வலம்புரி ஜான் எழுதிய வணக்கம் - நூல் விமர்சனம் 3
எம்.ஜி.ஆர் படங்களில் சண்டைக் காட்சி என்பது பிரசித்தமானது. வெகுஜன மக்களால் விரும்பிப் பார்க்கப்பட்டது. எம்.ஜி.ஆரின் படங்கள் திரையரங்கத்திற்கு எந்த அளவுக்கு லாபம் தரக்கூடியதோ அந்த அளவுக்கு ரசிகர்கள் செய்யும் ஆர்ப்பாட்டங்களால் நஷ்டங்களையும் சந்தித்தது. உடைந்த சேர்களும், கிழிந்த இருக்கைகளும் அதிகம்.
நல்லவன். கெட்டவன். என்ற இரண்டே விசயங்களை வைத்துக்கொண்டு சித்து விளையாட்டு காட்டியவர். இறுதியில் எம்.ஜி.ஆர் வில்லனை வெல்வார் என்பதே. ஆனால் எம்.ஜி.ஆர் வாழ்க்கை முழுக்கக் கடைசி வரையிலும் தோற்றது ஜெயலலிதாவிடம் மட்டுமே.
தான் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம் என்பது தெரிந்தே தோற்றுக் கொண்டிருந்தார்.
நல்லவன். கெட்டவன். என்ற இரண்டே விசயங்களை வைத்துக்கொண்டு சித்து விளையாட்டு காட்டியவர். இறுதியில் எம்.ஜி.ஆர் வில்லனை வெல்வார் என்பதே. ஆனால் எம்.ஜி.ஆர் வாழ்க்கை முழுக்கக் கடைசி வரையிலும் தோற்றது ஜெயலலிதாவிடம் மட்டுமே.
தான் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம் என்பது தெரிந்தே தோற்றுக் கொண்டிருந்தார்.
தான் செலுத்திய அன்பைப் புரிந்து கொள்ளாமலும், அதே சமயத்தில் அவரை விட்டுப் பிரிய மனமில்லாமலும் தனக்குத் தானே மன உளைச்சலை உருவாக்கிக் கொண்டவர் எம்.ஜி.ஆர். அவர் ஜெ மேல் வைத்திருந்தது அன்பல்ல. ஆதிக்கம் என்று வைத்துக் கொண்டாலும் ஜெயலலிதா எம்.ஜி.ஆருக்கு வைத்த பெயர் பெட்டை. இதன் அர்த்தத்தை விவரிக்கத் தேவையில்லை.
இவர் முகத்தை மட்டுமே பார்ப்பதற்காக நாள் முழுக்கக் காத்திருந்த கோடிக்கணக்கான மக்களிடமிருந்த இவரின் அபரிமிதமான புகழும் செல்வாக்கும் எங்கே? ஒவ்வொருநாளும் ஜெ வுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்த காட்சிகளை எல்லாம் வாசிக்கும் போது தனி மனிதனின் அந்தரங்கமாகத் தெரியவில்லை. ஒரு தலைமைப்பண்பு உள்ளவரின் இருக்கத் தேவையில்லாத குணாதிசியங்களின் அவலமாகத்தான் தெரிகின்றது.
தனக்குச் சொந்தமானதை வேறு எவரும் சொந்தமாக்கிவிடக் கூடாது என்பது அவரின் பிடிவாத கொள்கை. ஆனால் இதற்காக அவர் பெற்றதை விட இழந்தது தான் அதிகம். அவர் வாழ்நாள் முழுக்க இதற்காகவே தன் ஆரோக்கியத்தைப் பரிசாகத் தர வேண்டியிருந்தது. மன நலத்தைப் பாதித்தது. கடைசியில் தன் முதல் அமைச்சர் பதவிக்கே வேட்டு வைக்கப் போகின்றது என்பதனை உணர்ந்து அவர் வருத்தப்பட்ட அந்தரங்க ரகசியங்கள் சிலவற்றை மட்டும் வலம்புரி ஜான் இந்தப் புத்தகத்தில் பகிர்ந்துள்ளார்.
