மௌனத்தில் தூங்கும் மனசாட்சி
அரசியலில் பலர் பேசுகின்ற பேச்சால் தான் வன்முறைகள் இங்கே உருவாகின்றது என்று நம்பும் நீங்கள், சிலரின் மௌனம், மொத்த அரசியல் பாதையையும் மாற்றவல்லது என்று சொன்னால் நம்புவீர்களா? அப்படி மாற்றியவர் மறைந்த பாரதப்பிரதமர் ராஜீவ்காந்தியின் மனைவி சோனியா. இந்தியாவிற்குத் தொடர்பில்லாத, இந்தியாவைப் பற்றியே தெரியாத ஒரு பெண்மணி ராஜீவ் மனைவி என்ற அந்தஸ்தில் உள்ளே வந்து இன்று ஆலமரம் போல விழுது பரப்பி, ஒவ்வொரு விழுதுக்குள்ளும் ஓராயிரம் மர்மங்களைப் புதைத்து பிரமாண்டமாய் காட்சியளிக்கின்றார்.
தன் மௌனத்தால் கத்தியின்றி ரத்தமின்றி தன் அதிகார ஆசையின் எல்லையை அடைந்தார். இது சரித்திர பக்கங்கள் சொல்லும் உண்மையும் கூட.
இன்று வரையிலும் வலிமையான பொய்கள் வாழத் தான் செய்கின்றது. ஜெயலலிதா இரும்புப் பெண்மணி, தைரியமானவர், நிர்வாகத்திறமை மிக்கவர் என்று சொல்வது போலச் சோனியாவும் பதவிக்கு ஆசைப்படாதவர். கணவரை இழந்து கலங்கி நின்றவர். அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கிச் சென்றவர் என்று நம்ப வைக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது.
ஆனால் உண்மை நிலவரம் வேறு?
சோனியாவின் அதிகார ஆசை எல்லையற்றது. ஆனால் சராசரி மனிதர்கள் போல வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அதற்காகத் துரும்பைக்கூடக் கிள்ளிப்போடவில்லை. களப்பணி, கட்சிப்பணி என்றும் எதுவுமில்லை. உருவான, உருவாக்கிய ஒவ்வொரு சூழலையும் தனக்குச் சாதமாக்கிக் கொண்டார்.
ஆனால் எல்லாவற்றிலும் தனக்குத் தொடர்பில்லை என்று சொல்லி வெளியே நிற்பதாகக் காட்டிக் கொண்டார் என்பது தான் உண்மை.
இவரின் அதிகார ஆசையின் கதையைத் தொடங்க வேண்டும் என்றால் நூறு கோடி கதையிலிருந்து தொடங்க வேண்டும்.
இந்தியாவில் சீர்திருத்தப் பாதையின் முன்னோடி, சிரிக்கவே தெரியாதவர், தன் நிழலையே நம்பாதவர், தன்னைச் சுற்றி நிழல் உலக மனிதர்களை அதிகம் வைத்திருந்தவர் என்று புகழப்படும் நரசிம்மராவ் பிரதமராக வந்தது தனிக்கதை. குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதை போல. ஆனால் குருவி பனம்பழத்தை மட்டுமல்ல. பனைமரத்தையே ஐந்தாண்டுகளாகத் தூக்கிச் சுமந்து நின்றதைப் பார்த்து பலருக்கும் பேதியானது. முக்கியமாகச் சோனியாவுக்கு.
பெரும்பான்மை இல்லாவிட்டாலும் ஐந்து வருட ஆட்சியையும் தன்னையும் அதிகாரத்தில் தக்க வைத்துக் கொண்டது தான் அவரின் சிறப்பு அம்சம். நேரு போலப் படிப்பாளி தான். ஆனால் மாவட்ட அரசியல் முதல் சர்வதேச அரசியல் வரைக்கும் கரைத்துக்குடித்த ராவ் க்கு கிடைத்த அதிர்ஷ்ட வாய்ப்பை தன் வாழ்நாள் வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார்.
