அஸ்திவாரம்

Saturday, August 25, 2012

விஜய் மல்லையா கொடுத்ததும் - திறக்காத கதவுகளும்


"இப்ப கொஞ்சம் நேரம் சரியில்லப்பா...". 

இப்போது இதுவொரு சாதாரண வாக்கியமாகி விட்டதுஆடி முடிந்து ஆவணி வந்தா டாப்புங்ற மாதிரி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கணக்கு. நாட்டை ஆளும் சக்திவாய்ந்த அமைச்சர்கள் முதல் அடுத்தநாள் சோத்துக்கு காத்திருப்பவர் வரைக்கும் தினந்தோறும் நல்ல நேரத்திற்காகத் தான் காத்துக் கொண்டே இருக்கிறார்கள்அவர்கள் எதிர்பார்த்தது நடக்காத போது இறுதியில் சொல்வதும் இப்படித்தான் இருக்கிறது

விஜய் மல்லையா (ஆகஸ்ட் 25) இன்று கர்நாடகா மாநிலத்தில் உள்ள சுப்ரமணியர் கோவிலுக்கு பரிகாரமாக தங்ககதவு (80 லட்சம்) செய்து கொடுத்த கதவுகளை பார்த்த போது பரிகாரத்திற்கும் எதார்த்ததிற்கும் உள்ள வித்யாசங்களை நம்மால் உணரமுடிகின்றது

Liquor baron என்றால் நாலைந்து அர்த்தமாக எடுத்துக் கொள்ளலாம்சாராய சக்ரவர்த்திசாராய சாம்ராஜ்யம்சாராய தொழிலதிபர்லிக்கர் மேக்னெட் என்று நமக்கு தோன்றிய வகையில் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்சபரிமலை ஐயப்பன் முதல் இன்று இந்த கர்நாடக கோவில் வரைக்கும் மல்லையாவும் எதை எதையோ கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறார். ஆட்சியாளர்களுக்கு தேர்தல் சமயங்களில் கொடுத்தது போக மீதி இருப்பதை இப்படி கோவிலுக்கு கொண்டு போய் கொடுத்து விடுகிறார் போலும்ஆனால் கிங்பிஷர் விமான ஓட்டிகளுக்கு மட்டும் மாதமானால் சரியான தேதிக்கு சம்பளம் மட்டும் அவரால் கொடுக்க முடியவில்லை. 

விஜய் மல்லையா பெட்ரோல் கேட்டுப் போனால் ஒவ்வொரு பெட்ரோலிய நிறுவனங்களும் உள்ளே வராதே என்று கதவை சாத்துகிறார்கள்,  வங்கி மக்களோ அலறி ஓடுகிறார்கள்இவரிடம் வாங்கி தின்ன பாவத்திற்காக மட்டும் அமைச்சர் பெருமக்கள் கொடுத்த காசுக்கு மேல் கொஞ்சம் அதிகமாகவே கூவினார்கள்,  ஆனால் எந்த பிரயோஜனமும் இல்லை,  பிரச்சனைகள் எதுவும் தீர்ந்தபாடில்லை.  முறைப்படி தீர்ப்பவர்கள் எவரும் அருகிலும் இல்லை.  இவரை நம்பி முக்காடு போட்டவர்கள் எத்தனை பேர்களோ

சாரயம் குடித்தவனை தப்பாக பார்த்த காலம் போய் அது கௌரவத்தின் அடிப்படையில் பார்க்கப்படுவதால் சாராய அதிபருக்கு கோவிலுக்குள் இருக்கும் சாமியே வந்து வரவேற்பு அளிக்கும் போல. இது அம்பானி முதல் திருப்பூரில் இருக்கும் ஏற்றுமதி முதலாளிகள் வரைக்கும் இப்படித்தான் கோவிலில் கொண்டு போய் கொட்டுகிறார்கள்.  ஆனால் தங்கள் நிறுவனம் வளர காரணமாக இருக்கும் எவரையும் கண்டு கொள்ளக்கூட தயாராய் இல்லை.

இன்றைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை எப்படியும் வலையில் சிக்கவைத்து விட வேண்டும் என்று சுப்ரமணியன் சுவாமியும் தலைகீழாக நின்று கொண்டு ஒவ்வொரு அஸ்திரமாக ஏவிக் கொண்டே தான் இருக்கிறார்,  ஆனால் அவர் குடும்பமோ ஊர் ஊராக ஒவ்வொரு கோவிலாக அலைந்து கொண்டுருக்கிறார்கள்காரைக்குடிக்கு அருகே உள்ள சிதம்பரத்திற்கு சொந்தமான மானகிரி பண்ணை வீட்டிலும் ஏதோவொரு யாகம் பூஜைகள் நடந்து கொண்டே தான் இருக்கிறது,  இவர் தான் ஜெயலலிதாவைப் பார்த்து யாகத்தை நம்பும் வரைக்கும் அவருக்கு விமோசனம் இல்லை என்றார்ஒரு வேளை அவர் விரும்பியுள்ள பிரதமர் பதவி கிடைப்பதற்காக குடும்பம் அலைகின்றனரோ? ஆனாலும் விடாது கருப்பாய் அவரை ஒவ்வொன்றாக துரத்திக் கொண்டேயிருக்கிறது.  

தொடக்கம் முதல் ஜெயலலிதா பூஜை ப்ரியர்,  நடந்தால் பூஜைஉட்கார்ந்தால் யாகம் என்று அவர் மூலம் தமிழ்நாட்டில் பாழடைந்த பல கோவில்கள் புதிய அவதாரங்களாக சுற்றுலா தளங்களாக மாறியதுஎதிரியை அழிக்க என்று இவர் யாகத்தில் கொட்டிய மிளகாயக்கு புதிய பார்வை கிடைத்தது, இந்த யாகத்தினால் இன்று அந்த கோவிலைச் சுற்றிலும் மிளகாய்க்கு சரியான கிராக்கி,  ஆனால் எதிரியான கலைஞர் அழிந்தாராஎன்றெல்லாம் கேட்கக்கூடாது

ஆனாலும் இன்று ஜெயலலிதாவோ கலைஞருக்கு பாடம் எடுக்கக்கூடிய தகுதி வாய்நத நபராக மாறி அசராமல் கோர்டு வாசலில் சிக்ஸராக விளாசித் தள்ளிக் கொண்டேயிருக்கிறார்,  சாட்சிகள் ஓடி ஒளிகின்றார்கள்பிறழ் சாட்சியாக மாறுகிறார்கள்,  உச்சகட்டமாக அரசு வழக்குரைஞரே என்னை ஆளை விட்டால் போதும் என்று ஆட்டத்தில் இருந்து ஒதுங்கிக் கொள்ளும் காட்சியெல்லாம் அரங்கேறிக் கொண்டுருக்கிறதுவாய்தா மேல் வாய்தா வாங்கி வாய்தா ராணியாகிக் கொண்டுருக்கிறார்,  ஆனால் இன்று வரையிலும் அவர் செய்யும் பூஜை புனஸ்காரங்கள் குறைந்தபாடில்லை,

இது போன்ற தொந்தரவுகள் கலைஞருக்கு இல்லை,  அவர் சார்பாகத்தான் குடும்பத்தில் உள்ள அத்தனை பேர்களும் உலகத்தில் உள்ள அத்தனை கோவில்களுக்கும் சென்று நேர்த்திக்கடன் செய்து விடுகின்றார்களே?

