என்னுடைய உண்மையான பிறந்த நாளே எனக்கு 20 வயதில் தான் தெரிந்தது. அப்போது தீவிர ஜோதிட ஆராய்ச்சியில் முழு நேரமாய் செயல்பட்டுக் கொண்டிருந்த நண்பன் கலந்தர் (மத எதிர்ப்புகளையும் மீறி) உந்துதல் காரணமாக நான் பிறந்த அரசு மருத்துமனையில் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகே கண்டு கொண்டேன். நான் பிறந்த நாளை கொண்டாடியதும் இல்லை. பிறந்த நாள் வரும் தினத்தன்று அது நினைவில் இருப்பதும் இல்லை. குழந்தைகள் எனது வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய அவர்களின் பிறந்த நாளை நாங்கள் மறந்து விடுவோம் என்று ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதத்திற்கு முன்பாக இன்னும் இத்தனை மாதங்கள் இருக்கிறது? என்று சுட்டிக் காட்டிக் கொண்டே இருப்பார்கள். அன்று அவர்களுக்கு கிடைக்கக் கூடிய மகிழ்ச்சி தான் எங்களின் மகிழ்ச்சியாகவும் இருந்து விடுகின்றது.
இந்த மகிழ்ச்சியைப் போலவே இந்த நாள் எனக்கு இருக்கிறது.
காரணம் நான் பெற்ற அனுபவங்கள், வாசித்த புத்தகங்கள், சந்தித்த மனிதர்கள் உருவாக்கிய தாக்கம் எத்தகையது என்பதை எழுதத் தொடங்கிய இந்த இரண்டு வருடங்களின் மூலம் தான் அதிகம் உணர முடிந்துள்ளது. உண்மையிலே உடலுக்கு உண்டான வயதை விட உள்ளத்தின் வயதான மூன்று என்பது இன்று முதல் தொடங்குகின்றது.
முதலாம் ஆண்டு முடிவுக்கு வந்த அப்போது வேர்ட்ப்ரஸ் தளத்தில் எழுதிய கட்டுரை இது. அப்போது ஈழம் தொடர்பாக தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருந்த காரணத்தால் அதன் புரிதலை எழுதியிருந்தேன். அப்போது பெரும்பாலான வர்களுக்கு நான் அறிமுகம் ஆகியிருக்கவில்லை. ஆனால் நாகா உருவாக்கிக் கொடுத்த இந்த தளத்தில் இதுவரைக்கும் ஒரு லட்சம் பார்வையாளர்களும் ஏற்கனவே எழுதிக் கொண்டிருந்த வேர்ட்ப்ரஸ் ல் 50 ஆயிரம் பேர்களும் வருகைதந்துள்ளார்.
இந்த எண்ணிக்கையை இங்கே குறிப்பிடக்காரணம் சில விசயங்களை இந்த இடத்தில் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
வலையுலகில் இன்று வரையிலும் எழுதிக் கொண்டிருப்பவர்களின் ஒரே கருத்து படிப்பவர்களுக்கு வசதியாக குறிப்பிட்ட விசயங்களை நீளம் அகலம் பார்த்து எழுத வேண்டும். இல்லாவிட்டால் அது வந்து படிப்பவர்களை அடுத்த முறை வராமல் செய்து விடும் என்று கருதிக் கொண்டிருக்கிறார்கள். .
ஆனால் இதுவரைக்கும் அந்த விதியை உடைப்பதில் தான் கவனம் செலுத்தியுள்ளேன். வெற்றியும் அடைந்துள்ளேன்
இதைப் போலவே வலைப்பூவில் தொடக்கத்தில் எழுத வருபவர்களும் திரைப்படங்களைப்பற்றி எழுதுவது தான் சரியாக இருக்கும் என்று தங்கள் எழுத்துப்பயணத்தை திரை சமாச்சாரங்களில் மட்டும் கவனம் செலுத்தி அதன் பாதையிலே போகத் தொடங்கி விடுகிறார்கள்.
வேர்ட்ப்ரஸ் ல் எழுதும் போது சிவகுமார், சேரன், கமல்ஹாசன் குறித்து எழுதியுள்ளேன். குறிப்பாக திரைப்படங்களைப் பற்றி நான் இதுவரையிலும் எழுதியதில்லை.
வினவு தள நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்காக முதல் முறையாக திருப்பூர் சாயப்பட்டறைகள் குறித்து எழுதிய கட்டுரை அப்போதையை சூழ்நிலையில் சொல்ல வேண்டிய எதிர்மறை நேர்மறை நியாங்களை கோர்வையாக்கியதில் நீண்டதாகவே இருந்தது. தோழர்களும் அப்படியே வெளியிட்டு இருந்தார்கள். அப்போது உயர்பதவியில் உள்ள கனடாவில் இருந்த நண்பர் பேச வேண்டும் என்று சொல்லியிருந்தார். ஆனால் குறிப்பிட்ட காலம் வரைக்கும் தொடர்பு கொள்ளவில்லை. ஆனால் சாயப்பட்டறை கட்டுரையை விட மராத்தான் நீளத்திற்கு அமைந்த நான் வேட்பாளர் ஒரு டைரிக்குறிப்புகள் என்ற கட்டுரையை அவர் படித்தவுடன் அந்த இரவு வேளையில் கனடாவிலிருந்து அழைத்து ஏறக்குறைய இரண்டு மணி நேரம் பேசினார்.
அப்போது அவர் பலவிசயங்களைப் பற்றி பேசினாலும் இன்று உங்களுடன் பேசியே ஆக வேண்டும் என்று என் இரவு நேர கடமைகளை ஒதுக்கிவைத்து விட்டேன் என்று சொன்ன போது அந்த கட்டுரை எந்த அளவுக்கு அவருக்கு தாக்கத்தை உருவாக்கியது என்பதை உணர்ந்து கொண்டேன்.
இதையே சென்ஷியுடன் ஒரு நாள் முழுக்க தஞ்சை பெரிய கோவிலில் இருந்த போது அவரும் இதே கட்டுரையை குறிப்பிட்டதோடு அன்பால் நெகிழவைத்தார். பத்திரிக்கை துறையில் இருக்கும் தமிழ்மலர் கூட இது போன்ற தேர்தல் ஆணைய செயல்பாடுகளின் சம்பவ கோர்வைகளை யாராவது எழுத மாட்டார்களா? என்று காத்திருந்ததை குறிப்பிட்டு இருந்தார்.
சாயமே அது பொய்யடா என்ற கட்டுரை தான் நான் மதிக்கும் பத்திரிக்கையாசிரியரின் தொடர் வாசிப்பு பார்வையில் பட்டு அதுவே தான் முதல் முறையாக பத்திரிக்கையுலகத்திற்கு அறிமுக இல்லாதவனுக்கு அட்டைபட கட்டுரை அங்கீகாரம் வரைக்கும் கொண்டு சேர்த்தது.
இன்னும் இதே போல பல நண்பர்களின் உதாரணங்களை குறிப்பிட முடியும்.
இந்த வருடம் முழுக்க நான் உணர்ந்து கொண்டது ஒன்றே ஒன்று தான்.
உங்கள் எழுத்து நடையும், சொல்ல வந்த விசயத்திற்குரிய சரியான புரிதலையும் உருவாக்கும்பட்சத்தில் அது எந்த அளவுக்கு பெரிதாக இருந்தாலும் நிச்சயம் அது பரவலான பாராட்டுரைக்கு கொண்டு செலுத்தும். நீங்கள் விமர்சனங்கள், ஓட்டு, பரஸ்பரம் மார்பில் சந்தணத்தை பூசிக் கொண்டிருந்தால் வாழ்க்கை முழுக்க பூசிக் கொண்டேயிருக்க வேண்டியது தான்.
