அஸ்திவாரம்

Friday, August 26, 2011

அடிமைகளின் பயணங்கள்


கிபி 1619 ஆம் ஆண்டு.

அமெரிக்கா கருப்பின மக்களை ஆப்பிரிக்காவிலிருந்து விலைக்கு வாங்கத் தொடங்கிய ஆண்டு. 

முதன் முதலாக வெறும் இருபது பேரோடு தொடங்கிய பயணம் இது.  இதுவே காலப்போக்கில் வளர்ந்து 1810 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட கருப்பின மக்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தை தொட்டது.  வலுக் கட்டாயமாக கொண்டு வரப்பட்டவர்கள் தான் அதிகம்.  அதில் ஒருவன் தான் இந்த குண்டா.

காட்டுக்குள் தான் விரும்பி இசைக்கும் மத்தள கருவிக்கு விறகு வெட்ட வந்தவனை கனகச்சிதமாக காத்திருந்த வெள்ளையர்கள் தாக்கி பிடித்தனர். ஆப்பிரிக்காவில் கருப்பர்களை வேட்டையாட வந்த வெள்ளையர்களுக்கு உதவியர்களும் கருப்பர்களே. பலமான ஆயுதத்தால் அடி வாங்கி மயங்கி விழுந்த குண்டா கண்விழித்த போது கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தான். 


உடம்பில் பொட்டுத்துணியில்லை. கைகளும் கால்களும் சங்கிலியால் பிணைக்கப்பட்டுருந்தது. இவனைப் போலவே பலரும் உள்ளே சங்கிலியால் கட்டுப்பட்டு கிடந்தனர். குண்டா இந்த முக்கிய கப்பலுக்கு வருவதற்கு முன்பு பல படிகளை கடந்து கடந்து வந்தவன்.   ஏறக்குறைய பாதி உயிரோடு.  

காட்டில் மறைவு பகுதியில் இருந்து எதிர்பாரவிதமாக தாக்கிய வெள்ளையர்களை எதிர்க்க முடியாமல் வாங்கிய அடிகள் இப்போது குண்டாவின் நினைவில் லேசாக வந்து போனது.  நினைவு வந்தபோதெல்லாம் எதிர்க்க, காத்திருந்த வெள்ளையர்கள் கொடுத்த அடி ஒவ்வொன்றும் மரண வாசலுக்கே அழைத்துச் சென்றது.  மயக்கம் தெளிந்து முழித்துப் பார்த்த போது  வாயில் கட்டப்பட்டிருந்த துணியை மீறி அவனால் கத்தமுடியவில்லை. கண்களில் துணியை கட்டி போலாங் நதியில் படகில் ஏற்றினார்கள்.

வெள்ளையர்கள் தன் வாயில் திணித்த இறைச்சித் துண்டை பலங்கொண்ட வரைக்கும் துப்பினான். அதற்கும் அடிவிழுந்தது. வெள்ளையர்கள் பொறுமையிழந்து நகர்ந்து விட அப்போது தான் குண்டா அங்கிருந்தவர்களை கவனித்தான்.  அவனைப் போலவே பலரும் மூங்கில் கம்புகளில் அங்கங்கே கட்டி வைக்கப்பட்டிருந்தனர். 

குண்டாவின் ஒவ்வொரு எதிர்ப்புக்கும் விழுந்த அடியினால் மயக்கமாகி விட விழித்து பார்த்த போது தனது தலை மொட்டையடிக்கப்பட்டிருப்பதை உணர்ந்தான். அருகேயிருந்த பெண்கள் உட்பட ஒவ்வொருவரையும் நிர்வாணமாகவே நிறுத்தியிருந்தார்கள்.