ஜெயலலிதாவை மன்னர் பரம்பரை போல இன்னமும் சித்தரிப்பவர்கள் அவர் அம்மா வாழ்ந்த தொடக்க வாழ்க்கைப் பற்றிச் சில இடங்களில் வருகின்றது. ஆதாரங்களும், அதைக் கண்டவர்களைப் பற்றியும் குறிப்புக் கொடுத்துள்ளார். ஜெயலலிதாவின் அம்மா தமிழ்நாட்டில் தொடக்கத்தில் தேவிபட்டணத்தில் ஆயாம்மா வேலை பார்த்ததும் அதன் பிறகே அவர்களின் பூர்விகமான ஸ்ரீ ரங்கம் ஊருக்கு வந்ததைப் பற்றியும் எழுதியுள்ளார். அங்குள்ளவர் தொடர்பின் மூலமாகத்தான் சென்னையில் திரைப்பட வாய்ப்பு தேடி வந்துள்ளார், சந்தியாவின் தங்கையும் அப்போது நடிகையாக இருந்துள்ளார்.
காலப்போக்கில் எம்.ஜி.ஆர் படங்களில் கதாநாயகியாக வளரும் அளவுக்கு வாழ்க்கை மாறியுள்ளது. இடையில் வாழ்க்கையை நடத்தக் கஷ்டப்பட்ட காலத்தில் சந்தியாவும், ஜெயலலிதாவும் பணத்திற்காகச் செய்த பல காரியங்களை மேலோட்டமாகவே எழுதியுள்ளார். ஆண் துணை இல்லாத குடும்ப வாழ்க்கையில் தங்களையே உருக்கித்தான் தங்களை நிலைப்படுத்திக் கொண்டு உள்ளனர்.
இது ஆண் உலகம். ஆண்கள் செய்கின்ற விசயங்கள் எதுவும் பெரிதாகத் தெரியாது. ஆனால் பெண்கள் அதுவும் நடிகையாக இருப்பவர்கள் செய்த காரியங்கள் அனைத்தும் சம்மந்தப்பட்டவர்கள் எவர் மூலமாகவோ வெளியே வந்து தான் தீரும். இவர்களின் தொடக்க வாழ்க்கையை முழுமையாக அறிந்தவர் அக்னி நட்சத்திரம் படத்தில் வில்லனாக நடித்த திரையரங்க அதிபர் ஜி. உமாபதி. தொடக்கக் கால இவர்களின் அழுக்கைப் பொருட்படுத்தாமல் எம்.ஜி.ஆர் இவருக்கு வழங்கிய வாய்ப்புகளும், உதவிகளும் கடைசியில் அவருக்கே எதிராகவே வந்து சேர்ந்துள்ளது.
எம்.ஜி.ஆரின் புகழும், அவர் இருந்த பதவியும் ஜெயலலிதாவிற்கு முக்கியமாகத் தெரிந்தது. ஜெயலலிதாவின் எண்ணமும், அடுத்தடுத்து நகர்த்திய செயல்பாடுகளும் அதை நோக்கியே நகர்ந்தது. இது அரசியல் மட்டுமல்ல. பணம், புகழ் அதிகம் இருக்கும் அனைத்து துறைகளிலும் கீழ்மட்ட நிலைகளில் இருப்பவர்கள் செய்யக்கூடியதே. மன்னர்கள் காலம் முதல் படையெடுப்பாளர்கள் காலம் வரைக்கும் எவர் தமக்கு உதவி செய்தார்களோ அவர்களை முடித்துக் கட்டுவது தான் வாடிக்கையாக இருந்துள்ளது. காரணம் சொல்லத் தேவையில்லை. தன்னைப் போல மற்றவர்களுக்குச் செய்துவிடக்கூடாது என்பதே பிரதான காரணம்.
மற்றது எல்லாம் பிறகு தான்.
ஜெயலலிதா வாசித்த புத்தகங்கள் அவருக்கு அரசியல் ஆசைகளை உருவாக்கியது. அது தான் முதல் காரணம். முக்கியக் காரணம். கற்பனைகள் எல்லாமே எதார்த்தத்தில் பொருந்தி போய்விடுவதில்லை. ஆனால் உருவான இடையூறுகளைத் தாண்டி ஹைதராபாத் சென்று தங்கிவிடலாம் என்ற எண்ணத்தை மாற்றி இங்கே தங்க வைத்தவர்கள் சசிகலா மற்றும் நடராஜன்.