சோனியாவுக்கு பிரச்சனையே இல்லை,  இத்தாலியில் உள்ள கோவில்களைப் பற்றி நமக்கு தெரிய வாய்ப்பில்லை,  வீட்டுக்குள் இருந்து கொண்டு ஜெபிக்கின்றாரா என்று தெரியவில்லை,  மன்மோகன் சிங் அதற்கும் ஏதாவது ஒரு ஏற்பாடு செய்துருக்கக்கூடும்

ஆனால் பிரச்சனைகளை உருவாக்குபவர்களும்பிரச்சனையில் சிக்கியவர்களும்சிக்கப் போகின்றோம் என்ற தெரிந்து வைத்திருப்பவர்களும் மறக்காமல் ஒன்றை செய்யத் தவறுவதில்லை,  யாகம் வளர்ப்பதுகோவில் கோவிலாக செல்வதுஅன்னதானம்கல்யாணம் செய்வதற்களுக்கே மறுபடியும் கல்யாணம் செய்து வைப்பது.  எதுவுமே முடியாவிட்டால் இருக்கவே இருக்கு பரிகாரம்,  இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொரு ஆஸ்தான ஜோதிடர்களும் மாநிலம் விட்டு மாநிலம் பறந்து சென்றாலும் நேரம் போதவில்லை என்ற நிலையில் சேவையாற்றிக் கொண்டுருக்கிறார்கள்,  இப்போது நாட்டில் மருத்துவர்களை விட இந்த ஜோதிடர்களுக்குத் தான் அதிக கிராக்கியாக இருக்கிறது

தற்போது கம்பி எண்ணிக் கொண்டுருக்கும் பிஆர்பி நிறுவன அதிபர் பழனிச்சாமியும் இது போன்ற அதிக நம்பிக்கை கொண்டவர் தான்,  அவருக்கு பிடித்த எண் 56,  அவர் பிறந்த வருடமும் 1956 என்பதால் சற்று கூடுதல் பாசம் போலஅவரின் தொழில் ரீதியான ஒவ்வொரு முடிவுகளுமே ஜோதிடர்களை கலந்து ஆலோசிக்காமல் எடுக்கப்படுவதும் இல்லையாம்,  என்ன செய்வது?  56 வயது நடக்கும் இப்போது தான் அத்தனையும் தலைகீழாக போய்விட்டது,

ஒருவேளை பழனிச்சாமியின் நேரம் பார்த்த ஜோதிடரின் மனதை கிரகங்கள் தப்பாக மாற்றியிருக்குமோ?

அறம் என்பதும் பக்தி என்பதும் ஒன்றோடு ஒன்று கலந்த உடன்பிறவா அண்ணன் தம்பிகள்,  ஓழுக்கமாக வாழ் என்பதற்காக உருவாக்கப்பட்ட போதனைகள் அத்தனையும் தொடக்கம் முதல் பக்தி என்ற தேன் கலந்து கொடுக்கப்பட்டது.  "தப்பு செய்யாதே. சாமி கண்ணை குத்தி விடும்" என்று குழந்தைகளுக்கு கதை சொல்வதில் தொடங்கி "அவன் செய்த பாவத்திற்கு தான் இப்படி ஆயிட்டான்" என்று சுட்டிக்காட்டப்படுவதும் வரைக்கும் இந்த அண்ணன் தம்பிகளின் உறவு ஏதோவொரு வகையில் பாசகார பயலுகளாகவே இருந்தார்கள்

ஆனால் காலம் மாற மாற இந்த அண்ணன் தம்பிகளுக்குள் மக்கள் பிரிவினையை உருவாக்கி விட்டார்கள்,  பெரிய தப்பு செய்தால் அதற்கு ஒரு விதமான பரிகாரம்சின்னதென்றால் அதுக்கு ஒரு மாதிரிமொத்தத்தில் அது தவ்று என்று உணரத் தேவையில்லைஅடுத்த முறை மாட்டாமல் செய்து விடு என்பதாக மற்றவர்கள் சொல்லிக் கொடுக்க அப்படித்தான் உலகம் நகர்கின்றதுமதங்கள் வெவ்வேறாக இருக்கலாம்பரிகாரம் என்பது பாவ மன்னிப்பாக மாறுகின்றது,  அவ்வளவுதான்இன்று இறை பக்தி என்பதே ஒரு ஃபேஷனாகி விட்டது,

இறை பக்தி என்பதன் மூலம் கலந்து கொடுத்த பயமுறுத்தல்கள் போன்ற எந்த பப்புகளும் இன்று மக்களிடம் வேகாதுகாரணம் மக்கள் பக்தியையும் ஒழுக்கத்தையும் தனித்தனியாக பிரித்து விட்டார்கள்.  பக்தி ஒரு பக்கம்வாழ்வதற்காக செய்ய வேண்டிய நடைமுறை எதார்த்தம் என்பது மறுபக்கம்.

எந்த தப்பான் காரியங்களும் இன்று எவரையும் உறுத்துவதே இல்லைஊழல் புகாரில் மாட்டியவர்கள் என்றால் திருடன் என்று தானே அர்த்தம்.  எவராவது முகம் கருத்துப் போய் புகைப்படத்தில் போஸ் கொடுக்கின்றார்களா?  வாயெல்லாம் பல்லாகத்தான் கையாட்டிக் கொண்டு செல்கிறார்கள்படிப்பவனுக்கும்பார்ப்பவனுக்கும் கோபம் வந்து பார்த்துருக்கிறீர்களா

தேனை எடுத்தவன் நக்காமலா போவான்என்று இயல்பாக எடுத்துக் கொண்டு போக அடுத்து வருபவன் அகாய சூரனாக மாறிக் கொண்டுருக்கின்றான். 

36 comments:

  1. பக்தி என்பது வியாபாரம் ஆகி ரொம்ப நாளாச்சு ,அப்பொ விலைக்கு கேட்கத்தான் செய்வாங்க :-))

    கொக்கெ சுப்ரமணியம் கோவில் மல்லையாவுக்கு குலதெய்வ கோவில்.

