அஸ்திவாரம்

Saturday, August 27, 2011

காசே தான் கடவுளடா



ஒவ்வொரு கால கட்டத்தையும் இதிகாசங்கள் சொல்லும் கதைகள் மூலம் நாம் பல யுகமாக பிரித்து எடுத்துக் கொள்கின்றோம். மனித சமூகம் நாகரிகத்தை எட்டிப் பிடித்து வளரத் தொடங்கியபோதும் சில பிரிவுகள் இயற்கையாகவே உருவாகத் தொடங்கியது. 

தொடக்கத்தில் குழுக்களாக வாழ்ந்த மனித கூட்டம் இனக்குழுக்களாக மாறிய போது ஒவ்வொரு குழுக்களுக்குள் உருவான மோதலே அடிமைகளின் தொடக்க காலமாக இருந்திருக்க வேண்டும். வலிமையுள்ளவர்கள் வலிமையற்றவர்களை அடக்கியாள முற்பட்ட போது தோற்றுப் போனவர்களை தங்களின் அடிமைகளாக பயன்படுத்தியிருக்க  வேண்டும். 

இந்த அடிமைகள் மூலம் உருவானது தான் நிலப்புரபுத்துவ யுகம்.   எவரிடம் அதிக வலிமை இருக்கின்றதோ அவர்களுக்கு அதிக அடிமைகள் இருக்கும்படி சூழ்நிலை உருவாகத் தொடங்கியது.  இறுதியாக இன்று வரையிலும் நிலைத்து இருப்பது முதலாளித்துவ யுகம்.

மனித வரலாற்றின் தொடக்கத்தில் பண்டமாற்று முறையே வழக்கத்தில் இருந்தது.  தனக்குத் தேவைப்படும் பொருளை வாங்குவதற்காக தன்னிடம் உள்ள பொருளைக் கொடுத்து தனக்குத் தேவையானதை வாங்கிக் கொண்டனர்.

ஆனால் பணம் என்ற வஸ்து புழக்கத்தில் வர நாகரிகம் என்ற பெயரில் ஒவ்வொரு தனி மனிதனின் செயல்பாடுகளும் மாறத் தொடங்கியது.

கிமு ஆறாம் நூற்றாண்டு காலத்திற்குப் பிறகு நாகரிக உலகத்திற்கு ஐரோப்பியர்களே வழிகாட்டியாய் திகழ்ந்தனர். அதுவரையிலும் எல்லாவகையிலும் முன்னேற்றமடைந்து இருந்த கிரேக்கர்கள், ஈரானியர்கள், இந்தியர்களும் பின்னேற ஐரோப்பியர்கள் பல வகையிலும் முன்னேறத் தொடங்கினர். ஐரோப்பியர்கள் மற்ற நாடுகளை வென்று தங்களை ஆட்சியாளர்களாக மாற்றிக் கொள்ளாதவரைக்கும் இந்த அடிமைச் சமூகம் பெரிய அளவில் இருந்ததாக தெரியவில்லை.  விஞ்ஞான வளர்ச்சிகளை முறைப்படி பயன்படுத்தி தங்களின் வளர்ச்சியை விரைவாக்கிக் கொண்ட ஐரோப்பியர்களுக்கு முன்னதாக இந்தோ ஐரோப்பிய இனங்கள் ( இன்றைய இந்திய ஈரானிய, ஐரோப்பிய இனங்களின் முன்னோர்கள்)  இந்தோ ஆரியர்கள் சிந்து பள்ளத்தாக்கை கடந்து வந்து வந்து (கிமு 1800) அங்கிருந்த நாகரிக இனங்களை வெற்றி கொண்டு அடிமையாக்கினர்.

இதைப் போலவே கிமு 2000 லிருந்து 1500 வருடங்களுக்கிடையே கிரேக்கத்திலும் இந்த அடிமை சமூகம் உருவானது. தொடக்கத்தில் உருவான ஒவ்வொரு போர்களுக்குப் பின்னாலும் பிடிபடும் கைதிகளை கொன்று விடும் பழக்கமே இருந்தது. இதிலும் ஒரு கொடுமையுண்டு.  தோற்ற கைதிகளின் உடல் உறுப்புகளை சிதைத்து, காது, மூக்கு அறுத்தும், உடலிலிருந்து இதயத்தை எடுத்து பயங்கர சித்ரவதைகள் செய்து கொல்லும் வழக்கம் இருந்தது. 


