அண்ணாமலை அவர்கள் ஒரு மாவட்ட ஆட்சியர் என்ற நிலையை அடைய மாணவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதனைப் பேசிய கீழே உள்ள பேச்சில் அவர் தொட்டுள்ள விசயங்களை கீழ்க் கண்டவாறு வகைப்படுத்திப் பார்க்கின்றேன்.
சமூகவியல்
தேர்வு முறைகள்
உளவியல்
படிக்கும் முறைகள்
லட்சியத்திற்காக தங்களை தயார் படுத்திக் கொள்ளும் முறைகள்
உலக அரசியல்
இந்திய அரசியல்
மாநில அரசியல்
மாவட்ட ஆட்சியர் பண்பு மற்று குணநலன்கள்
மாவட்ட ஆட்சியர் நெறிமுறைகள்
இந்தியாவை உலக நாடுகள் ஏற்கனவே எப்படி பார்த்தன
இந்தியாவை உலக நாடுகள் தற்போது எப்படி பார்க்கின்றன
கொரோனாவை இந்தியா வென்ற வரலாறு
மோடி உருவாக்கியுள்ள இந்தியா
வெளிநாட்டு அதிபர்கள் மோடியை எப்படி பெருமையாக பேசுகின்றார்கள்
தேர்வில் வென்றால் உலகம் எப்படி பேசும்
தேர்வில் தோற்றால் நாம் அடுத்து என்ன செய்ய வேண்டும்
Sociology
Selection methods
Psychology
Ambition
Methods of reading
Methods of preparing oneself for ambition
World politics
Indian politics
State politics
District Collector Traits and Qualities
District Collector Ethics
How the world has already seen India
How the world views India now
The history of India's victory over Corona
India created by Modi
How foreign presidents are proud of Modi?
How the world will talk if you win the exam?
What should we do next if we fail the exam?
மாணவர்கள் கேட்க வேண்டும்.
"சிவில் சர்வீஸ் என்பது உஙகளின் வாழ்க்கை சார்ந்த பணிக்கான தொடக்க நுழைவு வாயில்" /அண்ணமலை அற்புத உரை
அண்ணாதுரை வெற்றி பெற்றதற்குக் காரணம்.
1. உன்னை ஏமாற்றுகின்றார்கள்.
2. உன் உரிமையைப் பறிக்கின்றார்கள்.
3. வடவர்கள் நம்மை ஏமாற்றுகின்றார்கள்.
4.
நம் மேல் ஆதிக்கம் செலுத்துகின்றார்கள்.
5. நம் மொழியைப் பேசக்கூடாது என்கிறார்கள்.
5. அவர்கள் இந்தி மொழியைத் தான் உயர்ந்தது என்கிறார்கள்.
6. நாங்கள் ஆட்சிக்கு வந்தாலும் பசி, பட்டினி இனி இருக்காது.
7. நம் உரிமைகளை நாங்கள் பாதுகாப்போம்.
1949 முதல் 1968 வரை அண்ணாதுரை மேலே சொன்ன வாக்கியங்கள் அடிப்படையில் மாறி மாறி வெவ்வேறு விதமாகப் பேசினார். எழுதினார்.
எப்படி வெள்ளையர்களை விரட்டி அடித்த பின்பு நேரு தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நம் பிரச்சனைகள் அனைத்துக்கும் தீர்வு கண்டு விடும் என்று இந்திய ஏழை எளிய மக்கள் நம்பி ஏமாந்தார்களோ அதே போல அண்ணாதுரை வாக்குறுதிகளும் காற்றில் கலந்து போனது.
ஆனால் இன்று அண்ணா தமிழகத்தை ஆண்டு கொண்டு இருக்கின்றார் என்று கூசாமல் எழுதுகின்றார்கள். பேசுகின்றார்கள்.
ஏழும் மூன்றும் எத்தனை என்று துண்டுச் சீட்டு படிக்கத் தெரியாத மங்குணி கூட்டத்தை ஊடக பலம் தாங்கியிருப்பதால் தமிழக மக்களுக்கு வீக்கு முடி குறித்து இன்னமும் முழுமையாக தெரியாமல் உள்ளது என்பது துரதிஷ்டமே.
ஆனால் காலம் பொறுமையாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டு மட்டும் இருக்குமா?
அண்ணாமலை நேற்று இந்து அறநிலையத்துறை குறித்து அதில் இதுவரையிலும் நடந்து ஊழல்கள் பற்றி 40 நிமிடம் பேசிய பேச்சும், அதன் பின்பு திருமுறை தலங்கள் பாடல் வெளியிட்டு விழா கூட்டத்தில் பேசிய பேச்சுகளையும் முழுமையாகக் கேட்டு முடித்த பின்பு 98 சதவிகிதம் நஞ்சு கலக்கப்பட்ட தண்ணீரை வடிகட்டும் முயற்சியில் தனி மனிதராக இறங்கியுள்ளார் என்றே நினைத்தேன்.
ஒரே நாளில் உண்ணாவிரதத்தை முடித்து வைத்து அற்நிலையத்துறை அதிகாரிகளின் அட்டகாசம் குறித்து ஒரு பேச்சு. அடுத்து உடனே ஓய்வு இல்லாமல் அதே பேச்சையும் சேர்த்து தற்போதைய குழந்தைகள் வாழும் சூழல் குறித்து பேசியுள்ளதற்கு அடுத்து
மதுரையில் தினமலர் மற்றும் கிங் மேக்கர் ஐஏஎஸ் அகடாமி இணைந்து நடத்திய நீங்களும் ஐஏஎஸ் ஆகலாம் என்பதனைப் பற்றி பேசியுள்ளார். கீழே கொடுத்துள்ளேன்.
ஒரு பெரிய குழு தேவை. திமுக உருவாக்கிய தொடக்க காலத்திலேயே அண்ணாதுரை அதைத் தெளிவாக உருவாக்கினார். கட்டமைப்பு என்பதனை படிப்படியாகக் கொண்டு செலுத்தினார்.
தமிழக பாஜக வில் அந்த மாற்றமும் நடைப் பயணத்துக்கு உருவாகும் என்றே நம்புகின்றேன்.
இளைஞர்களைக் கண்டறி
பேச்சாளார்களாக்கு
பயிற்சியளி
விஷத்தை விரிவாகப் புரியவை
மக்கள் அறியாமையைத் தெளிவாக்கு
படிப்படியாக முன்னேறு
அண்ணாமலையின் அடுத்த கட்டம் வேறு விதமாக நகர வாய்ப்புண்டு.
மக்கள் நிஜமான மக்கள் ஆட்சி என்றால் என்பதனை உணர அவர் தரவுகள் மூலம் கடந்த கால அனைத்து அயோக்கியத்தனங்களை வெளிக் கொண்டு வந்து தற்போது அவர் பேசிக் கொண்டு எளிய பாமர மொழியில் ஒவ்வொரு கடைக்கோடி கிராமங்கள் வரைக்கும் கொண்டு சேர்ப்பார்.
அப்போது தான் அவருக்கு நேரம் கிடைக்கும்.
இல்லாவிட்டால் தனி மனிதனாக இப்படி 24 மணி நேரமும் உழைத்துக் கொண்டேயிருக்க வேண்டியது தான்.