முந்தைய பகுதிகளை தொடர
இரண்டு
மூன்று
நான்கு
ரயிலில வந்து கொண்டுருந்த போது அம்மாவிடம் பலவிதமாக கேட்டுப் பார்த்தேன். சேலத்திலிருந்து கோயமுத்தூர் செல்லும் ரயிலில் அமர்ந்திருக்கிறோமே தவிர எங்கு செல்கிறோம்? என்ற எண்ணமில்லாமல் தான் இருந்தோம். ஆனால் அம்மாவின் முகத்தில் எந்த வருத்தமும் இருப்பதாக தெரியவில்லை. நான் ஜன்னலோரத்தில் அமர்ந்திருந்தேன். ரயிலில் உள்ளே கூட்ட நெரிசல் இடிபாடுகள் முதல் ஒவ்வொருவரும் தங்களின் இடம் பிடிக்க அடித்துக் கொள்வது வரைக்கும் பல காட்சிகள் எங்கள் எதிரே நடந்து கொண்டுருந்தது.
ஒவ்வொருவரும் தங்களுக்கான இருப்புகளை தக்கவைத்துக் கொள்ள போராடிக் கொண்டுருப்பவர்களாக எனக்குத் தெரிந்தார்கள். ஆனால் எங்களின் நிலை சற்று வித்யாசமாக இருந்தது. இருப்பைத் தேடியா? இல்லை விடுதலையை நோக்கியா? என்று புரியாமல் அவர்களை கவனித்துக் கொண்டுருந்தேன். நான் அம்மா கூட அதிகமாக வெளியே எங்குமே போனதில்லை. அம்மா வருடத்தில் ஒரு நாள் வெளியே சென்றுருப்பாரா என்பதே ஆச்சரியம் தான். காரணம் அவருக்கு அதற்கான வாய்ப்புகளும் குறைவு. ஊருக்குள் இருந்தாலும் எங்கள் வீடு ஏற்க்குறைய கச்சத்தீவு போலவேயிருந்தது. எனக்கு விபரம் தெரிந்து வெளியுலகத்தை முழுமையாக பார்த்தது அன்று தான்..
பள்ளியை விட்டால் வீடு என்று நான் வாழ்ந்துகொண்டுருந்த வாழ்க்கையில் எங்களின் எந்த உறவினர்களும் வீட்டுக்கு வர மாட்டார்கள். அம்மாவின் உறவினர்களைக்கூட அப்பா வரவிடமாட்டார். மீறி வந்தாலும் அடுத்த முறை அவர்கள் வராத அளவிற்கு என்ன செய்யவேண்டுமோ அதை தெளிவாக செய்து விடுவார். அம்மாவும் அது குறித்து அலட்டிக் கொள்வதில்லை. நான் பள்ளியில் எவரிடமும் மனம் விட்டுப் பேசுவதில்லை. காரணம் என்னுடன் எவரும் பழகத் தயாராய் இல்லை என்பது தான் உண்மை. என்னுடைய உடைகளும் சுவராஸ்யமற்ற பேச்சுகளுக்கும் எவரையும் கவரவில்லை.
என்னுடன் பழகிக் கொண்டுருந்த தோழிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு கனவுலகம் இருந்தது. அதில் ராணியாக மகாராணியாக தங்களை உருவகப்படுத்திக் கொண்டு உள்ளும் புறமும் அதுவாகவே தங்களை மாற்றிக் கொண்டு வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். நிஜத்திற்கும் அவர்களின் நடவடிக்கைகளும் முற்றிலும் எதிர்மாறாய் இருந்தது. அது குறித்து எவரும் கவலைப்படவில்லை. பழகிய ஒவ்வொருவருமே தங்களின் எதிர்கால வாழ்க்கை பிரகாசமாக இருக்கப் போகின்றது என்பதாகத்தான் நம்பி வாழ்ந்து கொண்டுருந்தார்கள்.
அது போன்ற எண்ணங்கள் எப்போதும் வருவதேயில்லை. அதற்கு காரணம் என் அம்மா.