கூட்டத்திலிருந்து வெள்ளையர்களின் ஒருவன் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒவ்வொருவரையும் வரிசையாக வரவழைத்து பரிசோதிக்கத் தொடங்கினான்.  அவரவர் வாயைத் திறந்து பற்கள் முதல் பிறப்பு உறுப்பு வரைக்கும் கையில் பிடித்து பார்த்து வேறு பக்கம் நகர்த்தினான்.  பெண்களுக்கும் இதே மாதிரியான பரிசோதனைதான். திருப்தியானவுடன் நெருப்பில் இட்ட கம்பியின் மூலம் ஒவ்வொருவர் முதுகிலும் எல் எல் என்று பொறித்தான். அந்த நெருப்பு காயத்தின் மேல் பூசப்பட்ட பனை எண்ணெயினால் உருவான வலியினால் ஒவ்வொருவரின் அலறலும் அந்த காடு முழுக்க எதிரொலித்தது.

ஏறக்குறைய 350 ஆண்டுகள் ஆப்ரிக்காவின் கடற்கரையோரம் இது போன்ற அடிமைகளை அனுப்பும் பணி கணஜோராக நடந்து கொண்டிருந்தது. இந்த கடற்கரைப் பகுதிகளை அடிமை கடற்கரைகள் என்றழைக்கப்பட்டது. 1680 முதல் 1786 வரைக்கும் பிரிட்டன் அடிமைப்படுத்திதிய அடிமைகளின் எண்ணிக்கை மட்டும் இரண்டு கோடியாகும்.

இரவு வெவ்வேறு படகுகள் மூலம் ஏற்றப்பட்டு முக்கிய கப்பலுக்கு கொண்டு சென்றனர்.  கப்பலின் மேல் தளத்தின் வழியாக உள்ளே அழைத்துச் செல்லப்பட்டனர்.  கீழே செல்வதற்கு பிரத்யோக படிக்ள் அமைக்கப்பட்டிருந்தது. அந்த குறுகலான இருட்டறையில் குண்டா போன்ற அத்தனை பேர்களையும் சங்கிலியால் கட்டப்பட்டனர். 

அந்த அறை கப்பலின் அடித்தளத்தில் சிறிய கிடங்கு போல இருந்தது. எழுந்து நின்றால் தலை இடிக்கும்.. குண்டாவைப்போலவே வேறு சிலரும் நெருக்கியயடைத்து உள்ளே அடைக்கப்பட்டு சங்கிலியால் கட்டப்பட்டு இருந்தனர். சரக்குகளை ஏற்றிச் செல்லும் கப்பலின் அறையைப் போலிருந்த அந்த அறை சுத்தம் செய்தே பல ஆண்டுகளுக்கு மேலிருக்கும். அந்த அறை முழுவதும் துர்நாற்றமும், உள்ளேயிருந்த வெப்பமும் ஒன்று சேர்ந்து இருட்டறை போலிருந்தது. உள்ளே கொண்டு வரப்பட்டவர்களின் வாந்தியும், ஒவ்வொருவரும் கழித்த சிறுநீர் நாற்றமும் ஒன்று சேர்ந்து சகிக்க முடியாததாக இருந்தது.  

இதற்கு மேலாக ஒவ்வொரு அடிமையின் முதுகில் அடையாளமாக போட்டப்பட்ட சூட்டால் உருவான புண்ணும் ஆறாத காயங்களும் ஒவ்வொரு அடிமைக்கும் ரணமாக இருந்தது. ஒவ்வொருவரையும் கொண்டு வந்து உள்ளே தள்ளும் போது மேலே கதவு திறக்கப்பட்டும்.  அப்போது வெளியே தெரியும் வெளிச்சத்தை வைத்து தான் இரவா பகலா என்பதை புரிந்து கொள்ள முடியும்.. இந்த கப்பல் பயணமென்பது பத்து நாளா, ஒரு மாசமா?  பயணத்தின் முடிவு எங்கே போய் முடியும் என்பது உள்ளேயிருக்கும் எந்த அடிமைகளுக்கும் தெரியாது. 

