அஸ்திவாரம்

Sunday, February 19, 2017

A1 குற்றவாளி ஜெ. வின் உயில் சாசனம்


ஓரு குடும்பத்தின் தலைவர் என்றால் தங்கள் இறப்புக்குப் பின்னால் தங்கள் குழந்தைகளுக்கு உயில் எழுதி வைத்து விட்டு செல்வர். அதைப் போலவே அரசியலில் உள்ள தலைவர்களும் பலருக்கும் வழிகாட்டியாக இருந்து விட்டு செல்வர்.  காமராஜர், அண்ணாத்துரை அவர்களின் காலத்திற்குப் பின்னால் வந்த அத்தனை பேர்களும் சேர்த்து வைத்துள்ள சொத்துப்பட்டியல் குறித்து நாம் இங்கே பேசப் போவதில்லை. 

ஆனால் மாட்டிக்கொண்டு அவமானப்பட்டது ஜெயலலிதா மட்டுமே.  இனி வரும் காலங்களில் சிறிதளவேனும் மாற வேண்டும் என்ற நம்பிக்கை உருவாக வேண்டும். ஊழல் செய்த பணத்தில் கல்வித்தந்தையாக மாறியவர்கள், தொழில் அதிபர்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் என அத்தனை பேர்களின் அடிமனதில் பயம் பரவ வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு.

ஆனால் ஜெயலலிதாவிற்கு கிடைத்த மரியாதையான உயில் சாசன வார்த்தைகள் இரண்டு நீதிபதிகள் தெரிவித்துள்ளதை சமூக வலைதளங்கள், பத்திரிக்கைகளில் வந்த தகவல்களின் அடிப்படையில் இங்கே தொகுத்துள்ளேன். காலம் கடந்தும் தெரிந்து கொள்ளவேண்டிய விபரங்கள் ஆகும். இன்னமும் ஜெயலலிதாவை உத்தமி போலவும் சசிகலாவை வில்லி போலவும் நம்பும் நண்பர்கள் இதனை படித்து தெரிந்து புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.  "ஊசி ஒன்றும் செய்யவில்லை. செய்த நடந்த தவறுகள் அனைத்துக்கும் நூல் தான் காரணம்" என்று பேசுவது போலவே உள்ளது.  மீதி உங்களின் தனி மனித சுதந்திர பார்வைக்கு விட்டுவிடுகின்றேன்.

"ழல் என்பது ஆக்டோபஸ் மாதிரி பரவிக்கிடக்கிறது. இதனால் சமூகத்தில் அச்சம், மன உளைச்சல் போன்றவை மக்களுக்கு ஏற்படுகிறது. ஜெ. வை போன்ற குற்றவாளிகள் அதிகாரத்தையும் ஆட்சியையும் பயன்படுத்திக் கொண்டு பெரும் பணம் சேர்க்கிறார்கள். ஊழல் செல்ல வாய்பிபில்லாதவன் ஏழையாக இருக்கின்றான். பணம் சொத்து ஆகியவற்றைப் பெற வேண்டுமென்றால் ஊழல் செய்து சம்பாதிக்க வேண்டும் என்கிற மனோநிலை சமூகத்தில் உருவாகியுள்ளது. இது புற்றுநோய் நோயை விட மிகக் கொடிய நோய். இது ஏழை, பணக்காரன், ஏற்றத்தாழ்வை உருவாக்கி மக்களிடையே பிளவை உருவாகிறது. மக்களின் வாழ்க்கை நிலையை அழிக்கும் சுருக்கு கயிறு போன்றது இந்த ஊழல். 

