21 நாட்கள் ஒன்றைத் தொடர்ந்து செய்தால் அதுவே பழக்கமாக மாறிவிடும். அதனையே தொடர்ந்து செய்து வந்தால் இயல்பான குணமாகிவிடும் என்கிறார்கள். மிகச் சாதாரண செக்யூரிட்டி பதவியில் இருப்பவர்கள் முதல் பெரிய நிலையில் உள்ளவர்கள் வரைக்கும் முழுமையாக உள்வாங்கி கவனித்துள்ளேன். தத்தமது வேலை நீடிக்க ஒவ்வொருவரும் என்ன முடிகின்றதோ அதைக் கற்றுக் கொண்டு தான் இருக்கின்றார்கள். உழைக்கவும் தயாராக இருக்கின்றார்கள்.
ஆனால் வட இந்திய அரசியல்வாதிகள் எப்போதும் ஆச்சரியமளிப்பவர்களாகவே உள்ளனர். பீகார் மற்றும் மேற்கு வங்கம் தொழிலாளர்களை இங்கு வேலை வாங்குவது மிகவும் கடினம். பீகாரிலிருந்து அதிகமான பேர்கள் யூபிஎஸ்சி தேர்வில் வருடந்தோறும் வென்று வருகின்றார்கள். ஆனால் இங்கே பணிபுரியும் தொழிலாளர்களைக் கவனித்தால் அவன் மண்டையை உடைத்து உள்ளே என்ன தான் இருக்கின்றது என்று பார்த்தே ஆக வேண்டும் என்ற நிலையில் தான் இருக்கின்றார்கள். சோம்பேறித்தனம், சுகாதாரமின்மை, உழைக்க மறுத்தல், கல்வியறிவு மிகக் குறைவு, வெளியுலக மனிதர்களுடன் பழகாமல் விலகி நிற்கும் தன்மை, சண்டை என்று வரும் போது மிருகம் போல மாறுதல். தங்கும் மற்றும் பணிபுரியும் இடத்தை மோசமாக வைத்துக் கொள்ளுதல் என்று பலவற்றைச் சொல்லிக் கொண்டே செல்லலாம். ஒரு காலத்தில் இந்தியாவின் கலாச்சாரத்திற்கும், கல்வி அறிவுக்கும், உச்சக் கட்ட நாகரிக பண்பாட்டுக்கும் உலகத்திற்கே உதாரணமாக விளங்கிய நகரமிது. ஆனால் சுதந்திரத்திற்குப் பின் வந்து அமர்ந்த ஒவ்வொரு கேவலமான அரசியல்வாதிகளையும் அந்த மண்னையும் மக்களையும் இதற்கு மேல் கீழே இறக்க முடியாது என்கிற அளவுக்குக் கெடுத்துக் குட்டிச் சுவராக மாற்றிவிட்டனர். இன்று மூன்று தலைமுறைகள் அறிவற்ற மிருகங்களாக மனித உருவில் உண்ண உறங்க என்று மாற்றி வைத்து விட்டுச் சென்றுள்ளனர். தப்பிப் பிழைத்தவர்கள் அனைவரும் பொருளாதார ரீதியாகவும் சாதியப் பின்புலத்திலும் மேலே வந்தவர்கள்.
ஒடுக்கப்பட்டச் சமூக மக்கள் அங்கே படும் துன்பமென்பதெல்லாம் இன்று வரையிலும் முழுமையாக வெளியே வரவில்லை. ஒரு கட்டுரையின் ஒரு பகுதியைக் கீழே இணைத்துள்ளேன். அதில் வரும் வரிகள் என்பது அடுத்த இரண்டு நாட்கள் என்னை ரணமாக்கியது. ஒரே ஒரு புல்லாங்குழல் பத்து ரூபாய் என்பதனை வாங்கக்கூடக் குறிப்பிட்ட பகுதியில் நிலவும் வறுமையைப் பற்றி எழுதி உள்ளனர். மோடி ஆட்சிக்கு வந்த பின்பு இந்த நிமிடம் வரைக்கும் பீகார் என்பது எப்படியுள்ளது? எவ்விதமான கட்டுமான அமைப்பு மாற்றம் பெற்றுள்ளது என்பதனை என்னால் அறியவே முடியவில்லை. ஆனால் லல்லு பிரசாத் தற்போது சுகமாக அனுபவித்து வரும் வாழ்க்கை என்பது கொடுமையானது. மேல்நிலைப்பள்ளியே தேவையில்லை என்பதாக அவர் ஆட்சியில் இருந்த போது உருவாக்கிய அயோக்கியத்தனத்திற்கு இறைவன் என்று ஒருவன் இருந்தால் இவனை அவ்வளவு சீக்கிரம் சாகவிடக்கூடாது என்று தான் மனதில் யோசித்ததுண்டு.
இதை விடக் கொடுமை மேற்கு வங்கம். அவன் எத்தனை கொலைகள் செய்து விட்டு இங்கே தப்பி வந்துள்ளான் என்பதனை உளவுத்துறை வந்து கைது செய்யும் வரைக்கும் நம்மால் யூகிக்கவே முடியாது. அக்மார்க் காட்டுமிராண்டிகள். பெரும்பாலும் எல்லை கடந்து வந்தவர்கள்.