    ஏன் அமிதாப்,ஐஷ்வர்யா , தீபிக படுகோன் என அனைவருக்குமே,காரணம் மல்லையா உட்பட எல்லாம் காயஸ்தா என்ற இனக்குழு ,அது பிராம்மின் போல ஆனால் பிராமின் இல்லை ,அவங்களை விட ஒரு படிக்கம்மி. பிரம்மாவின் நெத்தியில் இருந்து பொறக்காம உடம்பில் இருந்து பொறந்தவங்களாம்,குபேரனின் வழித்தோன்றல்கள்னு ஒரு ஐதீகம்,அதான் நல்லா காசுக்கொட்டுது :-))

    மல்லையாவுக்கும் சொந்த ஊர் படுகோன், என்பது மங்களூர் கரையோர கிராமம். இப்போ ஏன் தீபிகா ,மல்லையா பையன் ஒட்டிக்கிறாங்கன்னு புரிஞ்சு இருக்குமே :-))

    ReplyDelete
  2. வவ்வால் எந்த பக்கம் போனாலும் கலங்குறீங்க. தெரியாத விசயங்கள் ஏதாவது உண்டா? அவர் பையனோட அந்தம்மா ஒட்டுறதுக்கு இந்த பாசம் மட்டும் காரணமில்லை,

    காசே தான் கடவுளடா?

    ReplyDelete
  3. வவ்வாலு இருட்டுல பறந்துகிட்டே உளவு பார்க்குமோ:)

    என்னமோ நமக்கு இந்த பூஜை,புனஸ்காரம்,பரிகார தொந்தரவு இல்லாததற்கு மகிழ்ச்சியடைவோம்.

    ReplyDelete
  4. ஜோதிஜி,

    எல்லாம் ஊர் சுற்றின அனுபவம் தான் ,நான் அந்த கோவில் வரைக்கும் போயிட்டு உள்ளே போகாமல் சுத்திட்டு வந்துட்டேன். அங்கே பாம்பு புற்று மண் பிரசாதம், அப்புரம் அபிஷேக பால் ,இது சாப்பிட்டா எந்தா நோயும் தீருமாம் :-))

    தண்ணியவும் ஒரு பாட்டில் புடிச்சு விக்குராங்க.

    கோயிலில் ஒரு பெரிய பாம்பு பல ஆண்டாக வசிக்குதாம் ,எனக்கு கிலியாகிடுச்சு :-))


    காசே தான் கடவுளடாவும் ஒரு காரணம் ,மல்லையா குடும்பத்தில எதிர்ப்பு வராமல் இருக்கவும் நான் சொன்னது ஒருக்காரணம்,நம்ம பொண்ணு ஃபீலிங் :-))

    -------
    ராச நடராசரே ,

    இதுக்கு எதுக்கு உளவுப்பார்க்கணும் அந்த ஏரியாவுக்கு போனால் எல்லாம் வாயாலவே சொல்லிடுவாங்க :-))

    ஹி..ஹி நமக்கும் பரிகாரம்,நரிகாரம் எல்லாம் இல்லை ஆனால் ஆன்மீக சுற்றுலா போனா கூட வேடிக்கைப்பார்க்க கிளம்பிடுவேன் :-))

    ReplyDelete
  5. வவ்வாலு இருட்டுல பறந்துகிட்டே உளவு பார்க்குமோ:)

    நடாஜி ஏற்கனவே நம்ம தளத்தில் இரவுப்பறவைன்னு ஒருத்தரு வந்தாரு. பேரு எத்தனை பொருத்தமா இருக்கு பாத்தீயளா? வவ்வால்.


    ஹி..ஹி நமக்கும் பரிகாரம்,நரிகாரம் எல்லாம் இல்லை ஆனால் ஆன்மீக சுற்றுலா போனா கூட வேடிக்கைப்பார்க்க கிளம்பிடுவேன் :-))

    வேடிக்கை மட்டும் பாப்பீயளா? வேடிக்கை காட்டும் மனிதர்களையும் பாப்பீயளா?

    ReplyDelete
  6. கதவு வெச்ச பிறகாவது மல்லையா...? வங்கி கடனை அடைச்சிருவாரா..? பார்ப்போம்!

    திருப்பூர்ல கோவிலுக்கும்...!கட்சிக்கும் கொடுத்த காச சரியான சுத்திகரிப்பு கட்டியிருந்தா தொழில் நல்லாயிருந்திருக்குமே சார்!

    ReplyDelete
  7. திருப்பூர்ல கோவிலுக்கும்...!கட்சிக்கும் கொடுத்த காச சரியான சுத்திகரிப்பு கட்டியிருந்தா தொழில் நல்லாயிருந்திருக்குமே சார்!

    நூத்துல ஒரு வார்த்தை, போய்ச் சொல்லிப் பாருங்க், குடல உருவி விடுவாங்க, காரணம் புண்ணியம் தேடுகிறார்களாம். சுரேஷ் இடம் கேட்டுப் பாருங்க. தற்போதைய அமைச்சரால் ஒரு பள்ளிக்கூட ஆசிரியர் பட்ட பாடு?

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. அமிதாப் காயஸ்தா தந்தைக்கும் சீக்கிய அம்மாவுக்கும் பிறந்தவர். பெங்காலி பிராமிணை (ஜெயா)மணந்தவர்.
    அமிதாப்பின் தந்தை அவரை பள்ளியில் சேர்க்கும் போது குடும்ப பெயரான ராய் காயஸ்தா சாதி அடையாளமாக இருப்பதால் தனது புனைப்பெயரான பச்சனை இரண்டாவது பெயராக கொடுத்தாராம்.

    அவரது மருமகள் ஜஸ்வர்யா பந்ட் அல்லது ஷெட்டி எனும் சத்திரிய குலத்தவர்.

    விஜய் மல்லையா தீபிகா படுகோன் இருவரும் சரஸ்வதி பிராமணர்கள், ஆனால் வேறு உட்பிரிவுகளை சேர்ந்தவர்கள்.


    அமிதாப் வட இந்தியர் மீதி ஆட்கள் தென்னிந்தியர்கள். ஆகவே எப்படி ஒரே சாதியாக இருக்க இயலும் என்ற சந்தேகத்தில் இணையத்தில் தேடினேன். இந்தியர்கள் பிரபலங்களின் சாதியை தெரிந்துகொள்ளுவதில் காட்டும் ஆர்வம் அதிர்ச்சியடைய வைத்தது.

    ReplyDelete
  10. ஷெட்டி என்றாலும் ஐஸ்வர்யா ராய் காயஸ்தா வகையில் வர்ரவங்க,சரஸ்வதா பிராமின்ஸும் கயாஸ்தா தான், காயஸ்தா என்பது பெரிய இனக்குழு,அதுக்குள்ல பல வகை இருக்கு.

    வட இந்தியா தென் இந்தியான்னு இப்போ தான் இடம்பெயர்ந்து இருக்கணும்,காயஸ்தாக்கள் எல்லாம் கொங்கண் கடற்கரைப்பகுதி பூர்வீக வாசிகள்,நாகரதன் வழின்னு போட்டு இருப்பாங்களே, தமிழ்நாட்டில் செடியார்கலை நகரத்தார்னு சொல்வதும் இப்படி வரலாம்.

