தற்போது தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் முதல்வர் ஜெயலலிதாவை பலர் "பக்திமான்" என்கிறார்கள். சிலர் "சக்திமான்" என்கிறார்கள்.
ஆனால் ஒரு அரசியல் தலைவருக்கு வன்மும், வக்ரமும், பழிவாங்கும் உணர்ச்சிகளும் மட்டுமே மேலோங்கி இருந்தால் ஒரு தொகுதி எப்படி இருக்கும் என்பதனைக் காண நீங்கள் அவசியம் திருச்செந்தூர் சென்று பார்க்க வேண்டும். காரணம் தற்பொழுது திருச்செந்தூர் தொகுதி திமுக வசம் உள்ளது. முன்பு அதிமுகவில் இருந்து தற்பொழுது திமுகவில் இருக்கும் அனிதா ஆர். ராதா கிருஷ்ணன் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
இந்த ஒரு காரணத்தினால் மட்டுமே ஜெ வின் அடிப்பொடிகள் எளிய தமிழ் மக்களின் கடவுளான செந்தில்நாதன் அரசாங்கத்தைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். ஏறக்குறைய அங்கே இருந்த 20 மணி நேரத்தில் பல பேர்களிடம் கேட்ட போது சொல்லி வைத்தாற் போல இதே குற்றச்சாட்டைத் தான் சொன்னார்கள்.
திருச்செந்தூர் என்ற ஊருக்குள் நுழையும் போது தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த சுகம் முடிந்து போய் விடுகின்றது. கட்டை வண்டிப் பயணம் தொடங்குகின்றது. படு கேவலமான சாலை வசதியும், கண்டு கொள்ளவே படாத அடிப்படை வசதிகளுமாய் அசிங்கமாக உள்ளது. இந்துக்களால் நம்பப்படுகின்ற புண்ணியத் தலத்திற்கு உள்ளே நுழையும் போதே நாம் 50 ஆண்டுகளுக்குப் பின்னால் செல்ல வேண்டிய சூழ்நிலை தான் நமக்கு பரிசாக கிடைக்கின்றது. நாங்கள் சென்றிருந்த போது லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. அதுவே சில மணி நேரம் நீடிக்கச் சாலை மொத்தமும் வயல்வெளி போலவே மாறிவிட்டது. சேறும் சகதியுமாய்க் கால் வைத்து நடக்க முடியாத அளவுக்கு மோசமாக உள்ளது. ஒரு இடத்தில் மட்டுமல்ல. திருச்செந்தூர் பகுதி முழுக்க அடிப்படை வசதிகள் எதுவும் நிறைவேற்றப்படவே இல்லை. திட்டமிட்ட புறக்கணிப்பாகவே தெரிகின்றது.
ஆசான் திரு. கிருஷ்ணன் திருச்செந்தூரில் பிறந்தவர். அவர் தற்பொழுது சென்னையில் வாழ்ந்து கொண்டிருந்த போதிலும் அவர் எண்ணமும் செயலும் முழுமையாகத் திருச்செந்தூர் என்ற ஊருக்குள் தான் இருக்கின்றது. அவருடன் உரையாடும் போது அதை உணர்ந்து கொண்டேன். அவரின் பூர்வீக வீடு 60 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. எந்த மாறுதல்களை உள்வாங்காமல் அப்படியே தனது ஒரே அக்காவிடம் ஒப்படைத்துள்ளார். அவரின் வாரிசுகள் தான் இந்த வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். ஓதுவார் குடும்பப் பரம்பபரை என்பதால் தங்களின் பூர்வீகத் தொழிலான இறைவனுக்குப் பூக்கட்டி கொடுத்தல், மற்றும் பூக்கடைக்குத் தேவையான மாலை கட்டி விற்பனை செய்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போதுள்ள சாலையில் இருந்து முழங்கால் அளவுக்குக் கீழே செல்லும் அளவுக்கு வீட்டு வாசப்படி அமைந்துள்ளது. ஒரு மழை அடித்தால் வீடு முழுக்கத் தண்ணீரால் நிரம்பி விடும். உள்ளே நுழைந்த போது எனது ஐந்து வயதில் நான் ஊரில் பல இடங்களில் பார்த்த வாழ்க்கை நினைவுகள் வந்து போனது.
