பணப்பேய்களுக்கு
பண்பாடு தெரியாது.
நாகரிகமற்ற வாழ்க்கையில்
உழன்று வந்தவர்களுக்கு
நல்ல குடும்ப வாழ்க்கையின்
அருமை புரியாது.
பெண்களை சதைகளாக
பார்த்துப் பழகியவர்களுக்கு
குடும்ப வாழ்க்கை
பிடிக்காது.
மாடல் மாடல் என்று சொல்லி
சிங்கமாக இருந்த
தமிழக மானத்தை
உலகமெங்கும்
அசிங்கமாக பரப்பும்
பன்றிகளை அழித்தொழிப்போம்.
ஆளுநர் பதவியின் மாண்பை நிலை நிறுத்திய தமிழக ஆளுநருக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் . .
வருடத்தின் முதல் சட்டமன்ற கூட்டத்தில் சட்டசபை ஆளுநர் உரையோடு தொடங்குவது மரபு. அந்த வகையில் இன்றைய கூட்டத்தொடரின் முதல் நாளில் ஆளுநர் தனது கடமையாற்ற சட்டசபைக்கு வருகை தந்தார்.
தலைமைச் செயலகம் மூலமாக தமிழக அரசு எழுதிக் கொடுக்கும் உரையை ஆளுநர் வாசிப்பார் என்பது வழக்கமன்றி கட்டளை அல்ல.
அரசு எழுதிக் கொடுப்பதை வாசிக்க வேண்டியது ஆளுநரின் மரபு தான். ஆனால் அவர்கள் எழுதிக் கொடுப்பதை எல்லாம் அப்படியே வாசிக்க வேண்டிய கட்டாயம் அவரக்கில்லை.
அந்த வகையில் அவர் உரையிலிருந்த பல குறிப்பிட்ட வார்த்தைகளை தவிர்த்து விட்டார் என்பதை குற்றச்சாட்டாக வைத்து இன்று ஒட்டுமொத்த திராவிட கூட்டமும் அவர்களின் கூட்டணியும் ஆளுநருக்கு எதிராக கண்டனம் என்ற பெயரில் கதறிக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களெல்லாம் யார்? என்றால் இதே திமுக ஆட்சியின் முதல் சட்டசபை கூட்டத்தில் ஆளுநர் உரையில் ஜெய் ஹிந்த்! என்ற கோஷத்தை நீக்கிவிட்டு அதை ஆளுநரை வாசிக்க வைத்து ஜெய்ஹிந்த் கோஷம் இல்லாமல் ஆளுநரின் உரை இருந்ததன் மூலம் தமிழகம் தலை நிமிர்ந்து விட்டது! என்று ஒரு அடிப்பொடியை வைத்து அதே சட்டசபையில் பேச வைத்து ரசித்த அதே பிரிவினைவாத கூட்டம் தான். இந்திய இறையாண்மைக்கு எதிரான கூட்டம் தான்.
ஆளுநரின் உரையில் இந்திய தேசிய இறையாண்மையின் முழக்கமான ஜெய்ஹிந்த் கோஷத்தை தமிழக அரசு எழுதாமல் விட்டது தமிழக அரசின் தவறு. என்று எந்த ஊடகமும் அன்று குறிப்பிடவில்லை. இது அவையின் மாண்பை மீறிய செயல் . தமிழக அரசு குற்றம் இழைத்து விட்டது. அதன் கூட்டணி கட்சிகளும் இந்த குற்றத்தை ஆதரிக்கிறது இது ஒரு தேச விரோதம் என்று யாரும் அவர்களை கண்டிக்கவோ தட்டிக் கேட்கவோ இல்லை. மாறாக அனைவரும் ஒன்று கூடி ஏதோ தமிழகத்தை தனி நாடாக பிரித்து வாங்கியதைப் போல திருவிழா போல கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
நாங்கள் எதை எழுதிக் கொடுக்கிறோமோ அதைத்தான் ஆளுநர் வாசிக்க வேண்டும் என்ற ஆணவத்தில் அவையின் மாண்பை மீறி அன்று இவர்கள் ஆளுநரை தேசியத்தை அவமதித்தார்கள். ஆனால் அன்று இருந்த ஆளுநர் இருந்ததை படித்துவிட்டு இதுதான் இவர்களின் உண்மை முகம் என்பதை உலகறிய செய்து விட்டு அமைதியாக போய்விட்டார்.
