அஸ்திவாரம்

Saturday, August 07, 2010

இதுவொரு தனியுலகம் காணொளி


எந்திரத்திற்கு என்னுள் இருக்கும் சோக மொழி புரியுமா?. நாள் முழுக்க எனக்குள் பரவும் உஷ்ணத்தை அது அறியுமா?  என் உழைப்பின் நீள அகலம் குறித்து கவலைப்படப் போவதும் இல்லை.  உட்கார்ந்து நின்று, நகர்ந்து முயன்று எட்டு மணி நேரத்தில் எனக்கு இடப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றியே ஆக வேண்டும். அம்மா அடுத்த வரிசையில், அண்ணன் பக்கத்தில், கடைசி தம்பி படித்துக் கொண்டுருக்கின்றான்.  அவனுக்கும் சீக்கிரம் இங்கு ஒரு இடம் பார்க்க வேண்டும்.  எனக்கும் திருமண ஆசை இருக்காதா? 


பொம்பள புள்ளைக்கு ஒழுக்கம் முக்கியம்டின்னு சொன்ன செத்துப் போன எங்கம்மாவத்தான் நினைச்சுக்கிட்டு வேலை பாக்குறேன். உரசலும், தடவலும் தவிர்க்கப் பார்த்தாலும் நியூட்டன் விதி போல என்னோட வாழ்க்கை விதியையும் ஆட்டிப் படைக்குது. சிக்கித் தவிக்கும் துணியைப் போலவே என் உணர்ச்சிகளும் என்னை படாய் படுத்துதே?

அடிக்கி வைக்கச் சொல்லி அருகே வந்து நிற்பான்.  குனிஞ்சு நிமிர்ந்தால் குதுகலமாய் சிரிப்பான். என் மடியை பார்ப்பான், அவனுக்கும் அலுக்காது.   நாள் முழுக்க. தூசி தவிர்க்க முகத்தில கட்ட துணி,  ஐயாமாரு வாராங்கன்னு தலையில ஒரு குல்லா. வெள்ளைத் துணி அழுக்கு படக்கூடாதுன்னு கையுரை.  எல்லாம் தந்த மகராசா இந்த நாத்தம் புடுச்ச மனச எந்த துணி கொண்டு மறைக்கப் போறீங்க?                                                                                                                                       

15 comments:

  1. :(.

    வேலை செய்பவர்களை நல்ல முறையில் நடத்தும் கம்பெனிகளும் இருக்கும் என்ற நம்பிக்கை சற்றே ஆறுதல் கொடுக்கிறது

    ReplyDelete
  2. நாள் முழுக்க. தூசி தவிர்க்க முகத்தில கட்ட துணி, ஐயாமாரு வாராங்கன்னு தலையில ஒரு குல்லா. வெள்ளைத் துணி அழுக்கு படக்கூடாதுன்னு கையுரை. எல்லாம் தந்த மகராசா இந்த நாத்தம் புடுச்ச மனச எந்த துணி கொண்டு மறைக்கப் போறீங்க?

    Supper Lines....

    i Have no words to say :(


    Regards
    Jai

    ReplyDelete
  3. ம்ம்ம்....! நானும் இதை பற்றி நிறைய கேள்விபட்டிருக்கிறேன்..!
    கேக்கும்போதே ரொம்ப கஷ்டமா இருந்தது இந்த துறையில் பணி செய்யும் பெண்களை பற்றி..

    ReplyDelete
  4. வலிக்க வலிக்க வருகிறது எழுத்துக்கள்...

    ReplyDelete
  5. //எட்டு மணி நேரத்தில் எனக்கு இடப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றியே ஆக வேண்டும்// - நான் இதை மட்டும்தான் அங்காடி தெரு மாதிரி இல்லை என்றேன்.
    //அம்மா அடுத்த வரிசையில், அண்ணன் பக்கத்தில், கடைசி தம்பி படித்துக் கொண்டுருக்கின்றான். அவனுக்கும் சீக்கிரம் இங்கு ஒரு இடம் பார்க்க வேண்டும். எனக்கும் திருமண ஆசை இருக்காதா? // - இது சாயபற்றைக்கு, மருந்தடுக்க, வேட்டு ஆபிசுக்கு என்று குறைந்த ஊதியம் ஈட்டும் இடங்களில் வந்து விழும் வார்த்தை.

    //உரசலும், தடவலும் தவிர்க்கப் பார்த்தாலும் நியூட்டன் விதி போல என்னோட வாழ்க்கை விதியையும் ஆட்டிப் படைக்குது.//
    அமெரிக்காவில் சில நிறுவனங்கள் இம்மாதிரியான குற்றச்சாட்டுகளால் நிலைதடுமாறிய வரலாறுகள் உண்டு.