ஜெ வும் சசிகலாவும் 36. போயஸ் கார்டன் என்கிற ஒரே வீட்டில் தங்கியிருந்தார்கள். அவர்கள் ஒரே வீட்டில் தங்கியிருந்ததன் நோக்கமே ஜெ. ஊழல் செய்து சம்பாதித்த சொத்துக்களை எடுத்துப் பல இடங்களில் பரவச் செய்து பாதுகாப்பதற்காகத்தான். இதை ஜான் மைக்கேல் டி குன்ஹா ஆராய்ந்து சாட்சிகளின் அடிப்படையில் நிரூபித்திருக்கிறார்கள். ஜெ. வை தனது உயிர்த் தோழி எனச் சசிகலா குறிப்பிடுகிறார். உயிர்த் தோழி என்கிற உறவுக்காக மட்டுமே சசிகலா போயஸ் கார்டனின் தங்கியிருக்க வில்லை ஊழல் செய்த பணத்தைக் கையாளவே சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் போயஸ் கார்டனின் தங்கியிருந்தார்கள் என்பதனை ஜான் மைக்கேல் டி குன்ஹா தெளிவாக நிரூபித்துள்ளார். அதை நாங்கள் ஏற்கிறோம். 

ஜெ தங்கியிருந்த வீட்டில் 32 நிறுவனங்கள் இயங்கிருக்கின்றன. அந்தக் கம்பெனிகள் என்ன நடவடிக்கைளில் ஈடுபட்டடன என்று எனக்குத் தெரியாது என ஜெ தெரிவித்தார். ஆனால் கோடிக்கணக்கான ரூபாய் பணம் ஒவ்வொரு நிறுவனத்திலிருந்தும் மற்றொரு நிறுவனத்துக்கு மாறியிருக்கிறது. போயஸ் கார்டனில் வேலை செய்யும் செயராமன் கத்தை கத்தையாகப் பணத்தைக் கார்டனிலிருந்து எடுத்துக் கொண்டு போய் ஒவ்வொரு நிறுவனத்தின் அக்கவுண்டிலும் போடுகிறார். சுதாகரன், இளவரசி, ஆகியோர் இயக்குநர்களாக உள்ள நிறுவனங்களில் லட்சக்கணக்கில் பணம் குவிகிறது. இந்தப் பணம் பெரும்பாலும் ஜெ., சசி, சுதாகரன் ஆகியோர் இயக்குநர்களாக இருக்கும் சசி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திலிருந்து மற்ற நிறுவனங்களுக்கு அளிக்கப்படுகிறது. 

முதலமைச்சராக ஜெ இருந்ததால் ஒவ்வொரு ஊரிலும் அடிமாட்டு விலைக்கு மொத்தம் 193 அசையா சொத்துக்களை ஜெ. , சசி, இளவரசி, சுதாகரன் வாங்கியுள்ளனர். இதில் நிலம் மட்டும் 3000 ஏக்கர் பரப்பளவை கொண்டிருக்கிறது. 

வாங்கிய நிலங்களில் புதிய கட்டிடங்களை கட்டியிருக்கிறார்கள். எந்திரங்கள் வாங்கியிருக்கிறார்கள். புதிய கார்கள், லாரிகள், பேருந்துகள் என ஏகப்பட்ட சொத்துக்களை வாங்கிக் குவித்திருக்கிறார்கள். 

ஆட்சியில் ஜெ இருந்ததால் அதிகாரிகளை அவரது வீட்டிற்கே வரவழைத்துப் பதிவு செய்திருக்கிறார்கள். சசிகலா இளவரசி சுதாகரன் ஆகியோருக்கு ஜெ மூலம் கிடைத்ததைத் தவிரத் தனிப்பட்ட வருமானம் எதுவுமில்லை. ஜெ சார்பாக வருமானவரித்துறையில் சமர்பிக்கப்பட்ட கணக்குகளில் ஒரு கோடி ரூபாயை சசி எண்டர்பிரையை நிறுவனத்திற்குக் கொடுத்ததை ஒத்துக் கொண்டுள்ளார். 

சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்குப் பல சந்தர்ப்பங்களில் செக் மூலமே ஜெ பணம் கொடுத்துள்ளார் எனவே மூன்று பேரின் நடவடிக்கைக்கும் ஜெ வுக்கும் எந்தத் தொடர்புமில்லையெனச் சொல்வதை ஏற்க முடியாது. 

பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜான் மைக்கேல் குன்ஹா எழுதிய தீர்ப்பை ஏற்கிறோம். உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி எழுதிய தீர்ப்பை நிராகரிக்கிறோம். ஜான் மைக்கேல் டி குன்ஹா அறிவித்தபடி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா நான்காண்டுகள் தண்டனை ஒவ்வொருவருக்கும் பத்து கோடி ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என்று அறிவிக்கின்றோம். ஜெ. மீதான னைத்துக் குற்றங்களும் நிரூபிக்கப்பட்டன. அவர் குற்றவாளி என்றாலும் மரணமடைந்த காரணத்தால் விலக்கு அளிக்கப்படுகின்றது. 

நீதிபதி பி.சி.கோஷ் மற்றும் நீதிபதி அமித்வராய்

பறிமுதலாகும் சொத்துப்பட்டியல், 

1. போயஸ் கார்டன்,
2. பையனூர் பங்களா
3. கொடநாடு தேயிலைத் தோட்டம்.
4. சிறுதாவூர் பங்களா
5. ஜெ. வின் தங்க நகைகள்.
6. ஜெ. வின் வெள்ளி நகைகள்
7. ஜெ. வின் பெயரில் வைக்கப்பட்டிருந்த வங்கி டிபாசிட்டுகள்.
8. ஜெ. வாங்கியிருந்த 193 வகைப்படும் 3000 ஏக்கர் நிலம்.
ஜெ. வின் சொத்துக்குவிப்பு வழக்கு என்கிற ரீதியில் 1996 ஆம் ஆண்டு போடப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் இடம் பெற்ற சொத்துக்களின் இன்றைய மதிப்புப் பத்தாயிரம் கோடியைத் தாண்டுகிறது.

1964 ஆம் ஆண்டு முதல் 1996 வரை ஜெ. சம்பாரித்த சொத்துக்கள் மட்டுமே இனி இருக்கும். 

(ஜெயலலிதா என்ற தனி மனுஷி இந்தியாவில் உள்ள காவல்துறை, நிர்வாக அமைப்பில் உள்ள பல்வேறு பிரிவுகள், நீதி மன்றம், சட்ட திட்டங்கள் என்று கீழிருந்து மேல் மட்டம் வரைக்கும் அனைவரையும் விலைக்கு வாங்கமுடியும் என்று உறுதியாக நம்பினார். 1996 முதல் 2017 பிப்ரவரி வரைக்கும் 21 வருடங்கள் இந்த வழக்குக் காரணமாகத் தனிப்பட்ட ரீதியிலும், அலுவலக ரீதியிலும் மன உளைச்சல் அடைந்து ஒதுங்கியவர்கள் பலபேர்கள். 

பழிவாங்கப்பட்டவர்கள், மிரட்டப்பட்டவர்கள், வாங்கப்பட்ட விலையின் காரணமாகச் சோரம் போனவர்களின் பட்டியல் கணக்கில் அடங்காது. 

இந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்ய ஜெயலலிதா செய்த செலவுகள் என்பது எத்தனை ஆயிரம் கோடிகள் என்பதனையும் எவரும் அறிந்திருக்க முடியாது. ஆனால் எங்களை விலைக்கு வாங்க முடியாது என்பதனை உணர்த்தியதோடு தங்கள் கடமையைச் சரியாகச் செய்தவர்களை இந்தச் சமயத்தில் நாம் நினைவு கூற வேண்டும். இவர்கள் அத்தனை பேர்களும் நம் குழந்தைகள் வாழப்போகும் சமூகத்திற்காகத் தங்கள் பணியைச் சிறப்பாக நேர்மையாகச் செய்துள்ளார்கள் ஊழல் செய்தவர்கள் இறுதியில் எந்த நிலைக்கு ஆளாகக்கூடும் என்பதனை உணர்த்தி உள்ளார்கள். 

