அஸ்திவாரம்

Sunday, December 30, 2012

திரும்பிப் பாரடா 2012 - மகிழ்ச்சி அறிவிப்பு


11.கனவாகிப் போய்விடுமோ என்று கவலைப்பட்ட டாலர் நகரம் என்ற புத்தகம் ஜனவரி மாதம் வெளியாகின்றது.  மிக அழகாக நேர்த்தியாக, வண்ண புகைப்படங்களுடன் சேர்த்து ஆவணம் போல 4 தமிழ்மீடியா படைப்பாய்வகம் இதனை கொண்டு வருகின்றது. 27 அத்தியாயங்களுடன் திருப்பூர் சார்ந்த படங்களுடன் வருகின்றது.  சமீப காலமாக புத்தகத்திற்கு எவரும் படங்கள் போடுவதில்லை.

ஆனால் இந்த படத்தோடு படிக்கும் போது தான் உண்மையான திருப்பூருக்குள் உலாவிய திருப்தி கிடைக்கும். புத்தக வடிவில் ஏறக்குறைய 360 பக்கங்கள் வரக்கூடும். மிக அழகாக சுருக்கப்பட்டு வாசிப்பவனை நகர விடாது தொடரச் செய்யும் திரு மலைநாடன் இதில் காட்டிய உழைப்பு மகத்தானது. இத்துடன் மற்றொரு சிற்பியும் இதற்காக உழைத்துக் கொண்டிருக்கின்றார். அவரைப் பற்றிய முழுவிபரங்களை அறிவிக்கின்றேன்.

12,.பலருக்கும் இந்த தொடர் சென்று சேர்ந்துள்ளது. தினந்தோறும் என் தளத்திற்கு வருபவர்கள் என் தளத்தின் கீழே உள்ள டாலர் நகரம் படத்தின் வாயிலாக 4 தமிழ்மீடியா தளத்திற்கு சென்று கொண்டிருப்பதை கவனிக்கும் போது தேடல் உள்ளவர்களை இந்த வலையுலகம் அதிகம் பெற்றுள்ளது என்பதை உண்ர்ந்தே வைத்துள்ளேன். ஜனவரி மாதம் 2013 இறுதியில் இதற்கான விழா நடைபெறுகின்றது.  இந்த விழாவின் மூலம் மேலும் சில நல்ல நிகழ்வுகள் நடக்கப் போகின்றது.

இது குறித்த முழுமையான விபரத்தை விரைவில் வெளியிடுகின்றேன்.

நண்பர் ராஜநடராஜன் அடிக்கடிச் சொல்லும் உங்கள் எழுத்துக்கள் திருப்பூர் தொழில் சம்மந்தபட்ட அத்தனை பேர்களிடமும் சென்றால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்ற அர்த்தத்தில் பல முறை விமர்சனங்களில் தெரிவித்துருப்பதை அடிப்படையாக வைத்து திருபபூருக்குள் இந்த புத்தகத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும்படி கொள்கை திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

நண்பர்கள் ஆதரவு அளிக்க கோருகின்றேன்.

13.இந்த வருடத்தில் எனக்கு அறிமுகமான வலைஉலகத்திற்கு  தெரியாத இரண்டு மனிதர்கள் உண்டு. 

ஒன்று திரு.சங்கர நாரயணன். இவர் ஈரோடு பகுதியைச் சேர்ந்தவர். தொழில்நுட்ப பட்டப்படிப்பு முடித்து இங்கே பணிபுரிந்துவிட்டு தற்போது ஒரிஸ்ஸாவில் கட்டுமான தனியார் நிறுவனத்தில் ஒரு பங்குதாரராக இருக்கின்றார். 

இவர் திருப்பூர் சாயப்பட்டறை முதல் தான் படித்த கேட்ட அத்தனை நல்ல மற்றும் அக்கிரம நிகழ்வுகளையும், கட்டுரைகளையும் அவர் சார்ந்த குழும மின் அஞ்சல் மூலம் பகிர்ந்து கொள்பவர். நான் கூகுள் ப்ளஸ் ல் வெளியிடும் படங்களில் பெரும்பான்மையாக இவர் எனக்கு அனுப்புவதே. அத்துடன் குறிப்பிட்ட பிரச்சனைகளை எவர் எவருக்கு அனுப்பி அவர்களின் பார்வைக்கு கொண்டு செல்ல முடியும் என்பதை இவர் மூலம் தான் கற்றுக் கொண்டு வருகின்றேன்.