இவர்களின் உண்மை முகத்தை ஆதாரப்பூர்வமாக அறிந்து கொண்ட மத்திய அரசு அதற்குத் தகுந்த பதிலடி கொடுக்கும் சரியான நபரை தேர்வு செய்து தமிழகத்திற்கு ஆளுநராக அனுப்பி வைத்திருக்கிறது. அவரும் அதை இந்த நிமிடம் வரை சரியாகவே செய்து கொண்டிருக்கிறார். ஆளுநர் ரவியே திரும்பி போ! என்று திரும்பிய பக்கமெல்லாம் இவர்கள் கதறிக் கொண்டிருப்பதே அவர் சரியாக தன் கடமையை வெற்றிகரமாக செய்து கொண்டிருப்பதற்கான சாட்சியம்.
உளவுத்துறையை பிண்ணணியாகக் கொண்ட ஒருவரை தமிழக ஆளுநராக நியமித்ததை ஏற்க மாட்டோம். அவரை திரும்ப பெற வேண்டும் என்று அவரின் நியமனம் நடந்த நாள் முதல் ,மத்திய அரசையும் ஆளுநரையும் எதிர்த்து சில்லறைத்தனமான அரசியலை செய்து கொண்டிருப்பவர்கள். அவரின் ஒவ்வொரு பேச்சையும் ஒவ்வொரு செய்கைக்கும் குற்றம் கண்டுபிடித்து அவருக்கும் அவரது பதவிக்கும் களங்கும் கற்பிப்பதையே தினசரி செயலாக செய்து வருகிறார்கள். ஆனால் ஆளுநர் இவர்களை எல்லாம் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.
அந்த வகையில் இன்று சட்டசபையில் அவர் இந்திய தேசிய அரசியலமைப்பின் வழியில் நின்று மாநில அரசு எழுதிக் கொடுத்த உரையை வாசிக்கவும் செய்தார். அதே நேரத்தில் ஆளும் கட்சியின் அவர்களின் சித்தாந்தத்தை அவர்களுக்கு வேண்டிய தலைமைகளின் துதிப்பாடும் அடிவருடும் வேலையை முழுவதுமாக தவிர்த்து இருக்கிறார். அதன் மூலம் ஆளுநர் பதவிக்கான மாண்பையும் அவர் நிலைநிறுத்திவிட்டார். அவருடைய தன்மானம் சுய கௌரவத்தையும் காப்பாற்றி கொண்டார்.
அதே நேரத்தில் சட்டசபையில் ஆளுநர் உள் நுழைந்து அவரின் அறிக்கை வாசிப்பு முடிந்து , அவருக்கு நன்றி கூறும் தீர்மானம் நிறைவுற்று அவர் திரும்பிப் போகும் வரையில், அவையின் மாண்பிற்கும் அரசியலமைப்பின் மாண்பிற்கும் உரிய கௌரவம் கொடுத்து கட்சி அரசியல் பேதம் கடந்து அனைவரும் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதே சட்டசபையின் மாண்பு. அதுவே இதுவரையில் வரலாறு.
ஆனால் இன்று ஆளுநர் வருகை முதல் அவரின் உரை வரை தொடர்ச்சியாக அவரை அவையை விட்டு வெளியேறவும் அவரின் நடவடிக்கைகளையும் குறிப்பிட்டு கீழ்த்தரமாக விமர்சித்து கோஷம் போட்ட எந்த ஒரு கட்சியின் தலைமையோ உறுப்பினர்களையோ பேரவை தலைவரோ முதல்வரோ சைகையால் கூட கண்டிக்காதது, இவை யாவும் அவர்களின் ஆசியோடே முன்கூட்டி திட்டமிடப்பட்டு நடந்தது என்பதற்கான சாட்சியம் எங்கே போனது அவையின் மாண்பு. ?.
தன் சொந்தக் கட்சி உறுப்பினர்களை வைத்து இதையெல்லாம் செய்யப்போனால் தன் கட்சிக்கும் ஆட்சிக்கும் ஆபத்து வந்துவிடுமோ? என்ற முன்னெச்சரிக்கையோடு அடிவருடிகளை ஏவி விட்டு ஆளும் கட்சி செய்யும் இந்த சில்லறைகளை எல்லாம் ஆளுநரும் புரியாதவர் அல்ல. மக்களும் புரிந்து கொள்ளாமல் இல்லை. இதன் விளைவுகளில் இருந்து ஆளும் கட்சியோ அரசோ இனி தப்பவும் முடியாது.