1991 ல் காங்கிரஸ் வென்று ஆட்சியில் அமர்ந்த நேரம். அப்போது நிதி அமைச்சராக இருந்தவர் மன்மோகன் சிங். இருவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை நாட்டில் சீர்திருத்தங்களை விரைவு படுத்தியது. அதே சமயத்தில் ஊழல் என்பது பொதுவானது தான் என்று மாற்றியது. எது நடந்தாலும் எங்கு நடந்தாலும் கண்டும் காணாமல் இருப்பது. கலவரம், கொலை, கொள்ளை என்று எத்தனை பட்டியலிட்டாலும் இவ்வளவு பெரிய நாட்டில் இதெல்லாம் இயல்பு தான் எதார்த்த மனிதர்களாகவே இருவரும் இருந்ததுதான் மொத்தத்திலும் சிறப்பு.
ராவ் பிரதமராக இருந்தார். ராஜீவ் மரணத்திற்குப் பிறகு சோனியா தன் கடமையாக ராஜீவ்காந்தி அறக்கட்டளை கவனிப்பது மட்டுமே என்று பொதுவாகச் சொல்லியிருந்தார். அறக்கட்டளை என்ற பெயர் மட்டும் போதுமா? செயல்பாடுகளுக்குப் பணம் வேண்டுமே? ஆட்சி காங்கிரஸ் ஆட்சி. கேட்கவா வேண்டும். கேட்காமல் வந்து கொண்டு தான் இருந்தது. ஆனால் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வேண்டுமே? பிரதமர் பங்குக்கு ஏதாவது செய்ய வேண்டுமே?
நரசிம்மராவ் மற்றும் மன்மோகன் சிங் இருவரும் முடிவெடுத்து ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு நூறு (அரசு பணத்தை) கொடுப்பதாக முடிவெடுத்தனர். ஆனால் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் ராவ் க்கும் சோனியாவிற்குப் பெரிய அளவுக்குத் தொடர்பு இல்லை. சோனியாவின் தொடர்பு எல்லைகள் வேறு விதமாக இருந்தது. காங்கிரஸ் ல் இருந்தவர்கள் சோனியாவிடம் பெரிய அளவுக்குத் தொடர்பு கொள்ளவும் முயலவும் இல்லை. நீர் இருக்குமிடத்தில் தான் பறவைகள் வந்து சேரும்? என்பது இயற்கையான விதி தானே?
நரசிம்மராவ் உச்சத்திலிருந்தாலும் அன்றைய சூழலில் அவரைச்சுற்றி அரசியல் எதிரிகள் அளவுக்கு அதிகமாக இருந்தனர். இதற்கு மேலாக ராஜீவ்காந்தியின் மரணத்திற்குப் பின்னால் உள்ள மர்ம முடிச்சுகளின் முனை ஏதோவொரு இடத்தில் நரசிம்மராவ் ன் நெருக்கமான தொடர்பிலிருந்தவர்களிடம் வந்து நின்றது. நித்ய கண்டம் பூர்ண ஆயுசு. நரசிம்மராவும் இந்திரா குடும்ப தொடர்புகளை தன் தொடர்பு எல்லைக்கு வெளியே தான் வைத்திருந்தார்.
இந்தச் சூழலில் சோனியா முதல் முறையாக நரசிம்மராவை ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு உள்ளே கொண்டு வந்தார். ராவ் க்கு வியப்பாக இருந்தது. சோனியாவின் திட்டம் அன்று பத்துக்கும் மேற்பட்ட மொழிகள் கற்ற வித்தகருக்குத் தெரியவில்லை. காரணம் சோனியா தாயக்கட்டையை உருட்டத் தொடங்கினார்.
அறக்கட்டளைக்கு நிதி தேவை. அதற்கு ராவ் தேவை. இப்படித்தான் பார்ப்பவர்களுக்குத் தெரியும். ஆனால் இதற்குள் சூட்சமம் இருந்தது.
