இங்கு நண்பர்கள் தொடர்ந்து படித்து வரும் தொடர்கதைக்கு ஒரு சின்ன தடங்கல்.
நண்பன் செந்தில் இந்தியாவைப் பற்றி எழுதிக் கொண்டுருப்பதை படித்த போது என்னுடைய பார்வையில் இந்தியாவைப் பற்றி ஒரு ஜனநாயக ஆப்பிரேசன் செய்ய வேண்டுமென்று நினைத்தேன். ஆனால் பெண்கள் குறித்த தொடரினால் எந்த பக்கமும் நான் விரும்பியபடி நகரமுடியவில்லை.
இந்த தளத்தில் யூ டியுப் இணைப்பு மட்டும் கொடுக்காமல் (அந்த தொழில் நுட்பம் பற்றி தெரியாமல்) இருந்த எனக்கு என்னுடைய ஊர்ப்பங்காளி அமெரிக்காவில் இருந்து (அந்த இயற்கை காதலனைப் பற்றி வேறொரு சமயத்தில்(?) ) நிமிட நேரத்தில் புரிய வைத்து இந்த காணொளியை அனுப்பி வைத்தார். இதுவும் ஒரு வகையில் பெண்கள் என்பவர்கள் ஆணாதிக்கத்தை எதிர்த்து வரும் போது எந்த மாதிரியான விசயங்களை தாண்டி வர வேண்டும் ? எத்தனை விமர்சனங்கள் தாக்கும்? என்பதை உணர்த்தும்.
நான் முதல்முறையாக சுப்ரமணிசாமியின் ஆங்கிலப் பேச்சை கேட்கிறேன். உள்துறை அமைச்சர் ப சிதம்பரத்திற்குப் பிறகு இவரின் மொழி லாவகம் என்னை மிகவும் கவர்ந்தது. எவருக்கும் எளிதில் புரியும். ஆனால் கேட்கும் பொறுமை மட்டும் வேண்டும்.
என்னுடைய பார்வையில் அதிக புத்திசாலியும், மிகத் திறமையானவரும், சீனாவில் உள்ள ஆட்சியில் இருக்கும், இல்லாத முதல் தலைகளுடன் நேரிடையாக எப்போது வேண்டுமானாலும் உரையாடக்கூடியவருமான இந்த சூனா பானாவுக்கு மற்றொரு பெயரும் விபரம் புரிந்தவர்கள் கொடுப்பார்கள்.
அரசியல் கோமாளி.
ஆனால் என்னுடைய பார்வையில் ராஜீவ் காந்தி படுகொலையில் இவருக்கு தெரிந்த பல விசயங்களுக்கு, இவர் சம்மந்தப்பட்ட விசயங்களுக்காகவும் இன்னமும் என்னுடைய தேடலுக்கு முடிவில்லாமல் போய்க் கொண்டே இருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ளவர்களை விஞ்ஞான திருடர்கள் என்று அழைப்பது போல இவரின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் பின்னாலும் சூப்பர் விஞ்ஞான தியரி உண்டு. சிலது சிரிக்க வைக்கும். சிலது இருக்குமோ? என்று யோசிக்க வைக்கும். இவர் பலரின் மர்மங்களை புட்டு புட்டு வைப்பது போல இவரைப்பற்றி எவரும் புட்டு ஆப்பம் பணியாரம் என்று எதுவும் வைக்கமுடியாதபடி இவரின் வாழ்க்கை இருப்பது மிகுந்த ஆச்சரியமே?
இவரால் வளர்ந்தவர்களை விட அழிந்தவர்களும், கதறியவர்களும் அதிகம்.
ஆனால் இவர் இங்கு பேசும் பல விசயங்கள் உங்களுக்கு புதிதாக இருக்கும். இந்த அளவிற்கு சோனியா காந்தி ராகுல் காந்தி குறித்து இது போன்ற விசயங்களை நான் எங்கும் படிக்கவில்லை.
எளிய ஆங்கிலத்தில் பேசியுள்ள இந்த காணொளியைக் கேட்டுப் பாருங்கள். சில இடங்களில் பிறப்பு குறித்த அநாகரிக விசயத்தை நகைச்சுவையாக நகர்த்தி விட்டு நகர்ந்து போய்க் கொண்டேயிருக்கிறார்.
வேறு சில புரிதல்கள் உங்களுக்கு கிடைக்கக்கூடும்.
இதில் உள்ள நம்பகத்தன்மை குறித்து நண்பர்கள் உருப்படியான விசயங்களை (விருப்பு வெறுப்புகளை சற்று கடிவாளம் போட்டுக் கொண்டு) பின்னூட்டத்தில் பகிர்ந்து கொண்டால் உங்களுக்கு என் வந்தனம்.
