அஸ்திவாரம்

Friday, May 08, 2020

"இப்படியொரு காலத்தை நாங்கள் கடந்து வந்தோம்"

சுய ஊரடங்கு 3.0 - 41
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)


"இப்படியொரு காலத்தை நாங்கள் கடந்து வந்தோம்"


நான் பேரன் பேத்திகளிடமும்
என் மகள்கள்
தங்கள் குழந்தைகளிடம்
சொல்வதற்கு
ஆவணமாகும்
ஏராளமான படங்கள்
இணையத்தில் உள்ளது.

நம்பிக்கையில்லையெனில்
காணொளி வடிவத்திலும் உண்டு.
விதவிதமான்
முக கவசங்கள் குறித்து
எதிர்காலத்தில்
கதை சொல்லக்கூடும்.

ஆயிரம் மைல்களை
நடந்தே கடந்து வந்தார்கள்
என்று சொன்னால்
எதிர்கால தலைமுறைகள்
நம்புவார்களா?

இருந்த வசதிகளும்
உடன் வாழ்ந்த மனிதர்களும்
ஆட்சியில் இருந்தவர்களும்
என்ன செய்தார்கள்?
என்ற கேள்விக்கு
என்ன பதில் அளிப்பது?







1 comment:

  1. சில வருடங்களுக்குப் பின்னர் இப்படியும் நடந்ததா என ஆச்சரியப் படலாம் - இந்தச் சமயத்தில் எடுத்த படங்களும் காணொளிகளும் வரலாற்றில் இடம் பிடிக்கக் கூடியவையே!

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.