மரத்தாலான அந்த 18 அடிக்குள் அடைபட்டுள்ள அடிமைககளின் உடம்பிலிருந்து வழியில் ரத்த காயத்தை வந்து கடிக்கும் பெருச்சாளிகளை பொறுத்துக் கொள்ள வேண்டும். இரும்புச் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்ட காலில் கைகளிலிருந்து வரும் இரத்தத்தை மீறி கொடுக்கப்படும் உணவு என்ற வஸ்தை சாப்பிட்டு போக வேண்டிய இடத்திற்க்கு உயிரோடு போய் சேர்ந்தால் அவன் அதிர்ஷ்ட அடிமை.  அடிமை வியாபாரங்கள் உச்சகட்டத்தில் இருந்த போது ஐரோப்பியர்களால் பிடிக்கப்பட்ட மொத்த அடிமைகளின் எண்ணிக்கை ஏறக்குறைய பத்து கோடி பேர்கள்.,

அடிமைகள் என்பவர்கள் வேலை வாங்குவதற்கு என்றாலும் அவர்களை நடத்திய விதத்தில் எந்த நாட்டிலும் மனிதநேயமென்பது மருத்துக்குக் கூட இல்லை. அடிமைகளாக வாழ்ந்தவர்கள் சென்ற ஒவ்வொரு நாடுகளிலும் இப்படித்தான் இருந்தது. ஏறக்குறைய ஒரு உயிருள்ள ஜடப்பொருளாகவே பார்க்கப்பட்டனர். காலப்போக்கில் இந்த அடிமைகளை வைத்து தொழில் செய்வது கூட லாபம் தரும் தொழிலாக மாறிப்போனது. 

19 ஆம் நூற்றாண்டுக்குள் இந்த அடிமை வியாபாரம் நல்ல லாபம் கொழிக்கும் தொழிலாகவே நடந்து கொண்டிருந்தது. ஸ்பானியர்கள், போர்த்துகீசியர்கள் என்று தொடங்கி பிரிட்டன் இதை சர்வதேச அங்கீகாரத்துடன் நடத்தத் தொடங்கியது. மற்ற நாடுகளை விட இந்த வியாபாரத்தில் முன்னிலை வகித்த நாடு பிரிட்டன். 

இதே காலகட்டங்களில் எட்டு மில்லியன் அடிமைகளை ஆப்பிரிகாவில் இருந்து கொண்டு வரப்பட்டு அமெரிக்காவில் விற்கப்பட்டனர்.  அடிமைகளாக பிடிக்கப்பட்டு கொண்டு செல்லப்பபடுபவர்களில் நான்கில் ஒரு பகுதி மக்கள் செல்லும் வழியிலேயே இறந்தனர்.

இந்த அடிமை வியாபாரத்தை 17 ஆம் நூற்றாண்டில் உருவான சூஅஸியெந்தோ உடன்படிக்கை மூலம் சர்வதேச தொழிலாக மாறியது. இதன்படி பிரிட்டன் ஒவ்வொரு ஆண்டும் 4800 கருப்பின மக்களை அமெரிக்காவிற்கு அனுப்ப என்று அடுத்து வந்த 40 ஆண்டுகளுக்குண்டான உரிமையை பெற்று இருந்தது. சட்டபடியான உரிமைகள் என்கிற விதத்தில் இந்த அடிமை வியாபாரம் மாறியதற்குப் பிறகு இந்த அடிமைகளை ஏற்றிச் செல்லும் கப்பல் வாணிபமும் செழிக்கத் தொடங்கியது.

ஐரோப்பியர்கள் அடிமை முறையை ஒரு உற்பத்தி முறையாகவும், உலக பொருளாதாரத்தின் ஒரு முக்கிய அம்சமாகவும் மாற்றினார்கள். மற்ற நாடுகளை விட ஐரோப்பியர்களின் அடிமை முறையே மிகவும் கேவலமான முறையாக இருந்தது. ஏறத்தாழ 60 மில்லியன் ஆப்பிரிக்க அடிமைகள் அடிமை முறையில் உள்ள சித்ரவதையினால் கொல்லப்பட்டனர். 