    சரஸ்வதா பிராமின்ஸ் பரசுராமராமல் பிராமின்ஸ் ஆக்கப்பட்ட சத்திரியர்கல், அப்படி ஆட்சியில் இருந்த வம்சாவளி மல்லையா அப்படினு வரலாறு போகுது.

    அமிதாப் தந்தை பேர் ஹர்ஷ்வன் ராய் ஶ்ரீவத்ச்வா ,பச்சன் என்பது செல்லப்பெயர், அவர் இங்கிலாந்துக்கு கேம்ப்ரிஜ் /ஆக்ஸ்போர்டுக்கு படிக்க போனப்போது தான் பச்சன் என சர் நேம் போட்டுக்கிட்டார்.

    லால்பகதூர் சாஸ்த்ரியும் ஒரு ஶ்ரீவத்சவா என்பதால் அவரிடம் வெளியுறவு துறை அதிகாரியா அமிதாப் தந்தை எளிதாக சேர்ந்துக்கொண்டார், அதுவே அமிதாப்புக்கு ,ராஜிவ் கூட நட்பாக வழி வகுத்தது.

    போதுமாங்க ஹிஸ்டரி :-))

    ReplyDelete
  11. வணக்கம் சகோ,

    நல்ல பதிவு.மதம் என்பதே பண்க்காரர்களின் இம்மை மறுமை வாழ்வின் மகிழ்ழ்சிக்காக என் ஆகிவிட்ட பின் அப்படிதான் இருக்கும்.
    இதில் மத குருக்களின் பங்குதன் அபாரம்!

    எதற்கும் பரிகாரம்,பூசை செய்து சரி கட்டலாம் என்பதும் அதற்கு எவ்வள்வு வேண்டுமானாலும் செலவு செய்ய தயாராக இருக்கும் கூட்டத்தை பார்த்தால் ஏன் இப்படி பணத்தை வீண் செலவு செய்கிறார்கள் என்று புரிய வில்லை.

    உலகின்அனைத்து பிரச்சினையையும் இயற்கை வளங்களை மனிதர்களின் பங்கீடு சார் பிரச்சினை என்பதை யாருக்கும் நினைக்க பிடிப்பது இல்லை.அப்படி பார்த்தால் ஒவ்வொருவரும் குற்றவாளி ஆவோம்.யாருக்கும் எதிலும் திருப்தி இல்லை. நுகர்வே இன்பம்,அதைக் கொடுக்கும் பொருளைத் தேடு என்பவர்களுக்கு மதவாதிகள் துணை புரிவதில் வியப்பில்லை.

    மனிதர்களுக்கு இடையேயான போட்டியில் இயற்கைக்கு மேம்பட்ட சக்தியை சில வழிகளில் தங்களுக்கு சாதகமாக செயல்பட வைக்க முடியும் என்பது நல்ல வியாபாரம் மட்டுமே!!!

    நன்றி

    ReplyDelete
  12. அருமையான பார்வை..பக்தி..பரிகாரம் பற்றி..காரசாரமாக.

    ReplyDelete
  13. அருமையான பார்வை..பக்தி..பரிகாரம் பற்றி..காரசாரமாக.

    ReplyDelete
  14. மறு விளக்கத்திற்கு நன்றி வவ்வாலு சார்!

    சரஸ்வதா பிராமணர்கள் சரஸ்வதி நதிக்கரையில் வசித்த பிராமணர்கள் இவர்களின் தலை சரஸ்வதி முனிவர். அந்த நதி அழிந்த போது அவர்களை தென்னிந்தியாவிற்கு அழைத்து வந்தவர் மேற்கிந்தியாவை ஆண்ட பரசுராமர் . இவர்கள் பிராமணராவே கருதப்படுகின்றனர். இது பல இணையதளங்கள் உள்ளது. இந்தக்கதை விரிவாக எழுதியுள்ள தளம் ஒன்று
    http://www.adyargopal.com/surnameshenoy

    காஸ்யதா குழுவினர் எமனின் அசிஸ்டன்டான சித்திரகுபதனின் வழிவந்தவராக கருதுகின்றனர். அவர்களில் சிலர் தாங்களை பிராமணர் என அழைத்தாலும் அதனை பிற பிராமணர் ஏற்கவில்லை. சூத்திரராகவே கருதப்படுகின்றனர்.விவேகானந்தர் ஒரு காஸ்யதாவே. இதனால் அவர் வேதம் படிக்க கூடாது, சந்நியாசி ஆக முடியாது என சென்னை பிராமணர் சொன்ன போது, நான் சூத்திரன் எனில் சென்னை பிராமணர்கள் parayas of parayas- (அயலர் என நினைக்கிறேன்) என சொன்னாராம். இது சதாசிவன் எழுதிய சோசியல் ஹிஸ்டரி ஆப் இந்தியா புத்தகத்திலிருந்து.(http://books.google.com/books?id=Be3PCvzf-BYC&pg=PA258#v=onepage&q&f=false) விவேகானந்தர் தன்னை சத்திரியர் என்றே கருதினா

    இவுங்க சொல்லுறதும் நீங்க சொல்லுற ஹிஸ்டரியும் வேற மாதிரி இருக்கு. வரவர வசதிக்கேத்தா மாதிரி எழுதறதுதான் வரலாறுன்னு ஆயிப்போச்சி! :-) எது சரியோ தெரியல.

    அமிதாப் அப்படி சொன்னதாலே அவரோட சர்நேம் பத்தி அவருக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்குதுன்னு நினைச்சி எழுதிவிட்டேன். அதுல வத்ஸவாவை விட்டுடேன், மன்னிக்கவும்.

    "He (அமிதாபின் அப்பா) married a Sikh. He was a Kayasth from UP (Uttar Pradesh). When the question came about of my admission in school and the teachers asked what is the surname, my father said he didn't want the surname to bear any kind of caste reflection and therefore his pen name became my surname.

    ReplyDelete
  15. மனிதர்களுக்கு இடையேயான போட்டியில் இயற்கைக்கு மேம்பட்ட சக்தியை சில வழிகளில் தங்களுக்கு சாதகமாக செயல்பட வைக்க முடியும் என்பது நல்ல வியாபாரம் மட்டுமே!!!

    எளிமையான புரிந்து கொள்ளக்கூடிய அற்புதமான விளக்கம் சார்வாகன், நன்றி,

    வருக தாராபுரத்தான்.

    நந்தவனத்தான், வவ்வாலு தொடங்கி வைக்க நீங்க ஒரு ஆராய்ச்சி சிலம்பமே ஆடிட்டீங்க, நன்றி,

    ReplyDelete
  16. மிக அலசலான அசத்தலான பதிவு

    ReplyDelete
  17. கொக்கே சுப்பரமணியம் கோவிலில் தான பாப்சின் எச்சை இலையில் உருண்டால் மற்ற மக்களுக்கு புண்ணியம் கிடைக்கும் என்ற சடங்கு உள்ளது.

