அஸ்திவாரம்

Monday, March 14, 2022

AOH - நான் பேசிய தலைப்புகள் (முதல் தொகுப்பு) பிப்ரவரி / மார்ச் 2022

என் பழைய பதிவுகள், அதில் உள்ள கருத்துக்கள், இலவச மின்னூல்கள், அமேசான் கிண்டில் மூலமாக வெளியான மின்னூல்கள் என்று ஏதோவொரு வகையில் படித்தவர்கள் திடீரென்று கடிதம் வாயிலாக என்னைத் தொடர்பு கொள்வது இன்று வரையிலும் நடந்து கொண்டே தான் இருக்கின்றது. 

நான் தொடக்கம் முதல் இன்று வரையிலும் என்னை விமர்சிக்க, என் கருத்துக்களை விமர்சனம் செய்ய வாசிப்பவர்களுக்கு அனைத்துவிதமான  சுதந்திரங்களைத் தந்து விடுகின்றேன்.

என் வாழ்க்கை அரங்கம் அந்தரங்கம் என்று பாரபட்சமின்றி இந்த தளத்தில் ஆவணப்படுத்தி உள்ளேன்.

அசிங்கமான கருத்துக்களை எழுதுபவர்களை நினைத்து அவரவர் குடும்ப வளர்ப்பும், அவர் தற்போது வாழ்ந்து கொண்டு இருக்கும் குடும்பச் சூழல் குறித்தும் மனதிற்குள் வருத்தப்பட்டுக் கொள்வேன்.   என் பயணம் நின்றதும் இல்லை. இணையத்தில் இப்போது 14 ஆவது ஆண்டாக செயல்படுகின்றேன்.

நான் மனநோயாளிகளைக் குணப்படுத்தும் மருத்துவர் அல்ல.  ஆனால் என் தரப்பு நியாயங்களைச் சொல்லும் போது அவரவர் தரப்பு நியாயங்கள் பார்வைகளைக் கவனிக்க விரும்புகிறேன். மதிப்பு அளித்து என்னை படிப்படியாக மாற்றியும் வந்துள்ளேன்.

இன்று அண்ணாமலை நமது நம்பிக்கை (Annamalai Our Hope)  AOH என்ற தளத்தில் கடந்த நான்கு வாரங்களாக பேசிய தலைப்புகளை இங்கே தொகுத்துள்ளேன்.  இது முதல் பகுதி.  இதுவரையிலும் உத்தேசமாக நான்கு லட்சம் பேர்கள் பார்த்து உள்ளனர்.  விமர்சனங்களும் அதிக அளவில் பார்வையாளர்கள் தந்து உள்ளனர்.

நிரந்தரமாக முகம் காட்டாமல் கடந்த 13 வருடமாக எழுதுவதே என் பணி, என் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதே என் நோக்கம் என்பதாக இருந்த என்னை நண்பர் பேசி மாற்றி இந்த அளவுக்குக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார். 

காலம் எப்போதும் தன்னுள் ஆச்சரியங்களை வைத்துக் கொண்டே மனிதர்களுக்கு கற்றுக் கொடுக்கின்றது.

இந்த வருடம் பிறந்த போது இப்படியொரு பாதையில் பயணிக்கப் போகின்றோம் என்பதே நான் யோசித்துக் கூடப் பார்த்தது இல்லை.

ரசிக்கலாம். விமர்சிக்கலாம். கண்ணியமான முறையில் கருத்துக்களை(யும்) எழுதலாம்.  

தளம் நடத்துகின்றவர் மென்பொருள் துறை வல்லுநர். அனைத்து விதமான அநாகரிக மனிதர்களுக்கும் அவரவர் பாணியில் கடந்த காலத்தில் ஆசிரியராக இருந்து பாடம் நடத்திக் காட்டியவர். குறிப்பாக வெளிநாட்டில் தான் இருக்கின்றோம். புனை பெயரில் தானே செயல்படுகின்றோம் என்று பாழுங்கிணற்றில் எங்கும் விழுந்து விடாதீர்கள். தற்போது மத்திய அரசு மாற்றியுள்ள இணையக் குற்றச் சட்டங்கள் குறித்துப் படித்து அறிந்து கொள்ளுங்கள்.