எகிப்தில் போரில் பிடிப்பட்டவர்களை கில்டு என்றழைக்கப்பட்டனர். ஆனால் இவர்களை கொல்லாமல் தங்கள் வேலைகளுக்காக மாற்றிக் கொள்ளத் தொடங்க இவர்களின் பெயர் லிவிங் கில்டு என்று அழைக்கப்பட்டனர். ஆனால் கைதிகளை வெற்றி பெற்றவர்கள் அடிமைகளாக மாற்றிக் கொள்ளத் தொடங்க பலவிதங்களிலும் உபயோகமாய் இருந்தது. இந்த காலகட்டங்களில் விவசாயத்தைப் போலவே பல்வேறு தொழில்களும், எந்திரங்களின் உதவியால் வளரத் தொடங்கியிருந்தது. இன்றைய அமெரிக்காவின் தொடக்க வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த பருத்தியே முக்கிய காரணமாகும்.

இந்த பருத்தி விளைச்சலுக்கு முக்கிய பங்காற்றியவர்கள் அத்தனை பேர்களும் அடிமைகளே. அன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு தொழிலுக்கும் ஆட்கள் பற்றாக்குறைய என்பது மிகப் பெரிய சவாலாக இருந்தது.  இது போன்ற சூழ்நிலையில் பிடிப்பட்ட கைதிகளை அடிமைகளாக மாற்றி வேலை வாங்க காலணி ஆதிகக நாடுகளின் பொருள் உற்பத்தி பலமடங்கு பெருகத் தொடங்கியது. அடிமைமுறை இல்லாதபட்சத்தில் ரோமப் பேரரசோ, கிரேக்கப் பேரரசோ உருவாகியிருக்க வாய்ப்பில்லை. இத்துடன் இந்த இரண்டு பேரரசுகளின் அடிப்படையில்லாமல் புதிய ஐரோப்பாவும் உருவாகியிருக்காது.

அடிமைகளின் மூலம் உற்பத்தி அதிகமாகத் தொடங்கியது.  உற்பத்தி மூலம் குறிப்பிட்ட சில பிரிவினர் மட்டும் சமூகத்தில் மிக விரைவாக உயர முடிந்தது. அவர்களின் ஆளுமை சமூகத்தில் பல விதங்களிலும் பாதிக்கத் தொடங்கியது. பொருளாதாரத்தில் வலிமையானவர்கள் உருவாக்குவதே சட்டம் என்ற கொள்கை இயல்பாக உருவாகத் தொடங்கியது.  இதுவே தனி மனிதன் மூலம் கடல் கடந்த தேசம் வரைக்குமாய் பரவத் தொடங்கியது.

ஆனால் விளைந்த விளைபொருட்களோ மற்ற உற்பத்திகள் எதுவும் இந்த அடிமைகளுக்குச் சொந்தமில்லை. 

இவர்கள் உயிர் வாழ்வதற்கு தேவையான என்கிற அளவில் உணவு அளிக்கப்பட்டது.  ஆரோக்கியமில்லாதவர்கள், உழைக்க லாயக்கில்லாத  கைதிகளை கொன்று விடுவதும், தீர்க்க முடியாத நோயாளிகளை நிராதரவாய் விட்டுவிடுவதும் இயல்பான ஒன்றாக இருந்தது.

நாகரிகத்தின் தொட்டில் என்றழைக்கப்படுகின்ற கிரேக்கம், ரோம், பாரசீகத்தில் போரில் பிடிபட்ட கைதிகளை அடிமையாக்கி தங்களின் தொழிற்கூடங்களில் பயன்படுத்தத் தொடங்கினர்.