ஜெயலலிதாவின் ஆசைகளை முழுமையாக்கிய பெருமை சசிகலா மற்றும் நடராஜனையே சாரும். ஒரு மூளையில் இருந்து உதிக்கும் சிந்தனைகளுக்கும் அதுவே மூன்று மூளைகளில் உருவாகும் செயல்பாடுகளின் வீரியம் எந்த அளவுக்கு இருக்கும்? என்பதனை உங்களால் யூகிக்க முடிந்தால் ஏன் வெகுவிரைவில் ஜெயலலிதா முதல் அமைச்சர் பதவியில் அமர முடிந்தது என்பதனை உணர்ந்து கொள்ள முடியும்.
திரைப்படங்களில் காட்டப்படும் காட்சிகளும் சசிகலா வாழ்க்கையும் ஒன்றாக இருப்பது ஆச்சரியம் தான். ஒரு கிராமத்துப் பெண். கிராம வாழ்க்கையைத் தவிர வேறு எதுவும் பார்த்திராத பெண். அரசு அதிகாரியாக இருந்த நடராஜனுடன் திருமணம் நடக்கின்றது. சென்னையில் ஏதாவது ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகின்றது. சசிகலா முதல் முறையாகச் சென்னை வருகின்றார். சென்னையில் யாரையும் தெரியாது. தங்குவதற்கு இடம் கூட இல்லை. சந்திரலேகா ஐ.ஏ.எஸ் கொடுத்த கடிதம் மட்டும் கையில் உள்ளது. காட்சிகள் மாறுகின்றது. ஆனால் கால் நூற்றாண்டு காலத்திற்குள் அகில உலகத்திற்கும் தெரிந்த நபராக மாறியுள்ளார்.
இவர் குடும்ப உறுப்பினர்களிடத்தில் உள்ள சொத்துக்களின் மொத்த அளவு என்பதனை எவராலும் இன்று வரையிலும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஜெயலலிதாவிடம் சசிகலாவை அறிமுகம் செய்து வைத்த சந்திரலேகா ஐ.ஏ.எஸ் கடைசியில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்படப் போகின்றோம் என்று நினைத்துப் பார்த்திருப்பாரா? சசிகலா அதிமுகத் தலைமைச் செயலகத்திற்குத் தான் வந்த ஆட்டோவிற்கு அதிமுகக் கழகத்தில் உள்ளவர்களிடத்தில் ஐந்தும், பத்துமாக வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தவர் என்றால் இன்று நம்பும்படியாக உள்ளதா?
ஜெயலலிதா, சசிகலா காலில் விழாத அரசியல்வாதிகளை இனி யாராவது மிச்சம் மீதி இருக்கின்றார்களா?
ஜெயலலிதா, சசிகலா காலில் விழாத அரசியல்வாதிகளை இனி யாராவது மிச்சம் மீதி இருக்கின்றார்களா?
சசிகலாவின் ஒவ்வொரு நடவடிக்கையும் நடராஜனைச் சார்ந்தது இருந்தது. நடராஜனின் ஒவ்வொரு நடவடிக்கையும் எவரும் நினைத்துப் பார்க்காத பொன் முட்டையிடும் வாத்தைப் பாதுகாக்கும் பணியைச் செய்து கொண்டிருந்தது. திட்டமிடுதலும், களப்பணியும் சரியாக இருக்க வேண்டும். அது காலச் சூழலுடன் ஒத்துப் போக வேண்டும். இதற்குச் சமகாலத்தில் மிகச் சிறந்த உதாரணம் ஜெயலலிதா, சசிகலா வாழ்க்கை முறை தான்.
