அஸ்திவாரம்

Sunday, October 27, 2019

2019 தீபாவளி


2019  தீபாவளி  27/10/2019

சென்ற ஆண்டு தீபாவளி எப்படிக் கொண்டாடினோம் என்று சற்று நேரத்திற்கு முன் பழைய பதிவைத் தேடிப் பார்த்தேன்.  பல மாதங்கள் எழுதாமல் இருந்துள்ளேன்.  காரணம் புயலும், சுனாமியும் தொடர்ந்து அடித்துக் கொண்டேயிருந்தது. இயல்பாக இருப்பது எப்படி? என்பதனையும் எதார்த்தம் என்றால் என்ன? என்பதனையும் காலம் கற்றுக் கொடுத்த ஒவ்வொரு சம்பவங்களும் நினைவுக்கு வந்து போனது.

கள்கள் வளர்ந்து விட்டார்கள். செல்பி தலைமுறையாக மாறியுள்ளனர். ட்ரெண்ட்டிங் என்ன என்று கேட்கிறார்கள். அவர்களிடம் பேச நானே வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ், யூ டியுப் ல் இன்றைக்கு எது ட்ரெண்ட்டிங் போன்ற அனைத்தையும் விரும்பாத போதும் கற்றுக் கொண்டுள்ளேன்.

டைவெளி விட்டு இந்த முறை அம்மாவைச் சென்று சந்தித்து வந்தேன்.  விடுமுறை மற்றும் சிறப்புத் தினங்களில் எக்காரணம் கொண்டும் பயணம் செய்வதை விரும்பவே மாட்டேன்.  கோவில்களுக்குச் செல்ல வேண்டும் என்றாலும் கூட்டமே இல்லாத கோவில்களுக்குத்தான் செல்வது வாடிக்கை. 

வீட்டில் தொலைக்காட்சி பெட்டி உள்ளது. ஆனால் கேபிள் இணைப்பை நிறுத்தி ஏழு மாதங்கள் ஆகி விட்டது.  நீங்கள் சன் தொலைக்காட்சி பேக் ம் சேர்த்து வாங்கத்தான் வேண்டும் என்றார்கள். நான் சுடுகாட்டுக்கு ஏன் ராத்திரி போக வேண்டும் என்று கேட்டேன்.  என் சந்துப் பக்கம் வரத் தேவை என்றாலும் கேபிள் பசங்க நான் இருந்தால் வேறு பக்கம் போய் விடுகின்றார்கள். எங்களுக்குத் தேவையானதை யூ டியூப் வாயிலாக மகள்களும் நானும் பார்த்து வருகின்றோம்.  வாழ்க்கை அழகாக அமைதியாக உள்ளது.

மிழ்மணம் குறித்து பலரும் மின் அஞ்சல் வாயிலாக நேரிடையாக சாட் ல் கேட்கின்றார்கள்.  எந்த நம்பிக்கையில் என்னிடம் கேட்கின்றார்கள் என்று தெரியவில்லை. வேறொரு நல்ல செய்தி விரைவில் வரும்.  காத்திருக்கவும்.

லைபதிவில் என்னை ஆச்சரியப்படுத்தியவர், அசரவைத்தவர் சமீப காலமாக நண்பர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.  வயதில் மூத்தவர். வாழ்த்துகள். என் தேவைகளை அவர் தான் தற்போது நிறைவேற்றிக் கொண்டு வருகின்றார்.  உங்களுக்குத்  தேசிய, மாநில, சர்வதேச அரசியல் குறித்து விருப்பம் இருந்தால் அவர் பக்கத்தைத் தொடரலாம்.

நான் அடுத்து நன்றி சொல்ல வேண்டியவர் நண்பர் ராஜாராமன்.

நீச்சல்காரன் என்ற பெயரில் எழுதி வருகிறார். அவரின் தமிழ் பிழை திருத்தி வாணி என்ற ஆன் லைன் மென்பொருள் மூலம் தான் நான் எழுதுவதை திருத்திக் கொள்கிறேன்.  ஒரு வேளை இது இயங்காத பட்சத்தில் நான் எழுதுவதையே நிறுத்தி விடுவேன்.  காரணம் நான் தமிழ் டைப்படிக்கும் வேகம் தெறித்து விழக்கூடியது.  பாதிக்குப் பாதி சந்திப் பிழைகள் வந்து கொண்டேயிருக்கும். அவர் தான் எனக்கு உதவிக் கொண்டு இருக்கின்றார்.  அவருக்கு எழுதித் தீர்க்க முடியாத நன்றியை இந்த சமயத்தில் இங்கே எழுதி வைத்திட விரும்புறேன்.







