சமீப காலமாக ஒவ்வொரு நாடுகளிலும் மக்கள் புரட்சி தீ போல் பரவிக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் இது போன்று வருமா? ஆட்சியாளர்களுக்கு அடிவயிற்றில் சுரக்கும் அமிலம் போல உள்ளே இருந்து கொண்டு தான் இருக்கும். காரணம் இன்றைய இணைய வழி தொடர்புகள். இணையம் மூலம் புரட்சி உருவாகின்றதோ இல்லையோ அந்தந்த நாடுகளில் நடந்து கொண்டிருக்கும் அடக்குமுறை அராஜகங்களை வெகு எளிதாக வெளி உலகத்திற்கு கொண்டு வர முடிகின்றது.
சில நாட்களுக்கு முன் மகளிர் தினத்தில் திருப்பூரிலும் ஒரு அதிசிய புரட்சி நடந்தது. இந்த புரட்சி அடித்தட்டு மக்களால் முன்னெடுக்கப்பட்டதல்ல. முழுக்க முழுக்க சுகவாசிகயாக வாழ்ந்து கொண்டிருந்த சாயப்பட்டறை முதலாளிகளின் மனைவிமார்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் உருவாக்கியதாகும்.
குறிப்பிட்ட சாயப்பட்டறைகளில் பணிபுரிந்து கொண்டிருக்கும் பெணக்ளும் ஒன்று சேர்ந்து திருப்பூர் டவுண்ஹால் என்ற பகுதியில் சாலையில் திடுமென வந்து உட்கார்ந்து விட்டனர். இந்த பகுதி சென்னையில் உள்ள அண்ணாசாலை போலவே முக்கியமான வாகன போக்குவரத்து நிறைந்த பகுதியாகும். அருகே ரயில் நிலையம் இருப்பதால் பரபரப்புக்கு என்றும் பஞ்சமிருக்காது. அருகே உயர்ந்து செல்லும் மேம்பாலமும் ஒன்று சேர அமைந்து இருந்த காரணத்தால் வந்து போய்க் கொண்டிருக்கும் வாகன வரிசைகள் தடுமாறி நிற்க அதிகாரவர்க்கத்தினர் அணிவகுக்கத் தொடங்கினர். கூட்டத்தில் இருந்த பெண்களிடம் சமாதான பேச்சு வார்த்தைக்கு வாருங்கள் என்றனர். .
பிரபல சாயப்பட்டறை உரிமையாளரின் மனைவி உருவாக்கிய திட்டத்தின்படி ஏறக்குறைய 24 மணிநேரத்தில் வாய்வழி செய்திகள் பரப்பப்பட்டு முக்கிய சாயப்பட்டறை உரிமையாளர்களின் மனைவிமார்களும் நடுவீதியில் அமர பரபரப்பு தொற்றிக் கொண்டது. நீதிமன்றம் தலையிட்டு திருப்பூரில் உள்ள மொத்த சாயப்பட்டறைகளையும் மூட உத்தரவு பிறபித்த காரணத்தால் கடந்த இரண்டு மாதங்களாக திருப்பூரை நம்பி வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் வாழ்க்கையை இருள் பரவத் தொடங்கியுள்ளதை எந்த ஆட்சியாளர்களும் கண்டு கொள்ளவில்லை. காரணம் இது தேர்தல் சமயம் என்பதால் ஊடகங்கள் கூட இந்த பிரச்சனையை துணுக்குச் செய்தியாகவே போட்டுக் கொண்டிருக்கிறது.
கடந்த இரண்டு மாதங்களில் 35 000 பேர்கள் தங்களுடைய குடும்ப அட்டையை (ரேசன் கார்டு) முகவரி மாற்றிக் கொண்டு நகரத் தொடங்கிவிட்டார்கள். மேலும் இரண்டு லட்சம் பேர்கள் முகவரி மாற்றத்திற்காக விண்ணப்பித்துள்ளார்கள். கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக இதே தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்தவர்களின் வாழ்க்கை இனி எப்படி இருக்கும் என்பது மிகப் பெரிய கேள்விக்குறி?