அப்போது சோனியா டெல்லி 10 ஜன்பத் சாலை வீட்டில் குடியிருந்தார். அங்கு தான் அறக்கட்டளை தொடர்பான சந்திப்பு நடந்து கொண்டு இருந்தது. ராவ் க்கு அழைப்பு அனுப்பப்பட்டது. அவரும் கலந்து கொண்டார். எதிர்க்கட்சிகள் கூக்குரலிட்டன. மக்களின் பொதுவான பிரதமர் இது போன்ற தனிநபர்களின் அறக்கட்டளை கூட்டத்தில் கலந்து கொள்ளலாமா? இது ராவ் பாம்பு கடிபட்ட முதல் இடம். சோனியாவுக்குத் தாயம் விழுந்தது. அவரின் ஆட்டம் தொடங்கியது.
இதன் தொடர்ச்சியாக அரசின் சார்பாக ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு நூறு கோடி வழங்க ராவ் மற்றும் மன்மோகன் சிங் முடிவு செய்த போது எதிர்க்கட்சியினர் உண்டு இல்லை என்று படுத்தி எடுத்துவிட்டனர். உடனே இந்த திட்டமும் வாபஸ் வாங்கப்பட்டது.
சோனியா இது குறித்து எதுவும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லையே தவிர அறக்கட்டளைக்கு வழங்க நினைத்த தொகையை அரசாங்கம் அந்த செயல்பாட்டுத் திட்டங்களுக்கு செலவிட்டால் மகிழ்ச்சி என்பதாக முடித்துக் கொண்டார். அவரின் கருகல் வாடை ராவ் ன் கண்களுக்கு அப்போது தெரியவில்லை.
சோனியாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஜார்ஜ் என்பவர் முக்கியமானவர்.
கேரளாவைச் சேர்ந்தவர்.
அந்தரங்க செயலாளராகவும், பாதுகாவலாளியாகவும் இருந்தார். இவரைப் பாராளுமன்ற உறுப்பினராக அடுத்த திட்டம் தீட்டப்பட்டது. அதாவது ராஜ்ய சபா உறுப்பினராக. முதலில் கர்நாடகாவில் இருந்து முயன்றார்கள். கேரளா நபருக்கு இங்கு வாய்ப்பில்லை என்று எதிர்ப்பு கிளம்பியது. அப்போது கேரளாவைச் சேர்ந்த மறைந்த முதலமைச்சர் கருணாகரன் ஆதரவு பேச்சு கூட எடுபடவில்லை. ராவ் இந்த சமயத்தில் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டார்.
இது எங்கேயோ செல்லும் பாதை? என்பதனை புரிந்து கொண்டு உள்ளே உருவான எதிர்ப்புகளை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். மார்க்ரெட் ஆல்வா சரியான நபராக இருப்பார் என்று அவரையே தேர்ந்தெடுக்க வைத்தார். இப்போது கருகல் வாடை தீயலாக வெளிவந்தது.
பணமும் இல்லை. பதவியும் இல்லை. நம் குடும்பப் பெருமையை வைத்து ஆட்சிக்கு வந்தவர்களால் நமக்கு எந்த பிரயோஜனமும் இல்லை என்று சோனியா யோசித்த தருணத்தில் மற்றொரு பிரச்சனை உருவாக்கப்பட்டது.
அப்போது ராவ் மற்றும் பலரும் இரண்டு பதவிகளிலிருந்தார்கள். அதாவது கட்சித் தலைவர் மற்றும் பிரதமர். எனவே ஒருவருக்கு ஒரு பதவி என்ற ஆயுதம் கூர்தீட்டப்பட்டது. சோனியா கட்சித் தலைவராக ராவ் பிரதமராக என்று காரியக்கமிட்டி கூட்டத்தில் பஜனை பாடப்பட்டது. கடைசியில் அர்ஜுன் சிங் பலியாடு ஆக மாற்றப்பட்டார். பதவி இழந்தார். ராஜீவ்காந்தி மரணம் குறித்து எழுப்பப்பட்ட சந்தேகங்களைச் சோனியா அவ்வப்போது முணுமுணுப்பாக வெளிக்காட்டிக் கொண்டிருந்தாலும் சந்தர்ப்பத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தார் என்பது தான் உண்மை.