1. அண்ணாமலை ஒரு அவதார புருஷனா??? ரசிகன் ஜோதிஜி 


2. திமுக ஆட்சியின் காட்சிகள் மாற உள்ளாட்சித் தேர்தல் அவசியம்

3. திமுக உதட்டில்--சமூகநீதி; ​ | உள்ளத்தில்--சமூக நிதி! 

4. உள்ளாட்சி தேர்தல் | திமுக மெகா கூட்டணி | நடிகர் விஜய் களத்தில் வெல்லப்போவது

5. தந்தையின் விஞ்ஞான ஊழலை 9 மாத ஆட்சியில் மிஞ்சிய மகன் | உள்ளாட்சித் தேர்தல் நல்லாட்சியின் முதல் படி

6. கொங்கு பகுதிதிக்கு குறிவைக்கும் திமுக | அடித்து நொறுக்கும்

7. அண்ணாமலை பேரைச் சொல்லி பிழைப்பு நடத்தும் RSB ஊடகங்கள் 

8. நீட் எதிர்ப்பு எங்கள் கொள்கை | சாராய ஆலை | தனியார் மருத்துவக் கல்லூரி திமுகவினரின் குலத்தொழில்

9. அழியும் காங்கிரஸ் | வழிதேடும் ராகுல் | குழிதோண்டும் அழகிரி | கொந்தளித்த ராகுல்

10. கு. அண்ணாமலை ஆகிய நான்… | ஆளப்போகும் அண்ணாமலையின் அற்புதங்கள் 

11. உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் ஆட்டத்தை தொடங்கிய Annamalai 

12. #NEETடை எதிர்க்கும் கொள்ளைக்கூட்டம் | சாதனை படைத்த அரசு பள்ளி மாணவர் கூட்டம் 

13. ஸ்டாலின் அவர்களே அனைவருக்குமான முதல்வராக செயல்பட பழகுங்கள் 

14. ஓட்டு போடாத நகர்புறம் மேதைகள்.. | சோர்வடைந்த தாமரை சொந்தங்கள்.. வெற்றி யாருக்கு?? 

15. மிசா நாயகனின் உண்மை கதையைச் சொல்லும் எழுத்தாளர் 

16. மோடி அவர்கள் சொன்ன 15 லட்சம் வங்கிக் கணக்கில் வரப்போவது எப்போது?? 

17. மோடி சாதனை படைக்கும் பிரதமரா? | #RSB மீடியாவை உரித்து எடுக்கும் 

18. கோபாலபுர குடும்பத்தில் ஒருவன் | உங்களில் ஒருவன் சுயசரிதை | மிசா கைது ரகசியம் சொல்கிறதா ?? 

19. மாடல் ஆட்சியின் மாடன் 23ஆம் புலிகேசி | முதல்வரின் உச்சகட்ட காமெடி 

20. 4 மாநிலங்களில் சாதித்த பாஜக | 2024ல் மீண்டும் மோடி ஆட்சி 

21. ‘ஆபரேஷன் அண்ணாமலை’ இனிமேதான் ஆட்டம் ஆரம்பம் 

22. MODEL ஆட்சியின் ACTION |தனியார் மயமாக்கப்படும் போக்குவரத்துத் துறை | செந்தில் பாலாஜி பரபர | #P.T.R

23. கழிப்பிடம் கட்ட தெரிந்த பிரதமருக்கு பெட்ரோல் விலை குறைக்க தெரியாதா?? | #JothiG | #AOH

24. #GST - கேள்வி கேட்பது தான் மாடல் ஆட்சியா?? | இலவச கொரோனா தடுப்பூசி எப்படி சாத்தியம்? | #JothiG

25. The Kashmir Files.. அரசியல் உண்மைகள் .. | The Kashmir Files Film | BJP | #JothiG

26. GST மோடி ஆட்சியின் சாதனையா?? நாட்டிற்கு சோதனைய? | #GST | #JothiG

27. அண்ணாமலை அறிவோம் | 20000 புத்தகம் படித்தாரா அண்ணாமலை | #Annamalai | #BJP | #JothiG | #AOH

