அஸ்திவாரம்

Tuesday, April 12, 2011

நான் ஓட்டுப் போட்டா நாடு திருந்திடுமா?

ஏப்ரல் 13 2011 

நாளைய பொழுது இந்நேரம் பலரின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துருக்கும்.  ஆனால் அத்தனையும் ஒரு சின்ன பொட்டிக்குள் இருக்கும். பாவம் இந்த மக்கள் சேகவர்கள். கடுமையான உழைப்பு.  அயராத பணி. குளிர்சாதன வண்டிக்குள் இருந்து கொண்டு சுற்றி வந்து உழைத்துக் களைத்த மக்கள் சேவகர்கள் சற்று பயத்தோடு ஓய்வு எடுக்கக்கூடும். 


தேர்தல் ஆணையத்தின் புண்ணியத்தால் அதிக அளவு வெளியே கொண்டுவர முடியாத பணமூட்டைகள் எங்கேயோ பதுங்கி பலரின் பாவத்திற்கும் ஆளாகியிருக்கும்.  மேலிடத்தில் இருந்து செலவுக்கென்று ஒதுக்கிய பணத்தைப் பெற்று தேர்தல் ஆணைய கெடுபிடிகளின் காரணமாக எங்களால் வெளியே கொண்டுவரமுடியவில்லை என்று சொல்பவர்கள் தேர்தல் முடிந்ததும் திடீர் பணக்காரர்கள் ஆகிவிடுவார்கள். 

ஆத்துல போற தண்ணிய அய்யா கொஞ்சம் அம்மா கொஞ்சம் அள்ளிக் குடித்ததைப் போல தொண்டர்களும், நம்பியவர்களும் பிழைத்துப் போகட்டுமே?

ஆனால் நாளை அரசு மற்றும் தனியார் (எத்தனை நிறுவனங்கள் கொடுப்பார்களோ?)ஊழியர்களுக்கு சம்பளத்தோடு கூடிய விடுமுறை தினம்.  இந்த விடுமுறை தினத்தை கருத்தில் கொண்டு ஏற்கனவே திட்டமிட்டப்பட்ட சுற்றுலா கொண்டாட்டங்கள், குறுந்தகடுகள் வாங்கி உல்லாசமாக இருக்கப்போகும் நண்பர்களுக்கும், சரக்கு தரமாட்டார்கள் என்ற இருப்பில் வைத்திருக்க சில தினங்களுக்கு முன்பே வீட்டில் வாங்கி வைத்துள்ள குடிமகன்களுக்கும் நல்வாழ்த்துகள். 

நான் இப்போதுள்ள அரசியல் களத்தை கவனித்தவரைக்கும் இந்த முறை கலைஞர் சற்று தடுமாற்றமாக இருப்பது போல் தெரிகின்றது.  தேர்தல் ஆணையத்தை (எதிர்கட்சியை ஆளுங்கட்சியாக மாற்ற முயற்சிக்கிறார்கள்), தமிழ்நாட்டு காவல்துறை (நான் இவர்களுக்கு எத்தனையோ நல்லது செய்து இருக்கின்றேன். மறந்து விட்டார்கள்) குறித்து புலம்பித் தள்ளிவிட்டார். இதற்கு மேலாக உங்கள் வீட்டு வேலைக்காரனாக செயல்பட விரும்புகின்றேன் என்று பலபடிகள் இறங்கி வந்துள்ளார்.  ஏன் இத்தனை நலத்திட்டங்கள் செய்தவர்கள் இந்த அளவுக்கு புலம்ப வேண்டுமா?  ஒரு பக்கம் வரிப்புலியே வா?  மறுபக்கம் இனமான உணர்வு மிக்க தமிழா?  கலைஞர் மேல் எத்தனை விமர்சனம் வைத்தாலும் நேற்று வந்த விஜயகாந்திற்கு தொண்டை கட்டி விட்டதாம்.  பாருங்கள்......... இவருக்கு கணீர் கணீர் தான்...............

