அஸ்திவாரம்

Tuesday, July 06, 2021

ஒன்றியம் என்ற வார்த்தை

தொடர்ந்து எழுதுவதற்குக் காரணம் எழுத நேரமுள்ளது. நேரத்தை என் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளேன். நிறைய வாசிக்கின்றேன். கணினி முன்னால் அதிக நேரம் அமர வேண்டும் என்ற சூழல் இயல்பாகவே உள்ளது. தமிழ் தட்டெழுத்து பயிற்சி உண்டு. இவற்றை விட சில நல்ல தகவல்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்பவர்களுக்கு உதவும் என்பதற்காக மட்டுமே.

தம்பிமார்கள் இருவர் கடந்த சில நாட்களில் ஆமோதித்து இருந்தார்கள். புதுப்புது தம்பிகள் அவ்வப்போது சொல்கின்றார்கள். ஆனால் கட்டாயம் உங்களுக்கு உங்கள் தலைமுறைக்கு மின்னிலக்க வாசிப்பை அறிமுகம் செய்து வையுங்கள் என்று தொடர்ந்து சொல்லி வருகிறேன்.

அமேசான் கிண்டில் செயலியை உங்கள் அலைபேசியில் தரவிறக்கம் செய்து அமேசான் மூலமாக இலவசமாக கிடைக்கும் மின்னூல்களை வாசிக்க கற்றுக் கொள்ளுங்கள். தினமும் அரை மணி நேரமாவது எதையாவது ஒன்றை வாசிக்க முயலுங்கள் என்று சொல்லி வருகிறேன்.

நண்பர் வாசிப்பு என்பதனை எப்படி கடைப்பிடிக்கின்றார் என்பதற்கு உதாரணமாக இதனை எடுத்துக் கொள்ளுங்கள். படுக்கையறை, அலுவலகம், வாகனம், வரவேற்பறை என்று அனைத்து இடங்களிலும் ஏதோவொரு புத்தகம் இருக்க பல துறைகளை ஒவ்வொரு நாளும் சில பக்கங்கள் வாசித்து முடித்து விடுவேன் என்பது போல உங்களை நீங்களே திட்டமிட்டு வளர்த்துக் கொள்ள முடியுமா? என்று பாருங்கள். 

வாசிப்பு என்பது உங்கள் சீர்படுத்தும் என்பதனை நினைவில் வைத்திருங்கள். உங்கள் மகன் மகளுக்கு வாசிப்பதை நீங்கள் அறிமுகம் செய்து வைக்காத பட்சத்தில் அதன் எதிர்விளைவுகளை அடுத்த ஐந்து வருடங்களில் நீங்கள் பெறுவீர்கள் என்பதனை கவனத்தில் வைத்திருங்கள். அவர்கள் குப்பை போலச்  சமூகத்தில் மிதக்கும் சூழல் உருவாகும்.

கடந்த சில வாரங்களில் ஒன்றியம் என்ற வார்த்தை தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு அறிமுகம் ஆனது. ஜூலை மாதத்தில் இணையத்தில் எழுதியவற்றில் முக்கியமானவற்றை இதில் தொகுத்துள்ளேன். இலவசமாக தரவிறக்கம் செய்ய முடியும்.

முயன்று பாருங்கள். 

மின்னூல் பெற


No comments:

Post a Comment

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.