அஸ்திவாரம்

Thursday, June 30, 2011

ராஜபக்ஷே மகா கெட்டிகாரர்.

இந்த தொடரின் தொடக்கம் இங்கேயிருந்து

தொடர்ந்து வாசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு கேள்வி இயல்பாக எழ வேண்டும்?  அதென்ன ஸ்பெக்ட்ரம் பிரச்சனை, தயாநிதி மாறன் இவருக்குப் பின்னால் உள்ள மலேசிய தொழில் அதிபர் ஆனந்த கிருஷ்ணன் என்று தொடங்கி இப்போது இந்த களம் எங்கங்கோ போய்க் கொண்டேயிருக்கிறது.?கடந்த பல அத்தியாயங்களில் ஆனந்தகிருஷ்ணன் வந்தபாடில்லையே என்ற சந்தேகம் எழு வேண்டும்?  உண்மை தான்.  சர்வதேச தொழில் அதிபர்களின் முதலீடுகள் மட்டும் கனமாக இருக்காது.

அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளுமே மர்மமாகவே இருக்கும். இப்போது இந்த அத்தியாயத்தில் ஒரு இடத்தில் நம்ம ஆனந்த கிருஷ்ணன் தலைகாட்ட வருகிறார்.  அதுவும் எப்படி என்பதை நீங்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். இது தவிர இந்த தொடரின் முக்கிய நோக்கமென்பது இறுதி கட்ட போராட்டத்திற்காக முன்னேற்பாடுகளாக ராஜபக்ஷே என்ன செய்தார்? எதையெல்லாம் சர்வதேச நாடுகளிடம் விட்டுக் கொடுத்து இந்த வெற்றியை பெற்றுள்ளார் என்பதோடு இதன் மூலம் இந்தியா எதிர்காலத்தில் சந்திக்க போகின்ற சவால்கள் தான் நமக்கு முக்கியமானதாகும்.

அதில் ஒரு கதாபாத்திரம் தான் ஆனந்த கிருஷ்ணன்.

சேது சமுத்திர திட்டத்தைப்பற்றி உங்களுக்குத் தெரியும் தானே?

குறிப்பாக திமுக கடந்த மத்திய அரசில் அங்கம் வகித்த போது டி.ஆர்.பாலு தொட்டதெல்லாம் பொன்னாகிக் கொண்டிருந்த காலம்.  கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டோ கொட்டென்று அவருக்கு கொட்டியது. ஆனால் இராமர், வானரம் என்று ஆயிரத்தெட்டு காரணங்கள் சொல்லி அந்த திட்டமும் இறுதியில் அதோகதியாகி பாதியில் நின்று விட்டது.  நமக்கு இப்போது சேது சமுத்திர திட்டம் முக்கிய பிரச்சனையில்லை.  காரணம் இது போன்ற விசயங்களை நிறுத்த உதவிய,  கூலிக்கு மாறடித்த சுப்ரமணியசாமிக்குத் தான் ரொம்ப முக்கியம்.  அவர் நினைத்தபடியே சுபமங்களம் என்று பாடிவிட்டு நகர்ந்து விட்டார்.  நம்மவர்களும் இந்த திட்டத்தின் மூலம் சுருட்டியவரைக்கும் லாபம் என்று அதைப்பற்றி மறந்து விட்டார்கள்.  

2005 ஜுலை 2ந் தேதி இந்த திட்டம் துவங்கப்பட்டது.

மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கியது.

இதே சமயத்தில் 2006 ஆம் ஆண்டு இறுதியில் சீனா மன்னார் வளைகுடாவில் பெட்ரோலியம் கிடைக்கின்றதா என்பதை ஆராய்ந்து பார்க்கின்றோம் என்று இலங்கையிடம் அனுமதி கேட்டது.  2007 மார்ச்சில் எந்த வித டெண்டரும் இல்லாமல் ராஜபக்ஷே தனது சீன பயணத்தின் போது சீனாவுக்கு வழங்கினார்.  ஏறக்குறைய சேதுசமுத்திர திட்டம் தொடங்கி 20 மாதங்கள் கழித்து இந்த திட்டம் இலங்கையால் சீனாவுக்கு வழங்கப்பட்டது.