"அன்றைய பொழுதின் கடமைகளை மட்டும் செய்து விடு. அதற்கான பலன்கள் வரும் நேரத்தில் வந்தே தீரும்" என்று அடிக்கடி சொல்லுவார். அதுவே எனக்கு பல விதங்களிலும் உதவியாய் இருந்தது. வகுப்பறையே கோவிலாய், நடக்கும் தேர்வுகளை திருவிழாக்கள் போல் நினைத்துக் கொண்டு வெறித்தனமாய் படித்த காரணத்தால் என்னுடைய முதல் மதிப்பெண்களுக்கு அருகே வேறு எவரும் வரமுடியவில்லை. என்னுடைய ரேங்க் அட்டையில் அம்மா தான் கையெழுத்து போடுவார். அப்பா எகத்தாளமாக சிரித்துக் கொண்டே போய்விடுவார்.
ஆனால் இப்போது எனக்கு அம்மா மேல் சற்று கோபமாக இருந்தது. கையில் பணமேதுமில்லை. ஆனால் முகம் முழுக்க மகிழ்ச்சியாய் என்னருகே அமர்ந்திருந்தார். அவர் கண்கள் மட்டும் ஜன்னல் வழியே தெரிந்த ஆகாயத்தை சந்தோஷமாக பார்த்துக் கொண்டுருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. மறுபடியும் கேட்டேன்.
"அம்மா இப்ப நாம் எங்கே போகிறோம்" சிரித்துக் கொண்டே சொன்னார்.
"எவ்வளவு தூரம் இந்த ரயில் போகுதோ அது வரைக்கும் போவோம்" என்றார்.
"டிக்கட் ஏதும் வாங்கலையே?" என்றேன்
"எவரும் கேட்காத வரைக்கும் சந்தோஷம். கேட்கும் போது அப்போது பார்த்துக் கொள்ளலாம்" என்றார்.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
ஆழ்கடல் பேரமைதி போலவே வீட்டில் இருந்த அம்மாவின் வாயிலிருந்து இப்போது மெலிதாய் பழைய திரைப்பட பாடலின் ஹம்மிங் வந்து கொண்டுருந்தது. இவர் நம் அம்மா தானே? என்று நான் அவரை கிள்ளிப் பார்த்தேன். சிரித்துக் கொண்டே என் பக்கம் பார்த்தார். பொறுக்க முடியாமல் மறுபடியும் அதே கேள்வியை கேட்டேன்
"என்னம்மா இன்றைக்கு இவ்வளவு சந்தோஷமாயிருக்கீங்க. எத்தனையோ முறை நானே உங்களை திட்டியிருக்கேன். எங்கேயாவது போயிடலாங்ற மாதிரி கூப்பிட்டுருக்கேன். அப்ப ஆயிரெத்தெட்டு தத்துவங்கள் சொல்லி என்னை மாற்றி விடுவீங்க. ஆனால் இப்ப என்ன நடந்ததுன்னு கூட சொல்லாம எங்கே போறோம்ன்னு கூட எண்ணமில்லாமல் பாட்டு பாடிக்கிட்டு இருக்கீங்க?" என்றேன்.
சப்தமாக சிரித்தார்.
அருகிலிருந்த கூட்டத்திற்கு திடீரென்று என் அம்மா சிரித்த விதம் ஒரு மாதிரியாக இருந்துருக்க வேண்டும். அத்தனை பேர்களும் எங்களை வினோதமாக பார்த்தார்கள். எனக்கு சற்று கூச்சமாகவும் எரிச்சலாகவும் இருந்தது. ஆனால் அம்மாவின் சந்தோஷத்தைப் பார்த்து எனக்குள்ளும் அந்த அலைபரவிக் கொண்டுருந்தது. நீண்ட நாளைக்குப் பிறகு நான் பார்த்த. அவரின் முக மலர்ச்சி எனக்குள் ரொம்பவே சந்தோஷத்தை உருவாக்கியது..
என் தோளில் கை போட்டுக் கொண்டு மற்றொரு கையால் என் தலையை ஆதரவாய் தடவினார். அம்மாவின் பக்கவாட்டில் தலையை சாய்த்துக் கொண்டேன். அவர் உடம்பின் உஷ்ணமும், துடித்த இதய ஒலிகளும் எனக்கு வேறொரு அனுபவத்தை தந்தது.
என் தோளில் கை போட்டுக் கொண்டு மற்றொரு கையால் என் தலையை ஆதரவாய் தடவினார். அம்மாவின் பக்கவாட்டில் தலையை சாய்த்துக் கொண்டேன். அவர் உடம்பின் உஷ்ணமும், துடித்த இதய ஒலிகளும் எனக்கு வேறொரு அனுபவத்தை தந்தது.