28. தரமான ரயில்கள் சுகமான பயணம் தந்தது யார்?? | #IndianRailways | #JothiG | #AOH

29. நாட்டை இணைத்த மோடியின் நெடுஞ்சாலை திட்டங்கள் | #BJP | #Annamalai | #JothiG | #AOH

30. அண்ணாலையை கண்டு அலறும் மாடல் ஆட்சி | கம்பி கட்டும் #PTR | #Annamalai | #BJP | #AOH

31. மேயர்கள் நியமனம் | சென்னை முதல் நாகர்கோவில் மாநகராட்சி வரை.| சமூக நீதி காத்த மாடல் ஆட்சி. | #JothiG

32. சமூகநீதி | இட ஒதுக்கீடு | திமுகவின் சொத்தா?? | சாதனையா?? | #socialjustice | #JothiG

33. மோடியின் டிஜிட்டல் பணம் சாதனையா மக்களுக்கு சோதனையா | #UPI #DigitalIndia | #JothiG

11 மாத உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்

Sunday, March 13, 2022

இரண்டாவது முறையாக உத்திர பிரதேச முதல்வர் ஆதித்யநாத் யோகி அவர்கள்...

உபி முதல்வராக யோகி அவர்கள் மீண்டும் தேர்ந்தெடுத்தமைக்கு பல காரணங்கள் உண்டு.  அவர் செய்த பணிகள் என்பது பத்து சதவிகிதம் தான் என்று ஏற்கனவே எழுதி இருந்தேன்.



எய்ம்ஸ் மருத்துவமனை

2021, டிசம்பர் 7 ஆம் தேதி 1000 கோடி மதிப்பிலான எய்ம்ஸ் மருத்துவ மனையைத் திறந்து வைத்தார்.

இது மோடி அவர்கள் திறந்து வைத்த 10 வது எய்ம்ஸ் மருத்துவமனை.  அதேபோல் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியையும்   திறந்து வைத்தார்.

நீர் மேலாண்மை மற்றும் விவசாயப் பாசன வசதி

9800 கோடி ரூபாய் செலவில், சரயு நகர், தேசிய நீர்ப்பாசனத் திட்டத்தை நிறைவேற்றி உள்ளார். 



இது 43 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த திட்டம். இதன் மூலம் கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள, 6800 கிராமங்களில் உள்ள,  14 இலட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி  பெறுகின்றது. 

விவசாயக் கடன் தள்ளுபடி

36,000 கோடி ரூபாய், விவசாயக் கடன் தள்ளுபடி.



6 வழிச் சாலை வசதி.      

22,500 கோடி ரூபாய் செலவில் பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ்வே (340km), போர்க்காலங்களில் விமானங்கள் தரை இறங்குவதற்கு, ஏதுவாக இந்தச் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இதே போல் கங்கா எக்ஸ்பிரஸ்வே(590 km)

பந்தல்கண்ட் எக்ஸ்பிரஸ்வே ஆறு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன.



30 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள்...

மத்திய அரசு 30  புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி. அளித்து இருந்தது. 

இதில், 9 அரசு மருத்துவக் கல்லூரிகளை, மோடிஜி 2021 ஆம் ஆண்டு,ஜூலை மாதம் திறந்து வைத்தார்... 

இன்னும் 21 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான, கட்டிட வேலைகள் நடந்து வருகின்றன... 

21 அரசு மருத்துவக் கல்லூரிகள், இன்னும் ஒரு வருடத்திற்குள் திறக்கப்படும்... 

பாஜக ஆட்சிக்கு  வருவதற்கு முன்பு , மொத்தம் 16 மருத்துவக் கல்லூரி மட்டுமே இருந்தது (1947- 2017 ).

யோகி ஆட்சியில், 30 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மோடி அரசு அனுமதி அளித்திருந்தது... 

உத்திரப் பிரதேசத்தில் மொத்தம் 80 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திற்கும், ஒரு அரசு மருத்துவக் கல்லூரி என்ற வகையில், மோடி அரசு செயல்பட்டு வருகிறது.



விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் வழங்கும் திட்டம்...

உபி யில் மட்டும் 2.5 கோடி விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு 6000 ரூபாய் வழங்குகிறது.

இந்தியா முழுவதும் 12 கோடி விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு 6000 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது.

