக்கே வேலையில் முன்னுரிமை கொடுக்கப்படுகின்றது. நிறுவனங்கள் சிறு வேலைகளை outsource செய்யும்போது கூட, அவர்களது சாதியினர் நடத்தும் நிறுவனங்களுக்கே முன்னுரிமை கொடுக்கின்றனர். இத்தகைய நிறுவனங்கள் எந்த சாதிச் சங்க தலைவரால் நடத்தப்படுகின்றது?

    கடந்த நூற்றாண்டுகளில் இருந்ததுபோல் இல்லாவிட்டாலும், அது இன்னும் வேறு உடை அணிந்து திரிந்து கொண்டுதான் உள்ளது. சாதி அழிந்துவிட்டது என்று கூறுவது பூனை கண்ணை மூடிக்கொண்டதை போன்றதுதான்.

    //கோவிலுக்கு யார் வெத்தலை பாக்கு வச்சு கூப்புடுறாங்க.//
    // எல்லாரும்கோட்டாவுல தான் போய் படிக்கிறாங்க. எத்தனை பேர்கள் ஜெயித்து வர்றாங்க?//

    சத்தியமாக இது போன்ற வரிகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. :-(

    நவ பார்ப்பனர்கள் பற்றி கல்வெட்டு ஏற்கனவே உரையாடியுள்ளார். அந்தச் சுட்டிகளோடு அவர் வருவார் என்று எதிர்பார்க்கின்றேன்.

    ReplyDelete
  41. மீனவமக்கள் இன்று இந்துக்களாயிருப்பினும் அவர்களும் தலித்துகள் படும் வன்கொடுமைக்குத்தான் ஆளாகியிருப்பர்.


    சரி நண்பா? இப்ப சகல உரிமைகளை பெற்று சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு இருக்காங்களா? அப்புறம் எதுக்கு எங்களுக்கு உள் ஒதுக்கீடு, தனி ஒதுக்கீடு என்றுகேட்கிற நிலமை வந்துள்ளது.

    ReplyDelete
  42. Jo Amalan Rayen Fernando & ஜோ/Joe, மிகவும் சிறப்பான தகவல்கள். நன்றிகளும் வாழ்த்துகளும்!

    ReplyDelete
  43. சத்தியமாக இது போன்ற வரிகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. :-(

    கும்மியாரே கல்வெட்டு அடிக்க வருவார். நீங்க கௌப்பி விட்டீங்க. பொங்கிட்டேன். ஆனால் உறுதியாக சொல்ல முடியும்.

    கல்வி என்பது ஒருமகத்தான் ஆயுதம். அதை யாரும் முன்னிலைப்படுத்த தயாராய் இல்லை. ஊக்குவிக்கவும் மனம்இல்லை. ஒரு வகையில் இப்படித்தான் இவர்கள் இருக்க வேண்டும் என்று சுற்றி சுற்றி உள்ளே சடுகுடு ஆடிக் கொண்டே இருக்கிறார்கள். கொடி பிடித்தவனும், போஸ்டர் ஒட்டுறவனும் வளரக்கூடாது என்பதாகத்தான் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் வரிந்து கட்டிக் கொண்டு செயல்படுகின்றது. மாற்றுக் கருத்து உண்டா?

    ReplyDelete
  44. //ரவிக்கை சமாச்சரத்தை நண்பன் லெமூரியனும் கேட்டு இருக்கிறார். இதை இத்தோடு விட்டு விடலாம் என்று நினைத்தேன். அடுத்த பதிவில் விரிவாக எழுதுகின்றேன். திருப்தியா//

    விரிவாக எழுதவேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. போராட்டத்தின் மூலமே பெற்றனர் என்னும் தகவல் இருந்தால் போதுமானது. ஆனால், அதைப் பற்றி கோடிட்டுக் கூடக் காட்டாததால்தான் நான் சுட்டிக்காட்டினேன்.

    ReplyDelete
  45. Jo Amalan Rayen Fernando & ஜோ/Joe, மிகவும் சிறப்பான தகவல்கள். நன்றிகளும் வாழ்த்துகளும்!

    இந்த மகிழ்ச்சியோடு தற்போது விடைபெறுகின்றேன்.

    ReplyDelete
  46. // கொடி பிடித்தவனும், போஸ்டர் ஒட்டுறவனும் வளரக்கூடாது என்பதாகத்தான் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் வரிந்து கட்டிக் கொண்டு செயல்படுகின்றது. மாற்றுக் கருத்து உண்டா?//

    அரசியல் கட்சிகளை பற்றி பேசவில்லையே. தனி மனிதர்கள் காட்டும் பாகுப்பாட்டைதானே பேசுகின்றோம். கல்வியாலோ அல்லது கடும் உழைப்பாலோ மேலே வந்தவர்கள் நவ பார்ப்பனர்களாக மாறி விடுகின்றனர்; சமூகத்திற்கு ஒன்றும் செய்வதில்லை என்பதை பற்றி கல்வெட்டு ஏற்கனவே பேசியுள்ளார். அவர் வந்து பேசட்டும்.

    ReplyDelete
  47. அதே போல 16ம் நூற்றாண்டிலே இலங்கையின் மன்னார் முதல் கள்ளுத்துறை வரை ஆயிரக்கணக்கான கிருத்துவ மீனவர்கள் போத்துகேயர் துணையொடு குடியேறினார்கள். இவர்களில் பலர் இன்று சிங்களவர்களாக மாற்றப்பட்டு விட்டனர். ஆயினும் சிலர் வீடுகளில் மட்டும் தமிழ் பேசியும், சிலரின் பெயர்களில் மட்டும் தமிழும் இருந்து வருவதைப் பார்க்கலாம். உதாரணமாக, சிங்களவர் மத்தியில் காணப்படும் அழகம்பெருமா, சிங்கப்புலி போன்ற பேர்கள் இதனை உணர்த்தும்.

    இக்பால் செல்வன்

    என்னங்க பெயரே மதநல்லிணக்கம்போல இருக்கு. ஈழம் குறித்து நிறைய படித்த காரணத்தால் உங்கள் உண்மையான கருத்துக்கு என் வாழ்த்துகள்.

    ReplyDelete
  48. அரசியல் கட்சிகளை பற்றி பேசவில்லையே. தனி மனிதர்கள் காட்டும் பாகுப்பாட்டைதானே பேசுகின்றோம்

    இந்த உட்டாலக்கடி வேலையெல்லாம் வேண்டாம் கும்மியாரே?

    முதலில் சங்கம், அப்புறம் கட்சி, அப்புறம் மாநாடு, அதுக்குப் பிறகு விழிப்புணர்ச்சி உரிமை என்று போய் கடைசியில் மகனுக்கு பதவி. இது எங்கேயிருந்து தொடங்கியது. நம் இன மக்கள் மேலே வரவேண்டும் என்று ஒரு சொல்லில் இருந்து தானே தொடங்கியது. அவர் மட்டுமல்ல இது போன்ற நபர்கள் உருவாக்கும் அத்தனை கட்சிகளும் இப்படித்தானே சொல்கிறார்கள்?

    நான் சொல்ல விரும்புவது. இது போன்ற சமூகத்தில் இருந்து வந்த பலரும் ஒன்று சோராமல் கூட தனிப்பட்ட முறையில் பண்ம் படைத்தவர்கள் அவரவர் இனத்தில் ஐந்து மாணவர் அல்லது மாணவியர்களை படித்து மேலே கொண்டு வந்து ஆட்சி அதிகாரம் பெறக்கூடிய குறிப்பிட்ட பதவிகளில் உட்கார வைத்து அழகு பார்க்க வேண்டியது தானே? இவர்கள் தெருவுக்கு இறங்கி போராட வேண்டிய அவஸ்யமே இருக்காது? ஜனநாயக நம்பிக்கை தேவை என்று சொல்பவர்களுக்கு இது ஒன்றே தானே மாற்று ஏற்பாடு?

    ReplyDelete
  49. பார்ப்பனர்கள் இன துவேஷம் அற்றவர்கள் என எப்பொழுதும் சொல்ல வேண்டாம் நண்பா....
    அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பன்னாட்டு நிறுவனத்தில்தான் நானும் வேலை செய்கிறேன்...
    பெரும்பதவிகள் அத்துனையும் பார்ப்பனர்களாலேயே நிரப்பபட்டிருக்கிறது......
    பதவி உயர்வுயல் இருந்து பன்னாட்டிர்க்கு ட்ரைனிங் என்ற பெயரில் சில வாரங்கள் தங்குவது வரை
    அனைத்தும் அவா கைகளில் தான்....
    அவாக்கு அடிமை போல் கூழை கும்பிடு போடும் அனைவரும் அவர்க்கு
    விசுவாசிகள் ....
    ஏனைய சுய மரியாதை வேண்டும் அனைவர்க்கும் வேற்றுகிரக வாசிகள் அவாளை பொறுத்த வரை...!
    சாதி இல்லை என்று எதை வைத்து இவ்வளவு EASY யாக சொல்லி செல்கிறீர்கள் என இன்னும் எனக்கு விளங்கவில்லை
    நண்பனே....!

    ReplyDelete
  50. பார்ப்பனர்கள் இன துவேஷம் அற்றவர்கள் என எப்பொழுதும் சொல்ல வேண்டாம் நண்பா....

    எந்த இடத்திலும் அப்படி சொல்லவில்லை.


    சாதி இல்லை என்று எதை வைத்து இவ்வளவு EASY யாக சொல்லி செல்கிறீர்கள் என இன்னும் எனக்கு விளங்கவில்லை

    இருக்கிறது என்பது எத்தனை உண்மையோ அந்த அளவிற்கு மறைந்து கொண்டும் இருக்கிறது என்ற எதார்த்தை புரிந்து கொள்வீர்களா நண்பா?

    ReplyDelete
  51. கோட்டாவுலதான் படிக்கிறாங்கன்னு சொல்லிடீங்க...!
    அது இல்லேன்னா இன்னும் நீங்கள் எதிரில் வந்தால் முட்டி போட்டு கும்பிறேன் எசமானு சொல்லிகிட்டே இருந்திருப்போம் நண்பா
    எத்தனை பேர் மேல வர்றாங்கனு கேக்கறீங்க....
    எத்தன பெற மேல ஏற விட்ராங்கனு கணக்கு சொல்லுங்க....!