அன்றைய கணக்குப்படி ஒரு அடிமையின் குறைந்தபட்ச விலை 250 டாலர். அதிகபட்சமாக 1750 டாலர் வரைக்கும் விற்கப்பட்டது.  அன்று பிரிட்டனின் லிவர்பூர் என்ற கப்பல் நிறுவனம் இந்த அடிமை வியாபாரத்தில் முன்னணியில் இருந்தது. 1730 ஆம் ஆண்டு வெறுமனே 15 கப்பல்களை வைத்து தொடங்கிய வியாபாரமென்பது 1792 ல் 132 கப்பல்களை வைத்து நடத்தும் அளவிற்கு நம்பமுடியாத வளர்ச்சியை எட்டியது.  1860 ஆம் ஆண்டு தான் இந்த அடிமை வியாபாரம் முடிவுக்கு வந்தது. 

26 comments:

  1. வணக்கம் சகோ,
    மனித சமூகம் பயணித்த உண்மையான‌ வரலாறு ஆவணப் படுத்தலுக்கு பாராட்டுகள்.இருந்தாலும் அடிமை முறை என்பது ஒரு 50 வருடங்களுக்கு முன் வரை இயல்பான் நடைமுறையாக இருந்தது என்பதை நினைக்கவே வெட்கமாக் இருக்கிறது.அந்த அடிமைகளோடு இருப்பது போல் ஒரு பிரமை ஏற்படுத்தும் எழுத்து. இத்னோடு ஒப்பிடும் போது இந்திய சாதிமுறை பற்றிய எண்ணம் வருவதும் தவிர்க்க முடியவில்லை.
    எளிமையான,இயல்பான் எழுத்து.தொடருங்கள்.

    ReplyDelete
  2. எளிமையான... இயல்பான... எழுத்து.
    தொடருங்கள்.

    ReplyDelete
  3. சகோ
    இது குறித்த பிபிசி ஆவணப் பட்ம் ஒன்று பதிவிட்டு உள்ளேன்.நேரமிருப்பின் பாருங்கள் நன்றி.

    ReplyDelete
  4. சார்வாகன் இப்போது சென்னையில் இருக்கீங்களா?

    ReplyDelete
  5. படமும்,எழுத்தும் வரலாற்றை மீள்பதிவு செய்கின்றன.

    ReplyDelete
  6. சுவரொட்டி நம்மூர் அசல் மாதிரி தெரிகிறதே!எழுதினவன் புத்திசாலி.

    ReplyDelete
  7. hi,
    i have been reading your posts for a long time. i would be much happier if you could elaborate this strange behavioral trend of change in the Tamil people.

    Infact after a disgusting experience , i just opened my laptop and i am typing this message.

    I am a highly educated (in western countries since my teen years until my pg) big stout STRAIGHT male in my mid twenties currently residing in TAMILNADU for the last couple of years. I am quite a reader ranging from tamil literature, psychology, indology, you name it.

    Even though people describe from my bodily gestures and general character as a mean, rude and arrogant person , i try to behave well with every person i communicate from prince to pauper,

    It came a surprise to me that in Tamil nadu i have been approached by quiet a few females, married and unmarried with sexual intent in public places(occasionally) even on public buses even in small towns, ( i rarely make bus trips)
    It is a general belief in the mass mainly coz of the media, that female molestation in public buses is done bby male.but it fails to be a complete truth.
    I agree women approaching men could be natural with the evolution, but how aboout men approching men??

    what comes a surprise to me is many males as well are approaching me . In a bus there was a guy who was brushing his back against my genitals constantly, in the train and in other couple of ocassions some men even tried touching my genitals intentionally and and some other occasions they made their intentions clear and precise through their gestures and even in words.

    Initially on the first couple of ocassions, i thought may they may those one in thousand, but increasing number shocks me.

    i am sure many other men must must must !!! have experienced the same problem and not bring them into lights, even i would not dare talk about a man approaching me for sex if i was not straight from the spot, my rage and anger would have drained out, so drafting in my mobile for a later post.

    I just cannot accept this bloody change in people in Tamil Nadu, for fuck sake i am not in west, there if a homosexual or an opposite sex if approached gets rejected, they will smile friendly and walk away and i was never approached by a man there ever!!!?? in my stay for ten years over there.
    Is there a visual increase in number of gays in india.