ஆசையோ? அக்கறையோ? பயமோ?  மொத்தில் பாராட்டியே ஆக வேண்டிய அபாரமான உழைப்பாளி.  நடிகர் சிவகுமாருக்கு மார்க்கண்டேயன் என்று பட்டம் கொடுத்ததைப் போலவே இவருக்குக்கூட அந்த பட்டத்தை இரவலாக கொடுக்கலாம்.

என்னுடைய பார்வையில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வருகின்றதோ இல்லையோ கலைஞர் போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் திமுகவின் மற்ற வேட்பாளர்களை விட கலைஞர் மிக அதிக வித்யாசத்தில் ஜெயிக்க வேண்டும். எப்போதும் உள்ளூரில் மாடு விலைபோகாது என்பார்கள். அவ்வாறு கலைஞர் பெருவாரியான வாக்கு வித்யாசத்தில் ஜெயித்தால் மட்டுமே திமுக வெற்றி பெற்றதாக கருதமுடியும்.  காரணம் நான் தான் மூத்த தலைவர். பெரியார் வழியில் வந்தவன், அண்ணா பாடத்தை கற்றவன். இது எனக்கு கடைசி தேர்தல் என்று சொல்லும் கலைஞருக்கு அவர் சொந்த மண் மக்கள் எவ்விதம் மரியாதை செய்யப் போகிறார்கள்?

இத்தனை ஆண்டு காலம் பொதுவாழ்க்கை கண்டவன், தமிழ்நாட்டு மக்களுக்காகவே என்னை அர்ப்பணித்தவன் என்று ஒவ்வொரு கூட்டத்திலும் சொல்லிக் கொண்டு வரும் கலைஞருக்கு கிடைக்கும் வாக்கு வித்யாசத்தை பார்க்க ஆவலாக உள்ளேன். 


காரணம் இந்த முறை நடைபெறப்போகும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் எந்த அனுதாப அலையும் இல்லை. அதற்கு மேல் அழகிரி மேல் தேர்தல் ஆணையம் வைத்துள்ள 'சிறப்புக் கண்' மொத்த அரசியல் நோக்கர்களாலும் உற்று நோக்கப்படுவதால் மொத்த உடன் பிறப்புகளுக்கும் வால் ஆப்புக்குள் சிக்கிக் கொண்ட வேதனை. 

தேர்தல் ஆணைய கெடுபிடிதனத்தால் உள்துறை அமைச்சர் ப சிதம்பரம் சொன்ன மாதிரி இந்த முறை தமிழ்நாட்டு அரசியல் களமென்பது எழவு வீடு போலவே உற்சாசமின்றி படு ஆச்சரியமாக இருக்கிறது.  

இதற்கெல்லாம் காரணம் புண்ணியவான் தேர்தல் ஆணைய கதாநாயகன் குரோஷியா அல்லது அவருக்கு பின்னால் இருக்கும் சக்தியா?  

மொத்தத்தில் ஆளுங்கட்சிக்கு ஏராளமான இடைஞ்சல் என்பது மட்டும் உண்மை.  தமிழ்நாட்டு காவல்துறை டம்மியாக இருக்க அந்தந்த மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் தட்டிய கும்மிக்கு நடனமாட வேண்டிய சூழ்நிலை.  ஆனால் கலைஞர் பல களம் கண்ட வேங்கை.  நாளைய தினத்தின் ஓட்டுப் பதிவு முடியப் போகும் கடைசி ஒரு மணி நேரத்தில் 'விஞ்ஞான ரீதியான மாறுதல்' உருவானால் ஆச்சரியப்படாதீர்கள். 

காரணம் சென்ற பாராளுமன்ற தேர்தலில் நடந்த கடைசி ஒரு மணி நேர கூத்துக்களை அத்தனை உபிகளும் நன்கு அறிந்து இருப்பார்கள்.  இந்த முறை அந்த வாய்ப்பு உண்டா தெரியவில்லை?