ஆட்டம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது.
ராவ் ன் அரசியல் எதிரிகளுக்கு இப்போது வாய்ப்பு சோனியாவின் வடிவில் வந்து உதவியது. அதாவது நரசிம்மராவ் குறித்த தங்களுக்குள் இருந்த அதிருப்தியைச் சோனியாவிடம் கொண்டு போய்க் கொட்டத் தொடங்கினர். சோனியா எதிர்பார்த்துக் காத்திருந்ததைப் போல ராவ் ன் எதிரிகள் அனைவரும் சோனியா பின்னால் திரளத் தொடங்கினார்.
காய் அடுத்த கட்டம் நகர்ந்தது.
ஒருவருக்கு ஒரு பதவி என்ற மந்திரத்தை ஒலிக்கத் தொடங்கினர்.
அதாவது ராவ் பிரதமராக இருக்கட்டும். சோனியா கட்சித் தலைவராக இருக்க வேண்டும் என்று துதியை சற்று பலமாகப் பாடத் தொடங்கினார். அப்போது தான் சோனியாவிற்கு அரசியல் அபிலாசைகளுக்கு உண்டான அதிர்ஷ்ட காற்று பாபர் மசூதி இடிப்பு ( 1992 டிசம்பர் 6) வழியாக உருவானது. அதாவது "காங்கிரஸ் கட்சி மதச்சார்பின்மை என்ற வார்த்தைக்கு அர்த்தம் இல்லாத ஆட்சி" என்று முதல் அறிக்கையில் விளாசித் தள்ளியிருந்தார்.
சோனியாவின் அரசியல் அதிகார ஆசையின் அஸ்திவாரம் எங்கிருந்து தொடங்கியது தெரியுமா?
1994 ஆகஸ்டு 24 அமேதி தொகுதியில் தான் சோனியா உ என்று போட்டு தன் பிள்ளையார் சுழியைத் தொடங்கினார்.
எப்படி?
பிரமாண்டமான கூட்டத்தைப் பார்த்து, அவர்களின் ஆராவாரத்தைக் கண்டு ஏழு நிமிடம் பேசிய உரையின் சாரம்சத்தின் சுருக்கம் என்னவென்றால் "ஒரு பிரதமரின் கொலையை இந்த அரசாங்கம் சரியான முறையில் புலனாய்வு செய்யவில்லை. பிரதமருக்கே இந்த கதியென்றால் மக்களின் நிலை என்ன?" என்று எதிர்ப்புக்குரலைப் பதிய வைத்து அன்று முதல் நான் (தான்) தலைவர் என்பதனை ராவ் க்கு மறைமுகமாக உணர்த்தினர்.
இதில் குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம் என்னவெனில் எதிர்ப்பு, வில்லங்கம், கூச்சல் என்று பரஸ்பரம் இரண்டு பக்கமும் இருந்தாலும் ராவ் ன் அரசாங்கம் ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்குச் செய்ய வேண்டிய அனைத்து உதவிகளையும், நிதியையும் வாரி வாரி வழங்கிக் கொண்டு இருந்தது.
அன்று நரசிம்மராவ் குறித்து சோனியா என்ன மனதில் வைத்திருந்தார் என்பதனை ராவ் இறந்த சமயத்தில் நடந்ததை வைத்து நம்மால் உணர்ந்தது கொள்ள முடியும்.