காரணம் வலைதளம் என்பது எதிர்மறை நியாயங்களின் பொக்கிஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். இன்னும் எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு வந்து படிக்கும் நபருக்கு ஒவ்வொரு விசயங்களும் உங்களின் கருத்துக்களும் ஏதோவொரு விதமாக உதவக்கூடும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
இதில் விடுதலைப்புலிகள் குறித்து சில விசயங்கள் குறித்து பேசியுள்ளார். உலக நாடுகளில் இவருக்கு தெரியாத நபரும் இல்லை. நுழைந்து வராத இடமும் இல்லை.
ஆனால் எதுவும் இந்திய சாதாரண மக்களுக்கும் இந்தியாவிற்கும் பத்துக் காசுக்கு பய்ன்தராத வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருக்கும் மேல்தட்டு வர்க்க மகாபுத்திசாலி.
என்னத்த சொல்ல... ம்ம்ம்ம்.....
ReplyDeletehttp://www.janataparty.org/sonia.html
ReplyDeleteஅவரது தளத்தில் இவற்றைப் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளார். (அதிலும் Three Lies பகுதியில் சுருக்கமாக இவை இடம்பெற்றுள்ளன.)
சுப்பிரமணிய சாமிய மிகைப்படுத்தி பார்க்கறிங்களோ.
ReplyDeleteThis is rather old video. Did you know you can tweet with Subramanya Swamy on Twitter, ask him questions?!
ReplyDeleteSorry for my previous comment;-)) //கேட்பது தவறு//
ReplyDeleteபகிர்விற்கு நன்றி! :-)
ReplyDelete//ஆனால் எதுவும் இந்திய சாதாரண மக்களுக்கும் இந்தியாவிற்கும் பத்துக் காசுக்கு பய்ன்தராத வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருக்கும் மேல்தட்டு வர்க்க மகாபுத்திசாலி.//
எம்மா அழகா எடுத்து வைச்சாரு அம்பூட்டு உண்மையையும் புட்டு புட்டு... கடைசியில இப்படி ஒரு பஞ்ச் வைச்சு பஞ்சராக்கிப்புட்டீயளே... :D.
நான் பார்த்திட்டே இருக்கும் போது திடீர்னு இப்படி ஒரு எண்ணம் வந்துச்சு இந்த சுவாமி நம்மூரு ஜேம்ப்ஸ் பாண்டாய்யான்னு :P
//
ReplyDeleteசிலது சிரிக்க வைக்கும். சிலது இருக்குமோ? என்று யோசிக்க வைக்கும்.
//
சரியா சொன்னீங்க...
இவரை பற்றிய உங்களது கருத்துதான் பெரும்பாலும் எல்லாருக்கும் இருக்கும்
ReplyDeleteசுப்பிரமணியம் சாமி /சந்திரா சாமி குறித்து இன்னொரு யு டியுப் லிங் அனுப்பியிருந்தென், பார்த்தீர்களா? அதில் ராஜீவ் கொலை பற்றி பேசப்பட்டு இருக்கும்.
ReplyDeleteஅவர் ஒரு --- உளவாளி என்று சொல்கிறார்களே அது உண்மையா சார்.
ReplyDelete"ஆனால் எதுவும் இந்திய சாதாரண மக்களுக்கும் இந்தியாவிற்கும் பத்துக் காசுக்கு பய்ன்தராத வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருக்கும் மேல்தட்டு வர்க்க மகாபுத்திசாலி."
ReplyDeleteஅப்புறம் ஏன் இவரபத்தி பேசனும் அன்பின் ஜோதிஜி. இவரோடு தொடர்புடையவர்கள் இவர்பத்தி கவலைபட்டு கொள்வார்கள்.
சித்ரா உங்கள் தைரியமான முதல் பின்னோட்டத்திற்கும் வருகைக்கு நன்றி.
ReplyDeleteகும்மி நீங்க அருண் ராஜன் மூவரும் ஒரே தளமா?
நீங்க சுட்டிக்காட்டிய தளத்தில் உள்ள ஏர்உழவன் சின்னத்தை மட்டும் பார்த்து விட்டு வந்து விட்டேன். அரசியல் என்று எனக்கு சிறிய வயதில் அறிமுகமானது இந்த சின்னம் தான். மற்றபடி இவரிடம் கேள்வி கேட்டு வாங்கும் எண்ணமில்லை. காரணம் இவரைப்பற்றி ஓரளவிற்கு புரிந்த காரணத்தால் (?)
நன்றி உங்கள் வருகைக்கு.
கெக்கே எப்டிங்க இப்டியெல்லாம் யோசித்து பேர் வச்சுருக்கீங்க. ரொம்பவே ரசித்தேன். கப்பி பய ரசித்த வார்த்தை.
