அஸ்திவாரம்

Saturday, October 08, 2022

கொத்தடிமைகள் கதறும் கதறல்கள் தொடரும்.

அப்பாவுடன் போராட முடியாமல் புத்தகம் எழுதுவதையே தன் முழு நேரப் பணியாக வைத்திருந்தார் சுற்றுலாத்துறையைக் கவனித்துக் கொண்டு இருந்த இறையன்பு அவர்கள். இப்போது தன் அரசுப் பணியின் இறுதிப் பகுதியில் இருப்பதால் கிடைத்துள்ள தசெ பதவியின் பொறுப்புகளை உணர்ந்து இருந்தாலும் ரவுடிக் கூட்டம் என்ன செய்யும் என்பதனை உணர்ந்து,  காட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டு தன் பதவியைத் தக்க வைத்துக் கொண்டு இருக்கின்றார்.




திருவாளர் செங்க்ஸ் போன்ற கூமுட்டை கொடுத்த அழுத்தம் அவமானம் போன்றவற்றைப் பொறுத்துக் கொண்டிருந்த உதயச்சந்திரன் அவர்களுக்குக் காலம் தற்போது முதல்வர் பதவியை வழங்கியுள்ளது. 

மன்னர் புலிகேசியாக இருந்தால் ஆமாம் மன்னா ஆமாம் என்பதனைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?

இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணியின் மூலம் வந்தவர்கள் தான் தற்போது பெரும்பாலான பதவிகளில் இருக்கின்றார்கள். ஆனால் பத்து பன்றிகள் சொல்வதை ஒரு பசு கேட்கும் சூழல் தான் தற்போது நிலவுவதால் ஆளை விட்டால் போதும் என்று ஆளாளுக்கு தங்கள் பொறுப்பிலிருந்து ஒதுங்கவே பார்க்கின்றார்கள். இதன் மூலம் அள்ளிக் குவித்துக் கொண்டிருப்பவர்கள் என்பது தனிப் பட்டியல்.

கீழே கொடுத்த புத்திசாலிகள் யாரையாவது நீங்கள் சந்தித்தால் அவசியம் இதனைச் சொல்லுங்கள்.






கொள்ளையடிப்பதற்காகவே வந்தவர்கள் அந்த வேலையை மட்டுமே பார்ப்பார்கள். இவர்கள் எதிர்பார்க்கும் நிர்வாகம் என்பது மக்கள் பணி செய்ய வந்தவர்கள் மட்டுமே பார்ப்பார்கள். ஹவாலா மூலம் பயணிக்கும் பணமும், வசூலிப்பதை வெள்ளையாக்கும் வித்தையைக் கற்றவர்களிடம் நீங்கள் வேறென்ன எதிர்பார்க்க முடியும்.  இவற்றை எல்லாம் கவனிக்க மத்திய அரசு செலவில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர்.

பக்கத்து வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வந்து விழுகின்ற வரைக்கும் பாஜக வந்துவிடக்கூடாது என்று கூவும் கூமுட்டைகளும்.....






தனிப்பட்ட நபர்களின் லாபத்திற்காக வருகின்ற மாதம் இரண்டு மடங்கு மின்சாரக் கட்டணம் கட்டி விரைவில் தொழிலை இழுத்து மூடி விட்டு பரதேசம் செல்லக் காத்திருக்கும் திமுக சுயாட்சி பக்தர்களுக்கும்



காசே தான் கடவுளடா என்று அதிகாரப் போதையில் வாழும் பெரியார் துதிபாடிகளுக்கும் என் வாழ்த்துகள்

கொத்தடிமைகள் கதறும் கதறல்கள் தொடரும். 

தொடர வேண்டும்.


No comments:

Post a Comment

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.