அழுதுவிடுவோனோ என்று பயம் வந்தது. அம்மா அடிக்கடி சொல்லும் "பெண்கள் எதற்காகவும் எப்போதும் அழக்கூடாது." என்று வாசகம் என் மனதில் வந்து போனது. கோழிக்குஞ்சு போல அவருடன் ஒட்டிக் கொண்டேன். என் காதுக்குள் மெதுவாக கிசுகிசுத்தார்.
"நாம் கப்பல்ல பயணம் செய்துக்கிட்டுருக்கேன்னும் வச்சுக்க. நடுக்கடலில் திடீர்ன்னு கப்பல் மூழ்கப்போகுதுன்னு நம்மிடம் சொல்றாங்க. நாம் என்ன செய்வோம்? ஐய்யோ இந்த கடல் ஆழம்ங்றதும் உள்ளே சுறா திமிங்கலங்கமெல்லாம் இருக்குறதுங்றதும் நமக்கு மறந்து போயிடும். எப்படியும் நாம் உயிர் பிழைத்தே ஆக வேண்டுங்ற மனநிலைக்கு வெறியோட தண்ணீர்ல குதித்து விடுவோம்."
"அப்புறம் தான் நமக்குத் தெரியாத நீச்சல் அப்ப தெரிந்த மாதிரி நமக்கு கைகொடுக்கும். தத்தக்காபித்தக்கான்னு கைகால அடிச்சு நீந்தி ஏதேவொரு மரக்கட்டை கிடைக்குதான்னு பார்க்க ஆரம்பிப்போம். சில சமயம் நமக்கு அதிர்ஷ்டம் உதவும். பல சமயம் நம்ம உழைப்பும் தைரியமும் நம்மை கரை சேர வைக்கும். நாமும் இப்ப கரையைத் தேடித்தான் போய்க்கிட்டுருக்கோம். உனக்கு விருப்பம்ன்னா என்னோட வா? இல்லைன்னா நீ மறுபடியும் வீட்டுக்கே போயிடு" என்றார்.
பேசி முடிப்பதற்கு முன்பே கோபத்தில் அவரின் இடுப்பில் மெல்ல கிள்ளிவைத்தேன்.
பேசி முடிப்பதற்கு முன்பே கோபத்தில் அவரின் இடுப்பில் மெல்ல கிள்ளிவைத்தேன்.
என்ன? என்பது போல என்னைப் பார்த்தார்
பதில் பேசாமல் வேறுபக்கம் முகத்தை திருப்பிக்கொண்டுருந்த என்னை ஆதரவாய் அவர் முகத்தின் பக்கம் திருப்பி பேசினார்.
"என்ன நடந்ததுன்னு மனதைப் போட்டு குழப்பிக்காதே? இனி என்ன நடக்கனும்ன்னு மட்டும் யோசிப்போம். சில விசயங்களை இப்போதைக்கு நீ தெரிஞ்சுக்காம இருக்குறது நல்லது தான் மகளே. இதுவரைக்கும் நீ பார்த்த அசிங்கமான உலகத்தை விட இனிமேல் நீ பார்க்கப்போற உலகத்தில் அசிங்கத்தை விட அக்கிரமம் தான் அதிகமாகயிருக்கும். நீ இதுவரைக்கும் உனக்குள்ளே வளர்த்துக்கிட்டுருக்க அத்தனை கட்டுப்பாடுகளும் உன்னை விட்டு உடைத்து வெளியே வரப் பார்க்கும்."
"உன் வயசுக்கேத்த ஹர்மோன்களும் அடம் செய்துக்கிட்டே தான் இருக்கும். புத்திக்கும் மனதுக்கும் நடக்கிற சண்டையைத் தாண்டி வர்ற பெண்களும் ஆண்களும் ரொம்ப குறைவு. நீ தான் அடிக்கடி வந்து சொல்லுவீயே.? பள்ளிக்கூடத்துல உன்னோட தோழிகள் செக்ஸ் புக் வைத்துக் கொண்டு படிக்கிறார்கள்ன்னு சொல்லியிருக்கீறீயே? உனக்கு மட்டும் ஏன் ஆர்வம் இல்லாம அவங்கள விட்டு ஒதுங்கிப் போனாய்?" என்று கேட்டு விட்டு என்னைப் பார்த்தார்.