யூரியா உரத் தொழிற்சாலை    

2021 டிசம்பர் மாதத்தில்,மோடி அவர்கள், 6000 கோடி , ரூபாய் மதிப்பிலான , யூரியா உரத் தொழிற்சாலையைத் திறந்து வைத்தார்.

இந்தியாவின் உர உற்பத்தியில், 25% இந்த உரத் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இதுவே 30 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த திட்டம்.



பிரதம மந்திரி , ஏழை மக்களுக்கான வீடு திட்டம்.

வீடு கட்டும் திட்டத்தில், உத்திரப் பிரதேசத்தில் 30 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதில் 25 லட்சம் வீடுகள் ,பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும், என்று மோடி 2021 ஆம் ஆண்டு அறிவித்தார். 

தமிழகத்திலும், பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டம் அமலில் உள்ளது. 

இந்தியாவில் இதுவரை 2.62 கோடி வீடுகள், கட்டி முடிக்கப்பட்டு ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது..



புதிய விமான நிலையம்      

உலகிலேயே 3-ஆவது மிகப்பெரிய, ஆசியாவில் முதலாவது பெரிய விமானநிலையம் ஆக, JEWAR airport, 20,000 கோடி ரூபாய் செலவில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் நொய்டாவில், அமைய உள்ளது.

2024 இத்திட்டம் நிறைவேற்றப்படும்.

உத்திரப்பிரதேசத்தின் நொய்டா City , Bangalore நகரைப் போல்,ஒரு IT city ஆகும்... இங்கு நிறைய IT நிறுவனங்கள் உள்ளன.

நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், தனித் தனியே குடிநீர் இணைப்பு வழங்கும் ஜல் ஜீவன் திட்டம்.  இத்திட்டம் மோடி, அவர்களால் 2019ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின்படி உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு 10,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது... உத்திரப்பிரதேச மாநிலத்தில் கிராமப்பகுதிகளில், 2.67 கோடி வீடுகள் உள்ளன... (2019- 2021) 

இந்த 2 ஆண்டுகளில், இவற்றில், 34 லட்சம் வீடுகளுக்கு, தனித்தனியே குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது... 

2022 ஆம் ஆண்டிற்குள் கிராமங்களில் உள்ள, 80 லட்சம் வீடுகளுக்கு,குடிநீர் இணைப்பு வழங்கப்படும்... 



2024 ஆம் ஆண்டுக்குள், உத்திர பிரதேசத்தில், உள்ள, 12 கோடி வீடுகளுக்கும், தனித் தனியே குடிநீர் இணைப்பு வழங்கப்படும்...  

வீடுகளுக்குக் கழிப்பறை கட்டும் திட்டம்..

உத்திரப்பிரதேச மாநிலத்தில் 1.36 கோடி கழிப்பறைகள் கட்டி, முடிக்கப்பட்டு,, பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.. 

சாம்சங் மற்றும் இராணுவ  தளவாடத் தொழிற்சாலை... மெட்ரோ ரெயில்...

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், சாம்சங் உற்பத்தி தொழிற்சாலை, சீனாவிலிருந்து, இந்தியாவின் உத்திரப் பிரதேச மாநிலத்தின் நொய்டாவிற்கு மாற்றப்பட்டது...  

அதேபோல்,இந்திய இராணுவத்திற்குத் தேவையான, பீரங்கிகள், மற்றும் இராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உத்திரப்பிரதேசத்தில் தொடங்கப்பட்டது... 

அதே போல் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

உத்திரப்பிரதேசத்தின் கான்பூர் நகரில் மோடி அரசு மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது... 



இரண்டு ஆண்டுகளில் 13 கிலோ மீட்டர் , நீளத்திற்கு, மெட்ரோ ரயில் போடப்பட்டுள்ளது...

அரசின் விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு திட்டம்.

வறட்சி மற்றும் வெள்ளக் காலங்களில் விவசாயிகள் பாதிக்கப்படும் போது,  மோடி அரசு பயிர் காப்பீடு திட்டத்தின் படி இழப்பீடு வழங்குகிறது.. ஏக்கர் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குகிறது... உத்தர பிரதேசத்தில் 2 கோடி விவசாயிகள் இத்திட்டத்தில் இணைந்து உள்ளனர்...