    ReplyDelete
  52. //இது எங்கேயிருந்து தொடங்கியது. நம் இன மக்கள் மேலே வரவேண்டும் என்று ஒரு சொல்லில் இருந்து தானே தொடங்கியது. அவர் மட்டுமல்ல இது போன்ற நபர்கள் உருவாக்கும் அத்தனை கட்சிகளும் இப்படித்தானே சொல்கிறார்கள்?//

    நீங்கள் ஏன் மீண்டும் கட்சிகளுக்கே செல்கின்றீர்கள்? கட்சித் தொடங்கிய பெரும்பாலான சாதீயவாதிகள் தங்கள் குடும்பத்திற்காகவே தொடங்கியுள்ளனர். விட்டில் பூச்சிகளாக விழுபவர்கள் இருக்கும் வரை அவர்களுக்கு கொண்டாட்டம்தான். அவர்களைப் பற்றி அனைவருக்குமே தெரியும். நாம் அவர்களைப் பற்றி பேசவில்லை.

    வரன் பார்ப்பதும், வேலைக்கு ஆள் எடுப்பதும், வீடு வாடகைக்கு விடுவதும் நடைமுறை வாழ்வில் பொது மக்களால் மேற்கொள்ளப்படுபவை. அங்கு நிலவும் சாதீய பாகுபாடுதான் நாம் பேசுவது.

    ReplyDelete
  53. உன்களை பொறுத்தவரை ஒரு தலித் செருப்பு போட்டு
    குழாய் சட்டை போட்டால் சாதி ஒளிந்து விட்டது என்று கொண்டால்
    கண்டிப்பாக என்னிடம் விளக்கம் ஏதும் இல்லை நண்பா...!

    ReplyDelete
  54. பதிவிலும், பின்னுட்டூங்களிலும் பல அறிந்திராத அரிய தகவல்கள்...!

    ReplyDelete
  55. இப்ப சகல உரிமைகளை பெற்று சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு இருக்காங்களா? அப்புறம் எதுக்கு எங்களுக்கு உள் ஒதுக்கீடு, தனி ஒதுக்கீடு என்றுகேட்கிற நிலமை வந்துள்ளது.//

    என்னாச்சு உங்களுக்கு? சுரம் கிரம் அடிக்கிதா? ஏன் தேவை, எதுக்குத் தேவைன்னு நாமும் அதே தெருவில் நான்கு ஐந்து தலைமுறை புழங்கி இருந்தாலே தெரிந்திருக்க வேண்டுமே, ஜி!

    // எல்லாரும்கோட்டாவுல தான் போய் படிக்கிறாங்க. எத்தனை பேர்கள் ஜெயித்து வர்றாங்க?//

    ஆயிரமாயிரம் வருடங்களா மண்டையின் அடி ஆழத்தில் புதைக்கப்பட்ட அடிமையுணர்வு, கல்வி மறுப்பு இத்தியாதிகள்., எப்படி ஒரு தலைமுறையிலேயே தீர்க்கப்பட்டு மேலெழும்ப போதுமான காலமாக இருக்க முடியும்?

    //கோவிலுக்கு யார் வெத்தலை பாக்கு வச்சு கூப்புடுறாங்க.//

    அப்படியே போகிறேன் என்று போனாலும், ஏன் அவர்கள் போகக் கூடாது என்றாக அல்லவா உங்க கேள்வி இருக்க வேண்டும்.

    எத்தனை காலங்கள் சுய சிந்திப்பனுவபம் மறுக்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக மூளையின் அந்தப்பகுதி செயலிழந்து மீண்டும் ஆக்டிவேட் ஆக காலங்கள் எடுத்துக் கொண்டு, வீட்டிலும் அது போன்ற பெற்றோர்களை பெறும் காலம் வரையிலும் அவர்கள் ஜெயித்து வர வேண்டுமென்று அந்த வசதிகளை பெற்றவர்கள் பொறுமையாகத்தான் இருக்க வேண்டும். ஓவர் நைட்டில் எல்லாம் மேஜிக் நடந்துவிடாது...

    ReplyDelete
  56. .
    மறுபடியும் மொதல்ல இருந்தா? என்னா ஜி இப்படி?
    இட ஒதுக்கீடு, பார்ப்பனர் (பார்ப்பனீயம் ) என்பது யார் என்ற புரிதல்களில் நாம் விலகி இருக்கிறோம் என்று நினைக்கிறேன். நிச்சயம் பேசுவோம் விரிவாக‌.

    நல்லாத்தானே இருந்தீங்க நீங்க ஏதாவது காத்து கருப்பு அடிச்சிருச்சா? :-))

    கும்மி , தெக என்ன ஆச்சு ஜோதிஜிக்கு?

    ReplyDelete
  57. ஜோதிஜி, பதிவைப் படித்துவிட்டு கடும் கோபத்துடன் பின்னூட்டம் பக்கம் வந்தேன். ஏற்கனவே தோழர்கள் குழலி, கும்மி, கல்வெட்டு ஆகியோர் பிச்சு உதறிக்கொண்டிருந்ததைப் பார்த்தவுடன் மனசு கொஞ்சம் ஆறியது.

    எத்தனை எளிதாக நடுத்தர வர்க்கத்தின் பொதுப்புத்தியுடன் வரலாற்று விஷயங்களுக்குள் புகுந்திருக்கின்றீர்கள்! கிராமங்களில் பப்பரக்கா என்று தலைவிரித்தாடும் ஜாதீயம் நகரமக்களின் மனதில் முகமூடி போட்டு மூடிவைக்கப்பட்டுள்ளது என்பதே நிஜம். அடுத்ததாக தோள்சீலை உரிமைப்போராட்டம் என்ற மிகப்பெரும் கிளர்ச்சியை ஏதோ அதிகாரத்திலிருந்த பெண்மணியின் தயவால் கிடைத்தது என்று வேறு குறீப்பிட்டுள்ளீர்கள்.

    இன்னும் இன்னும் ஏராளமாகவே...

    //என்னுடைய பார்வையில் சம காலத்தில் எல்லா இன மக்களிடத்தில் சாதி என்ற பாகுபாடு இரண்டாம்பட்சமே. பணம் இருப்பவன் இல்லாதவன் என்று இரண்டே கோட்பாடு தான்.//
    பணப்பாகுபாடு மட்டுமே திண்ணியத்தில் பீயைத் திணித்து, மேலவளவில் தலையைவெட்டி, உத்தப்புரத்தில் சுவர் கட்டி இருக்கின்றது போலும் :(

    வருத்தத்துடன் இந்தப்பதிவைக் கடந்து செல்கிறேன்.

    வரலாறு எங்கெல்லாம் தவறாக பதிவு செய்யப்படுகின்றதோ அங்கெல்லாம் அறிவின் துணைகொண்டு வாள்சுழற்றும் அண்ணன் குழலி, கல்வெட்டு மற்றும் நண்பர் கும்மி ஆகியோருக்கு என் நெஞ்சார்ந்த வணக்கமும் நன்றியும்!

    ReplyDelete
  58. .
    //கோவிலுக்கு யார் வெத்தலை பாக்கு வச்சு கூப்புடுறாங்க.//

    இது மிகவும் வருத்தமான ஒன்று.

    இதற்குப்பதில் "இவர்களை இந்த நாட்டில் வாழசொல்ல்லி யார் அழுதார்கள்?" என்றே கேட்டிருக்கலாம்.

    :-((((


    கூப்பிடாலும் கூப்பிடாவிட்டாலும் எங்கும் தீண்டாமை இருக்கக்கூடாது என்பதே நல்லது. அதைவிடுத்து ஏன் போகிறாய் என்பதற்குப்பதில் ஏன் வாழுகிறாய் என்று கேட்டுவிடலாம்.

    இரவில் நடந்து சென்றாலும் பாதுகாப்பைத் தரும் சுதந்திரம் பெண்ணுக்கு வேண்டும் என்றால் " அவ ஏன் இராத்திரியில் போறா?" என்று கேட்பீர்கள் போல.

    என்ன ஆச்சு உங்களுக்கு?

    இந்தப்பதிவில் ஏதும் பேசவே முடியாதோ என்றே படுகிறது.
    .

    ReplyDelete
  59. //காதலர் தின சிறப்பு பதிவு போடுங்க.//

    கலவர பூமியிலே கறி சோறு எப்படி கிடைக்கும் .. ஜோதி அண்ணன் ஒரு காதல் தின சிறப்பு இடுகை எழுத நானும் கேட்டுகிறேன்

    ReplyDelete
  60. நசரேயன் காலையில் முகத்தில் சிரிப்பை வரவழைத்து விட்டீங்க.

    விந்தைமனிதா உன்னோட விமர்சனத்தை ரொம்பவே ரசித்தேன். நடுத்தர வர்க்கம், பொதுப்புத்தி உண்மைதான். அப்புறம் கல்வெட்டு, தெகா கும்மி மூன்று பேருக்கும் சில விசயங்கள். என் பார்வை அல்லது நான் தெரிவிக்க வேண்டிய விசயங்கள் என்பதாக இதைக் கருதுகின்றேன். தவறு இருந்தால் திருத்துங்கள். கல்வெட்டு நீங்க நாகரிகம் கருதி அல்லது என் மேல் உள்ள மரியாதையின் பொருட்டு நகர்ந்து போனது நன்றாகவே புரிகின்றது.

    விந்தை மனிதனை தவிர கல்வெட்டு தெகா கும்மி நாம் நால்வரும் ஏறக்குறைய சம அளவில் வெளிவாழ்க்கை அனுபவங்கள் பெற்றவர்களாகத்தான் இருக்கிறோம். இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க. அல்லது எனக்கு புரிய வைங்க. தெரிந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்.

    ReplyDelete
  61. 1. கல்லூரி படிப்பு இறுதி வரைக்கும் வாழ்ந்த நாம் அணைவரும் வாழ்ந்த அந்த கிராமத்து வாழ்க்கையைப் போலவே சாதீய வேறுபாடுகள் இன்றும் முழுமையாக இருக்கிறதா? அல்லது இன்று மாறியுள்ளதா?

    2. சதவிகித அடிப்படையில் மொத்த கிராமங்களில் உள்ள ஆதிக்க மன்ப்பான்மையில் உள்ளவர்களின் கொட்டம் குறைந்து உள்ளதா? இல்லை இன்றும் அப்படியே தான் இருக்கிறதா?

    3, கல்வெட்டு நான் கோவிலைப்பற்றி குறிப்பிட காரணம்? இந்த ஆலயம் என்பதை யார் உருவாக்கியது? எதற்காக தந்தை பெரியார் புறக்கணிக்கச் சொன்னார்? கற்பித்தவன் முட்டாள். பரப்புவன் அயோக்கியன். இதற்குள் நுழையக்கூடாது என்பதில் தான் பார்ப்பனர்கள் தங்கள் பிரித்தாளும்
    சூழ்ச்சியை கடைபிடிக்கிறார்கள் அல்லவா? ஏன் இன்னமும் தனி மனித மனங்கள் இந்த கோவிலை கட்டிக் கொண்டு அழுகிறார்கள்? சுயமான மரியாதை என்பது தான் கற்ற கல்வி ஒவ்வொருவருக்கும் கற்றுத் தராதா?