ஃபீனிக்ஸ் பறவை போல வாழ்க்கை ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பாடத்தைத் தந்து போய்க் கொண்டேயிருக்கிறது. சருகு போல என்னை மாற்றிக் கொண்ட காரணத்தால் விளையாட்டு மைதானத்தை வேடிக்கை பார்க்க கற்றுக் கொள்ளும் சராசரி மனிதனாக வாழ முடிகின்றது.

900 பதிவுகளைக் கடந்து வந்ததாகி விட்டது.  தொடர்ந்து எழுத வாய்ப்பு அமையும்பட்சத்தில் அடுத்த வருடத் தீபாவளிக்குள் 1000 பதிவுகளைத் தொட்டு விட முடியும் என்று நம்புகிறேன்.

சில நாட்களுக்கு முன்பு நான் பிறந்த ஊரிலிருந்து ஒரு தகவல் வந்தது. எனக்குக் கிடைத்த உச்சபட்ச அங்கீகாரம் அது.  அந்த நிகழ்ச்சி மார்ச் ல் நடக்கும் என்று நினைக்கிறேன்.  உறுதியான பின்பு அது குறித்த தகவல் தருகிறேன்.

டுத்த 12 மாதத்திற்குள் ஒரு நல்ல பயணம் செல்ல வேண்டும் என்ற எண்ணமுண்டு. நிறைவேறினால் மகிழ்ச்சி. எழுத வாய்ப்பு அமையும்.

ந்த வருடத் தீபாவளி எல்லாவகையிலும் எனக்கு மிக மிகச் சிறப்பானது. உங்களுக்கும் எல்லாவிதமான நலமும் வளமும் பெற வாழ்த்துகிறேன்.

சென்ற தீபாவளி போலவே இந்த தீபாவாளிக்கும் சென்னையில் இருக்கும் என் வாசகர் நண்பர் வீட்டுக்கு சிறப்பு பரிசினை அனுப்பி வைத்திருந்தார். நன்றி அப்துல் காதர்.

சுத்தத் தங்கம், நேர்மையின் சிகரம், தன்னலமற்ற தலைவன், தமிழர்களுக்காகவே அல்லும் பகலும் பாடுபட்டவர், சொந்த வாழ்க்கைக்காக தன் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்த விரும்பாத ப. சிதம்பரம் அவர்களை பாஜக அரசு பழிவாங்கும் நோக்கத்தில் திஹார் சிறையில் வைத்துள்ளதை அனைவரும் அறிவோம். அவருக்கும் பலகாரம் அனுப்ப  வேண்டும் என்று நினைத்து கீழ்க்கண்ட பலகாரத்தை செய்து வைத்துள்ளோம். திஹார் சிறையில் எப்படி அனுமதிப்பார்கள் என்ற நண்பர்களுக்குத் தெரிந்தால் விமர்சனமாக தரவும். நன்றி.









26 comments:

  1. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஜோதி ஜி! பண்டிகைநாட்கள் உறவு சுற்றத்தோடு சேர்ந்து அனுபவிப்பதற்கானவை! மகள்களோடு, உற்சாகமாக இந்த நாளையும் இனிவரும் காலங்களையும் கொண்டாடுங்கள்!

    ReplyDelete
    Replies
    1. நேற்று கைதி படம் குடும்பத்தோடு பார்த்தேன். சிறப்பான படம். மகிழ்ச்சி. உங்களுக்கு என் வாழ்த்துகள். நன்றி.

      Delete
  2. ப.சியின் கை சுத்தமாக இருந்தால் பாஜக எப்படி பழி வாங்க முடியும். அவர் செய்த ஊழல் அளவிற்கு முழு தண்டனை பெறாவிட்டாலும் இந்த தண்டனையே அவருக்கு ஒரு நல்ல பாடத்தை கற்று தந்து இருக்க வேண்டும்.....