இந்தியாவில் உள்ள அத்தனை அதிகார வர்க்கத்தினரை துவைத்து காயப் போட்டு கதறடித்து வருகின்றார். அற்புதமான புத்திசாலி. ஆனால் நம்மவர்கள் என்ன சாதாரணமானவர்களா? ஆணி அடித்தால் கூட ரத்தம் வராத அளவுக்கு தோல் பெற்ற பாக்கியவான்களாச்சே. இவர் அறுபது வயதை கடந்தாலும் இவர் தேர்ந்தெடுத்து வாசிக்கும் தளத்தையும் அதில் அவர் வைக்கும் விமர்சன பாங்கையும் நான் கற்றுக் கொள்ள இன்னும் நாலைந்து வருடங்கள் ஆகும்.

14.அடுத்து திரு. லஷ்மணன் அவர்கள்.  சேலத்தைச் சேர்ந்தவர். இவரும் தொழில் நுட்ப பட்டப் படிப்பு முடித்து வெளிநாடுகளில் பல பெரிய நிறுவனங்களில் பணிபுரிந்து விட்டு தற்போது சேலத்தில் அற்புதமான கலையம்சம் மிகக வீட்டில் குழந்தைகள் மற்றும் பேரன் பேத்திகளுடன்  அமைதியான வாழ்க்கையை அழகாக வாழ்ந்து கொண்டிருப்பவர். வாழ்வின் இறுதிக் காலத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதை இவர் வாழ்க்கையின் மூலம் கற்றுக் கொண்டேன். அவர் வீட்டைப் பார்த்தவுடன் காரைக்குடி பக்கம் உள்ள வீடுகள் தான் என் நினைவுக்கு வந்தது. வீட்டின் வடிவமைப்பும் இவரும் மற்றும் இவர் குடும்பத்தினரே.

இவர் 4 தமிழ்மீடியா தளத்தில் வெளியான காக்க காக்க நோக்க நோக்க என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர்.இவர் மூலமாகத்தான் திரு. சங்கர நாராயணன் அறிமுகமானார். இவர்கள் இருவரும் ஒரே கல்லூரியில் வெவ்வேறு சமயத்தில் படித்தவர்கள். ஒத்த வயதுள்ளவர்கள். இவர் படிக்கும் பல தளங்களை குழும மின் அஞ்சல் வழியாக தினந்தோறும் அனுப்பிக் கொண்டேயிருப்பார்.  வேலைகளுக்கிடையே என் வலையுலக வாசிப்பு என்பது இது போன்ற சுட்டிக்காட்டல் மின் அஞ்சல் மூலமாகத்தான் பார்க்கப்படுகின்றது. பகிரப்படுகின்றது. இரண்டு என்சைக்ளோபீடியாக்கள் எனக்கு நண்பராக இருந்தது இருபப்து இந்த வருடத்தின் மகத்தான் அங்கீகாரம்.

15.இந்த வருடத்தில் டீச்சர் திருமதி துளசி கோபால் அவர்களை சென்னையில் நடந்த அவர்களின் மணிவிழா நிகழ்ச்சியில் பார்க்க பழக முடிந்தது. இந்த வருடத்தின் சிறப்பான தருணம் அது.  என் மேல் அதிக அக்கறை கொண்ட கோவி கண்ணன் அவர்கள் திருப்பூர் வந்து சந்தித்தது எனக்கு கிடைத்த ஒரு மகிழ்ச்சியான தருண்ம். கடந்த இரண்டு வருடங்களில் என் எழுத்துக்கு மரியாதையை உருவாக்கி எங்கள் தேவியர் இல்லத்தின் ஒரு அங்கத்தினராக ஆன 4 தமிழ்மீடியா ஆசிரியர் திரு. மலைநாடன் அவர்களுக்கு என் நன்றியை வார்த்தைகளில் எழுதிவிட முடியாது. 