அவர் சொன்ன போது தான் அந்த சம்பவம் என் நினைவிற்கு வந்தது. பள்ளியில் என்னருகேயிருந்த தோழியின் புத்தகத்திற்குள் ஒரு பெரிய ஆங்கில புத்தகம் இருக்க ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டுருக்க இவள் எதை இத்தனை ஆர்வமாக படிக்கிறாள்? என்று எட்டிப்பார்த்த போது என் நெஞ்சு திடும்திடுமென்று அடித்தது. முழுமையான நிர்வாண பாடங்கள், நான் பார்த்தது கூட தெரியாம்ல் அவள் அந்த படங்களை பாடங்கள் போல பார்த்துக் கொண்டுருந்தாள்.
என்னால் அன்று முழுவதும் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. முதன் முதலாக பார்த்த பாதிப்பை கடந்து வர இரண்டு நாட்கள் ஆனது. வீட்டுக்கு பின்புறம் இருக்கும் திறந்தவெளி குளியறையில் பக்கத்து வீட்டு பையன் திடீரென்று எட்டிப் பார்த்த போது திட்டத்தெரியாமல் மயங்கி விழுந்து கிடந்தேன். அப்போதும் அம்மா கோப்ப்படாமல் சிரித்துக் கொண்டே என்னை மாற்றினார். மறுநாள் அந்த பையன் என் எதிரே நக்கலாக சிரித்துக் கொண்டே சென்ற போது என் கண்களில் வந்த நீரைப் பார்த்து அம்மா சொன்னது வேறு விதமாக இருந்தது.
"காட்டுக்குள் சிங்கம் புலியோடு வாழ்வது தான் மானும் மற்ற மிருகங்களும். ஒவ்வொரு மானும் உயிர்பயத்தில் வாழ்ந்துகொண்டேயிருந்தால் எப்படி அது பிழைத்து வாழும். எல்லோரையும் மனிதர்களாக பார்க்காதே. நரி, நாய், பன்றிகளை விட கேவலமான மனிதர்கள்தான் இங்கு அதிகம். குளியலைறையில் மேலே தென்னங்ககீற்று வைத்து மறைத்து விட்டேன். இப்ப இதை பெரிதாக நாம் மாற்றினால் உன் அப்பாவே நமக்கு எதிராக இருப்பார். புரிந்து கொள். இதைத்தான் உனக்கு அடிக்கடி சொல்லிக் கொண்டேயிருக்கின்றேன். நம்மைப் போன்றவர்கள் ஒவ்வொரு நிமிடமும் மிக கவனமாக இருக்க வேண்டுமென்று" என்றார்
அம்மா பேசுவது பலமுறை எனக்கு புரிந்ததில்லை. எல்லாவற்றையும் பூடாகமாகவே சொல்லிவிட்டு சென்று விடுவார். நச்சரித்துக் கேட்டால் "உன் அனுபவம் உனக்கு கற்றுக் கொடுக்கும்." என்பார். அலுத்துக் கொண்டு நகர்ந்து விடுவேன். இப்போது அம்மா என்னிடம் கேட்ட பள்ளித்தோழிகள் படித்த செக்ஸ் புத்தகத்திற்கும் இதற்கும் என்ன சம்மந்தம் என்பது போல அவரைப் பார்த்தேன்.
"அதற்கும் இதற்கும் என்னம்மா சம்மந்தம் " என்றேன்
"ஒவ்வொன்றுக்கும் மற்ற ஏதோ ஒன்றுக்கும் இந்த உலகில் நிச்சயம் சம்மந்தமுண்டு. நீ செக்ஸ் புத்தகம் பற்றி கேட்ட போது எனக்கு பெரிதான ஆச்சரியமில்லை. காரணம் அதை என்னிடம் வந்து பேச விரும்புகிறாய் என்கிற அளவிற்கு என்னை நம்புகிறாய் என்ற விதத்தில் தான் நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன்."
"நீ ஒவ்வொன்றும் என்னிடம் வந்து பேசிவிட்டு நகரும் போது உனக்காகவே நான் வாழ்ந்தாக வேண்டுமென்ற வைரக்கியம் எனக்குள் வளர்ந்து கொண்டேயிருந்தது. இப்பக்கூட மனசுக்குள் உன்னைக் குறித்த கவலைகள் தான் எனக்குள் அதிகமாகயிருக்கு. இப்பக்கூட நான் கிளம்பி வெளியே வந்ததுக்கு நீ தான் முக்கிய காரணம். என்ன ஏதென்று இப்ப எனக்கிட்டே கேட்காதே? என்னைப் போல குப்பைகள் சேராத மனமாக உன்னுடைய சிந்தனைகளாவது இருக்கட்டும்" என்றார்.
