அஸ்திவாரம்

Tuesday, January 08, 2013

டாலர் நகரம் நூல் வெளியீட்டு விழா - முதல் தகவல் அறிக்கை


வணக்கம் நண்பர்களே

இந்த தகவலை என் தொடர்பில் இருக்கும், எனக்குத் தெரிந்த, என் மின் அஞ்சல் முகவரியில் இருந்த பெரும்பாலான நண்பர்களுக்கு அனுப்பி உள்ளேன். இப்போதுள்ள வேலைப்பளூவின் காரணமாக முக்கியமான பலருக்கும் இந்த தகவல் சென்றடையாமல் இருக்கக்கூடும் என்பதற்காக இங்கே எழுதி வைக்கின்றேன். 

இந்த மாதம் முழுக்க இது தொடர்பான அனைத்து தகவல்களும் இங்கே இடம் பெறும்.  

திருப்பூருக்குள் இருக்கும் பலரையும் தெரியும். சிலரின் மின் அஞ்சல் முகவரி தெரியாமல் இருக்கும். திருப்பூரில் உள்ள அரசு துறை, அதிகாரத்துறை, உளவுத்துறை, மாசுகட்டுப்பாட்டுத்துறை, சாயப்பட்டறை முதலாளிகள், ஏற்றுமதி நிறுவனங்கள், முதலாளிகள், பணியாளர்கள் என்று சகலரும் என் தளத்தை படித்துக் கொண்டு இருப்பதால் இப்படி ஒரு விழா திருப்பூரில் நடக்கப் போகின்றது என்பதற்காக இங்கே எழுதி வைக்கின்றேன். இந்த விழாவிற்கான அழைப்பிதழ் தயாராகிக் கொண்டு இருப்பதால் ஒவ்வொருவரும் எனக்கு முக்கியமானவர்களாக இருப்பதால் உங்கள் மின் அஞ்சல் முகவரியை பின்னூட்டத்தில் எழுதி வைக்க வேண்டுகின்றேன்.  அப்படி வெளியே காட்டிக் கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் அவசியம் ஞாயிற்றுக் கிழமை அன்று அரங்கத்திற்கு வரும் படி அன்போடு அழைக்கின்றேன்.

பலரிடமிருந்து வாழ்த்துரைகள் வந்து சேர்ந்தது. சிலரின் மின் அஞ்சலில் உள்ள ஸ்பேர்ம் பகுதிக்கு போய் இருக்க வாய்ப்பு இருப்பதால் ஒரு வேளை நமக்கு அனுப்பினாரா என்று சோதிக்க விரும்புவர்கள் மட்டும் உங்கள் மின் அஞ்சலில் உள்ள ஸ்பேர்ம் பகுதியை சோதித்துப் பார்க்கவும். தொடர்ச்சியான மின் அஞ்சல் பறிமாற்றம் இல்லாத மின் அஞ்சல் முகவரி  என் அனுபவத்தில் ஸ்பேர்ம் பகுதிக்குத் தான் சென்று விடுகின்றது. அழைத்துச் சொன்னதும் சோதிக்க வேண்டியதாக உள்ளது. இது உங்கள் புரிதலுக்காக மட்டுமே.

உங்களை அன்போடு அழைக்கின்றேன்.




வணக்கம். 

27 ஜனவரி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 முதல் பிற்பகல் 1 மணி வரைக்கும் திருப்பூரில் பல்லடம் சாலையில் உள்ள டிஆர்ஜி நவீன கூட்ட அரங்கில் சட்டமன்ற உறுப்பினர்பிரபல எழுத்தாளர்கள்வலைபதிவர்கள்,தொழில் அதிபர்கள்சுற்றுப்புறச் சூழல் சார்ந்து செயல்படும் சமூக அக்கறை மிக்க ஆர்வலர்கள் மத்தியில் டாலர் நகரம் என்ற நூல் வெளியீட்டு விழா நடக்க இருப்பதால் தங்களை அன்போடு அழைக்கின்றோம்.

இந்த நூல் ஸ்விஸ் ல் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் 4 தமிழ்மீடியா குழுமத்தின் ஒரு அங்கமான 4 தமிழ்மீடியா (படைப்பாய்வகம்) மூலம் வெளிவருகின்றது.

திருப்பூரில் உள்ள தமிழ்வழிக்கல்வியை சிறப்பான செயல்பாடுகளின் மூலம் ஆச்சரியமளிக்கும் பள்ளிக் குழந்தைகளின் பாடல் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. முதல் முறையாக தமிழ் இணையம்திரட்டிகள் பற்றிய முழுமையான விபரங்கள்வலைபதிவுகளின் வளர்ச்சிமாற்று ஊடகம் குறித்த எண்ணங்கள்,திருப்பூர் மாவட்டத்தில் இருந்து வலைபதிவில் எழுதிக் கொண்டிருக்கும் அத்தனை வலைபதிவுகளைப் பற்றிய அறிமுகத்தோடுஅவர்களின் தளம் குறித்த விபரங்களை விழா சிறப்பு மலராக வெளிவர உள்ளது.

அருகில் உள்ள கோவை மற்றும் இதனைச் சார்ந்த மற்ற பகுதிகளின் நண்பர்களின் வேண்டுகோள்களை சிறப்பாக நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

திருப்பூரில் உள்ள பிரபல தொழிலதிபர் சமூக சேவகர், அமெரிக்கா பெட்னா சங்கத்தில் இருக்கும் கேபிகே செல்வா அவர்களின் அறக்கட்டளை மூலம் இந்த விழா நடத்தப்படுகின்றது.இவர் இங்குள்ள பல்வேறு சங்கத்தின் பொறுப்பாளர். கல்விக்காக பல ஆக்கபூர்வமான பணிகளை செய்து கொண்டு வருபவர்.

