அஸ்திவாரம்

Monday, April 15, 2019

மதவாதிகள் - மத கட்சிகள் என்ன வேறுபாடு?

"ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு" என்பார்கள். இவர்கள் தெரிந்தே செய்கின்றார்களா? அல்லது தற்போதைய சூழலைப் புரியாமல் செய்கின்றார்களா? என்றே தெரியவில்லை. நாம் இந்த சமயத்தில் ஏதாவது செய்தே ஆக வேண்டும்? பின்புல நிர்ப்பந்த அடிப்படையில் செய்கின்றார்களா? என்றும் தெரியவில்லை.

குறிப்பாகக் கிறிஸ்துவ பாதிரிமார்கள் அளவு கடந்து பதட்டப்படுவதை இந்த முறை நன்றாகவே பார்க்க முடிகின்றது. காரணம் என்ன? கிறிஸ்தவ மக்களின் நலன் அனைத்தும் பா.ஜ.க பறித்து விட்டதா? சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய் அவர்கள் மேல் நாள்தோறும் வன்முறை ஏவப்பட்டு வாழவே முடியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கின்றார்களா?

இல்லையே? அவர்கள் எப்போது போலத்தான் இங்கே ஒன்றாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். மற்ற மாநிலங்களை விடத் தமிழகம் சட்டம் ஒழுங்கு விசயங்களில் இயல்பாகத்தானே இருக்கின்றது. 
வேறு என்ன தான் இவர்களுக்குப் பிரச்சனை?




அங்கு தான் அரசியல் உள்ளது.

இவர்களின் வருமானம் வருகின்ற வழி அனைத்தும் பா.ஜ.க அரசு அடைத்து விட்டது.

பா.ஜ.க ஆட்சிக்கு வந்த புதிதில் வெளிநாட்டிலிருந்து நலத்திட்டங்கள் என்ற பெயரில் எவரெல்லாம் நிறுவனங்களில் பெயரில் பணம் பெற்றுக் கொண்டு இருந்தார்களோ? கடந்த கால செயல்பாடுகள், கணக்கு வழக்குகள் போன்றவற்றை ஒப்படைக்கச் சொன்னது. அப்போது தான் பூதம் ஒவ்வொன்றாகக் கிளம்பத் தொடங்கியது.

அடுத்த இரண்டு வருடங்கள் ஒவ்வொரு பூதங்களையும் கழுவி குளிப்பாட்டிய போது எல்லாமே சாக்கடையாகவே இருந்தது. அதாவது எவர் பெயரைச் சொல்லி, எந்த கொள்கையின் அடிப்படையில் பணம் பெற்றுக் கொண்டு இருந்தார்களோ அதற்கான கணக்கு வழக்கும் இல்லை. இவர்கள் வாங்கிய பணத்தை குறிப்பிட்ட விசயங்களுக்கும் செலவளிக்கவும் இல்லை. அப்படியே செலவழித்தவர்களும் பத்து ரூபாய் பெற்றுக் கொண்டு பத்து காசை செலவழித்தவர்களாகவும் இருந்தனர். மீதி? ஸ்வாகா.............

இத்தனை வருடங்களும் குறிப்பாக காங் ஆட்சியில் சுகபோக வாழ்க்கை வாழ்ந்த விதமாக இப்போது வாழ முடியவில்லை என்பது தான் இந்த பதட்டத்திற்கு முக்கிய காரணம்.

எல்லா இடங்களிலும் பெரும்பான்மை தான் அடிப்படையில் செல்லும். வெல்லும்.

அது நிறுவனமாக இருந்தாலும் அரசியலாக இருந்தாலும் சரி.

நாம் தனிப்பட்ட முறையில் மதம் கடந்து பழகும் விதம் வேறு. ஆனால் அரசியலின் அல்கரிதம் என்பது வேறு. ஒன்றை உருவாக்கவும் முடியும். உடனடியாக உருக்குலைக்கவும் முடியும்.

இந்த தேர்தலில் இந்த முறை மதம் என்பது முக்கிய பேசு பொருளாகக் கொண்டு வரப்பட்டுள்ளது. நிச்சயமாக பா.ஜ.க முக்கிய காரணம் என்று நீங்கள் சொல்வீர்களே ஆனால் அதற்கான அனைத்து வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொடுத்தவர்கள் இங்கே இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருப்பவர்கள்.

இப்போது கதறுகின்றார்கள்.

நாங்கள் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல? என்று. ஏன் 
இப்படி மாறினார்கள். இது தான் அரசியலில் மாறிக் கொண்டேயிருக்கும் தட்பவெப்ப நிலை.

