இருபது வருடமாக இங்கு என் தொடர்பில் இருக்கும் நண்பர் நேற்று என்னை அழைத்திருந்தார். நான் தொடக்க காலத்தில் பணி புரிந்த நிறுவனத்தில் ஒரு சாதாரணக் கூலியாக சேர்ந்து டைலராக மாறி ஒப்பந்தக்காரர் என்று உயர்ந்து இன்று தனியாக உள்நாட்டு வர்த்தகம் என்ற நிலையில் வளர்ந்து இருப்பவர்.
"உங்களை நினைத்து ஆச்சரியமாக உள்ளது. பொறாமை யாகவும் உள்ளது" என்றார்.
சிரித்துக் கொண்டே "இதைத்தான் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு விதமாக சொல்லிக் கொண்டே இருக்குறீங்க? இப்போது என்ன பிரச்சனை"? என்று கேட்டேன்.
காரணம் நான் ஏதோவொரு அவசரத்திற்கு அழைத்தால் கூட எடுக்க மாட்டார். ஆனால் அவருக்கு ஒரு பிரச்சனை என்றால் என்னை மட்டும் தான் அழைப்பார்.
அதீத சுயநலம் உள்ளவர். எளிதாக தொழிலில் உயர்ந்து மேலேறி வந்தார். கூடவே உழைப்பாளி என்பதால் எளிதாக உயர முடிந்தது. ஆனால் குடும்ப வாழ்க்கை என்பதற்குத் தேவைப்படுகின்ற சுய ஒழுக்கம் என்ற எல்லைக் கோடுகளை உடைத்து வாழ விரும்பி தறிகெட்டு அலைந்து அதற்குண்டான பலாபலன்களை இன்று அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்.
முதல் மகள் திடீரென்று திருமணம் செய்து போய் விட்டாள் என்பதனை ஒரு வருடம் கழித்தே என்னிடம் சொன்னார். காரணம் காதல் என்ற பெயரில் நம்பிச் சென்றவன் தெருவுக்குக் கொண்டு வந்து விட்டான். மனைவியுடன் பிரச்சனையாகி தன் நிறுவனத்திலே தங்க வேண்டிய சூழலில் மற்றொரு நாள் அழைத்தார். சில தினங்களுக்கு முன் இரண்டாவது மகளும் தவறான பாதையில் தான் போய்க் கொண்டு இருக்கிறாள். என்பதனை வருத்தமுடன் சொன்ன போது நான் அவருக்கு ஒன்றைப் புரிய வைத்தேன்.
"உங்களுக்கான அடையாளம் என்ன? எதுவும் இல்லாமல் கடந்து வந்து விட்டீர்கள்? அதற்கான விளைவுகளை இப்போது ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டு இருக்குறீங்க?" என்றேன்.
என் குடும்ப வாழ்க்கை, இயல்பான பொருளாதாரச் சூழல், மாறாத எண்ணங்கள், தடம் மாறாத பயணம் என்று எல்லாவற்றையும் அவர் பார்த்துக் கொண்டே தான் இருந்தார். என்னை விட என் மகள்களை அதிகம் நேசிப்பவர். குழந்தைகளை வளர்க்கும் விதம், அவர்களுடன் உரையாடும் கலையை உங்களுடன் தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லிச் சொல்லி அவர்கள் குடும்பத்தில் அடிக்கடி பூகம்பத்தை உருவாக்குபவர்.
அவரின் வளர்ச்சி குறித்து நான் கவலைப்பட்டதில்லை. அவர் சென்ற பாதையில் நானும் செல்ல ஆசைப்பட்டதில்லை. எனக்கான வாய்ப்புகள் இன்னமும் வரவில்லை அல்லது அதற்கான தகுதிகள் என்னிடம் இன்னமும் உருவாகவில்லை என்பதாகத் தான் நினைத்துக் கொள்வதுண்டு.
ஆனால் அவர் பெருமைப்படக்கூடிய வகையில் என் குடும்ப வாழ்க்கை உள்ளது. காரணம் எனக்கான அடையாளம் என்பதனை உறுதிப்படுத்தி வைத்துள்ளேன்.
இதை இங்கே இப்போது எழுதுவதற்குக் காரணம் 2021 தமிழக சட்டமன்றத் தேர்தல் தொடங்குவதற்கு முன் இருந்து நேற்று வரைக்கும் நடந்த நிகழ்வுகளை ஒவ்வொன்றாக கடந்த ஒரு மாதமாக மனதில் கோர்த்து பார்த்துக் கொண்டே வந்தேன். என் தனிப்பட்ட தொடர்பில் உள்ள, எனக்குத் தெரிந்த, பழகிய, தொடர்பில் இருந்த, எழுத்தை வாசிக்கும் அனைவரும் ஒரே கூட்டணியாகவும் நான் மட்டும் தனித்து இருக்க வேண்டிய சூழல். காரணம் தமிழ்நாட்டில் பாஜக என்ற கட்சி வந்து விடக்கூடாது என்று எண்ணம் கொண்டவர்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமாக கருத்துக்கள். கற்பனைகள். வெறித்தனமான எண்ணங்கள்.