1. மரியாதைக்குரிய பேராசியர் க. அன்பழகன் (திமுக) 
2. திரு. ஆச்சார்யா அவர்கள் (கர்நாடகா அரசு வழக்குரைஞர்) 
3. திரு. நல்லம்ம நாயுடு (தமிழகக் காவல் துறை அதிகாரி) 
4. திரு. துக்கையாண்டி ( தமிழகக் காவல் துறை அதிகாரி) 
5. திரு. சந்தேஷ் சவுட்டா ( ஆச்சார்யா ராஜினமா செய்த பிறகு அவருக்குப் பதிலாகச் செயல்பட்டவர்) 
6. திரு. குமரேசன் (திமுக வழக்குரைஞர்) 
7. திரு. சரவணன் (திமுக வழக்குரைஞர்) 
8. திரு. சண்முகச் சுந்தரம் (திமுக வழக்குரைஞர். இவர் க. அன்பழகன் சார்பாக வாதிட்டவர். இவருக்கு உதவியாக இருந்தவர்கள் திரு, குமரேசன் மற்றும் திரு. சரவணன்) 

(இன்னும் பலபேர்கள் ஜெ. வின் அதிகார வெறிக்குப் பயந்து மறைமுகமாக இந்த வழக்கிற்கு உதவியிருக்கக்கூடும்.) 
.
ஆனால் இத்தனை பேர்களின் உழைப்பையும் அதில் உள்ள உண்மையை உணர்ந்து நீதி வழங்கிய பெங்களூர் சிறப்புக் நீதிமன்றம் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா. ஆனால் இடையில் நுழைந்த உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி நுழையாமல் இருந்து இருந்தால் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்டியிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. அரசு மரியாதையுடன் கூடிய நல்லடக்கம் நடந்திருக்க வாய்ப்பும் அமைந்திருக்காது. 

 

காலம் என்பது பாரபட்சமற்றது. அதன் சல்லடையில் கழிவுகள் நீக்கப்படும்.

இனியாவது ஊழல் என்பதனை பொதுவான விசயமாகக் கருதும் ஒவ்வொரு அரசியல்வாதிகளின் ஆழத்தில் ஜெயலலிதாவுக்குக் கிடைத்த அவமானத்தைப் பாடமாக எடுத்துக் கொள்வார்கள் என்று நம்புவோம்.

வழக்கு குறித்த முழு விபரங்களை அறிந்து கொள்ள இந்த இணைப்பில் சென்று பார்க்கலாம். எச்சரிக்கை  570 பக்கங்கள் அடங்கிய ஆங்கில மர்மக்கதை போன்ற விபரங்கள் அடங்கிய தொகுப்பு இது.

ஜெ. செய்த ஊழல்களை முழுமையாக தெரிந்து கொள்ள இந்த மின் நூல் உதவக்கூடும்.

தொடர்புடைய பதிவுகள்


49 comments:

  1. திகைப்பாக...
    திகைப்பாக...
    திகைப்பாக...

    ReplyDelete
    Replies
    1. நாம் திகைத்துப் போய் நிற்கின்றோம். ஆனால் அவரோ திருட்டு வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் ஆண்டு அனுபவித்து விட்டு சென்றுள்ளார்.

      Delete
  2. மிக அருமையான அரிதான தொகுப்பு இது. வருங்கால சந்ததியினர், விஷயம் புரியாமலும் அல்லது - நன்றாக எல்லா விஷயங்களும் புரிந்திருந்த போதிலும் மறைக்கணும் என்பதற்காக மறைக்க முயல்பவர்கள் என்ற இரு சாராரும் தவிர்க்கமுடியாத சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறீர்கள். தவிர, இந்த வழக்குகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அந்த வழக்குகளை நீர்த்துப்போகச் செய்வதற்கும், எந்த வகையிலும் தீர்ப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சிகளையும் யாராவது ஒன்றுவிடாமல் எழுதுவார்களேயானால் அது ஒரு மர்ம நாவலைவிடவும் சுவாரஸ்யம் கொண்டதாக இருக்கும் என்றே தோன்றுகிறது.
    எல்லாத் தவறுகளுக்கும் காரணம் சசிகலாதான் என்ற பொதுப்புத்திக்குள் சிக்கிவிடாமல் யார் உண்மையான சூத்திரதாரி என்ற விஷயத்தில் கவனம் செலுத்தியிருக்கிறீர்கள் பாருங்கள் அதுதான் விசேஷம்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்தை அடிப்படையாக வைத்து அடுத்த பதிவு எழுதியுள்ளேன். அதனைப் பார்க்கும் என் மனத்தாக்கம் உங்களுக்குப் புரியக்கூடும். மிக்க நன்றி.

