2018 முதல் ஆயிரக்கணக்கான மேடைப் பேச்சுகளை யூ டியூப் வழியாகப் பார்த்துள்ளேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். ஆச்சரியம். திகைப்பு. வியப்பு. அறுவெறுப்பு. அசிங்கம். அற்புதம் என்று எல்லாமே கலந்து கட்டிய கதம்பம் போல.
நானும் பேசியுள்ளேன். பொதுவிடங்களில் பேசியது இல்லை. நிறுவனங்களின் உள்ளே நடக்கும் கூட்டங்களில் தான் பேசியுள்ளேன்.
தயக்கம் இருந்தது இல்லை.
ஆனால் மேடைப் பேச்சை நான் விரும்பியதில்லை. அதற்கென தனித்த குணாதிசியங்கள் நமக்கு இருக்க வேண்டும். அது எனக்கு இல்லை என்றே நான் கருதி வந்துள்ளேன்.
காலமும் சூழலும் இது போன்ற சூழலை எனக்கு வழங்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. பேசினேன். 49 நிமிடங்கள் பேசினேன். தடுமாற்றம் இல்லை. குறிப்பு வைத்துப் பேசவில்லை. எங்கள் ஊர் வட்டார வழக்கு மனதில் கொண்டு அவர்களுக்குப் புரிந்த, பிடித்த விதமாகப் பேசினேன்.
கிராமத்து மொழி நடை. மாணவர்கள் ஏற்றுக் கொள்ளும் விதமாகப் புத்திசாலித்தனமற்று பேசினேன்.
எதிர்காலத்தில் என் வாரிசுகளின் வாரிசுகள், அவர்களின் வாரிசுகள் ஒரு வேளை என் முகத்தையும் குரலையும் உருவத்தையும் பார்க்க விரும்பினால் இந்த காட்சி ஊடகம் அப்போதும் இதே போல இருந்தால் அந்த காட்சி அவர்களுக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது. அதற்காக இதனை ஆவணப் படுத்தினேன்.
இந்தப் பேச்சு, பள்ளியில் கிடைத்த அங்கீகாரம் இவை அனைத்தும் என் சகோதரிகள் அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் அதிக மகிழ்ச்சியைத் தந்து உள்ளது. என் தனிப்பட்ட செயல்பாடுகளின் மூலம் எனக்குக் கிடைத்த இந்த அங்கீகாரத்தை அவர்கள் அனைவரும் அங்கீகரித்துள்ளனர் என்பதே எனக்கு போதுமானதாக உள்ளது.
மகிழ்ச்சி. வாழ்த்துகள்
ReplyDeleteநன்றி
Deleteவீடியோவை முழுசாய்ப்பார்த்து விட்டேன் ஜோதிஜி! எழுத்தாளர், அமேசான் எழுத்தாளர், அடுத்து motivational ஸ்பீக்கர் ஆக வருவதற்கான அறிகுறிகளைக் கண்டேன்! மிகவும் மகிழ்ச்சி!
ReplyDeleteவாழ்த்துகள் ஐயா
ReplyDeleteநன்றி ஆசிரியரே.
DeleteI GO WITH KRISHNAMURTHY'S COMMENTS /APPRECIATION ...congratulations , keep it up ,
ReplyDeletemotivational ஸ்பீக்கர் ஆக வருவதற்கான அறிகுறிகளைக் கண்டேன்!
Deleteசுந்தர் கிருஷ்ணமூர்த்தி சமூகத்திற்கு,
யூ டியுப் வழியாக பலரின் பேச்சைக் கேட்ட பின்பு நாம் எல்லாம் இது போல பேசி விடவே கூடாது. மேடைப் பேச்சுப் பக்கம் சென்று விடவே கூடாது என்று தான் எண்ணியிருந்தேன். காரணம் தமிழகத்தில் பேசிப்பேசியே வீணாகப் போனவர்கள் அதிகம் யோசிக்க மறந்த கூட்டங்கள் சமீப காலமாக அதிகமாக இருப்பதாகவே எனக்குத் தோன்றுகின்றது. ஆனால் நானும் பேசும் சூழல் உருவானது வியப்பாக உள்ளது. நடிகர் சிவகுமார் பேச்சை அதிகம் விரும்புவேன். அவர் என் பேச்சைக் கேட்டு விட்டு பாராட்டியது மகிழ்ச்சியைத் தந்தது. இருவருக்கும் நன்றி.
வாழ்த்துகள் ஜோதிஜி. உங்கள் பேச்சு கேட்க வேண்டும் - சற்றே நீண்ட காணொளி. பொறுமையாகக் கேட்க வேண்டும்.
ReplyDelete