இதன் காரணமாகவே இந்த நாடுகளின் வளர்ச்சி அபரிமிதமாக உயரத் தொடங்கியது.  அடிமைகளுக்கென்று சந்தைகளும் உருவாகி கடைச் சரக்கு போலவே பாவிக்கப்பட்டனர்.  ஆனால் ரோமபுரியில் தான் முதன் முதலாக அடிமைகளை விவசாயத்தில் பயன்படுத்தத் தொடங்கினர்.  இவர்கள் தான் உடல் வலிமையுள்ள அடிமைகளுக்கு போர் பயிற்சி கொடுத்து அவர்களை கிளாடியேட்டர்ஸ் என்றழைக்கப்பட்டனர். மக்களின் பொழுது போக்குக்காக இந்த கிளாடியேட்டர்கள் மற்றவர்களுடன் அல்லது மிருகங்களுடன் போரிட்டு தங்கள் உடல் வலிமைகளை காட்டினர்.

ஆனால் அடிமை வரலாற்றில் ரோமபுரி நாட்டைப் போல வேறெந்த நாடுகளும் மிகக் கொடுரமாக நடத்தியதில்லை. அந்த அளவிற்கு அடிமைகளை சித்ரவதை செய்து வேலை வாங்குவதில் ரோமபுரி புதிய யுக்திகளை கடைபிடித்து..

அடிமைகளை ஒவ்வொரு நாடும் அவரவருக்கு உகந்தவாறு அடையாளமிட்டு அழைக்கத் தொடங்கினர்.   மொத்தத்தில் அடிமைகள் என்பவர்கள் விலங்குகளைப் போன்று உழைக்கப் பிறந்தவர்கள். மனிதர்களாக இருந்தாலும் இவர்களை அப்படித்தான் நடத்தினர். எந்த நாட்டிலிருந்து இருந்து கொண்டு வரப்பட்டனரோ அந்த நாட்டின் பெயரை வைத்து அழைத்தனர். ரோம்புரியில் இவர்களுக்கென்று தனித்தன்மையாக அந்தந்த அடிமைகளின் உடம்பில் அடையாளக் குறியாக சூடு போட்டு அடையாளப்படுத்திக் கொண்டு வேலை வாங்கினர். பாபிலோனில் தங்களிடமுள்ள ஒவ்வொரு அடிமைகளின் முடியை வினோதமாக கத்தரித்து அடையாளப்படுத்தியிருந்தனர்.

அடிமைகள் தங்கள் சொத்துக்கள் போலவே கருதியிருந்ததால் இதற்கென்று தனியாக சட்டம் கூட இருந்தது.  மெசபொடோமியாவிற்கு அருகே கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் இருந்து அப்போது ஆண்ட ஹெமுமுராபி என்ற மன்னன் பாபிலோன் மக்களுக்கு இந்த அடிமைகளுக்கு சட்டமியற்றியிருந்தார்.

அடிமைகளை திருடுபவன் கொல்லப்படுவான்
ஓடிப்போன அடிமையை மற்றவர்கள் வைத்திருக்கக்கூடாது.  அவ்வாறு செய்பவர்களும் கொல்லப்படுவார்கள்.
அடிமையின் அடையாளக்குறியை மாற்றக்கூடாது.
மற்றவர்களின் அடிமையை கொன்றவன் அதற்குப் பதிலாக தங்களின் அடிமையை கொடுத்து விட வேண்டும்.
கடன்பட்டவர்கள் தங்களின் மனைவி மகன் அல்லது மகளை கடன் பட்டவருக்கு மூன்று ஆண்டுகள் அடிமையாக கொடுத்து விட வேண்டும்.

இந்தியாவில் இருந்த ஆதி நாகரிகத்தில் அடிமைகள் எதுவும் இருந்ததாக தெரியவில்லை.  ஆனால் நாளாவட்டத்தில் சாதி என்ற அமைப்பும், அதனால் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு நிகழ்வுகளும் காலப்போக்கில் இந்தியாவில் ஒடுக்கப்பட்டவர்களை இந்த அடிமைகள் என்ற வட்டத்திற்குள் கொண்டு வந்து நிறுததியது.

21 comments:

  1. நன்றிங்க மாப்ள பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன்!