ஆளுநரின் உரை முடிந்த பிறகு அவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முதல்வர் முன்மொழிவார். அந்த தீர்மானத்தின் மீது ஆக்கபூர்வமான விவாதங்கள் நடந்து ஒருமனதாக அந்த தீர்மானம் முழு மனதோடு நிறைவேற்றப்படும். பிறகு அவை அன்று ஒரு நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படும். இதன் காரணம் ஆளுநரின் வருகை மற்றும் அவரின் உரை இவையெல்லாம் அவையின் மாண்பு. அந்நிகழ்வு நடைபெறும் போது வாதம் எதிர் வாதம் என்ற வழமையான அரசியல் விவாதங்கள் கூட அன்றைய தினம் அவையில் இடம்பெறச் செய்யக் கூடாது என்ற உயர்ந்த நெறியோடு தான் அந்த ஒரு நாள் முழுவதும் வேறு எந்த விவாதமும் எடுத்துக் கொள்ளப்படாமல் அவை முழுவதுமாக ஒத்திவைக்கப்படும் வழக்கம் பின்பற்றப்பட்டு வந்தது.
ஆனால் சட்டத்தையோ தேசத்தையோ தேசிய இறையாண்மையையோ பற்றிய புரிதலும் இல்லாத அதன் மீது எள்ளளவிலும் மதிப்பும் மரியாதையும் இல்லாதவர்கள் இதையெல்லாம் பின்பற்றவும் மாட்டார்கள். அவர்களுக்கு இதையெல்லாம் எடுத்துச் சொன்னாலும் அவர்களுக்கு புரியாது. உண்மையைச் சொன்னால் அவர்களுக்கு இதையெல்லாம் சரியாக எடுத்துச் சொல்லும் அளவில் ஒரு புத்திசாலியோ நலன் விரும்பியோ கூட அவர்களிடத்தில் இல்லை என்பதையும், சிரித்துப் பேசி கும்மாளம் இட்டு தோளில் கைப்போட்டு அவர்களை உடன் இருந்து குழி பறிக்கும் ஓநாய்களுக்கு மத்தியில் தான் இன்றைய ஆளும் கட்சியும் அரசும் உழல்கிறது என்பதற்கும் இன்றைய சட்டசபை நிகழ்வு சாட்சியம்.
தன் வருகை தன் அவை உரையை எதிர்த்து சில்லறைத்தனமான கோஷம் போட்டவர்கள் மத்தியில் கூட அதை ஒரு பொருட்டாக மதிக்காமல், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கட்டளை இடாமல், தான் வந்த வேலையை அழகாக முடித்துவிட்டு அமைதியாக அவையை விட்டு வெளியேறி, எனக்கு யாரும் கட்டளை இட முடியாது. சட்டத்தின் வழியில் என் கடமையை நான் சரியாக செய்கிறேன். என் கடமை முடிந்தது . என் இடத்திற்கு நான் போகிறேன் என்று அவர் சொல்லாமல் சொல்லிவிட்டார்.
ஆனால் ஆளுநரை வரவைத்து அவரின் வாயால் தங்களை துதி பாட வைத்து தங்களின் வன்மத்தை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று காத்திருந்தவர்கள், இன்று வாலறிந்த குரங்காக ஒப்பாரி வைக்கிறார்கள். ஆளுநர் உரையை முடித்த பிறகு அவரின் உரைக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை கொண்டு வராமல் அவரின் பேச்சை குற்றம் சொல்லி அவரின் செய்கையை கண்டித்து முதல்வர் பேசுவது எவ்விதமான மாண்பு என்று கேட்பார் இல்லை.
ஆனால் இது போன்ற சிலரை தனமான செய்கைகளை அவையில் அமர்ந்து கேட்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை . அதற்கு பதில் அளிக்க நான் ஒன்றும் அரசியல்வாதியும் இல்லை. என் வேலை முடிந்தது நான் புறப்படுகிறேன் என்று அமைதியாக கிளம்பி போன ஆளுநரை ஏதோ கோஷம் போட்டு விரட்டி அடித்து விட்டோம். என்று வெற்றிக் களிப்பில் மிதந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் ஆளுநர் அவைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இல்லாமல் அவரை அவமதித்தது மூலம் ஒரு பெரும் சிக்கலை தமிழக அரசுக்கு அவரின் அடிப்படைகள் தேடிக் கொடுத்திருக்கிறார்கள். அதையெல்லாம் கண்டிக்காமல் வேடிக்கை பார்த்துவிட்டு ஆளுநர் உரையை விமர்சித்து பேசியதன் மூலம் முதல்வரும் தனக்கான சிக்கலை தானே தேடிக் கொண்டிருக்கிறார் என்பதும் இனிவரும் நாட்களில் அவர்களுக்கு புரியும்.