மொத்தமாக 330 பதிவுகள் எழுதியுள்ளேன். இந்த வருடத்தில் உயர்ந்து கொண்டிருக்கும் மின் அஞ்சல், ரீடர், மூலம் இணைத்துக் கொண்டவர்களோடு, வளர்ச்சியின் நீட்சியாக ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக், கூகுள் பஸ் மூலமாக ஏராளமான நண்பர்கள் எனக்கு தொடர்ச்சியாக அறிமுகமாகிக் கொண்டு இருக்கிறார்கள். பல மேடு பள்ளங்களைக் கடந்து, ஓரளவுக்கேனும் எழுதக்கற்றுக் கொண்டு நாளை முதல் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றேன்.
இந்த சமயத்தில் மூன்று பேர்களுக்கு என் முதன்மையான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். தமிழ்மணம், இன்ட்லி, தமிழ்வெளி நிர்வாக குழுவினருக்கு அதிலும் தமிழவெளி நண்பர் புருஷோத்தமன் என் மேல் கொண்ட தனிப்பட்ட அக்கறைக்கு மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மற்றவர்கள் போல வேறு எந்த தளத்திலும் நான் இணைப்பதில்லை. காரணம் அதற்கான நேரம் இருப்பதில்லை. மேலும் நேரிடையாகவே உள்ளே வருபவர்களின் எண்ணிக்கையில் உயர்ந்து கொண்டேயிருப்பதால் இந்த சிறிய அங்கீகாரமே எனக்கு போதுமானதாக இருக்கிறது.
இந்த கட்டுரை வேறொரு வடிவத்தில் வந்திருக்க வேண்டியது. முக்கியமான நண்பர்களிடம் உறுதியளித்தபடி அதை செயல்படுத்த முடியவில்லை. காரணம் தமிழ்மணம் குறித்து திரு. செல்வராசுவிடம் உரையாடி பதில்கள் வாங்கி வெளியிடலாம் என்று நண்பர்களிடம் பேசி வைத்திருந்தேன். ஆனால் மே 17 இயக்கம் தொடர்பாக அவருக்கு அனுப்பிய மின் அஞ்சல், மற்றும் அவரின் தொடர் பயணத்தில் நேரம் கிடைக்காத காரணமோ? இந்த முறை நான் நினைத்தபடி செயல்படுத்த முடியவில்லை. நிச்சயம் அதை செய்வேன்..
சுயமோகம், சுயவிளம்பரம், அதிக சுயபுராணம் எதுவுமின்றி இந்த வலைபதிவுகளை முடிந்தவரைக்கும் செய்திகளை கடத்தும் ஊடகமாகத் தான் கருதுகின்றேன். வெகுஜன ஊடகத்தை விட இந்த வலைபதிவுகளின் உண்மையான மதிப்பை இன்னும் சில ஆண்டுகளில் தமிழர்கள் உணர்ந்து கொள்ளக்கூடும். பிரபல்யமான தொலைக்காட்சிகள் கூட செல்லமுடியாத தீவுப் பிரதேசங்களில் இந்த வலைபதிவுகள் வெளியிட்ட அடுத்த நிமிடங்களில் பார்க்க, படிக்க வாய்ப்புள்ள இந்த ஊடகத்தின் மதிப்பை உணர்ந்து செயல்படுவர்களும் இருக்கிறார்கள்.
என் வீட்டு தோட்டத்தின் வெளியே திரிந்த சிட்டுக்குருவி ஒன்று ஒவ்வொரு நாளும் அறைக்குள் வர பிரயாசைப்பட்டுக் கொண்டிருப்பதை பல முறை கவனித்துள்ளேன். கண்ணாடி ஜன்னலை முட்டி முட்டி முயற்சிப்பதைப் போலத் தான் இந்த எழுத்துப் பயணம் எனக்கு பலவற்றை உணர்த்திக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு விசயத்தையும் தொட ஆரம்பிக்க, அதைப் பற்றிய தேடல் தொடங்க அவற்றைக் குறித்து எழுதத் தொடங்கிய பின்பு தான் சரித்திர அறிவும், அதிக அளவில் சமூக அறிவும் எனக்கு கிடைக்கப் பெற்றது.
பொருள் தேடுவதும், கிடைத்த பொருளை காப்பாற்றுவதுமே இப்போதைய சமூகத்தில் முக்கியமாக இருக்கிறது. அதனை வைத்தே இங்கே ஒவ்வொரு மனிதர்களுக்கும் மதிப்பீடு கிடைக்கின்றது. மனிதர்கள் அத்தனை பேர்களுமே சந்தைச் சரக்காக இருக்கும் சூழ்நிலையில் எனக்குள் உருவாகும் மன அழுத்தத்தை போக்க இந்த எழுத்துப் பயிற்சி பலவற்றையும் எனக்கு கற்றுத் தந்துகொண்டு இருக்கிறது..
இந்த வலைபதிவுகளில் எழுதிக் கொண்டிருப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் படிப்பவர்களின் சிந்தனைகளில் முழுமையான மாறுதல்களை உருவாக்க முடியாத போதும்கூட அவரவர் கொண்ட சிந்தனைகளை உரசிப் பார்க்கக்கூடிய வகையில் என் எழுத்துக்கள் இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே ஒவ்வொன்றையும் எழுதியுள்ளேன். தொலை தூரத்தில் இருந்து திடீர் என்று அழைத்து பேசியவர்களும், தொடர்பில் வரும் நண்பர்கள் பேசும் உரையாடலின் மூலமே மட்டுமே பலரும் நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர முடிகின்றது.
குறிப்பாக தெகாவுடன் நாலைந்து நாட்கள் அடர்ந்த காட்டுக்குள் சென்று ஒரே வயது ஒத்த சிந்தனைகளுடன் அலைந்து திரிந்து உரையாடிய உரையாடல்கள் வாழ்வின் கடைசிவரைக்கும் என்றும் என் மனதில் இருக்கும்.
இந்த இரண்டாவது வருட இறுதியில் என் எழுத்துக்கு பல அங்கிகாரங்கள் கிடைத்துள்ளதை இப்போது நினைத்துப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பு, இரண்டு தமிழ்மண விருது அங்கீகாரம், வினவு புத்தகத்தில் வந்த கட்டுரை அச்சு ஊடக அங்கீகாரம், புதிய தலைமுறை அட்டைப்படக் கட்டுரை அங்கீகாரம், தொலை தூரத்தில் இருந்து அழைத்துப் பேசியவர்களின் உணர்வு பூர்வமான உரையாடல்கள், வலைபதிவுகளின் மூலம் அறிமுகமாகி குடும்ப அங்கத்தினராக மாறியவர்கள், பல துன்பங்களில் தோள் கொடுத்து சுமந்து நடந்து பாக்கியவான்கள் என்று ஏராளமான ஆக்கபூர்வமான நிகழ்வுகள் நடந்தேறியுள்ளது. நான் எப்போதும் விரும்பி வாசிக்கும் 4 தமிழ்மீடியா குழுமம் அவர்களின் இந்த ஆண்டு நிறைவு நாளில் வெளியிட என்னிடம் ஒரு கட்டுரை வாங்கியுள்ளார்கள்.
திருப்பூரில் பத்திரிக்கையாளராக இருக்கும் நண்பர் மணி நான் ஏற்கனவே திருப்பூர் பற்றி தொடராக எழுதியுள்ள கட்டுரைகளில் ஒன்றான நம்பி கை வை என்ற கட்டுரையை அவரே தேர்ந்தெடுத்து மாலைமலர் (என்று தான் நினைக்கின்றேன்) தொழில் மலரில் வரப்போகின்றது என்று சொல்லியுள்ளார். எனது தளத்தில் மற்றவர்கள் போல் பூட்டு எதுவும் போடவில்லை. ஆனால் வந்து படித்தவர்களிடம் அதிகம் வசவுகள் வாங்காமல் நெசவு துணி போல் உருவான கட்டுரைகள் ஒவ்வொன்றும் எனக்கு ஏராளமாய் கற்றுத் தந்துள்ளது
ஈழம் பற்றி நான் அதிகமாக எழுதக் காரணம் அதைப்பற்றி தான் இரண்டு வருடங்களில் நிறைய படித்துள்ளேன்.