    ReplyDelete
  2. வணக்கம் சகோ,
    /அடிமைகளின் மூலம் உற்பத்தி அதிகமாகத் தொடங்கியது. உற்பத்தி மூலம் குறிப்பிட்ட சில பிரிவினர் மட்டும் சமூகத்தில் மிக விரைவாக உயர முடிந்தது/
    /ஆனால் விளைந்த விளைபொருட்களோ மற்ற உற்பத்திகள் எதுவும் இந்த அடிமைகளுக்குச் சொந்தமில்லை.
    இவர்கள் உயிர் வாழ்வதற்கு தேவையான என்கிற அளவில் உணவு அளிக்கப்பட்டது. /

    அருமையாக எதர்த்த உண்மைகளை சார்பர்ற்று அளிப்பது சிறப்பு.பல விஷயங்களை ஐயந் திரிபர அறிய முடிகிறது.சமூகத்தில் குறைகள் இருந்த்னை ,காலப்போக்கில் அவை சரி ச்ய்யப் படுகின்றன.செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்ரன,செய்யப்படும் என்பதேசரியான் பார்வையாக் இருக்க முடியும்.இப்படித்தான் பல் அரசுகள் பல்ரை சுரண்டி ஆட்சி நடத்தினர் என்பதால் அக்கால் பெருமை பற்றிய பல கருத்தியல்கள் என்க்கு உடன்பாடில்லை.செல்வம் சேர்வது சுரண்டல் மூலமே,அக்காலத்தில் அது அடிமை முரை .இப்போது வேறு முறைகள்.இருந்தாலும் இவ்வள்வு அடக்குமுறைகள் சக மனிதன் மீது பிரயோகிக்கப் பட்டது என்பது அனைவரும் வெட்கி தலை குனிய வேண்டிய விஷயம். .

    நன்றி

    ReplyDelete
  3. தமிழ்மண‌ ஓட்டுப் பட்டை வைங்க சகோ!!!!!!!!!!!!!

    ReplyDelete
  4. //இந்தியாவில் இருந்த ஆதி நாகரிகத்தில் அடிமைகள் எதுவும் இருந்ததாக தெரியவில்லை.//

    மனிதாபிமானம் சற்றுமில்லாத அந்நிய நாட்டவரைத் தான் நாகரீகத்தின் பிரம்மாக்கள் என்று உச்சியில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள்.நல்ல பதிவினைத் தந்துவரும் தங்களை பாராட்டி மகிழ்கிறேன்.

    ReplyDelete
  5. பயனுள்ள பகிர்வு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. மனிதர்கள்,மனிதர்களை,விலங்கை விட கீழான புத்தியோடு இப்படி நடத்தியிருக்கிறார்களே, காட்டுமிராண்டிகள்.இப்படியான கொடுமைகள் மூலம்தான் அந்த புண்ணியவான்கள் பொருளாதாரத்தில் உச்சிக்கு போனார்களோ?

    ReplyDelete
  7. uraikka kooda molaga chedium molgayum irukkathu...

    ReplyDelete
  8. திரும்பி வந்து ஓட்டு தமிழ்மணத்துல போட்டாச்சி மாப்ள!

    ReplyDelete
  9. சார்வாகன் விக்கி

    தமிழ்மண ஓட்டுப்பட்டையென்பது வெறுமனே இணைப்பதற்கு என்கிற மனோபாவம் என்னிடம் இருக்கிறது. அதில் ஓட்டுப் போடுகின்றார்களா இல்லையா என்பதை கவனிப்பது இல்லை. ஆனால் தெரிந்த நண்பர் ஒருவர் கொஞ்ச நாளாகவே கடைசியாக வந்து ஒரு மைனஸ் ஓட்டு போட்டு அவர் புனிதப் பணியை செவ்வனே நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறார். அதுவும் ஏழு ஓட்டுக்கு வரும் போது அவர் காத்திருந்து அந்த பணியை செய்து கொண்டு இருக்கிறார். பாவம் அவரின் பொன்னான நேரத்தை நான் வீண் அடித்துக் கொண்டு இருக்கின்றேன் என்று நினைத்துக் கொள்வதுண்டு. சில சமய்ம தமிழ்மணம் இணைப்பதற்கு தாமதம் ஆகும். நான் கண்டு கொள்வதே இல்லை. நிச்சயம் நண்பர்கள் இணைத்து விடுகிறார்கள் என்ற நம்பிக்கை இதுவரை பொய்க்கவில்லை. ஈழத் தொடருக்கு கிடைத்த ஆதரவு போலவே இந்த அடிமைகள் தொடருக்கும் கிடைத்துள்ளது.