இந்த முறை தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கெடுபிடிகள் செய்வதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆலோசனை நடத்தியவர்கள் கொடுத்தபடி நடந்து கொண்டிருக்கும் தேர்தல் ஆணைய கெடுபிடிகள் மொத்தத்தில் அரசியல் கட்சிகளுக்கு கெட்ட விசயமாக இருந்தாலும் திருவாளர் பொதுஜனத்திறகு மகா நிம்மதி. 

இது இன்னும் கூட சற்று நீட்சி அடைந்தால் நன்றாகயிருக்கும். கற்பனை காண சொல்லித்தந்த முன்னாள் ஜனாதிபதி அய்யா அப்துல்கலாமுக்கு நன்றி.

1.தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் ஆளும் அரசாங்கம் அந்த திட்டங்களையும் வெளியிடக்கூடாது என்பதைப் போலவே குறைந்த பட்சம் தேர்தல் நடப்பதற்கு ஒரு மாதம் முன்பாக முதல் அமைச்சர் முதல் அமைச்சர்களின் அதிகாரங்களை ஒரு வரையறைக்குள் கொண்டு வந்து காபந்து அரசாங்கம் போல் தேர்தல் ஆணையமே எடுத்துக் கொண்டு விட்டால் பாதி அதிகார துஷ்பிரயோகம் காணாமல் போய்விடும்.

2. அதிகாரத்தில் இருந்தவர்கள் மீண்டும் போட்டியிடும் போது அவர்கள் சமர்பிக்கும் சொத்து ரீதியான அத்தனை சான்றிதழ்களையும், அவர்களின் பினாமி சொத்துக்களை கட்சி பாகுபாடு இல்லாமல் கண்ணில் விளக்கெண்ய் ஊற்றிக் கொண்டு வெளியே கொண்டு வந்தாலே பாதி பேருக்கு டர் ஆகி விடும்.  பின்னங்கால் பிடறி தெறிக்க கொல்லைபுற வாசல் வழியாக நான் போட்டியிட விரும்பவில்லை என்று ஓடிவிடக்கூடும். போட்டியிடும் வேட்பாளர்கள் ஒவ்வொருவரின் உண்மையான சொத்து நிலவரங்களை மிகச் சாதாரண குடிமகன்களுக்கே நன்றாக தெரிகின்றது. ஆனால் தேர்தல் ஆணையத்திற்கு இந்த சான்றிதழ்கள் சரிபார்ப்பு மட்டும் காலங்காலமாக ஒரு சடங்காகவே இருக்கிறது.  

3.  எந்த தொகுதியில் போட்டியிட விரும்புகிறார்களோ அந்த தொகுதியில் உள்ள பொதுமக்கள், அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள், பொதுநல ஆர்வலர்கள் என்ற பொதுஅமைப்பின் மூலம் சம்மந்தப்பட்ட வேட்பாளர்களிடம் குறைந்த பட்சம் அந்த தொகுதி குறித்த அடிப்படை அறிவு இருக்கிறதா? அவர்கள் பதிவிக்கு வந்தால் என்ன செய்வார்கள் என்பதை கூட்டப்படும் கூட்டத்தின் முன்பாக கேட்டு அதை தொலைக்காட்சியில் கட்டாயம் நேரலை வாயிலாக அணைவரும் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்தால் இந்த மக்கள் சேகவர்களின் அறிவு குறித்து அணைவருக்கும் புரியக்கூடும்.

4.  தேர்தல் பணியில் கட்டாயம் அரசு ஊழியர்களை பயன்படுத்தவே கூடாது.  இங்கே தான் வில்லங்கம் தொடங்குகின்றது.  பிடித்தவர், பிடிக்காதவர், நமக்கு ஏன் வம்பு என்ற மூன்று ஜாதிகள் இதில் இருப்பதால் விடை ஜீரோதான்.
படித்த இளைஞர்களை பயிற்சி கொடுத்து பயன்படுத்த முடியும். 