முத்ரா கடன்

உத்திரப் பிரதேச மாநிலத்தில், 1.5 கோடி பேர் முத்ரா கடன் பெற்றுள்ளனர்...

நதி நீர் இணைப்புத் திட்டம்...

கென் - பேட்வா நதிநீர் இணைப்புத் திட்டம்... 

இத்திட்டத்தின் மூலம் உத்திரப்பிரதேசத்தின், வறட்சி மிகுந்த பகுதிகள் பாசன வசதி பெறும்... மற்றும் உத்திரப்பிரதேசத்தின் வறட்சி பகுதியில் குடிநீர்த் தேவையும் பூர்த்தி செய்யப்படும்... இத்திட்டம் எட்டு ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்...



இலவச ரேஷன் வழங்கப்படுகிறது.. அரிசி மற்றும் கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது..

உத்தரபிரதேச மாநிலத்தில், பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த திட்டங்களை, மோடி அரசு நிறைவேற்றி உள்ளது.

அதனால் தேர்தலில் வெற்றி பெறுகிறது.

Wednesday, March 09, 2022

" 10 பாராளுமன்ற உறுப்பினர்களும் என் இலக்கு"

நான் அறிந்த தமிழ் இணையத்தில் பத்தாண்டுகளுக்கு முன்பாக எந்தவொரு கட்சிக்கும் தனிப்பட்ட செல்வாக்கு இருந்ததும் இல்லை. எவரும் தங்களைக் கட்சிக்காரர்களாக அடையாளப்படுத்திக் கொண்டதும் இல்லை.  


ஆனால் திமுக என்ற கட்சியில் இருந்தவர்கள் தங்களை ஏதோவொரு வழியில் திராவிடத்தின் பிள்ளைகள் என்பதனையும் மதச்சார்பற்றவர்கள் என்பதாக நிலை நிறுத்துவதில் அக்கறை காட்டினார்கள். அனைவருடனும் உறவாடினார்கள். படிப்படியாக அனைவரையும் தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டார்கள்.  

இன்று தமிழ் இணையம் முழுக்க எங்கு பார்த்தாலும் பெரியார் மற்றும் பெரியாரியம் என்ற வார்த்தையை இண்டு இடுக்கு விடாத அளவுக்கு மாற்றியுள்ளனர். நிரப்புவதில் வெற்றியும் அடைந்துள்ளனர்.

தொடக்கம் முதல் பாஜக விற்கு தமிழ் இணையத்தில் ஆதரவு இருந்தது இல்லை. பாஜக கட்சிக்காரர்களே அதனைப் பெரிதாக எடுத்துக் கொண்டதும் இல்லை. காரணம் இருந்த எவரும் தொழில் நுட்பம் குறித்து அறிந்ததும் இல்லை.  இதன் பாதிப்பு எப்போது தெரிந்தது என்றால் திரு. கு. அண்ணாமலை அவர்கள் 2021 ஜூலை மாதம் தமிழக பாஜக தலைவராக பொறுப்பு ஏற்றபின்பு தான் அனைவருக்கும் புரியத் தொடங்கியது.

பெரியாரின் பிள்ளைகள், பேரன்கள் என்று மகா கூட்டணி ஒன்று தமிழ் இணையத்தை ஆக்கிரமித்து இன்று உண்மையான தமிழக வரலாற்றை மாற்றுவது தொடங்கி மோடி அவர்களின் நல்ல திட்டங்களின் பலன்கள் பாஜக விற்கு போகாத அளவிற்குத் திட்டமிட்டு திருட்டுத்தனமாக வெளிப்படையாகவே செயல்பட்டு வந்தார்கள். 

இன்று வரையிலும் சுருதி சுத்தமாக செய்து வருகின்றார்கள்.

காத்திருந்த காலம் திரு. அண்ணாமலை அவர்கள் உள்ளே வந்ததும் தன் வேலையைக் காட்டத் தொடங்கியது. 