தல நீங்க சொன்னபிறகு தான் அட 007 சூனா பானா என்று பெயர் வைத்திருக்கலாமோ என்று யோசித்துப் பார்த்தேன். எத்தனை திறமையான மனிதர். ஆனா என்ன பிரயோஜனம். சேது சமூத்திர திட்டம் தொடங்கியது எவரோ? முடிக்க காரணமாக இருந்தவர் இவரே? எவரால் உடைக்க முடிந்தது. இன்னும் இது போல பல விசயங்கள் சொல்லிக் கொண்டே போகலாம்......... தனிப்பட்ட முறையில் உங்களுக்கு நன்றி தல.
யோகேஷ் உண்மை தானே?
வினோத் இன்று முழுவதும் இணையம் பக்கம் வரமுடியல. இனி பார்க்கின்றேன். திருச்சி வேலுச்சாமி பேச்சையும் மாட்டி விடுகின்றேன். உங்கள் அக்கறைக்கு நன்றி வினோத்.
ரூபன் ஒன்றை மட்டும் தான் சொல்லியிருக்கீங்க. தச அவதாரம்.............
//கும்மி நீங்க அருண் ராஜன் மூவரும் ஒரே தளமா?//
ReplyDeleteஆம்! ஆல் இன் ஆல் தளத்தில் நாங்கள் பங்காளிகள்.
நான் உங்கள் பதிவுகளை தொடர்ந்து வாசித்துக்கொண்டுதான் இருக்கின்றேன். பெரும்பாலும் மாற்றுக்கருத்து இருக்கும்போதோ அல்லது supplemetary தகவல் கொடுப்பதாக இருந்தாலோ பின்னூட்டமிடுவேன். அதனால் உங்கள் தளத்தில் இதுவரை பின்னூட்டமிடும் வாய்ப்பு அமையவில்லை. :-)
(கும்மியடிப்பதற்காக இடும் பின்னூட்டங்கள் இந்த கணக்கில் சேராது)
.
தமிழ் உதயம் நீங்க சொல்வது உண்மை தான். பலரும் இவரிடம் இருந்து ஒதுங்கியிருக்கவே விரும்புகிறார்கள். நேருக்கு நேர் பாராளுமன்றத்தில் வைத்து டர் ஆக்கியவர் வைகோ மட்டுமே?
ReplyDeleteகும்மி ராஜன் நட்சத்திரவாரத்தில் வந்தார். அப்புறம் அவருக்கு பிடித்த (?) நித்யானந்தா பதிவுக்கு வந்தார். அப்புறம் ராஜன் இன்னும் மறுவீடு சாப்பாடு முடியாத காரணத்தால் அந்த பிசியில் இருப்பார் என்று நினைக்கின்றேன்.
ReplyDeleteஎன்ன பெரிய கிரீடத்த போற போக்குல சொமத்திட்டு போறீங்க. நன்றி நண்பா.......
ஹாலிவுட் பாலாவிற்குப் பிறகு இந்த கும்மிக்கு ஆள் இல்லாமல் ரொம்ப தவிப்பாய் இருக்கு. கொஞ்சம் ஆறுதல் அளிப்பவர் நசரேயன்.
உங்கள் கருத்து உண்மை தான் தவறு நண்பா.
// ராஜன் இன்னும் மறுவீடு சாப்பாடு முடியாத காரணத்தால் அந்த பிசியில் இருப்பார் என்று நினைக்கின்றேன்.//
ReplyDeleteமறுவீடு சாப்பாடெல்லாம் கிடையாது. வீட்டுக்கு லேட்டாக வந்தால், கேட்டை மூடி வைத்து வெளியில் நிற்க வைக்கும் தண்டனைதான் நடைபெறுகின்றது.
நன்றி மணி.
ReplyDeleteகேட்டுக்குள் சுதந்திரம்ன்னு ஒரு தலைப்பில் எழுதி விடலாமா? தல
சுனா பானாவா...
ReplyDeleteSubramanian Swamy Interview with Jaya TV
ReplyDeletehttp://video.google.com/videoplay?docid=-1234261564887634640#
//ஆனால் எதுவும் இந்திய சாதாரண மக்களுக்கும் இந்தியாவிற்கும் பத்துக் காசுக்கு பய்ன்தராத வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருக்கும் மேல்தட்டு வர்க்க மகாபுத்திசாலி.
ReplyDelete//
சூப்பரா முடிச்சீங்க.
//ஆனால் எதுவும் இந்திய சாதாரண மக்களுக்கும் இந்தியாவிற்கும் பத்துக் காசுக்கு பய்ன்தராத வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருக்கும் மேல்தட்டு வர்க்க மகாபுத்திசாலி.//
ReplyDeleteஸ்பெக்ட்ரம் விஷயத்தில் இவர் ஒரே ஆளாக வெளிகொணர்ந்து இருக்கிறார். இது இந்திய சாதாரண மக்களுக்கு பயன்படாது என்கிறீர்களா?