    I am shocked by this behavioral and cultural changes in people's mindset, which sometimes disgusts me in the case of men.
    sexual advances are not new to me as i spend most of my time in west but i just cannot digest that our culture is getting spoiled.

    I would be more than happy if you could bring a debate about this in your blog.



    note: this is definitely not a fantasy story, i told a friend of mine he just said i am making it up and his comment pissed me off.

    ReplyDelete
  8. I AM GOING TO POST THIS IN A COUPLE OF OTHER BLOGS TOO,
    BUT I THOUGHT you defintely may be the right person to debate it.

    ReplyDelete
  9. சற்று வியப்பாக ஆச்சரியமாக உள்ளது.

    உங்களின் விருப்பத்திற்கு அழைப்புக்கு நன்றி. ஆனால் இப்போது நாம் பேசிக் கொண்டிருப்பது அடிமைகள் குறித்த விபரங்கள்.

    ஆனால் ஆண் பெண் ஆண் ஆண் பாலூணர்வு சமாச்சாரங்கள் இங்கே எங்கே வந்தது. திடீர் என்று இங்கு வந்து இதை இத்தனை தெளிவாக விளக்கமாக கொடுக்க காரணம் என்ன நண்பரே?

    நிச்சயம் இதுக்கு நான் தகுதியானவன் அல்ல. 15 வருடங்களுக்கு முன்பு திருப்பூர் பழைய பேரூந்து நிலையத்தில் இரவு பேரூந்தில் இருந்து நடந்தே அறை நோக்கி வந்து கொண்டிருந்த போது சில காட்சிகளை (சாலை ஓரத்தில்) பார்த்து(பார்த்தற்கே?) இரண்டு நாட்கள் காய்ச்சல் வந்தது தான் மிச்சம்.

    மற்றபடி இதில் கருத்து சொல்ல எனக்கு ஒன்றுமில்லை. இது அவரவர் மனம் சார்ந்த உடல் சார்ந்த விருப்பங்கள். அடுத்தவருக்கு தொந்தரவு இல்லாத பட்சத்தில்.

    அதெல்லாம் சரி. வெளிப்படையாக தெளிவாக பேசும் நீங்கள் ஏன் பெயரை எழுதியிருந்தால் இன்னும் சற்று மரியாதை அதிகமாகியிருக்கும். நீண்ட நாட்கள் படித்துக் கொண்டு இருக்கின்றேன் என்பதற்காகவே இந்த பதில். நன்றி நண்பரே.

    ReplyDelete
  10. கண்ணுக்கு தெரிந்து அன்று அடிமைகளாய்..
    தெரிந்தும் தெரியாமல் என்று அதிவேக தொலை தொடர்பில் அடிமைகளாய் இருந்துகொண்டுதான் இருக்கிறோம்.
    முதன் முறை வருகின்றேன்
    நன்றி தங்கள் தெளிவான விளக்கங்களுக்கு

    ReplyDelete
  11. dear friend i am reading this with tears..nothing more to write..

    ReplyDelete
  12. தொடருங்கள்...வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. ஆரம்பமே கொடூரமாக இருக்கிறதே.பாவிகள்.எழுதுங்கள் தொடர்கிறோம்.

    ReplyDelete
  14. அன்பின் ஜோதிஜி...வாழ்த்துகள்...இணையபக்கம் கொஞ்சம் வராமல் இருந்தேன்.

    எல்லாவற்றையும் படித்தேன்...எனக்குள் உள்ள சாமியதான் தோடனோம் போலிருக்கு அன்பின்...உங்கள் பதிவில் தாங்கள் எடுத்துள்ள விசயங்கள் அனைத்துமே வித்தியாசமாய் ஆவணமாய் தான்.

    தொடர்கிறேன்....

    ReplyDelete
  15. ஆரம்பமே கொடூரமாக இருக்கிறதே.பாவிகள். தொடருங்கள்... தொடர்கிறோம்.

    ReplyDelete
  16. மிருகமாய் பிறந்திருந்தாலாவது காட்டிலே உலாவியிருந்திருப்பான்..