5. ஆயிரத்தெட்டு நொள்ளை காரணங்களை சுட்டிக் காட்டும் தேர்தல் ஆணையம் முதலில் அந்த தொகுதி வாக்காளர்கள் அணைவருக்கும் பூத் சிலிப் போய் சேர்ந்துள்ளதா என்பதை பல முறை உறுதிப்படுத்த வேண்டும். குறிப்பாக அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் போன்ற எளிதில் இனம் கண்டு கொள்ளக்கூடிய வகையில் இருக்கும் நபர்களை அந்தந்த துறையின் அழுத்தம் காரணமாக கட்டாயமாக வாக்குச் சாவடிக்கு வரவழைக்க வேண்டும்.  இது ஜனநாயக நாடு என்ற ஈரவெங்காய புடலங்காயை ஓரமாக காய வைத்து விட்டு வாக்களிப்பது என்பது கட்டாயத்தின் தொடக்கமாக இதை கொண்டு வந்தே ஆக வேண்டும்.காரணம் இந்திய தேர்தலின் முக்கிய வாக்காளர்கள் என்பவர்களே அன்றாடங்காய்ச்சிகளே ஆவார். 

6.  ஒவ்வொரு வாக்காள அடையாள அட்டையில் இருக்கும் எண் கொண்டு தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும் இருப்பவர்கள் அவர் தொகுதிக்கு வாக்களிக்கும் ஆன் லைன் முறை கொண்டு வந்து விட்டால் வாக்கு சதவிகிதம் நிச்சயம் உயரும்.  ஊருக்கு போக சோம்பேறிபடுபவர்கள், பல காரணங்களால் பயந்து கொண்டு பின்வாங்குபவர்கள் என்று ஒரு பெரிய ஜனத்தொகையே இதற்குள் அடங்கி இருக்கிறது.

7. வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பெயர் மாற்றம், புகைப்பட மாற்றம் போன்ற நமது இந்திய ஜனநாயக கேலிக்கூத்துக்களை தவிர்க்க ஓட்டளிப்பவர்கள் கட்டாயம் தங்களது கட்டைவிரல் அடையாளத்தை வாக்களிக்கும் எந்திரத்தில் ஓற்றிவிட்டு வரும்படி செய்து விட்டால், ஒருவரே பலரின் ஓட்டுக்களை போடுவதை தவிர்க்க உதவலாம். ஏற்கனவே ஒருவர் நமக்கான அடையாள அட்டையை உருவாக்க கடந்த இரண்டு வருடங்களாக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். பாவம் அரசியல்வியாதிகளிடம் சிக்கி அவருக்கு என்னவித வியாதிகள் வந்துள்ளதோ?

8. வாக்குச் சாவடிக்குள் இருக்கும் பூத் ஏஜெண்டுகள் ஒருவருக்கொருவர் செய்து கொள்ளும் ஒப்பந்தத்தை முறியடிக்க வாக்குச் சாவடிக்குள் பொருத்தப்பட்ட புகைப்பட கருவிகள் மூலம் வாக்குப்பதிவு நடக்கும் மொத்த நேரத்தையும் நேரலை மூலம் அந்தந்த பகுதியில் வாழும் (குறைந்தபட்சம்) பொது மக்களும் கவனிக்கும்படி உருவாக்கினால் பலரும் பீதியடைந்து பின்வாங்கி விடக் விடக்கூடும்.  

9.  29 சதவிகிதம் வாங்கிய கட்சி எதிர்கட்சியாகவும் 32 சதவிகிதம் வாங்கியவர் ஆளுங்கட்சியாக அரசாங்கத்திற்கு வரும் கொடுமை இந்த இந்தியாவில் தான் உண்டு.  மீதியுள்ள சதவிகிதம்?  ஐயோ பாவம்?