இந்த சமயத்தில் சேதுசமுத்திர திட்டத்தில் பாக் நீரிணைப் பகுதியில் உள்ள பெரும்பாலான பணிகள் நிறைவுக்கு வந்து இருந்தது.  இதன் தொடர்ச்சியாக அதன் தெற்குப் பகுதியான ஆதாம் பாலத்தின் மீது செய்யப்பட வேண்டிய பணிகள் துவங்கியிருந்தது.  சேதுசமுத்திர கப்பல் கழகம் மும்முரமாக தங்கள் உழைப்பை காட்டிக் கொண்டிருந்த நேரமும் கூட.

சீனாவுக்கு மன்னார் வளைகுடாவில் பெட்ரோலிய தூரப் பணிகளுக்காக வழங்கப்பட்ட பகுதியென்பது சேது சமுத்திர திட்ட பாதைகளுக்கு அருகே ஏறக்குறைய 20 கீமீ தொலைவில் அமைந்து இருந்தது. மொத்ததில் உள்ளே வரக்கூடிய செல்லக்கூடிய அத்தனை கப்பல்களையும் சீனா தனது கண்காணிப்பில் வைத்துக் கொள்ள முடியும். இதே சமயத்தில் செட்டி நாட்டு சீமான் ப.சிதம்பரம் பலமுறை தொடர்ந்து கூப்பாடு ஒன்றை எழுப்பிக் கொண்டிருந்தார்.

அதாவது சேது சமுத்திர திட்டத்தை விடுதலைப்புலிகள் சீர்குலைக்க அதிகம் வாய்ப்புள்ளது என்பதை தொடர்ச்சியாக அறிக்கை வாயிலாக தெரிவித்துக் கொண்டிருந்தார். ஆனால் அருகே சீனா செய்து கொண்டிருந்த வேலைகளையும், அதன் கண்காணிப்பில் தான் இந்த சேது சமுத்திர திட்டமே நடந்து கொண்டிருப்பதையோ ப.சிதம்பரம் மட்டுமல்ல துறைப் பொறுப்பில் இருந்த டி.ஆர்.பாலு கூட மறந்தும் கூட மூச்சு விடவில்லை.

 காரணம் என்ன?  

சரி பெரிய இடத்து பொல்லப்புக்குள்ள இப்ப நாம போக வேண்டாம்.  இப்ப இந்த இடத்தில் இன்னோரு ஆச்சரியத்தையும் நாம் பார்க்க வேண்டும். 

2008 பிப்ரவரி மாதம் இலங்கை அரசு மன்னார் வளைகுடாவில் இருந்த மூன்று பகுதிகளில் பெட்ரோலிய தூரப்பணிகளுக்காக டெண்டர் விட்டது. இந்தியாவின் சார்பாக ஓன்என்ஜீசி நிறுவனத்துடன் மற்றொரு நிறுவனமும் கலந்து கொண்டது.

அந்த நிறுவனத்தின் பெயர் Cairn India.  

பெயரில் இந்தியா இருக்கிறதே அப்ப இது இந்திய நிறுவனமா? என்று யோசிக்காதீங்க.  இந்த டெண்டரில் குறிப்பாக வடக்கு கிழக்காக உள்ள பகுதிகளில் குறிப்பாக வடக்கில் உள்ள புத்தளத்தை அடுத்துள்ள பகுதியைத்தான் இரண்டு நிறுவனங்களும் கைப்பற்ற போட்டா போட்டி போட்டது.  அதற்கும் காரணம் உண்டு.  ஆனால் போட்டியின் இறுதியில் 2008 ஆம் ஆண்டு இந்தியா நிறுவனத்திற்கே இந்த டெண்டர் கிடைத்தது.

இதற்கு பின்னால் உள்ள காரணம் புத்தளத்திலும் PEARL 1 என்ற பகுதியிலும் சீனா பெட்ரோலிய ஆராய்ச்சி செய்கின்றோம் என்று வேறொரு ஆராய்ச்சியையும் செய்து கொண்டிருந்தார்கள்.  அதாவது சீனா உருவாக்கிய உளவு நடவடிக்கைகளை இந்தியா கவனித்து விடக்கூடாது என்பதற்காகவே மட்டுமே ஒன்என்ஜிசி க்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.  அப்புறம் மற்றொரு விசயத்தையும் நாம் இந்த இடத்தில் பார்க்க வேண்டும்.  இந்த நிறுவனம் குறிப்பாக இதே இடத்தில் தான் தங்கள் செயல்பாடுகளை அமைக்க வேண்டும் என்பதற்கான காரணம் என்ன?

புத்தளத்தில் இருந்து இந்த நிறுவனம் அமைந்த இடத்திலிருந்து தமிழ்நாட்டில் உள்ள கூடங்குளத்திற்கு 300 கீமீ. இது தவிர தூத்துக்குடிக்கு 250 கீமீ.