    விக்கி எல்லோரையும் மாப்ள போட்டு அழைக்கிறீங்களே? எத்தனை பொண்ணுகளை பெத்து வச்சுரூக்கீங்க. அப்புறம் நாளைக்கு வந்து கேட்கும் போது பின்னங்கால் பிடறி தெறிக்க ஓடிவிடக்கூடாது. ஆமாம் சொல்லிபுட்டேன்.

    ReplyDelete
  10. நல்ல பதிவு! வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. ஆண்டான் அடிமை என்பது அன்று முதல்
    இன்று வரை ஏன் நாளை வரை முடிவில்லாத
    மெகாத் தொடர்

    வலைவந்து வழங்கினீர் கருத்துரை
    நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. அடிமைகளை திருடுபவன் கொல்லப்படுவான்
    ஓடிப்போன அடிமையை மற்றவர்கள் வைத்திருக்கக்கூடாது. அவ்வாறு செய்பவர்களும் கொல்லப்படுவார்கள்.
    அடிமையின் அடையாளக்குறியை மாற்றக்கூடாது.
    மற்றவர்களின் அடிமையை கொன்றவன் அதற்குப் பதிலாக தங்களின் அடிமையை கொடுத்து விட வேண்டும்.
    கடன்பட்டவர்கள் தங்களின் மனைவி மகன் அல்லது மகளை கடன் பட்டவருக்கு மூன்று ஆண்டுகள் அடிமையாக கொடுத்து விட வேண்டும்.

    இந்தியாவில் இருந்த ஆதி நாகரிகத்தில் அடிமைகள் எதுவும் இருந்ததாக தெரியவில்லை. ஆனால் நாளாவட்டத்தில் சாதி என்ற அமைப்பும், அதனால் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு நிகழ்வுகளும் காலப்போக்கில் இந்தியாவில் ஒடுக்கப்பட்டவர்களை இந்த அடிமைகள் என்ற வட்டத்திற்குள் கொண்டு வந்து நிறுததியது.

    மனதை குடையும் வரிகளால் ஆக்கப்பட்ட உண்மையின் ஓலம் இது எல்லோர் காதுகளிலும் எட்டப்படவேண்டும்.இந்த அடிமை என்ற வாசகம் அடியோடு கொளுத்தப்பட வேண்டும் .ஆதிவாசிகளும்
    மனிதர்களே .எதிகாலத்தில் எங்கள்
    தலைமுறையினருக்கு எங்களைப்
    பார்க்கும்போதுகூட இந்த ஆதிவாசிகள் நினைப்பு மனதில் எழலாம் .
    அப்போது எமக்கும் இந்நிலைதானோ!!!!..........(.செயலைக் குறிக்கின்றேன்)
    நன்றி சகோ பகிர்வுக்கு .தமிழ்மணம் 6

    ReplyDelete
  13. தொடர்ந்து படித்து வருகிறேன்.
    தொடர்ந்து எழுதுங்கள்.
    அவலமாக இருக்கிறது.

    ReplyDelete
  14. ஆனால் பணம் என்ற வஸ்து புழக்கத்தில் வர நாகரிகம் என்ற பெயரில் ஒவ்வொரு தனி மனிதனின் செயல்பாடுகளும் மாறத் தொடங்கியது.


    உண்மைதான்..

    ReplyDelete
  15. தலைப்பைப்பார்த்தவுடன், என்னதான் எழுதியிருக்கிறது என உள்ளே சென்று பார்க்க தோன்ற வேண்டும். இதுதான் உங்கள் வலைதள வெற்றியின் ரகசியம். பாராட்டுக்கள்

    ReplyDelete
  16. நல்ல பதிவு....
    இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...
    ரெவெரி...

    ReplyDelete
  17. இந்த அவலங்களை அண்ணா...தம்பிக்கு மடலில் எழுதியுள்ளார்.என்ற நினைவு..தொடர்கிறேன்.

    ReplyDelete
  18. Excellent writing. India also had slavery other than cast system, you can see it in Puranas, Nalan was sold as slave after he lost his kingdom as per the story.

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.