அஸ்திவாரம்

Tuesday, August 10, 2010

பணம் துரத்திப் பறவைகள்

தினந்தோறும் அந்த குடியிருப்பை கடந்து தான் செல்ல வேண்டும். பொருந்தாத சட்டையின் அளவு போல சுற்றியுள்ள நவீன குடியிருப்புகளுக்கிடையே.  தனித் தனியாக கட்டப்பட்ட வீடுகளும், நவீன வசதிகள் அத்தனையும் பெற்ற தொழில் அதிபர்கள் வாழும் கூட்டத்திற்கிடையே தொழிலாளவார்க்கமும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
அடுத்த சந்தின் வழியே வீட்டுக்குள் வந்து நிற்கும் போது கூட ஏதோவொரு சண்டை நடந்து கொண்டேயிருக்கும். இடைவிடாமல் நடுசாமம் வரைக்கும் ஒலிக்கும் அந்த சச்சரவில் அத்தனை செந்தமிழ் வார்த்தைகளும் தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டே இருக்கும்.

உரக்கப் பேசும் வார்த்தைகளில் ஒழுக்கம் இல்லாமல் மறந்து போன அத்தனை  வார்த்தைகளும் தீயாய் வந்து காதில் சுடும்.

ஆண் குரலில் தொடங்கி உள்ளேயிருக்கும் அத்தனை பெண்மணிகளும் கலந்து கடைசியில் அடிதடியுடன், ஒப்பாரிகளும் ஓலமுமாய் முடியும்.  வாகனத்தில் கடந்து போய்க்கொண்டுருப்பவர்களும், வெளியே நடந்து போய்க் கொண்டுருப்பவர்களுக்கு இதுவொரு இயல்பான நிகழ்ச்சி. 

பங்கெடுத்து கொள்ளாதவர்கள் எப்போதும் போல அவரவர் வேலையில் கவனமாய் இருப்பார்கள்.

நீள்வாக்கில் செவ்வகம் போல ஒரு பள்ளத்தை தூர்த்து கட்டப்பட்ட வரிசை யான ஓட்டு வீடுகள். கொங்கு பூமியில் பாறைக்குழி என்றொரு வினோத அமைப்பு உண்டு.  வெடிகுண்டி வைத்து தாக்கினாலும் தகர்க்க முடியாத நகராத இறுக்கமான பாறை அமைப்புகள். ஆனால் மனிதர்களின் ஆசையில் மண்ணால் மூடி அதன் மேல் கம்பியை இறக்கி தான் நினைத்ததை சாதித்து வீட்டு மனையாக்கியவர்கள் பல பேர்கள்.

வரிசைக்கு பத்து என்று கணக்கில் இரண்டு வரிசையில் மிக குறுகிய இடத்தில் கட்டப்பட்ட இருபது வீடுகள். வினோதமான வாஸ்து தேவைப்படாத பத்துக்கு பத்தில் ஒரே அறை உள்ள அந்த வீடுகள் ஏற்றுமதி நிறுவனங்களில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு சொர்க்கம்.

தட்டுக்கடை, வண்டிக்கடை, காய்கறி தள்ளுவண்டி என்று தொடங்கி நிறுவன காவல்காப்போர் வரைக்கும் மாதம் 5000 ரூபாய்க்குள் வருமானம் பார்க்கும் அத்தனை மனிதர்களுக்கும் உருவாக்கப்பட்ட காளான் வீடுகள்.
தொழில் நகரங்களில் வரைமுறையில்லாமல் வளர்ந்து கொண்டுருக்கும் புறநகர் குடியுருப்புகளில் எந்த அடிப்படை வசதிகளும் இருப்பதில்லை.  ஆள்பவர்களுக்கும் அது குறித்து அக்கறையும் உருவாவதும் இல்லை. ஒவ்வொருவரின் அரசியல் கணக்குகளும் முடிவுக்கு வரும் போது சில சமயம் முழித்துக் கொண்டு வந்து விசாரிப்பார்கள். வழிந்தோடும் சாக்கடைகளும், வந்து போய்க் கொண்டுருக்கும் தொற்று நோய்களையும் எவரும் பெரிதாக பொருட்படுத்துவதில்லை. மனம் என்பது அடுத்த போராட்டத்திற்கு தயாராய் இருக்கும் போது உடல் எதையும் ஏற்றுக் கொண்டு விடுகின்றது.