வயிறு கிள்ளியது. அம்மாவிடம் கேட்ட மனமில்லை. அருகில் தின்று கொண்டுருந்தவர்களை பார்த்துக் கொண்டுருந்தேன். அம்மா என் முகத்தை வைத்து புரிந்து கொண்டார்.
"பசிக்குதா" என்றார். சிரித்துக் கொண்டே "இல்லை" என்றேன்.
"பொய் சொல்லாதே என் புள்ளையின் பசி எனக்குத் தெரியாதா?" என்றார்.
என் பசியைப் பற்றி தெரிந்த உங்களுக்கு நான் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் ஏன் பதில் சொல்ல மாட்டுறீங்க. மனதிறகுள் நினைத்துக் கொண்டேன். ஆனால் வாய்விட்டு கேட்கவில்லை.
ரயில் நின்றது. பேச்ச சுவராஸ்யத்தில் வெளியே கவனிக்கவில்லை. பக்கத்தில் இருந்தவர்கள் திருப்பூர் வந்து விட்டது. இறங்குலாமென்று அருகில் இருந்தவர்களை அவரசப்படுத்திக் கொண்டுருந்தார்கள். அம்மா என்ன நினைத்தாரோ தெரியவில்லை. "கீழே இறங்கு" என்றார்.
மூன்று மொழிகள் எங்களை வரவேற்றது.
திருப்பூர் உங்களை இனிதே வரவேற்கிறது.
ரயில் கிளம்பிச் சென்று விட்ட போதும் நடைமேடையில் யாருமேயில்லை. அருகில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் நாங்கள் இருவர் மட்டுமே அமர்ந்திருந்தோம். மேலே தெரிந்த கடிதகாரத்தில் நள்ளிரவு இரண்டு மணியை இரண்டு முட்களும் ஒப்பந்தம் போட்டு சப்தமாக டங் டங் என்றது..
எங்களை வெகு நேரமாககவனித்துக் கொண்டுருந்த ஒரு ரயில்வே காவல் துறை அதிகாரி எங்களை நோக்கி வந்து கொண்டுருந்தார்
தொடர்கின்றேன்.
ReplyDeleteபுத்திக்கும் மனதுக்கும் நடக்கிற சண்டையைத் தாண்டி வர்ற பெண்களும் ஆண்களும் ரொம்ப குறைவு. ///
ReplyDeleteசக்தி உள்ளவர் வெளியே வருவர். அந்த சக்தி ஒரு தகுதி. தகுதி உள்ளவையே வாழுகிற தகுதி பெறும்.
காட்சிகள் கண் முன்னே விரிகின்றன.... அருமையாக எழுதி கொண்டு வருகிறீர்கள்.
ReplyDeleteஉள்ளேன் ஐயா.
ReplyDeleteஎழுத்துநடை நல்லா போகுது..தொடரட்டும்...
ReplyDeletenice
ReplyDeleteஅனுபவம் வித்யாசமான ஆசிரியர்.அது பாடம் நடத்தி பரிட்ச்சை வைப்பதில்லை.பரிட்சைகளின் மூலமே பாடம் நடத்துகிறது.
ReplyDeleteஅன்றைய பொழுதின் கடமைகளை மட்டும் செய்து விடு. அதற்கான பலன்கள் வரும் நேரத்தில் வந்தே தீரும்
ReplyDeleteதத்தக்காபித்தக்கான்னு கைகால அடிச்சு நீந்தி ஏதேவொரு மரக்கட்டை கிடைக்குதான்னு பார்க்க ஆரம்பிப்போம். சில சமயம் நமக்கு அதிர்ஷ்டம் உதவும். பல சமயம் நம்ம உழைப்பும் தைரியமும் நம்மை கரை சேர வைக்கும். //
நரி, நாய், பன்றிகளை விட கேவலமான மனிதர்கள்தான் இங்கு அதிகம். //
நிஜமான வரிகள்...
தொடருங்கள்..
படிக்கும்போதே அதை நிகழ்வுகளாய் கண் முன் நினைத்து பார்க்க வைக்கும் எழுத்துக்கள்! தொடரட்டும்!