முன்பு இது மக்களிடம் சென்று சேராமல் இருந்தது. மறைக்கப்பட்டு வந்து கொண்டே இருந்தது. ஆனால் இப்போது சமூக வலைதளங்கள் தோண்டித் துருவி எடுத்து ஆதாரங்களை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்துக் கொண்டே இருக்கின்றது.

முன்பு பழைய பத்திரிக்கைகளை சேகரித்து அதனை ஆதாரமாக வைத்துக் கொண்டு பேசுபவர்கள் எவரும் இல்லை. இப்போது வாட்ஸ் அப் காட்சிகளாகக் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டே இருக்கின்றது. அப்போது என்ன பேசினார்? இப்போது என்ன பேசினார்? என்பது எளிதாக மக்களால் உணர்ந்து கொள்ள முடிகின்றது.

ஆனால் இந்த நாட்டில் சிறுபான்மை உரிமைகள் குறித்து எப்போது பிரச்சனை உருவானது என்றால் நிச்சயம் காங்கிரஸ் உருவாக்கிய மாய்மாலம் தனத்தால் மட்டுமே? என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

அவர்களின் நோக்கம் சிறுபான்மைகளில் ஓட்டுகளில் மட்டும் கவனம் செலுத்தினார்கள். ஆனால் அவர்களின் அடிப்படை வாழ்வாதார வசதிகள் குறித்துக் கவலைப்படவே இல்லை. நான் இதை மதவாத எண்ணத்தில், பாஜக ஆதரவு என்ற தளத்தில் எழுதுகிறேன் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் நிஜ உலகத்திற்கு வராமல் வேறொரு உலகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றீர்கள் என்று அர்த்தம்.

சில உதாரணங்களைச் சொல்ல முடியும்.

சிறுபான்மை உரிமைகள் என்ற பெயரில் மத்திய மாநில அரசாங்கத்தின் சிறப்புச் சலுகை பெற்று இங்கே பள்ளி, கல்லூரி கல்விக்கூடங்கள் அந்தந்த மதம் மற்றும் குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவர்கள் பல நிறுவனங்கள் வைத்து நடத்திக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்கள் அரசாங்கத்தின் எந்த சட்ட திட்டங்களும் பாதிப்பை உருவாக்காது. அங்கே இட ஒதுக்கீடு எதுவும் செல்லாது. நமது அரசியல் அமைப்பு கொடுத்த சிறுபான்மை வாழ்வு, வளர்ச்சி, ஆதரவு என்ற மூன்று நோக்கத்தில் அவர்களுக்கு இத்தனை சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளது.

உங்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்.

ஒரு ஏழை கிறிஸ்துவ மாணவர் ஒரு கிறிஸ்துவ கல்விக்கூடத்தில் எளிமையாகச் சேர்ந்து விட முடியுமா? அதே போல முஸ்லீமும். அவர்கள் மதவாதிகளை விட அதிக கொடூரமாக நடந்து கொண்டு இருக்கின்றார்கள் என்பது தான் உண்மை. அதாவது உங்களை வைத்து எல்லாவிதமான சலுகைகளைப் பெற்று, உங்களுக்கு மட்டுமே உதவுவேன் என்று அரசிடம் சொல்லி அவர்கள் செய்து கொண்டிருப்பது அப்பட்டமான வியாபாரம். அந்த வியாபாரத்தின் மூலம் அவர்கள் வருடந்தோறும் கோடி கோடியாகக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அவர்கள் நினைத்தால் அரசை நாடாமல் அவர்கள் மதம் சார்ந்தவர்களை ஐந்து வருடத்திற்குள் முக்கிய கல்வியாளர்களாகக் குறிப்பிட்ட சதவிகித நிலைக்கு உயர்த்த முடியும். ஆனால் செய்ய மாட்டார்கள். காரணம் நீங்கள் இப்படியே இருக்கும் வரையிலும் அவர்களுக்குத் தொழில் நடக்கும்.

ஒவ்வொரு தேர்தலிலும் மதவாதத்தை உடைத்தெறிவோம். உரிமைகளைப் பெற்றுத் தருவோம் என்று சொல்லி வந்தவர்களும், அல்லது குறிப்பிட்ட மதம் சார்ந்து வென்று வந்தவர்களாவது அந்த ஐந்து வருடத்தில் என்ன சாதித்தார்கள்? என்று பட்டியலிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.

மதவாதிகளுக்கு மதம் என்பது ஆயுதம். அது அரசியலில் அதிகாரத்தைக் கைப்பற்ற உதவுவது. அதே போலத்தான் சிறுபான்மை உரிமை என்று பேசுபவர்களுக்கு அது அவர்களுக்குத் தொழில். வேறொன்றும் வித்தியாசமில்லை.