      Delete
  3. வியப்பாக இருக்கிறது
    திகைப்பாகவும் இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. நாம் இவரைப் போன்றவர்களை வியந்து பார்த்தோம். ஆனால் அவரோ நயந்து பேசி நாடகமாடியுள்ளார்.

      Delete
  4. தோண்ட தோண்ட பூதமால்லா வந்துகிட்டு இருக்கு !!!

    ReplyDelete
    Replies
    1. வந்தது பத்து சதவிகிதம் தான். அதிகாரிகள் நினைத்தால் இன்னமும் வெளிவரும். உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.

      Delete
  5. தற்போதுள்ள அரசியல் வாதிகளுக்கு இத் தீர்ப்பு அச்சத்தை ஏற்படுத்தி இருந்தால் அதுவே மிகப் பெரிய நன்மை .

    ReplyDelete
    Replies
    1. அவர்கள் வேறு வழியை இந்நேரம் கண்டு பிடித்துருப்பார்கள். அதிகார சுகம் என்பது அனைத்தையும் விட மேலானது.

      Delete
  6. தவ வாழ்க்கை வாழ்ந்து இதுகூட சேர்க்காவிட்டால் எப்படி :)

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு ஜெ. பதிவிலும் நீங்க கொடுத்துள்ள விமர்சனம் மிக அருமையாக இருந்தது. எளிமையான ஆனால் சிந்திக்க வைக்கக்கூடியதாக இருந்தது பகவானே.

      Delete
  7. //காலம் என்பது பாரபட்சமற்றது. அதன் சல்லடையில் கழிவுகள் நீக்கப்படும்.//

    ஒரு எச்சமும் இருக்க வேண்டாம் ..நாளைய வருங்கால சமூகம் இந்த கழிவுகளை பார்க்கவும் வேண்டாம் ..பலருக்கு மன உளைச்சலை தந்த குற்றவாளிக்கு//குற்றவாளிகளுக்கு எதற்கு நினைவிடம் ..நினைவுகள் சந்தோஷத்தை தருவதாக மட்டுமே இருக்கவேண்டும் ..
    தேசத்துக்கு உழைத்த சுதந்திர போராட்ட வீரர்களை ஏழ்மையிலும் வறுமை பட்டினியில் சாக விட்ட நமக்கொரு பாடமாக அமையட்டும் இந்த தீர்ப்புகள்

    ReplyDelete
    Replies
    1. மிக அழகான விமர்சனம். நமக்குத்தான் இது பாடம்.

      Delete
  8. நின்று நிதானமாக படித்தேன். படிப்பவர்களுக்கு அலுப்பு தட்டாத வண்ணம் ரொம்பவே பிரயாசைப் பட்டு எழுதியுள்ளமைக்கு பாராட்டுகள். இன்றைக்கு இல்லா விட்டாலும், எதிர்காலத்தில் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கும், அரசியல் பாடம் படிக்கும் மாணவர்களுக்கும் - இந்த வழக்கும், எதிர் கொண்ட சவால்களும் மற்றும் தீர்ப்பும் பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாக வரும்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் விமர்சனம் மிகச் சரியானது. அடுத்த பதிவில் இதனைப் பற்றி நீங்க சொன்னதை அடிப்படையாக வைத்து எழுதியுள்ளேன். உங்களுக்கு என் நன்றி.

      Delete
  9. Replies
    1. நன்றி. நீங்க கொடுத்த புத்தகத்தை இன்னமும் முழுமையாக படித்து முடிக்க முடியவில்லை. மன்னிக்கவும்.

      Delete
  10. ஊழல் பேரரசின் தலைவி அவளுக்காக எத்தனை உயிர்கள் தற்கொலை செய்துகொண்டன தமிழக மக்கள் உணர்ச்சி வயபட்டு ஒருவர் மீதுள்ள கோபத்தால் அவரை தேர்ந்தெடுத்ததால் வந்த விளைவு அவர் மாண்ட பின்பும் எத்தனை ஆண்டுகள் தொடருமோ

    shanmugam

    ReplyDelete
    Replies
    1. ஆனால் மக்களுக்கு இந்த குற்றவுணர்ச்சி வரவில்லையே? இன்னமும் அவர் மேல் உள்ள ஈர்ப்பு குறைவதாக தெரியவில்லை.