தொடக்கத்தில் மாத வாடகை 300ல் தொடங்கியது.  இப்பொதேல்லாம் 1500 கொடுத்தாலும் ஐந்து மாதம் கழித்து வா? என்றாலும் வீட்டு வரிசை போலவே வரிசை கட்டி நிற்கிறார்கள். கிராமங்களில் வாழ்ந்த பெண்மணிகளுக்கும், அவர்கள் நகர்புறங்களில் வாழத் தொடங்கும் போது அவர்களின் உழைப்புக்கும் பெரிதான எந்த வித்யாசங்களும் தெரியவில்லை. 

கணவனோ, அண்ணன்,தம்பி, மகள், மகன் என்று குடும்ப சகிதமாக உழைத்துக் கொண்டுருந்தாலும் ஆசையோ அக்கறையோ தினந்தோறும் 19 மணி நேரம் ஒவ்வொருவரையும் இயக்க வைத்துக் கொண்டுருக்கிறது.

ஒவ்வொரு நாளும் காலை எட்டு மணிக்குள் நிறுவனத்திற்குள் இருக்க வேண்டும். காலை ஐந்து மணிக்குள் சமையல் செய்தாக வேண்டும். இதற்கிடையே மற்றொரு வேலை. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.  அவசரமாய் டப்பாவில் காலைக்கும் மதியத்திற்கும் சேர்த்து அடைத்துக் கொள்ள வேண்டும். இரவு ஒரு மணிக்கு வேலை முடித்து வந்தாலும் இதே நேரத்தில் தான் எழுந்து வேலை செய்ய வேண்டும். இதற்கெல்லாம் மேல் ராத்திரி குடித்து விட்டு புரண்டு கிடக்கும் அந்த கண்வன் என்ற தெயவத்தை கண்டும் காணாமல் கடந்து செல்ல வேண்டும்.

கைபட்டு கால்பட்டு கண் முழித்து விடடால் அன்று பஞ்சாயத்து முடிய மதியம் ஆகிவிடும்.

நிறுவனங்களில் கூட்டிப் பெருக்குபவர்கள் முதல் தைப்பவர் வரைக்கும் கலந்து கட்டி அடிக்கும் கலாச்சார வாழ்க்கை.  இதற்குள் மொட்டுகளும் அரும்பு களுமாய் பள்ளிக்கூடத்தை பார்க்கும் பிஞ்சுகள்.  அம்மா சென்றதும் தனக்குத் தானே உதவியாய் பைக்கட்டை சுமந்து அருகே இருக்கும் அரசாங்கப் பள்ளி யில் எதிர்கால கனவுகளுடன் உள்ளே நுழைபவர்களுக்கு எந்த பிடிமானமும் இருக்காது. 

மாலை திரும்பி வரும் போது மறுபடியும் தனக்குத் தானே உதவியாய் கழுவாத பாத்திரங்களுடன் பார்த்து எடுத்து பசியாறி அம்மாவுக்காக காத்து இருக்க வேண்டும். அறிவை வளர்க்க உதவும் புத்தகங்கள் பல நாட்கள் ஏதோவொரு மூலையில் அனாதையாய் கிடக்கும்.  மொத்த குடும்பமும் ஏதோவொரு நிறுவனத்தில் துணியோடு துணிவோடு போராடிக் கொண்டு இருப்பார்கள்.

ஒன்பது மணிக்கு வேலை முடிந்து உள்ளே நுழையும் அம்மாவின் குரலை பாதி தூக்கத்தில் காதுகள் கேட்கும்.  மூளை உணராது.  12 மணி நேரமும் நின்று கொண்டே பார்த்த வேலையில் பாதி உயிருடன் வந்து நிற்கும் அம்மாவுக்கும் மூலைக்கொன்றாய் புரண்டு கிடக்கும் குழந்தைகளின் பாசத்தை விட அவரின் உயிர் கேட்கும் பசியே பிரதானமாய் இருக்கும். குழந்தைகள் கொட்டி கவிழ்த்து இருந்தால் திட்டக்கூட முடியாமல் இருப்பதை உண்டு ஓரமாய் சுருள வேண்டும். காலையில் எழும் போது காதுக்குள் கேட்கும் இரைச்சல் காணாமல் போயிருக்கும்.  பழகிவிட்டால் கட்டாந்தரை கூட பஞ்சு மெத்தை தான்.