மேலும் சென்ற தலைப்பில் சார்வாகன் கொடுத்துள்ள விமர்சனத்தைப் பாருங்க. அது தான் முக்கிய காரணம். என்னுடைய புத்தகங்கள் பதிப்பகத்தில் இன்னும் உயிர்ப்போடு தான் இருக்கிறது. கண்டிப்பு வாத்தியாராக இருப்பதாலும், அவர்களின் கடந்த ஆறு மாத கவனங்கள் தொல்காப்பியம் என்ற 3000 பக்கங்கள் உள்ள புத்தகத்தில் இருப்பதாலும் மட்டுமே தாமதம். இதற்கிடையே அணைவருக்கும் தெரிந்த பிரபலமான நிறுவனத்தில் உள்ள பொறுப்பாசிரியர் அடிமைகள் குறித்து எழுதச் சொல்லியிருந்தார். தெரியாத விசயங்களைப் பற்றி எழுதும் போது எத்தனை சவாலானது என்பது உணர்ந்து கொண்டேன்.
பத்து அத்தியாயங்களுக்கு மேல் என்னால் நகர்த்த முடியவில்லை. அவரும் பொறுமையாக பலவிசயங்களை எனக்கு கற்றுத் தந்துள்ளார். அவருக்கு என் வணக்கம். ஆனால் இதன் மூலம் தமிழ்நாட்டில் குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டங்களில் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த தாழ்த்தப்பட்ட தமிழர்களின் அவலவாழ்க்கையை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
மூன்று பெண் குழந்தைகளின் பெயர்களின் இறுதியில் தேவி என்று பெயர் வருவதால் எனது ஆசான் மூத்த பத்திரிக்கையாளர் முத்து முருகேசன் தான் தேவியர் இல்லத்து குழந்தைகள் நலமும் வளமும் பெற வாழ்த்துக்கள் என்று ஒரு முறை குழந்தைகளின் பிறந்த நாளின் போது அவர்களின் நோட்டில் எழுதிக் கொடுத்து வாழ்த்துரைத்தார்.
அதையே இந்த வலைதளத்திற்கு பெயராகவும் வைத்துள்ளேன். வேறெதும் சிறப்பான காரணங்கள் ஒன்றுமில்லை.
2004 முதல் எழுதிக் கொண்டிருப்பவர்களின் தளத்தை கூகுளில் தேடும் போது அவர்கள் தளத்தில் மாதவாரியான விபரங்களையும் பார்க்க முடியும். கடந்த சில மாதங்களாக தேவியர் இல்லத்திற்கும் அந்த அமைப்பை கூகுள் உருவாக்கியுள்ளார்கள். இது தவிர நேற்று அவர்களிடம் இருந்து எனது தளத்தின் ஒரு வருட செயல்பாடு குறித்து ஒரு நீண்ட அறிக்கை வந்துள்ளது. அது உங்களின் பார்வைக்கு. நிறைய விசயங்களைப் பற்றி குறிப்பாக அரசியல் பற்றி எழுத வேண்டும் என்று யோசித்து வைத்திருந்த அத்தனையும் உடல் நல குறைவால் எழுதமுடியவில்லை. காரணம் நான் தேர்தல் சமயத்தில் எழுதிய கட்டுரைகள் அத்தனையும் ஒரு முறை படித்துப் பாருங்கள்.
அதன் நம்பகத்தனமை உங்களுக்கு பல புரிதல்களை உருவாக்கக்கூடும்.
மறுபடியும் தொழில் வாழ்க்கையில் இப்போது மீண்டும் குறியீட்டுப் புள்ளிகள் உயர்ந்து கொண்டே இருப்பதால் இதற்கென்று தற்போது அதிக நேரம் ஒதுக்க முடியவில்லை. படிப்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவாகவே போய்க் கொண்டு இருக்கிறது. எதையும் முழுமையாக தெரிந்து கொள்ளாமல் எழுதி என்ன ஆகப்போகின்றது?
.
இரண்டு வருடங்களுக்கு முன்பு என்னை வேடிக்கையாக பார்த்துக் கொண்டிருந்த குழந்தைகளின் கையில் இப்போது இந்த மடிக்கணினி விளையாட்டுப் பொருளாக மாறி என்னை பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின ஆர்வத்தை சுதந்திரத்தை கெடுக்க விரும்பாமல் பெரும்பாலும் வீட்டுக்குள் வந்தவுடன் தூங்கத்தான் நேரமிருக்கின்றது.
ஒரு சிறிய இடைவெளிக்குப்பிறகு நான் பலவற்றையும் உங்களிடம் பகிர்ந்து கொள்கின்றேன். பலரும் சென்ற கட்டுரையின் போதே தங்கள் வாழ்த்துக்களை தெரியப்படுத்தியிருந்தார்கள்.
அணைவருக்கும் என் மரியாதையை தெரியப்படுத்திக் கொள்கின்றேன். கூகுள் ஆண்டவர் ஒருவரின் ஜாதக விபரங்கள் போல் நம் தளத்தைப்பற்றி அக்குவேறு ஆணிவேறாக பிரித்து பிரித்து ஏராளமான விசயங்களைக் கொடுத்துள்ளார்கள். இந்த ஒரு விசயம் மட்டும் போதுமானது.
நமக்கு ஓட்டு முக்கியமா? ஈ மொய்ப்பது முக்கியமா? பிரபல்யம் என்ற பட்டம் முக்கியமா? அல்லது பலருக்கும் நமக்கு தெரிந்த, படித்த விசயங்களை, நாம் வாழும் இடத்தில் நடக்கும் சம்பவங்களை இந்த வலைபதிவுகள் மூலம் பகிரிந்து கொள்வது முக்கியமா என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.
Traffic Sources
.
% Visits from Sources | 11/1/09 - 2/1/10 | 11/1/10 - 2/1/11 | Difference |
---|---|---|---|
Direct | 36.5% | 36.8% | +0.3% |
Referral | 21.0% | 19.4% | -1.6% |
Search Engines | 27.0% | 28.0% | +1.0% |
Other | 15.5% | 15.8% | +0.3% |
முதல் வாழ்த்து
ReplyDeleteசெந்தில் எப்பூடி? ரொம்ப ஆச்சரியம் தான் போங்க.
ReplyDeleteஹா ஹா ட்விட்டர்ல பார்த்து வந்தேன் சார். கலக்குங்க..
ReplyDelete>>வலைப்பூவில் தொடக்கத்தில் எழுத வருபவர்களும் திரைப்படங்களைப்பற்றி எழுதுவது தான் சரியாக இருக்கும் என்று தங்கள் எழுத்துப்பயணத்தை திரை சமாச்சாரங்களில் மட்டும் கவனம் செலுத்தி அதன் பாதையிலே போகத் தொடங்கி விடுகிறார்கள்.
ReplyDeleteரொம்ப அடிக்காதீங்க சார். வலிக்குது ஹா ஹா
>ஆனால் என்னைப் பொறுத்தவரையில் படிப்பவர்களின் சிந்தனைகளில் முழுமையான மாறுதல்களை உருவாக்க முடியாத போதும்கூட அவரவர் கொண்ட சிந்தனைகளை உரசிப் பார்க்கக்கூடிய வகையில் என் எழுத்துக்கள் இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே ஒவ்வொன்றையும் எழுதியுள்ளேன்.
ReplyDeleteஆஹா. செம
>>>>>. எனது தளத்தில் மற்றவர்கள் போல் பூட்டு எதுவும் போடவில்லை.