      Delete
    2. இன்னும் கூட சில அறிவுஜீவிகள் "அபெட்டெட்" என்ற ஒற்றை சொல்லை வைத்து அவர் நிரபராதி என பேசி வருகிறார்கள்...இதனை அவர் பெண் என்பதாலா..உயர்குலம் என்பதாலா..பேசாமல் நடிப்போடு ஒதுங்கி இருக்கலாம்..அரசியலுக்கு வந்தது இப்படி அவமானம் அடைந்து இருக்க வேண்டாம் என்ற அனுதாபத்தாலா என்பதை புரிந்து கொள்ள இயலவில்லை...மற்ற மூவரும் இவரை வைத்தே சொத்து சேர்த்துள்ளனர் என சொன்னதில் இருந்தே இவர்தான் மூல காரணம் என்பது தெளிவாக தெரிந்தாலும் ஏனோ ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர்...
      செத்தவர்கள் எல்லாம் தெய்வம் என கூறிவிட்டாள் ஹிட்லர் முசோலினி எல்லாம் கடவுளர்கள் தானே?
      (எனக்கு பிடிக்காத என மாமனார் உட்பட?...என் மனைவிக்கு கம்ப்யூட்டர் தெரியாது...எனவே தான் தைரியம்)

      Delete
  11. எல்லோருக்கும் உதாரணமாக வாழ்வது கூட தேவையில்லை .ஆனால் வாழ்ந்த பதிவுகளை அழிக்கும்போது அது யோசிக்க வைக்கிறது .அவர் திருமணத்தில் ,வாரிசில் ,நட்பில் ,ஆட்சியில் ,ஏன் சாவில் கூட எதுவுமே நேர்மையில்லை + உண்மைத் தகவலும் இல்லை .ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் அவர் படங்கள் நீக்கப்படும்போது சத்தியம் சிரித்துக்கொண்டே வேடிக்கை பார்க்கிறது .

    ReplyDelete
    Replies
    1. உண்மை நேர்மை எளிமை இந்த மூன்று வார்த்தைகளும் அவர் வெறுத்த வார்த்தைகள்.

      Delete
  12. குன்ஹாவின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பல பகுதிகளை தங்களுடைய தீர்ப்பிலும் பயன்படுத்தித்தான் இறுதி தீர்ப்பை அறிவித்துள்ளனர் இந்த இரு நீதியரசர்களும். ஆகவே அவர்களுடைய தீர்ப்பை வெளியிட எதற்காக சுமார் எட்டு மாதம் எடுத்துக்கொண்டார்கள் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது. இத்தகைய தீர்ப்பு ஜெ யின் மரணத்திற்கு முன்பே வெளியாகியிருந்தால் அப்போதே சசிகலா சிறைக்குச் சென்றிருப்பார் ஜெயலலிதாவின் உடல்நிலைப் பற்றிய உண்மையான நிலவரமும் வெளிவந்திருக்கும். நல்ல தீர்ப்புத்தான் என்றாலும் காலம் கடந்து வந்த தீர்ப்பு என்றே தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. If she would have been alive, I am not sure this similar verdict would have been pronounced.

      Delete
    2. நீங்கள் இருவரும் சொன்னது ஏறக்குறைய உண்மை தான்.

      Delete
  13. அவர் உயிருடன் இருந்திருந்தால் தீர்ப்பே வந்திருக்காது..பாழாய்ப்போன அரசியல்...2011 -முதலே அவருக்கு உடல்நல குறைவு...காணொளி காட்சி அரசியல் தான் நடைபெற்றது...

    ReplyDelete
    Replies
    1. எப்படியோ புதிய காணொலி காட்சி அரசாங்கத்தை திரைப்படம் போல காட்டிவிட்டு சென்றுள்ளாரே?