செய்வினை, சூனியம் போன்றவைகள் எல்லாம் இப்ப உங்க ஞாபகத்திற்கு வரனுமே?

சரி, இப்ப இந்த இந்தியா என்று பெயர் வைத்துள்ள இந்த நிறுவனம் யார்ரென்று பார்த்துவிடலாம்.


Cairn India  என்ற நிறுவனம் முறைப்படி ஒரு இங்கிலாந்து முதலாளிக்குச் சொந்தமானது.அவர் பெயர் பில் கேம்பெல். (Bill Gammell).  இவர் தான் இந்த நிறுவனத்தின் 64 சதவிகித பங்குகளை வைத்துள்ளார்.  1979 ஆம் ஆண்டில் Castle Cairn Financial Services என்ற நிறுவனத்தை தொடங்கினார்.  இந்த நிறுவனத்தின் முக்கிய பணி என்பது பெட்ரோலிய்ப் பொருட்கள் எங்கங்கு கிடைக்கின்றதோ அங்கே போய் தனது செயல்பாடுகளை தொடங்குவது.  இதன் தொடர்ச்சியாக இந்த நிறுவனம் Cairn Energy என்ற நிறுவனத்தை தொடங்கியது.

1996 ஆம் ஆண்டு இந்தியாவில் இயங்கிக் கொண்டிருந்த ஆஸ்திரேலிய நிறுவனமான Command Petroleum Ltd பெரும்பாலான பங்குகளை வாங்கி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இந்தியாவிற்குள் தனது சேவையை விரிவுபடுத்த தொடங்கிய போதே மேல்மட்ட நிலையில் உள்ள அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கத்தினர் போன்ற அத்தனை புனித ஆத்மாக்களோடு நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டது.  

இந்தியாவிற்குள் தொழில் தொடங்கி அதுவும் நல்ல லாபகரமான நிறுவனமாக வளர வேண்டுமென்றால் முக்கியமாக குறுக்குவழியில் சென்றால் தானே முடியும்?

அதைத்தான் தொடக்கத்திலே இந்த நிறுவனம் செய்யத் தொடங்கியது.  2000 ஆம் ஆண்டில் இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடல் பகுதிகளில் பெட்ரோல் மற்றும் எரிவாயு இருப்பதை கண்டறிந்து தனது பணியைத் தொடங்கியது.  2004 ஆம் ஆண்டு ராஜஸ்தானுக்கு அருகே உள்ள கடல்பகுதியில் மிகப் பெரிய பெட்ரோலிய வளம் இருப்பதைக் கண்டு கொண்டது.  இந்த நிறுவனத்தில் மலேசிய நிறுவனமான Petronas நிறுவனத்திற்கு 13 சதவிகித பங்குகள் உள்ளது.  இந்த மலேசிய நிறுவனத்திறகு யார் முக்கியமான பொறுப்பாளியாக இருப்பவர்?  மலேசிய தொழில் அதிபர் ஆனந்த கிருஷ்ணன்.  

சரி, இந்த இந்தியாவின் இயக்குநர் யார்? 

திரு நரேஷ் சந்திரா சேகனா.முக்கிய பொறுப்பில் இருப்பவர்.  இவரைப்பற்றி சிறு குறிப்பு வரைக? 

1990 ஆம் ஆண்டு இந்தியாவின் பாதுகாப்பு செயலாளராகவும், உள்துறை செயலாளராகவும், கேபினட் செயலாளராகவும், 1992 முதல் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ்க்கு ஆலோசகராகவும் இருந்தவர். 1995 முதல் குஜராத் ஆளுநராகவும் இருந்தவர்.  1996 முதல் 2001 வரை அமெரிக்காவிற்கான இந்திய தூதவராகவும் இருந்தவர்.  அதிலும் குறிப்பாக 1981 முதல் 1984 வரைக்கும் இலங்கைக்கான ஏற்றுமதி கொள்கைகான காமன்வெல்த் ஆலோசகராவும் இருந்தவர்.

சற்று மூச்சு விட்டுக கொள்ளுங்க.  

முறைப்படி இலங்கை கொடுத்த டெண்டரை கைப்பற்றியது மலேசியாவின் பெட்ரோனஸ் நிறுவனம்.  அதற்கு காரணகர்த்தவாக முன்னால் நின்றவர் நரேஷ் சந்திரா சேகனா.  ஆனந்த கிருஷ்ணன் யாருக்கு நெருக்கமான கூட்டாளி?  இந்தியாவிற்கா?  சீனாவுக்கா?