இது போன்ற வீடுகளில் வந்து வசிப்பவர்கள் எவரும் வறுமைக் கோட்டுக்குள் இருப்பவர்கள் என்று அவசரப்பட்டு முடிவு செய்து விடவேண்டாம்.  வாழ்ந்த, வாக்கப்பட்ட ஊரில் காற்றோட்டமான வீடுகளும், வயலும் வரப்புகளுடன் வாழ்ந்தவர்கள். 

ஆனால் காலம் செய்த கோலத்தில், கட்டிய கணவன் உருவாக்கிய அக்கிரமத் தில் அவசரமாய் வந்து சேர்ந்தவர்கள். எஞ்சிய நாட்களையும் வாழ்ந்து தான் ஆகவேண்டுமென்று இந்த நரகத்தில் தினந்தோறும் சொர்க்கத்தை பார்த்ததுக் கொண்டுருப்பவர்கள்.

இது போன்ற வீடுகளை உருவாக்கியவர்களை எந்த வார்த்தைகள் கொண்டும் நிச்சயம் நீங்கள் பாராட்டலாம். குறுகிய இடத்துக்குள் உருவாக்கிய அவர்களின் சிக்கன புத்தி அவர்களுக்கு மாதம் மாதம் பணம் சுரக்கும் காமதேனு போல படியள்ந்து கொண்டுருக்கும். இதற்குள் வந்து வாழ விரும்புபவர்கள் பயன் படுத்தும் மின்சாரம் முதல் வைத்துள்ள சம்சாரம் வரைக்கும் சரியான முறையில் காபந்து செய்து வாழ பழகியிருக்க வேண்டும். காரணம் இப்போதெல்லாம் பத்திரிக்கைகளுக்கு அதிக தீனி போடுவதே இந்த கள்ளக்காதல் செய்திகள் தான்.

சென்னை கூவம் அருகே வாழ்ந்து கொண்டுருப்பவர்களை விட ஒரு படி மேல்.  அவ்வளவுதான்.  இது நொய்யல் ஊர். நொந்நு வாழ்ந்தாலும் தினந்தோறும் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் திரு ஊர். பத்து வீடுகள் என்றாலும் ஒரே ஒரு கழிப்படவசதி.  பக்கத்தில் குளியல் அறை.  அவசரம் என்றாலும் ஆத்திரம் வந்தாலும் அடக்கி அடங்கி வாழ பழகுதலின் முதல் பயிற்சிக் களம் இங்கிருந்து தான் தொடங்குகிறது. ஒரு வாரத்திற்குத் தேவைப்படும் மொத்த தண்ணீரும் சேகரித்த டப்பாக்களில் அந்த குடியிருப்பு முழுமையும் இருக்கும். 

நாம் தவறி விழுந்தாலும் ஏதோ ஒரு தண்ணீர் டப்பாவில் தான் முட்டிக் கொள்ள முடியும்.  வாரத்தில் எந்த நாளில் பொதுக் குழாயில் குடிதண்ணீர் வரும்மென்று மேயருக்கும் தெரியாத ரகஸ்யம்.

உடைபட்ட குழாய்கள் தாண்டி, ஒழுகிய தண்ணீர் போக வாரம் என்பது சில சமயம் மாதம் கூட ஆகலாம்.  அதனால் என்ன நாலு சந்து தாண்டிப் போனால் நடு சாமத்தில் அமைதியாய் பிடித்து வர அவர்களுக்கும் தெம்பு இருக்கிறது. இவர்களிடம் ஓட்டு வாங்கி அடுத்து முறையும் ஆட்சியைப் பிடித்து விடலா மென்று ஊரெங்கும் கழுதை கூட திங்க முடியாத ப்ள்க்ஸ் போர்டு கட்ட அவர்க ளிடம் பணமும் இருக்கிறது. ஜனநாயகவாதிகள் என்பவர்கள் இங்கு கட்டப் பஞ்சாயத்து காப்பாளர்கள். அடித்தட்டு மக்கள் முதல் உழைத்து மேலே வரும் தொழில் அதிபர்கள் வரைக்கும் கடைசியில் வந்து சிக்குவது இவர்களிடம் தான். சிக்கல், முக்கல், முணங்கல் என்று அத்தனையும் தீர்த்து விடும் சர்வ ரோக நிவாரண மனிதர்கள்.