ஜெயலலிதாவிற்குத் தொடக்கத்தில் 14 பேர்கள் கொண்ட பாதுகாப்புக் குழுவை அப்போது அவருடன் நெருக்கமாக இருந்த திருநாவுக்கரசு தான் தன் சொந்த செலவில் செய்து கொடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் அந்தப் படையை நீக்கியது முதல் ஜெயலலிதாவின் உறவு முதல் நட்பு வட்டம் வரைக்கும் பார்த்துப் பார்த்து களையெடுத்த சசிகலா நடராஜனின் ராஜதந்திர நடவடிக்கைகளைப் பல இடங்களில் வலம்புரி ஜான் அதீதமாகப் பாராட்டி எழுதியுள்ளார். ஜெயலலிதா மனதில் அரசியல் ஆசை துளிர்விட்ட காலம் முதல் அவர் முதல் முறையாக முதலமைச்சர் பதவியேற்ற நாள் வரைக்கும் எத்தனையோ பேர்கள் உதவியுள்ளார்கள். பட்டியல் நீளம். ஆனால் அவர்கள் ஒருவர் கூட அருகில் இல்லாதவாறு பார்த்த பெருமை சசிகலா நடராஜனையே சாரும்.
இந்த இடத்தில் ஒரு குறிப்பிட்ட விசயத்தை ஜான் சுட்டிக் காட்டி எழுதுகின்றார்.
மன்னர் காலம் தொடங்கி, ஆங்கிலேயர் ஆட்சி மற்றும் கடந்த எழுபது ஆண்டுக் கால இந்திய சரித்திரத்தில் பிராமணர்களைத் தவிர்த்து எந்த உயர் பதவிகளும் இருந்ததே இல்லை. எல்லா இடங்களிலும் அவர்கள் தான் இருப்பார்கள். இது அவர்களின் தனித்திறமை அல்லது புத்திசாலித்தனம். ஆனால் நடராஜன் தான் இந்த லாபி வட்டத்தை உடைத்துக் காட்டியவர். "எங்காத்து பொண்ணு வந்திருக்கா" என்று சிலாகித்த எந்தப் பிரமாணர்களும் ஜெ பக்கத்தில் நெருங்க முடியாத அளவிற்கு வலைப்பின்னல் சரியாகவே உருவாக்கி வைத்திருந்த சசிகலா நடராஜன் திறமையை எப்படிப் பாராட்டுவது?
ஜெயலலிதாவிற்கு என்ன தான் திறமையிருந்தது? என்பது குறித்து வரலாற்றில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எதுவுமில்லை. எடுத்தேன்? கவிழ்த்தேன் ரீதியான நபரைப் பொம்மை போல வைத்துக் கொண்டு மொத்த அதிகாரங்களையும் தாங்கள் கையில் வைத்துக் கொண்டு வித்தைக் காட்டிய அவர்களின் திறமையைப் பல இடங்களில் வலம்புரி ஜான் சிலாகித்து எழுதியுள்ளார்.
குறிப்பாக நடராஜன் வேட்டை நாய் போலவே தொடக்கம் முதலே செயல்பட்டு வந்துள்ளார். எதிரி என்றால் அழித்து முடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் எந்த மாற்றத்தையும் உருவாக்கிக் கொள்ளவே இல்லை. கணவன் வெளிப்புறம். மனைவி உட்புறம் என்பது எழுதப்படாத விதியாக வைத்துக் கொண்டு தமிழ்நாட்டின் மொத்த விதியையும் மாற்றிய பெருமை இவர்களையே சேரும். சசிகலா நடராஜன் குறித்து அவர்களின் சகல பாகங்களையும் செய்த பாவங்களையும் பலரும் பல இடங்களில் பாகம் குறித்து எழுதிவிட்டனர்.
இவர்களைப் பற்றி வலம்புரி ஜான் எழுதிய வாசகம் பொருத்தமாக உள்ளது.
ஜெயலலிதா செய்த வேலை எம்.ஜி.ஆரின் உண்மையான விசுவாசிகளை அழித்து ஒழித்தது. ஆனால் சசிகலா செய்தது ஜெயலலிதாவின் விசுவாசிகள் என்பது அறவே இருக்கக்கூடாது என்பதனை கர்மசிரத்தையுடன் செய்து முடித்தது.
தீபா, தீபக் போன்ற பெயர்கள் கூட ஜெயலலிதா இறப்புக்குப் பின் தானே நமக்குத் தெரிய வந்தது. ஜெயலலிதா எல்லாவற்றுக்கும் விலை வைத்திருந்தார். ஆனால் சசிகலா குடும்பத்தினரோ விலை என்பதே இல்லை. அனைத்தும் நமக்குரியது என்பதனை ஒவ்வொரு செயல்பாட்டிலும் நிரூபித்தனர்.