16.என்னை சந்திக்காமலேயே என்னிடம் காட்டும் அக்கறைக்கு தமிழ்வெளி குழலிக்கு என் மனமார்ந்த நன்றி. தமிழ்மணம், இன்ட்லியில் மட்டுமே என் பதிவுகளை இணைக்கின்றேன். சில சமயம் தமிழ் 10 தளத்தில் சேர்க்க நேரம் கிடைக்கின்றது.தமிழ்வெளி இயல்பாக இணைந்து விடும் வசதியை உருவாக்கியுள்ளார்.

இவர்கள் இல்லாவிட்டால் தேவியர் இல்லம் என்பது உலகத்திற்கு சென்று சேர்ந்திருக்காது. 

17.டாலர் நகரம் என்பது கடந்த 20 வருட திருப்பூர் என்ற ஊரின் மாறுதல்கள், நிறுவனங்களுக்கு பின்னால் உள்ள புரிதல்கள், இந்த ஊரை ஏற்றுமதி என்ற ஒரு வார்த்தை எப்படி மாற்றியது. இந்த ஊரில் உள்ள தொழில் வாய்ப்புகள் என்று என்னுடைய அனுபவங்கள் மூலம் உண்மைக்கருகே நெருங்கிப் பார்க்கும் சுவராசிய நடையில் எழுதப்பட்ட பதிவுகளின் சுருக்கம். இந்த துறையைப் பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்படுவர்களுக்கும்,  ஆனால் இந்த ஊரின் உள்ளே இருந்து கொண்டு  முழுமையான தகவல்கள் தெரியாமல் வாழ்பவர்களுக்கும் இந்த புத்தகம் உதவக்கூடும். . 

18, டாலர் நகரத்தில் முடிந்தவரைக்கும் அனைத்தையும்  எழுதி விட்டோம் என்று நினைத்திருந்தேன். ஆனால் சாய்பபட்டறைகளின் மூலம் உருவான பிரச்சனைகள்,அதன் உண்மையான விசயங்கள், பிரச்சனைகள் விஸ்வரூபம்  எடுத்ததும் திருப்பூர் சந்தித்த சவால்கள், மாறிய திருப்பூர், அதன் பின்னால் வந்த மாறுதல்கள் என்பதை இதில் சேர்க்காமல் இருந்தேன்.

ஆனால் எதிர்பாரதவிதமாக புதியதலைமுறை ஆசிரியர் திரு. மாலன் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி எழுத அதுவும் அந்த இதழில் கவர் ஸ்டோரியாக வந்தது. அதற்குப் பிறகு ஆழம் பத்திரிக்கைகாக திரு. மருதன் கொடுத்த வாய்ப்பின் மூலம் தற்போதைய திருப்பூரின் நிலவரத்தையும், வெகு அருகே வந்துவிட்ட அந்நிய முதலீடு குறித்தும் எழுத முடிந்த காரணத்தால் இந்த மூன்று தலைப்புகளும் சேர்ந்து மொத்தமாக இன்று வரையிலும் உள்ள திருப்பூரின் நிலைமையை தெள்ளத்தெளிவாக புரிய வைத்து விடும்.

19.என் அலைபேசி எண் கிடைக்கப்பெற்றதும் திருப்பூர் சார்ந்த இருவர் அழைத்திருந்தார்கள்.பெங்களூரில் இருந்து பேசும் நண்பர் குடும்ப உறுப்பினராகவே ஆகி விட்டார். அதில் ஆச்சரியப்பட்ட நிகழ்வும் ஒன்று. உண்டு.

திருப்பூரில் நான் ஏற்கனவே வாழ்ந்த பகுதியில் ஒரே சந்தில் அருகருகே வீட்டில் வசித்தவரும் பேசினார். பேசியவருடன் பக்கத்து வீட்டில் மூன்று வருடங்கள் வசித்து இருக்கின்றேன். இரண்டு வருடமாக தேவியர் இல்லத்தை படித்துக் கொண்டிருக்கின்றேன். உங்களுடன் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் என்றார். அப்போது தான் அவர் குறித்த முழு விபரமும் எனக்குத் தெரிந்தது.

