இங்கு இன்னமும் பல நிறுவனங்கள் பணியில் இருக்கும் தொழிலாளர்களுக்கு அமைதியான சூழ்நிலையை உருவாக்கி மன நலம் உடல் நலத்தில் அக்கறை கொண்டு தினந்தோறும் வேலை தொடங்குவதற்கு முன்பு கூட்டுப் பிரார்த்தனைகளின் மூலம் தங்களது உற்பத்தியை தொடங்குகிறார்கள்
பல்வேறு இடங்களில் இருந்து அரக்க பறக்க காலை எட்டு மணிக்குள் ஓடி வந்து சேர்பவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் ஆசுவாசம் அளித்துஅவர்களின் இழந்த நம்பிக்கைகளை ஒரு சேர மீட்டுத் தரக்கூடும் என்று நம்பிக்கையின் தொடக்கம்.
நூலில் இருந்து துணியாக மாறுவது என்பது வரைக்கும் அதுவொரு தனியான உலகம். அலைச்சலும், வேதனையும், பயமுமாக மாறி மாறி இறுதியில் நம்பிக்கையை மட்டும் வைத்துக் கொண்டு துணிவோடு நடக்க வேண்டிய சாகச பயணம். வெட்டப்பட் வேண்டிய துணியாக உள்ளே வந்து தேவைப்படும் உருவமாக மாற அதன் பயணத்தை இப்படித்தான் தொடங்குகிறது.
வருடத்தில் 365 நாட்களா? எங்களுக்குத் தெரியாதே? ஞாயிறு தான் எப்போதும் எங்களுக்கு தீபாவளி. காரணம் அன்று தான் தலைகுளிக்க ரெண்டு சொம்பு கூட ஊத்திக் கொண்டு அமைதியாய் குளிக்க முடியும். தைப்பது எந்திரங்கள் அல்ல. எங்களின் மனமும் எந்திரமாகித் தான் போய்விட்டது. உலகின் எந்தப் பகுதியில் இருப்பாரோ? உடுத்தும் போது இந்த இடத்தில் பிடிக்கிறது என்று திட்டுவாரோ?
எங்களின் மனமும் எந்திரமாகித் தான் போய்விட்டது//
ReplyDeleteஇந்த இயந்திரதனம் ஆடை உலகத்தில் மட்டுமல்ல - நிறைய தொழிலில் உள்ளது. இந்த இயந்திர தனத்துக்கு பழகி, உழைப்பு ருசி தெரிந்து விட்டால், இதுவே சுகமான வாழ்க்கையாகவும் மாறி விடும் சிலருக்கு.///
உடுத்தும் போது இந்த இடத்தில் பிடிக்கிறது என்று திட்டுவாரோ? //
நிச்சயம் இது கற்பனை அல்ல. யாரோ ஒருவராவது இதை உருவாக்கியது யார் என்று நினைப்பார். அந்த பொருள் சிறப்பானதாக இருந்தாலும் சரி. மோசமானதாக இருந்தாலும் சரி.
படத்தொகுப்புக்கு நன்றி....
ReplyDeleteஇளையராஜாவின் இசையுடன் கோர்த்திருக்கும் இந்த தொகுப்பு, அந்த தொழிலாளர்களின் மனதைப் போலவே அற்புதமாக உள்ளது..
ReplyDeleteஜோதிஜி...என்ன அது?
ReplyDeleteஎழுத்துப்பிழையா இல்லாட்டி அப்பிடித்தானா ?
தையலோடு சேர்ந்த இசையைத்தான் எங்கள் போர்க்கால காணொளிகளில் பயன்படுத்தியிருப்பார்கள்.அதானால் பாதிக்கு மேல் பார்க்கப் பிடிக்கவில்லை.
வணக்கம் ஜோதிஜி
ReplyDeleteநம் இந்திய முதலாளிகள் மனிதர்களும் எந்திரமாக இருப்பதையே விரும்புகின்றார்கள்.
நானும் ஸ்பெல்லிங் மிஸ்டேக்-ன்னுதான் நினைக்கிறேன்.
ReplyDeleteஅன்பின் ஜோதிஜி
ReplyDeleteகாணாத ஆடை உலகம் கண்டோம் - எத்தொழிலிலும் இவை இயல்பாக நடப்பவை தான். இறுதி வரிகள் ....
// எங்களின் மனமும் எந்திரமாகித் தான் போய்விட்டது. உலகின் எந்தப் பகுதியில் இருப்பாரோ? உடுத்தும் போது இந்த இடத்தில் பிடிக்கிறது என்று திட்டுவாரோ?
தொடர்ந்து தைப்போம்.............. //
ம்ம்ம் நல்லதொரு இடுகை ஜோதிஜி
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
உற்பத்தி சந்தையில் மனிதனும் எந்திரம் தான். வணிகமயத்தில் இவை எல்லாம் நடப்பவையே, இவையெல்லாம் ஒருவகையில் தானாகவே தேடிக் கொண்டவை என்று சொல்லமுடியும். திருப்பூரைப் பொருத்த அளவில் முதலாளிகள் இராணித் தேனிக்கள் தானே.
ReplyDeleteஎன் தூரத்து தம்பி ஒருத்தன் திருப்பூரில் வேலை செய்தான் தற்போது துபாய்க்கு போய்விட்டான், ரொம்ப ஆண்டுகள் கழித்து அவனை சென்ற ஆண்டு திருப்பூர் வந்த போது அவனை அங்கு பார்த்தேன்.