தீபா, தீபக் போன்ற பெயர்கள் கூட ஜெயலலிதா இறப்புக்குப் பின் தானே நமக்குத் தெரிய வந்தது. ஜெயலலிதா எல்லாவற்றுக்கும் விலை வைத்திருந்தார். ஆனால் சசிகலா குடும்பத்தினரோ விலை என்பதே இல்லை. அனைத்தும் நமக்குரியது என்பதனை ஒவ்வொரு செயல்பாட்டிலும் நிரூபித்தனர்.
தலைமைப்பொறுப்பில் இருப்பவர்களுக்குப் பலகீனம் இருந்தால் அது எந்த அளவுக்கு நாச விளைவுகளை நாட்டுக்கு உருவாக்கும் என்பதனை தமிழ்நாட்டின் கடந்த கால அரசியல் தலைகள் ஒவ்வொருவரும் அவர்களின் வாழ்க்கை வழியே நமக்குப் பலவிதங்களில் உணர்த்திக் காட்டிச் சென்று உள்ளனர்.
ஆனால் ஜெயலலிதா வாசித்த புத்தக அறிவு மூலம் தனக்குத் தானே உருவாக்கிக் கொண்ட ஆளுமை எதுவும் அவரின் செயல்பாட்டில் காட்ட முடியாத அளவிற்குப் பரந்துபட்ட மனசு இல்லாமல் போனதற்கு முக்கியப் பல காரணங்களில் சசிகலா குடும்பமே முக்கியக் காரணமாக இருக்கின்றார்கள்.
காலம் ஒவ்வொரு தனி மனிதர்களுக்கும் அவரவருக்குண்டான சில அதிர்ஷ்ட வாய்ப்புகளை அவ்வப்போது வழங்கத் தான் செய்கின்றது. சிலர் சரியான சமயத்தில் பயன்படுத்தி வெற்றி கண்டு விடுகின்றார்கள். சிலர் அந்த வாய்ப்பு வந்ததை அறியாமல் கோட்டை விட்டு வாழ்நாள் முழுக்கப் புலம்பும் மனிதராக வாழ்கின்றார்கள். ஜெயலலிதாவிற்குத் தமிழகத்தில் உள்ள மற்ற அரசியல்வாதிகளுக்கும் உண்டான பெரிய வித்தியாசம் ஒன்று என்னவென்றால் மொத்த அதிர்ஷ்டமும் இவர் பக்கம் இருந்தது. ஆனால் இவரின் அதிர்ஷ்டங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் சசிகலா குடும்பத்தினர் மட்டுமே.
உடல் உறுப்புகள் மொத்தமாக மாற்றி, சாவுக்கு மிக அருகே சென்று வந்தும் கூடத் தன் குணாதிசியங்களை மாற்றிக் கொள்ள முடியாத நடராஜனின் சமீப பேட்டிகளை வாசிக்கும் போது அவரின் ஆரோக்கியமான வாழ்க்கையின் போது அவரது எண்ணங்கள் எப்படியிருந்துக்கும் என்பதனை புரிந்து கொள்ள முடிகின்றது. எம்.ஜி.ஆர் கடைசிக் காலத்தில் நோய் என்ற வலைக்குள் மாட்டிக் கொண்டார். ஆனால் அவருக்குண்டான உதவிகள் கிடைத்தது. எதுவும் மறைக்கப்படவில்லை. மறுக்கப்படவில்லை.
ஆனால் ஜெயலலிதா வாழ்க்கையில் மொத்தமும் தலைகீழ். என்ன நடந்தது? என்ன நடந்திருக்கும்? என்பதனை இன்னமும் தமிழ்கூறும் நல்லுலகம் ஆராய்ந்து கொண்டிருக்கின்றது.
இது தான் சசிகலா?
இது தான் சசிகலா?