நாலு வரி செய்தியை கூட யாரோ ஒருவர் எழுதிக் கொடுத்து துண்டுச்சீட்டை கையில் வைத்து படிக்கும் போது கூட அதில் ஆயிரம் தவறுகளை செய்யும் இவர்களுக்கு மத்தியில் எங்கிருந்தோ வந்த ஆளுநர் சில மாதங்களில் தமிழை படிக்க பேச கற்றுக்கொண்டு நிறைந்த அவையில் கூடுமான வரையில் தெளிவாக தமிழில் பேச வேண்டும் என்று முயற்சித்து அதை ஓரளவு அவர் வெற்றிகரமாக பேசியும் இருக்கிறார் . அந்த வகையில் அவருக்கு உண்மையில் தமிழ் மொழியின் மீது பற்றும் மரியாதையும் கொண்ட தமிழர் என்ற உணர்வோடு இருந்த ஒவ்வொருவரும் அவருக்கு நன்றி கூறி பாராட்டி இருக்க வேண்டும். ஆனால் அவரை அவமதித்து சிறுமைப்படுத்தி இருக்கிறார்கள்.
இந்நிகழ்வின் மூலம் தமிழ் தமிழர் என்பதெல்லாம் தமிழக மக்களை ஏமாற்றி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான வெளி வேஷம் என்பதும், அவர்களுக்கு தேவை ஆட்சி அதிகாரமும் அதன் மூலம் இந்த மண்ணையும் மக்களையும் தேசிய நீரோட்டத்தில் இருந்து பிரித்து கூறு போடுவதும் தான் என்பதும் . அதை தடுப்பதற்கு யார் தடையாக வந்தாலும் அது ஆளுநராக இன்னும் யாராக இருந்தாலும் அவர்களை சிறுமைப்படுத்துவதும் சில்லறை அரசியல் செய்வதும் தான் அவர்களின் முழு நேர பணியாக இருக்கும் என்பதையும் இன்று அவர்கள் தெளிவாக உணர்த்திவிட்டார்கள்.
இன்று ஆளுநர் அமைதியாக அவையை விட்டு வெளியேறி இருக்கிறார் . அது அவரின் தோல்வியும் அல்ல . அவரை கோஷம் போட்டு வெளியேற்றியவர்களின் வெற்றியும் இல்லை. இன்று இவர்கள் நிறைவேற்றிய தீர்மானமும் அதே ஆளுநரின் கையொப்பத்திற்காக நாளை ஆளுநர் மாளிகையில் போய் காத்துக் கிடக்க வேண்டும் என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள். ஆனால் ஆளுநர் விரைவில் அவர்களுக்கு நினைவூட்டுவார்.
இன்று அவையை விட்டு வெளியேறியது ஆளுநர் மட்டுமல்ல. அவர்கள் கோஷமிட்டு வெளியேறியதும் சிறுமைப்படுத்தியதும் ஆளுநர் பதவியை மட்டும் அல்ல. இந்திய தேசிய இறையாண்மையையும் தமிழக சட்டசபையின் கௌரவத்தையும் தான் என்பதை அவர்கள் மறந்திருக்கலாம். ஆனால் நிச்சயம் ஆளுநர் இதற்கான பதிலடி கொடுப்பார்.
காரணம் தேசிய ஒருமைப்பாட்டையும் மாநில நலனையும் பாதுகாப்பதற்கும் மாநில அரசை கண்காணித்து கட்டுப்படுத்துவதற்காகவும் தான் மத்திய அரசு அவரை இங்கு ஆளுநராக அனுப்பி வைத்திருக்கிறது. அந்த வகையில் இன்றைய நிகழ்வுகள் அனைத்தையும் அவர் குறிப்பாக உள்துறை அமைச்சகத்திற்கு தவறாமல் அனுப்பி வைப்பார் . அதன் விளைவுகளுக்கு எல்லாம் தமிழக முதல்வரும் அவரின் அடிப்பொடிகளுமே முழு பொறுப்பு.
அவையின் வழக்கம் என்ற பெயரில் திட்டமிட்டு இந்து இந்திய விரோதிகளின் துதி பாடலுக்கு ஆளுநர் உரையை ஒரு கருவியாக பயன்படுத்த முயன்ற தேசவிரோதிகளின் சதியை முறியடித்து, ஆளுநர் பதவியின் அதிகாரத்தையும் மாண்பையும் நிலை நிறுத்தி , இந்திய இறையாண்மையை தமிழக சட்டசபையில் நிலை நிறுத்தி சிங்கம் போல சபையை விட்டு வெளியேறிய ஆளுநர் அவர்களுக்கு தமிழகத்தில் உள்ள தேசாபிமானிகள் பாதம் பணிந்து வணங்குகிறோம்.
No comments:
Post a Comment
கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.