இதில் ஆச்சரியப்படக்கூடிய தகவல் என்னவெனில் எதிர்க்கக்கூடியவர்களின் 90 சதவிகிதத்திற்கு அதிகமானவர்கள் அடையாளச் சிக்கலுடன் இணையத்தில் உலா வருகின்றார்கள். தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள், தனி மனித தாக்குதல்களை ஆயுதமாக வைத்திருப்பவர்கள், மதம் மாறிய போதும் தங்கள் ஆற்றாமையை வெளிப்படுத்த முடியாதவர்கள், காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் தன் மதம் சார்ந்த சிந்தனையிலிருந்து வெளிவர முடியாமல் தவிப்பவர்கள் என்று பலவிதமான ரசிக்கக்கூடிய வகையில் முகங்களைப் பார்த்துப் பார்த்து பல்வேறு விதமான ஆராய்ச்சிகளைச் செய்து பார்த்த போது விஷக்கிருமிகள் எப்போதும் இந்த உலகத்தில் இருந்தால் மட்டுமே புதுப்புது கண்டுபிடிப்புகள் இங்கே வளர வாய்ப்புண்டு என்பதனை உணர்ந்து கொண்டேன்.
பத்து வருடங்கள் நீங்கள் ஒரே காரியத்தைச் செய்து கொண்டு இருக்கிறீர்கள்? அலுப்பு வரும். சலிப்பு உருவாகும். ஆனால் எனக்கு எழுத்து என்பது என் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது. என் உளவியலைச் சிக்கலின்றி சிறப்பாக வைத்துள்ளது. படுத்தவுடன் பத்து நிமிடத்தில் தூங்கி விடக்கூடிய வரம் தந்துள்ளது. இரவு முழுக்க தூங்குவதற்கு மட்டுமே என்ற நல்லொழுக்கத்தை கற்றுத் தந்துள்ளது. மாற்றுக் கருத்து கொண்டவர்களிடம் வாதிடத் தேவையில்லை. அவர்களைக் காலம் மாற்றும் என்ற எதார்த்தம் என் வாழ்க்கையை ஒழுங்கு படுத்தி என்னை படிப்படியாக இணைய உலகில் வளர்த்துள்ளது.
இன்னமும் எழுதுவேன்.
மாநில சுயாட்சி அரசியலை விரும்புகின்றவர்கள் எப்படிக் குறிப்பிட்ட குடும்பங்கள் மட்டும் இத்தனை ஆயிரம் கோடிகள் சேர்த்தார்கள் என்பதனைப் பற்றிப் பேசுவதில்லை?
செத்துப் போன திராவிடப் பற்று கொண்டவர்கள் எவரும் ஏன் தமிழகம் கடந்து அனைத்து மாநில தொழில் நிறுவனங்களில் தங்களின் ஆக்டோபஸ் கரங்களை நீளும் வண்ணம் வளர்ந்துள்ளார்கள் என்பதனைப் பற்றி யோசிப்பதில்லை?
பெரியார் மண் என்று பேசுபவர்கள் ஐம்பது வருடம் கழித்தும் இன்னமும் சாதி ரீதியான கணக்கில் மட்டுமே அரசியல் அதிகாரத்தைப் பெற முடியும் என்ற விஷத்தை யார் விதைத்தார்கள்? எப்படி அறுவடை செய்கின்றார்கள் என்பதனைப் பற்றி கிஞ்சித்தும் கண்டு கொள்வதில்லை?
வெளிப்படையான நிர்வாகம் என்பதனை இணையம் என்பது எந்த அளவுக்கு மேலைநாடுகளில் உதவுகின்றது என்பதனை அறிந்த வெளிநாட்டு வாழ் தமிழர்கள் கூட அதைப் பற்றி மூச்சு கூட விடுவதில்லை.
தமிழ் மொழி அழிந்து விடும். ஹிந்தி உள்ளே வந்து விடும். ஆனால் அவரவர் நடத்தும் பள்ளிகளில் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும். ஹிந்தி மொழி அவசியம்.
பிராமணர்கள் ஆதிக்கம் பெற்று விடுவார்கள். பழையபடி இடுப்பில் துண்டு கட்டி வாய் பொத்தி வாழ வேண்டும் என்ற எதார்த்தத்திற்கு சற்றும் பொருந்தாத எண்ணத்தை உருவாக்கி, விதைத்து இன்று ஆழப்பதிய வைத்து அறுவடை செய்பவர்களின் அனைத்து தொழில் நிறுவனங்களிலும், ஆலோகர் பதவிகளிலும் பிராமணர்கள் தான் இருக்கின்றார்கள். கூடவே இடைநிலை சாதிய ஆதிக்கத்தில் வேறு எவரும் வளர முடியாது நிலைக்கும் தமிழகம் வந்து சேர்ந்துள்ளது.