அண்ணாமலை அவர்களின் நேர்மை, அவரின் எளிமை, அனைவருக்கும் அவர் அளிக்கும் மரியாதை, தொண்டர்களுக்கு ஒன்று என்றால் நான் தான் முதலில் நிற்பேன் என்று அறைகூவல் விடுக்க இன்று இணையம் எங்கும் அண்ணாமலை என்ற பெயருக்காகவே பல லட்சம் பேர்கள் இரவு பகல் பாராது தமிழ் இணையத்தில் உழைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். 

இன்றைய சூழலில் பாஜக என்ற கட்சிக்கு இருக்கும் ஆதரவு திராவிட வாதிகள் நினைத்தே பார்க்க முடியாத ஒன்றாகும். 

இன்று திருட்டு திராவிடம் திக்கு தெரியாத காட்டுக்குள் மாட்டிக் கொண்ட வினோத விலங்கு போல கதறிக் கொண்டு இருக்கின்றது.  நீ ஒன்று என்றால் நாங்கள் நூறு என்பதாக வெளிப்படுத்தப் புதிதாக உள்ளே வந்துள்ள திமுக ஐடி பிரிவு இளைஞர் திரு. அண்ணாமலை அவர்களைப் பற்றி அவதூறு பரப்புவதை மட்டுமே முழு நேரப் பணியாக வைத்திருக்கும் அளவுக்கு அண்ணாமலை  திமுக என்ற நாடக கம்பெனிக்கு மிகுந்த சவாலை அளித்துள்ளார். நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டும் வருவதால் திருட்டு திராவிடத்தின் அக்மார்க் குணமான "தனிமனித தாக்குதலில்" இறங்கியுள்ளனர்.

இணையத்தில் பாஜக சார்பாக செயல்படும் அனைவரும் ஒரு விசயத்தைத் திரும்பத் திரும்ப வெவ்வேறு விதமாக அவரவருக்கும் தெரிந்த வகையில் எழுதுகின்றார்கள்.  

தமிழக பாஜக கட்சியில் உள்ள நிர்வாக நடைமுறைகள் மாற்றப்பட வேண்டும்.  

நீண்ட காலமாக பதவியில் இருந்த போதிலும் செயல்படாமல் இருப்பவர்களை மாற்றி புதிய உத்வேகம் உள்ள இளைஞர்களை உள்ளே கொண்டு வர வேண்டும்.  

மாவட்ட அமைப்புகள் முற்றிலும் புது நிர்மாணம் செய்யப்பட வேண்டும் 

என்று இது போலப் பல கோரிக்கைகளைத் தொடர்ந்து எழுதிய வண்ணம் இருப்பதற்கு இப்போது விடிவு காலம் பிறந்துள்ளதாகவே கருதுகிறேன்.

"இருப்பவர்களை வைத்துச் சிறப்புடன் கட்சியை முன்னேற்றுவேன்". 

"150 சட்டமன்ற உறுப்பினர்கள்"

" 10 பாராளுமன்ற உறுப்பினர்களும் என் இலக்கு" 

என்று சொல்லிக் கொண்டு வந்த அண்ணாமலை  இப்போது ஒவ்வொருமாவட்ட நிர்வாகத்தையும் செயல்பாடுகளின் அடிப்படையில் மாற்றத் தொடங்கியுள்ளார்.

நான் தனிப்பட்ட முறையில் நீண்ட நாட்களாகவே எதிர்பார்த்து காத்திருந்தேன்.

இளையர்களுக்கு நம்பிக்கையளிக்கும் நாயகனாக இருக்கும் அண்ணாமலை அவர்கள் இனி வரும் காலத்தில் தமிழக பாஜக கட்சியில் பதவியில் இருப்பவர்கள் அதனைத் தங்களுக்குரிய அலங்காரப் பதவியாக பயன்படுத்த முடியாத அளவுக்கு நான்கு பக்கமும் திட்டமிடுதலை உருவாக்குவார் என்றே என்னைப் போன்றவர்கள் கருதுகின்றோம்.

அதன் தொடக்கப்புள்ளி இப்போது தொடங்கியுள்ளது. 

வரவேற்கின்றேன்.

_______________

மதச் சார்பற்ற கூட்டணியின் மகத்தான தொண்டர் சென்னை மேயர்.  வாழ்த்துகள். தேவனுக்கு ஆசிர்வாதம்.