ReplyDeleteஹி ஹி ஹி
>>பலருக்கும் நமக்கு தெரிந்த, படித்த விசயங்களை, நாம் வாழும் இடத்தில் நடக்கும் சம்பவங்களை இந்த வலைபதிவுகள் மூலம் பகிரிந்து கொள்வது முக்கியமா
ReplyDeleteகுட் ஒன்
மகிழ்ச்சி. வாழ்த்துகள். தனித்துவமான சிந்தனைகளால், எழுத்துகளால் சிறப்பான இடத்தை பிடித்து இருக்கிறிர்கள். ஆயிரத்தில் ஒருவன் என்பது போல வலை உலகில் இப்படி அரிய லிஷயங்களை எழுதுவது நீங்கள் ஒருவரே. தொடரட்டும் உங்கள் பணி.
ReplyDeleteஜோதிஜிக்கு என் இதய வாழ்த்துக்கள். தங்கள் தனித்துவமான பயணம் நீளவும், தொடர் வெற்றிப் பயணமாக அமையவும் என் பிரார்த்தனைகள். வாழி நலம் சூழ....
ReplyDeleteமூன்றாம் ஆண்டு நிறைவுப் பதிவு
ReplyDeleteமனந் திறந்த பதிவாகவும்
வழிகாட்டும் பதிவாகவும்உள்ளது
தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்
மனச தொறந்து பொசுக்கின்னு இங்கன கொட்டி வைச்சிட்டியளே!
ReplyDeleteஇந்த வேகத்தோடவே நடையை தொடருங்க. எத்தனை பெரிசா இருந்தாலும் எழுத்துக்கும், மனசுக்கும் நேரடி தொடர்பு இருக்கதாலே வாசிக்கிறவிங்களுக்கு அயர்ச்சியே கொடுக்கிறதில்ல.
அப்படித்தான் இந்த கட்டுரையும் இருந்திச்சு. வாழ்த்துகள், ஜோதி! தொடர்ந்து ரொம்ம்ம்ம்ப நல்லவிங்களுக்கு கெட்டவனாவே இருங்க! :)
மனமார்ந்த இனிய பாராட்டுகள். மூன்றாவது வருடத்தின் முதல் 'அடி' பலதையும் தொட்டுச் செல்கிறது. மகிழ்ச்சி.
ReplyDeleteதொடர்கிறோம்.
என்றும் அன்புடன்,
துளசி.
வாழ்த்துக்கள் சார், தொடர்ந்து வருவோம்....!
ReplyDeleteசில தினங்களுக்கு முன்னர் ஒரு பிரவுசிங் செண்டரில் உங்கள் தளத்தை திறந்தபோது அந்த ஆச்சர்யத்தை பார்த்தேன்.(கூகுள் விஷயம்).வலைப்பதிவு வைத்திருப்பது பலருக்கு பெருமையளித்திருக்கிறது.ஆனால் ஜோதிஜியால் பதிவுலகம் பெருமையடைகிறது.இதயங்கனிந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துகள் அன்பின் ஜோதிஜி...கற்றுக்கொண்டே பின் தொடர்கிறேன்.மிக்க மகிழ்ச்சி !!!
ReplyDelete//எத்தனை பெரிசா இருந்தாலும் எழுத்துக்கும், மனசுக்கும் நேரடி தொடர்பு இருக்கதாலே வாசிக்கிறவிங்களுக்கு அயர்ச்சியே கொடுக்கிறதில்ல//.
ReplyDeleteஉண்மை தான் ..வாழ்த்துக்கள் ,பின்னூட்டம் என்று இடவில்லை என்றாலும் வாசித்தே வருகிறேன் ..தொடர்ந்து உடலும் உள்ளமும் நன்றாக இருக்க வாழ்த்துக்கள்
வணக்கம் டாக்டர் சுனில் கிருஷ்ணன். உங்களின் உள்ளார்ந்த அன்புக்கு நன்றி.
ReplyDeleteதொடர்ச்சியாக வந்தாலும் ஒரு மறைபொருளாகவே இருக்கீங்க தவறு. உங்களை யார் என்று கண்டு கொண்டு விட்டேன். உங்களுக்குத் தெரியுமா?
சண்முகவேல் மிக்க நன்றி. இதைப்பற்றி எழுதியதற்கு சுயபுராணம் என்பதைவிட வலையுலக மாயை என்பது குறித்து பலருக்கும் புரிய வைக்க புதிதாக எழுத வந்து கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு நம்பிக்கையை உருவாக்குவதற்காக மட்டுமே.
ஆபிசர் வணக்கம். நீங்கள் என் தொடர் வாசகர் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் மின் அஞ்சலில் வந்து கொண்டிருக்கும் உங்கள் சமீப கட்டுரைகள் எதுவும் சிரிக்க வைப்பதில்லை. உங்கள் நகைச்சுவை உணர்வு காணாமல் போய்க் கொண்டு இருக்கிறது.
மிக்க நன்றி டீச்சர். இன்னும் பல விசயங்கள் விட்டுப் போய் விட்டது(?)
ReplyDeleteதெகா கடைசி வரி ரொம்பவே சிரிப்பு சிறப்பு,
மிக்க நன்றி ரமணி.
அஸ்வின் ஜி உங்கள் அன்புக்கு நன்றி.
நன்றி தமிழ்உதயம் வித்யாசமான கூர்மையான விமர்சகர்களில் வலையுலகில் நீங்களும் ஒருவர்.
செந்தில் கலக்கிட்டு போயீட்டீங்க. ம்ம்ம்.....
ஜோதிஜி அவர்களுக்கு இது என் முதல் பின்னூட்டம் நீங்கள் தொடர்ந்து எழுத எனது வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள்..
ReplyDeleteமகிழ்ச்சி ஜோதிஜி.. தொடர்ந்து எங்களுக்குகாக உழைப்பதில் உங்கள் உடல்நலனை கவனிக்காமல் விட்டு விடாதீர்கள் :)
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பா...!
ReplyDeleteஉங்கள் வலைதளத்தை தொடக்கம் முதல் தொடர்ந்து வருவதை நட்ப்புடனும் பெருமையுடனும் உணர்கிறேன்...
ஈழம் சம்பந்தமாக பல அறிய மற்றும் வித்யாசமான கோணங்களில் புலிகள் எண்ணத்தை வெளிப்படுத்தியது என்றே கொள்ளலாம்
என் எழுத்துக்கள் சுஜாதாவை நினைவுபடுத்துகிறது என்றோ அல்லது பாலகுமாரனை நினைவுபடுத்துகிறது என்றோ
சுய சொரிதல் செய்து பிரபலமடையாமல் ...சொல்ல வந்த கருத்துக்களின் மூலமே பிரபலமடைந்த எழுத்துக்கள் தேவியர் இல்லதினுடயவை ...
யாருக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ எழுதாமல் சொல்ல வந்ததை வெளிப்படையாக நேரிடையாக தைரியமாக பட்டவர்த்தனமாக வெளிப்படுத்திய
தளம் தேவியர் இல்லம்.
முகஸ்துதி தேவையில்லை. ஆனால் மனந்திறந்த மனதிற்குள் உள்ள கருத்துக்களை வெளிப் படுத்துவதில் தவறேதும் இல்லை...அதையே இங்கே நான் எனது கருத்துகளாக வெளிப் படுத்துகிறேன் ....
இன்னும் பல ஆண்டுகள் கடக்கும் போதும் தமிழரின் வாழ்வியல் போராட்டம் எவ்வாறு நடந்தேறியது ஈழத்தில் என்பது தேவியரின் தளத்தின் மூலமே மிக சரியாக அறிந்து கொள்ள முடியும் என்பது என்னை போன்ற பெரும்பாலான தேவியரின் வாசகர்களின் கருத்துக்கள்....
இதை போன்றே நிறைந்த தன்னடக்கதொடும் தேர்ந்த பொறுமையுடனும் தைரியத்துடனும் தெளிந்த பார்வையுடனும் மார்பு நிமிர்த்தி செல்ல வேண்டும்
என்பதே என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்களாக தேவியர் இல்லத்தின் மீது செலுத்துகிறேன்............!
வாழ்த்துக்கள் நண்பா...!