    //இந்த நாத்தம் புடுச்ச மனச எந்த துணி கொண்டு மறைக்கப் போறீங்க? // - வலி

    ReplyDelete
  6. ஜோதிஜி...இது உங்க பதிவாங்கிற மாதிரி உங்க எழுத்துநடை வித்தியாசமா இருக்கு.

    நீங்கள் எழுதினது மனசுக்குக் கஸ்டமான விஷயம்.பெண்களுக்கு எங்கள் நாடுகளில் மட்டும்தான் இந்த நிலைமை வேலை இடங்களில்.

    இப்பவும் சதி பண்ணிட்டீங்க.அதே இசையோடு காணொளி.இசை இல்லாமல் பார்த்தேன்.

    ReplyDelete
  7. ராம் குமார் நல்லதும் கெட்டதும் நிறையவே இருக்குது. 20 வருடங்கள் தொடர்ந்து வேலை செய்து ஓய்வுக்குப் பிறகு மாதம் மாதம் குடும்ப நிதி ஆதாரத்தை கவனிக்கும் சில நிறுவனங்களும் இங்கு இருக்கிறது.

    ஜெய் மவுனம் கலைத்து உள்ளே வந்தமைக்கு நன்றி.

    நன்றி கண்ணகி. இந்த வலிக்குள் வாழ்க்கையின் வழியும் கிடைக்கத்தான் செய்கிறது.

    கார்த்திக் இது சரவணா ஸ்டோர்ஸ் வாழ்க்கை முறை அல்ல. சில பணியாளர்கள் சரியான முறையில் வாழ்க்கை வாழும் பட்சத்தில் நல்ல வசதிகளோடு தான் இங்க வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

    ReplyDelete
  8. ஹேமா ஸ்விஸ் ல் இது போல இருக்கிறது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இருந்தால் ஆச்சரியம்.

    இது முழுமையாக ஏற்கனவே கோர்க்கப்பட்ட இசை கோர்வை. சில இசைகளை நாம் ஒரு விதமாக தாக்கத்தோடு மனதில் ஏற்றி இருப்போம். அதுவே கடைசி வரைக்கும் மாறாது. அது போல ஏதோவொரு தாக்கம் உங்களுக்கு இருக்கும் போல.

    திரைப்படங்களில் இறக்கும் காட்சிகளில் ஷெனாய் என்ற வாத்தியக்கருவி உச்சஸ்தாயில் ஓலிப்பதை பார்த்து இருக்கிறீர்களா? அதை எந்த இடத்தில் கேட்டாலும் எனக்கு இறப்பு தான் மனதில்வந்து போகும்.

    இன்னும் இரண்டு பதிவுகளில் இதை முடித்து விடலாம். கவலை வேண்டாம்.

    ReplyDelete
  9. ஐயோ...ஜோதிஜி நான்"எங்கள் நாடுகள்" என்று குறிப்பிட்டது நம்ம நாடுகள் இலங்கை இந்தியாவை.
    சுவிஸை நான் சொன்னால் என் வாய் அழுகிவிடும்.இங்கும் நம்ம மக்கள் அப்படியேதான்.
    வேற எந்த நாட்டவரையும் நான்
    அனுபவப்பட்டவரை சொல்லவே மாட்டேன்.

    ReplyDelete
  10. ஆகா........ மகிழ்ச்சி ஹேமா. பல ஸ்விஸ் மக்களை பார்த்து பழகி உள்ளேன். அது தான் சற்று சந்தேகமாகக் கேட்டேன்.

    இங்கும் நம்ம மக்கள் அப்படியே...........


    பல அர்த்தமாய் தெரியப்படுத்தி இருக்கிறீர்கள்?

    ReplyDelete
  11. உங்கள் எழுத்து என்னை நிறைய யோசிக்க வைக்கிறது ...

    ReplyDelete
  12. சார் படிப்பவர்கள் மனதில் நிறைய மாற்றங்களை உண்டாக்குகிறது உங்கள் எழுத்துக்கள்!

    ReplyDelete
  13. இன்னொரு “அங்காடித் தெரு” பார்த்த effect!

    ReplyDelete
  14. செந்தில் எஸ்கே ரவி

    நன்றி மக்களே.

    ReplyDelete
  15. thanks for your comment MR.JOTHIJI.. , the small lyric which i wrote in my blog named as PATRU..

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.