அஸ்திவாரம்

Monday, September 14, 2020

#NEET|#JO PECHU|#அப்பா அம்மாக்கள் திருந்துங்கள்|Sep 13|- 05





ஒவ்வொரு வீட்டிலும் அம்மா தான் முதல் ஆசிரியர். அப்பா தான் முதல் வழிகாட்டி. இவர்கள் தான் ஒரு மாணவன் மாணவியரின் முதல் இருபது ஆண்டு கால வாழ்க்கையில் சிந்தனை செயல் என்று அனைத்து விசயங்களிலும் இருக்கின்றார்கள்.

இவர்கள் இந்தக் கடமையிலிருந்து தவறும் போது பாதை மாறும் போது மகன் மகள் நிச்சயம் தோல்வி அடைகின்றார் என்பதனை விட மன ரீதியான மாறுதல் அடைகின்றார். அது அவர்களின் குடும்பத்தை மட்டுமல்ல எதிர்காலத்தில் சமூகத்தையும் பாதிக்கும் என்பதே உண்மை.

மனநலம் சரியில்லாதவர்கள் எனில் அவர்கள் மன வளர்ச்சி குன்றியவர்கள் என்று அர்த்தம் அல்ல. சமூகத்தில் போராடத் துணிவில்லாத அளவிற்குப் பொத்திப் பொத்தி வளர்த்து அவர்களைச் செயல்பட முடியாதவர்களாகவும் அப்பா அம்மாக்கள் மாற்றிவிடக் கூடாது.

இதில் கவனம் செலுத்தினால் போதும். தற்கொலை போன்ற எண்ணங்கள் வர வாய்ப்பே இல்லை.





6 comments:

  1. உண்மைதான். பெற்றோர்தான் பிள்ளைகளை பக்குவமாக வளர்க்கவேண்டும். குழந்தைகளும் பெற்றோரின் மனமறிந்து தொடர வேண்டும். சிறிதளவிலான அன்னியோன்னியம் மனதிற்கு திடத்தைத் தரும். இப்போதெல்லாம் பிள்ளைகள் தனித்தீவுகளில் வாழ்வதைப் போல் இருக்கிறார்கள். பல பெற்றோர்கள் கண்டுகொள்வதில்லை.

    ReplyDelete
    Replies
    1. தொழில் நுட்பம் உருவாக்கி உள்ள பெரிய இடைவெளி இது.

      Delete
  2. பேராசை யாரை விட்டது...?

    இது போல் சமயங்களில் பெற்றோர்கள் சரியில்லை என்பதும் வழக்கம் தான்...

    செல்வத்திலும் எளியவர்கள் மருத்துவரானால், மருத்துவம் சேவையாக இருக்கும்... ஆனால் \!/...

    ReplyDelete
    Replies
    1. நம் அரசு அரசாங்கம் அரசியல்வாதிகள் இவர்களில் யாராவது ஒருவராவது சேவை மனப்பான்மையில் இருக்க வேண்டும். ஊடகங்கள் நீதிமன்றங்கள் மனசாட்சியோடு செயல்பட்டு இருந்தால் நமக்கு பற்றிக் கொள்ள ஒரு கயிறு கிடைக்கும். ஆனால் நமக்கு இவர்களை நம்ப முடியாத சூழல் தான் இங்கே இருக்கின்றது. அவரவர் சுயநலமே இங்கே மேலோங்கி இருப்பதால் கடைசியில் இருப்பது ஒரே கண் கண்ட கடவுள் பெற்றோர்கள் தானே? பரிட்சைகளை விட உயிர் பெரிது அல்லவா?

      Delete
  3. தோல்விகளைத் தாங்கும் மனநிலையும்
    சோதனைகளை எதிர்கொள்ளும் மன திடமும்
    இன்றைய இளைஞர்களின் அவசியத் தேவையாய் இருக்கிறது ஐயா

    ReplyDelete
    Replies
    1. எழுத்தில் கலக்குவதைப் போல பசங்கள தேத்தி விடுங்க ஆசிரியரே.

      Delete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.