10.  வெளிநாட்டில் வாழ்பவர்கள் அணைவரும் ஒவ்வொரு தேர்தல் மூலமும் தங்கள் ஜனநாயக கடமையை செய்ய கட்டாயம் ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கு உரிய ஏற்பாடுகளை எளிதாகவே செய்ய முடியும். தபால் ஓட்டுக்களைப் போலவே முறைப்படுத்தப்பட்ட பல விசயங்களை ஒழுங்காக செயல்படுத்தினால் நிச்சயம் 80 சதவிகித வாக்கு எண்ணிக்கை இந்தியாவில் சாத்தியமே.  வாக்கு சதவிகிதம் அதிகமாகும் போது தான் உண்மையான நிலவரம் என்பது நமக்கு புரியக்கூடும்.  

இன்னும் நிறைய ஐடியாக்கள் என் கைவசம் உண்டு. நான் இப்போது சொன்னால் கலைஞர் காப்பி அடித்து விடுவார்.

நன்றி விஜயகாந்த்.

ஜனநாயகம் என்பது கேலிக்கூத்தல்ல.  அது கேடு கெட்டவர்கள் ஆட்சிக் வருவதால் உருவாக்கப்படும் சின்னபுள்ளத்தனமாக விளையாட்டுக்களை கண்டு நொந்து போய் நாளை ஏப்ரல் 13 2011 வாக்களிக்க மறந்து விடாதீர்கள். தலைவர் நல்லக்கண்ணு அய்யா சொன்னது போல்

 'எந்த அரசியல் அதிகாரம் ஒருவரை உயரத்திற்கு கொண்டு போய் நிறுத்தி  வைத்து அழகு பார்க்கின்றதோ அதே அதிகாரம் அவரை அதளபாதாளத்திற்கும் கொண்டு போய் தள்ளிவிடும். அது தான் அரசியல்..' 

பத்துவருடங்களுக்கு முன்பு துடிப்போடு செயல்பட்ட அரசியல்வியாதிகள் பலரும் இப்போது களத்தில் இல்லை. இப்போது நீங்க பார்த்துக் கொண்டிருக்கும் அஞ்சு கொல ஆறுமுகம் என்று சொல்லப்படும் வீரபாண்டியார் போல வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் இருப்பவர்கள் தான் இப்போது களத்தில் இருக்கிறார்கள்.  2016 தேர்தலில் இவர்களும் போக வேண்டிய இடத்திற்கு போய்ச் சேர்ந்து விடுவார்கள். கவலைப்படாதீர்கள்............


இன்றைய அமெரிக்கா பெற்றுள்ள வளர்ச்சி ஏறக்குறைய பல நிறைகுறைகளை தாண்டிய 400 வருட சரித்திர பின்ணணியைக் கொண்டது.  நாம் சுதந்திரம் பெற்று முழுமையாக 100 வருடங்கள் கூட தொடுவதற்கு இன்னும் நிறைய வருடங்கள் இருக்கிறது.  நம் இந்தியாவை, இந்திய மக்களை, இந்திய அரசியல்வாதிகளை மானாவாரியாக திட்டிப் தீர்ப்பதே தனது கொள்கையாக கொண்டிருந்த புண்ணியவான் வின்ஸ்டன் சர்ச்சில் சொன்னது (இந்தியர்களுக்கு உண்மையான அதிகாரம் பற்றி புரிந்து கொள்ளவே 100 வருடங்கள் தேவைப்படும்) பலிக்கட்டுமே?

நாம் நல்ல விதைகளை விதைத்து விட்டு செல்வோம். பின்னால் வரும் நம் வாரிசுகளுக்கு உதவக்கூடும்.

31 comments:

  1. வெளிநாட்டில் வாழ்பவர்கள் அணைவரும் ஒவ்வொரு தேர்தல் மூலமும் தங்கள் ஜனநாயக கடமையை செய்ய கட்டாயம் ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கு உரிய ஏற்பாடுகளை எளிதாகவே செய்ய முடியும். தபால் ஓட்டுக்களைப் போலவே முறைப்படுத்தப்பட்ட பல விசயங்களை ஒழுங்காக செயல்படுத்தினால் நிச்சயம் 80 சதவிகித வாக்கு எண்ணிக்கை இந்தியாவில் சாத்தியமே. வாக்கு சதவிகிதம் அதிகமாகும் போது தான் உண்மையான நிலவரம் என்பது நமக்கு புரியக்கூடும்.


