மனைவி மகள்களை அசுரன் பார்த்து வாருங்கள் என்று நேற்று அனுப்பி வைத்தேன். நான் இன்னமும் பார்க்கவில்லை. ஒரு மகள் வந்து ஒரு மணி நேரம் மிகவும் சோகமாக இருந்தார். காரணம் கேட்ட போது இப்படியெல்லாம் நம்மைச் சுற்றி நடந்து கொண்டு இருக்கின்றதா? என்று கேட்டார். இனிமேலாவது செய்தித் தாள்களை முழுமையாக படித்தால் உனக்கே புரியும் என்றேன்.
நீண்ட நாளைக்குப் பிறகு காவல்துறை பாதுகாப்பு கொடுத்து திரையரங்கத்தில் கூட்டத்தில் ஒழுங்குபடுத்தி அனுப்பிய படமாக அசுரன் அரங்கு நிறைந்த காட்சியாக ஓடிக்கொண்டிருக்கின்றது.
ஆனால் இந்த செய்தி தான் அசுரனுக்கு கிடைத்த உண்மையான அங்கீகாரம்.
காப்பான், நம்ம வீட்டுப் பிள்ளை, சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்கள் தமிழகத்தில் பெரும்பான்மையான திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருந்ததால் அசுரன் படத்திற்கு குறைவான திரையரங்குகள் கிடைத்தன. சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில் மட்டும் முதல் தரமான திரையரங்குகளில் அசுரன் திரையிடப்பட்டது. பிற இடங்களில் C செண்டர் தியேட்டர்கள் தான் இப்படத்திற்கு கிடைத்தது. கடந்த மூன்று நாட்களில் தமிழகத்தில் திரையரங்குகள் மூலம் சுமார் 18 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்துள்ளது அசுரன் திரைப்படம்
()
நீங்கள் ஆகா ஓகோ என்று பாராட்டுங்கள், பாராட்டாமல் இருங்கள்.
சமூகத்தை புரட்டிப் போட்டது. கேவலப்படுத்தியது என்று என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள்.
ஆனால்.........
தயாரிப்பாளர் உயிரோடு இருக்கின்றாரா? என்பது தான் முக்கியம்.
தாணு இலக்கியம் அறிந்த தயாரிப்பாளர். தெளிவானவர், சூட்சமம் அறிந்தவர்.
முதலீடு செய்யும் முதலாளியை முதலில் காவு வாங்கும் தமிழ் திரைப்பட உலகத்தில் இன்னமும் இவர் தாக்குப் பிடித்து நிற்பதற்கு தனியாக பாராட்டுச் சொல்ல வேண்டும்.
தாணு எடுத்த ஆளவந்தான் நினைவுக்கு வருகிறது!
ReplyDeleteதாணுவை நேரிடையாக அவர் அலுவலகத்தில் வைத்து சந்தித்துள்ளேன். பேசியுள்ளேன். அப்பொழுதே அந்த உரையாடல் வாயிலாக அவர் திரைப்பட உலகத்தை எந்த அளவுக்கு தெளிவாக புரிந்து வைத்துள்ளார் என்பதனைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். அவர் மேல் மரியாதை உருவானது. கமல் குறித்து இன்னமும்வெளியே தெரியாத வேறொரு முகத்தை இந்த சமூகம் தெரிய வேண்டுமென்றால் இவர் கமல் குறித்து ஒரு புத்தகம் எழுதினால் போது. தாணு கமல் வைத்து திரைப்படம் எடுத்த பிறகும் இன்னமும் உயிரோடு இருப்பதே ஆச்சரியம்.
Deletehttps://youtu.be/Xji3iFL7BTw இங்கே தந்தி டிவியில் தாணு இதைப்பற்றி இன்னும் கொஞ்சம் ஆழமாகப் பேசுவதைப் பார்க்கலாம். நாவல் எப்படியோ, கதையின் மையக்கருவாக பாதிப்புகளைச் சந்தித்த ஒரு தகப்பன் தன்னுடைய மகனும் ஒரு வெறித்தனத்தில் இறங்கிவிடக் கூடாது, எவராலும் பறித்துவிட முடியாத கல்வியில் கவனத்தைச் செலுத்து என்று சொல்கிற கட்டம் தான் படத்தின் உச்சம். பா ரஞ்சித் மாதிரி தலித் அரசியலை முன்னெடுக்காமல் கவனமாய் பேசுகிறார்.
Deleteஅருமை
Deleteநானும் இந்த படத்தை பார்த்தேன் , ஒரு திரைப்படமாக இதை பார்க்கும் பொழுது , நிச்சயமாக மனதில் இறங்கி , எல்லா இடத்தையும் ஆக்ரமிப்பு செய்து ஒரு வழி செய்து இருக்கிறது இந்த படம். காட்சி ஊடகம் என்பதால் , அந்த இசையும் , காடும், நிலமும், இரத்தமும் ,வலியும் , மிக நன்றாக பதிவு செய்யப்பட்டு இருக்கிறது . .
ReplyDeleteஆனாலும் படம் பார்க்கும் பொழுதும், அதை இப்போது அசை போடும் பொழுதும், ஜெ மோவின் , நூறு நாற்காலிகள் கண் முன்னே விரிகிறது , பார்த்தாலே பாவம் என்ற ஒரு காலத்தில், படித்து, IAS எழுதி, உயர் அதிகாரியாய் உயர்ந்து, தான் திருமணம் செய்து கொண்ட ஒரு உயர் ஜாதி பெண்ணின் எதிர்பார்ப்புகள், நவீன வாழ்க்கை, நாகரீகம் .... எல்லாவற்றையும் , தனக்கு மட்டும் இல்லை , இது போல நூறு நாற்காலிகள் வேண்டும் என்று நாவலை முடிப்பது அழகு .
அந்த உச்சத்தை தொட்டது , ஒரு துறவியின் கருணையால் ....அதை போன்ற மா மனிதர்கள் இன்றும் நிறைய இருக்கிறார்கள் என நான் நம்புகிறேன்.
நிச்சயம் சுந்தர். எனக்கும் நம்பிக்கையுண்டு.
Deleteபடம் பலரும் பாராட்டுகிறார்கள். விமரிசனமும் பல வந்திருக்கு. தோழியும் பாராட்டி சொன்னார். படம் பார்க்க வாய்ப்பு கிடைக்க வேண்டும்.
ReplyDeleteகீதா
நானும் இன்னும் பார்க்கவில்லை
Deleteவிமரிசனம் பார்த்து படம் போவதில்லை தியேட்டரில்படம்பார்த்து ஆகின்றது ஆண்டுகள் பல
ReplyDeleteஒரு வருடத்தில் நான்கு அல்லது ஐந்து படங்கள் திரை அரங்கம் சென்று பார்ப்பதுண்டு
Delete