எம்.ஜி.ஆர் உடல் நலிவுற்று இருந்த போது ஜெயலலிதா இவரால் இந்தச் சூழ்நிலையில் கூடத் தமிழ்நாட்டை ஆள முடியும் என்றால் என்னால் ஏன் முடியாது? என்று கேள்வி எழுப்பியவர் என்றால் அரசியலை எந்த அளவுக்குப் பார்த்துள்ளார்? என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழக அரசியல் என்பதும் முதல் அமைச்சர் நாற்காலி என்பதும் இப்போது கூட இரண்டு வெற்றிப்படங்கள் நடித்து விட்டால் அது நமக்குச் சொந்தம் என்று கருதும் தமிழ் நடிகர்கள் சொல்லும் விளையாட்டு நாற்காலி போலத்தானே இருக்கின்றது?
பல புத்தகங்கள் வாசித்த ஜெயலலிதா தமிழக அரசியலைப் பற்றி எப்படிப் புரிந்து வைத்திருக்கக்கூடும்? என்பதனை நம்மால் புரிந்து கொள்ள முடியும். தனக்குத் தெரிந்த ஆங்கில அறிவே அனைத்துக்கும் அருமருந்தாக இருக்கும் என்று கடைசி வரைக்கும் நம்பினார். ஆங்கிலம் தெரியாதவர்கள் அவர் பார்வையில் மனிதர்களாகவே தெரியவில்லை.
தாழ்வு மனப்பான்மை என்பது பல சமயங்களில் உயர்வு மனப்பான்மையாகத் தெரியும். தன்னுடைய காயங்கள், தன் அழுக்கு, மறைக்க முடியாத தோல்விகள், மறைத்த ஆக வேண்டிய கடந்த கால அசிங்கங்கள் அனைத்தும் தன்னுடைய அகங்கார செயல்பாடுகளால் மறைத்து விட முடியும் என்று நம்புவர்களின் வாழ்க்கைக்கு மிகச் சிறந்த உதாரணம் ஜெயலலிதாவின் வாழ்க்கை. தொடக்கம் முதலே ஜாதகம் விசயங்களில் அதீத ஈடுபாட்டுடன் இருந்துள்ளார். அதைப் போலவே மந்திர, சித்து வேளைகளில் அதே அளவுக்கு ஈடுபாட்டுடன் இருந்துள்ளார்.
வலம்புரி ஜான் தான் அதற்கும் உதவியுள்ளார். தன் உண்மையான ஜாதகத்தைப் போல மற்றொரு ஜாதகத்தையும் தயார் செய்து வைத்து மற்றவர்களைக் குழப்பும் வேலையையும் தெளிவாகவே செய்துள்ளார். பிரபல ஜோதிடர் இவரின் எதிர்காலத்தைக் கணித்துச் சொல்லியவர் ஒரு வார்த்தையும் சேர்த்துச் சொல்லியுள்ளார். இந்த ஜாதகி போதை விவகாரங்களில் தள்ளியே இருக்க வேண்டும் என்பதே. நாம் தான் யூகித்துக் கொள்ள வேண்டும்.
அமெரிக்கா சென்றவர் இறந்தே விட்டார் என்று நம்பி செய்த காரியங்கள் எதுவும் அவர் முழுமையாகத் திரும்பி வந்ததும் நிறைவேறவே இல்லை. ராஜ ரகசியங்கள், ராஜாங்க உள்ளடி வேலைகள் அனைத்தையும் அங்கங்கே வலம்புரி ஜான் விவரித்திருப்பதைப் பார்க்கும் போது பழிவாங்கும் குணம் அதிகம் உள்ள எம்.ஜி.ஆர் எப்படி இவர்களை எல்லாம் இவ்வளவு தூரம் விட்டு வைத்திருந்தார் என்பதே ஆச்சரியமாக உள்ளது.
காலம் சில சமயம் கழிவுகளை உச்சத்திற்கு அழைத்துச் செல்லும். தீமைகள் தன் பேயாட்டத்தை இறுதி வரைக்கும் நிறுத்தாது. ஆனால் வரலாற்றுப் பக்கங்கள் மொத்தத்தையும் ஏதோவொரு சமயங்களில் வெளியே கொண்டு வந்து துப்பி விடும் வல்லமை கொண்டது.
கறை நல்லது
தொடர்புடைய பதிவுகள்
ஜெ. செய்த ஊழல்களை முழுமையாக தெரிந்து கொள்ள இந்த மின் நூல் உதவக்கூடும்.