    நந்தவனத்தான் மற்றும் வவ்வாலுவின் பின்னூட்டங்கள் மூலம் பல புதிய செய்திகளை அறிந்து கொண்டேன். ஐசுவரியா ராய் கொங்கன் என்று படித்திருக்கிறேன்.

    விஜய் மல்லையாவிற்காக திருமலையில் 1 மணி நேரம் பொதுமக்களை சாமி கும்பிட விடமா அடைச்சிருந்தாங்க. அப்ப அங்க அடைச்சு வைக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன் :). டெண்டுல்கர், கவாசுக்கர் உட்பட பலர் சரஸ்வதா பிராமணர்கள் ஆவர்.

    ReplyDelete
  18. தலைப்பு ஒண்ணு,உள்ளாற பதிவு ஒண்ணு....பதிவரும்,கமெண்ட்ஸ் போடுறவங்களும் என்னதாம்ப்பா சொல்லவரீங்க...தலையை சுத்தி மூக்கு தொடுறது இதுதானா...????ஒரே வயிறு எரிஞ்ச கேஸா இருக்குப்பா....

    ReplyDelete
  19. நந்தவனத்தார்,

    //இவுங்க சொல்லுறதும் நீங்க சொல்லுற ஹிஸ்டரியும் வேற மாதிரி இருக்கு. வரவர வசதிக்கேத்தா மாதிரி எழுதறதுதான் வரலாறுன்னு ஆயிப்போச்சி! :-) எது சரியோ தெரியல.
    //

    காயம் =உடம்பு, காயஸ்தா எனில் பிரம்மனின் உடலில் இருந்து தோன்றியவர்கள், பிரம்மாவிற்கு பசங்களே இல்லைனு மனசால நினைச்சு பிறந்த ஒரு பையன் பேரு சனத்சுஜாதர் என நினைக்கிறேன், அவர மானசபுத்திரர் என்பார்கள், நம்ம உடல் அழகோட பையன் வேணும்னு நினைச்சு பிறந்தவர்கள் சித்திரகுப்தன், குபேரன் எல்லாம் ,இதனால் இவர்கள் காயஸ்தா புத்திரர்கள் ,இவர்கள் வழித்தோன்றல்னு காயஸ்தா மக்கள் சொல்லிக்கிறாங்க, இது பெரிய இனக்குழு, அதில் சரஸ்வத் பிரமாணர், ஷெட்டி எல்லாம் சேர்த்து 9 பிரிவு இருக்குன்னு ஒரு வரலாறு படிச்சேன்.

    நீங்க எல்லாவற்றையும் தனித்தனியா படிச்சு இருக்கிங்க,அதை இணைக்கவில்லை.

    மொத்தமாக சொன்னால் காயஸ்தா சர் நேம் வச்சு அவங்க அதில் என்ன வகைனு கண்டுப்பிடிப்பாங்க அதனால் தான் அமிதாபின் சர் நேம் என்னனு கேட்டு இருக்காங்க.

    ஶ்ரீவத்ஸ்வா என்பது அதில் ஒரு உட்பிரிவு(நாரயணனின் மச்சம் பேரு தான் ஶ்ரீவத்சம், எங்கேயே எங்கே இழுக்கிறாங்கப்பா) ,ஐயங்கார் வகை அவங்க. அதை எல்லாம் கண்டுப்பிடிக்க கூடாதுன்னு தான் அமிதாப் தந்தை சர் நேம் ஐ மாற்றினார்னு எப்போவோ படிச்சதை இப்போ சொல்லிகிட்டு இருக்கேன்.


    புராணம் இப்படியாக போகுது, ஏரியாவுக்கு கொஞ்சம் மாத்திப்பது வழக்கம் தானே.அப்புறம் ஆளுக்கு ஒரு உயர்வு சொல்ல பரசுராமர் ,அது இதுன்னு மாத்தி மாத்தி சொல்லிக்கிறது உண்டு தானே.

    கொக்கே சுப்ரமணியர் தான் எல்லாருக்கும் குல தெய்வம், அதனால் மல்லையா தன்னோட கஷ்டம் தீர குலதெய்வத்துக்கு காணிக்கை செலுத்துறார்.நம்ம ஊரிலும் குலதெய்வத்துக்கு காணிக்கை என்பது உண்டு தானே.

    இந்த இடத்தில சுப்ரமணியர் னா சைவம் ஆச்சேன்னு வரும், ஆனல் அவர்களை பொறுத்தவரையில் அது நாகக்கடவுள். காயஸ்த்தா எல்லாம் நாக வம்சம்னு சொல்லிப்பாங்க.

    ஏகப்பட்ட குழப்பங்கள் நிறைந்த புராணமே இது, அவங்க வசதிக்கு ஒன்றை உயர்த்தி சொல்லிக்க வேண்டியது தான்.


    பதிவை விட்டு எங்கோ போயிட்டோம், ஜோதிஜி மண்டைக்காயாப்போறார், ஹி...ஹி நான் பொதுவா சில விஷயங்கள் பகிரலாம்னு சொன்னது தான் ,திட்டாதிங்க.

    ----------

    குறும்பன் ,

    ஆமாம் அப்படி ஒரு நிகழ்வு நடக்குதாம், அப்படி உருண்டா பாவம் போயிடுமாம், மேலும் தோல்வியாதி, தொழு நோய் இருந்தால் குணமாயிடும்னு ஒரு ஐதீகம் சொல்றாங்க.

    கொஞ்சநாள் முன்னர் கூட இதனை கண்டித்து செய்தி வந்துச்சு, எல்லாம் மூட நம்பிக்கை தான், சொன்னால் யார் கேட்பாங்க.

    நான் கோயிலுக்கு போனால் அதை சுத்திப்பார்த்துட்டு புளியோதரை ,பொங்கல்னு சாப்பிட்டு வரது மட்டும் தான் என்னை பொறுத்தவை கோயில் ஒரு உணவகம் :-))

    சும்மா சொல்லக்கூடாது கோயில் புளியோதரை,சர்க்கரை பொங்கல் எல்லாம் செம டேஸ்ட் ,அதுக்கும் ஒருக்காரணம் சொல்லுறாங்க, கோயில் மடப்பள்ளி பாத்திரங்களை கழுவவே மாட்டாங்களாம், கழுவினா போல சுத்தமாக தொடைச்சுடுவாங்களாம், இதனால் சுவை கூடுதுன்னு சொல்லுறாங்க, உண்மை தெரிஞ்சவங்க சொல்லுங்க.