    4. பெரும்பாலான நகர்புறங்களில் இன்னமும் இந்த தீண்டாமை கடைபிடித்துக் கொண்டு தான் இருக்கிறார்களா? உள்ளே நுழைந்து வழிபடுபவர்கள் எல்லோருமே இன்ன சாதி என்று பார்த்துக் கொண்டு தான் அனுமதிக்கிறீர்களா?

    5. இங்கு உரையாடிய ஒவ்வொருவரும் 3000 ஆண்டுகளாக அடிமைப்பட்டு கிடந்தவர்கள். அவர்கள் மெதுவாகத்தான் முன்னேறுவார்கள் என்று தான் சுற்றிச் சுற்றி வருகின்றீர்களே தவிர கடந்த காலங்களில் அரசாங்கம் உருவாக்கிய அத்தனை வாய்ப்புகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு போய் சேர்ந்து இருக்கிறதா? அல்லது கிடைத்தும் பயன்படுத்தி முன்னேறி இருக்கிறீர்களா என்பதை ஏன் யாரும் பேசவே மாட்டேன் என்கிறீர்கள்?

    6.நீங்கள் அத்தனை பேர்களும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமையைப் பற்றி நான் தவறாக புரிந்து கொண்டேன் என்பது போலவே வாளைச் சுழற்றி அடிக்க வர்றீங்க. நான் சொல்ல வருவது கொடுக்கப்பட்ட உரிமைகள் அத்தனையும் சமகாலத்தில் சுயநல பேய்களின் கையில் சிக்கி மேலும் மேலும் இந்த மக்கள் மேலே வராதபடி கீழே போய்க் கொண்டே இருக்கிறார்கள் என்பதை யாராவது புரிந்து கொண்டீர்களா?

    7. பார்ப்பனர்கள் தவறு செய்தார்கள்? அல்லது இன்றும் அவர்களின் ஆதிக்கம் தான் கொடிகட்டி பறக்கின்றது என்ற உண்மையைப் போலவே இவர்களுக்கான உரிமையை நாங்கள் பெற போராடிக் கொண்டு இருக்கிறோம் என்றவர்களின் வாழ்க்கை அல்லது இந்த தலைவர்களின் கொள்கை உங்கள் அணைவருக்கும் சரியாக தென்படுகின்றதா?

    ReplyDelete
  62. //இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க. அல்லது எனக்கு புரிய வைங்க. தெரிந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்.//

    ஜோதிஜி,
    கிறித்துவம் (கத்தோலிக்கம் , புரோட்டஸ்டன்ட்..) , சாதி, இட ஒதுக்கீடு என்று பல தடங்களில் செல்லுகிற‌து இந்தப்பதிவும் இதுவரை நாம் பேசிய அனைத்தும்.

    சுற்றி வளைக்காமல் எந்த எடுத்துக்காட்டும் இன்றி நேரடியாக ஒரே ஒரு ,ஏதேனும் ஒரு கேள்வி மட்டும் கேளுங்கள். என்னளவில் எனது நிலைப்பாட்டை (அது போல கும்மி, தெகா, குழலி,ஜோ,விந்தை மனிதன்..... மற்றும் பலர்..அவர்களின் நிலைப்பாட்டை) தெரிவிக்கலாம். அந்தப் பஞ்சாயத்தை முடித்து அடுத்த கேள்விக்குப் போகலாம்.

    .

    ReplyDelete
  63. தோள்சீலை உரிமைப்போராட்டம் என்ற மிகப்பெரும் கிளர்ச்சியை ஏதோ அதிகாரத்திலிருந்த பெண்மணியின் தயவால் கிடைத்தது என்று வேறு குறீப்பிட்டுள்ளீர்கள்.

    அட ராசப்பா? சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தவனும் நீ தான். நான் பாட்டுக்கு நம்ம சொந்த கதை சொறி கதையை எழுதிப் பார்க்கலாமேன்னு ஆரம்பிச்சா இதையெல்லாம் எழுதுங்க ஜீன்னு எழுத காரணமே நீ தான். ஏற்கனவே ஒவ்வொரு பதிவும் சூட்டில் போய் மாட்டிக் கொண்டு இருக்கிறது. கும்மி தெகா பிடித்தவற்றை நீயும் தொங்கிக் கொண்டு இருக்கிறாய். சிலவற்றை கடந்து போய்விடலாம் என்பதற்கு காரணம் மறைக்க வேண்டும் என்பதல்ல. அது பாதையை மாற்றி விடும் என்பதாக நினைத்தேன். ஒவ்வொன்றையும் படித்துக் கொண்டே வருவதுடன் இங்கே குறிப்பிட்ட மக்களுடன் இது குறித்து உரையாடியும் தகவல் சேகரித்துக் கொண்டு தான் கவனமாக நகர்கின்றேன். வேறு வழியில்லை போட்டு உடைத்து விட வேண்டியது தான் என்று சொல்லிவிட்டாய். விடு ராசா. அடுத்த பதிவில் அது குறித்த அத்தனை விசயங்களையும் கும்மி விடுகின்றேன். சந்தோஷமா?

    ReplyDelete
  64. கிறித்துவம் (கத்தோலிக்கம் , புரோட்டஸ்டன்ட்..) , சாதி, இட ஒதுக்கீடு என்று பல தடங்களில் செல்லுகிற‌து இந்தப்பதிவும் இதுவரை நாம் பேசிய அனைத்தும்.

    அப்பாடா........ இப்பத்தான் கொஞ்சம் சந்தோஷமா இருக்கு, நீங்களே சொல்லிட்டீங்க. இது சாதி ரீதியான வளர்ச்சி வீழ்ச்சி பார்வை போன்றவற்றை விளக்கும் தொடர் அல்ல. இராமநாதபுரம் மாவட்டத்தின் காலடித்தடங்கள் என்ற நோக்கத்தில் தான் கொண்டு போய்க் கொண்டு இருக்கின்றேன். காரணம் நீங்கள் குறிப்பிட்ட விசயங்களைப் பற்றி ஒவ்வொன்றாக தொட்டுக் கொண்டு போனால் அது எனது வன வக்கிரங்களைத்தான் வெளிப்படுத்தும். ஒரு இந்துவாக வாழ்ந்து கொண்டு இருப்பவனுக்கு ஒரு இஸ்லாமிய கிறிஸ்துவ மக்களின் அடி ஆழ மக்களின் வாழ்வியல் சோகங்களை எப்படி புரிய வைக்க முடியும்? இதில் நான் படித்த கேட்ட விசயங்களைப் பற்றி எழுதி இருக்கின்றேனே தவிர ஜோ மற்றும் ஜோ அமலன் தெரிவித்த கருத்துக்களை பற்றி பார்த்திங்க தானே? இவர்கள் வாழ்ந்தவர்கள் அல்லது அத்துடன் சம்மந்தபபட்டவர்கள். இவர்களைப் போன்றவர்கள் தான் இது போன்ற விசயங்களை எழுத தகுதியானவர்கள். ஒரு வேளை நான் எழுதிய காரணத்தால் தானே இவர்களே இங்கு வந்து உரையாடி இருக்கீறார்கள்?

    ReplyDelete
  65. சுற்றி வளைக்காமல் எந்த எடுத்துக்காட்டும் இன்றி நேரடியாக ஒரே ஒரு ,ஏதேனும் ஒரு கேள்வி மட்டும் கேளுங்கள்

    என்ன தலைவா? உங்களிடம் இருந்து இப்படி ஒரு கேள்வியா?

    ஒருவர் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த காரணத்தால் அவரின் வாழ்வியல் உரிமைகள் மறுக்கப்படுகின்றது என்று சொல்லும் போது அதன் புறக்காரணிகள் அத்தனையும் தான் துவைத்து காய வேண்டும். அப்போதுதானே அதன் முழு பரிணாமத்தை வெளியே கொண்டு வர முடியும்,

    மற்றவர்கள் பார்வையில் அம்பேத்கார் எப்படியோ தெரியவில்லை? ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் உள்ள அத்தனை கொடுமைகளை கொடூரங்களை தாண்டி தாங்கி எந்த அளவிற்கு உயர்ந்தார் என்பதை சரித்திரம் உங்களுக்கு உணர்த்தி இருக்கக்கூடும். ஏன் அவரை எவராலும் தடை செய்ய முடியவில்லை? இத்தனைக்கும் நீ வந்து வாங்கி பணத்துக்கு வந்து ஊழியம் செய்ய வேண்டும் என்று அவரை வலுக்கட்டாயமாக இந்தியாவிற்கு வரவழைத்தது வரைக்கும் நான் கவனித்த வரையில் கல்வி என்ற ஆயுதம் தான் சமூகத்தில் ஒவ்வொரு உயர வழி என்பதை தனது வாழ்க்கை மூலமாக உணர்த்திக் காட்டியவர் அம்பேத்கார். இது தான் என் நோக்கமும். என்னுடைய நோக்கம் என்பது அவர் காலத்தில் உள்ளதை விட இன்று வாய்ப்புகளும் வசதிகளும் இன்று ஏராளமாக உள்ளது. ஆனால் உயர்ந்து வருபவர்களின் எண்ணிக்கை சொற்பமே. இது தான் என் ஆதங்கம். ஏன்? இதன் காரணமாகவே இதற்கு பின்னால் உள்ள சுயநல பேய்களின் மேல் என்னுடைய கோபம் இங்கு வார்த்தைகளில் வந்து விழுகின்றது. மருத்துவர் புரூனோ இடுகையில் தமிழ்மணம் சசி ஒரு பதில் பின்னோட்டம் கொடுத்து இருந்தார். அமெரிக்காவில் என்னுடன் போட்டியிடும் ஐஐடி மாணவர்களுக்கும் எனக்கும் அறிவு ரீதியில் எந்த வித்யாசமும் இல்லை. சரிசமமாகவே இருக்கின்றேன் என்றார். இது எப்படி? அவரும் நெய்வேலியில் அரிக்கேன் விளக்கில் படித்து, முற்பட்ட வகுப்பினர் பெறதா வாழ்க்கை வசதிகள் இல்லாமலேயே இந்த அளவிற்கு உயர்ந்த காரணம் என்ன? அவருடைய உழைப்பு அல்லது முயற்சி. இது ஏன் ஒவ்வொருவருக்கும் புரிய மாட்டேன என்கிறது. இன்று உலகம் முழுக்க இருக்கும் தமிழ்நாட்டு மாணவர்கள் அத்தனை பேர்களும் அய்யர்கள் தானா? எப்படி போய் சேர்ந்தார்கள். நம்ம தெகா சாதாரண வறப்பட்டிக்காட்டில் இருந்து தானே போய் இருக்கிறார். அவர் என்ன மற்றவர்களை குறை சொல்லிக் கொண்டு இருந்தா இங்கே ஏதோவொரு இடத்தில் நாலு முழ வேட்டியைக் கட்டிக் கொண்டு உள்ளே திரிய வேண்டியது தான். அவருடன் படித்தவர்கள் எத்தனை பேர்கள் உயர்ந்துஇருக்கிறார்கள்? யாராவது தடுத்தார்களா? என் நோக்கம் இங்குள்ள ஒவ்வொருவருக்கும் இருக்கும் மன்ப்பான்மை என்று கருதுவது?