    ......நிச்சயமாக.... கள்ள வோட்டுக்கள் மோசடி எதுவும் நடக்காமல் முறைப்படுத்தி, வெளிநாட்டில் வாழும் இந்தியருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும்.

    ReplyDelete
  2. //தேர்தல் ஆணையத்தின் புண்ணியத்தால் அதிக அளவு வெளியே கொண்டுவர முடியாத பணமூட்டைகள் எங்கேயோ பதுங்கி பலரின் பாவத்திற்கும் ஆளாகியிருக்கும்.//

    செய்யாதே என்று தேர்தல் ஆணையம் சொல்வதை நான் அப்படித்தான் செய்வேன் எனும் அடம் பிடிப்பவர்களின் கையில் தமிழகம்:(

    அரசியலுக்குத் தகுந்தவர் என்று சொல்லப்படும் ஸ்டாலினின் தொகுதியில் கூட இன்று 1 கோடி கைப்பற்றப்பட்டது.

    ரஜனியோட கடவுள் வந்தாலும் அரசியல்வாதிகள் திருந்த மாட்டாங்க:(

    ReplyDelete
  3. //மேலிடத்தில் இருந்து செலவுக்கென்று ஒதுக்கிய பணத்தைப் பெற்று தேர்தல் ஆணைய கெடுபிடிகளின் காரணமாக எங்களால் வெளியே கொண்டுவரமுடியவில்லை என்று சொல்பவர்கள் தேர்தல் முடிந்ததும் திடீர் பணக்காரர்கள் ஆகிவிடுவார்கள். //

    களி திங்காம இருந்தா சரி:)

    ReplyDelete
  4. //நான் இப்போதுள்ள அரசியல் களத்தை கவனித்தவரைக்கும் இந்த முறை கலைஞர் சற்று தடுமாற்றமாக இருப்பது போல் தெரிகின்றது.//

    இல்லைன்னா வடிவேலை நம்பி அடக்கி வாசிப்பாரா?

    (இது நான் சொன்னதில்ல.மேஞ்சதில கழக கண்மணி ஒருவர் உதித்த முத்து:))

    ReplyDelete
  5. // கலைஞர் மேல் எத்தனை விமர்சனம் வைத்தாலும் நேற்று வந்த விஜயகாந்திற்கு தொண்டை கட்டி விட்டதாம். பாருங்கள்......... இவருக்கு கணீர் கணீர் தான்...............//

    ஒருத்தருக்கு பேசி பேசியே தொண்டை பெரிசா போயிருக்கும்.இன்னொருத்தருக்கு ஐஸ் போட்டு போட்டே தொண்டை கட்டியிருக்கும்:)

    ReplyDelete
  6. //இத்தனை ஆண்டு காலம் பொதுவாழ்க்கை கண்டவன், தமிழ்நாட்டு மக்களுக்காகவே என்னை அர்ப்பணித்தவன் என்று ஒவ்வொரு கூட்டத்திலும் சொல்லிக் கொண்டு வரும் கலைஞருக்கு கிடைக்கும் வாக்கு வித்யாசத்தை பார்க்க ஆவலாக உள்ளேன். //

    பணம் திருவாரூர் வரை பாயும்.பயப்படாதீங்க:)

    ReplyDelete
  7. நடாஜி அடிச்சி ஆடுங்க

    ReplyDelete
  8. //காரணம் இந்த முறை நடைபெறப்போகும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் எந்த அனுதாப அலையும் இல்லை. அதற்கு மேல் அழகிரி மேல் தேர்தல் ஆணையம் வைத்துள்ள 'சிறப்புக் கண்' மொத்த அரசியல் நோக்கர்களாலும் உற்று நோக்கப்படுவதால் மொத்த உடன் பிறப்புகளுக்கும் வால் ஆப்புக்குள் சிக்கிக் கொண்ட வேதனை. //

    சகாயம் நாட்டுக்கு நல்லது செய்யனுமின்னு நினைச்சு செயல்பட்டா பொறம்போக்கு அவரு மேல கோர்ட் கேஸ் போட வைச்சு நீதிமன்றம் அதுக்கும் ஆப்பு வச்சு சகாயம் மேல போட்ட கேஸ தள்ளுபடி செய்து விட்டது.