      Delete
  14. எவ்விதச் சார்பும் இன்றி நிுதானமாக கரத்தை தெளிவாக முன் வைத்திருக்கிறீர்கள். தான் நேரடியாக பாதிக்கப்படாத வகையில் என்ன நடந்தாலும் அலட்சியமாக இருக்கும் பொது மனோபாவம் ஜெயலலிதா மீது மிகப் பெரிய பிரமிப்பும் குற்றம் தவறுகளுக் அப்பாற்பட்டு அந்தரங்கமாக பர்சனலாக அனுகுகின்றர்.நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அனைத்து விஷயங்களும் பெரிய அளவில் செய்தியானப் பின்னரும் அதையொட்டி ஜெ சிறையிலடைக்கப் பட்டப் பின்னர் தான் கூட்டணீ எதுவுமின்றி முதல்வராக்கினார்கள். பல் வேறு காரணங்கள் இருக்கலாம் ஆனால் ஜெவின் மறைவு தமிழக அளவில் ஒருவரின் தனிப்பட்ட துயரமாக உணர்ந்தனர்.இந்நிலையில் ஜெயின் ஊழலை தண்டணையை எப்படி பாடமாக பொதுப்புத்தியில் ஏற்ற முடியுமென்று தெரியவில்லை. அதனால் தான் சசிக்கலா வை நோக்கி பொதுவின் கோபம் வெளிப்படுகிறது. அதேவேளை தங்கள் அபிமானத்திற்குரிய ஜெமீது களங்கம் வந்திடக் கூடாதென்னும் கவலையும் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. ஜெயின் ஊழலை தண்டணையை எப்படி பாடமாக பொதுப்புத்தியில் ஏற்ற முடியுமென்று தெரியவில்லை

      ஆழ்ந்த சிந்தனையுள்ள வார்த்தைகள். அடுத்த பதிவில் இது குறித்து எழுதியுள்ளேன்.

      Delete
  15. எழுத்துப் பிழை உள்ளது. மன்னிக்கவும். வெளியிட்டபின் எப்படி எடிட் செய்வதென்று தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் விமர்சனத்தை எழுதியதற்கே முதலில் நன்றி சொல்ல வேண்டும்.

      Delete
  16. After this historic verdict,I feel proud to be an Indian and elated to sing poet Bharathi versus as thus,
    "நம் பாரத தேசம் என்று தோள் தட்டுவோம்"

    ReplyDelete
  17. After this historic verdict,I feel proud to be an Indian and elated to sing poet Bharathi versus as thus,
    "நம் பாரத தேசம் என்று தோள் தட்டுவோம்"

    ReplyDelete
  18. After this historic verdict,I feel proud to be an Indian and elated to sing poet Bharathi versus as thus,
    "நம் பாரத தேசம் என்று தோள் தட்டுவோம்"

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி. ஆனால் நேரு முதல் மோடி வரைக்கும் தமிழகத்தை நடத்தும் விதம் பார்த்து பாரத தேசம் என்று தோள் தட்டும் நிலையிலா? உள்ளது?