    உழைக்க மறுப்பது. அல்லது முறையான வழியில் உழைக்கத் தெரியாமல் இருப்பது. அல்லது யாராவது நமக்கு இலவசமாக தந்து விடுவார்களா என்று வானத்தை நோக்கி பார்த்துக்கொண்டு இருப்பது.

    இதன் காரணமாகத்தான் இன்று அரசியல் ஆன்மீகம் கல்வி மூன்று துறைகளில் அதிகமாக சுயநல பேய்களின் கொட்டம் தலைவிரித்தாடுகின்றது. எனக்கு ஆசை தான். மனிதன் என்ற நோக்கில் அணைவரும் சரிசமமாக வாழ்ந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அதற்கான வெற்றி என் கணகளுக்கு வெகு தொலைவில் கூட தென்படுமா என்று சந்தேகமாகத்தான் இருக்கிறது என்பதால் இந்த ஆதங்கத்தை எழுத்துகளாக தந்தேன். புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன். ஒவ்வொரு தனி மனிதனும் கட்சி என்ற நோக்கத்தில் பார்க்காமல் அந்த அந்த தொகுதியில் உள்ள தனிப்பட்ட மனிதர்களின் அவர்கள் கடந்து வந்த வாழ்க்கையை அடிப்படையாக வைத்து தங்களுக்கான சார்பாளர்களை தேர்ந்தெடுக்க என்று மனம் மாறுகின்றதோ அன்று தான் கொஞ்சம் மாறும். அப்படி என்றால் ஒருவரை கூட தேர்ந்தெடுக்க முடியாது என்பீர்கள். குறைந்த பட்சம் கட்சித் தலைமை உருப்படியான நபர்களை தேர்ந்தேடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் அல்லவா? இது போன்ற விசயங்கள் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளதா? மாற்றம் எங்கிருந்து உருவாக வேண்டும். அடிப்படை மக்களிடத்தில் இருந்து தானே?

    ReplyDelete
  66. மற்றவற்றிற்கு மாலையில் வருகின்றேன். ஒரு விஷயத்தை மட்டும் இப்பொழுது சொல்லி விடுகின்றேன்.

    //சிலவற்றை கடந்து போய்விடலாம் என்பதற்கு காரணம் மறைக்க வேண்டும் என்பதல்ல. அது பாதையை மாற்றி விடும் என்பதாக நினைத்தேன்//

    சில ஆண்டுகளுக்கு முன் பாடப்புத்தகங்கள் காவிமயப்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. பல விஷயங்களும் அவர்களுக்கு தகுந்தாற்போல் வளைக்கப்பட்டாலும், ஒரு விஷயத்தை மட்டும் இங்கே குறிப்பிடுகின்றேன்.

    காந்தி பற்றிய பாடத்தில் "1948 ஜனவரி 30 அன்று கோட்சேவால் சுடப்பட்டு காந்தி இறந்தார்" என்னும் வாக்கியம், "1948 ஜனவரி 30 அன்று காந்தி இறந்தார்" என்று மாற்றப்பட்டது.

    நீங்கள் எழுதியிருக்கும், நாடார் இனப்பெண்கள் மேலாடை அணிய அனுமதியும் அப்படிதான். முக்கிய தகவலை விட்டுவிட்டு, மேம்போக்காக சொல்கின்றது. அது எப்படி பாதையை மாற்றும் என்று நினைக்கின்றீர்கள்? காந்தியின் மரணம் பற்றி பேசும்போது, கோட்சே பற்றி பேசாமல் இருப்பது எப்படி சாத்தியமில்லையோ, அதுபோல் மேலாடை அணியும் அனுமதி பற்றி பேசும்போது அவர்கள் மேற்கொண்ட போராட்டம் பற்றியும் பேசாமல் இருப்பது சாத்தியமல்ல.

    நமது தாத்தாக்கள் காலத்தில், நம் மாநிலத்தின் ஒரு பகுதியில், நம் இனத்தைச் சார்ந்த ஒரு குறிப்பிட்ட ஜாதி பெண்கள் மட்டும் மேலாடையின்றி இருக்க வேண்டும் என்று அரங்கேறிய கொடூரமும், அதனை எதிர்த்து அவர்கள் போராடியதும் பதிவு செய்யப்பட்டால் பாதை மாறிவிடும் என்பது சற்றும் ஏற்புடையதாக இல்லை.

    நீங்கள் மேற்கொண்டிருப்பது, The Hindu பத்திரிக்கை மேற்கொள்ளும் பாணி. :-(

    .

    ReplyDelete
  67. மற்றுமொரு விரிவான படைப்பு.

    ReplyDelete
  68. கும்மியாரே நம்ம ராசப்பன் கூப்பிட்டு இந்த விமர்சனத்தை அழைத்துச் சொன்னார். நல்லா சுருக்குன்னு பச்ச மிளகாய் கடித்தது போல் இருக்கு. அடுத்த பதிவு முதல் யார் அய்யோ அம்மான்னு கத்தப் போறாங்கன்னு தெரியல?

    ReplyDelete
  69. ஒரே ரண களமா இருக்கு ... இருந்தாலும் , பாப்பான்கள் எல்லாரும் வேலை கொடுப்பதில் இருந்து , வீடு கொடுப்பது வரை ஜாதி , மத துவேஷம் கான்பிக்கிரார்கள் ..இது தான் குற்றச்சாட்டு. இதில் நிறைய உண்மை இருந்தாலும் , மற்ற பக்கத்தையும் பாக்க வேண்டும். அதே முன்னேறிய ஒரு நாடார் நடத்தும் நிறுவனத்தில் ...அல்லது , ஒரு கிறித்துவ அல்லது இஸ்லாமியர் நடத்தும் ஒரு நிறுவனத்தில் , அவர் யார் யாருக்கு முன் உரிமை கொடுப்பார். அவர்கள் எல்லாம் பாகுபாடே இல்லாமல் எந்த மனிதராக இருந்தாலும் வேலை கொடுத்து விடுவாரா .?.. அப்படியானால் , எந்த அளவுக்கு ஒரு பிராமினரை குறை கூறுகிறேரோ ... அதே அளவுக்கு குறை எங்கும் உண்டு.

    தன்னை சார்ந்து இருக்கும் அல்லது தனக்கு தெரிந்த நாலு பேரை படிக்க வைத்து ஏதாவது ஒரு வழி காண்பித்தாலே போதும் ... அக்கா /அத்திம்பேர் / மாமா இது போல யாரையாவது பிடித்து , வேலை கிடைப்பது மாதிரி எதையாவது படித்து முன்னுக்கு வந்தவர்கள் தான் நிறைய. அடிப்படையில் எல்லாருமே சுயநல வாதிகள் தான். தன்னுடைய தம்பிக்கு உதவாமல் ஒரு அக்கா வேறு யாருக்கு உதவ முடியும் ..அதுபோல கல்வியின் முக்கியம், உழைப்பின் அருமை , ஒழுங்கீனம், சுத்தம் இது எல்லாமே அடிப்படை உண்மைகள் . அதை யார் உணர்ந்தாலும் வெற்றி அவருக்கு தான், எந்த ஜாதியாக இருந்தாலும்.

    இன்னும் ஒரு முக்கிய குணமும் இருக்கு ... எந்த ஒரு ஜெயிலிலும் போய் கணக்கெடுத்து பாருங்கள் ..எத்தனை பேர் எந்தந்த ஜாதி என்று ... பாப்பான்கள் நிறைய பேர் இருக்காங்களா ? இல்லை என்றால், காரணம் என்ன ?. பயம் மட்டுமேவா ... அல்லது வேறு என்ன காரணம் இருக்கலாம்.

    ReplyDelete
  70. முதலில் கோயில் நுழைவிலிருந்து தொடங்குவோம்.

    // இதற்குள் நுழையக்கூடாது என்பதில் தான் பார்ப்பனர்கள் தங்கள் பிரித்தாளும்
    சூழ்ச்சியை கடைபிடிக்கிறார்கள் அல்லவா? //

    ஒரு சாரார் கோயிலுக்கு வரக்கூடாது என்று அவர்கள் நேரடியாக சொன்னார்கள். வேறு வார்த்தைகளில் நீங்களும் அதனையேதான் சொல்கின்றீர்கள். சொல்லப்படும் வார்த்தைகள்தான் வேறு. ஆனால், சொல்லப்படும் கருத்து ஒன்று. கோயிலுக்கு ஒரு குறிப்பிட்ட சாரார் செல்லக்கூடாது என்பதுதான் அது.

    மக்களில் உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்று பாகுபாடு ஏற்படுத்தி, தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலுக்குள் வரக்கூடாது என்று கூறியுள்ளனர். நீங்கள் புறக்கணித்தால், அவர்கள் விரும்பும் தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலுக்குள் செல்லக்கூடாது என்னும் நிலை ஏற்படுவது மட்டுமின்றி, உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்னும் பாகுப்பாட்டையும் ஏற்றுக்கொண்டதாக அர்த்தம் ஆகின்றதே. நீங்கள் மூச்சுப் பிடித்து கத்திக்கொண்டிருக்கும் சாதிகள் நடைமுறையில் இல்லை என்னும் கருத்தாக்கமே உங்களுடைய இந்த வாதத்தில் அடிபட்டுப் போய் விடுகின்றதே.

    கோயில் என்பது பொதுச் சொத்து. அங்கு செல்வதற்கு இம்மண்ணின் மைந்தர்களுக்கு அனைத்து உரிமையும் உண்டு. அங்கு செல்லக்கூடாது என்று யாராவது கூறினால், உரிமையை நிலை நாட்ட போராடித்தான் ஆக வேண்டும். அதை விடுத்து நாங்கள் புறக்கணிக்கின்றோம் என்று கூறினால் சாதீய மேலாதிக்கத்திற்கு துணை போனவராகதான் நீங்களும் ஆகின்றீர்கள்.

    முதலில், மனிதன் மனிதனாக மதிக்கப்பட வேண்டும்; ஏற்றத்தாழ்வுகள் இருக்கக்கூடாது. இந்நிலை ஏற்படட்டும். இதற்கு பிறகுதான் கடவுள், மதம், மண்ணாங்கட்டியெல்லாம்.