20 comments:

  1. சுருக்கமாக வைட்டமின் "ப" பொறுத்து...

    ReplyDelete
  2. நல்லதொரு அலசல் நண்பரே...
    எல்லா ஊர்களிலும் இப்பொழுது குழந்தைகளை வைத்து காய் நகர்த்துகின்றனர்.

    மக்களுக்கு தெரியும் யார் மதவாதத்தை தூண்டுகின்றார்கள் என்பது...

    மக்கள் மதம் மறந்து, ஜாதி மறந்து, கட்சி மறந்து சுயேட்சையாக நிற்கும் அறிந்த நபர்களுக்கு வாக்களிக்க வேண்டும். அப்பொழுதுதான் நல்லவர்களை அடையாளம் காண இயலும்.

    இதன் மூலம் நல்லவர்கள் அரசியலுக்கு வருவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. மக்கள் மதம் மறந்து, ஜாதி மறந்து, கட்சி மறந்து சுயேட்சையாக நிற்கும் அறிந்த நபர்களுக்கு வாக்களிக்க வேண்டும். அப்பொழுதுதான் நல்லவர்களை அடையாளம் காண இயலும்.
      நன்றி நண்பா. இது தான் என் கருத்தும்.

      Delete
  3. அது அவர்களுக்குத் தொழில்...இதில் அனைத்துமே அடங்கிவிட்டது.

    ReplyDelete
  4. Replies
    1. உங்கள் பெயரைப் பார்த்து எனக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன். நன்றி.

      Delete
  5. நண்பரே ஒரு ஊடவியாளரின் சரியான அணுகு முறையை உங்கள் ஒருவரின் எழுத்தில் பார்க்கும்போது மனம் சந்துஷ்டி அடைகிறது.Hats
    off to your stand in Tamil Nadu politics.

    ReplyDelete
    Replies
    1. தலைவரே என்ன இப்படி பொசுக்குன்னு பாராட்டிவிட்டீங்க.

      Delete
  6. நல்லதொரு அலசல். இங்கு இந்தத் தொழிலுக்கு மூலதனம் மத அரசியல்.

    ReplyDelete
  7. விழிப்புணர்வுப் பதிவு. இத்தேர்தலில் சுயேச்சைகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் தீர்வு கிடைக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. இந்த முறை தேர்தலில் அதிகமான சுயேச்சை எங்கேயும் காணப்படவே இல்லை. எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. அரசியலில் தன்மை பலவிதங்களில் மாறியுள்ளது.

      Delete
  8. "இவர்களின் வருமானம் வருகின்ற வழி அனைத்தும் பா.ஜ.க அரசு அடைத்து விட்டது.

    பா.ஜ.க ஆட்சிக்கு வந்த புதிதில் வெளிநாட்டிலிருந்து நலத்திட்டங்கள் என்ற பெயரில் எவரெல்லாம் நிறுவனங்களில் பெயரில் பணம் பெற்றுக் கொண்டு இருந்தார்களோ? கடந்த கால செயல்பாடுகள், கணக்கு வழக்குகள் போன்றவற்றை ஒப்படைக்கச் சொன்னது. அப்போது தான் பூதம் ஒவ்வொன்றாகக் கிளம்பத் தொடங்கியது."

    இது தான் பிரச்னை ஜோதிஜி.

    இவர்களின் வருமானத்தில் கை வைத்ததில் தான் கொலைவெறியில் இருக்கிறார்கள். இதுவே தீவிரமாக எதிர்க்க முடிவெடுக்க வைத்துள்ளது.

    ReplyDelete
    Replies
    1. மீண்டும் ஒரு முறை மோடி வந்தால் முக்கால்வாசி பாதிரிமார்கள் வேலைக்குச் சென்று பிழைக்கத்தான் வேண்டும். வேறு வழியில்லை.

      Delete
  9. மதவாதிகள் யார் மதக்கட்சிகளென்பவை எவை சார்

    ReplyDelete
    Replies
    1. இந்த மதத்தைத் தவிர வேறு எந்த வழிபாட்டு முறைகளையும் நீ செய்யக்கூடாது என்பவர்கள் மதவாதிகள். எல்லா மதங்களில் இருப்பவர்களையும் ஒன்றோடு ஒன்று மோதவிட்டு அதனை ஓட்டாக மாற்றி அதிகாரத்தை கைப்பற்றுபவர்கள் மதக்கட்சி.

      Delete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.