சில தினங்களாகத் தற்போதைய பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பாலியல் ரீதியாகப் பேசி பெண்களை இழிவுபடுத்தி விட்டார் என்று பலரும் குய்யோ முய்யோ என்று குதிக்கின்றார்கள். சிரித்துக் கொண்டேன். ஜெயலலிதாவை வீரபாண்டி ஆறுமுகம் சட்டசபையில் வைத்து எப்படிப் பேசினார் என்று தெரிந்தவர்களிடம் கேட்டுப் பாருங்கள். திமுக வில் உள்ள ஒவ்வொருவரும் 100 நிதிஷ் குமார் தான் என்பதனை எப்போதும் நீங்கள் மறந்துவிடக்கூடாது. அதனால் தான் இவர்கள் போற்றும் ஈவெரா மிகச் சரியாக வெளிப்படையாகவே சொல்லியுள்ளார்.
பலமுறை நிதிஷ் குமார் மற்றும் லல்லு மகன் (துணை முதல்வராக இருப்பவர்) பத்திரிக்கையாளர்களிடம் இந்தியில் பேட்டி அளிப்பதைப் பொறுமையாகப் பார்த்துள்ளேன். தமிழகத்தில் எல்கேஜி பரீட்சை வைத்தால் தோல்வி ஆகக்கூடிய புத்திசாலிகள் போல அவர்கள் இருவருக்கும் எதைப் பற்றித் தான் தெரியும் என்று பலமுறை குழம்பி யோசித்துள்ளேன். செட்டிங் பத்திரிக்கையாளர்கள் தான் எல்லா இடங்களிலும் இருப்பார்கள் போல.
நிதிஷ் குமார் சொன்ன வாசகத்தின் ஒரு பகுதி என்பது உறவு கொள்ளும் போது கடைசி சமயத்தில் ஆண் தன் உறுப்பை வெளியே எடுத்துக் கொண்டால் போதும். கர்ப்பப் பைக்கு விந்தணு செல்லாது. படித்த பெண்கள் இதனை தங்கள் கணவனுக்கு கற்றுக் கொடுத்து விடுவார்கள். எனவே குழந்தை உருவாகாது. ஜனத்தொகை கட்டுப்படுத்தப்படும் என்பதனை கட்டை விரலையும் ஆள் காட்டி விரலையும் ரவுண்ட் போல மாற்றி ஒரு விரலை உள்ளே விட்டு வெளியே இழுத்து இப்படி அதனை சுவாரசியப்படுத்த வேண்டும் என்று அலட்சிய மனப்பான்மையில் பேச பின்னால் இருக்கும் அவர் கட்சி சமஉ ஒவ்வொருவரும் சிரிக்கின்றார்கள்.
இப்போது எனக்குள் ஒரு கேள்வி உருவானது. சமீப காலமாகத் தமிழகத்தில் யூ டியூப் கலாச்சாரத்தில் பாலியல் சார்ந்த கட்டுரைகளை ஒலி வடிவத்தில் பலரும் பதிவேற்றி வருகின்றனர். அதில் பெண்கள் தான் பேசுகின்றார்கள். கவர்ச்சிகரமாகப் பேசுகின்றோம் என்ற நினைப்பில் முக்கல் முணங்கலுடனும் பேசுகின்றார்கள். இது தவிர தன் முகத்தை காட்டக்கூடிய பெண்கள் தைரியமாகக் கூச்சமின்றி ஒரு பெட் ல் பெண் எதையெல்லாம் எதிர்பார்ப்பாள் தெரியுமா? என்று கேட்கிறதையெல்லாம் பார்க்கும் போது எனக்கு நிதிஷ் மேல் கோபமே வரவில்லை. வெளிநாடுகளில் பாலியல் படங்களில் அம்மணமாக உறவுக்காட்சிகளில் நடிக்கும் நடிகைகள் போலத்தானே இங்கே தமிழ்கூறும் நல்லுலகத்தைச் சார்ந்த இந்த துறையில் உள்ள பெண்கள் நடந்து கொள்கின்றார்கள். இதன் அடுத்த கட்டம் ஆடைகளைக் குறைத்தல். அடுத்தது முக்கால் நிர்வாணம். கடைசியில் சொல்லவே வேண்டாம். பணம் எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்லும்.
இங்கு எல்லாமே காசு. காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை பார்ப்பது படிப்பது பழகுவது என்பது அனைத்தும் நமக்கு என்ன லாபம்? உரையாடினால் யாரால் லாபம்? இவருடன் பேசித்தான் ஆக வேண்டுமா? அழைப்பை தவிர்ப்பதன் மூலம் ஒதுக்குவது, போன்ற நவீன கால ஆளுமை சார்ந்த சிந்தனைகள் உள்ளவர்களுடன் பழக வேண்டிய சூழலில் எதுவும் எனக்கு அதிர்ச்சியாகவே தெரியவில்லை.
நிதிஷ் என்பதால் ஒரே நாளில் உலகம் முழுக்க போய்ச் சேர்ந்து விட்டார். அவ்வளவு தான்.
No comments:
Post a Comment
கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.