அஸ்திவாரம்

Saturday, March 06, 2021

சுனில் கனுகோலு (Sunil Kanugolu)

 சுனில் கனுகோலு (Sunil Kanugolu)

என்ற பெயரை எங்கேயாவது கேட்டு இருக்கிறீர்களா? அவர் புகைப்படத்தையாவது பார்த்து இருக்கிறீர்களா?



ஆனால் இன்று தமிழகத்தில் பிரசாந்த் கிஷோர் என்றால் ஓட்டளிக்க வாய்ப்புள்ள அனைவருக்கும் தெரிந்த பெயராகிப் போன சூழலில் இவர் மட்டும் ஏன் திரைக்குப் பின்னால் மட்டும் இருக்கின்றார்?
யார் இவர்?
அதிமுகவின் தேர்தல் வகுப்பாளர். ஆலோசகர். எடப்பாடியின் உள்ளம் கவர் கள்வன்.
இவர் தான் அதிமுக கட்சி சார்ந்த அனைத்து விசயங்களையும் தீர்மானிக்கின்றார். வழிநடத்துகின்றார். வழி காட்டுகின்றார். எடப்பாடி பழனிச்சாமியைத் தமிழக மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமாகச் செய்து கொண்டேயிருக்கின்றார்.
தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல் இருப்பது இவர் பாணி.
முன் கதைச் சுருக்கத்தைக் கொஞ்சம் பார்த்து விடுவோம்.
அகமதாபாத் நகரைச் சேர்ந்த மிகப் பெரிய கோடீஸ்வரின் பெயர் தீபக்பாய்ஜிபட்டேல். (Deepakbhai G Patel). இவர் நிறுவனத்தின் பெயர் கணேஷ் ஹவுசிங் கார்ப்ரேசன் லிமிட். மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த காலம் தொட்டு மிக நெருக்கமான வட்டத்தில் இருந்தவர். இன்று வரையிலும் இருப்பவர்.
இவர் 2013 ஆம் ஆண்டு மே மாதம் கிஷோர் உடன் சேர்ந்து சிஏஜி CAG (Citizens for Accountable Governance). உருவாக்கப்படுகின்றது.
2014 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலுக்காக பாஜகவின் சார்பாக (Citizens for Accountable Governance that ran BJP’s 2014 camp) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதிலிருந்து தன் அரசியல் ஆலோசகர் பயணத்தைத் துவங்கியவர் தான் பிரசாந்த் கிஷோர். அந்தக் குழுவில் இருந்த ஒருவர் தான் சுனில்.
மோடி பிரதமராக மாறுகின்றார். கருத்து வேறுபாடு காரணமாக கிஷோர் ஜனதா தளம் பக்கம் சென்று விட பட்டேல் முன்பு கிஷோர் குழுவில் இருந்த பலரையும் ஒன்று சேர்த்ததுடன், Mckinsey Consultant நிறுவனத்தில் பணியாற்றிய சுனில் மூலம் ஒன்று சேர்க்கப்பட்டு Association of Brilliant Minds (ABM) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
சுனில் கனுகோலு, கர்நாடகாவில் பெல்லாரி நகரைச் சேர்ந்தவர். சென்னையில் பிறந்து வளர்ந்த சுனில் அமெரிக்காவிலிருந்து தனது உயர் படிப்பை மேற்கொண்டார் மற்றும் உலகளாவிய மேலாண்மை ஆலோசனை நிறுவனமான மெக்கின்சியில் பணிபுரிந்து உள்ளார்.
சுனில் 2016 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் திமுகவின் தேர்தல் ஆலோசனையாளராக ஸ்டாலின் மருமகன் சபரீசன் மூலமாக உள்ளே வருகின்றார். சபரீசன் வைத்துள்ள தனிப்பட்ட விளம்பர நிறுவனமும், சுனில் நிறுவனமும் ஒன்று சேர்ந்து செயல்பட்டது. நமக்கு நாமே திட்டம் என்பது சுனில் உருவாக்கிய திட்டம். அதன்படியே தான் ஸ்டாலின் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. நடந்து முடிந்த தேர்தலில் திமுக தோல்வி.
2018 மக்களவைத் தேர்தலின் போதும் சுனில் திமுகவிற்காக பணியாற்றினார். அப்போது தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலையை திமுக உருவாக்கியதில் சுனில் முக்கிய பங்காற்றியவர் என்று கட்சியில் உள்ள மேல்மட்டத்தால் சிலாகிக்கப்பட்டவர். 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக அமோகமான வெற்றி பெற்றது.
ஆனால் நவம்பர் 2019ல் திமுகவிடம் இருந்து சுனில் விலகினார். அடுத்த மாதமான டிசம்பரிலேயே திமுகவுக்குள் வந்தார் பிரசாந்த் கிஷோர். இந்நிலையில் சுனில் அதிமுகவுடன் சேர்கின்றார். எதனால் திமுக வில் இருந்து வெளியே வந்தார் என்பது ராஜ ரகசியம்.
"செய் அல்லது செத்துவிடு" என்ற அடிப்படையில் தமிழ்நாட்டில் நடக்கப் போகும் சட்டமன்றத் தேர்தல் என்பது உண்மையிலேயே பிரசாந்த் கிஷோருக்கும் இவருக்கும் நடக்கும் யுத்தம்.
சுனில் பலம் என்பது திமுக குறித்து முழுமையாகத் தெரியும். மொழி பிரச்சனையில்லை. தமிழக வரைபடம் அத்துபடி. ஆளுங்கட்சி. ஆதரிக்கும் மத்திய அரசு. இது போல பல காரணிகள் உள்ளது.


ஆனால் பிரசாந்த் கிஷோர் க்கு எல்லாமே தலைகீழ்.
இவர் இன்று வரையிலும் தமிழ்நாட்டை விட தன் சொந்த மாநிலமான பீகார் பல விதங்களில் உயர்ந்த மாநிலம் என்று சந்திக்கும் பத்திரிக்கையாளர்களிடம் சொல்லிக் கொண்டிருப்பது ஆச்சரியமே.
😊

3 comments:

  1. நாட்டைக் கெடுக்கும் கள்வர் கூட்டம்...?!

    ReplyDelete
  2. தற்போது மக்களின் மனநிலையைக் கூடத் தலைவர்கள் இதுபோன்ற ஏஜென்சிகள் மூலம் அறிய முயல்வது அவர்கள் வழிகாட்டுதல்படி செயல்படுவது அவர்களின் ஆளுமை மற்றும் மக்கள் மீது கொண்ட அக்கறையை சந்தேகம் கொள்ளச் செய்கிறது..

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.