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்பு குறைவு. மகன் அவரை விட சுத்தத் தங்கம். அப்பா மாற மாட்டார். மகன் அவரை மாற விடமாட்டார். மனைவி மாறினால் வீட்டுக்குள்ளே விட மாட்டார்.

      Delete
  3. தமிழ்மணம் பற்றி என்னிடமும் கேட்கிறார்கள் என்ன சொல்ல போங்க பேஸ்புக்கில் பெரிய பெரிய குழுக்கள் எல்லாம் பாஜகவின் ஆட்கள் வாங்கி முடக்கியது போல இதையும் முடக்கி இருக்கலாம் என நினைக்கத்தான் தோன்றுகிறது காரணம் வலைதளம் மூலம் பலரும் எழுதுவது தமிழ் மணம் மூலம் உலகெங்கும் சென்று அடைகிறது அதை முடக்கிவிட்டால் அவ்வளவு எளிதில் பலரையும் சென்று அடையாது அல்லவா

    ReplyDelete
    Replies
    1. மாற்றம் வரும். உங்கள் எண்ணம் நிறைவேறும். காத்திருக்கவும். அதென்ன இந்த பிரச்சனையில் பாஜக வை நைசாக நுழைத்து விட்டீங்க. இந்த நிர்வாகத்தில் உள்ள அனைவரும் தீவிர பெரியார் பக்தர்கள்.

      Delete
  4. அல்லது தமிழ்மணத்தை நடத்தியவர்களின் குழந்தைகள் கல்லூரி செல்லும் நிலைக்கு வந்து இருக்கலாம் அதனால் அவர்கள் குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டுவதாலும் முன்பே போல அதில் அவர்கள் ஆர்வம் இல்லாததாலும் அதை தொடர்ந்து நடத்த இயலாதவர்களாக இருக்கலாம். எது எப்படியோ தமிழ் மணம் மூலம் நல்ல பதிவுகள் பல உலகெங்கும் சென்றது இப்போது முடங்கி போய்விட்டது...

    ReplyDelete
    Replies
    1. ஒரு நாள் வேளை. தொழில் நுட்பம் சார்ந்தது. மனம் இருந்தால் முடியும்.

      Delete
  5. 1000 பதிவுகள் என்பது உங்களுக்கெல்லாம் மிக எளிது.....ஒருவேளை புத்தகம் என்பதற்கு பதிலாக பதிவு என்று எழுதிவிட்டீர்களோ என்னவோ நீங்கள் முயற்சித்தால் 1000 புத்தகங்களையும் எழுதிவிடலாம் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. அன்புக்கு நன்றி. ஆயிரம் புத்தகங்கள் என்பதெல்லாம் அதிகப்படியான ஆசை. நூறு புத்தகங்கள் அமேசானில் கொண்டு வந்து விட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் உண்டு. அடுத்த 25 ஆண்டுகளுக்கு நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கும். யாரோ ஒருவர் இப்போது மின் அஞ்சல் வாயிலாக பேசுவதைப் போல ஆரோக்கியம் இழந்து இணையத்தில் செயல்படாத தருணங்களில் அந்த நினைவுகள் நம்மை உற்சாகப்படுத்தக்கூடியதாக இருக்கும். நன்றி.

      Delete
  6. தொலைக்காட்சியிலிருந்து விடுதலை அடைந்திருப்பது மிகப்பெரிய சாதனை. நாங்கள் சீரியல் எதுவும் பார்ப்பதில்லை என்றாலும் தொலைக்காட்சியைத் துறக்க முடியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் இது கடினம் என்றே தோன்றியது. ஆனால் என் எதிர்ப்பை தெரிவிக்க முதலில் என் புறக்கணிப்பை தொடங்க வேண்டும் என்று நினைத்தேன். ஒவ்வொரு விசயத்திலும் எனக்குப் பிடிக்காத ஆகாத விசயங்களில் புறக்கணிப்பு தான் சிறந்த வழி என்று கடைபிடிப்பேன். அது இப்போது மகள்கள் மனைவி அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது. கேபிள் காரர்கள் நாங்கள் கெஞ்சுவோம் என்று நினைத்தார்கள். கதை மாறியவுடன் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் எங்களை வினோதமாகப் பார்க்கின்றார்கள். குடை மாட்டுவது எனக்கு எளிது. ஆனால் அது தேவையில்லை என்றே தோன்றுகின்றது. நீங்கள் யூ டியுப் பயன்படுத்திப் பாருங்கள். முக்கியசெய்திகள் என்று தனியாக உண்டு. ஒவ்வொரு நாளும் நாம் பார்க்க முடியும். செய்திகளை அறிந்து கொள்ள விளம்பரம் இல்லாமல் 30 நிமிடங்களில் அன்றைய தினத்தின் செய்திகளை நாம் பார்க்க முடியும்.