      Delete
  19. பெரியம்மா ,சின்னமா இருவரும் ஆட்சி அதிகாரங்களை துஷ்ப்ரயோகம் செய்து பல்லாயிரம் கோடி சொத்துக்களை குவித்தனர் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவர் ஒத்த குரலில் சொல்லி விட்டனர்..ஒரு நீதிபதி இன்னும் அதிகமாக மூன்று பக்க அறிக்கையே கொடுத்து உள்ளனர்..
    ஜெயலலிதாவிற்கு எதுவும் தெரியாது ...சசிகலா மற்றும் குடும்பத்தினரே காரணம்..அம்மா சுத்தமானவர் என "சன்னமான குரலில் பன்னீர் செல்வம் அணியினர் கூறுவது ஏற்புடையது அல்ல. இவர்களோ உலகில் யார்தான் தவறு செய்யவில்லை ...இது சகஜம்..33 வருடம் கூடவே இருந்து தியாக வாழ்க்கை வாழ்ந்தவர் ....பரவாயில்லை என கூறுவது அதைவிட அபத்தம்."அல்லல் பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் செல்வதை தேய்க்கும் படை" என்பது போல், இவர்கள் ஆண்ட காலத்தில் யாரையும் விட்டு வைக்கவில்லை...மக்கள் நல பணியாளர் தொடங்கி ...அரசு ஊழியர் ,ஆசிரியர்,நீதிபதி,காவல் துறையினர்...தி மு க தொடங்கிய திட்டம் என்பதாலேயே கிடப்பில் போடுவது , கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை பாழடைய செய்வது...மக்களுக்கு இலவசம்..தேர்தல் நேரத்தில் சில நூறு நோட்டு ....
    அதன் பயனே இப்போ அனுபவிப்பது..."விவசாயிகள் தற்கொலை, காவிரி,கிருஷ்ணா,முல்லை பெரியார் பிரச்சனையை, எதிர்வரும் காலத்தில் வரப்போகும் குடிநீர் தட்டுப்பாடு, ரூபாய் நோட்டு விவகாரத்தால் நலிந்துபோன சிறுதொழில்கள்...ஏற்கனவே உள்ள கடன் சுமை...இது எதிலும் கவனம் கொள்ளாமல்....தீபா எனக்கு ...தீபக் உனக்கு ...இரட்டை இலையில் ஆளுக்கு ஒரு இல்லை...மஹா கேவலம்...கடவுள் கூட காப்பாற்ற வருவாரா என்பதும் சந்தேகம் தான்....

    ReplyDelete
    Replies
    1. இவர்கள் அத்தனை பேர்களின் டிஎன்ஏ ஆர்என்ஏ மூலக்கூறுகளை அலசிப் பார்த்தால் அதில் அடுத்தவர் சொத்தை அபகரிப்பது எப்படி என்ற சமன்பாடுகள் தான் இருக்கும் என்றே நினைகிறேன்.

      Delete
  20. A LANDMARK JUDGMENT IN INDIAN HISTORY

    ReplyDelete
    Replies
    1. அவசரப்பட வேண்டாம். மாறன்கள் தப்பித்து விட்டார்கள். அடுத்து கனிமொழி ராஜா தீர்ப்பை பார்த்து விட்டுபேசுவோம்.

      Delete
  21. இந்த தீர்ப்பை மேல்முறையீட்டில் ஒன்றுமில்லாமல் செய்து விட முடியும் என்றுதான் தெரிகிறது. பல இடங்களில் லாஜிக் மீறல்கள் கூட உள்ளன

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்பு மிக மிக குறைவு. ஜனாதிபதி தேர்தல் தான் நீங்க சொன்னதை முடிவு செய்யும்.

      Delete
  22. இறந்தும் அவமானச் சின்னமானார் ஜெயலலிதா!நீதியரசர்களைப் பாராட்டி,வாழ்த்தி வணங்குவோம்!

    ReplyDelete
    Replies
    1. அவர் ஜாதகமும் அப்படித்தான் உள்ளதாம்.

      Delete
  23. Mahima Mec Cons in Chennai, Tamil Nadu, India - Company Profile

    ReplyDelete
  24. This applies to every MLA and MPs. JJ case is only one case. Let Govt and Law take action against all MLA and MPs. Why they should wait for a complaint to be raised. Please take direct action. All reports are available with IT dept and EC. It will cleanse the entire country.

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொன்னபடி நடந்து விட்டால் ஒவ்வொரு இடங்களிலும் பட்டாசு வெடித்து தீபாவளி மக்கள் கொண்டாடுவார்கள்.

      Delete
  25. There is an adage in Management theory. "Power corrupts. Absolute power corrupts absolutely". This is Proved by Jeyalalitha absolutely. In TN Assembly, it was conducted in such a way that everybody must praise her before they start to speak. In such a way that they have been slaved. In these circumstances, how one can expect that the punishment given to jj is a lesson to all. Amidst this scenerio, nobody has questioned/talk about the Koomuttai kumarasamy judgement. Just because of his intentional erroneous judgement only, jj came to power again. Just because of this, irrepairable loss has been committed to Tamilnadu. Our Law system must be amended to punish such culprits. Supreme court also has taken more than enough time to deliver its judgement. If it has been given in time, defintely she would not have come to power. Amidst all these things, it gives pleasure at least you are bringing out all these things and putting in the public forum.

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.