    கொத்தனார்கள் அவங்க சிமெண்ட் கலக்கும் "பாண்டு" எனப்படும் பாத்திரத்தை கழுவ மாட்டாங்க,எப்போதும் சிமெண்ட் ஒட்டிக்கிட்டே இருக்கணுமாம்,கழுவினால் வேலை கிடைக்காதாம் :-))


    எப்படிலாம் செண்டிமென்ட் :-))

    ReplyDelete
  20. குறும்பன்,

    //டெண்டுல்கர், கவாசுக்கர் உட்பட பலர் சரஸ்வதா பிராமணர்கள் ஆவர்//

    இதெல்லாம் அவங்க அந்த ஊரை சேர்ந்தவங்கன்னு சொல்லும் பெயர்,

    காவா ,என்ற கிராமம் கோவாபக்கம் இருக்கு அந்த கிராமத்தினர்னு அடையாளப்படுத்த கவாஸ்கர், அதே போல டெண்டுல்கர் என்பதும் ஊரோட சேர்த்த சொல்லுரதுன்னு மும்பைகர் ஒருத்தர் சொன்னார்.மேலும் அவங்க எல்லாம் ஷாஸ்திரினு சர் நேரம் வச்சிருந்து பின்னாளில் மாத்திக்கொண்டவர்கள்.

    இந்திய கிரிக்கெட்டர்களில் பலப்பேரு இப்படியானவங்க தான், சேவாக் என்பதும் ஒரு வகை பிராம்மன சர் நேம் தான்.

    பிராமணர்களில் கோவில் உழவாரப்பணி செய்பவர்களாம், அவங்க பூஜை மட்டும் செய்ய அனுமதிக்க மாட்டார்களாம். சேவகம்=சேவக்.

    கவுதம் காம்பீர் ,காம்பீர் என்பதும் காயஸ்தா பிராமின் சர் நேம் .


    ஹி...ஹி அப்படிப்பார்த்தா டோனி தவிர எல்லா கிரிக்கெட்டர்ஸ் அவாளா தான் இருக்காங்கப்பா :-))

    சென்னையில் தமிழ்நாடு ஜூனியர் கிரிக்கெட் அணிக்கு ஆள் எடுக்கும் போது , பசங்களை கூப்பிட்டு தோள்மேல கையை வச்சு அமுக்கி ,நெருடிப்பார்ப்பாங்களாம் , எல்லாம் கயிறு இருக்கான்னு பார்க்கவாம், இது நேரடி அனுபவஸ்தர் சொன்னது.

    நல்லா இருக்குப்பா நாட்டு நடப்பு :-))

    ரொம்ப காண்டெக்ஸ்ட் விட்டு வெளியே போயிட்டேன் போல ,எல்லாம் குறும்பன் செஞ்ச வேலை :-))

    ReplyDelete
  21. 2006ல் டெண்டூல்கர் வந்துபோன பொறவுதான் இக்கோயில் வடக்கில் பிரபலமாகி பல பிரபலங்கள் சர்பதோசம் கழிக்க வர ஆரம்பித்துள்ளார்கள், இங்குள்ள 3 கதவுகளில் ஒன்றினை 12 வருடத்திற்கு முன்பே தங்கமாக்கிவிட்டாரம் மல்லைய்யா. இப்போது ஒண்ணு மட்டும் பாக்கியுள்ளது. கூட்டி கழித்து பார்த்தால் எல்லாம் சரிதான்.
    வவ்வால், குறும்பன், ஜோதிஜி அனைவருக்கும் நன்றி!

    ReplyDelete
  22. அருமையான பகிர்வு...

    பணக்காரன் எல்லாம் கோவில்களுக்கு மட்டும்தான் செய்கிறார்கள்.

    ReplyDelete
  23. வவ்வாலு ரா விலா!

    ஆகா மூணு அர்த்தம் வருதே:)

    ReplyDelete
  24. ****இது அம்பானி முதல் திருப்பூரில் இருக்கும் ஏற்றுமதி முதலாளிகள் வரைக்கும் இப்படித்தான் கோவிலில் கொண்டு போய் கொட்டுகிறார்கள். ஆனால் தங்கள் நிறுவனம் வளர காரணமாக இருக்கும் எவரையும் கண்டு கொள்ளக்கூட தயாராய் இல்லை.***

    "நம்ம பகவானை நன்னா கவனிச்சுட்டா, பகவான் எல்லாரையும் கவனிச்சுக்குவா" னு தர்க்க சாஸ்திரம் சொல்லுதாம்!

    ***ஆனாலும் இன்று ஜெயலலிதாவோ கலைஞருக்கு பாடம் எடுக்கக்கூடிய தகுதி வாய்நத நபராக மாறி அசராமல் கோர்டு வாசலில் சிக்ஸராக விளாசித் தள்ளிக் கொண்டேயிருக்கிறார், சாட்சிகள் ஓடி ஒளிகின்றார்கள், பிறழ் சாட்சியாக மாறுகிறார்கள், உச்சகட்டமாக அரசு வழக்குரைஞரே என்னை ஆளை விட்டால் போதும் என்று ஆட்டத்தில் இருந்து ஒதுங்கிக் கொள்ளும் காட்சியெல்லாம் அரங்கேறிக் கொண்டுருக்கிறது, வாய்தா மேல் வாய்தா வாங்கி வாய்தா ராணியாகிக் கொண்டுருக்கிறார், ஆனால் இன்று வரையிலும் அவர் செய்யும் பூஜை புனஸ்காரங்கள் குறைந்தபாடில்லை,****

    இதுகூட "பகவான்" உங்களை ஆத்தா புகழ்பாட வச்சுட்டார் போலதான் தோனுது. செய்த யாகம் எல்லாமே பயனில்லாமல் போயிடுமா என்ன??? :)))

    ReplyDelete
  25. இத்தாலி தெண்டம் மண்டையை போட ஏதாவது
    யாகம் செய்யனுமா?எவ்வளவு காசு ஆனாலும்
    பரவாயில்லை!
    k.pathi
    pathiplans@sify.com
    karaikal

    ReplyDelete
  26. இதுகூட "பகவான்" உங்களை ஆத்தா புகழ்பாட வச்சுட்டார் போலதான் தோனுது. செய்த யாகம் எல்லாமே பயனில்லாமல் போயிடுமா என்ன??? :)))

    வருண் நாங்க போட்ட பந்தை எங்களுக்கே போட்டு? என்ன இது விளையாட்டு, இதுவும் பகவான் வேலையா இருக்குமோ?

    வவ்வால்

    ஒரு பதிவு அளவுக்கு ரொம்ப நாளைக்குப் பிறகு விளாசி தள்ளீட்டீங்க, நன்றி நந்தவனத்தான், எனக்கே பல விசயங்களை புரிந்து கொள்ள முடிந்தது,

    ReplyDelete
  27. //சும்மா சொல்லக்கூடாது கோயில் புளியோதரை,சர்க்கரை பொங்கல் எல்லாம் செம டேஸ்ட் ,அதுக்கும் ஒருக்காரணம் சொல்லுறாங்க, கோயில் மடப்பள்ளி பாத்திரங்களை கழுவவே மாட்டாங்களாம், கழுவினா போல சுத்தமாக தொடைச்சுடுவாங்களாம், இதனால் சுவை கூடுதுன்னு சொல்லுறாங்க, உண்மை தெரிஞ்சவங்க சொல்லுங்க.
    //

    அப்படியே சாப்பாடு செய்யும்போது அவாளாண்ட வேர்வையும் கொஞ்சம் சேர்த்துப்பா! அப்பத்தான் நன்னா பேஷா இருக்கும்.