ஆமாம் ராவ் சம்மந்தப்பட்ட எதுவும் டெல்லிக்குள் இருக்கவே கூடாது என்பதில் கவனமாக இருந்து அவரை சரித்திர பக்கங்களிலிருந்து துடைத்தெறிந்து லாவகமாகச் செய்து முடித்தார்.
காங்கிரஸ்காரர்களிடம் கேட்டுப் பாருங்கள்.
நரசிம்மராவ் என்று ஒருத்தர் இருந்தாரா? என்று கேட்பார்கள்.
சோனியா காந்தியைப் பற்றிய சரியான மதிப்பீடு. நரசிம்மராவைப் பற்றி அப்போது நான் ரசித்துப் படித்தது இன்னும் நினைவில் உள்ளது. "Not taking a decision itself is a decision, Narasimha Rao followed and succeeded in it."
ReplyDeleteநீங்க கொடுத்த வரி முக்கியமானது. மீண்டும் சிலவற்றை எழுத பயன்படுத்திக் கொள்கிறேன். நன்றி
Deleteபல நிகழ்வுகளை பல நூல்கள் வாசித்து உள்ளீர்கள் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது...
ReplyDeleteஅன்று : "பிரதமருக்கே இந்த கதியென்றால் மக்களின் நிலை என்ன?"
இன்று : "முதலமைச்சருக்கே இந்த கதியென்றால் மக்களின் நிலை என்ன?"
நன்றி
Deleteஇந்திய அரசியலில் அதிகம் பேசப்படாதவர் நரசிம்ஹ ராவ் ஆனால் ஒரு பொருளாதாரப் புரட்சியையே சத்தமில்லாமல் செய்தவர் ராவ்
ReplyDeleteஉண்மை.
Deleteஜோதிஜி! தியாகசிகரமாக காங்கிரஸ்காரர்களால் மட்டும் கொண்டாடப்படுகிற இந்தப் பெண்மணி, நீங்கள் மறைமுகமாகச் சொல்கிற மாதிரி அத்தனை புத்திசாலி ஒன்றும் இல்லை. ஆனால் மாமியாருக்கு நெருக்கமாக இருந்து கொஞ்சம் கற்றுக் கொண்டவர். இங்கே ஒரு கூட்டத்துக்கு நேரு பாரம்பரியம் தங்களுடைய செல்வாக்கைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத் தேவைப்பட்டது. இதில் கட்சிக்காரர்கள் தவிர, அரசின் முக்கியப் பொறுப்பில் இருந்த அதிகாரிகளும் அடக்கம்.
ReplyDeleteபிவி நரசிம்மராவ் மிகவும் புத்திசாலி. நிறையப் படித்தவரும் கூட. கடினமான சூழலில் பொருளாதாரச் சீர்திருத்தங்களை அமல் படுத்தவேண்டிய கட்டாயத்தில் நரசிம்மராவ் இருந்தார். இடதுசாரிகள் கடுமையாக எதிர்க்க வங்கிச் சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வந்தன. காப்பீட்டு நிறுவனங்களில் கொண்டுவர முடியாமல் கொந்தளிப்பு என்று எதிர்நீச்சல் போடவேண்டியிருந்தது. அதிருப்தியாளர்கள் சோனியாவிடம் தஞ்சம் புகுந்தனர் என்று சொல்ல முடியாது, ஆனால் அப்படித்தான் நடந்தது .கேணப்பய ஊருல கிறுக்குப்பய நாட்டாமை என்ற மாதிரி சோஷலிச மயக்கத்தில் இருந்தவர்களும் சோம்பேறி ஊழல் அதிகாரிகளும் சோனியா நாட்டமைக்குள் வந்தது இந்திய அரசியலின் மாபெரும் சோகம். ஆனால் bofors பிரச்சினையைக் காட்டி சோனியாவை ஐந்தாண்டுகள் ஒதுக்கியே வைத்திருந்தவர் நரசிம்மராவ். அந்த வன்மம் அவர் இறந்தபிறகும் கூட ஒரு முன்னாள் பிரதமருக்கான மரியாதையுடன் இறுதிச் சடங்குகளை டில்லியில் நடத்தவிடாமல், சோனியாவின் கைத்தடியாகவே செயல் பட்ட YS ராஜசேகர ரெட்டி நடத்திய அராஜகம் பிரசித்தம்.