வீடியோவை அலுவலகத்தில் பார்க்கவில்லை, வீட்டிற்குச் சென்று பார்க்க முடியும்.
இந்த இயந்திரதனம் ஆடை உலகத்தில் மட்டுமல்ல - நிறைய தொழிலில் உள்ளது. இந்த இயந்திர தனத்துக்கு பழகி, உழைப்பு ருசி தெரிந்து விட்டால், இதுவே சுகமான வாழ்க்கையாகவும் மாறி விடும் சிலருக்கு.///
ReplyDeleteஉண்மை ரமேஷ். தினந்தோறும் பார்க்கும் சம்பவங்களில் பத்தில் ஒரு பங்கை எழுத்தில் வடித்தால் கூட அடிப்படைத் தொழிலாளர்களின் வாழ்க்கை என்பது ரத்த எழுத்தாகவே இருக்கும்.....
செந்தில் கண்ணகி வருகைக்கு நன்றி.
ஹேமா மற்றும் தல எது பிழையென்று புரியவில்லை?
ReplyDeleteதெரியப்படுத்துங்கள்.
ஹேமா நீங்கள் சொன்ன காணொளி பற்றி பல விடயங்கள் பகிர்ந்து கொள்ள முடியும். அந்த அளவிற்கு தாக்கம் அதிகம். நல்லதும் கெட்டதும்.
அப்புறம் இந்த இசை என்பது என்னுடைய தனிப்பட்ட விருப்பம். உண்மையே மேற்க்கித்திய இசைக் கோர்வை என்பது தனியாக உள்ளது.
இராஜராஜன் எந்த வகையில் பார்த்தாலும் நீங்கள் சொல்வது தான் சரியாகத் தான் இருந்து தொலைக்கின்றது. ஒவ்வொரு முறையும் உங்களிடம் தோற்றுக் கொண்டே இருக்கின்றேன்.
சீனா ஐயா உங்கள் வருகைக்குக்கும் நீங்கள் உணர்ந்த தாக்கத்திற்கும் நன்றி.
ReplyDeleteகண்ணன் உண்மையிலேயே முதலாளிகள் இராணீத் தேனீக்கள் தான். ஆனால் தேர்ந்தெடுக்கும் மகரந்தத்தில் தான் பிரச்சனை என்பதே தொடங்குகிறது.
எந்திரமயமான வாழ்வு .. ம்ம்ம் பாவம் ஜோதிஜி.. வருடம் ஒரு முறையாவாது முதலாளிகள் தங்கள் தொழிலாளிகளை எங்காவது சுற்றுலா அனுப்பலாம்.. உற்பத்தி பாதிக்காதவாறு இரண்டு மூன்று பாட்சாக..
ReplyDeleteகடைசிவரிய படிக்கும்பொழுது சுடத்தான் செய்கிறதுங்க... இப்ப நான உடல்ல அணிந்திருக்கிற ஆடைகூட ஏளனம் செய்கிறமாதிரியே தோன்றுகிறது... என்ன உலகம் பாருங்க.. உழைப்பதற்கென்றே பிறந்த எத்தனை மானுடங்கள் என்னோடு... இந்த வாழ்வு முழுதும் படிப்பினைதானோ.....
ReplyDeleteஇன்னொரு விசயம், நான் தொலைவிலிருந்து பார்த்தவைகளை இப்பொழுது காணொளியில் காட்டியிருக்கிறீர்கள். நன்றி...
ReplyDeleteபடத்தொகுப்புடன் ஒரு நல்ல பதிவை அளித்துள்ளீர்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
தல... தலைப்பு ஒருமுறை திரும்பப் படிச்சிப் பாருங்க :)
ReplyDelete----
பாலா பயந்து விட்டேன்.
ReplyDeleteபேச்சு வாக்கு என்போமே? அது போலத்தான் இதுவும். பார்த்தேயிராத பார்க்க விரும்பும் என்று வந்து இருக்க வேண்டுமோ?
நீங்க வேற என்னைப் போட்டு கும்மு கும்ன்னு ஜீ கேபிள் ஷங்கர் தளம் வரைக்கும் போட்டு கும்முறீங்களேன் பயந்து பம்முறேன். இன்னும் செந்தமிழிலில் பொளந்து கட்டினால்?
அதுக்கு என்ன சொல்வீகளோ?
உடன் மேடைக்கு வரவும்.
நீங்க மாட்ரேஷன் போடுறனால.. டைமிங் ஒத்து வர மாட்டேங்குது.
ReplyDeleteஇன்னிக்கு ஏகப்பட்ட கும்மியா.. கொஞ்சம் பிஸியா இருந்துட்டேன். :)
ஹைய்யோ.. இன்னும் நீங்க அந்த தப்பை கண்டுபிடிக்கலையா???
ReplyDeleteஹா.. ஹா.. ஹா... இந்தாங்க ஹிண்ட்........
///// ஓலியும் ஒளியு ம்//////
//நீங்க வேற என்னைப் போட்டு கும்மு கும்ன்னு ஜீ கேபிள் ஷங்கர் தளம் வரைக்கும் போட்டு கும்முறீங்களேன் பயந்து பம்முறேன்//
ReplyDeleteகவலைப்படாதீங்க தல. ஃப்ரென்ஸை எல்லாம் பார்த்துதான் கும்முறது.
இன்னிக்கு சிக்கினது கார்த்திக்கேயன் ப்லாகில் சாரு. நம்ம ப்லாகில் கிடைச்ச அத்தனை பேரும். அப்புறம் கேபிள் ப்லாகில் ரம்யா!!
மீ ஸோ பிஸி! :))