      Delete
  7. தீபத்திருநாள் வாழ்த்துகள்... எனக்கும் ஒரு நல்ல செய்தி வந்தது... வந்த செய்தி உறுதியானவுடன் கண்டிப்பாக உங்களிடம் தெரிவிக்கிறேன்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நல்லதே நடக்கும். நல்லதே நடக்க வேண்டும். மற்றது நடக்கும் போதே அடுத்த முறை நடக்கும் என்ற நம்பிக்கை ஊன்று கோலாக இருக்கட்டும். முன்கூட்டிய வாழ்த்துகள் தனபாலன்.

      Delete
  8. கதம்பமாக தொகுத்த விடயங்கள் ரசிக்க வைத்தது. படங்களூம் அருமை.

    தங்களுக்கும், தீப ஆவளி வாழ்த்துகள் நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. நண்பா இதென்ன புதுசா இருக்கு? ஏப்பி தீபாளி மாதிரி இருக்கே. வாழ்த்துகள் நண்பா.

      Delete
  9. வித்தியாசமாக எழுதுகிறீர்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்களைப் பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும் என்று நினைத்துள்ளேன். தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. நன்றி.

      Delete
  10. தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete
    Replies
    1. ஜம்புலிங்கம் அய்யாவுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். நீண்ட நேரம் பேசுகிறேன். உங்களுடன் பேச வேண்டும் என்ற எண்ணம் உண்டு. இன்னமும் தொடங்க முடியவில்லை. பேசுவோம். வாழ்த்துகள்.

      Delete
  11. நல்லதொரு பதிவு. சில நாட்களாக பதிவுலகம் பக்கம் வர இயலவில்லை. எனது பக்கத்திலும் பதிவுகள் எதுவும் எழுத முடியவில்லை.

    தமிழ்மணம் - அது இல்லாததும் ஒரு விதத்தில் இழப்பு தான்.

    கதம்பம் சுவையாக இருக்கிறது. வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் உங்களை மகிழ்ச்சியடைக்கூடிய வகையில் 2020 ஜனவரி இருக்கும் வெங்கட். விரைவில் அறிவிப்பு வரும். நன்றியும் வாழ்த்துகளும்.

      Delete
  12. //வலைபதிவில் என்னை ஆச்சரியப்படுத்தியவர், அசரவைத்தவர் சமீப காலமாக நண்பர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள். வயதில் மூத்தவர்//. Just copy paste blog! Nothing original.

    I miss Br Badris blog-To me this was the BEST tamil blog for content, However he has stopped writing , I appeal to him to continue writing ..... don’t know why he stopped. , Nisaptham is another decent blog.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா. அடுத்தமுறை உங்கள் பெயரை பயன்படுத்த விரும்பாவிட்டாலும் ஏதாவது நல்ல தமிழ்ப் பெயரை பயன்படுத்துங்க. இந்த அன் நோன் வேண்டாம். ஒவ்வொருவருக்கும் விதவிதமான ரசனைகள் உண்டு. கிமு அவர்கள் எழுதுவது காப்பி பேஸ்ட் அல்ல. அந்த செய்திகள் குறித்த தகவல்கள் அதில் அவருடைய பார்வை. அப்புறம் என்னைப் போன்ற நபர்கள் கிடைக்கும் நேரத்தில் குறிப்பிட்ட ஒரே இடத்தில் சேர்த்து இருக்கும் விசயங்களை தகவல்களை படிக்க விரும்பிய காரணத்தால் அவரின் பதிவுகள் எனக்கு மிக முக்கியமாகத் தெரிகின்றது.

      Delete
    2. Apologies, forgot to sign my name. The above comment was mine. My name is Rajan.

      Delete
    3. ராஜன் நீங்க தானா? நன்றி. நன்றி.

      Delete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.