நீயும் கோமாளி. நானும் கோமாளி. நாம் தலைவன் என்று அழைப்பவரும் தலைமைக் கோமாளி.



பாஜக வந்துரும் ன்னு சொல்வதற்கு உடம்பு ஆரோக்கியமாக இருக்க வேண்டுமே? விஷத்தை தொடர்ந்து அருந்தினால் என்னவாகும்? என்று என் நண்பர்களிடம் கேட்டால் அவர்கள் உடனே யோசிக்காமல் மோடி ஒழிக என்கிறார்கள்.  இங்கு யார் முட்டாள் என்பதே என்னால் இப்போது யோசிக்க முடிவதில்லை.



எத்தனை அவமானங்கள்.  விதம் விதமான பேச்சுகள்.  
என் கடன் பணி செய்து கிடப்பதே.  
பேசியவர்கள் அங்கங்கே இருக்கின்றார்கள்.  
ஆனால் இன்று உலகமே இந்தியாவை பெருமையுடன் பொறாமையுடன் பார்க்கின்றது.  
இது தான் மோடி ஆட்சி செய்யும் இந்தியா.



Thursday, March 03, 2022

உள்ளாட்சி தேர்தல் தமிழக பாஜக ஓட்டு சதவிகிதம் என்ன?

படத்தில் CVS என்பது Contested Vote Share ஒரு கட்சி போட்டியிட்ட இடங்களில் கிடைத்த வாக்குகள். OVS என்பது Overall Vote Share - மொத்தம் பதிவான வாக்குகளில் ஒரு கட்சிக்குக் கிடைத்த வாக்குகள். 


1. நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது 915 - டெபாசிட் இழந்தது 914. வெற்றி கண்டது 0.

2. மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டது 495 - டெபாசிட் இழந்தது 491. வெற்றி கண்டது 0.

3. பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்டது 374 - டெபாசிட் இழந்தது 350. வெற்றி கண்டது 5.

4. தேமுதிக போட்டியிட்டது 386 - டெபாசிட் இழந்தது 378. வெற்றி கண்டது 0.

5. காங்கிரஸ் 106 வார்டுகளில் போட்டியிட்டு 60 இடங்களில் வென்றுள்ளது. 11 இடங்களில் டெபாசிட் இழந்தது.

6. பாரதிய ஜனதா கட்சி போட்டியிட்டது 935 - டெபாசிட் இழந்தது 822. வெற்றி 21.

ஒப்பீட்டில் பாமக, நாதக, மய்யம், தேமுதிக ஆகிய நான்கு கட்சிகளைவிட பாரதிய ஜனதா அதிக இடங்களை, அதிக வாக்குகளைப்  பிடித்திருக்கிறது. மேற்சொன்ன நான்கும் பெற்ற வாக்குகளின் மொத்தத்தைவிட அதிகம் பெற்றது.

பாஜக போட்டியிட்ட வார்டுகளில், மொத்தம் பதிவான வாக்குகளில் 7.9 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. 

பாஜக போட்டியிடாத வார்டுகளையும் சேர்த்தால், எல்லா வார்டுகளிலும் பதிவான வாக்குகளின்படி, 6.8 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது.

கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பூர், மதுரை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் சராசரியாக 9 சதவிகிதம்; சிவகாசி 12.4, நெல்லை 10.7, நாகர்கோவில் 21.6 சதவிகிதம்.


********

தமிழக தேர்தல் ஆணையம் கட்சிவாரியான வாக்கு விகித விவரங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பாஜகவின் வாக்குவிகிதம் அதிகரித்துள்ளது.
மாநகராட்சிகள்
திமுக: 43.59%
அதிமுக: 24%
பாஜக: 7.17%
நகராட்சிகள்
DMK: 43.49%
ADMK: 26.86%
பாஜக: 3.31%
பேரூராட்சிகள்
திமுக: 41.91%
அதிமுக: 25.56%
பாஜக: 4.30%
இந்தக்கணக்குப்படிப் பார்த்தால், 43 சதவிகிதத்துக்கும் 4 சதவிகிதத்க்கும் இடையே பெரிய வேறுபாடு உண்டு என்றாலும்கூட, வாக்கு விகிதத்தின்படி பாஜக மூன்றாவது இடம்.