அடித்தட்டு மக்களுக்கு எப்போதும் எதுவும் தேவையில்லை. எதிர்பார்ப்பு இல்லாத வாழ்க்கை. அதிகபட்ச ஆசை என்பதே பல சமயம் நூறு ரூபாய்க்குள் கூட முடிந்து விடக்கூடும். நடுத்தட்டு மக்களுக்கோ முதலில் தன்னைக்  தங்கள் குடும்பத்தைக் காத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம்..  

இது தன்னை நம்பி இருப்பவர் களுக்காகவே வாழ்ந்தாக வேண்டிய கட்டாய வாழ்க்கை.  அளவான வருமானம் வாழ்க்கை முழுக்க அமையப் பெற்ற அத்தனை பேர்களும் ஆயுள் முழுக்க ஒரு விதமான அடிமைகள் தான்.

எத்தனை காரணங்கள் தத்துவங்கள் சொன்னாலும் இந்த வாழ்க்கை என்பதை யாருக்காவோ ஒவ்வொருவரும் வாழ்ந்து தான் தொலைக்க வேண்டியுள்ளது. நாதாரிகள் நாடாள வேடதாரிகள் தத்துவம் பேச மௌன சாட்சியாய் நாம் அத்தனையையும் பத்திரிக்கைகள் தரும் செய்திகள் வைத்து புரிந்து படித்து விட்டு அடுத்த வேலைகக்கு அவசரமாய் செல்ல வேண்டியுள்ளது. 
நாட்டுக்கு ஜனநாயகமே சிறப்பு என்பதை அந்த குடியிருப்பில் ஞாயிறு தோறும் கேட்கும் கலகலப்பில் உணரமுடிகின்றது. பணம் துரத்தி உருவாகும் அத்தனை கவலைகளும் அவர்களின் வாழ்க்கையைப் பார்த்து மறைந்து போய்க் கொண்டு இருக்கிறது.

30 comments:

  1. சிறப்பான பதிவு நண்பா

    ReplyDelete
  2. அடித்தட்டு மக்களுக்கு எப்போதும் எதுவும் தேவையில்லை. எதிர்பார்ப்பு இல்லாத வாழ்க்கை. அதிகபட்ச ஆசை என்பதே பல சமயம் நூறு ரூபாய்க்குள் கூட முடிந்து விடக்கூடும்////


    இதை ஏன் அடித்தட்டு மக்களுக்குரிய ஒன்றாக கருதுகிறிர்கள். எல்லோருக்கும் தேவையான ஒன்று தான். எதிர்பார்ப்பு இல்லாத வாழ்க்கை, எளிமையான வாழ்க்கை,

    அவர்களை விட நாம் எந்த விதத்தில் உசத்தி. எல்லாவற்றுக்கும் ஆசைப்பட.

    ReplyDelete
  3. எல்லா பெரு நகரங்களிலும் இதைபோலொரு இழிவு வாழ்வை வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.

    அதிலும் நிறைய பேர் பிளாட்பார்மில்தான் எல்லாமே..

    ஓட்டு வாங்கிப் போனவனுக்கு பெட்டி நிரம்ப வேண்டும் என்ற கவலை... இவர்களுக்கு ஒருவேளை உணவே கவலை...

    ReplyDelete
  4. குளிரூட்டப்பட்ட அலுவலகத்தில் உட்கார்ந்து படிக்கும் போது, புழுக்கமாகவே இருக்கிறது இந்த மக்களைப் பற்றி படிக்கும் போது :(.

    ReplyDelete
  5. வருத்தமூட்டும் நிஜங்கள்.

    ReplyDelete
  6. பெருமூச்சு விடலாம்... மேற்கொண்டு யோசிப்பதற்குள் நாமும் மூச்சுப்பிடித்து தம் கட்டி ஓடியே ஆகவேண்டும். முதலாளித்துவத்தின் நுகத்தடியில் பூட்டப்பட்ட மாடுகள்தாமே நாம்?!