ஒன்லைனராக சொல்வதென்றால் சுதந்திரமாக சிந்திக்க, செயல்பட காங்கிரஸ்கட்சியோ அரசு அதிகாரிகளோ தயாராக இல்லாத ஒரு தருணத்தில், நேரு பாரம்பரியத்துக்கு அடிமைகளாக இருக்கவே விரும்பினார்கள் என்பதுதான் வரலாற்றுச் சோகம்!
விரும்பினார்கள் என்று நீங்க சொல்வது தவறு. அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நிர்ப்பந்தப்படுத்தினார்கள் என்பது தான் உண்மை.
DeleteIt is easy to be an Individual and live a life with good principles. You can speak your heart. But, Once you become a politician, you have to become "something else" because you need to please lots of people. You have to agree on things which you do not like.
ReplyDeleteKamal Haasan always claimed as an atheist. He can boldly say that God MEANS NOTHING TO ME, so is religion, to me and easily beat hindu-trash Smiriti Irani and made her SHUT UP in the republic tv debate. He just has to be HONEST. It is as simple as that. He did not want to say what he believes. For what? To get filthy votes from the believers- they happened to be majority. Kamala Haasan literally looked like a moron in front of all the religious fanatics. It is easy to win when you speak your heart. Once you become a politician, things get complicated for lots of people including this guy.
Idk about Soniya and PV N and their politics. Recently I happened to watch the debate Kamal-Irani. It is not the language barrier, which caused KH a biggest embarrassment of his life time, it is because HE tried to respect "religious believes" to get believers fucking votes!
https://www.youtube.com/watch?v=owKoE1XPT2k
அரசியலுக்கென தேவைப்படுகின்ற அடிப்படை குணாதிசியங்கள் என்று பார்த்தால் நீங்க சொன்னது உண்மை தான். ஆனால் எவ்வளவு கொடூரமாக இருந்தாலும் மனதளவில் சிறிதளவு ஈரம் இருக்க வேண்டும். நேரு இந்திரா ராஜீவ் மூவரிடமும் இருந்தது. இது என் தனிப்பட்ட பார்வை.
Deleteஅண்மையில் மேனகா காந்தி சில பல வருடங்களுக்கு முன்னால் அளித்த நேர்காணல் ஒன்றை பார்த்தேன். அவர் சோனியா காந்தி பற்றி சொன்ன சில விடயங்களை கேட்க எனக்கும் ஆச்சர்யமாக இருந்தது. அவர் சொன்னது எல்லாம் உண்மையாக இருக்க வாய்ப்பில்லா விட்டாலும் எல்லாமே பொய்யாக இருக்கவும் முடியாது. நேரம் கிடைக்கும் போது பாருங்கள். கெக்கே பிக்கே எதுவுமில்லாமல் மிக அருமையாக நேர்கண்டுள்ளார் சிமி கரேவால்.
ReplyDeletehttps://www.youtube.com/watch?v=4ZJ9PVLWkG4
Deleteமேனகா அடிப்படையில் பஞ்சாபி. தன்மானம் அவர்களுடைய உயிர் போன்றது. இதில் மேனகா சொல்லி உள்ள சில விசயங்களைப் பற்றி படித்துள்ளேன். இந்திராவுக்கு மேனகாவுக்கும் புரிதலற்ற போக்கு உருவானதற்கும், அதை தீர்க்க முடியாத அளவிற்கு கொண்டு சென்றதற்கும் முக்கிய காரணம் மாபியா பெண்மணி தான். இது அனைவருக்கும் தெரிந்தது தான்.
அருமை. நன்றி.
ReplyDelete