அஸ்திவாரம்

Monday, December 14, 2020

கு. காமராஜர் மின்னூல்

 தமிழ் நாட்டின் ஆசான். 

கு. காமராஜர் 

இப்போது முதல் இலவசமாக வாசிக்க (கீழே இணைப்பில்)

#Share    #Comments    #Star Rating




வரலாறு என்பது இரக்கமற்றது. ஆட்டத்தில் பங்குகொள்ளாமல் நேர்முக வர்ணனை மட்டும் செய்பவர் போல அது உண்மைகளைப் பதிவு செய்து கொண்டு சென்று கொண்டே இருக்கிறது. வாழுகின்ற காலத்தில் மிகப்பெரும் ஆளுமைகளாக அறியப்பட்ட பலர் அவர்கள் இறப்பிற்குப் பின்னர் சிறிது சிறிதாகத் தேய்ந்து மக்கள் மனதிலிருந்து மறைந்து போய் விடுகின்றனர். அவர்களின் அடுத்த தலைமுறை அல்லது பின்தொடர்பவர்களின் தவறுகளுக்கான சிலுவையைச் சிலர் பல ஆண்டுகாலம் சுமக்கும் நிலைமையும் பலருக்கு ஏற்படுகின்றது. 

பொதுவாகவே பாரதத்தின் புதல்வர்கள் உணர்ச்சிவசப்பட்டவர்கள். எந்தவிதமான அலங்காரங்களும் இல்லாமல் உண்மையைப் பதிவு செய்வதும், காய்தல் உவத்தல் இன்று மக்களை எடைபோடுவதும் நமது வழக்கமல்ல. நமது தலைவர்கள் அவர்கள் தொண்டர்களுக்குத் தவறே செய்யாத தெய்வப்பிறவிகள், எதிர்முகாமில் இருப்பவர்களுக்கோ அவர்கள் தீமையின் மொத்த உருவமாக மட்டுமே காட்சி அளிப்பவர்கள். இதற்கு நடுவில் உண்மையான உண்மையைத் தேடுவது என்பது கடினமான செயலாகத்தான் இருக்கிறது. ஊடும் பாவுமாக எதிரெதிர் தகவல்களைத் தரும் வெவ்வேறு பார்வையைத் தரும் புத்தகங்களைத் தேடிப்படிப்பது என்பது நம்மில் பலரும் செய்யாத, செய்ய விரும்பாத ஒன்று. 

முப்பது வயதிற்கு உள்பட்ட முதல்முறையாகவோ அல்லது இரண்டாவது முறையாகவோ வாக்களிக்க இருக்கும் இளைய தலைமுறைக்கு ஓர் அறிமுக நூலாக இது விளங்கும்.

கு.காமராஜர்-காங்கிரஸ்:  (இந்தியாவிற்கு இருப்பவர்களுக்கு)


வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு


5 comments:

  1. ஒரு முன்னுதாரண தலைவரைப் பற்றிய நூலுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். வாசிப்பேன்.

    ReplyDelete
  2. வாழ்த்துகள் அண்ணே...

    முதல் மூன்று பகுதிகளுக்கு :

    நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
    சொற்பொருள் சோர்வு படும் - 1046

    ReplyDelete
  3. கடந்த ஒரு வாரமாக இடைவெளி விட்டு, விட்டு புத்தகத்தை வாசித்து வந்தேன்.. எவ்வளவு தெரியாத தகவல்களை தெரிந்து கொண்டேன்.. படிப்புக்கும், நிர்வாகத்துக்கும், அரசியலுக்கும் எந்த சம்மதமும் இல்லை என்பதை காமராஜர் ஐயா வின் மூலம் தெரிந்து கொண்டேன்.. இதுவரை திரு.பக்தவச்சலம் பற்றி எங்கும் படித்ததில்லை.. இவரின் நிர்வாக திறனை கண்டு வியந்தேன்..

    ஒரு எளிய மனிதர் இந்தியாவின் பிரதமரை தேந்தெடுக்கும் நிலையில் இருந்தார் என்றால், தமிழனின் பெருமை இந்தியா முழவதும் குமரி முதல், இமயம் வரை ஒலிக்க பட்டிருக்கும். தமிழ்நாட்டில் காங்கிரசின் வீழ்ச்சிக்கான காரணத்தை மிகவும் அழகாக குறிப்பிட்டு இருந்தீர்கள்.. அரசியலில் ஒரு சிறு பதவியில் இருப்பவர் கூட பணமீட்ட நினைக்கும் போது, கடைசி வரை அவரது நேர்மையை காணும் போது, இவரை போல் வாழ வேண்டும் என்ற எண்ணம் உள்ளுக்குள் ஏற்படுகிறது..

    நிறைய தகவல்களை திரட்டி எளிமையாக, அழகாக எழுதியுள்ளீர்கள்.. படிக்கும் போது எந்த இடத்திலும் சோர்வு ஏற்படவில்லை.. நிச்சயம் இந்த புத்தகம் நிறைய பேர்களால் வாசிக்கபடும் என நம்புகிறேன்.. பள்ளி / கல்லுரி நிலையில் இருப்பவர்கள் வாசித்தால், அவர்களது வாழ்வில் ஒரு வித உற்சாகம் நிச்சயம் ஏற்படும்.. உங்கள் தலை சிறந்த பணிக்கு, தலை வணங்குகிறேன்.. நன்றி

    ReplyDelete
    Replies
    1. ஈழம் வரலாறு எழுதிய காரணம் பிரபாகரன் என்பவர் இன்னும் 100 ஆண்டுகள் கழித்து நினைக்கப்பட வேண்டும் என்பதற்காக. இன்று கூட ஒரு வரலாற்று ஆய்வாளர் அந்த மின்னூலை படித்து விட்டு என்னை அழைத்துப் பேசினார். அதே போல நீங்கள் சொன்ன மாதிரி 25 வயதிற்குள் இருப்பவர்கள் நம் மாநிலம் குறித்து அடிப்படை புரிய இந்த எளிய நூல் உதவும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. நன்றி. மகிழ்ச்சி.

      Delete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.