அஸ்திவாரம்

Tuesday, April 28, 2020

திருப்பூரின் ஊரடங்கு கால குறுக்கு வெட்டு நீள் வெட்டுத் தோற்ற (ட்ரோன்) புகைப்படங்கள்


அந்த 42 நாட்கள் -  20
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 3 வரை)


மிதி வண்டியை எடுத்துக் கொண்டு காலை மதியம் மாலை என மூன்று நேரமும் அருகே உள்ள இடங்களைச் சுற்றிப் பார்த்து என்ன நிலைமையில் உள்ளது? என்பதனை தொடர்ந்து பார்த்து வருகிறேன்.

இன்று மதியம், மாலை பார்த்த வரைக்கும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் & Tiruppur Collector Office உழைப்பு வீணாகவில்லை என்றே தோன்றுகின்றது. அங்கங்கே கூட்டங்கள், புரியாத மக்கள் சமூக விலக்கத்தைக் கடைப்பிடிக்காத போதும் கூட ஒப்பீட்டளவில் திருப்பூர் வெற்றி தான்.



அதிகாலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரைக்கும் ஒவ்வொரு நிமிடமும் சுறுசுறுப்பாக ஒவ்வொரு இடத்திலும் நூற்றுக்கணக்கான வண்டிகளுடன் நாம் கடந்து செல்ல வேண்டிய சூழலில் உள்ள ஊரை அப்படியே உள்ளே அடைத்து வைப்பது என்ன சாதாரணக் காரியமா?

நண்பர் அனுப்பி வைத்த திருப்பூரின் குறுக்கு வெட்டு நீள் வெட்டுத் தோற்ற புகைப்படங்கள் இது.















 03/04/2020
முட்டாள்களுக்கு நாள் குறிக்கும் தினம்

Play & Pause - Corona இயங்கும் விதிகள் மாறுகின்றது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு வாழ்த்துகள்.

12 comments:

  1. நிலைமையின் உக்கிரத்தை அறிந்து மக்கள் போதிய ஒத்துழைப்பு கொடுத்தால் இயல்பு நிலை விரைவில் வந்துவிடும் என்பதே உண்மை.

    ReplyDelete
    Replies
    1. மக்கள் சுவைக்கு அடிமை. ஆடம்பரத்திற்கு அடிமை. தன்னை வெளிக்காட்டிக் கொள்ள விருப்பம் என்று வாழ்ந்து பழகிய காரணத்தால் கொரானா என்ற பயத்தையும் கடந்து வெளியே வரவே விரும்புகின்றார்கள்.

      Delete
  2. மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். வீட்டுக்குள் இருத்தலே ஒரே தீர்வு எனும்போது மிகவும் அத்தியாவசியத் தேவை தவிர்த்து வேறு எதற்கும் வெளியே வராமல் இருப்பதே நல்லது.

    படங்கள் நன்று - இவ்வளவு பேரமைதி எப்போதும் பார்த்திருக்க முடியாது என்பதையும் மனது சொல்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் குறிப்பிட்டுள்ள பேரமைதி என்ற வார்த்தையை இன்று முழுக்க யோசித்துக் கொண்டேயிருக்கேன். நன்றி.

      Delete
  3. புகைப்படங்கள் நம்பிக்கையூட்டுகிறது....

    ReplyDelete
    Replies
    1. மற்ற மாவட்டத்தை ஒப்பிடும் போது இங்கே பரவாயில்லை. நன்றி.

      Delete
  4. படங்கள் மக்களின் விழிப்புணர்வைக் காட்டுகின்றன

    ReplyDelete
    Replies
    1. இப்போது இங்கு மாவட்ட ஆட்சியராக இருக்கும் விஜய கார்த்திகேயன் அவர்கள் சிறப்பாக பணியாற்றுகின்றார். நன்றி

      Delete
  5. அட... அங்கங்கே மரங்கள் கூட இருக்கு...!

    ReplyDelete
    Replies
    1. இங்குள்ள ஒவ்வொரு நிறுவனமும் நினைத்து இருந்தால் பெரிய காட்டை உருவாக்கியிருக்க முடியும். இப்போது தான் வனத்துக்குள் திருப்பூர் என்று கொண்டு வந்து கொண்டு இருக்கின்றார்கள்.

      Delete
  6. இத்தனை மக்களைக் கட்டுப்படுத்துவது என்பது அசாதாரண விஷயம். உலகமே அடங்கி உள்ளது என்பதை எண்ணிப் பார்த்தால் வியப்பும் சிந்தனைகளும் பெருகுகிறது.

    படங்கள் இப்படியானவற்றைக் கண்டிப்பாக சேமித்து வைக்க வேண்டும். எதிர்காலத்தில் மக்கள் நினைப்பார்கள் ஒரு ஊர், நாடு, உலகம் இப்படி இருந்ததா அதுவும் ஒரே சமயத்தில் என்று.

    துளசிதரன், கீதா

    ஒரு சத்தம் இல்லாமல் கவனித்திருப்பீர்கள் அடுத்தவர் மெதுவாகப் பேசுவது கூடக் கேட்கிறது அத்தனை அமைதி. எனக்குச் செவி கேட்கும் திறன் குறைந்து ஹியரிங்க் எய்ட் உதவியால்தான் என்பதால் எங்கோ ஒலிக்கும் பறவையின் சத்தம் கூடக் கேட்கிறது. முன்பு கேட்டதில்லை. கவனித்திருக்க மாட்டீர்கள் என்று நீங்கள் சொல்லலாம். இருக்கலாம் ஆனால் அது சிறு அளவுதான். எனக்கு சைனஸ் பிரச்சனை உண்டு. இப்போது அது இல்லை. காலையில் மொட்டை மாடியில் 8 நடைப்பயிற்ச்சி. எத்தனை பறவைகள் வருகின்றன தெரியுமா? இத்தனை நாள் காணாத பறவைகள்.

    எனக்கு மனிதன் தோன்றும் முன் உல்கம் இப்படித்தான் இருந்திருக்கும் அல்லது தோன்றி மக்கள் பெருக்கம் ஏற்படும் முன் உலகம் இப்படித்தானே இருந்திருக்கும் என்று எண்ணிப்பார்க்கிறேன். மனிதனின் அட்டகாசங்களுக்குப் பயந்து பதுங்கி இருந்தவை எல்லாம் இப்போது வெளி வருகிறது..ஆங்க் சொல்ல விடுபட்டது இங்கு வந்து இது வரை காணாத சிட்டுக் குருவிகளைக் காண்கிறேன். சிட்டுக்குருவிகள் அழிந்து வருகின்றன என்று நினைக்கிறோம் இப்போது அவை எங்கிருந்து வருகின்றன?!!! இது என் பதிவிற்கு எழுதியவை..எனவே இங்கு நீளமாகிவிடும் என்பதால் நிறுத்திக் கொள்கிறேன்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நேற்று சாதம் வைக்கவில்லை என்றதும் காகம் ஒன்று என் அருகே வந்து நின்றது. நகரவே இல்லை. மாடியில் அரிசி கொண்டு போய் வைக்கும் போது அணில் மயில் குருவிகள் அப்படியே நின்றபடி வேடிக்கைப் பார்க்கின்றது. அடுத்த மாதம் ஊரடங்கு இருந்தால் என் தோளில் வந்து அமர்ந்து விடுவார்கள் என்றே நினைக்கிறேன். ரசித்து எழுதி இருக்கீங்க. நன்றி. நன்றி.

      Delete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.