    நாட்டின் கட்டமைப்புக்களான நீதிமன்றம்,தேர்தல் ஆணையம் போன்றவை மட்டுமே ஜனநாயகத்துக்கான எதிர்கால நம்பிக்கைகள்.

    ReplyDelete
  9. //நாளைய தினத்தின் ஓட்டுப் பதிவு முடியப் போகும் கடைசி ஒரு மணி நேரத்தில் 'விஞ்ஞான ரீதியான மாறுதல்' உருவானால் ஆச்சரியப்படாதீர்கள். //

    அய்யய்யோ!மறுபடியும் உண்ணாவிரதமா:)

    ReplyDelete
  10. //இன்னும் நிறைய ஐடியாக்கள் என் கைவசம் உண்டு. நான் இப்போது சொன்னால் கலைஞர் காப்பி அடித்து விடுவார்.

    நன்றி விஜயகாந்த்.//

    கும்மியடிக்காம 1 முதல் 10 வரைக்கும் உங்களுக்கும்,தேர்தல் ஆணையத்துக்கும் தலையில குட்டலாமுன்னு பார்த்தா:)

    ReplyDelete
  11. //நாளை ஏப்ரல் 13 2011 வாக்களிக்க மறந்து விடாதீர்கள்.//

    எஸ்கேப்.

    ReplyDelete
  12. //நடாஜி அடிச்சி ஆடுங்க//

    நசர்ஜி!கும்மிக்கு ரெடியா:)

    ReplyDelete
  13. //நசர்ஜி!கும்மிக்கு ரெடியா:)//

    இருக்கா ?

    ReplyDelete
  14. ஓட்டு போட்டிருக்கேன்!நாடு திருந்துமான்னு பார்க்கலாம்:)

    ReplyDelete
  15. //இருக்கா ?//

    கடையடைப்பு

    ReplyDelete
  16. திருந்துறதுக்கு 400 வருசம் தேவையா?வடிவேலு! அவ்வ்வ்வ் சொல்லவா புதுசா ஏதாவது கைவசம் இருக்குதா?

    ReplyDelete
  17. மிக ஆழமாக சிந்தித்து மிக விரிவான
    சிறப்பான பதிவைத் தந்தமைக்கு
    வாழ்த்துக்குள்
    தொட்ர்ந்து வருகிறோம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. விழிப்புணர்வை தரும் இந்த இடுகையின் முடிவில் முத்தாய்ப்பான வரிகள்....// நாம் நல்ல விதைகளை விதைத்து விட்டு செல்வோம். பின்னால் வரும் நம் வாரிசுகளுக்கு உதவக்கூடும்.//
    மேலும் வலு சேர்க்கிறது ஜோதிஜி.

    ReplyDelete
  19. ஒவ்வொரு வரியும் சாட்டையடியாக இருக்கிறது. இந்த ஜனநாயக நாட்டில் சட்டம் என்பதும் தண்டனை என்பதும் குப்பனுக்கும் சுப்பனுக்கும்தான். அரசியல் ஓநாயகளுக்கல்ல. எவ்வளவு ஊழல செய்தாலும், கொள்ளையடித்தாலும், கொலைகள் செய்தாலும், அவர்களை வாழ்த்தி கோஷம் போட ஒரு கூட்டம் இருக்கும் வரை நம் நாடு அடிமை நாடுதான். அன்னா ஹசாரே முயற்சியில் உருவாக்கப் படும் லோக் பால் மசோதாவாவ்வது நமக்கு உண்மையான விடுதலையைப் பெற்றுத் தருகிறதா பார்ப்போம்.