உங்கள் வாசிப்புக்கு மின் நூல்கள்
பழைய குப்பைகள் மின்நூல் (3,883)
ஈழம் -- வந்தார்கள் வென்றார்கள் (57, 639)
தமிழர் தேசம் (30.411)
காரைக்குடி உணவகம் (27,672)
பயத்தோடு வாழப் பழகி கொள் (14.232)
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் (15,478)
கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு (41.197)
வெள்ளை அடிமைகள் (19. 207)
காரைக்குடி உணவகம் (27,672)
படித்து பிரமித்தேன் - கில்லர்ஜி
ReplyDeleteநன்றி நண்பரே.
Deleteசசிகலாவுக்கு ஜயலலிதா மேல் இருந்த ஆதிக்கத்துக்குக் காரணம் ஏதாவது சொல்லப்பட்டிருக்கிறதா எதுவுமே தெரியாத கைப்பாவையாக ஜெயலலிதா இருந்தாரா தெரிந்திருந்தால் அந்தவலை என்ன கிழிக்கப் படமுடியாததா
ReplyDeleteமற்ற புத்தகங்களையும் படிக்க வேண்டும் என்று நினைத்துள்ளேன்.
Deleteஜெ. படித்த ஆங்கில புத்தகங்களின் மூலம் மிகப்பெரிய அறிவு பெற்றிருந்தார் என்பதான சிந்தனை இந்தக் கட்டுரை முழுவதும் விரவி இருக்கிறது. நான் திரு சோவின் படப்பிடிப்பு சமயம் ஜெயலலிதாவை கிட்டத்தட்ட ஒரு மாதம் அளவிற்குப் பக்கத்திலிருந்து பார்த்திருக்கிறேன்.(இது பற்றி ஏற்கெனவே என்னுடைய வலைப்பூவில் ஒரு பதிவும் எழுதியிருக்கிறேன்) அந்த சமயங்களில் அத்தனை நாட்களும் ஜெவின் கையில் தடிமனான ஒரு ஆங்கிலப் புத்தகம் தவறாமல் இடம் பெற்றிருக்கும்.எல்லாரும் உட்கார்ந்து பேசும் சமயங்கள் தவிர தான் தனித்து விடப்படும் எல்லா சமயங்களிலும் அவர் அந்த புத்தகத்தைத்தான் வாசித்துக்கொண்டிருப்பார். அந்த ஒரு மாத இடைவெளியில் மூன்று புத்தகங்கள்வரை அவர் மாற்றியிருப்பார் என்று நினைக்கிறேன். ஆனால் அந்த மூன்றுமே அந்தச் சமயத்தில் பிரபல வெளியீடுகளாக இருந்த ஆங்கில நாவல்கள்தாமேயன்றி மற்ற ஆங்கில புத்தகங்கள் கிடையாது.ஆங்கில நாவல்களைப் படிப்பதன் மூலம் ஒருவர் எத்தகைய தேர்ந்த அறிவினைப் பெற்றுவிட முடியும் என்பது எனக்கு விளங்கவில்லை. தவிர, இது படப்பிடிப்புத் தளம் என்பதால் இங்கெல்லாம் ஆழமான புத்தகங்களைப் படிக்க முடியாது என்றால் அவர் வாழ்நாளின் பெரும்பகுதியைச் செலவழித்தது படப்பிடிப்புத் தளங்களில் மட்டும்தானே?
ReplyDeleteஎம்ஜிஆர் யாரிடமும் தோற்றதில்லை. அவர் ஜெயிடம் மட்டும்தான் தோற்றார் என்று ஆரம்பத்திலேயே எழுதியிருக்கிறீர்கள். அலை ஓசையில் எழுத ஆரம்பித்த கண்ணதாசனை நிறுத்த வழி தெரியாமல் அவரிடம் எந்த வகையில் போய் அந்தக் கட்டுரைத் தொடரை நிறுத்த வைத்தார் என்று நினைக்கிறீர்கள்? அவருக்கும் கவிஞருக்கும் பிணக்கு ஏற்பட்டபோது எல்லாரையும்போல இவரையும் இருக்குமிடம் தெரியாமல் அடிக்கவேண்டும் என்ற இன்னொருவரின் எண்ணம் பலித்ததாகவும் தெரியவில்லையே....