நன்றி ஜெயந்தி
ReplyDeleteதாராபுரத்தான், வாங்க, வடிவேல் காமெடியில் வரும் சூனாபானாவாகத்தான் இவர் எனக்குத் தெரிகிறார்.
ரூபன் தொ.காட்சியிலேயே இதைப்பார்த்தேன்.
சீனு உங்களைப்பற்றிய வலை அறிமுகம் அற்புதம். அப்புறம் அந்த நான்கு பேர்கள் எப்போது கிடைப்பார்கள். உங்களின் இந்த கேள்வி சரிதான். இவர் தான் இந்த ஊழல் கண்டுபிடிக்க காரணம் என்றே வைத்துக் கொள்ளுங்கள். சம்மந்தபப்பட்டவர்களை கடைசிவரைக்கும் கழுவேற்றுவதும் வரைக்கும் துணிந்து நிற்பார் என்றா நினைக்கிறீங்க. இவரின் ஒவ்வொரு செயல்பாடுகளும், இது போன்ற அக்கறைக்கும் பின்னாலும் பல வித அரசியல் விளையாட்டுகள், கணக்குகள், வெளியே தலை காட்ட முடியாதவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் தரகர் போலவே செயல்படுகிறார். இவரை ஒப்பிடும் போது நம் சென்னையில் வாழ்ந்து கொண்டுருக்கும் டிராபிக் ராமசாமி என்ற பெரியவரை வணங்கத் தோன்றுகிறது.
இவரை புரிஞ்சுக்கிறவே முடியலையே!
ReplyDeleteஆங்கிலம் மிக எளிமை. அருமையாகப் புரிகிறது அண்ணா...
அவர் பேச்சைக் 'கேட்க்கும்போது' நியாயமா இருக்காருன்னு புரியுது. ஆனாலும்.............
ReplyDeleteஎங்கே எந்த இடத்தில் எப்படி இப்படி இவரைப் பற்றிக் 'கேள்விப்படும்' மற்ற சேதிகள்......
என்னமோ போங்க!
யாரைத்தான் நம்புவதோ......பேதை அண்ட் பேதன் நெஞ்சம்..........
//இவரின் ஒவ்வொரு செயல்பாடுகளும், இது போன்ற அக்கறைக்கும் பின்னாலும் பல வித அரசியல் விளையாட்டுகள், கணக்குகள், வெளியே தலை காட்ட முடியாதவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் தரகர் போலவே செயல்படுகிறார்.//
ReplyDeleteSomething is better than nothing - Right?
ஸ்பெக்ட்ரம் ஊழலை கண்டுபிடித்தவர் \ அம்பலப்படுத்தியவர் பயனியர் இதழை சார்ந்த கோபாலகிருஸ்ணன் அல்லவா?
ReplyDeleteSEE THE GANDHI-NEHRU DYNASTY BLOG IN WEBSITE,YOU CAN KNOW SO MANY SECRECTS ABOUT MOTHILAL NEHRU,JAWARLAL NEHRU,INDIRA GANDHI AND SANJAY GANDHI. AS PER THE ABOVE BLOG,NEHRU AND HIS FATHER MOTHILAL NEHRU ARE NOT HINDUS,BUT MUSLIMS.IN 1987,KOTWAL OF DELHI,A MUSLIM WARLORD
ReplyDeleteIN CHARGE OF DELHI FORT,CHANGED HIS MUSLIM NAME CHANGED HINDU NAME AS " GANGADAR NEHRU", BECAUSE OF FEAR,WHEN BRITISH SOLDIERS CAPURTED DELHI AND KILLED MUSLIMS WAR LORDS .THE MUSLIM KOTAWAL OF DELHI [ RED ]FORT,[ GANGADAR NEHRU ] HEIRS ARE MOTHILAL NEHRU,JAWARLAL NEHRU, INDIRA GANDHI,RAJIV GANDHI,SANJAY GANDHI AND RAGUL GANDHI.SANJAY GANDHI`S FATHER WAS MOHAMAED YUNUS VIA INDIRA GANDHI,BUT RAJIV GANDHI BORN TO FEROS { KHAN} GANDHI,WHO WAS THE ACTUAL HUSBAND OF INDIRA GANDHI.FEROZ GANDHI WAS NOT ACTUALLY BELONG TO PARZI RELIGION,BUT HE WAS A MUSLIM,SON OF A SERVANT OF JAWARLAL`S HOUSE STAFF.INDIRA LOVED AND MARRIED HIM AT ENGLAND,AFTER INDIRA CONVERTED INTO MUSLIM WOMAN.BUT JAWARLAL NEHRU DID NOT ACCEPT THE MARRIAGE.AFTER THE INTERFERENCE OF MAHATMA GANDHI,FEROZ KHAN NAME CHANGED AS FEROZ GANDHI.