நம் இந்தியாவில் மகத்தான ஆச்சரியம் ஒன்று எப்போதும் உண்டு.

ஒருவர் உயர்ந்த பதவியில் இருந்தாலும், இந்தியாவின் ராஜரகஸ்யங்களை காத்திருந்த பதவியாகக்கூட இருக்கலாம்.  ஆனால் அவர் ஓய்வு பெற்ற பிறகு அவரைப்பற்றி எந்த கேள்வி கேட்பாடும் இருக்காது.  எங்கு வேண்டுமானாலும், எந்த அந்நிய நிறுவனத்தின் கூடவும் புரிந்துணர்வை உருவாக்கிக் கொள்ளலாம்.  லாபத்திற்கு, தங்கள் சுய லாபத்திற்காக இவர்களைப் போன்றவர்கள் சோரம் போகமாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்?

ஒன்றோடு ஒன்று முடிச்சுப் போட்டு பார்த்துக் கொள்ளுங்க. 

இலங்கையைப் பொறுத்தவரையிலும் இநதியாவை பகைத்துக் கொண்டு இந்த டெண்டரை நேரிடையாக சீனாவுக்கு கொடுத்து விட முடியாது.  அதே சமயத்தில் சீனா சம்மந்தப்பட்ட ஆனந்த கிருஷ்ணன் நிர்வாகத்தில் உள்ள மற்றொரு நிறுவனத்திற்கு கொடுத்து விட்டால் பிரச்சனை முடிந்து விட்டது.  மொத்தத்தில் இந்தியாவால் வேடிக்கை பார்க்கக்கூடிய சூழ்நிலை.

அப்ப இந்த தொழில் விளையாட்டில் ஜெயித்தது? 

இந்தியாவின் இறையாண்மைக்கு,பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு விடுதலைப்புலிகள் காரணமாக இருந்து விடுவார்கள் என்ற இந்த வார்த்தைகளை வைத்துக் கொண்டு இன்று வரைக்கும் ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கும் ராஜபகேஷவை எப்பேர்பட்ட ஆள் என்று உங்களுக்கு புரிமே?

                                                                       $$$$$$$$$$$$
குறிப்புரை 

தொடர்வாசிப்பில் இருக்கும் நண்பர்களுக்கு.

இது போன்ற கட்டுரைக்ளுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவு எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்துள்ளது.  இந்த கட்டுரையுடன் 329 என்ற எண்ணிக்கை முடிவுக்கு வந்து அடுத்த கட்டுரையில் தலைப்பு 330 என்ற நிலைக்கு வரப்போகின்றது.  தேவியர் இல்லத்தோடு இணைத்துக் கொண்ட நண்பர்களின் எண்ணிக்கையும் 330.  இது எதிர்பாரத ஒன்று.  ரீடர், மின் அஞ்சல், பேஸ்புக், ட்விட்டர் என்று கடந்த சில மாதங்களில் நிறைய நண்பர்கள் அறிமுகமாகி உள்ளார்கள்.  அணைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.  இந்த கட்டுரையின் இடையில் சில நண்பர்கள் என்னுடன் பேச வேண்டும் என்றார்கள்.  சிலர் இது போன்ற விசயங்கள் எழுதும் போது கவனமாக இருங்க என்றார்கள்.  இது போன்ற மனசஞ்சல விசயங்கைளை தாண்டி வருவதற்காகவே நான் மனதிற்குள் நினைத்தபடியே இதுவரைக்கும் சமயம் கிடைத்த போது ஒரே மூச்சில் எழுதி வைத்து தினந்தோறும் வெளியிட்டு வந்தேன். அதிகமாக பின்னூட்டங்களுக்கு பதில் கூட அளிக்க முடியவில்லை.  .

ஈழம் தொடர்பாக எழுதும் போது என்ன விதமான எதிர்வினைகள் வரும் என்பதை ஏற்கனவே ஈழம் தொடர் எழுதிய போதே கண்டு கொண்டேன் என்பதால் நண்பர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

மன்னிக்கவும்.