வினவின் கதவுகளைத் திறந்து உள் நுழைந்து உந்துதலோடு வெளியே வந்த பிறகு நான் நுழைவது தேவியர் இல்லத்தில்தான். தேவியர் இல்லம் ஜோதிஜி அவர்களை யார் என்று தெரியாது. ஆனாலும் எனது எழுத்துக்களைத் தொடர்ந்து படித்து எனக்கு உற்சாமூட்டியவர்களில் முக்கியமானவர் ஜோதிஜி அவர்கள். அதற்காக நான் அவருக்கு முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteஇரண்டு ஆண்டு வலைப்பதிவு அனுபவத் தொகுப்பு மிகச் சிறப்பாக எழுதப் பட்டுள்ளது. அனுபவத் தொகுப்பு என்றாலும் மிக எளிமையாக ஒரே மூச்சில் படிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. தொடர்ந்து மேலும் பல சிறந்த பதிவுகளை உங்களிடமிருந்து வலையுலகம் வாங்கிக் கொள்ளும்.
வெட்டி அரைட்டைக்காக பலர் பதிவுலகை பயன்படுத்துகிறார்கள். இவர்களின் மொக்கைப் பதிவுகள் எல்லாம் ஒரு நாள் கூவத்தில் வீசப்படும். வலை உலக வருங்காலம் இனி நம் கையில். கரம் சேர்ப்போம். களம் காண்போம். நாம் கோரும் மாற்றம் வந்தே தீரும்.
வாழ்த்துகள்!
Wish you all the best and keep going !!
ReplyDeleteவாழ்த்துக்கள் சார்
ReplyDeleteவலையுலகில் உங்களுக்கென்று ஒரு தனி இடம்.
இக்பால் செல்வன் மட்டும் உங்களை நெருங்கிக் கொண்டிருக்கிறார்.
வாழ்த்துக்கள்.......வாழ்த்துக்கள்.......வாழ்த்துக்கள்........
வணக்கம் ஜி
ReplyDeleteசொல்லவே இல்ல,.....
வழக்கம் போல கலக்கிப்புட்டீங்க
மனசுக்கும், எழுத்துக்கும் வித்தியாசனம் இல்லாமல் இருந்தால் எல்லாமே நல்லாத்தான் இருக்கும் என தெளிவா தெளியவச்சு இருக்கீங்க.
ஒரு பக்கம் வயிறு கப கப னு எரிந்தாலும் வாழ்த்துக்கள்.
// வயிறு ஏன் எரியிதுனு உங்களுக்கு தெரியும்//
இராஜராஜன்
வாழ்த்துகள் சார்..தீவிரமான அலசல் கட்டுரைகளைத் தரும் தங்கள் பணி மேலும் சிறக்கட்டும்.
ReplyDeleteவாழ்த்துகள்____ ( அண்ணனா? நண்பனா?)
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜோதிஜி ...
ReplyDeleteஉங்கள் வலைப்பதிவுகள் மூலம் இன்னும் நாங்கள் பல செய்திகளைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறோம் :)
மனம் நிறைந்த வாழ்த்துகள் ஜீ.விரிவான உங்கள் எழுத்துக்களின் ரசிகை நான்.சிலசமயங்களில் எனக்குப் புரியாமல்கூட இருக்கும்.ஆனால் எத்தனையோ பேருக்குப் போய்ச் சேர்ந்திருக்கும் அத்தனை விஷயங்களும்.இன்னும் இன்னும் நிறைய எழுதுங்கோ.அன்போடு பின் தொடர்கிறேன் !
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜோதிஜி!
ReplyDeleteதொடருங்கள்.. எழுதுங்கள்..
வாழ்த்துகள், இன்னும் எழுதுங்கோ. =))
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே.தொடரட்டும் உங்கள் பணி
ReplyDeleteஅரவரசன்.
All the best Sir.
ReplyDelete//வலையுலகில் இன்று வரையிலும் எழுதிக் கொண்டிருப்பவர்களின் ஒரே கருத்து படிப்பவர்களுக்கு வசதியாக குறிப்பிட்ட விசயங்களை நீளம் அகலம் பார்த்து எழுத வேண்டும். இல்லாவிட்டால் அது வந்து படிப்பவர்களை அடுத்த முறை வராமல் செய்து விடும் என்று கருதிக் கொண்டிருக்கிறார்கள். .
ReplyDeleteஆனால் இதுவரைக்கும் அந்த விதியை உடைப்பதில் தான் கவனம் செலுத்தியுள்ளேன். வெற்றியும் அடைந்துள்ளேன்//
ஜோதிஜி நீங்கள் கூறுவது உண்மை தான் என்றாலும் நீங்கள் இதிலும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் கூடுதல் வாசகர்களை பெற முடியும் என்பதும் உண்மை. நேர்மையாக எழுதுவேன் என்பதில் வளைந்து கொடுக்க வேண்டிய அவசியமில்லை ஆனால் இதைப்போல விசயங்களில் கொஞ்சம் பிடிவாதத்தை தளர்த்திக்கொள்ளலாம்.
மேற்கூறியவை உங்கள் எழுத்துக்கு மட்டுமே கிடைத்த அங்கீகாரமல்ல உங்கள் நடவடிக்கை மற்றவர்கள் அனைவரும் அதிக கவனம் செலுத்தும் சினிமா துறை பற்றி எழுதாமை, மற்றவர்களிடம் நீங்கள் நடந்து கொள்ளும் விதம், நாகரீகமான விவாதம் போன்றவையும் ஒரு காரணம்.
//குறிப்பாக தெகாவுடன் நாலைந்து நாட்கள் அடர்ந்த காட்டுக்குள் சென்று ஒரே வயது ஒத்த சிந்தனைகளுடன் அலைந்து திரிந்து உரையாடிய உரையாடல்கள் வாழ்வின் கடைசிவரைக்கும் என்றும் என் மனதில் இருக்கும்.//
காட்டுக்குள்ள உரையாடலா! நல்லாத்தான் உரையாடி இருக்கீங்க :-)
உங்களோட ஒரு சில இடுகைகளின் தலைப்பு ரொம்ப அழாக இருக்கும். எகா: நம்பி கை வை, சாயமே அது பொய்யடா :-)
தேவியர் இல்லம் பெயர் விளக்கம் நல்லா இருக்கு.
//நமக்கு ஓட்டு முக்கியமா? ஈ மொய்ப்பது முக்கியமா? பிரபல்யம் என்ற பட்டம் முக்கியமா? அல்லது பலருக்கும் நமக்கு தெரிந்த, படித்த விசயங்களை, நாம் வாழும் இடத்தில் நடக்கும் சம்பவங்களை இந்த வலைபதிவுகள் மூலம் பகிரிந்து கொள்வது முக்கியமா என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்//
இது தான் மேட்டர் :-)
ஜோதிஜி நான் இன்னும் விரிவாக உங்கள் அனுபவங்களை கூறுவீர்கள் என்று நினைத்தேன். பரவாயில்லை :-)
மென்மேலும் இதே போல வழி மாறாமல் நாகரீகம் கடைப்பிடித்து பட்டயக் கிளப்ப என் அன்பான வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் ஜோதிஜி. தேவியர் இல்லத்துக்கான காரணம் கண்டுக்கொண்டேன்.
ReplyDeleteஎனக்கு இன்னைக்குதான் தெரியும்...தேவியர்இல்லம் பெயர்காரணம்...நன்றாக இருந்தது.. நீங்கள் எனக்கு போட்ட பின்னுட்டததை எத்தனை தடவை படித்தேன் என்று எனக்கே தெரியாது... காரணம் அந்த பின்னட்டத்தில் இருந்த வார்த்தைகளில் இருக்கும் சினேகம்...
ReplyDeleteஇந்த பதிவுல கூட சில பின்னுட்டங்கள் படித்த போது ஒரு மெல்லிய புன்னகை என் உதட்டில் பரவியது....