தொழில் சமூகம், அரசியல், திரைப்படஉலகம் இந்த மூன்றிலும் பணம், புகழ், அதிகாரம் மூன்றும் தேவைக்கு அதிகமாக கிடைக்கின்றது. அவரவர் செயல்பாடுகள் பொறுத்து. கிடைப்பதை தக்க வைப்பது தான் பெரும்பாடு. ஒருவர் தான் சாகும் வரைக்கும் தனக்கான அங்கீகாரத்தை தக்க வைப்பது என்பது எல்லோருக்கும் அமைவதில்லை. ஆனால் தக்க வைப்பது என்பது சில ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் தான் ஒவ்வொரு சமயமும் நிறைவேற்றப்படுகின்றது. எம்.ஜி.ஆர் கண்ணதாசனிடம் மட்டுமல்ல. இன்னும் வெளியே தெரியாத பலரிடமும் பணிந்து தான் போயிருக்கின்றார். ஆனால் ஜெ எம்.ஜி.ஆர் உறவு என்பது வேறு. இதில் மனித பலகீனம் சம்மந்தப்பட்டது. மற்ற நடிகைகள் தேவையானதை பெற்றுக் கொண்டு ஒதுங்கி விட்டனர். இவரோ மறுதலிக்க மறுதலிக்க அதுவே இவரின் ஈகோ சார்ந்த விசயமாக இருந்துருக்கக்கூடும் என்று நினைக்கின்றேன். அதுவே இருவருக்கு பாதகமாக அவருக்கு சாதகமாக மாறியது.
Deleteபடிக்கப்படிக்க வியப்புதான் மிஞ்சுகிறது ஐயா
ReplyDeleteநன்றி
தொடர் வாசிப்புக்கு நன்றி.
Deleteஜெயலலிதா - எம்.ஜி.ஆர் - சசிகலா - வலம்புரி ஜான் எழுதிய வணக்கம் - நூல் விமர்சனம் 3
ReplyDelete- எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி.
வணக்கம்! நேற்று முன்தினம்தான் இந்த நூலைப் படித்து முடித்தேன்.
ReplyDelete// தனக்குச் சொந்தமானதை வேறு எவரும் சொந்தமாக்கிவிடக் கூடாது என்பது அவரின் பிடிவாத கொள்கை. ஆனால் இதற்காக அவர் பெற்றதை விட இழந்தது தான் அதிகம். அவர் வாழ்நாள் முழுக்க இதற்காகவே தன் ஆரோக்கியத்தைப் பரிசாகத் தர வேண்டியிருந்தது. மன நலத்தைப் பாதித்தது. //
சரியாகவே சொன்னீர்கள். இருந்தாலும் எம்.ஜி.ஆரின் பிடிவாதக் கொள்கை என்பதனை விட, அவருக்கு இருந்த சந்தேகம் என்பதே பொருந்தும்.
// கடைசியில் தன் முதல் அமைச்சர் பதவிக்கே வேட்டு வைக்கப் போகின்றது என்பதனை உணர்ந்து அவர் வருத்தப்பட்ட அந்தரங்க ரகசியங்கள் சிலவற்றை மட்டும் வலம்புரி ஜான் இந்தப் புத்தகத்தில் பகிர்ந்துள்ளார். //
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, இவர்களிடையே இருந்த அந்தரங்கமான விஷயங்கள் சிலவற்றை மட்டுமே இந்த நூலில் சொல்லி இருக்கிறார் என்று நீங்கள் குறிப்பிட்டு இருப்பதும் சரிதான். என்னதான் எம்.ஜி.ஆர் நல்லவர் என்று பேசப்பட்டாலும் , பெண்கள் விஷயத்தில் அவரைப் பற்றிய கிசுகிசுக்கள் அதிகம். யாரும் இவற்றைப் பற்றி அப்போது வெளிப்படையாக எழுதியதில்லை; பேசியதில்லை. காரணம். பயம்தான். எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்டதற்கும் ஒரு நடிகையின் புகார்தான் காரணம் என்றும் சொல்வார்கள்.