2020 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், இப்போது நடந்து கொண்டிருக்கும் செயல்பாடுகளை 25 வருடங்கள் கழித்து அப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் புதிய தலைமுறைகளிடம் சொன்னால் நிச்சயம் நம்ப மறுப்பார்கள். அப்படியான சூழலில் நாம் இப்போது வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். இதை ஆவணப்படுத்துவது முக்கியம் அல்லவா?
சென்ற மாதம் கொரானா தடைக்காலம் (மார்ச் 21 2020) தொடங்குவதற்கு முன்பு நான் ஆயிரமாவது பதிவு எழுதிய பின்பு நான் உருவாக்கிக் கொண்ட தடைக்காலம் (மார்ச் 19) தொடங்கியது. ஏப்ரல் 19 அன்று முடிவுக்கு வருகின்றது.
2020 வருடத்தின் தொடக்கத்தில் உலகம் இப்படி மாறப் போகின்றது என்பதனை எவரும் சொல்லவில்லை. இந்த வருடத்தின் தொடக்கத்தில் ஜோதிடப்பலன்கள் சொன்ன அத்தனை பேர்களும் எந்த வருடமும் படாத கேவலங்களை அடைந்து விட்டார்கள். மீம்ஸ் மூலம் உலகம் முழுக்க பரவி அவமானப்பட்டார்கள். ஜோதிடக்கலையை பணத்திற்கு அப்பாற்பட்டு அதைக் கணிதச் சாஸ்திரமாகப் பார்ப்பவர்கள் நூற்றில் ஒரு சதவிகிதம் கூட இருப்பார்களா? என்பதே சந்தேகம் தான்.
மார்ச் 21 முதல் முதல் கொரானா தடைக்காலம் தொடங்கிய சமயத்திலேயே திருப்பூரில் உள்ள அனைத்து சங்கங்களும் ஏப்ரல் முழுக்க திருப்பூருக்குத் தடைக்காலம் என்று முன்பே அறிவித்து விட்டார்கள். நாங்கள் மனதளவில் தயாராகவே இருந்தோம்.
பிரதமர் மோடி இரண்டாவது முறையாக அறிவித்த மே 3 2020 வரைக்கும் உண்டான தடைக்காலத்தை சில வாரங்களுக்கு முன்பே திருப்பூர் முதலாளிகள் அறிவித்து விட்டார்கள்.
காரணம் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு வர்த்தகம் என்பது இப்போதைய சூழலில் நடக்க வாய்ப்பே இல்லை. இது இயல்பு நிலைக்கு வருவதற்கு இன்னும் 90 நாட்கள் ஆகலாம். இதுவும் கடந்து போகும். வாழ்க்கை முறை மாறும். ருசி என்பது மாறி பசி என்பதற்குள் வந்து நிற்கலாம். பிழைத்து நிற்ப்பவன் சாதிக்கப் பிறந்தவன்.
உலகப் பந்தில் உள்ள ஒவ்வொரு கண்டங்களிலும் உள்ள சிறிய மற்றும் பெரிய ஊர்கள் வரைக்கும் ஒரே மாதிரியான துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்று இயற்கை வைரஸ் மூலம் உருவாக்கியிருப்பது ஆச்சரியமாக உள்ளது.
தினமும் ஒரு ஆங்கிலப்படம் பார்த்தேன். மகள்கள் மதியத்திற்கு மேல் தமிழ்ப்படம் ஏதாவது ஒன்றைப் பார்த்தனர். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படம் மட்டும் தான் நான் முழுமையாக அமர்ந்து பார்த்த தமிழ்ப்படம்.
மகள்கள் இருவர் யூ டியுப் பார்த்து, மனைவி ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்புடன் நன்றாகச் சமைத்துக் கொடுத்தனர். கொடுக்கின்றனர். ஒருவர் மிக மிக அழகாகப் படம் வரைந்து கொண்டிருக்கின்றார். மூவரும் சில புத்தகங்களைத் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
பதினோராம் வகுப்புக்கு இன்னும் ஒரு பரிச்சை உள்ளது. பள்ளி திறந்தவுடன் வைப்பார்களா என்று தெரியவில்லை.