இந்த சாயப்பட்டறையைச் சார்ந்த தொழிலில் மூன்று விதமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இருக்கிறார்கள். தொழிலாளார்களாக, அலுவலக பணியாளர்களாக நிர்வாகத்தில் உயர்பதவியில் இருப்பவர்கள் என்று மூன்று வகையினருக்கும் இனி எந்த தொழிலை கற்றுக் கொண்டு எங்கே செல்ல முடியுமோ? கிராமப் பகுதிகளில் இருந்து வந்து வேலை செய்து கொண்டிருக்கும் இளைஞர்கள் இப்போது சாயப்பட்டறை முதலாளிகளிடம் சொல்வது என்ன தெரியுமா?
"எங்களுக்கு வேறு வேலை எதுவும் தெரியாது? ஊரில் போய் இருக்கவும் முடியாது. எங்களுக்கு மூன்று வேளை சோறு மட்டும் போடுங்க. பிரச்சனை முடிந்தவுடன் சம்பளம் கொடுங்க" என்கிறார்கள்.
சாயப்பட்டறை முதலாளிகளுக்கு வங்கி ஒரு பக்கம். இது போன்ற தொழிலாளர்களின் நெருக்கடி மறுபக்கம். அரசாங்க சட்டதிட்டத்தின்படி செயல்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கும் பேரிடியாக நீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது.
2006 ஆம் ஆண்டு இந்த பிரச்சனை சூடுபிடிக்கத் தொடங்கிய போது இந்த மனைவிமார்கள் எவரும் தங்கள் கணவர்களுக்கு அறிவுரை எதுவும் சொல்லியிருப்பார்களா என்று தெரியவில்லை. முதல் நாள் நடுத்தெருவில் உட்கார்ந்து தங்கள் எதிர்ப்பைக் காட்டிய பெண்கள் அடுத்த நாள் மாவட்ட ஆட்சியர்களுக்கு தங்களது கோரிக்கைகளை கொடுக்க ஊர்வலமாக வந்த கூட்டத்தில் பாதி பெண்களை காணவில்லை. குளுகுளு வசதியில் வாழ்ந்தவர்களுக்கு கொளுத்தும் உஷ்ணம் அதிகமாக இருந்த காரணத்தால் ஆளைவிட்டால் போதும் என்று பாதிப்பேர்களை காணவில்லை.
மற்றொரு ஆச்சரியம் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக சாயப்பட்டறை சங்கம் மட்டுமல்ல ஏற்றுமதியாளர் சங்கம் முதல் திருப்பூரில் உள்ள மற்ற எந்த துறை சார்ந்த சங்கமும் ஆதரவு கொடுக்கவில்லை. கலந்து கொள்ளவும் இல்லை. நடு இரவில் எந்தந்த சாய்ப்பட்டறைகள் ஆற்றில் சாயத்தண்ணீரை கலந்து விடும் போது கூட எவரும் கண்டும் காணாமல் இருக்க "இன்று உன்னால நான் கெட்டேன். என்னால நீ கெட்டாய் "என்று நடுத்தெருவுக்கு கொண்டு வந்து விட்டுள்ளது.
ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமையும் இல்லை. உண்மையான அக்கறையும் இல்லாத காரணத்தால் காலம் கடந்தும் இந்த தெருமுனைப் போராட்டம் வெறும் கேலிக்குறியாகவே போய்விட்டது. மொத்தத்தில் தவறான சமயத்தில் சரியான விழிப்புணர்வு.