நல்லா எழுதலைன்னா புறக்கணிச்சிடுவாங்க...அது யாரா இருந்தாலும்... என் மீதான விமர்சனங்களுக்கு புறக்கணிப்பே எனது பதில்...
எனக்கு தெரிந்து நீங்கள் எழுதிய திரூப்பூர் சாயபட்டறை கட்டுரையை படித்து விட்டு அசந்து போய் விட்டேன்..அப்போதே போன் செய்து உங்களிடம் பேசினேன்.. வெகு நாட்களாய் பழகிய நட்பு போல் அந்த உரையாடல் இருந்தது,..
ரொம்ப நீட்டா எழுதற ஆள் நீங்க.... நான் எல்லாம் அப்படி இல்லை ரொம்ப கலிஜ் பார்ட்டி...
ஆனா தொடர்வாசிப்பு இல்லை.. இனி வாசிக்கின்றேன்...
உங்கள் தளத்தில் நான் போடும் முதல் பின்னுட்டம் இது என்று எண்ணுகின்றேன்...
இன்னும் மென்மேலும் தொடர்ந்து எழுத எல்லாம்வல்ல பரம்பொருள் நேரத்தை கொடுத்து, உடல் பலத்தை கொடுத்து அருள் புரியட்டும்
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நேற்றே போட வேண்டிய பின்னூட்டம்!ஜோதிஜி வாசிப்புக்கு நேரம் ஒதுக்க வேண்டுமே என்பதால் தாமதம்:)
ReplyDeleteநன்றாக எழுதியுள்ளீர்கள்.உங்கள் எழுத்து மென்மேலும் ஒளிர வாழ்த்துக்கள்.
மனமார்ந்த இனிய வாழ்த்துக்கள்...
ReplyDeleteஉங்கள் பதிவுகள் மூலம் இன்னும் நாங்கள் பல புதிய செய்திகளை அறிந்துக்கொள்ள ஆர்வமாக இருக்கிறது.
தொடருங்கள்.....தொடர்கிறேன்....
நன்றி சார்.
நன்றி தாமஸ் ரூபன். என் மேல் நீங்கள் கொண்டுள்ள அன்பை பல முறை நினைத்து ஆச்சரியப்பட்டு இருக்கின்றேன். உங்கள் தேடலுக்கு என் வாழ்த்துக்ள்.
ReplyDeleteநடராஜன் சில விஷங்களை இந்த இடத்தில் எழுத முடியாது. ஆனால் உங்களை என் வாழ் நாளுக்குப் பிறகும் கூட என் தேவியர்கள் கூட நினைத்துப் பார்ப்பார்கள். வளர்க நலமுடன்.
சேகர் இப்போது தான் உள்ளே நுழைந்தேன். உங்ககிட்டே பிடித்ததே அப்படியோ தோள்ல கைபோட்டு பேசுவது போல சும்மா புகுந்து விளையாடுவது. சிரித்துக் கொண்டேயிருக்கின்றேன்.
நன்றி சேகர்.
வருக இளங்கோ.
சத்ரியன் குறுகிய காலத்தில் ரொம்பவே நெருங்கி விட்டீங்க. வருக வருக.
ஜோதிஜி நான் இன்னும் விரிவாக உங்கள் அனுபவங்களை கூறுவீர்கள் என்று நினைத்தேன். பரவாயில்லை :-)
ReplyDeleteகிரி நீங்க சரியான ஆளு. உண்மையிலேயே நீங்க சொன்னது தான் சரி. நடுஇரவில் டைப்ரைட்டர் சப்தம் போல மனதில் ஓடிக் கொண்டேயிருக்க எழுந்து வந்து உட்கார்ந்த உடல் சோர்வு (காய்ச்சல்)காரணமாக நான் நினைத்தபடி எழுத முடியல. ஆனால் ரொம்ப சிநேகமாக மாறிட்டீங்க. ரஜினி ஆதரவு விருப்பம் என்ற உங்க கொள்கையைத்தவிர எனக்கு உங்கள் எழுத்துக்களை ரொம்பவே விரும்பி மின் அஞ்சலில் சேமித்து வைத்துள்ளேன். ஆனால் இந்த கூகுள் ப்ளஸ் தான் இன்னமும் நமக்கு வழி திறக்க மாட்டேன் என்கிறது. கடிதம் எழுதியுள்ளேன் உங்களுக்கு இது குறித்து.
நன்றி நாகா இந்து, செந்தில் குப்புசாமி.
அனாமிகா ரொம்ப இயல்பாக வந்துட்டு போயிட்டீங்கோ.
ஹேமா நீங்க சொல்வது உண்மையும் கூட. 4 வது வருட தொடக்கத்தில் இன்னும் எளிமையாக எழுத கற்றுக் கொள்ள முயற்சிக்கின்றேன்.
நன்றி தமிழ் மீடியா குழுமத்திற்கும் ஆசிரியர் மலைநாடன் அவர்களுக்கும்.
தனசேகர் ஒரு வழியா கோபம் தீந்துருசசுன்னு நினைக்கின்றேன். பாருங்க இன்றைக்கு பெஸ்ட் ராமசாமியும், ஈஸ்வரனும் தோல்விக்கு நான் காரணம், இல்லை நீ தான் காரணம் என்று குடுமிபிடி சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க. நான் எழுதியபடி ஒரு சீட்டு கூட கிடைக்கலை பாத்தீயளா? உண்மைகள் எப்போதும் சுடும் தனசேகர். மற்றபடி நான் கவுண்டர்களுக்கு எதிரியில்லை.
அப்துல்லா உடம்பால் அண்ணன் உணர்வால் நண்பன்.
ReplyDeleteசெங்கோவி உங்களையும் நான் தொடர்ந்து கவனித்துக் கொண்டு இருக்கின்றேன். உங்கள் ஆழ்ந்த அக்கறைக்கு நன்றிங்க.
இராஜராஜன்
ராஜநடராஜனுக்கு எழுதியது தான் உங்களுக்கும். எழுத்தால் அறிமுகமாகி இதயத்தால் சேர்ந்து என் வாழ்க்கையை அன்பால் சுவீகரித்துக் கொண்ட மாய மன்னர் நீங்க. அடுத்த ஜென்மத்தில் உங்களுக்கு நான் நிறைய செய்ய வேண்டி இருக்கும் என்று நினைக்கின்றேன். அந்த அளவுக்கு இன்று வரைக்கும் எனக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் உங்கள் ஆதரவுக்கு நன்றி.
தம்பி வயதில் உள்ள தொப்பிக்கு என்ற நண்பருக்கு என் நன்றி.
ReplyDeleteநாகா
மறக்காமல் வந்தமைக்கு என் நன்றி. இந்த இடுகை இருக்கும் வரைக்கும் ஒவ்வொரு வருடமும் ராமஜெயம் போலவே உங்கள் பெயரையும் எழுதிக் கொண்டு இருப்பேன். சுந்தர்ராமன் வருவார்? வர வேண்டும்,
ஊரான் உங்களிடம் இருந்து சில விசயங்களைக் கற்றுக் கொண்டு இருக்கின்றேன். சம்பவ கோர்வைகளை நழுவ விடாமல் வார்த்தைகளை தெளிவான முறையில் கடத்துவதில் வல்லவர் நீங்க. குறிப்பாக நகர்புற ஜாதி உணர்வு பல முறை படித்து ஆச்சரியப்பட்டுள்ளேன்.
லெமூரியன்
ரொம்பவே திக்குமுக்காட வைத்து விட்டீங்க. பலமுறை படித்துப் பார்த்தேன். மீண்டும் இதைப் பற்றி எழுத எனக்குள்ளும் சற்று கூச்சமாக இருக்கிறது. வேறென்ன? என் மனமார்ந்த நன்றி. உங்களின் வெள்ளந்தி தனத்திற்கு தேவியர் இல்லம் கடமைப்பட்டுள்ளது. இந்த விமர்சனம் எனக்கு அடுத்த வருடம் வரைக்கும் பொக்கிஷம்.
