அஸ்திவாரம்

Saturday, May 16, 2020

உள்நாட்டில் அகதிகளாக அலையும் புலம் பெயர் தொழிலாளர்களின் அவஸ்த்தை பயணப் படங்கள் - 2

சுய ஊரடங்கு 3.0 - 60
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)

வட மாநிலங்களில் நிலவும் வறட்சி மற்றும் தொழில் இன்மையால், சமீபகாலமாக தமிழகத்திற்கு அங்கிருந்து வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  ஒடிஷா, ஜார்கண்ட், அசாம், பீகார், குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள், தமிழகத்தை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.




ஒடிஷா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கத்தில் வேலையின்றி தவிக்கும் இளைஞர்கள், இங்கு கட்டுமான வேலைக்கு வந்தவுடன் தினமும் 12 முதல் 16 மணி நேரம் வரை உழைக்கிறார்கள். இதற்கு ₹1000 வரையில் கூலியும் பெறுகிறார்கள். கடுமையான உழைப்பாளியாக விளங்கும் இந்த வட மாநில தொழிலாளர்களை கட்டிட கான்டிராக்டர்கள் பாராட்டுகிறார்கள். உள்ளூர் தொழிலாளர்கள், 8 மணி நேரத்திற்கு மேல் வேலை பார்ப்பது கிடையாது. அதனால், 100க்கு 80 சதவீத கட்டுமான நிறுவனத்தினர் வட மாநில தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்கின்றனர்.

சேலம், திருப்பூர், கோவை, ஈரோடு, திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் உள்ள நூற்பாலைகள், ஆயத்தஆடை தொழிற்சாலைகளில் வட மாநில தொழிலாளர்கள் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெண் தொழிலாளர்கள் அதிகளவில் இருக்கின்றனர். அதேபோல், கட்டுமானம், கல்குவாரிகள், ஜவுளியின் உப தொழில்களான தறிப்பட்டறைகள், வாஷிங் பட்டறைகள், சாயப்பட்டறைகள்,  கார்மென்ட்ஸ் உள்ளிட்ட தொழில்களிலும் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள்  ஈடுபட்டுள்ளனர். 













கொரானா காலத்தில் புலம் பெயர் தொழிலாளர்களின் அவஸ்த்தை பயணப் படங்கள்

2 comments:

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.