    ReplyDelete
  28. ஜோதிஜி,,

    என்ன புதுசா சொல்லுறிங்க ,நாம திட்டம் போட்டா விளாசுறது , தெரிஞ்ச மேட்டரை யாராவது தொட்டுக்காட்டினா நாம தொடர்வது தானே... நான் பாட்டுக்கு ஓட்டமா ஓடுவேன்,அப்புறம் நீங்க சண்டைக்கு வந்திடக்கூடாதேன்னு தான் கொஞ்சமா ஓடுறது, ராசநடராசர் பதிவிலே ரிலே ரேஸ்,மராத்தான் எல்லாம் ஓடியிருக்கோம் :-))

    ----------

    ராசநடராசர் ராவில வரதுன்ன பகலில் வரது தானே

    ...ஹி...ஹி ஞான் மலையாளம் கொறைச்சு மனசிலாயி :-))

    ----------

    ஓய் குட்டிப்பிசாசு,

    ஏன்யா இந்த கொல வெறி...ஏதோ சாப்பிட கிடைக்குதே அந்த இடத்திலன்னு சாப்பிட்டால் ,புளியோதரை சாப்பிட்டவன் வயித்தில புளியக்கரைக்கிறீர் :-))

    டிவிடி சைசில் பெருசா மெலிசா வடை சுட்டு வச்சிருக்காங்க அதாவது சாப்பிடலாமா?

    ReplyDelete
  29. அருமையான பகிர்வு...

    ReplyDelete
  30. ஏன்யா இந்த கொல வெறி...ஏதோ சாப்பிட கிடைக்குதே அந்த இடத்திலன்னு சாப்பிட்டால் ,புளியோதரை சாப்பிட்டவன் வயித்தில புளியக்கரைக்கிறீர் :-))

    வவ்வுஜி ( புதுப்பேரு நல்லாயிருக்கா?)

    கோவிலில் தயாராகும் பிரசாதங்களை ஐயர்களை வைத்து கிண்டலடிக்கலாம். ஆனால் என்னுடைய சிறுவயது முதல் இன்று வரை நான் சென்று வந்துள்ள அத்தனை நட்சத்திர விடுதிகள் வரைக்கும் உண்ட எந்த உணவும் கோவிலில் வாங்கி சாப்பிட்ட சுண்டல், புளியோதரை, சர்க்கரைப்பொங்கல், லட்டு, வெண்பொங்கல், இத்யாதி இத்யாதி போன்ற எதுவும் அதன் சுவையுடன் எதையும் ஒப்பிடவே முடியாது,

    இப்போது எப்படி மாறியிருக்கிறது என்பது தெரியல. ஒரே காரணம் (எனக்கும் கொஞ்சம் சமையல் தெரியும் என்பதால்) அதன் பக்குவத்தை அவர்கள் இயல்பானதாக அல்லது பழகிப் போன கைகளுக்கு சர்வசாதரணமாக வந்து விடும், மற்படி அவர்களின் வேர்வை போன்ற சமாச்சாரங்கள் எல்லா உணவங்களின் உள்ளே சென்று பார்த்தாலும் மூக்கை பிடித்துக் கொண்டே தான் வரும் அளவிற்கு இருக்கும்.

    எங்க பாட்டி சமைக்கும் போது பக்கத்தில் போக முடியாது. சென்றாலும் அவர் செய்யும் விதத்தைப் பார்த்தால் (கையை வைத்து உழப்பிக் கொண்டு) அத்தனை கோபமாக இருக்கும். ஆனால் அவர் வைத்துக் கொடுக்கும் ரசம் போல இதுவரை எங்கேயும் சாப்பிட்டதே இல்லை. இது சமையல் சாத்திரத்தின் விதி போலும்.

    ReplyDelete
  31. பக்தி என்பதே வியாபார் உத்தி என்பதை நாம் அறிவோம் !!!

    பக்தி ஒரு அதிகாரத்தை கைப்பற்றும் ஆயுதம், அதன் மூலம் பணம், பொருள், பெண், பொன், நிலம் என அனைத்தையும் பெற முடியும் என்பதை மத நிறுவனர்கள் நன்கு உணர்வார்கள் ...

    ஆகவே இவை ஒன்றுக்கு ஒன்று முழுமுகமாகவோ, மறைமுகமாகவோ தாங்கிப் பிடித்துக் கொண்டே இருப்பவை !!!

    மதுவை எதிர்ப்பவர்கள் கூட திரைமறைவில் மது உற்பத்தி செய்யும் தொழில் பங்காளிகளாக இருப்பார்கள்.

    பார்ப்பன வர்க்கம் மட்டுமல்ல அதனோடு ஒட்டிக் கொண்ட உயர் வர்க்கங்கள் தான் இன்றைய இந்தியாவின் காசுக் கொட்டும் அனைத்து துறைகளிலும் முன்னணியில் இருக்கின்றார்கள் என்பதை நாம் நன்கு அவதானிக்கலாம் ..

    வவ்வால் மிகச் சரியான ஒரு விளக்கத்தைக் கொடுத்துள்ளார். மேற்கு கருநாடகத்தில் உள்ள செட்டிகள் ( ஷெட்டி ), பந்துக்கள், ரோமன் கத்தோலிக்க பார்ப்பனர்கள், மாப்பிள்ளைமார்கள், சிரியன் கத்தோலிக்க பார்ப்பனர்கள், என மதங்கள் கடந்து உயர்சாதியினர் தமகு ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளனர்.

    இந்த காயஸ்தாக்களும் அப்படிப் பட்டவர்களே. பிராமணரோடு நெருங்கிய தொடர்புகள் உடையவர்கள் ... முஸ்லிம்களில் கூட காயஸ்தாக்கள் உள்ளனர். பல ஜமீன்தார்கள் கூட காயஸ்தா சாதிகளைச் சேர்ந்தவர்களே !!!

    அவர்கள் இந்தோ-ஐரோப்பிய இனப் பிரிவோடு நன்கு கலந்துவிட்டு இருப்பதை அவர்களின் ஜெனடிக் மற்றும் இன அடிப்படையிலான தோற்றங்கள் நிரூபிக்கும் .... !!!

    ReplyDelete
  32. ட்ராபிக் கான்ஸ்டபிள்August 26, 2012 at 10:49 PM

    //டிவிடி சைசில் பெருசா மெலிசா வடை சுட்டு வச்சிருக்காங்க அதாவது சாப்பிடலாமா?//

    அது மத்தூர் வடை. எதாயிருந்தா என்னங்க செய்யறவாளும் செய்முறையும் ஒண்ணுதானே?