வளம் கொழிக்கும் டாஸ்மார்க்கை அரசாங்கம் எடுத்து நடத்தும். ஆனால் இது போன்ற சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அரசாங்கம் ஆதரவு அளிக்க முன்வருவதில்லை. காரணம் உள்ளேயிருக்கும் முதலாளிகளுக்கிடையே உள்ள ஆயிரத்தெட்டு அரசியல் நிலைப்பாடுகள் இருப்பதால் எட்டு திசையிலும் 64 குதிரைகள் பூட்டி இந்த பிரச்சனைகள் தொடக்கம் முதல் வெவ்வேறு பாதையில் சென்று கொண்டிருக்கிறது. நீதிமன்றம் ஆப்பு சொருகிய பிறகு இனி எந்த ராஜா வந்த ஆப்பை கழட்டப் போகிறாரோ? அதற்குள் இன்னும் எத்தனை லட்ச குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வரப்போகின்றதோ?
அதைத்தான் கூட்டத்தில் பேசிய ஒருவர் இப்படிச் சொன்னார்
"ஜட்ஜ் அய்யா ஜட்டி போடுவாரா? அந்த தீர்ப்பை எழுதுவதற்கு முன்பு இந்த பிரச்சனையில் தமிழ்நாட்டு அரசாங்கம் என்ன செய்தது என்று பார்த்து எழுதியிருக்கக்கூடாதா? "என்றார்.
இதன் தொடர்பான முந்தைய கட்டுரைகள்
அழுவாச்சி காவியம் கதாநாயகன்
//ஜட்ஜ் அய்யா ஜட்டி போடுவாரா? //
ReplyDelete:)
அவலங்கள் தொடர்ந்துக்கொண்டேத்தான் இருக்கு, என்று தான் விடிவுகாலம் பிறக்கும்?
ReplyDelete//மொத்தத்தில் தவறான சமயத்தில் சரியான விழிப்புணர்வு.//
ReplyDeleteஎதுவுமே சரியான நேரத்தில் நடந்தால்தான் பயனளிக்கும் என்பதை அழகாகச் சொன்னீர்கள்!
///ஜட்ஜ் அய்யா ஜட்டி போடுவாரா?///
ReplyDeleteஎப்படிங்க இப்படியெல்லாம்?
எனது வலைபூவில் இன்று:ஜப்பான் சுனாமி பேரழிவு - வீடியோ
சரியான நேரத்தில் சரியான பதிவு
ReplyDeleteதேவையான நேரத்தில் தேவையான பதிவு..
ReplyDelete// வளம் கொழிக்கும் டாஸ்மார்க்கை அரசாங்கம் எடுத்து நடத்தும். ஆனால் இது போன்ற சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அரசாங்கம் ஆதரவு அளிக்க முன்வருவதில்லை.//
ReplyDeleteவேதனை....
இது ஒரு சமூகப் பிரச்சினை. அரசு தலையிட்டு ஆவன செய்ய வேண்டும். இது அவர்கள் கடமை.
ReplyDeleteஒருவருக்கு ஒருவர் ஒற்றுமையும் இல்லை. உண்மையான அக்கறையும் இல்லாத காரணத்தால் காலம் கடந்தும் இந்த தெருமுனைப் போராட்டம் வெறும் கேலிக்குறியாகவே போய்விட்டது. //
ReplyDeleteதிட்டமிடல்களே சில நேரம் தோல்வியடவதுண்டு.. அதிலிருந்து பாடம் கற்று தெளிவோடு முன்னெடுக்கலாம்.. இருப்பினும் வேகம் வந்துள்ளதே நல்ல அறிகுறி.. அதை தேய விடாமல் வளர தொடரணும்..
//ஜட்ஜ் அய்யா ஜட்டி போடுவாரா? //
ReplyDeleteகொஞ்சம் நெருடல்..:((.. ( கட்டுரையின் தரத்தை குறைப்பதாக என் கருத்து )
பகிவுக்கு நன்றி நண்பா
ReplyDeleteவாழ்வாதாரத்தை நசுக்கியே ஆட்சி செய்யும் அவலம் இதற்க்கு சட்டம் வேறு துணைக்கு போகும் கொடுமை!