குறிப்பாக இதன் முதல் பகுதியை 4 தமிழ்மீடியா தனது தளத்தில் தொடராக வெளியிட அனுமதி கேட்டு அதன்படியே என் கட்டுரையின் முதல் பகுதியும் வெளியானது.  ஆனால் இதற்கிடையே 4 தமிழ்மீடியா தளத்திற்கு குறிப்பிட்ட மக்களின் தாக்குதல் (ஏற்கனவே பலமுறை அவர்களுக்கு நடந்து கொண்டிருப்பதும் .கூட) காரணமாக மீள் கட்டமைப்பு நடந்து கொண்டிருப்பதால் அந்த குழுமமும் விடாமல் தனது சேவையை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.  இது குறித்த மேற்கொண்டு விபரங்கள் அவர்களே வெளியிட்டுள்ளார்கள்..  


வருகின்ற ஜுலை 3 தேவியர் இல்லத்தின் மூன்றாம் ஆண்டு வலையுலக எழுத்துப் பயணம் தொடங்குகின்றது. 

இதுவரைக்கும் விமர்சனம் அளிக்காமல் எப்போதும் போல தொடர்ந்து கொண்டிருக்கும் நண்பர்களின் கருத்துக்களை, விமர்சனங்களை தெரிந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். வெளிப்படையாக உங்கள் மனதில் நினைக்கும்   என் எழுத்துக்கள் குறித்த நிறை, குறைகளை அவஸ்யம் ஜுலை 3 அன்று வெளியாகும் கட்டுரையின் பின்னூட்டத்தின் வாயிலாக தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.


நான் கடந்து வந்த பாதை (எழுத்துப் பயணத்தில்) என்ற அமைப்பு மேல்பகுதியின் பக்கவாட்டில் பொருத்தியுள்ளேன்.

உங்களின் வெளிப்படையான விமர்சனம் என்னை மேலும் செல்ல வேண்டிய பாதைக்கு உறுதுணையாக இருக்கும் என்று நம்புகின்றேன். 

அதன் பிறகு ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு இந்த தொடர் தொடங்கும்.

ஜுலை 3 அன்று வழி மேல் விழி வைத்து.

நன்றி.

19 comments:

  1. மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அருமையான பதிவு.
    உங்கள் உழைப்பை பாராட்டுகிறோம்.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. Advance வாழ்த்துகள்...
    ஜுலை 3 எதிர்பார்த்து......
    நன்றி சார்.

    ReplyDelete
  4. //நம் இந்தியாவில் மகத்தான ஆச்சரியம் ஒன்று எப்போதும் உண்டு.//

    ஒன்று அல்ல பல பல, உண்மையைச் சொன்னால் இந்தியாவின் இறையாண்மைக்கு ஆபத்து என்பார்கள்.

    நன்றி.

    ReplyDelete
  5. tholare
    miga nerthiyana padivu. therndha eluthalaraga eludhugirergal. sirappana nadai. vazthukkal.

    elanchezhiyan

    ReplyDelete
  6. :) குடைஞ்சி நீங்களும்தான் ஆயில் எடுக்கிறீங்க. ஆக மொத்தத்தில பூரா பயலும் நாட்டை கூறு போட்டு வித்துகிட்டு இருக்காய்ங்கன்னு மட்டும் விளங்குது. விட்டுப் போன மற்ற தொடர்புடைய கட்டுரைகளையும் வாசிக்கணும். எழுத்தின் வீச்சமே விசயத்தின் தீவிரத்தை வெளிக் கொண்டு வருகிறது.

    அய்யா, நீங்க பாட்டுக்கு உங்க பாதையிலேயே போயிட்டே இருங்க!

    ReplyDelete
  7. அருமையா எழுதிறீங்க‌
    ஆனால் ஒரு சின்ன நாட்டு அரசியலில் இவ்வளவு மர்மம்,அதுகுள்ளே இரகசியம் என்று சிந்து பாத் கதை மாதிரி போய் கொண்டே இருக்கிறது. இதிலே சம்பந்தப்ப்ட்ட பல்ரும் ஒருத்தனுக்கு ஒருத்தன் மகா எத்தன்.பாவம் நம்ம தமிழர்கள்.
    நன்றி

    ReplyDelete
  8. கீதையில் கிருஷ்ணர் சொன்னதுபோல்..
    ஒரு நாட்டை ஆளும் அரசன் திறமையாக ஆளவில்லை என்றால். திறமையாக ஆளும் வேறு அரசிடம் இந்த நாட்டையும் ஒப்படைத்துவிடலாம்..

    சீனாவின் வளர்ச்சி கட்டுக்கோப்பு இவைகளை பார்க்கும்போது .. இந்திய அரசை கலைத்துவிட்டு ஆட்சியை சீனவிடம் ஒப்படைத்தால் 20 வருடத்துக்கு பிறகு வரும் தலைமுறைக்காவது நிறைவான வாழ்க்கை கிடைக்கும்.