    ReplyDelete
  7. சுடும் தலைப்பு!

    //தொழில் நகரங்களில் வரைமுறையில்லாமல் வளர்ந்து கொண்டுருக்கும் புறநகர் குடியுருப்புகளில் எந்த அடிப்படை வசதிகளும் இருப்பதில்லை. ஆள்பவர்களுக்கும் அது குறித்து அக்கறையும் உருவாவதும் இல்லை.//

    பொதுவாகவே இது நம் அரசியல்வாதிகளின் தந்திரம்! அடிப்படை வசதிகள் என்பதை என்றுமே மக்களுக்கு செய்து தர மாட்டார்கள். உணவு, இருப்பிடம், தண்ணீர் என்று மக்களை அலைக்கழித்துக் கொண்டே இருந்தால்தால் அவர்களை யோசிக்க விடாது இவர்கள் கல்லா கட்ட முடியும்.

    யோசித்துப் பாருங்கள் தேவையான எல்லா வசதிகளும் கிடைத்துவிட்டால், ஒரு கோப்பைத் தேனீருடன் இவனுக்கு ஏன் ஓட்டு போடனும், ஒன்னும் சரியா செய்யலையே! வேறு யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என மக்களாகிய நாம் யோசிக்கத் துவங்கிவிடுவோம்.

    ஓடவிடுங்கள் பெட்ரோலுக்கு, ரேஷனுக்கு, தண்ணீருக்கு, மருத்துவத்துக்கு, சாலைக்கு, தெருவிளக்குக்கு, வீட்டுக்கு, சுகாதாரத்துக்கு, சோத்துக்கு.......


    எங்கிட்டிருந்து யோசிக்கிறது????

    ReplyDelete
  8. சிறப்பான பதிவு ஜோதிஜி!

    வருத்தமான உண்மைகள்...என்ன சொல்றதுன்னு தெரியல?

    தூங்க செல்லும் நேரத்தில் இதை ஏன் நான் படித்தேன்?

    கனத்த மனத்துடன்,
    -ரவிச்சந்திரன்

    ReplyDelete
  9. நந்தா ஆண்டாள் மகன்

    வித்யாசமான பெயரைப் போலவே கனத்த விசயங்களை அடங்கிய உங்கள் வலைதளத்தை அறிமுகம் செய்தமைக்கும் நன்றி.

    ரமேஷ் நீங்கள் சொன்னதை மறுக்கமுடியாது. ஒரே விசயத்தில் மட்டும் தான் உசத்தி. கடன் வைத்துருக்கும் தொகையில்.

    வாருங்கள் கந்தசாமி ஐயா. இரு வார்த்தைகளில் தெளிவான விமர்சனம்.

    மௌனம் கலைத்து உள்ளே வந்தமைக்கு நன்றி மனிதா.

    ReplyDelete
  10. வாங்க யோகேஷ். வருகைக்கு கருத்துக்கும் நன்றி,

    மக்களை அலைக்கழித்துக் கொண்டே இருந்தால்தால் அவர்களை யோசிக்க விடாது இவர்கள் கல்லா கட்ட முடியும்.


    எங்கிட்டிருந்து யோசிக்கிறது????

    ஷங்கர் தல இன்னும் வரல. அவர் சார்பாக என் முத்தங்கள். ரொம்பவே பின்னிட்டீங்க.

    ரவி கனத்த மனதை இன்று தான் இறக்கி வைக்க முடிந்தது. படித்தவர்களுக்கும் இருக்கும் போல. தமிழ்மண பட்டை பயமுறுத்துகிறது. இதுவரைக்கும் காணாத அதிசயம்.

    மெனக்கெட்டு சொடுக்கிய அத்தனை நண்பர்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  11. ரவி இங்கு சாமிநாதன் போல சென்றுள்ள கங்காரு இடத்திலும் இதை வாசிக்க வந்த உங்களுக்கு மற்றொரு நன்றி.

    ReplyDelete
  12. பத்துக்கு பத்து அடி வீட்டில் வசிக்கும் குடும்பங்களின் வாழ்வு நிலையை அப்படியே படம் பிடித்து காட்டி இருக்கிறீர்கள்.

