ஆனால் இன்று?
கறி என்பதும் மாட்டுக்கறி என்பது வரைக்கும் வந்து அது அரசியலாக மாற்றப்பட்டு அதுவே இன்று முன்னெடுக்கப்பட்டு வந்து கொண்டுமிருக்கிறது. அசைவம் என்பது எலைட் சமூகம் என்பது போலவே பார்க்கப்படுவதும் அசைவம் என்பது தீண்டத்தாகதது போலவும் மாற்றப்பட்டு ஒரு புறமும் மற்றொரு புறமும் மூன்று வேளையும் அசைவ வெறியர்களையும் தமிழகம் உருவாக்கியுள்ளது.
தினமும் பிரியாணி தின்பவர்களை எனக்குத் தெரியும். அதே போல ஒரு துண்டு கருவாடு இல்லாமல் இருந்தால் அதற்குப் பெயர் சாப்பாடு இல்லை என்று மனைவியுடன் சண்டைபோடுபவர்களையும் அறிவேன்.
இவர்களை விடக் கடைகளில் பொறுக்கித் தின்பவர்கள் இன்றைய காலகட்டத்தில் மிக மிக அதிகமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
நான் இருக்கும் நான்கு கிலோ மீட்டருக்குள் 40 பிரியாணிக் கடை வளர்ந்தது இப்படித்தான். இந்த மக்களிடம் அன்னமும் ஒடுங்கினால் ஐம்பொறிகளும் பாதிப்பாகும் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா?
அதென்ன ஐம்பொறிகள்?
ஜோ பேச்சு - 365 நாளும் அசைவம் ப்ளஸ் பிரியாணி
அனைத்தும் அசத்தல்...
ReplyDeleteவீட்டில் உள்ள சபாநாயகரும் காவல் தெய்வமும் என்ன சொல்கிறார்கள் தனபாலன்?
Deleteகறிப்பயல்கள்-தமிழுக்கு புதிய வார்த்தை கிடைத்து இருக்கிறது .சிறப்பு.
ReplyDeleteஉண்மைதான் ஐயா
ReplyDeleteஇன்று அசைவம் அதிகரித்துத்தான் போய்விட்டது