    இந்திய அரசு என்ற ஒன்றால் சுகமாக வாழ்ந்துகொண்டிருப்பது மக்கள் அல்ல. ஆளும் வர்க்கமும் சில ஒட்டுண்ணிகளும் தான். இந்திய அரசு என்ற ஒன்று இல்லாமல் போனாலும் நஷ்டம் மக்களுக்கு அல்ல. தேச பக்தி என்ற போர்வையில் மக்களை மயக்கி தான் சுகம்பேறும் கூட்டத்துக்கும் மட்டும் நட்டம். எனவெ இதை பற்றி யோசிங்க..

    ReplyDelete
  9. arumaiyana pathivugal.. ithanai naatkalai enakku teriyaamal poyitrae :( :(

    ReplyDelete
  10. வசீகரமான எலுத்து நடைங்க..

    ReplyDelete
  11. ஜோதிஜி பட்டயக்கிளப்புங்க :-)

    இதிலேயே சிலவற்றை கூறலாம் என்று இருந்தேன் நீங்க தான் நாளைக்கு னு சொல்லிட்டீங்களே! ;-) சரி அப்படியே தேவியர் இல்லம் என்பதற்கு என்ன காரணம் என்பதையும் அப்படியே கூறுங்க.

    ReplyDelete
  12. தடைகளைப் பொருட்படுத்தாது ‘ஜோதி’ ஒளி வீசட்டும்!

    மூன்றாம் பிறந்த நாளைக் கொண்டாடும் “தேவியர் இல்லத்திற்கு” என் வாழ்த்துக்கள்.


    (பதிவுகளை ‘Backup' எடுத்து வைப்பது முக்கியம். மறந்துடாதீங்க.இது தம்பியோட வேண்டுகோள்.)

    ReplyDelete
  13. அருமையான விறுவிறுப்பான வரலாற்று தொடர் வாழத்துக்கள் சகோ....

    ReplyDelete
  14. கிரி has left a new comment on your post "ராஜபக்ஷே மகா கெட்டிகாரர்.":

    ஜோதிஜி பட்டயக்கிளப்புங்க :-)

    இதிலேயே சிலவற்றை கூறலாம் என்று இருந்தேன் நீங்க தான் நாளைக்கு னு சொல்லிட்டீங்களே! ;-) சரி அப்படியே தேவியர் இல்லம் என்பதற்கு என்ன காரணம் என்பதையும் அப்படியே கூறுங்க.

    ReplyDelete
  15. மூன்றாம் ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் தேவியர் இல்லம் மேன்மேலும் வளர்ந்து மானுடத்துக்கு சேவையாற்ற வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
  16. நன்றி யோகா.

    கிரி ரெண்டு நாளா நல்ல காய்ச்சல். தேவியர் இல்லத்தின் காரணத்தையும் இன்று வெளியாகும் கட்டுரையில் தெரியப்படுத்தி உள்ளேன்.

    இங்கு வாழ்த்துரைத்தத நண்பர்கள் அணைவருக்கும் நன்றி.

    தாராபுரத்தான் அய்யா எப்போதும் போல தொடர் வாசிப்பில் என்னை ஆச்சரியப்படுத்திக்கிட்டு இருக்கீங்க.

    வினோத் நீங்க சொல்வது போல நானும் பலமுறை யோசித்துக் கொள்வதுண்டு.

    நன்றி சத்ரியன்

    சார்வாகன் உங்கள் விமர்சனத்தை வைத்து இன்று வெளியாகும் கட்டுரையில் சில விசயங்களை எழுத வேண்டும் என்று நினைத்து இருந்தேன். உடல் நிலை ஒத்துழைக்கவில்லை. ஆனால் இந்த விமர்சனம் என்னை ரொம்பவே ஆச்சரியப்படுத்தியது. காரணம் இத்ந எண்ணம் தான் ஈழத்தைப்பற்றி அதிகமாக யோசிக்க வைக்கின்றது. கும்மி உங்களைப் பற்றி சொன்ன அறிவுப்பெட்டகம் என்பது உண்மைதான்.

    தெகா இன்றைக்கு வாங்க.

    உதயா, கருன் வாத்தியாரே வாங்க வாங்க.

    தாமஸ் ரூபன் ஆனந்த், ரத்னவேல் அய்யா

    உங்கள் அன்புக்கு நன்றி

    ReplyDelete
  17. இன்றைக்கு தேதி ஜூலை 3:)

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.