    படிக்கும் போதே நெஞ்சமெல்லாம் கனத்து விட்டது.
    சிறந்த படைப்பு ஜோதிஜி அவர்களே!

    உங்களிடமிருந்துதான் இதுபோன்ற படைப்புகளை எதிர் பார்க்கலாம்.

    ஏழையின் வாழ்க்கைப் பதிவு அருமை.

    ReplyDelete
  13. நிஜங்கள் சுடத்தான் செய்யும் நண்பரே.. இவர்களுக்கான ஆலோசனை முகாம்களோ இல்லை மருத்துவ உதவிகளோ நடக்கின்றனவா?

    ReplyDelete
  14. திருப்பூரில் வேலை செய்யும் வெளி மாநிலத்து மக்களாகட்டும், அல்லது வெளி மாவட்ட மக்களாகட்டும்,அல்லது உள்ளூர் மக்களாகட்டும் அடிப்படை வசதிகள் இல்லாமல்தான் வாழ்க்கையை வாழ்ந்த்து இருக்கின்றார்கள். செய்த வேலையையே திரும்ப திரும்பி செய்தாலும் உழைத்தால் பலன் உண்டு என்ற அடிப்படைக்கனவுடந்தான் அடுத்த கட்டத்துக்கு நகர முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். இதில் வெற்றி பெற்றவர்கள் தோல்வி அடைந்தவர்கள் விகிதாச்சாரம் சரிசமம் அல்ல.

    ReplyDelete
  15. ரொம்பவும் பாதிக்கிறது மனசு.

    ReplyDelete
  16. நகரமயமாக்கல் தன்போக்கில் மனிதர்களைக் கூண்டில் அடைக்கப்பட்ட மிருகங்கள் போல மாற்றிச் செல்கிறது... என்ன புலம்பி என்ன பயன்? எதிர்த்துப்போரிடத் திராணியின்றிக் குன்றிப் போயுள்ளோம்

    ReplyDelete
  17. அந்த இடங்களை கடக்கும் போதெல்லாம், எப்படி இந்த மக்கள் அங்கு வசிக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்ப்பேன். வாழ்ந்தே ஆக வேண்டும் என்கிற போது, சாக்கடை, தொற்று நோய் எல்லாம் மறந்து விடுகிறது. தேவை, இருக்க ஓரிடமும், இருவேளை(மூன்றுவேளை சந்தேகம்தான்) உணவும் தான்.

    // எத்தனை காரணங்கள் தத்துவங்கள் சொன்னாலும் இந்த வாழ்க்கை என்பதை யாருக்காவோ ஒவ்வொருவரும் வாழ்ந்து தான் தொலைக்க வேண்டியுள்ளது. //
    இதுதான் உண்மை. அருமையான வரிகள்.

    ReplyDelete
  18. வருத்தமூட்டும் நிஜங்கள்.

    ReplyDelete
  19. உங்கள் பதிவு நன்றாக உள்ளது.
    கூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு . உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி.
    Link:www.secondpen.com/tamil/what is jaiku?

    ReplyDelete
  20. நல்லதொரு பதிவு... நிஜங்கள் வலியை ஏற்படுத்துகின்றன...

    ReplyDelete
  21. கண்டிப்பா...ஒவ்வொரு பெருநகரங்களிலும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் இப்படியே இருக்கிறது...
    இப்பொழுதும் சைதாபேட்டை பாலத்தை கடந்து போகையில் எப்படி அந்த இடத்தில் மக்கள் வாழ்கிறார்கள் என்று ஐயமாகவே இருக்கும்..
    ரேசன் அட்டை இல்லாவிட்டால் நாய்களாக கூட மதிக்கபடமாடார்கள் இம்மக்கள், அரசியல்வாதிகளால்...
    வலையில் படித்துவிட்டு உடனடியாக நமது அடுத்த வேலையை கவனிக்க போகும்போதுதான் புரிகிறது..
    உலக பொருளாதார கொள்கைகள் எப்படி ஒரு தனிமனிதனை இவ்வளவு மனசாட்சி இல்லாதவனாய் மாற்றியிருக்கிரதென்பதை.....
    \\பணம் துரத்தி பறவைகள்...//
    மிகச் சரியான தலைப்பே..!