கடைசி வரைக்கும் நீங்கள் கையேந்திக் கொண்டேயிருக்க வேண்டும். காலை முதல் இரவு வரைக்கும் உங்களின் அடிப்படை உரிமைகளுக்குக்கூட யார் யாரோ தயவை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும். பொறுக்கி, பொறம்போக்கு, பெண்டாளும் சண்டாளர்கள், திருடியே வளர்ந்தவர்கள், வாழ்பவர்கள், அதையே ஆளுமையை என்று அடையாளம் காட்டும் ஊடகங்கள், உளறுவதைத் தினசரி பிழைப்பாக வைத்திருக்கும் விபச்சார மாமாக்கள் என்று சுற்றிச்சுற்றி அடிப்படை அரசியல் என்றால் என்ன என்பதற்கும், அடையாளச் சிக்கலுடன் அலைபவர்களுக்கு ஒரே வார்த்தை.
உங்கள் தாயின் கர்ப்பத்தை நம்புங்கள்.
எத்தனை பேர்கள் உறவு கொண்டு இருந்தாலும் ஒரு தகப்பனின் விந்தில் தான் நீங்கள் வந்து இருக்க முடியும் என்பதனையாவது உணர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் தாழ்வு மனப்பான்மை, விஷக் கருத்துக்கள், தனி மனித தாக்குதல்களையும் மீறி இந்தியா என்ற நாடு விரைவில் உன்னத நிலையை அடைந்தே தீரும்.
மத நல்லிணக்கம் என்று பேசிக் கொண்டு இந்திய நாட்டை சிதைக்கும் சிறு மதியாளர்களுக்கு காலம் கருணை காட்டாது என்பதனை உங்களுக்குப் புரியவைக்கும். அதுவரையிலும் ஒவ்வொரு இடமாகச் சென்று எங்கே நாறுகின்றது என்பதனை முகர்ந்து பார்த்து முகத்தில் எடுத்துத் தடவிக் கொள்ளுங்கள்.
தெரு நாய்கள் ஒரு முறை உறவு கொண்டாலும் வேறு நாய்களை நாடாது. உங்கள் இடுப்பில் வழியும் விந்துகளை துடைத்துக் கொண்டே அலையும் குறிகளை அடக்கி வையுங்கள். காரணம் அது உங்கள் மனைவிக்கு தேவைப்படலாம்.
தொடரும்.....
முடிவுக்கு வரவர சற்று கடினமான வார்த்தைகள்..... ஏன் சார்???
ReplyDeleteவருக வருக... தொடர்க...
ReplyDeleteஇன்றைய சூழலில் தீநுண்மி துயரங்கள், இழப்புகள், குழப்பங்கள் என அதிகமாகிக் கொண்டிருக்கும் போது, அரசியல் பற்றி என்ன சொல்வது...?
எனக்குத் தெரிந்து திருக்குறளில் ஒரு இயலில் அதிகமாக அதிகாரங்கள் உள்ளது (அரசு + இயல்) அரசியல் மட்டுமே... 25 அதிகாரங்கள்...! அவற்றின் குறள்களே வேண்டாம்... அதிகாரங்களின் பெயர்களே போதும்... அடடா... எல்லாவற்றுக்கும் பதில் உண்டு...!
மாற்றுக் கருத்து கொண்டவர்களிடம் வாதிடத் தேவையில்லை.
ReplyDeleteஉண்மை ஐயா
why so harsh words for your friends? They are still your friends, right?
ReplyDeleteRajan
ஏன் இவ்வளவு கடுமை?
ReplyDeleteநண்பர்களின்/நண்பரின் மீதான கோபத்தின் பிரதிபலிப்பா? மாறுபட்ட ஒரு பதிவு ஜோதிஜியிடமிருந்து
ReplyDeleteதுளசிதரன்
சிறப்பான பணிங்க...
ReplyDeleteதொடரட்டும் வாழ்த்துக்கள்...
மோடி என்ற பிம்பத்தை மிக மிக மோசமாக கட்டமைத்து பட்டேல் சிலையை விட பெரிதாக்கியுள்ளார்கள் அண்ணா...
நாம் குண்டூசியில் அதை தகர்க்க போராடுகிறோம் என்ற மாயை எனக்குள் கிடந்து தவிக்கிறது...
நீங்களாவது எழுத்தால் ஈன்றெடுத்து விடுகிறீர்கள் என் தவிப்பு சொல்லொன்னா துயரம்...
இருக்கட்டும்
என்ன ஆச்சு உங்களுக்கு? இவரை உங்க நண்பரை இழிவு படுத்துவது உங்களை நீங்களே இரண்டு மடங்கு இழிவுபடுத்துவதுனு நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியனுமா. நண்பரிடம் ஒத்து வரலைனா ஒதுங்கிப் போறது நாகரிகம். நீங்க செய்வது அநாகரிகத்தின் உச்சம்!
ReplyDeleteஆமா, யாரு சுயநலம் இல்லை? எங்கே வாழ்ந்து கொண்டு இருக்கீங்க? உங்க உலகிலா? :)