இருவரும் வெவ்வேறு துறையில் இருப்பதால் பார்த்து இருக்கின்றோம்.  தினந்தோறும் பார்த்த போதிலும் கூட இருவரும் பேசிக் கொண்டதில்லை.  அந்த சமயத்திலும் நான் எழுதிக் கொண்டிருந்தேன் என்பதை நினைத்துக் கொண்டேன். இப்போது கூட இதை படிப்பார். நான் இதை நினைத்து பல நாட்கள் சிரித்துக் கொண்டிருந்தேன். என் நண்பர் அடிக்கடி சொல்லும் வாசகம் நினைவுக்கு வந்தது

ஃபேஸ்புக்கில் அடுத்த நாட்டில் இருப்பவர்களுக்கு வணக்கம் வைப்போம். அடுத்த வீட்டில் இருப்பவர் யார் என்றே தெரியாது. .

20,.இந்த வருடம் சென்ற வருடத்தை விட பாதிக்கு பாதி தான் எழுத முடிந்தது. என் பதிவுகளின் மூலம் ஏராளமான புதிய நண்பர்கள், வாசிப்பாளர்கள், அக்கறை கொண்டவர்கள் கிடைத்துள்ளார்கள்.

அத்தனை பேர்களின் வாழ்க்கையிலும் வருகின்ற 2013 வளமான எதிர்காலத்தை உருவாக்க தேவியர் இல்லத்தின் நல்வாழ்த்துகள்.

உங்கள் உழைப்பின் மூலம் உங்கள் உண்மையான ஒழுங்கான சிந்தனைகளின் மூலம் 2013 ல் பெற வேண்டிய கிடைக்க வேண்டிய மகிழ்ச்சியும் அங்கீகாரமும் உங்களுக்கு கிடைக்க எங்கள் தேவியர் இல்லத்தின் புதிய ஆங்கில வருட புத்தாண்டு வாழ்த்துகள்.

ஒரு இடைவெளி விட்டு சந்திப்போம்.

திரும்பி பாரடா 1

திரும்பி பாரடா 2

32 comments:


  1. // கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.//

    தாங்கள் வலைச்சர ஆசிரியராக வருவதை அறிந்து உங்கள் வலைக்குள்
    முதன் முறையாக வருகிறேன்.

    கேட்பது தவறு . அப்படியா ?

    தட்டுங்கள் திறக்கப்படும். கேளுங்கள் கொடுக்கப்படும் என்று தானே சொல்லப்படுகிறது.

    ஆகவே, நான் கொடுக்கப்போவதில்லை. கேட்கப்போகிறேன்.
    ஆமாம்.

    திருப்பூர் பனியன்கள் தரத்திற்கு பெயர் போனவை.
    திருப்பூரைச் சார்ந்த தாங்களும்
    தரமுள்ள பதிவுலகத்தை அடையாளம் காட்டவேண்டும்.

    பின்னூட்டங்கள் எவ்வளவு என்பதை விட,
    பின்னும் பின்னும் படிக்கவேண்டும் எனத் தூண்டச்செய்யும் பதிவுகளைப் பார்க்க உதவிடுங்கள்.

    வருக.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. காலை வணக்கம் சுப்பு தாத்தா.

      Delete
  2. “டாலர் நகரம்” புத்தகம். மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துகள் !!!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் குடும்பத்துடன் விழாவில் கலந்து கொள்ள வேண்டும். இது வேண்டுகோள் அல்ல.

      ட்

      ளை
      (அன்பு)

      Delete
  3. ஜோதிஜி,

    வாழ்த்துக்கள்!!!

    வலைப்பதிவில் இருப்பதை விட தெளிவாக இருக்கும் என நினைக்கிறேன். புத்தகம் விலையை கம்மியா போடுங்க, அப்போ தான் நான் வாங்குவேன்!!!