தலைப்பை மாற்றுங்க அன்பின். விசயம் பெருசு தலைப்பால் தரம் குறைந்ததாக தெரிகிறது.
ReplyDeleteஇன்னும் எழுதலையேன்னு நினைச்சேன் சார், எழுதிட்டீங்க, இருந்தாலும் ஜட்ஜ் ஐயா ஜட்டி போடுவாரான்னு ஒருவரியில சொன்னா படிப்பவங்களுக்கு தப்பா தோணும்ன்னு தோணுது சார், மொத்தமா இந்த பிரச்ச்னையால ஜட்டி பனியன் இப்படி எல்லாவற்றோட உற்பத்தியும் பாதிக்கப்ப்டுது, அதுல ஜட்ஜ் ஐயா குடும்பமும் பாதிக்கப்படலாமில்லையான்னு அவரு பேசியிருப்பாருன்னு நினைக்கிறேன், சரியா சார்?
ReplyDeleteஉங்களுக்காக...
ReplyDeletehttp://6.latest.shalinsmangar.appspot.com/view-video/kanimozhi-angry-speech-part-1jeyamohan-mentally-retarded/?v=NyzbWEWJu1Q
என்னங்க இப்படி உளர்றா
பகிரிந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி.
ReplyDeleteஎல்லோருமே தலைப்பு குறித்து தங்களுடைய ஆதங்கத்தை பதிவு செய்து இருக்கீங்க. ஆனால் பேசியவர் சொன்ன பல கருத்துக்களை இங்க எழுதவில்லை. சில விசயங்களை மட்டும் பகிர்ந்து கொளகின்றேன்.
இந்த சாயப்பட்டறை பிரச்சனைகளை ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக பார்க்கிறார்கள்.
1. பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்களை பாழ்படுத்த காரணமாக இருந்தது இந்த சாயப்பட்டறைகளே?
2. எதிர்கால சமூகத்தை சீரழிக்கும் இந்த தொழில் கூட தேவையில்லை என்பதாகக்கூட சிலர் எழுதி உள்ளனர்.
என்னுடைய பார்வையில் முழுக்க முழுக்க இது அரசாங்கத்தின் தவறு. பொது சுத்திகரிப்பு நிலையம், தனியார் சுத்திகரிப்பு நிலையம் இரண்டுமே திருப்பூரில் உண்டு. இன்று எத்தனையோ நவீன வசதிகள் உண்டு. பொது சுத்திகரிப்பு மற்றும் தனியார் சுத்திகரிப்பு நிலையம் எந்த அளவிற்கு இந்த நச்சு சாயத்தை வெளியேற்றுகின்றது என்பதை உட்காரந்த இடத்தில் கணினி வழியே கட்டுப்படுத்தி ஒரு முறைப்படுத்தும் அளவிற்கு வாய்ப்பு உண்டு. ஆனால் சாயப்பட்டறை முதலாளிகள் முதல் குற்றவாளிகள் என்றால் இதை கவனமாக கையாளவேண்டிய மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரவர்க்கத்தினர் இன்று வரைக்கும் செய்து கொண்டிருக்கும் அத்தனை வேலைகளையும், முறையற்ற தன்மைகளையும், கேவலமான செயல்பாடுகளையும் விரிவாக எழுதினால் தலைப்பை விட அசிங்கமாக இருக்கும்.
மொத்தத்தில் பணத்திற்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கும் மனிதர்களுக்கு மத்தியில் தான் இந்த வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஓடிக் கொண்டு இருக்கிறது. மீண்டும் வந்து வாய்ப்பு இருக்கும் போது பேசுகின்றேன்.
அட இவ்வளவு நடந்து இருக்கா.. அதுக்கும் இந்த தலைப்பு தேவையில்லதான் ஜோதிஜி..