    .

    ReplyDelete
  71. // எல்லாரும்கோட்டாவுல தான் போய் படிக்கிறாங்க. //

    ரொம்ப எளிமையா கடந்து போயிட்டீங்க. ஆனா உண்மை அப்படியில்லையே! வாய்ப்புகள் மறுக்கப்பட்ட ஒருவன் உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு எதிராக நடந்த போராட்டங்களை மறந்துவிட்டீர்களா? IAS எனப்படும் இந்திய ஆட்சியியல் தேர்வுகளில் நடைபெறும் உயர்சாதியினருக்கு ஆதரவான குழப்படிகளை படித்ததில்லையா?

    தருமி அவர்களின் இந்தப் பதிவை முதலில் படித்துவிடுங்கள். அதன்பிறகு நீங்கள் வரிசையாக கேட்டிருக்கும் கேள்விகளில் எத்தனை மீண்டும் கேட்கப்பட வாய்ப்புள்ளன என்று பார்க்கலாம்.


    அப்பன், பாட்டன், முப்பாட்டன் என்று யாரும் பள்ளிக்கூடம் பக்கம் கூட ஒதுங்க முடியாமல், இன்று தனது மகள்களாவது படிக்கட்டும் என்று கல்விக்கூடம் அனுப்பினால், வகுப்பறையைக் கூட்டி குப்பையை தின்ன வைக்கும் அரக்கிகளிடமும், நிர்வாணப்படுத்தி சோதனை செய்யும் ராட்சசிகளிடமும் சிக்கி சின்னாபின்னமாகி வருகின்றனர் ப்ரியங்காக்களும், திவ்யாக்களும். இத்தகைய சமூகத்தில் வாழ்ந்து கொண்டுதான் நாம் கூறுகின்றோம், சாதி மூலக்கூறுகளை எவரும் பொறுமையாக கண்டு கொள்ள வாய்ப்பும் இல்லை என்று.


    ---
    மன்னிக்கவும் ஜோதிஜி. பார்ப்பனர்கள் கூறிக்கொண்டிருக்கும் வார்த்தைகளை உங்கள் பின்னூட்டத்தில் பார்த்ததும் அடக்கமுடியாமல் அனைத்தையும் கொட்டிவிட்டேன்.

    ---
    "இங்கே யாரும் சாதி பார்ப்பதில்லை; பிறகு எதற்கு இட ஒதுக்கீடு?" என்று சமீபத்தில் கேட்டார் சாதி வெறி பிடித்த பாடகி ஒருவர்.

    .

    ReplyDelete
  72. //அடுத்த பதிவு முதல் யார் அய்யோ அம்மான்னு கத்தப் போறாங்கன்னு தெரியல//

    இது என்ன விதமான எதிர்வுகூறல் என்று தெரியவில்லையே! :-)

    ReplyDelete
  73. கல்வியின் முக்கியம், உழைப்பின் அருமை , ஒழுங்கீனம், சுத்தம் இது எல்லாமே அடிப்படை உண்மைகள் . அதை யார் உணர்ந்தாலும் வெற்றி அவருக்கு தான், எந்த ஜாதியாக இருந்தாலும்.

    ReplyDelete
  74. இட ஒதுக்கீடு என்பது அரசின் உயர்பதவிகளிலும் ஐ.ஐ.டி போன்ற உயர்கல்வி நிலையங்களிலும் எப்படி சிரிப்பாய் சிரிக்கின்றது என்பதைப்பற்றி ஜோதிஜி நமது அன்பிற்குரிய மரு.புருனோ அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நலம் என்று எண்ணுகிறேன்.

    இந்திய ஆட்சிப்பணிகளிலும் ஏனைய உயர்பதவிகளிலும் பார்ப்பனர் மற்றும் பார்ப்பனர்களுக்கு அடுத்த படிநிலையில் இருக்கும் உயர்சாதியினரின் சதவீதமே மிக அதிகம். நண்பர் கும்மியிடம் கேட்டால் புள்ளிவிவரங்களை அடுக்குவார்.

    பொதுப்புத்திக்குள் உறையவைக்கப்படும் கருத்துக்கள் அனைத்துமே ஆளும் வர்க்கத்தால் தேர்வுசெய்யப்பட்டு வடிகட்டப்பட்டு அளிக்கப்படும் கருத்துக்களே!

    ReplyDelete
  75. பொதுவா எந்த துறை குறித்து எழுதினாலும் சற்று கவனமாக எழுத வேண்டும் என்று நினைப்பதுண்டு. ஆனால் பதிவுலகில் ஒவ்வொருவரையும் உள்ளே வரவழைக்க ஏராளமான சித்து விளையாட்டுகள் உண்டு. தலைப்பு முதல் கூவி அழைத்தல் வரை. நான் விரும்புவதில்லை. அப்புறம் இது போன்ற விசயங்களை சற்று ஆழமாக எழுதும் போது விசயத்தை விட்டு விட்டு வேறு விசயங்களுடன் மல்லுக்கட்ட பலர் காத்துக் கொண்டு இருப்பார்கள். பஞ்சாயத்து அக்கப்போர் என்று போய்க் கொண்டே இருக்கும். ஆக மொத்தம் வருகையாளர்கள் அதிகமாக இருப்பார்களே தவிர என்ன உணர்ந்து கொண்டார்கள் என்பது பூஜ்யமாக இருக்கும் என்பது நான் புரிந்து கொண்ட உண்மை. ஆனால் இன்று நண்பர்கள் அத்தனை பேர்களும் ஒரே அணியில் நிற்பது எனக்கு சந்தோஷமே. எல்லாவற்றையும் போட்டு உடை என்கிறீர்கள். எனக்கு ஒன்று ஆட்சேபணையில்லை. இதன் காரணமாக உருவாகும் விளைவுகளையும் நீங்களே பாருங்க. எத்தனை பேர்கள் இதை கருத்தாக எடுத்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறீங்க நண்பா?

    அப்புறம் நேற்று ஈழத்தில் இருந்து நண்பர் உரையாடினார். நான் பிரபாகரன் அவர்களை எந்த அளவிற்கு நேசிப்பவன் என்று அவருக்குத் தெரியும். ஆனால் அவரும் ஈழத்தில் ஊடகத்துறையில் இருப்பதால் தற்போது உள்ள வடக்கு மாகாண முதலமைச்சரிடம் என்னுடைய வலைப்பூவை அறிமுகம் செய்து வைத்து ......... இது குறித்து நிறைய உரையாடினார். சம அளவில் கலந்து தான் எழுதினேன். தொடக்கத்தில் ஏராளமான எதிர்ப்புகள். ஆனால் விடப்பிடியாக நகர்ந்து விட்டேன். அப்புறம் பின்னோட்டங்கள் எதுவும் இல்லாமல் பல பதிவுகள் வெளியே தெரியாமல் அப்படியே போய்க் கொண்டே இருந்தது. பிறகு ஒவ்வொரு சமயத்தில் எனக்கு இந்த பதிவுலகில் நண்பர்கள் அறிமுகமாக ஒவ்வொருவரும் பேசப்பேசத்தான் அந்த தொடர் எத்தனை பேர்களை சென்று அடைந்துள்ளது என்பதை உணர்ந்து கொண்டேன்.

    ஆனால் தமிழ்நாட்டில் சாதியைப் பற்றி எழுதினால் என்ன ஆகும் என்று நினைக்கீறீங்க. காரணம் நம்மவர்களிடம் எது இருக்கிறதோ இல்லையோ விடமுடியாத வறட்டுக் கௌரவம், அப்புறம் என் மதம் தான் உலகில் உசத்தி, அப்புறம் எப்படி கவிழ வைக்கலாம் என்ற ஆசை இது போன்ற பல நல்ல உள்ளங்களை தாண்டி வர வேண்டும். ஆனால் எதையும் நான் பொருட்படுத்துவதில்லை என்பதால் இன்று வரை இந்த பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் நீங்கள் அத்தனை பேர்களும் உரையாடி விதத்தில் நான் தெரிந்து கொண்டேது ஒன்றே ஒன்று தான்.

    அடக்கி வைத்தார்கள். வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். என்று சொல்லிக் கொண்டு இருக்கீங்களே தவிர இன்றுள்ள வாய்ப்புகள் வசதிகளை ஒவ்வொருவரும் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு இருக்காங்களா? இன்னும் எத்தனை காலத்திற்கு தான் நாம் மற்றவர்களை குறை சொல்லிக் கொண்டே இருக்கப் போகின்றோம்?
    லெமூரியன் சொன்னது உண்மை தான்? அலுவலகங்களில், உயர்கல்விகூடங்களில் இன்னும் ஆதிக்கம் இருப்பதும் உண்மை.

    ReplyDelete
  76. ராசப்பாரெண்டு பேரும் ஒரே சமயத்தில் யோசித்து ஒரே விசயத்தை எழுதி இருக்கிறோம்.

    ReplyDelete
  77. கோயில் என்பது பொதுச் சொத்து. அங்கு செல்வதற்கு இம்மண்ணின் மைந்தர்களுக்கு அனைத்து உரிமையும் உண்டு. அங்கு செல்லக்கூடாது என்று யாராவது கூறினால், உரிமையை நிலை நாட்ட போராடித்தான் ஆக வேண்டும். அதை விடுத்து நாங்கள் புறக்கணிக்கின்றோம் என்று கூறினால் சாதீய மேலாதிக்கத்திற்கு துணை போனவராகதான் நீங்களும் ஆகின்றீர்கள்.

    உங்கள் கருத்து உண்மையாக இருந்தாலும் ஆலயம் செல்லுவதை விட அவரவர் வாழ்வில் உழைப்பின் மூலம் அடைய வேண்டிய உன்னதங்கள் வேறு எதுவுமே இல்லையா? இன்னும் எத்தனை நாளைக்கு இது போன்ற விசயங்களை தொங்கிக் கொண்டே இருக்கப் போகின்றோம். ஒவ்வொரு தனி மனிதர்களுக்கு விழிப்புணர்ச்சி தேவையில்லையா? நம் எதிர்காலத்திற்கு நாம் என்ன மாதிரியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று யோசிக்க வேண்டாமா? இந்த ஆன்மீகத்தில் என்று காசு புழக்கம் அதிகமாகத் தொடங்கியதோஅப்போதே அதன் உள்ளே உள்ள வண்டவாளங்கள் நாறிப் போய் கேவலமாகி விட்டதே? இன்னமும் அறியாத பாமரர்கள் இதற்குள் போய் சிக்கி சிக்கி மேலும் மேலும் அவர்களின் வாழ்க்கை முழுக்க இப்படியே அறியாமையில் உழல வேண்டியது தானா? ஆனால் நான் சொல்ல விரும்பும் விசயங்களை சொல்லி வைத்தாற் போல் அத்தனை பேர்களும் தப்பாகவே புரிந்து கொண்டு விட்டீங்க.