பத்தாம் வகுப்பு தான் பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டது போலத் தடுமாறுகின்றார்கள். நூறு மீட்டர் ஓட்டப்பந்தயம் போல ஓடி வந்தனர். இந்த வருடம் புதிய சிலபஸ்(பாடத்திட்டம்). அவசரம் அவசரமாகப் பாடங்களை முடித்தனர். பாதிப் புரிந்து பாதிப் புரியாமல் ஆசிரியர்களும் கஷ்டப்பட்டு மாணவர்களுக்கு அதிக அளவு கஷ்டப்பட்டனர். கடைசியில் வைரஸ் ஆட்டத்தைக் கலைத்துப் போட்டு விட்டது.
இப்போது ஜும் (ZOOM) செயலி மூலம் பாடங்கள் மறந்து போய்விடக்கூடாது என்பதற்காக நினைவூட்டி தினமும் காலை மாலை என்று வெவ்வேறு பாடங்களை ஆசிரியர்கள் நடத்திக் கொண்டு இருக்கின்றார்கள். இது தவிரப் பொதிகை தொலைக்காட்சியில் காலை 10 முதல் 11 மணி வரைக்கும் பத்தாம் வகுப்புக்குத் தினமும் ஒரு ஆசிரியர் குறிப்பிட்ட பாடத்திற்குப் பாடம் நடத்துகின்றார்கள். நவீனத் தொழில் நுட்ப வசதிகளை மாணவர்கள் இந்த வருடம் முழுமையாக உள்வாங்கியிருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.
வருகின்ற 19ந் தேதி முதல் காலை ஆறு மணிக்கு ஒரு பதிவும் மாலை ஆறு மணிக்கு ஒரு பதிவும் வெளியிட எண்ணம். இது என் நீண்ட நாள் கனவு.
"ஆயிரம் பதிவு" என்ற கனவு நிஜமானது. "அமேசானில் 25" புத்தகங்கள் என்ற கனவும் நிஜமானது.
அடுத்து தினமும் 2 பதிவுகள்.
இப்போதை சூழலில் வெளியே செல்ல முடியாது. செல்லக்கூடாது. மற்ற சமூக வலைதளங்கள் நீங்கள் சுற்றி வந்தாலும் வலைபதிவு என்பது மனதுக்கு நெருக்கமாகத்தான் உள்ளது. நிச்சயம் உங்கள் வாசிப்புக்குச் சுவராசியமாகவே இருக்கும் என்றே நம்புகிறேன்.
ஏற்கனவே ஃபேஸ்புக்கில் எழுதிய பலவற்றைச் சேமித்து வைத்துள்ளேன். கொரானா வைரஸ் உருவானது, பரவியது, இந்தியாவிற்குள் நுழைந்தது, கேரளா வழியே பரவியது என்று ஏராளமான செய்திகள் உண்டு.
உலகம் முழுக்க நடந்த பல நிகழ்வுகள், சம்பவங்களை நான் வாசித்த பலவற்றையும் உங்களுக்கு அறியத் தருகிறேன்.
வீட்டுக்குள் இருப்போம்.
சமூக விலக்கத்தை கடைப்பிடிப்போம்.
அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு அளிப்போம்.
இந்த கொரோனா அவலத்தில் நான் சிலரால் பட்ட துன்பத்தை எனது பெயர்த்திக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்த ஆவணப்படுத்தி 2039-ல் வெளியாகும்படி பதிவை அமைத்து விட்டேன்.
ReplyDeleteகாரணம் சில விடயங்கள் எனது பெயர்த்திக்கு தெரிய வேண்டும் நான் நிச்சயமாக அன்று இருக்க மாட்டேனே!
மேலும் கொரோனாவும் என்னை விலக்க வேண்டுமே...
இன்னும் 19 வருடமா? நீங்க 49 வரைக்கும் இருப்பீங்க.
Deleteஅருமை. நன்றி
ReplyDeleteஅய்யா வருக.