ReplyDeleteஉங்க வலைத்தளம் நல்ல பேரோடு இருக்கிறது.. இந்த மாதிரி பரபரப்பு வேண்டாமே..
திருப்பூர் மாதிரியான தொழில்நகரங்களை அரசியல் லாபநட்டக் கணக்குகள் இன்றி, நேரிய, தொலைநோக்குப் பார்வையுடன் நிர்வகித்தல்தான் ஒரு மக்கள்நலன் சார்ந்த அரசின் நோக்கமாக இருக்க வேண்டும். ஆனால் "எங்கெங்கு காணினும் ஊழலடா" என்று இருக்கும் வரை திமுக ஆனாலும் சரி, அ-திமுக ஆனாலும் சரி குரங்கு கைப் பூமாலைதான்.
ReplyDeleteஜோதிஜி!பதிவின் சாரம் வழக்கம் போல் உங்கள் சமூக அக்கறையிலான ஒன்றாக இருந்தாலும் ஜோதிஜியிடமிருந்து இந்த மாதிரி தலைப்பா என்றே தோன்ற வைத்தது.
ReplyDeleteஇரவு வானம் கொடுத்த விளக்கம் தலைப்பு சரியே சொல்ல வைக்கிறது.
ஏற்றுமதியாளர்களிடம் ஒற்றுமையும்,பணம் பார்ப்பதற்கும் அப்பால் சமூக அக்கறையும் இருந்தால் பாதிப்பிரச்சினைகளை தீர்க்க இயலும் என நினைக்கிறேன்.
பெட்டி கட்டிக்கொண்டு சென்னை துறைமுகத்துக்கு பொருட்கள் கொண்டு செல்லும் சாலையின் நெரிசல்,வண்டி ஓட்டுனர்களின் துயரங்கள் கூட சாயப்பட்டறையில் துவங்கி டாலராக மாறும் வரையிலான ஒரு தொடர்கதை என்பேன்.
ராஜ நடராஜன்
ReplyDeleteதமிழ்நாட்டில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது சாலை வசதிகள் ரொம்பவே அற்புதம். அடிப்படை கிராமங்களை கணக்கில் கொண்டு வரவேண்டும். நீங்களே இன்னும் 20 மாதம் கழித்து கோவைக்கு வரும் வெளிநாடு போன்ற அற்புத சாலையில் தான் பயணிக்கப் போறீங்க. ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன்பு தூத்துக்குடிக்கு செல்லும் வாகன ஓட்டுநர் பட்ட பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. அதுவும் மதுரையில் இருந்து தூத்துக்குடி போய்ச் சேருவதற்குள் செத்து சுண்ணாம்பாக மாறிவிடுவார்கள். ஆறு மாதத்திற்கு முன்பு இதே துறையில் இருக்கும் நண்பரிடம் உங்கள் வலைதளத்தில் இதைப்பற்றி எழுதுங்கள் என்றேன்.
அவர் எழுதுவார் என்று இன்றும் காத்துக் கொண்டு இருக்கினறேன்.
சார் ஜட்ஜ் அய்யாக்கள் என்னிக்கி ஜட்டி போட்டிருக்கானுங்க,எல்லாம் பட்டாபட்டி டவுசர்தான்,அப்போதானே சார் ஃப்ரீயா இருக்கும்.அருமையான பதிவு,உங்க தலைப்பை மிகவும் இரசித்தேன்.இனி நாமெல்லாம் சாயம் போடாத வெள்ளை ஜட்டி தான் போடனும் போல.
ReplyDeleteசரியான நேரத்தில் சரியான பதிவு.