    ReplyDelete
  78. //எல்லாவற்றையும் போட்டு உடை என்கிறீர்கள்//

    நீங்கள் கொடுத்த தவறான தகவல்களுக்கான எதிர்வினைதான் நாங்கள் ஆற்றியது. ஜாதியை பற்றி எழுதுங்கள் என்று நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை.

    சாதி பார்ப்பதில்லை என்று நீங்கள் கூறினீர்கள்; அப்படியல்ல என்று விளக்கியிருக்கின்றோம்.

    //இன்றுள்ள வாய்ப்புகள் வசதிகளை ஒவ்வொருவரும் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு இருக்காங்களா//

    வாய்ப்புகள் எப்படி மறுக்கப்படுகின்றன என்று விளக்கும் தருமி அவர்களின் பதிவிற்கான சுட்டியை அளித்திருந்தேன். நன்றாக பாருங்கள், மக்கள் தொகையில் 3.5 சதமே இருக்கும் பார்ப்பனர்கள், உயர்பதவிகளில் 70 சதத்திற்கும் மேல் இருக்கின்றனர். மற்ற மக்கள் மேலே வர விடாமல் இருப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்கின்றனர். இன்னும் போராடவேண்டிய நிலையில்தான் இருக்கின்றோம். இதுவே இப்படியிருக்க, இட ஒதுக்கீடு எதுக்கு என்ற கேள்விகள் எழுவதை பார்த்துக்கொண்டு பொறுமையாய் இருக்க முடியவில்லை.

    .

    ReplyDelete
  79. //ஆலயம் செல்லுவதை விட அவரவர் வாழ்வில் உழைப்பின் மூலம் அடைய வேண்டிய உன்னதங்கள் வேறு எதுவுமே இல்லையா?//

    வாழ்வில் பல விஷயங்கள் இருக்கின்றன. கோயில் சார்ந்த விஷயங்கள் மட்டுமே முதன்மையானது அல்ல. கோயில்கள் அனைத்தையும் அழித்துவிட்டால் யாரும் உரிமை கொண்டாடிக் கொண்டிருக்கப்போவதில்லை. ஆனால், இருக்கும் பொது விஷயங்களை ஒரு சாரார் தமக்கு மட்டுமே பாத்தியமானது என்று உரிமை கொண்டாடும்போது, பார்ப்பனீய வல்லாதிக்கம் எங்கெல்லாம் தலை விரித்தாடுகின்றதோ அங்கெல்லாம் எதிர்த்துதான் உரிமைகளை பெற முடியும். நமக்கு எதுக்கு இதெல்லாம், நம்ம வேலைய பாப்போம் என்று ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் இருந்தது இப்பொழுதுதான் மாறத்தொடங்கியுள்ளது. அவன் வரக்கூடாது என்று சொன்னால் நாம் செல்லாமல் இருப்போம்; நமது வேலையை மட்டும் பார்ப்போம் என்று கூறி அடுத்தடுத்த தலைமுறையையும் அதே அடிமை மனோபாவத்தோடு வளர்ப்பது நமக்கு அழகல்ல.

    ReplyDelete
  80. //இன்று நகரமயமாக்கல், புலம் பெயர்தல் என்ற இந்த இரண்டு காரணங்களால் சாதி மூலக்கூறுகளை எவரும் பொறுமையாக கண்டு கொள்ள வாய்ப்பும் இல்லை. அதற்கான வசதிகளும் மிகக் குறைவு. உனக்கு வேலை தெரியுமா? அனுபவம் இருக்கிறதா? என்று கேட்கும் இன்றைய பொருளாதார போட்டியுலகில் எவரும் நீ இந்த சாதியா? என்று கேட்பது குறைவு. இன்றைய சூழ்நிலையில் நம் அரசாங்கம் மட்டுமே இதை ஒரு ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. //
    மேம்போக்கான பார்வைக்கு அப்படித்தான் தோன்றும். ஆனால் இன்று இணைய தளங்களில் வளம் வரும் பதிவுகளில் நாட்டின் மிக முக்கிய ஊழல், இந்த தேசம் விற்கப்படுகிறது, தொழிலாளர் போராட்டங்கள், தனியார் மயம், தாராளமயம், உலகமயமாக்கலின் தீவிரங்களினால் உலகளாவிய பாதிப்புகள் போன்ற பதிவுகள் யாரேனும் எந்த தளத்திலேனும் எழுதப்பட்டால் ஒரு வாரத்தில் 13 பின்னூட்டங்கள் வருகிறது. ஆனால் இந்து, முஸ்லீம், கிறித்தவர், நாடார், தேவர், பார்ப்பனர்,என ஏதேனும் சாதிப்பெயர் தலைப்பாக கொண்டு ஒரு பதிவு வந்தா அதற்கு இரவிலிருந்து மறுநாள் காலைக்குள் 193 மறுமொழி வருகிறது. இதிலிருந்து சாதி எங்கும் போகவில்லை எவருள்ளும் நிறைந்துள்ளது என்பது தெளிவாகிறதோ என்கிற அய்யம் எனக்கு ? - தொடருங்கள்

    ReplyDelete
  81. //வடக்கு மாகாண முதலமைச்சரிடம் என்னுடைய வலைப்பூவை அறிமுகம் செய்து வைத்து .....//

    கிழக்கு மாகாண முதலமைச்சர் புலிகளில் இருந்து கருணாவுடன் பிரிந்து சென்றவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் வடக்கு மாகாண முதலமைச்சர் என்று நீங்கள் குறிப்பிடுவது யாரை?

    ReplyDelete
  82. baleno

    நண்பரே, அவர் கூறியதை ஒரு செய்தியாகத்தான் எடுத்துக் கொண்டேனே தவிர அது யார் எவர் என்று எதையும் கேட்கும் மனோநிலையில் அப்போதைய வேலைப்பளூவில் நான் இல்லை. மன்னிக்க. இதை இங்கே கும்மிக்கு குறிப்பிட காரணம் சில உழைப்புகள் காலம் கடந்து தான் நகரும் என்பதற்காக மட்டுமே.

    ReplyDelete
  83. //உலகிலேயே மிக கேவலமாக ஆட்சி நடத்தும் இந்த பெண்மணியைத்தவிர உங்களால் உதாரணம் காட்ட முடியுமா? இதற்கும்அய்யர்கள் தான் காரணமா?//

    Mayawati"s Brahmin card

    ReplyDelete
  84. நல்ல பல தகவல்கள் ஜோதிஜி..

    இங்கேயும் இருக்கு..

    நாடன் என்பவர்கள் கொஞ்சம் உயர்ந்தவர்களாக கருதப்பட்டுள்ளனர்..

    http://en.wikipedia.org/wiki/Nadar_%28caste%29

    the aristocratic Nadan women, their counterparts, had the rights to cover their bosom. Uneasy with their social status, a large number of Nadar climbers embraced Christianity and became upwardly mobile

    முழுதும் படித்துவிட்டு கலந்துகொள்கிறேன்.

    கற்கத்தான் நிறைய இருக்கு கருத்து சொல்வதைவிட.:)

    ReplyDelete
  85. ஜோதிஜி அண்ணா,

    இடுகையில் ஓரிரு தகவல்பிழைகள்.அவை நண்பர்களால் சுட்டிக்காட்டப்பட்டு உங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருப்பது மகிழ்ச்சி.

    அப்புறம் நகரத்தில் ஜாதி இல்லையா?? கிராமத்தில் வரக்காப்பி நகரத்தில் கேப்பச்சினோ.மேட்டர் ஒன்னுதான். தட்ஸ் ஆல் :)

    ReplyDelete
  86. ஜோதிஜி , நிதர்சனத்தில் சொல்லணும்னா, வெளிநாடுகளிலும் கூட பார்ப்பனர்கள் மற்றவர்களை இன்னும் தீண்டத்தகாதவர்களாக பார்க்கும் வழக்கம் குறையவில்லை.. அதிகமாக அதிகாரமாக , என்னமோ அவாளுக்கு மட்டும்தான் மூளை இருக்கா மாதிரி பண்ணுவதுண்டு..
    ஏன்?.

    மற்றவர்கள் அறிவில் முன்னேறுவதை கூட அவாளால் தாங்கிக்கொள்ளமுடியாதபடி அவர்கள் மூளை வளர்க்கப்பட்டிருக்கிறது...

    எல்லா பிராமணனும் அல்ல. சில பாப்பானை பார்த்தா பத்தடி தள்ளியே நிற்பது நலம்..( அத்தனை விஷம் ) நாம் பழகணும் இனி தீண்டாமையை...:)

    ReplyDelete
  87. அவாளுக்குன்னு முகபுத்தகம் உண்டு , மாட்ரிமோனியல் உண்டு.. அவா இன்னும் ஷேமமா வளர்த்துண்டுதானிருக்கா...

    http://www.tamilbrahmins.com/forum.php


    http://www.facebook.com/pages/Brahmin-Culture-and-Tradition/232922522616

    http://www.facebook.com/tamilbrahmins?v=info

    http://www.facebook.com/pages/Brahman-Samaj/219858372523

    http://www.facebook.com/pages/Brahmin/106296819401441

    ReplyDelete
  88. கல்வெட்டு , கும்மி, தெ.கா , குழலி , இன்னும் பலரின் கருத்துகள் சிறப்பு..


    //ஆலயம் செல்லுவதை விட அவரவர் வாழ்வில் உழைப்பின் மூலம் அடைய வேண்டிய உன்னதங்கள் வேறு எதுவுமே இல்லையா? இன்னும் எத்தனை நாளைக்கு இது போன்ற விசயங்களை தொங்கிக் கொண்டே இருக்கப் போகின்றோம்//

    இது எளிதாக கடந்திடமுடியாது .. தீண்டாமையின் அடிப்படி இங்கே ஆரம்பிக்குது..

    என்னதான் மகன் அமெரிக்கா சென்றாலும் அப்பாவுக்கு ஆலயத்தில் அனுமதி இல்லேன்னா?..

    ஆனா அமெரிக்காவுல பார்ப்பனரின் மகனும் உழைப்பாளியின் மகனும் ஒண்ணா உட்காரலாம் எல்லாம் செய்யலாம்.. ஏன்னா அங்க எடுபடாது..

    சம உரிமைக்காக அப்பா அமெரிக்கா செல்லணுமா?..

    சம்பத்யத்தைவிட சம உரிமை முக்கியம்.. அப்படி சம உரிமை தராத கோவில்கள், ஆலயம் , மசூதிகள் எதற்கு நாட்டில்?..

