அஸ்திவாரம்

Saturday, April 09, 2022

மோடி அரசின் வெளிப்படையான ஆதாரங்கள்

மோடி அரசு குறித்து பேசும் போது இங்குள்ள மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் மத்திய அரசின் நிதி நிர்வாகம் குறித்து பேசுகின்றார்கள். அவர்களுக்காக இந்த தரவுகளை இங்கே இணைத்து உள்ளேன்.

_________

2014-22ல் மோடி அரசின் மொத்த வளர்ச்சிச் செலவினம் ரூ.90.9 லட்சம் கோடி என்று ரிசர்வ் வங்கியின் தரவுகள் காட்டுகின்றன.

இது எதிர்க்கட்சிகளின் சில பிரிவினரால் கூறப்படுவதை விட மிக அதிகம். மாறாக.
2004-14ம் ஆண்டில் ரூ.49.2 லட்சம் கோடி மட்டுமே இதற்காக செலவிடப்பட்டது.
மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள்

*******

மோடி அரசு இதுவரை செய்த ரூ.90.9 லட்சம் கோடியின் வளர்ச்சிச் செலவு, 2014-22க்கு இடைப்பட்ட காலத்தில் யூபிஏ காலத்தின் எண்ணெய்ப் பத்திரங்களைத் திருப்பிச் செலுத்துவதற்காக ஏற்கனவே செலவிடப்பட்ட ரூ.93,685.68 கோடியை விட அதிகமாகும். மேலும், 2026க்குள் கூடுதலாக ரூ.1.48 லட்சம் கோடி செலுத்தப்படும்.


*********

மோடி அரசு செய்த செலவில் உணவு, எரிபொருள் மற்றும் உர மானியங்களுக்கு இதுவரை செலவிடப்பட்ட ரூ.24.85 லட்சம் கோடியும், மூலதன உருவாக்கத்திற்காக ரூ.26.3 லட்சம் கோடியும் அடங்கும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 10 ஆண்டுகளில், 13.9 லட்சம் கோடி மட்டுமே மானியங்களுக்காக செலவிடப்பட்டது.

நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது அல்ல. உண்மையில் அது சகல பிரிவில் உள்ளவர்களுக்கும் சரி சமமான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்துள்ளது என்பதனை சென்ற வருடம் தமிழக அரசு கொடுத்துள்ள இந்த தரவுகள் மூலம் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.


A O H  K K I  5 L Views   Total 32

No comments:

Post a Comment

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.