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு பிடித்த நக்கல் விக்கல் எல்லோமே எனக்கு புரியுது தலைவரே. நீங்க சொல்வது முற்றிலும் உண்மை. தெளிவாகவே இருக்கும். காரணம் நான் அல்ல. சிற்பிகள் சிலை வடிப்பது போல இஞ்ச் இஞ்ச்சாக கொத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

      Delete
  4. வாழ்த்துக்கள்,நன்றியுடன் திரும்பி பார்க்கிறீர்கள்

    ReplyDelete
    Replies
    1. உண்மையும் கூட. உங்கள் பெயரே கண்ணதாசன் தானா? அல்லது வலைதளத்திற்கு வைத்துக் கொண்டே பெயரா?

      Delete
  5. மிக்க மகிழ்ச்சி.தங்கள் மகத்தான பணி
    தொடர வாழ்த்துக்கள்
    தங்களுக்கும் தங்க்கள் குடும்பத்தாருக்கும் இனிய
    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஏன் திருப்பூர் தொழிற்களம் விழாவிற்கு வரவில்லை? வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன். நன்றிங்க.

      Delete
  6. முதன் முறையாக உங்கள் வலைப பதிவிற்கு வருகிறேன். கடந்த ஓராண்டாக இருந்தும் உங்கள் பதிவுகளை பற்றி தெரியாமல் இத்தனை நாள் வீணடித்து விட்டேனே என்று வருந்துகிறேன். இனி அடிக்கடி வருவேன்.புத்தகம் சிறப்பான முறையில் வெளிவர வாழ்த்துக்கள்.
    வலைசரத்திற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி முரளி. நிச்சயம் இணையம் இருக்கும் வரையிலும் நம்முடைய எழுத்துக்கள் இங்கே தான் இருக்கப் போகின்றது. பலரும் மெதுவாக வந்து உள்வாங்குவது தான் இல்லத்தின் சிறப்பே. உங்கள் பதிவுகளில் பல முறை விமர்சனம் கொடுத்துள்ளேன்.

      Delete
  7. தங்களுக்கும் தங்க்கள் குடும்பத்தாருக்கும் இனிய
    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அகலிகன் உங்களைப் போன்றவர்கள் திருப்பூரில் ஜனவரி மாதம் இறுதியில் நடக்கப்போகும் (ஞாயிறு) விழாவிற்கு குடும்பத்தோடு வந்தால் நிச்சயம் மகிழ்ச்சியடையவேன். உங்கள் குடும்பம் நலமோடு வாழ என் வாழ்த்துகள் அகலிகன்.

      Delete
  8. "உறவோடு உறவாடுவோம் " நிகழ்வில் தங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சியான தருணம். ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்!!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கலாகுமரன். உங்கள் அன்புக்கு மிக்க நன்றி. நிச்சயம் டாலர் நகரம் விழாவிற்கும் உங்களை அன்போடு அழைக்கின்றேன்.

      Delete
  9. நான் கடந்த சில ஆண்டுகளாக வலைப்பதிவுகளை படித்துவருகின்றேன். அவற்றில் சிலவற்றில்தான் பதிலிடுவது வழக்கம். சில மாதங்களுக்கு முன்தான் உங்களின் பதிவுகளை படிக்க நேர்ந்தது. மிகவும் தேவையான மற்றும் விஷயமுள்ள வலைத்தளம். "என்னென்னமோ" கிடைக்கும் வலைத்தளங்களுக்கு நடுவில் இப்படியும் ஒரு தளத்தை அற்புதமாகவும் அதே நேரத்தில் ஏறக்குறைய தினமும் பதிவுகளை இடுவதும் அதைக்கொண்டு மற்றவர்களுக்கு உதவியாய் இருப்பதும்... vov! great.
    இந்த ஆண்டு நான் படித்த வலைத்தளங்களில் எனக்கு பிடித்தது... தேவியர் இல்லம்.
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி அஜீஸ். வளமோடு வாழ என் வாழ்த்துகள். இந்தியாவில் தான் இருக்கின்றீர்களா? இல்லை வெளிநாட்டில் இருக்கின்றீர்களா? இங்கே இருந்தால் நிச்சயம் உங்களை டாலர் நகரம் விழாவில் சந்திக்க ஆசை.