ReplyDeleteஇப்போதெல்லாம் தமிழ்மணத்தில் மணத்துக்கு பதிலாக நாற்றமே எடுக்கின்றது.அதில் ஒரே விதிவிலக்கு என்றால் உங்கள் பதிவு தான்.மனமார்ந்த வாழ்த்துக்கள்.உங்களிடம் பிடித்ததே சுயபுராணம் பாடாமல்,எல்லாப்புகழும் தேவியருக்கே என விட்டுவிடுவது தான்.சாலபாகுந்தி.மேலும் உங்கள் இடுகைகளில் தகவல் பிழைகளோ அல்லது சொற்குற்றம் பொருட்குற்றமோ அறவே இல்ல,ஆக மொத்தம் நீங்கள் எழுதும் ஒவ்வொரு பதிவுமே புத்தகமாக போடவேண்டியவைதான்.தமிழ்மணம்,இண்ட்லி போன்ற திரட்டிகள் உங்களால் பெருமை கொள்கின்றன.நான் ஒரு பிரபல பதிவர்,என் பெயரை போட்டால் தீர்ந்தது.சாதிக்காரர்கள் ஒன்றாகிவிட்டனர் என்னும் பெயர் வந்துவிடும்.உங்கள் நாடார்களைப்பற்றிய கட்டுரைக்கு மிக்க நன்றி.சாணார்களாய் இருந்தவர்கள் நாட்டார்களாய் நிமிர்ந்து நின்றதை நீங்கள் புத்தகமாக போட்டால் தன்யனாவேன்.அதற்கு பொருளுதவி செய்யக்காத்திருக்கிறேன்.
ReplyDeleteமெயிலில் வருகிறேன்.நன்றி வணக்கம்.
முதல் மற்றும் இரண்டாம் பத்திகளில் முறையே அதிசய,பெண்களும் என்றிருக்க வேண்டும்.
ReplyDeleteஉதயகுமார் காலை வேலையில் உங்களின் வார்த்தைகள் மிக்க மகிழ்ச்சியை தந்தது. நீங்கள் கொடுத்துள்ள விமர்சனத்தில் சில ஆச்சரியங்கள். இந்த பிரபல்யம் புகழ் என்பது குறித்து மாலன் இந்த வாரம் புதிய தலைமுறையில் என் ஜன்னலுக்கு வெளியே என்று எழுதிக் கொண்டு வரும் தொடர் கட்டுரையை படித்து முடித்ததும் நானும் ஒரு கட்டுரை எழுதினேன்.
ReplyDeleteநேற்று வெளியிடலாம் என்று யோசித்து பதிவேற்றும் சமயத்தில் மின்சாரம் கவிழ்த்து விட்ட காரணத்தால் மொத்தமும் ஹோகயா.... மறுபடியும் இனி எழுத வேண்டும்.
வருக வருக....
உண்மைதான் இளையோன்.
ReplyDeleteகுமார் உங்கள் அடுத்த சிறுகதையை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.
நீதிபதி குலசிங்கம். அய்யா உண்மையிலேயே நீங்களும் நீதிதுறையில் இருப்பவர் தானோ? நீங்கள் சொன்னதைத்தான் நண்பரும் அழைத்துச் சொன்னார்.
ReplyDeleteஇந்த பிரச்சினையை தேர்தல் பிரச்சினையாக்க திருப்பூர் தொழில் அதிபர்களும், சில அமைப்புகளும் முடிவு செய்தனர்.எனவே திருப்பூர் மகளிர் தொழில் பாதுகாப்பு குழு என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் ஆயிரக்கணக்கானவர்களை திரட்டி கடந்த வாரம் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ReplyDeleteஅதற்கு அடுத்த நாளே கலெக்டரிடம் மனு கொடுக்கவும், தொடர்ந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் மனு கொடுக்கவும் முடிவு எடுத்து பெரும் கூட்டம் கூட்டினார்கள்.எந்த ஒரு அரசியல் கட்சியின் பெயரும் சொல்லப்படாததால் இந்த போராட்டத்துக்கு பலரும் ஆர்வத்துடன் ஆதரவு அளித்தனர்.இதனால் மாவட்ட நிர்வாகத்திற்கும், போலீசாருக்கும் பெரும் தலைவலி ஏற்பட்டது.இதைத்தொடர்ந்து அவர்கள் இன்று(14 ந்தேதி )லட்சக்கணக்கான போது மக்களை திரட்டி உண்ணாவிரதம் மேற்கொள்வது என்றும், அதை தொடர்ந்து திருப்பூரை ஸ்தம்பிக்க செய்யும் அளவுக்கு வேலை நிறுத்த போராட்டத்தை அறிவிப்பது என்றும் இதன் மூலம் தேர்தல் வருவதற்குள்ளாகவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது என்றும் முடிவு செய்து இருந்தார்கள்.