    ReplyDelete
  89. சுலைமான்போப்பாச்சாரிFebruary 16, 2011 at 11:50 AM

    ஜோதிஜி ஒரு கிருக்குத்துவம் தன்னுடைய வேலையை ஆரம்பித்துவிட்டது. உலகம் பூராவும் கம்பெனி கிளைகள் ஆரம்பித்து வற்றான் வற்றான் பூச்சாண்டி ரெயிலு வண்டியிலே என்று 2010 வருடங்களாய் படம் கான்பித்துக்கோண்டிருப்பதையெல்லாம் வசதியாய் மறந்து போய் வாந்தி எடுக்க..

    ஒன்று இது போன்று எழுதும்போது மாடரேஷன் வையுங்கள் பொது புத்தி குறித்தானது என்று தெளிவாக அறிவியுங்கள் (அதாவது நீ ஒரு மதம் சார்ந்து வந்தால் உனக்கும் ஆப்பு). இல்லையென்றால் உங்களுக்கே பூணூலோ/சிலுவையோ மாட்டிவிடுவார்கள்.

    போக மாற்றம் விரும்புவர்களின் கருத்து உங்களுடையது. மாற்றம் விரும்பும் யாருமே ஜாதி, மதத்தை பெரியதாக எடுத்துக்கொள்வதில்லை. பழிவாங்கும் எண்ணம் தோய்ந்த கமெண்டுகளால் லாபமில்லை. அன்று பார்ப்பனர்கள் செய்தார்கள் எனவே நாங்களும் அதையே திருப்பிச் செய்வோமென்றால் அது சரியான பாதையா? தன் மேல் விழுந்த அணுகுண்டை பழி வாங்கப் பயன்படுத்தாத ஆக்க சக்தியாக்கியது ஜப்பான்.

    யூதர்கள் அனுபவிக்காத கொடுமையை இங்கே எந்த மனித இனம் அனுபவித்திருக்கிறது. சிலுவைப்போர்கள் மூலம் இவாள்கள் கொன்று குவித்தவைகள் எத்தனை? அந்த லிங்கிற்கெல்லாம் பாவ மன்னிப்பு வழங்கப் பட்டுவிட்டதா?

    பிறகு வருகிறேன்..

    #ஆமென்#

    ReplyDelete
  90. அன்று பார்ப்பனர்கள் செய்தார்கள் எனவே நாங்களும் அதையே திருப்பிச் செய்வோமென்றால் //
    :)))

    அன்பின் சுலைமான் போப்பாச்சாரி.. ( சிரிக்க வைத்தீர் )

    பழிவாங்க நினைத்தோமானால் தாங்கமாட்டார்கள்.. மேலும் இப்படி பேசி நியாயம் கேட்டுக்கொண்டிருக்கமாட்டார்கள்.. :)

    தீண்டாமைக்கு துணை போகிறவனை /செய்கிறவனை விஷம் என்கிறேன்..

    விஷத்தை கொண்டாட சொல்றீர்களா போப்பாச்சாரி.?..

    இந்த நேர்மையான கமெண்டுகளையே உங்களால் தாங்க முடியவில்லை.. மட்டுறுத்தணுமாம்.. மாற்றம் எங்கேயிருந்தய்யா வரும்?.. இப்படி முட்டுக்கட்டை போட்டீரானால்.. ?..

    இங்க யாரும் கிறுஸ்தவ மத வெறி பிடித்து அலையவில்லை.. உம்மை மதம் மாற்றவும் முயற்சிக்கவில்லை.. பயப்படாதேயும்.. சாமீ..


    கிறுஸ்தவ ஆலயத்துக்குள் செல்ல தீண்டாமை ஒரு காரணம் என்றால் அதையும்தான் இடிக்கணும் சாமீ..




    பாவமா இருக்கு.. :)

    ReplyDelete
  91. மாற்றம் விரும்பும் யாருமே ஜாதி, மதத்தை பெரியதாக எடுத்துக்கொள்வதில்லை.//

    இங்கு சாதீ யை தூக்கிக்கொண்டு வந்தவர் யார்?..

    அடுத்து பார்ப்பனீயத்தை எதிர்ப்பவர்கள் குறிப்பிட்ட ஒரு சாதியினர் மட்டுமா?.

    என்னிடம் பூணுலும் இல்லை சிலுவையும் இல்லை.. யாருக்கடா மாட்டலாம்னு அலைய..

    என்னுடைய மததிலுள்ளவர்கள் 100% சுத்தமானவர்கள் என நான் சான்றிதழ் வழங்கவேண்டிய அவசியமேயில்லை.. அயோக்கியன் எல்லா மதத்துக்குள்ளும் புகுந்திடுவான்..

    மற்றொன்று , மத்த மதத்திலிருந்தே கிறுஸ்தவ மதத்துக்கு பலர் மாற காரணம் என்னென்ன னு போப்பாச்சாரியாருக்கு தெரியாதா?.. நான் மெனக்கிடவேண்டிய / மதம்பரப்ப அவசியமேயில்லை.. தீண்டாமை ஒன்று போதும் மதம்மாற்ற..

    என் பேரை பார்த்ததுமே மதச்சாயம் பூச கூட ஆட்கள் தயாரா இருக்காங்க .. இதிலிருந்தே உங்க பதிவின் நிஜத்தை புரியுங்க ஜோதிஜி... :)))))

    தான் ஆடாட்டியும் தன் மதம், சாதீ ஆடும்போல..:)

    ReplyDelete
  92. என்னதான் மகன் அமெரிக்கா சென்றாலும் அப்பாவுக்கு ஆலயத்தில் அனுமதி இல்லேன்னா?..

    மாற்றம் விரும்புவர்களின் கருத்து உங்களுடையது. மாற்றம் விரும்பும் யாருமே ஜாதி, மதத்தை பெரியதாக எடுத்துக்கொள்வதில்லை.

    யூதர்கள் அனுபவிக்காத கொடுமையை இங்கே எந்த மனித இனம் அனுபவித்திருக்கிறது

    அன்று பார்ப்பனர்கள் செய்தார்கள் எனவே நாங்களும் அதையே திருப்பிச் செய்வோமென்றால் அது சரியான பாதையா? தன் மேல் விழுந்த அணுகுண்டை பழி வாங்கப் பயன்படுத்தாத ஆக்க சக்தியாக்கியது ஜப்பான்.

    நிறைய யோசிக்க வைத்த வரிகள். இருவருக்கும் நன்றி.

    ReplyDelete
  93. //5. இங்கு உரையாடிய ஒவ்வொருவரும் 3000 ஆண்டுகளாக அடிமைப்பட்டு கிடந்தவர்கள். அவர்கள் மெதுவாகத்தான் முன்னேறுவார்கள் என்று தான் சுற்றிச் சுற்றி வருகின்றீர்களே தவிர கடந்த காலங்களில் அரசாங்கம் உருவாக்கிய அத்தனை வாய்ப்புகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு போய் சேர்ந்து இருக்கிறதா? அல்லது கிடைத்தும் பயன்படுத்தி முன்னேறி இருக்கிறீர்களா என்பதை ஏன் யாரும் பேசவே மாட்டேன் என்கிறீர்கள்?//

    இன்னும் முழுவதுமாக படிக்கவில்லை.. இந்த இடத்தில் உடன்படுகிறேன் ஜோதிஜி.. தொழில்கல்விகளில் நுழைபவர் பெரும்பாலானோர் இரண்டாம் தலைமுறையாக இட ஒதுக்கீடு பெற்றவர்களே.. கிராமத்தில் சேரியில் குடிசை போட்டு வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் இன்னும் அப்படியே தான் இருக்கின்றனர்.. க்ரீமி லேயரை இட ஒதுக்கீட்டில் இருந்து நீக்கா விட்டால் இவர்கள் மேலே வருவது கடினம் - இன்னும் எத்தனை தலைமுறை போனாலும்.. பயன்படுத்தி முன்னேறாமல் இருப்பவர்கள் யாரையும் கண்டதில்லை.. ஆனால் கிடைக்காமலே இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதே என் கருத்து..

    ReplyDelete
  94. இன்னொன்றையும் சொல்லிப் போறேன் ஜோதிஜி... திருமணம் பற்றி யாரோ சொல்லியிருந்தாங்க.. ஆதிக்க சாதிக்காரன் ஒருத்தன் ஒடுக்கப் பட்டவன் வீட்டில் மணம் முடிக்க விரும்புவதில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவு உண்மை, ஒரு பணக்கார ஆதிக்க சாதிக்காரன் அதே சாதியைச் சேர்ந்த ஏழை வீட்டில் மணம் முடிக்க விரும்புவதில்லை என்பதும் மற்றும், ஒரு படித்த வசதியான ஒடுக்கப்பட்ட சாதிக்காரன் அதே சாதியைச் சேர்ந்த ஏழை வீட்டில் மணம் முடிக்க விரும்புவதில்லை என்பதும்.. இதையெல்லாம் கள ஆய்வு செய்து சொல்லவில்லை.. நட்புகள் தந்த நேரடி அனுபவங்கள்.. வங்கி வேலையில் இருக்கும் அப்பா, எஞ்சினியரிங் படித்த தன் மகளுக்கு, கிராமத்தில் பயிர் நடும் ஒன்று விட்ட அக்கா மகனுக்கோ இல்லை கல் உடைக்கும் இன்னொருவனுக்கோ திருமணம் செய்து தருவதில்லை.. ஓரளவுக்காவது தன்னுடன் சம அந்தஸ்தில் உள்ள வேலையில் உள்ள ஒருவனுக்கே தருவார்.. ஏழை எளிய ஒடுக்கப்பட்டவர்களின் பொருளாதார நிலை உயராமல் அவர்களது சமூக நிலை உயரப் போவதில்லை என்பது மட்டும் உறுதி..

    ReplyDelete
  95. நீங்கள் இந்த முரட்டு பெந்தகொஸ்தேக்களைப்பற்றி எழுதிவிடவேண்டுமென்பது யாம் கொண்ட வேட்கையாகும்,அதை எவ்வளவு சீக்கிரம் நிறைவேற்றுவீர் என்று உமக்கு தெரியுமோ?அது எமக்குத்தெரியாது,ஆகமொத்தம் இது மிகச்சிறந்த பதிவுதான் என்பேன்.உங்களை நேரில் சந்தித்து சிலமணித்தியாலங்கள் பேசி மகிழ்ந்திருக்க ஆசையும் உண்டு,நீங்கள் மது அருந்தும் பட்சத்தில் உங்களைகூட்டிச் சென்று 4ஷாட் டக்கிலாவும் வாங்கித்தர ஆசைப்படும்,ஒரு சித்திரம் இது,அருமையான அந்த விரல்களுக்கு முத்தம் வைக்க ஆசை.