விழாவுக்காக தங்களின் மேலான ஒத்துழைப்பை வழங்குபவர்கள் தமிழ்ச்செடிசேர்தளம்தொழிற்களம்கனவு இதழ் பத்திரிக்கை போன்றவர்கள் மூலம் இந்த விழா நடக்க இருக்கின்றது. இந்த விழாவில் வேறு சில நிறுவனங்களும் தங்களின் மேலான ஒத்துழைப்பை வழங்கியுள்ளார்கள்.

முழுமையான விபரங்கள்அழைப்பிதழ் அடுத்த கடிதத்தின் வாயிலாக தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த கடிதம் தங்களின் நினைவுக்காக,தங்களின் திட்டமிடுதலுக்காக உங்களிடம் இருந்து எதிர்பார்க்கும் ஆதரவுக்காக இந்த கடிதம் அனுப்பி வைக்கப்படுகின்றது. விழா குறித்த விபரங்கள் நண்பர்களின் தளத்தில், தமிழ்செடி, சேர்தளம், தொழிற்களம், தேவியர் இல்லம் தளத்தில் வெளியிடப்படும்.

நட்புடன்
ஜோதிஜி

29 comments:

  1. விழா சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜோதிஜி

    ReplyDelete
  2. 21-01-13 முதல் 26-01-13 இரவுவரை தொடர்ந்து வேலைகள் இருப்ப்பதால் 27-01-13 அன்று வர இலுமா என்பது தெரியவிலை இருந்தாலும் முயற்சிக்கிறேன். விழா சிறக்க வாழ்த்துக்கள். ( தங்கள் விருப்பப்படி மினஞ்சல் வழி சேவையை தொடங்கிவிட்டேன் )

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா. ஒரு வேளை வாய்ப்பிருந்தால் அங்கிருந்து கிளம்பும் போது எனது அறிவிப்பில் வெளியாகப்போகும் குறிப்பிட்ட அலைபேசி எண் அழைக்க மறக்க வேண்டாம்.

      Delete
  3. ஜோதிஜி விழா சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. என்னால் கலந்துகொள்ள இயலாது. தங்களின் படைப்புக்கும் விழாவுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இது தங்களுக்கான தொடக்கம் எனவே நான் கருதுகிறேன். தங்கள் மேலும் பல உயரங்களை தொட வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வெளிப்படையான உங்கள் நோக்கம் எழுத்து சிந்தனைக்கு என் வாழ்த்துகள்.

      Delete
  5. ஜோதிஜி,


    நீர், நூல் புழங்கும் தொழிலில் இருந்து நூலியற்றும் நூலாசிரியர் :-))

    நூலாடும் பின்னலாடை வல்லுனர் நூற்ரெடுத்த நூலேடு டாலர் நகரம் :-))

    ஒரு கல் எடுத்து வைத்தே எவ்வளவு பெரிய மாளிகையும் எழுப்பப்படுகிறது,ஒரு சொல் எழுதியே எவ்வளவு பெரிய காவியமும் துவங்குகிறது, ஒரு நூல் வளர்ந்து ஓராயிரம் நூலாக தொடர்ந்து வளரட்டும்,பஞ்சை நூற்பதும் நூல் ,சொல்லை நூற்பதும் நூல் :-))

    வலையில் இருந்து இலைக்கு(அச்சு வடிவு, ஹி..ஹி பனை இலை,ஓலையில் தானே முதலில் எழுதினாங்க) அடியெடுத்து வைக்கும் உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்(அரசியல் சுவரொட்டிகளின் பாதிப்பு அதிகமாயிடுச்சு!!!)

    ReplyDelete
    Replies
    1. ஆதலால் இன்று கவியேற்றி கலங்கடித்த கவிதாசன் வவ்வால் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவீர்.

      Delete
  6. விழா சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி முரளி. அவசியம் விழாவுக்கு வாங்க.

      Delete
  7. அன்புள்ள ஜோதிஜி,

    இந்தப் புது வருடத்தில் மேலும் பல படைப்புகள் படைக்கவும்,விழா சிறப்பாக நடக்கவும் மனமுவந்த வாழ்த்துக்கள்!

    அன்புடன்,
    ரஞ்சனி

    ReplyDelete
  8. டாலர் நகரம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்கு நன்றி எழில்.

      Delete
  9. kindly send me invition
    senthil_tcd@yahoo.com

    ReplyDelete
    Replies
    1. நன்றி செந்தில். அவசியம் அழைப்பிதழ் அனுப்பி வைக்கின்றேன்.

      Delete
  10. இனிதே நடைபெறும்.அவசியம் கலந்துகொள்வோம்.

    ReplyDelete
    Replies
    1. காலை ஒன்பது மணிக்கு அரங்கத்தில் இருக்கும்படி வந்து விடுங்க. மகிழ்வாய் உணர்கின்றேன். வரவேற்க்க தயாராய் உள்ளேன்.

      Delete
  11. மிக மகிழ்ச்சி வாழ்த்துகள். புத்தகம் தமிழின் குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை

    ReplyDelete
    Replies
    1. உங்களின் அன்புக்கு நன்றி மோகன் குமார்

      Delete
  12. அன்பின் ஜோதிஜி - விழா வெற்ரிகரமாக நடைபெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  13. அன்பின் ஜோதிஜி விழா சிறக்க அன்புடன் வாழ்த்துகள் நட்புடன் தவறு.

    ReplyDelete
  14. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்-எழில்

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.