Delete9/11 எப்படி எங்களால் மறக்க முடியாதோ அது போலத்தான் இந்த கொரோனோவாவும்.. இந்த் வைரஸால் பாதிக்கப்பட் ஒரு என் குடும்ப உறுப்பினர் இப்போது அதற்கான சிகிச்சையில் இருக்கிறார் எங்களுக்கு இறைவன் மேல் நம்பிக்கை இருப்பதால் எல்லாம் சரியாகிவிடும் என்ற எதிர்பார்ப்பில் நாட்கள் கழிந்து கொண்டு இருக்கின்றன
ReplyDeleteதமிழா கவலை வேண்டாம். இது ஆள் கொல்லி நோய் அல்ல. எளிதில் மீண்டு வந்து விட முடியும். விரைவில் குணம் அடைந்து விடுவார். வாழ்த்துகிறேன்.
Deleteஆயிரம் பதிவு
ReplyDeleteஅமேசானில் 25 புத்தகங்கள்
மிகப் பெரும் சாதனை ஐயா
வாழ்த்துகள்
நன்றி
Deleteகாங்குவும் சங்கியும் கொள்ளையடித்தால்...
ReplyDeleteவெளியீடு : புதிய உலகத்தில்...
முக்கியமான தலைப்பு.
Deleteசற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் பதிவு - மிக்க மகிழ்ச்சி ஜோதிஜி. 1000 பதிவுகள் - அமேசான் தளத்தில் 25 புத்தகங்கள். மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
ReplyDeleteநானும் இந்த நாட்களில் - அலுவலகம் செல்ல வேண்டிய நாட்கள் தவிர்த்து - சில வேலைகளைச் செய்தேன். பதிவுகள் தினமும் வந்து கொண்டிருக்கின்றன - வலைப்பூவில். கூடவே எனது பயணக் கட்டுரைகள் சிலவற்றைத் தொகுத்து அமேசான் தளத்தில் மின்புத்தகங்களாக வெளியிட்டு இருக்கிறேன் - இதுவரை ஐந்து மின்புத்தகங்கள் அங்கே வெளியிட்டு விட்டேன் - ஒன்று முன்னர் புஸ்தகா மூலம் வந்தது. மற்ற நான்கும் இப்போது வெளியிட்டது! முடிந்தால் படித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.
அருமை அருமை. கிண்டில் கருவி புதிதாக வாங்கவேண்டும் வெங்கட். நிச்சயம் படிக்கிறேன்.
Deleteருசி என்பது மாறி பசி என்பதற்குள் வந்து நிற்கலாம். பிழைத்து நிற்ப்பவன் சாதிக்கப் பிறந்தவன். //
ReplyDeleteஇது எங்கள் வீட்டில் அடிக்கடி சொல்லப்படுவது. ருசிக்காகச் சாப்பிடக் கூடாது வாழ்வதற்காகச் சாப்பிட வேண்டும் என்று ஏனென்றால் அதீதமாக நாக்கிற்கு அடிமையானால் அதனால் பிரச்சனைகளே குடும்பத்தில் எழுவதைப் பார்த்து வந்ததால்.
1000 பதிவுகள், 25 புத்தகங்கள் அமேசானில்!! வாழ்த்துகள் ஜோதிஜி.
கீதா
நன்றி நன்றி நன்றி.
Deleteஉலகம் போட்ட ஆட்டத்திற்கு இயற்கை ஏதேனும் ஒரு வகையில் எதிர்ப்புத் தெரிவித்துதானே ஆக வேண்டும். ஒரு செக் வைத்துதானே ஆக வேண்டும். அதுதான் இயற்கை நியதி. எந்த ஒரு ஸ்பீஷிசிற்கும் இது பொருந்தும். கூடவே டார்வினின் சர்வைவல் ஆஃப் தெ ஃபிட்டஸ்ட் ..
ReplyDeleteஒவ்வொரு பேரிடர் வரும் போதும் மால்தூசியன் தியரி ஆஃப் பாப்புலேஷன் என் மனதில் நினைவிற்கு வரும்.
கீதா
இது உடனே முடிவுக்கு வரும் என்று எனக்குத் தோன்றவில்லை. டிசம்பர் வரைக்கும் வெவ்வேறு வகையில் நம்மைத் தொடரப் போகிறதோ? என்று தோன்றுகின்றது.
Delete