    ReplyDelete
  33. ஜோதிஜி,

    //வவ்வுஜி ( புதுப்பேரு நல்லாயிருக்கா?)//

    வவ்வுஜி, வடபாஜி ,பாவ்பாஜி என்று கூப்பிட்டாலும் சரி தான் இல்லை வைரமுத்து மாதிரி ஏ...மானிடா என எட்டுக்கட்டையில் அழைத்தாலும் சரி, பெயரில் என்ன இருக்கு , பேசுவதில் தான் இருக்கு :-))


    சுவைக்கு நீங்க சொன்னதே , நானும் அப்படி நினைத்து தான் சாப்பிடுறது,பாய்க்கடையில் பிரியாணி சாப்பிடுவதில்லையா ,அதே போல தான் பிரம்மணாள் கபேவும் :-))

    சாப்பாட்டுல மதம் பார்த்தால் மண்ணைத்தான் திங்கணும் :-))

    பாகிஸ்தானின் பெரும் தண்ணீர் தேவையை தீர்ப்பது சிந்து என்கிர இந்து நதி தான் பேரைப்பார்த்து தண்ணீர் வேண்டாம்னு பாகிஸ்தான் சொன்னால் காய வேண்டியது தான், இதுக்கே தண்ணீர் பகிர்வுக்கு அப்போ அப்பொ பேச்சு வார்த்தைகள் வேற நடக்கும்.

    பாக்-இந்தியா இடையே கூட தண்ணீர் சண்டைப்பெருசா இல்லை,ஆனால் கர்நாடகா தண்ணீர் பிரச்சினை பெரும் பிரச்சினை :-))

    --------

    இக்பால் ,

    நன்றி!

    பெரும் ஜமீந்தார்கள் நிறையப்பேரு காயஸ்தா தான் ஹெக்டே எனப்படுவர்களும் காயஸ்தா வகைத்தான் அவங்க தான் கர்நாடாகவில் முக்கிய அதிகாரங்களில் இருக்காங்க,

    கேரளாவில் நம்பூதிர்களும் காயஸ்தா வகைனு கேள்வி. அவர்களும் பரசுராமன் மூலம் பிராம்மனர்கள் ஆனதா ஒருக்கதை.

    மாப்ளா என்பவர்கள் யூத வம்சாவழியினர், கிருஸ்து பொறக்கும் முன்னரே கி.மு ரெண்டிலே சில யூதர்கள் கேரளா வந்து வியாபரம் செய்து பின்னர் அப்படியே கலப்பினம் உருவாக்கினதா வரலாறு சொல்கிறது.

    நான் பெரும்பாலும் வரலாறு என்ற அடிப்படையிலே மதம், இனக்குழுவின் அடிப்படைகளை படிப்பது வழக்கம், நல்லா சுவாரசியமாக இருக்கும் அது போன்ற நூல்களும், செய்திகளும் நாம நினைக்காதா இடங்களில் எல்லாம் தொடர்பு இருக்கும்.

    அடோல்ப் ஹிட்லர் ஆர்யன் என சொல்லிக்கொள்வதன் அடிப்படையில் படித்தால் ஆர்யன் எங்கே இருந்து வந்தார்கள் என்பது ஓரளவு புரியும்,ஆனால் அதனை இங்கே இல்லைனு சொல்வார்கள்.

    அடோல்ப் என்பது அடல் என்ற சமஸ்கிருத சொல்லாம், அடல் என்றால் சிங்கம் அல்லது வலிமையான எனப்பொருள், அடல் பிகாரி வாஜ்பேயி ,தொடர்புப்படுத்திக்கொள்ளவும்.

    பீகாரி என்றால் பீகாரை தேர்ந்தவர்.

    ஆர்யன்ஸ் எங்கோ ஸ்காண்டிநேவிய நாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்திருக்க வேண்டும்.

    ----------

    டிராபிக்,

    மத்தூர் வடையா , அப்போ மத்வா வடைனு சொல்லுங்க, மத்தூரோ,சித்துரோ நல்லா இருந்தா சாப்பிட வேண்டியது தான் :-))

    ReplyDelete
  34. //உலகம் நகர்கின்றது, மதங்கள் வெவ்வேறாக இருக்கலாம், பரிகாரம் என்பது பாவ மன்னிப்பாக மாறுகின்றது, அவ்வளவுதான், இன்று இறை பக்தி என்பதே ஒரு ஃபேஷனாகி விட்டது,//
    - FaceSun !
    வாழ்க வளமுடன் !

    ReplyDelete
  35. பணக்காரன் முதல் ஏழைப்பங்காளன் வரை இந்த பரிகாரத்திற்கு ஆளாகாதவர்களே கிடையாது. தற்போதைய தனது நிலையை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் தொடங்கி எப்படியாவது தனது நிலையை மேலும் உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பது வரை இந்த பரிகாரகங்கள் விரிகின்றன.

    இத்தகைய பரிகாரத் தேடல்களிலிருந்து மக்களை விடுவிப்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால் ஏழைகளை இதிலிருந்து விடுவித்தால் மட்டுமே மேட்டுக்குடியினரின் பரிகாரங்களுக்கான பின்னணியைப் புரிந்து கொள்ள முடியும்.

    ReplyDelete
  36. இந்து என்பது வாழிடத்தின் பொருட்டு வந்த பெயர் .அவன் கடவுளை நம்பலாம் ,நம்பாமலும் வாழலாம் ஆனால் இயற்கைகு எல்லாம் மதம்போல கட்டுப்பட்டவன் .செய்த வினை களுக்கு பரிகாரம் அதை அனுபவித்து அல்லது தவறி அறியாத போது செய்த செயலுக்கு மாற்று செயல் செய்து பரிகாரம் தேடிக் கொள்வதே சரி .அதிலிருந்து தப்பிக்க அல்ல பரிகாரம் அந்த வினையை எதிர்கொள்ளும் தைரியம் வளர்த்துக் கொள்வதே யாகும் .யாகம் செய்வது உலகுக்கு நல்லது அதன் நோக்கம் நிறைவேறும் என்பதெல்லாம்- ஒரு குறிப்பிட்ட பொருளை கடையில் நீங்கள் கேட்டால் அதன் மிது வைத்து இருக்கும் நம் ஆசைக்கும் ஆரவத்திர்க்கும் காரணமாக வேறு ஒரு விலை வைப்பதுப் போல மனிதன் ஆசையை நிறைவேற்ற யாகம் செய்வதாக ஆசைக் காட்டி விட்டார்கள் .பாரதப் போர் முடிந்தவுடன் நல்லதுதான் செய்தேன் என்று கிருஷ்ணன் போயிருக்கலாம் ஆனால் நல்லது செய்தாலும் அதை நிறவேற்றும் வழி தந்திரம் என்பதால் கடைசியில் யார் அம்பில் கிருஷ்ணன் கொல்லப்பட்டான் என்பதை ஏன் என்பதை அறிந்து கொள்ளூம் போது புரியும் .வினை விதைக்கப் பட்டால் அறுவடைக்கு காத்து இருக்க வேண்டிய கட்டாயத்தை.

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.