உங்கள் ஆழ்ந்த அக்கறைக்கு நன்றி சிவா.
ReplyDeleteKHO உங்கள் அன்பான வருகைக்கு என் நன்றி நண்பா.
வேடந்தாங்கல் வாத்தியருக்கு என் வணக்கம்.
நமக்கு ஓட்டு முக்கியமா? ஈ மொய்ப்பது முக்கியமா? பிரபல்யம் என்ற பட்டம் முக்கியமா? அல்லது பலருக்கும் நமக்கு தெரிந்த, படித்த விசயங்களை,//
ReplyDeleteநச் னு சொல்லிட்டீங்க பதிவுலகின், எழுத்தின் மாட்சிமையை..
:-)
ReplyDeleteவாழ்க வளர்க ஜோதிஜி.. மற்றவருக்கும் ஒரு முன்மாதிரியாய்..இதுபோல..
ReplyDeleteமகிழ்ச்சியுடன் வாழ்த்துகள்..
வெகுஜன ஊடகத்தை விட இந்த வலைபதிவுகளின் உண்மையான மதிப்பை இன்னும் சில ஆண்டுகளில் தமிழர்கள் உணர்ந்து கொள்ளக்கூடும். பிரபல்யமான தொலைக்காட்சிகள் கூட செல்லமுடியாத தீவுப் பிரதேசங்களில் இந்த வலைபதிவுகள் வெளியிட்ட அடுத்த நிமிடங்களில் பார்க்க, படிக்க வாய்ப்புள்ள இந்த ஊடகத்தின் மதிப்பை உணர்ந்து செயல்படுவர்களும் இருக்கிறார்கள்.
ReplyDelete/// வணக்கம் ஜோதிஜி..
அனைவரும் ஒரு ஹலோ சொல்லக்கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் புரிகிறது..
வாழ்த்துக்கள்..:))
ஆஜர் சார், பயங்கர பணி ..மன்னிக்கவும் ..இது வரை எழுதியது அபாரம் ...இன்னும் இதை விட நீங்கள் சாதிக்க வேண்டும் ... ஊருக்கு வந்து கொண்டுருக்கிறேன் ... மனமார்ந்த வாழ்த்துக்கள் ... மேலும் மேலும் உயர வேண்டும் உங்கள் எழுத்திலும் மற்றும் உங்கள் தொழில் வளர்ச்சியிலும்
ReplyDeleteநீங்கள் சொல்வது சரிதான் சார். நானும் அப்படித்தான் உணர்கிறேன். நம்மைச் சுற்றியிருக்கும் சூழல்களால் சிலநேரம் அப்படி ஆகிடுதுன்னு நினைக்கிறேன்!
ReplyDeleteம்ம்ம்ம்.... கொஞ்சம் லேட்டாத்தான் வருகிறேன். இருந்தாலும் மூன்றாண்டுகளாய் எழுதி எங்களை அறிவாளிகள் ஆக்கியதுக்கு இனிய வாழ்த்துக்கள். நான் கவனித்த ஒன்றை இப்போ சொல்லிட்டுப் போறன். வரவர உங்க எழுத்தை விமர்சிக்கிறதே கஸ்டமாகிக்கொண்டு போகிறது. எழுத்தின் முதிர்ச்சியை சொன்னேன்.
ReplyDeleteஅப்புறமா நீங்க நித்திரை கொண்டுகொண்டிருக்கிற படம் நல்லாருக்கு!! பதிவு எழுதி களைத்ததும் மேஜையில் தூக்கமா!! :))))
இது மூன்றாண்டு நிறைவு என்பதால் நீங்கள் போட்டிருக்கும் தத்துவப் படங்களை பொறுத்துக்கொள்கிறேன்.
வாழ்த்தோ வாழ்த்துங்க...
ReplyDelete//தனசேகர் ஒரு வழியா கோபம் தீந்துருசசுன்னு நினைக்கின்றேன். //
ReplyDeleteஆஹா ... எனக்கு எந்தவித கோபமும் இல்லை. எனக்கும் கொ.மு.க விற்கும் எந்த சம்பந்தமோ அனுதாபமோ இல்லை :) . நான் ஜாதிக்கட்சியை எதிர்ப்பவன். நீங்கள் சொல்லியதைப் போல நடந்ததில் எனக்கு மகிழ்ச்சியே. நல்ல வேலை முளையிலேயே கிள்ளும் நிலைக்கு வந்து விட்டார்கள். இல்லையென்றால் பா.ம.க போல தொல்லை கொடுத்துக்கொண்டு இருப்பார்கள் ! வந்த ஒரு இடமும் அதிகம் என நினைக்கிறேன்.
பின்னூட்டம் இடாததற்கு ஒரே காரணம் என் சோம்பேறித்தனம் :(. தூங்கற பத்து மணி நேரம் போக, கொஞ்சம் வலை மேய்வதில் ஆர்வமே தவிற, பின்னூட்டம் இடுவதற்கு சோம்பல் :(. நான் பெரும்பாலும் வெட்டியா உட்காந்து விட்டத்தையும் , கணிப்பொறியையும் பார்த்துக்கொண்டு இருப்பவன் :) . மேலும், சிறப்பாக இருக்கும் உங்கள் எல்லா வலைப்பதிவுகளுக்கும் வெறுமனே நல்லா இருக்குனு சொல்ல எனக்குப் பிடிக்கவில்லை :).
உங்கள் வலையை தினமும் படித்து அவ்வபோது முகனூலில் மக்களுக்குப் பகிர்ந்து விளம்பரம் செய்துகொம்டிருக்கிறேன் :). உங்க டிராபிக்ல வற்ற ஐ.பி ல என்னோடது வாரத்துக்கு நாலு நாளாவது இருக்கும் :).
ஜோ, தாமதத்திற்கு மொதல்ல ஒரு மாப்பு! :)
ReplyDeleteநான் சொல்ல நினச்சத எல்லாரும் சொல்லிட்டாங்க.
பரபரப்புக்காக இல்லாமல் நேர்மையான அக்கரையான இடுகைகளுடன் பல முக்கியமான விவாதங்களை எந்த வசைச் சொல்லாடலுமின்றி கண்ணியமாக கருத்துரைக்கும் சுதந்திரம் உள்ள ஒரு தளம் உங்களுடையது.
பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது. தொடருங்கள். வாழ்த்துகள்.
நெருங்கிய ஒரு நண்பனாய் இருப்பதில் மகிழ்ச்சி. ஒரு சந்திப்பு மட்டும்தான் பாக்கி! :))
மகிழ்ச்சியாய் இருக்கிறது நண்பரே,பயணம் தொடர வாழ்த்துகள்.
ReplyDeleteungaludaiya padaippugal anithum then suvaiyanathu.
ReplyDeletethodaratum ungal inya pani
அன்பு சகோ! வாழ்த்துகள் கோடி! உங்கள் எழுத்துப்பயணம் தொடர பிரார்த்தனைகள். உங்களின் எழுத்து சமூக பிரஞ்சையுடன், நியாயங்களை அலசி ஆராயும் பணியையும் செவ்வனே செய்கிறது என்பது எனது தாழ்மையான அபிப்ராயம். வலைப்பதிவு ஆரம்பிக்கும் போது இருந்த ஆர்வம்,தற்போது இருந்தும், தினமும் தூக்கம் தொலைத்து எழுத முடியாத அளவு பணி அழுத்தம் இப்படியான என் போன்றொர் முன், தொடர்ந்து எழுதும் உங்களைப்போன்றொரின் பணி மகத்தானது.தொடரட்டும் உங்கள் பணி
ReplyDeleteசாந்தி லெட்சுமணன்
ReplyDeleteநீங்க சொல்வது உண்மைதான். பல நேரம் இந்த எழுத்துக்காக தூக்கத்தை தியாகம் செய்து தான் எழுதிக் கொண்டு இருக்கின்றேன். அதுவும் அடிப்படை கடமைகளை முடித்து விட்டு இந்தப்பக்கம் வரும் போது தொடக்கத்தில் உடல் சோர்வாகத்தான் இருக்கிறது. எழுதி முடிக்கும் போது கிடைக்கும் போது கிடைக்கும் மனத்திருப்தியே ஒவ்வொரு முறையும் உத்வேகமாய் செயல்பட உதவியாய் இருக்கிறது. நீங்க நீண்ட நாட்களாக எழுதாத போது நானே யூகித்து இருந்தேன். வருகைக்கு நன்றி.
