தொடர்ந்து கனடாவில் வாழும் தமிழரசன் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்த காரணத்தால் செப்டம்பர் 7 2020 அன்று யூ டியூப் பக்கம் ஜோ பேச்சு உருவானது. இதுவரையிலும் 1,702 பேர்கள் 88.7 மணி நேரம் ஜோ பேச்சைக் கேட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் இருக்கும் நண்பர் சுவாமி அறிமுகம் செய்து வைத்த காரணத்தால் செய்தியோடை அறிமுகம் ஆனது. ஜோதிஜி பேச்சு என்ற JothiG Pechu Podcast அக்டோபர் 6 2020 அன்று பயணம் தொடங்கியது. மொத்தம் 53 பத்து நிமிடப் பேச்சுகள். இதுவரையிலும் 1000 பேர்கள் கேட்டு உள்ளனர். சில தினங்களுக்கு முன் ஆப்பிள் தன் ஐ ட்யூன் வழியாகக் கேட்க அங்கீகாரம் கொடுத்துள்ளது.
செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களை என் ஓய்வு நேரங்களை ஒழுங்காக செலவழித்துள்ளேன்.
JothiG Pechu Podcast மூலம் இந்தியச் சுதந்திர வரலாற்றை அதன் அடிப்படை விசயங்களை 44 அத்தியாயங்கள் மூலம் முழுமையாகப் பதிவு செய்து முடித்து விட்டேன்.
எழுத்து ஒரு சாதனை என்றால், சில நாட்கள் மட்டுமே பேசினதும் ஒரு சாதனை... இது ஒரு புறம்...
ReplyDeleteசெய்த சாதனைகளையும் இவ்வளவு எளிதாகச் சொல்வதும் ஒரு சாதனை தான்... இது இன்னொரு புறம்...
அடுத்து எழுத்திலும், பேச்சிலும், சொல்லும் புள்ளி விவரங்கள் பற்றி, என்ன சொல்வதென்றே தெரியவில்லை...!
இன்னும் தெளிவாக முயல வேண்டும் என்று எண்ணமுண்டு.
Delete