அஸ்திவாரம்

Friday, September 17, 2021

மோடி பிறந்த நாள் (71) - இவற்றை நீங்கள் மறுக்க முடியுமா?

நீங்கள் பாஜக அரசை விரும்பலாம். 

மோடி அவர்களை வெறுக்கலாம்.

பாஜக அரசின் கொள்கைகளை ஆதரிக்கலாம்.

மோடி அவர்களின் செயல்பாடுகளை மறுக்கலாம்.

இது ஜனநாயக நாடு. உங்கள் உரிமை.

ஆனால் இவற்றை நீங்கள் மறுக்க முடியுமா?



1. கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவில் ஏதாவது ஒரு மூலையில் வெடி குண்டு தாக்குதல் உண்டா? பொது மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனரா?

2.  மோடி அரசு ஏதேனும் ஒரு மாநில ஆட்சியை கலைத்த வரலாறு உண்டா?

3. கடந்த 7 ஆண்டுகளில் மத தீவிரவாதம் மூலம் பொது அமைதி பாதிக்கப்பட்டதுண்டா?

4. பாஜக அரசின் திட்டங்கள் கிறிஸ்துவர்களுக்கு, இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படவில்லை என்று எந்த எதிர்க்கட்சியாவது இதுவரையிலும் குற்றம் சாட்டி உள்ளனரா?

5. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இருந்த பிரதமர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் தனிப்பட்ட முறையில் சுற்றுலா பயணம் என்று  தங்கள் சொகுசு வாழ்க்கையை அனுபவித்தனர்.  மோடி அது போன்ற எங்கேயாவது தனிப்பட்ட முறையில் சுற்றுப்பயணம் செய்துள்ளார்? என்பதனை வாசித்து இருக்குறீங்களா?

6. நீங்கள் பயணிக்கும் ரயில்வே துறை உங்களுக்கு என்ன மாதிரியான தாக்கத்தை உருவாக்கியுள்ளது? மனித நடமாட்டம் இருந்து கொண்டேயிருக்கும் இடங்களில் சுகாதாரத்தை பேணுவது கடினம் என்பது அனைவருக்கும் தெரியும்? ஆனால் நம் இந்திய ரயில்வே துறை எப்படி சாதித்துள்ளார்கள்?.

7. நீங்கள் வெளிநாடு செல்பவர், அங்கே வாழ்பவர், போய் வந்து கொண்டே இருப்பவர் எனில் நம் வெளியுறவுத்துறையின் செயல்பாடுகள் எந்த அளவுக்கு மாற்றம் பெற்றுள்ளது என்பதனை உங்களால் உணர்ந்து கொள்ள முடிகின்றதா?  இன்று #கற்றுக்கொள்களத்தில்இறங்கு அமர்வில் நண்பர் பிரகாஷ் Prakash Ramasamy இதைப்பற்றி முதல் முறையாக பேசப் போகின்றார்.  

மோடி அரசின் மகத்தான சாதனையிது.

8. கடைசியாக இதுவரையிலும் (மது, மாது, சூது, பணம்) பலவீனம் இல்லாத பிரதமர்கள் இங்கே நமக்கு கிடைத்தது இல்லை. மோடி குறித்து வரும் கட்டுக்கதைகளுடன் ஏன் எதிர்க்கட்சிகள் இது போன்ற அவதூறுகளை பரப்புவதில்லை.

மோடி ஆட்சிக்கு வந்த 2014 க்கு முன்பு இந்தியாவிற்குள் வாழ்ந்த இந்தியர்களை எந்த அரசுத்துறை நிறுவனங்களும் மதிக்கவில்லை என்றால் நீங்கள் எப்படி இதனைப் பார்ப்பீர்கள்.  பணம் இருப்பவர்கள் தான் வங்கிகளுக்கு முக்கியம் என்பது போன்ற கொள்கைகள் தான் இங்கே நிலவியது.  ஆனால் மோடி கொண்டு வந்த அடையாளங்கள் ஒவ்வொன்றும் படிப்படியாக மாற்றியது. இன்று ஒவ்வொரு இந்தியர்களுக்கும்  ஆதார் அடையாளம்  முதல் வங்கிக் கணக்கு வரைக்கும் பெற்று அரசாங்கத்திற்கு ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இடைவெளி இல்லாத  சமூகநீதியை உருவாக்கியவர் மோடி அவர்கள்.

கடந்த 18 மாதங்களில் கொரோனாவிலிருந்து மீட்டெடுத்த மோடி அரசின் நிர்வாகத் திறமையை நான் பாராட்ட மாட்டேன்.  அது அவரின் கடமையும் கூட. 

ஆனால் சர்வதேச நாடுகளி்ன் அழுத்தங்கள், மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள், மருந்து லாபிகளின் ஆசை வார்த்தைகள் என்று எதையும் பொருட்படுத்தாமல், இங்குள்ள எலும்பு திண்ணிகளில் இரத்த வார்த்தைகளைக் கண்டு கொள்ளாமல் நாட்டு மக்களின் ஆரோக்கியத்தைக் காப்பாற்றிய அருமை தலைமகன் மோடி அவர்கள். 

இந்த சர்வதேச அசிங்க அரசியல் பற்றி நீங்கள் வாசித்து இருந்தால் திகைப்படைந்து போயிருப்பீர்கள்.

தன்னைப் பற்றி குற்றம் சாட்டிக் கொண்டே இருப்பவர்களைப் பற்றி கவலைப்படாமல், அவர்களை தன்னிடம் இருக்கும் அதிகாரத்தை வைத்து ஒன்றுமே செய்யாமல் கர்மயோகி போலவே கடந்து சென்று கொண்டு இருக்கும் மோடி அவர்கள் மேல் எனக்கு அதிகமான வருத்தம் உண்டு. 

ஆனாலும் இந்தக் கொள்கைகளை இப்போது என் சொந்த வாழ்க்கையில் கடைபிடிக்கவே விரும்புகின்றேன். காரணம் நான் என் எதிரிகளை கவனித்துக் கொண்டே இருப்பதை விட என் செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்தவே விரும்புகிறேன்.

தூற்றுவார் தூற்றட்டும்... போற்றுவார் போற்றட்டும்.  என் கடன் பணி செய்து கிடப்பதே... என்பதற்கு முழு முதல் உதாரணம் மோடி அவர்களே.

71 வது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

பாரதப் பிரதமர் அவர்களுக்கு என் உளப்பூர்வமான இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். 

தடம் மாறும் தமிழகம் - பகுதி 1

நரேந்திர மோடி அவர்கள் இவ்வுலகில் வாழும் நாள் வரைக்கும் முழுமையான ஆரோக்கியத்துடன் மன அமைதியுடன் வாழ வாழ்த்துகிறேன்.

ராஜராஜசோழன், ராஜேந்திர சோழன் போன்றோர்களின் புகழ் ஆயிரம் ஆண்டுகள் கடந்து இன்றும் தமிழர்களால் பேசப்படுவது போல மோடி என்ற பெயர் இந்தியர்களால் அடுத்த ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் பேசப்படும்.

நல்வாழ்த்துகள்.

PMO India  Narendra Modi 

#HappyBirthdayModiji


3 comments:

  1. "நான் என் எதிரிகளை கவனித்துக் கொண்டே இருப்பதை விட என் செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்தவே விரும்புகிறேன்." இதனை நானும் பெரும்பாலும் கடைபிடிக்கிறேன்.

    ReplyDelete
  2. தடுப்பூசி என்பதே மருத்துவ லாபியால் வந்தது தானே ?

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.