ReplyDeleteஅடுத்து எதுவும் தவறாக நடந்து விட கூடாது என்று தோணுகிறது
ReplyDeleteஒவ்வொரு அனுபவங்களும் சுவாரசியங்களும் ஆச்சரியங்களும் நிறைந்தவை. அவர்கள் வாழ்வை காண ஆவலோடு.
ReplyDeleteஎத்தனை அம்மா இந்த புரிதலோட இருக்கிறாங்க..
ReplyDeleteஎத்தனை அம்மா புரிந்துணர்வுடன் கூடிய உரையாடலை தன் பிள்ளைகளிடம் நடத்துகிறார்கள் அன்பின் ஜோதிஜி.
ஒவ்வொரு தருணத்தையும் உணர்ந்து எழுதும் ஒரு சிறப்பு வார்த்தைகளில் தெரிகிறது மிகவும் நேர்த்தியாக எழுதி ஒவ்வொரு பதிவையும் ரசிக்க வைக்கிறீர்கள்
ReplyDeleteஅருமையா போயிட்டிருக்குங்க.
ReplyDeleteஇன்னொரு புத்தகமும் ரெடி ஆகுது போல இருக்கு
ReplyDeletespontaneous flow of writing filled with fiction and reality. I am much impressed.
ReplyDeleteஎழுத்தில் மனது லயித்து நின்றாலும், புகைப்படம் விட்டு கண்கள் அகல மறுக்கின்றன..
ReplyDeleteஎத்துனை பெண்கள் இந்த புரிதலோடு உள்ளார்கள்.
ReplyDeleteஎத்துனை பெண்கள் புரிந்துணர்வுடன் தன் குழந்தைகளிடம் உரையாடுகிறார்கள் அன்பின் ஜோதிஜி.
சத்தியமா பின்றீங்க! இம்மாதிரி பெண்கள் குறிஞ்சிப்பூ போல... நான் ரொம்ப பார்த்ததில்ல.
ReplyDeleteஜி, படிச்சிட்டேய்ன்! :-)
ReplyDeleteஅருமையா போயிட்டிருக்குங்க.
ReplyDeleteஜோதிஜி சொல்றது பலமுறை எனக்கு புரிந்ததில்லை.எல்லாவற்றையும் பூடாகமாகவே சொல்லிவிட்டு சென்று விடுவார். நச்சரித்துக் கேட்டால் "உன் அனுபவம் உனக்கு கற்றுக் கொடுக்கும்." என்பார். அலுத்துக் கொண்டு நகர்ந்து விடுவேன்.படமும் கதை சொல்லுது !
ReplyDeleteஅருமை சார். தொடருங்கள். படமும் அழகு....
ReplyDeleteதுளசி கோபால் வெளியிட்ட இரண்டு நிமிடங்களில்.......... இந்த முறை தப்பிவிட்டேன் என்று நினைக்கின்றேன். தொடர்கின்றேன்.
ReplyDeleteஅற்புதமான விம்ர்சனம் தமிழ்உதயம்.
நன்றி சித்ரா. நந்தா. வினோத். பயணமும் எண்ணங்களும். சே குமார் நித்திலம் சிப்பிக்குள் முத்து, அன்பரசன்.
ரதி வருகை பதிவேட்டில் ஆப்சென்ட் போட்டு விட்டேன்.
அப்துல்லா உங்கள் விமர்சனம் ஆச்சரியப்படுத்தியது.
நிறைய எழுதலாம். இங்கு வேண்டாம்.
ஹேமா நீங்க சொன்னதும் உண்மை தான். ரொம்ப நேரம் படித்து விட்டு சிரித்துக் கொண்டுருந்தேன்.
ReplyDeleteசெந்தில் இந்த படத்தை கூகுள் தந்தவுடன் அப்பாடா இந்த முறை செந்தில் கொடுக்கும் படம் போல அமைந்து விட்டது என்று மனம் சந்தோஷப்பட்டது.
ஆசிரியரே நீங்க வேற பீதிய கௌப்புறீங்க. ஆனால் புத்தகம் என்பது சாதாரண விசயமில்ல என்பதை கடந்த மூன்று மாதங்களாக புரிந்து கொண்டேன்.