    ReplyDelete
  20. //சின்னபுள்ளத்தனமாக விளையாட்டுக்களை கண்டு நொந்து போய் நாளை ஏப்ரல் 13 2011 வாக்களிக்க மறந்து விடாதீர்கள்.//
    மறக்கவில்லை,ஜோதிஜி!கால் வலியையும் பொருட்படுத்தாமல் நடந்து போய் வாக்களித்து விட்டேன்!

    ReplyDelete
  21. //நாம் நல்ல விதைகளை விதைத்து விட்டு செல்வோம். பின்னால் வரும் நம் வாரிசுகளுக்கு உதவக்கூடும்.//
    Sure anna..

    ReplyDelete
  22. வாழ்த்துகள் சென்னை பித்தன். இங்க ஒரு வயசான அம்மா வாக்குச் சாவடி அதிகாரியிடம் வந்து சண்டை போட்டார். எனக்கு மட்டும் கேஸ் அடுப்பு வரலை. அந்தம்மா ஓட்டு போட வரல. நியாயம் கேட்க வந்தாரம். காவல் துறை அப்படியே தூக்கிக் கொண்டு வெளியே போய் சேர்த்தார்கள்.

    கலைஞருக்கு நன்றி.

    ReplyDelete
  23. வருக இளங்கோ.

    நன்றி வித்யா சுப்ரமணியம். வாய்ப்பு உண்டான்னு தெரியல. காரணம் காங்கிரஸ் கட்சி பற்றி உங்களுக்கு தெரிந்தது தானே. போன பதிவில் தமிழ் உதயம் சொல்லியிருப்பதை பாருங்க.

    ReplyDelete
  24. ஆசிரியரே தேர்தல் அதிகாரி பணியிலும் உள்ளே வந்த இருக்கீங்க. நன்றி.

    மிக்க நன்றி ரமணி

    ராஜ நடராஜன்

    நசர் ஒரு மப்போட தான் இருப்பாரு போலிருக்கு. நான் எழுதியதை வரிக்கு வரி மேய்ந்த விதம் புரிகின்றது.

    ReplyDelete
  25. சித்ரா

    நண்பர் தொப்பீ போல உங்க கணினியில் ஏதாவது ஏற்பாடு செய்து வச்சுருக்கீங்களா? வெளியான கொஞ்ச நேரத்தில வந்து விடுறீங்க. நன்றிங்க.

    ReplyDelete
  26. நல்ல பதிவு. நிறைய யோசனைகள்.இன்னும் நிறைய ஐடியாக்கள் என் கைவசம் உண்டு. நான் இப்போது சொன்னால் கலைஞர் காப்பி அடித்து விடுவார்.

    ReplyDelete
  27. "அடுத்த நொடியில் என்ன நடக்கும் என்று தெரியாமல் நகர்ந்துகொண்டே இருப்பதுதானே வாழ்க்கையின் சாரமே."

    இது அரசியல்வாதிகளுக்கும் உண்டுங்கோ அன்பின்.

    அப்படா...தேர்தல முடிச்சாச்சு..

    ReplyDelete
  28. நாம் நல்ல விதைகளை விதைத்து விட்டு செல்வோம். பின்னால் வரும் நம் வாரிசுகளுக்கு உதவக்கூடும்.

    நல்லது நடக்க வேண்டும் என்ற தங்களின் நோக்கம் நிறைவேற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  29. எவ்வளவோ சொல்றீங்க ஆனா பாருங்க மொத்தம் 75%. ஆனா கொடுமை, சென்னையில மற்ற இடங்களை விட குறைச்சல். எனக்குத் தெரிந்து பலர், ஊட்டி, கொடை போய்விட்டார்கள்.

    ReplyDelete
  30. நல்ல பதிவு நல்ல கருத்து தொடரட்டும் பணி.வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழக இருக்கட்டும் வாழ்க வளமுடன் மென் மேலும் சிறந்து வளர பணி சிறக்க வாழ்த்துக்கள் subburajpiramu@mail.com

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.