முதல் நாள் மாலை ஆறு மணி அளவில் திருச்செந்தூருக்குள் உள்ளே நுழைந்தோம். மறுநாள் வெளியே கிளம்பி வரும் வரையிலும் கோவில் மற்றும் அதனைச் சார்ந்த பல இடங்களை நிதானமாகப் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது. அதிகாலை சூரியப் பொழுதின் தன்மையை உணர வேண்டும் என்பதற்காகக் கடற்கரையில் நடந்த போது மிக மிகக் கவனமாகக் காலடி எடுத்து வைக்க வேண்டிய நிலையில் தான் மணல்வெளியெங்கும் மலத்தால் நிரம்பியுள்ளது. காரணம் கேட்ட போது துப்புரவுத் தொழிலாளர்களின் பற்றாக்குறையாம். தலையில் அடித்துக் கொண்டேன். ஒரு வேளை ஜெ. வின் ஆஸ்தான ஜோசியர் பணிக்கர் (சோ) சிம்மிடம் ஏதாவது பரிகாரம் செய்யச் சொன்னால் இந்த சூழ்நிலை மாறக்கூடும்.
கடற்கரையில் ஒரு மேடை போல அமைப்பு இருக்க ஒளிப்பதிவாளரிடம் நான் விரும்புவதைச் சொல்லிவிட்டு, ஆசானிடம் உங்கள் விருப்பம் போல ஆசனங்களை வரிசையாகச் செய்து கொண்டு வாருங்கள் என்று ஓரமாக நின்று கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தேன். அதற்குள் பரவலாகக் கூட்டமும் சேர்ந்து விட்டது. அவர்களை ஓரமாக ஒதுங்கி நிற்க வைத்து விட்டு எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில மட்டும் இங்கே.
தொடர்புடைய பதிவுகள்
ஆசான் பயணக்குறிப்புகள்
பயணமும் படங்களும் - பசியும் ருசியும்
ஆசானின் ஆசனக் கலை அவரது பயிற்சியையும் உழைப்பையும் பறைசாற்றுகிறது.
ReplyDeleteநோயற்ற வாழ்வுக்கு வித்தாகும் ஆசனக் கலையை மனம்
ReplyDeleteபிரம்மிக்கும் வண்ணம் விரித்த ஆசானின் கடின உழைப்பையும்
தங்களின் மிகச் சிறந்த படப் பிடிப்பையும் கண்டு மகிழ்ந்தேன் ..
மிக்க நன்றி பகிர்வுக்கு .
சூழ்நிலை விரைவில் மாறட்டும்...
ReplyDeleteஆசான் திரு. கிருஷ்ணன் அவர்களின் ஆசனங்கள் அவருக்கு மட்டும் தான் எளிது...
பிரமிக்க வைக்கும் ஆசனங்கள். நேர்த்தியான படங்கள்.
ReplyDeleteஆசான் அவர்களின் அற்புத யோகாசன நிலைகளை பார்க்கும்போது ஆச்சர்யம் ஏற்படுகிறது. படங்களோ துல்லியம்.பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஆசான் அவர்களின் யோகாசன நிலைகளைக் காணணும் பொழுது, வியப்பும்,
ReplyDeleteஅவரின் தொடர் பயிற்சியின் தன்மையினையும் உணர முடிகிறது. உடல்தான ரப்பரா என்னும் சந்தேகமும் எழுகிறது. ஒரு உன்னதக் கலையினை அனைவரும் போற்றி. பயன்பெறாமல் விட்டுவிட்டோமே என்ற ஆதங்கமும் எழுகிறது.
நன்றி ஐயா
தங்கள் ஆசானுக்கு எனது வணக்கங்கள்.
வாவ்! படங்கள் அருமையாக உள்ளன.
ReplyDeleteஎனக்கு ஒரு சந்தேகம் .... எம்.பி , எம்.எல்.ஏ நிதி ஒதுக்கறாங்களே அதனை வேற்று கட்சியாய் இருந்தா பயன்படுத்த முடியாதா என்ன?.... இல்லை தன் கைக்காசை மக்களுக்குச் செலவழிக்கக்கூடாது எனும் சட்டம் ஏதேனும் இருக்கா?
ReplyDeleteஒரு சோகம் .ஒரு சந்தோசம் என்பதாய் மாறாத திருச்செந்தூரும் ,பழகினால் எப்படி வேண்டுமானாலும் மாறும் என்ற ஆசானின் யோகாசன நிலைகளும்- பயனத்தை அர்த்தமுள்ளதாக்கி வருகிறது .செல்லட்டும் பயணம், சேரட்டும் அனுபவ பாலம் .
ReplyDeleteஆசான் என்ற பேர் வைத்ததால் இப்படி ஆசனம் செய்கிறாரா?
ReplyDeleteஅல்லது பலவித ஆசனம் செய்வதால் இவருக்கு ஆசான் என்று பெயர் வந்த்ததா?
(ஜோக்காளி-ஐ தினமும் வாசிப்பதால் ஏற்பட்ட பாதிப்பு!)
இந்த மூன்று ஆண்டுகளில் இப்படி பாதிப்பு திடீரென்று ஏற்பட்டுவிடுமா என்ன?