    ReplyDelete
  22. மனசில் வலி எடுக்கவைக்கும் பதிவு.

    அரசன் சரி இல்லைன்னா.............. இப்படித்தான்..... ஆகும்.

    சீராகத் திருத்தணும் என்றால்
    முதலில் எங்கே இருந்து ஆரம்பிப்பது?

    ReplyDelete
  23. மக்களே தாக்கத்தை உருவாக்கிய ஒவ்வொருவருக்கும் நன்றி. உணர்ந்த உங்கள் அணைவருக்கும் நன்றி.

    எங்கேயிருந்து ஆரம்பிப்பது?
    நாம் தான். நம்மில் இருந்துதான். வேறு வழி ஏதும் உள்ளதா டீச்சர்.

    லெமூரியன் சென்னைக்கு வந்து விட்டு திரும்பும் ஒவ்வொரு முறையும் இந்த தாக்கம் என்னுள் மறைய நாளாகும்.

    பிரகாஷ்

    சாமக்கோடங்கி என்ற பெயர் ரொம்பவே என்னை கவர்ந்தது. காரணம் உண்டு. வருகின்றேன் உங்களை நோக்கி.

    குமார் பத்மாவதி நன்றி.

    ReplyDelete
  24. இளங்கோ நான் எனக்குள் வைத்துருக்கும் வரிகளை அப்படியே வழிமொழிந்தமைக்கு நன்றி.

    மனிதா நீங்கள் சொன்னது தான் முற்றிலும் உண்மை

    தவறு நன்றி.

    பெருசு.

    நீங்க தானா? இத்தனை அமைதியா?

    ஆச்சரியமாயிருக்கு.

    ReplyDelete
  25. நன்றி அபுல்பசர்.

    பாண்டியன் நாமே நமக்கு உதவி.

    ReplyDelete
  26. மனம் என்பது அடுத்த போராட்டத்திற்கு தயாராய் இருக்கும் போது உடல் எதையும் ஏற்றுக் கொண்டு விடுகின்றது//

    உண்மைதான் ஜோதிஜி செய்வதற்கு வேலையும் உண்பதற்கு உணவும் கிடைக்கிறது அவ்வளவே..
    பாவம் அவர்கள்..

    ReplyDelete
  27. எனக்கு இப்போதெல்லாம் கோவம் வருவது பெற்றோர்கள் மேல் தான். வாழ்க்கை கஷ்டம் என்றாகிவிட்டது ,அப்புறம் ஏன் இன்னும் குழந்தைகள்?அந்த குழந்தைகளும் அல்லவா கஷ்டப்படவேண்டும்.அதிகம் கேட்டால், சொந்தக்காரங்க மலடின்னு சொல்வாங்களே.இப்படி அடுத்தவருக்ஆக நாம் வழ்வதில் தான் நிறைய ப்ரச்சினை.எங்களுக்கு குழந்தைகள் கிடையாது.this was choice made keeping in mind all the prejudices that we have and also the way world is.இதை வெள்ளிபடையாக சொல்ல காரணம் யாருக்கேனும் உதவியாக இருக்குமா என்று தான்.

    இந்த மாதிரி வீடுகளிலிருந்து வரும் குழந்தைகள் பொகும் பள்ளிகள் ஒரு மைதானமோ பாதுகாப்போ இல்லாதவை...மனது துக்கபடுகிறது...

    ReplyDelete
  28. செய்வதற்கு வேலையும் உண்பதற்கு உணவும் கிடைக்கிறது அவ்வளவே..

    தேனம்மை எளிதாக திருப்பூர் பணியாளர்களின் வாழ்க்கை சொல்லி விட்டீர்கள்.

    திரு. உங்கள் விமர்சனம் சற்று கோபத்தை வரவழைத்தாலும் யோசித்துப் பார்த்தால் சரிதானோ என்று நம்ப வைத்து விடும் போலிருக்கு.

    ReplyDelete
  29. முண்டாசு! தன்னைச் சுற்றி நிகழும் அத்தனை சம்பவங்களையும் சுவாசிக்கிறீங்கய்யா...

    அழுத்தமான கட்டுரை!

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.