    ReplyDelete
  96. //நமது தாத்தாக்கள் காலத்தில், நம் மாநிலத்தின் ஒரு பகுதியில், நம் இனத்தைச் சார்ந்த ஒரு குறிப்பிட்ட ஜாதி பெண்கள் மட்டும் மேலாடையின்றி இருக்க வேண்டும் என்று அரங்கேறிய கொடூரமும், அதனை எதிர்த்து அவர்கள் போராடியதும் பதிவு செய்யப்பட்டால் பாதை மாறிவிடும் என்பது சற்றும் ஏற்புடையதாக இல்லை.
    //

    @ கும்மி தோழர் அவர்களுக்கு, குமரி மாவட்டம் அந்தக் காலக் கட்டத்தில் நம் மாநிலத்தில் ஒரு பகுதியாக இருக்கவில்லை. சொல்லப் போனால் பிரித்தானிய இந்தியாவிலேயே இருக்கவில்லை. அது திருவாங்கூர் நாட்டில் இருந்தது. திருவாங்கூர் நாடு தனியாக ஆளப்பட்ட நாடு. அங்குள்ள நாயர்களும், நம்பூதிதிரிகளும் சாதி வெறியால் ஆட்டம் போட்டக் காலம். திருவாங்கூரை நேரடிடையாக பிரித்தானியரால் கண்ட்ரோல் செய்ய முடியவில்லை. இருந்தாலும் இராஜாங்க அழுத்தங்களை பயன்படுத்தி வந்தனர். இப்படியான ஒரு கொடிய காலக் கட்டத்தில் மலையாளிகள் முலைகளை மறைத்து வந்தனர் ஆனால் தமிழச்சிகளுக்கு அந்த உரிமை மறுக்கப்பட்டது. கிருத்துவ சமயமே அதனை பெற்றுக் கொடுத்தது. நன்கு கவனிக்கப்பட வேண்டியது. அது பிரித்தானிய ஆளுகைக்குள் வராத நாடு. அங்கு உரிமையை மீட்டவர்கள் கிருத்துவ நாடார் தமிழர்களே !!! பிரித்தானிய ஆட்சி இருந்திருந்தால் திருவாங்கூரில் மார்புச் சேலைக்கு எப்போதே உத்தரவிட்டு இருப்பார்கள் வெள்ளைத் துரைகள்.

    இன்றளவும் மலையாளிகள் நாடார்கள் மீது காழ்ப்புணார்ச்சி கொண்டிருப்பதை அவர்களின் திரைப்படங்கள், இலக்கியங்களை நன்கு கவனித்தால் அறிய முடியும். நாடார்களை வில்லங்களாகவே காட்டுவார்கள்.

    நாடார் இனம் இல்லாமல் இருந்தால் விருது நகர் வரை மலையாளமாகி இருக்கும்......... தனமானத்தை மட்டுமில்லை தமிழையும் காத்தவர்கள் அவர்கள்..........

    ReplyDelete
  97. நீங்கள் மது அருந்தும் பட்சத்தில் உங்களைகூட்டிச் சென்று 4ஷாட் டக்கிலாவும் வாங்கித்தர ஆசைப்படும்,ஒரு சித்திரம் இது,அருமையான அந்த விரல்களுக்கு முத்தம் வைக்க ஆசை.

    நண்பா உங்க நக்கலுக்கு ஒரு அளவே இல்லையா?

    ஆதிக்க சாதிக்காரன் ஒருத்தன் ஒடுக்கப் பட்டவன் வீட்டில் மணம் முடிக்க விரும்புவதில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவு உண்மை, ஒரு பணக்கார ஆதிக்க சாதிக்காரன் அதே சாதியைச் சேர்ந்த ஏழை வீட்டில் மணம் முடிக்க விரும்புவதில்லை என்பதும் மற்றும், ஒரு படித்த வசதியான ஒடுக்கப்பட்ட சாதிக்காரன் அதே சாதியைச் சேர்ந்த ஏழை வீட்டில் மணம் முடிக்க விரும்புவதில்லை என்பதும்.. இதையெல்லாம் கள ஆய்வு செய்து சொல்லவில்லை.

    தோழி தொடர்ந்து படிக்கும் போது புரிந்து கொள்வீர்கள். வேறு வழியே இல்லை. எத்தனை பதிவுகள் என்றாலும் எல்லாவற்றையும் போட்டு உடைக்க வேண்டியது தான் போல

    ReplyDelete
  98. திருவாங்கூரை நேரடிடையாக பிரித்தானியரால் கண்ட்ரோல் செய்ய முடியவில்லை. இருந்தாலும் இராஜாங்க அழுத்தங்களை பயன்படுத்தி வந்தனர். இப்படியான ஒரு கொடிய காலக் கட்டத்தில் மலையாளிகள் முலைகளை மறைத்து வந்தனர் ஆனால் தமிழச்சிகளுக்கு அந்த உரிமை மறுக்கப்பட்டது. கிருத்துவ சமயமே அதனை பெற்றுக் கொடுத்தது. நன்கு கவனிக்கப்பட வேண்டியது. அது பிரித்தானிய ஆளுகைக்குள் வராத நாடு. அங்கு உரிமையை மீட்டவர்கள் கிருத்துவ நாடார் தமிழர்களே !!! பிரித்தானிய ஆட்சி இருந்திருந்தால் திருவாங்கூரில் மார்புச் சேலைக்கு எப்போதே உத்தரவிட்டு இருப்பார்கள் வெள்ளைத் துரைகள்.

    மிகச் சிறந்த விமர்சனம். நான் சொல்லாமல் விட்ட விசயங்களை மிக எளிதாக கொண்டு வந்துட்டீங்க. நன்றி செல்வன். ஆங்கிலேயர்களைப் பொறுத்தவரையில் சமஸ்தானம் ஒரு அல்லக்கையாக இருந்தது. இதன் தொடர்ச்சி நீட்சி வளர்ச்சி தான் இது போன்ற கொடூரங்கள்.

    ReplyDelete
  99. ஏழை எளிய ஒடுக்கப்பட்டவர்களின் பொருளாதார நிலை உயராமல் அவர்களது சமூக நிலை உயரப் போவதில்லை என்பது மட்டும் உறுதி..

    இந்த விமர்சனத்தை பார்த்த பிறகு சற்று கூடுதல் விபரங்களுடன் சில பதிவுகளை எழுதி உள்ளேன்.

    ReplyDelete
  100. நான் சொல்லியிருப்பது எனது அனுபவம் மட்டுமே.. உங்களுக்கு தவறாகத் தோன்றினால் இங்கேயே சொல்லுங்கள்.. மொத்த தமிழ்நாட்டிலும் எப்படி என்று எனக்குத் தெரியாது.. வேறு பிரதேசங்களில் சாதிப் பாகுபாடுகள் வேறு மாதிரி இருக்கலாம்..

    ReplyDelete
  101. நான் சொல்ல வந்தது - பொருளாதார நிலை உயரும் போது அவர்கள் ஆதிக்கச் சாதியினரைச் சார்ந்து வாழத் தேவையில்லை.. சாதி வேறுபாடு காட்டுபவர்களை புறந்தள்ளிவிட்டு ஒதுக்கிவிட்டு நகர்ப்புறத்துக்கு வந்து அவர்களை விடவும் நன்றாக வாழ இயலும்.. சென்னையில் இன்று நாடார்களைப் போன்று.. பாகுபாடு காட்டாத மக்களுடன் இணைந்து சுதந்திரமாகச் செயல்பட முடியும்..

    ஆதிக்கச் சாதியினர் மனதில் உள்ள பெருமை அடங்க இன்னும் ஒன்றிரண்டு தலைமுறைகள் கடக்க வேண்டும்.. ஆழமாக அந்த எண்ணம் வேரூன்றிப் போயிருக்கையில், இன்று வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் மனதில் இருந்து அதை நீக்குவது கடினம் (குறிப்பாக வயதானவர்கள்).. மாறாக, ஒடுக்கப்பட்டு இன்னும் ஏழையாக இருப்பவர்களை எல்லாம் மேலே கொண்டு வந்தால், காதல் கலப்பினத் திருமணங்கள் நடந்தால், கண்டிப்பாக வேற்றுமை குறையும்.. (சாதியைக் காட்டி காதலைப் பிரிப்பதை குற்றமாகவும் அறிவிக்க வேண்டும்).. தமக்கு நிகராக அவர்கள் கல்வியும் திறமையும் கொண்டு இருக்கிறார்கள் என்பதைக் காணும் போது இவர்களும் வழிக்கு வருவார்கள்..

    ReplyDelete
  102. எனக்கு என்னமோ காதல் திருமணங்கள் இந்த சாதியை ஒழிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இது என் தனிப்பட்ட கருத்து. இதனால் குழப்பங்கள் தான் உருவாகின்றது. பொருளாதார ரீதியாக தன்னை உயர்த்திக் கொள்ள முடியாத ஆண்கள்

    காதல் செய்த காரணத்தால் என் குடும்பம் எனக்கு இப்போது உதவமாட்டேன் என்கிறது.

    என்பதில் தொடங்கிய தினந்தோறும் சண்டை சச்சரவுகளை ஏராளமாக பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றேன்.

    மொத்தத்தில் இது போன்ற அடிமைத்தனங்களை உடைத்து வெளியே வர ஆண் பெண் இருவருக்குமே ஆயிரம் மடங்கு புரிந்துணர்வு தைரியம் விடாமுயற்சி இதற்கெல்லாம் மேல் தம் உழைப்பால் மேலேறி வரமுடியும் என்ற நம்பிக்கை ஆழ்மனதில் இருக்க வேண்டும்.

    அன்றாட நிகழ்வுகளை எதார்த்தங்களை எதிர்கொள்ள தெரியாமல் இருவருமே ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்ளுதல் தான் இங்கு அதிகம்.

    என்னுடைய இது நாள் வரைக்கும் உள்ள வயது அனுபவத்தில் மூன்று குடும்பங்கள் மதம் மாறி ஜாதி மாறி திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாய் பணம் இல்லாவிட்டாலும் கூட வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

    உங்களைப் போல வெளிநாடுகளில் வாழ்ந்த அன்றாட தாக்கம் வெளிமனிதர்கள் தரும் மன உளைச்சல் குறைவாக இருக்கக்கூடும். திறமை இருந்தால், உழைப்பு இருந்தால் வெளிநாடுகளில் தனி மனிதன் வாழ்வதற்கான சாத்யகூறுகள் அதிகம். இந்தியாவில்?

    ReplyDelete
  103. JATHI INTHUKKALAL AVAMAANAPPATTA 10,0000 MELAANA NAADAARKAL ,SIVAKASI ARUKIL ULLA SACHATCHIYAAPURAM ENDRA IDATHTHIL KIRUSTHUVAR KALAAGA MATHAM MAARINAARGAL

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.