அப்படி பார்த்தால் பர்கூர், ஆண்டிப்பட்டி மற்றும் ஸ்ரீரங்கத்தில் தேனாறும் பாலாறும் ஓடுகின்றதா? டி ஆர் பாலு-வுக்கே தஞ்சையில் நிற்கவேண்டிய அவலம்.
ஊழல்ஊழல்ஊழல்ஊழல்ஊழல்ஊழல்ஊழல்ஊழல்ஊழல்ஊழல்ஊழல்ஊழல்ஊழல்ஊழல்
ஆசானின் ஆசனங்கள் அனைத்தும் அற்புதம் இது என்ன உடம்பா? இல்லை ரப்பர் பந்தா ?இந்த வயதில் பலர் நடமாட சிரமப்படும்போது இவர் செய்வது ஆச்சர்யமானது
ReplyDeleteதிரு ஜோதி அவர்களின் "திருச்செந்தூர்" பற்றி அருமையான பதிவு. எங்கள் மனக்குமுறல்களை அருமையாக எழுதியிருக்கிறார். நாங்கள் நேரில் பார்த்திருக்கிறோம். நீங்களும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ReplyDeleteஎனது பக்கத்தில் பகிர்கிறேன்.
நன்றி திரு ஜோதிஜி.
இந்த அம்மா திருசெந்தூருக்குச் செய்வதை மண்ணு மோகன் தமிழ்நாட்டிற்குச் செய்கிறார்!! அப்போ குய்யோ .....முறையோன்னு........ ஆத்தா ஓலமிட்டு என்ன பயன்?!! மு.வ. அப்பன் தங்கள் நண்பரா!! அருமை......!!
ReplyDeleteஜெயதேவ் அது யாருங்க முவ அப்பன்?
Deleteஅருமையான ஆசனப்படங்கள்.
ReplyDeleteவருகைக்கு நன்றி.
Deleteஆசான் கலை !!! அற்புதம்..
ReplyDeleteபடங்கள் வெகு சிறப்பாய் உள்ளது..
சிறு பிள்ளையாய்
செந்தில் நாதனை
தரிசனம் செய்ததுண்டு
ஒவ்வொரு
வருடத்தின் ஒருநாளில்
என் குடும்பத்துடன் ...
இன்று
கொஞ்சம் சேர்ந்த
பகுத்தறிவோடு
கண்கள் பரப்பி
பார்த்தால்
திருச் செந்தூர்
தன் திருவை இழந்திருக்குமென
தெரிகிறது ..
தங்கள் கட்டுரை வடிவில்...
பகுத்தறிவு என்பதெல்லாம் பெரிய வார்த்தை. அடிப்படை வசதிகள் இல்லை என்பதை அறிய இயல்பான கண்களால் சாதாரணமாகவே பார்த்தாலே தெரியுமே.
Deleteஅற்புதமான ஆசனங்களை அனாயாசமாகச் செய்கின்றார் ஆசான்! அருமை!
ReplyDeleteதாங்கள் இந்த பதிவை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.
Deleteசாரி............ இவரு தி.ஆ.கிருஷ்ணன்.......... மூ.ஆ.அப்பன் இயற்கை உணவு, உணவே மருந்து என்ற கொள்கையாளர், அந்த தலைப்புகளில் சில புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
ReplyDeleteஓ அப்படியா, நன்றி ஜெய்தேவ்.
Deleteஇருபத்தைந்து வருடங்களாகவே திருச்செந்தூர் இப்படித்தான் இருந்து வருகிறது. நகரசபை அதிகாரிகள் இந்நகரை நாறடித்து விட்டார்கள். அறங்காவலர்கள் ஊழல் செய்வதிலேயே கவனம் செலுத்துகிறார்கள் போலும். விரைவில் முருகனே அவ்வூரை விட்டு விலகி விடுவான் என்பது உறுதி.
ReplyDeleteசிரிக்க யோசிக்க வைத்த விமர்சனம்.
Delete"இந்த ஒரு காரணத்தினால் மட்டுமே ஜெ வின் அடிப்பொடிகள் எளிய தமிழ் மக்களின் கடவுளான செந்தில்நாதன் அரசாங்கத்தைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். "
ReplyDeleteஇங்கு மட்டுமல்ல.. இது போல எந்த தொகுதியாக இருந்தாலும் இதே நிலை தான். திமுக ஆட்சியில் அதிமுக கோபி பாரிதாபமாக இருந்தது.
அடேங்கப்பா! உங் ஆசான்.. பல போஸ் கொடுக்கிறாரே.. இதெல்லாம் செய்தால் நான் அவ்வளோ தான் :-)