NEDUNJAVADIYAR
வணக்கம் நண்பரே. நன்றி.
ஆசிரியரே நலமா? நன்றி, ஈழத் தொடரில் உங்கள் கருத்தை ஆவலாய் இருந்தேன்.
ஷங்கர் உரிமையாய் உங்கள் கருத்து வேண்டும் என்று பிடிவாதமாய் இருக்கும் போது இந்த தாமதம் என்ன பெரிதான மாப்பு? உங்கள் அக்கறைக்கு நன்றி.
நன்றி தனசேகர். புரிந்துணர்வுக்கும் அக்கறைக்கும்.
தாரபுரத்தான் அய்யா உங்கள் காலைவேளையில் பெரும்பாலும் என் பதிவு மூலம் உங்கள் கடமைகள் தொடங்குகின்றது என்பதை பலமுறை கவனித்துள்ளேன். மேம்போக்காக இல்லாத உங்கள் தொடர்வாசிப்புக்கு மிக்க நன்றி.
ரதி
முதிர்ச்சியா? எனக்கே அதிர்ச்சியா இருக்குங்கோ............ கத்துக்குட்டி.....நான்....
ரொம்ப எழுதினா அடிக்க வருவீங்க.
//மொத்தமாக 330 பதிவுகள் எழுதியுள்ளேன்.//
ReplyDeleteஏறத்தாழ 2 நாட்களுக்கு ஒரு பதிவு!!!
//குறிப்பாக தெகாவுடன் நாலைந்து நாட்கள் அடர்ந்த காட்டுக்குள் சென்று ஒரே வயது ஒத்த சிந்தனைகளுடன் அலைந்து திரிந்து உரையாடிய உரையாடல்கள்//
//இதையே சென்ஷியுடன் ஒரு நாள் முழுக்க தஞ்சை பெரிய கோவிலில் இருந்த போது//
மற்றும் பின்னூட்டங்களுக்கு பதில்கள்.
தொலைபேசி / அலைபேசி களுக்குப் பதில்கள்.
உங்களுடைய 24 மணி நேரம் போதுமா?
அர்ப்பணிப்பு புரிகிறது. அண்ணாந்து பார்க்கிறேன்.
உங்களுக்கு வாழ்த்து சொல்லுமளவிற்கு நான் பெரியவனில்லை, உங்களின் எழுத்துகளின் தாக்கத்தையும் அன்பையும் மேலே உள்ள பின்னூட்டங்களே சொல்லி விடும், வெறுமனே பிளாக்கில் ஒப்பேற்றி கொண்டு இருந்த என்னுடைய சிந்தனைகளிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியவர் நீங்கள்தான், உடனடியாக புரிந்து கொண்டு செயலாற்ற என்னுடைய நிலையும் மனமும் முடியவில்லையென்றாலும் ஒருநாள் கண்டிப்பாக நானும் எழுதுவேன், என்னுடைய வழிகாட்டிகளில் ஒருவராக உங்களை நினைக்கிறேன், உங்களுடன் பேசவும் பழகவும் அனுமதித்ததற்கு என்னால் நன்றியை தவிர வேறு எந்த வார்த்தையும் சொல்ல முடியவில்லை, நன்றி சார், ரொம்ப ரொம்ப நன்றி
ReplyDeleteவாழ்த்துகள்.
ReplyDeleteவரப்பிரசாதம்னு ஏன் சொல்றோம்??
நான் தொடர்ந்து உங்கள் பதிவுகளை வாசித்து வருகிறேன். ஆனால் பின்னூட்டம் இட முடியவில்லை. உங்கள் வலைப்பதிவைப்போல தெளிவான விஷயமுள்ள வலைப்பதிவை இன்னும் பார்க்கவில்லை. வாழ்த்துக்களுடன்.
ReplyDeleteஎம்.ஞானசேகரன்.
Dear Mr.Jothi Ganesan
ReplyDeleteI am Nagarajan from Periyar Colony,Tirupur. I am regularly reading your blog. Once I asked for an appointment with you. But after reading your articles,I could understand how much effort you had put in compiling EALAM related articles. Marvelous and I do not have other words to compliment. In fact I do not had any respect to LTTE since I thought they are the main issue for the civilians. After reading your articles, I understand what a high tech conspiracy the total issue is. Hats off to you. Now I think I do not have any stuff to talk with you. See you and again congrats.
Remain with
R.Nagarajan alais Raju.
வாழ்த்துக்கள்,
ReplyDeleteகொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது.கொஞ்ச நாள் பதிவுலகப் பக்கம் வரவில்லை.என் பின்னூட்டம் பற்றியும் குறிப்பிட்டது மிகிழ்ச்சியாக இருக்கிறது.எனக்கு ஈழம் குறித்த தெளிவான புரிதல் உங்கள் பதிவுகளின் ஊடாகவே புரிந்தது.நன்றி
சார்வாகன்
ReplyDeleteகும்மி சொன்ன மாதிரி நீங்க அடக்கி வாசிக்கும் அறிவு ஜீவி. வேறொன்றும் எனக்குத் சொல்லத் தெரியல.
நாகராஜன் உங்கள் உரையாடலுக்கு நன்றி.
தனி மடலுக்கும் நன்றி.
மிக்க நன்றி ஞானசேகரன்.
பழமைபேசி உங்களுக்கு நான் மாணவன் (தமிழ் மொழியில்)
சுரேஷ் குறுகிய காலத்தில் உள்ளம் கவர் கள்வனாக மாறிவிட்டீங்க.
சீகோ
உங்கள் கணக்குக்கு நன்றி. இந்த ரெண்டு வருடத்தில் ஒரு ஆறு மாதங்கள் எழுதாமல் இருந்து இருப்பேன். வாய்ப்பு கிடைக்கும் போது கும்மிவிட்டு ஓதுங்கி விடுவது என் பழக்கம். ஓய்வு கிடைக்கும் போது விரும்புபவர்கள் வந்து படிக்கிறார்கள்.
அன்பின் ஜோதிஜி மறைக்பொருளா..நானா??? நீங்க வேறங்க ...ஆமா நான் யாரென்று தெரிந்ததா சந்தோசம்.
ReplyDeleteதெகா ...!!!!????
வலைப்பதிவு மூலம் அறிமுகமான பல நண்பர்களில் குறிப்பிடச் சிலரே நெருங்கிய நண்பர்கள் ஆகுகிறார்கள், அவர்களில் நீங்களும் ஒருவர். அதற்குக்காரணம் உங்கள் நல்ல எண்ணங்களை வெளிப்படுத்திக் காட்டும் உங்கள் எழுத்து தான்.
ReplyDeleteமேலும் பல எழுத்துகள் / சமூகம் தொடர்பான சாதனைகள் செய்ய நல்வாழ்த்துகள்
தனித்துவமான பயனுள்ள பகிர்வுகள் அனைத்திற்கும் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். தங்கள்தேவியர் இல்லம் மூலமாக பல அரிய கருத்துக்களை அறிய முடிகிறது..நன்றி..
ReplyDeleteஇந்த வலைத்தளத்தின் பெயர் காரணத்தை தெரிந்து கொள்ள இவ்வளவு படிக்க வேண்டியுள்ளது...
ReplyDeleteஹஹாஹஹா
ஆனாலும் ஒரு ஈர்ப்பு...
சிறப்பு
தொடரட்டும் உங்கள் பணி...
Velusamy...