    மனிதனாய் பிறந்த அடிமையாய் ஆகி எவ்வளவு சித்திரவதைகள்!!!!

    ReplyDelete
  17. ஜோதிஜி குண்டா ஒருவனைப் பற்றிய கதையா இல்லை கலந்து வருகிறதா!

    ReplyDelete
  18. தெரியாத நிறைய விடயங்கள் தெரிந்துகொண்டேன்

    ReplyDelete
  19. முகப்பில் உள்ள படம் சிங்கையில் விலங்கியல் பூங்காவில் பார்த்ததாக எண்ணம்.

    ReplyDelete
  20. நலமா குமார். நீண்ட நாளைக்குப் பிறகு.

    வருக ரியாஸ்.

    இல்லை கிரி. குண்டா ஒருவரின் பாடுகளைப் பார்த்து விட்டு பொதுவான பாதையில் பயணிக்கும். இது பீரியட் பிலிம் போல ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக நகர்ந்து கொண்டேயிருக்கும். காரணம் படிப்பவர்களுக்கு சோர்வு உருவாகக்கூடாதல்லவா?

    ஷீ நீசி அற்புதமான விமர்சனம். முற்றிலும் உண்மை.

    JMD TAMIL உங்கள் வருகைக்கு நன்றி.

    வருக குமார்.

    தவறு நினைத்தேன் உங்களுக்கு வேலைப்ளூ இருக்குமென்று. தாமதம் என்றாலும் புரிதலுடன் கூடிய விமர்சனம். நன்றி நண்பா.

    இளா

    மொத்தமாக படிக்க படிக்க பல இடங்களில் நம்மை அறியாமல் கண்ணீர் சுரக்கும்.

    வழக்குரைஞருக்கு நன்றி.

    hamaragana said...

    முதல் வருகை என்று நினைக்கின்றேன். வருக வருக.

    வருக சிவா. நீங்கள் சொல்வதும் உண்மை. நான் பலமுறை இதுபோலவே நினைத்துக் கொள்வதுண்டு.

    ReplyDelete
  21. வேதனையாக இருக்கிறது. யாரோ மேலே சூடு வைப்பது போல் உணர்கிறேன்.

    ReplyDelete
  22. தொடருங்கள்... தொடர்கிறோம்...ரெவெரி

    ReplyDelete
  23. கட்டுரையில் ஏதோ குறைவதாக உணர்கிறேன். மேலும் சில விஷயங்கள் ரிப்பீட் ஆகின்றன என்றும் நினைக்கிறேன். அநேகமாகப் புத்தகமாக வெளிவரப்போகும் தொடர் என்பதால் இன்னும் செதுக்குதல் தேவை.

    //முதன் முதலாக வெறும் இருபது பேரோடு தொடங்கிய பயணம் இது. இதுவே காலப்போக்கில் வளர்ந்து 1810 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட கருப்பின மக்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தை தொட்டது.//

    //1680 முதல் 1786 வரைக்கும் பிரிட்டன் அடிமைப்படுத்திதிய அடிமைகளின் எண்ணிக்கை மட்டும் இரண்டு கோடியாகும்.//

    //அடிமை வியாபாரங்கள் உச்சகட்டத்தில் இருந்த போது ஐரோப்பியர்களால் பிடிக்கப்பட்ட மொத்த அடிமைகளின் எண்ணிக்கை ஏறக்குறைய பத்து கோடி பேர்கள்.//

    //இதே காலகட்டங்களில் எட்டு மில்லியன் அடிமைகளை ஆப்பிரிகாவில் இருந்து கொண்டு வரப்பட்டு அமெரிக்காவில் விற்கப்பட்டனர்.//

    முதல் பத்தியில் நீங்கள் குறிப்பிட்டிருப்பத் 10 லட்சம். அடுத்தடுத்த பத்திகளில் இருக்கும் எண்ணிக்கையின் கூட்டுத்தொகை?

    ReplyDelete
  24. Anna 3 perin thokkuThandanai pathi parapUraiya kanooom?

    ReplyDelete
  25. கணத்த மனதுடன் தொடர்கிறேன்

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.