தவறு
பெரும்பாலான பெற்றோர்களுக்கு புரிந்துணர்வைவிட தங்களுடைய புளிச்சுப்போன உணர்வுகளுடன் மல்லுக்கட்டிக்கொண்டு குழந்தைகளையும் மன்றாட வைப்பது தான் அதிகம்.
ராசா ஒரு குறிஞ்சிப் பூவை பார்க்க நாம் எத்தனை வருடங்கள் காத்துருக்க வேண்டும்????
ReplyDeleteதெகா உங்க நக்கல் எனக்கு விக்கலை உருவாக்குது. இந்த தொடர் சீக்கிரம் முடிக்க காரணம் நீங்க தான் நீங்க தான். பெண்களே குறித்துக் கொள்ளுங்க.....
காட்டன்
என்னங்க நம்ம சமாச்சாரத்தை பெயராக வைத்துக் கொண்டு உள்ளே வந்தா ஒன்றையும் காணல. நன்றிங்க.
சங்கர் ஒவ்வொரு பகுதியையும் படித்து ரசித்த விதம் உங்கள் விமர்சனத்தில் புரிகின்றது. நன்றி சங்கர்.
ReplyDeleteரவி உண்மையிலேயே ஒன்றாக சேர்த்து படிக்கும் போது தான் அதன் சுகம் அல்லது வெறுப்பு தெரியும்? நன்றி ரவி.
நன்றி எஸ்கே
ReplyDeleteஇரவு வானம் வாழ்க்கையில் நல்லது மட்டுமே நடந்தால் நாமெல்லாம் எத்தனை பாக்யசாலிகள்?
அடுத்து ரெண்டு பதிவுகளோடு அவசரமாய் முடிகின்றது ஜெயந்தி.
//Thekkikattan|தெகா said...
ReplyDeleteஜி, படிச்சிட்டேய்ன்! :-)//
ஜி, வெட்டிக்காட்டாரும் படிச்சுட்டார்:)
நேற்று கவணிக்கவில்லை!
//ரதி வருகை பதிவேட்டில் ஆப்சென்ட் போட்டு விட்டேன்//
ReplyDeleteஇதை நான் வன்மையா, அறம்புறமா கண்டிக்கிறேன். காரணம் தெரிஞ்சாகணும், ஜி. :)
//என்ன நடந்ததுன்னு மனதைப் போட்டு குழப்பிக்காதே? இனி என்ன நடக்கனும்ன்னு மட்டும் யோசிப்போம்.//
ReplyDeleteஅருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
ஒவ்வொரு பதிவிலும் கலந்து கொள்ளும் ஹேமா சொல்லியிருப்பதென்ன, ஜோதிஜி?
மிகவும் அருமைங்க..தம்பி..ரசித்து படிச்சுட்டு வருகிறேன்.
ReplyDeleteதாராபுரத்தான் ஐயா உங்கள் விடாத தொடர்வாசிப்பு ரொம்பவே வியப்பாய் இருக்கிறது. இங்கு சாமி போல ஆச்சரியப்படுத்திய உங்களுக்கு நன்றிங்க.
ReplyDeleteசிகோ ஹேமா ஸ்விஸ் ல் இருக்கிறார். பெரிய கவிதாயினி. அவருக்கு என்னை கலாய்ப்பது அல்வா சாப்பிடுவது போல. ஆனால் ஒவ்வொன்றிலும் ஒரு விசயம்இருக்கும்.
ரதி விமர்சனப்புலி அல்லது ராணி என்று என்னைப் போல பலரும் நினைத்துக் கொண்டுருக்க இதென்ன பச்சப்புள்ளத்தனமாக கடைசி பெஞ்ச் மாணவி போல உள்ளேன் ஐயா. தொடரும் கேள்விகளால் கிழித்து தொங்க விட வேண்டும் அல்லவா?
ரவி தெகா சொன்ன விமர்சனம்
யோவ் வெளியே வாங்கய்யா. பொம்பளபுள்ளைங்க எங்கேயோ போயிட்டாங்க. இன்னமும் கலாச்சாரம் கருமாந்திரம்ன்னு அவங்கள கொண்டு போய் தள்ளுவதில் ஏனிந்த அக்கறைன்னு கலாய்க்கிறார்.
நீங்க சொல்லனும் ரவி.
ஜோதிஜி,
ReplyDeleteஇந்த் லிங்கை படிச்சு பாருங்க..
http://ujiladevi.blogspot.com/2010/07/blog-post_29.html