      Delete
  10. இது ஒரு மைல் கல். புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள்,நிச்சயம் வாங்குவேன், அன்புடன்--செழியன்.

    ReplyDelete
    Replies
    1. விழாவிற்கு வருகை தர வாய்ப்புண்டா?

      Delete
    2. தற்போது வாய்ப்பில்லையாயினும்,வலைச்சர ஆசிரியர் பொறுப்பிற்கும் அன்பான வாழ்த்துக்கள். கலக்குங்கள் ஜோதிஜி சார்:)))--செழியன்.

      Delete
  11. wishing u a happy 2013, i am a regular reader of your blog for more than one year,
    this is my first comment on any blog.
    i am also in textiles ,pure silk sarees.
    i would like to know the ids of mr.sankaranarayanan's blog and mr.lakshmanan's blog

    thankyou.

    saravanan

    ReplyDelete
    Replies
    1. texlords@gmail.com

      இந்த மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளவும். அவர்கள் மின் அஞ்சலில் இணைத்து விடுகின்றேன். ஓரே தொழில் என்பதால் பல விதங்களில் வாய்ப்புகளை உருவாக்க முடியும்.

      Delete
  12. வாழ்த்துகள் தேவதாஸ்.

    ReplyDelete
  13. புத்தக வெளியீட்டுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்,(தொடரை தொடர்ந்து படித்ததால்)புத்தகம் கண்டிப்பாக வாங்கி படிப்பேன் நன்றி.
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ரூபன். நலமா? வாழ்த்துகள் ரூபன்.

      Delete
  14. வாழ்த்துக்கள் அண்ணா ...! இணையத்தில் டாலர் நகரம் வசிக்கும் போது தோன்றிய எண்ணம் -ஒரு புத்தகத்திற்கு உண்டான எல்லாமே இதுல இருக்கே , வருமா புத்தகமா ?... ஆஹா வரப்போகுது . சந்தோசம் .

    முதல் பிரசவம் சுகப்பிரசவமாக அமைய வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. கடந்த ஒரு மாதத்திற்குள் வலைதள சூட்சுமம் அத்துடன் நன்றாகவும் விமர்சிக்க கற்று கொண்டு விட்டீங்க.

      Delete
  15. நண்பா

    மிக்க நன்றி. இந்த வருடத்தின் எனக்கு அறிமுகமான முக்கியமான நபர் நீங்க. உங்களுக்கு தேவியர் இல்லத்தின் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. அன்பின் ஜோதிஜி - டாலர் நகரம் சிறப்புடன் வெளி வர நல்வாழ்த்துகள் - வெளியீட்டு விழாவினிற்கு வருவதற்கு புகை வண்டியில் முன் பதிவு செய்து விட்டேன்.

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. உங்கள் அன்புக்கு நன்றி

      Delete
  17. நண்பர்கள் அனைவருக்கும்

    வருகின்ற (27 01 2013) ஜனவரி மாதம் ஞாயிற்றுக் கிழமை திருப்பூரில் உள்ள பல்லடம் சாலையில் அமைந்துள்ள டிஆர்ஜி கூட்ட அரங்கில் எனது டாலர் நகரம் என்ற புத்தகம் வெளியீட்டு விழா நடக்க உள்ளது. இது குறித்த முழு விபரங்கள் அடுத்த வாரம் வெளியிடுகின்றேன். இதுவொரு முன்னோட்ட சின்ன அறிவிப்பு.

    காலை 9 முதல் 1 மணி வரைக்கும் விழா நடைபெறும்.

    சட்ட மன்ற உறுப்பினர், பிரபல எழுத்தாளர்கள், பதிவர்கள், திருப்பூரில் உள்ள தாய்த்தமிழ் பள்ளி மாணவர்கள் பாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    சேர்தளம், தொழிற்களம், தமிழ்ச்செடி அமைப்பு மற்றும் திருப்பூர் சார்ந்த வலைபதிவர்களின் சிறப்பு மலர் வெளியீடும் நடக்க உள்ளது.

    உங்கள் அனைவரையும் வரவேற்கின்றேன்.

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.