ஆனால் மாவட்ட போலீசாரின் மிரட்டலை தொடர்ந்து போராட்டக்குழு களைந்து விட்டது ஜி .தனியா கூப்ட்டு போராட்டக்குழுவை வழி நடத்தியவங்கள வறுத்து எடுத்துட்டாங்க. டவுன் ஹால் மேடையல கதை வசனம் பயங்கரமா பேசுன பொம்பளைங்க இனி ஜென்மத்துக்கும் போராட்டம் நடத்தலாம்னு நெனைக்க கூட முடியாது.அந்த அளவுக்கு மன ரீதியா அவங்கள ஆப் பண்ணிட்டாங்க.வாழ்க்கையே முடிஞ்சு போயிடுமோ னு பயந்து போராட்டம் நடத்துன குழு இன்னிக்கு எந்த சந்துல பூந்து ஓடிப்போனாங்கனு தெரியல.குட்ம்பத்தோட உள்ள தூக்கி போட்ருவோம் னு சொல்லி மிரட்டி சாதுர்யமா இந்த போராட்டத்த ஆப் பண்ணுன பெருமை திருப்பூர் மாவட்ட போலீசையே சேரும்.இதுக்கு பின்னால நின்னு வேல செஞ்ச இந்து முன்னணி அமைப்பும் அவங்கள ஒன்னு சேக்க பாத்துது ம் ஹூம் .. இனி சாய பிரச்சினைக்காக யாரும் போராட வரது கஷ்டம்தான்.
மணி இந்த செய்தியை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகத்தான் அழைத்தேன். பேச வாய்பில்லாத காரணத்திற்காக இந்த செய்தியின் நம்பகத்தன்மை குறித்து அறிய முடியாத காரணத்தால் எழுத வில்லை.
ReplyDeleteவீதிக்கு வந்து போராடுபவர்களின் உண்மையான வலியும் வேதனைகளும் இப்போது இந்த பெண்களுக்கு புரிந்து இருக்கக்கூடும். மற்றொன்றையும் யோசித்துப் பாருங்க. இதையே ஒன்று சேர்ந்து நான்கு மாதங்களுக்கு முன்பு மொத்தமாக ஒன்று திரட்டி போராடியிருந்தால் இன்று நிலமையே வேறு விதமாக போய் இருக்கக்கூடும்.
இப்போது சாயப்பட்டறைகளைத் தேடி வடநாடுகளுக்கு படையெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். அங்குள்ள அரசு ஆதரவு, அந்தந்த சாயப்பட்டறை நிறுவனங்கள் வைத்திருக்கும் நிர்வாக அமைப்பு போன்றவற்றை இங்குள்ள முதலாளிகள் ஒவ்வொருவரும் புரிந்து கொண்டு இருப்பார்கள்.
சரி இப்போதாவது மனம் மாறியிருப்பார்கள் என்று நினைக்குறீங்களா?
நண்பர் சொன்ன கருத்து தான் சரியாக இருக்கும்.
அரசாங்கம் ஆதரவு கொடுத்த கடலில் கலக்கும் திட்டத்திற்கு திட்ட முன்வரைவு ஏற்பாடு செய்து கொடுத்தாலும் வெளியே திறந்து விட காத்திருக்கும் இவங்கள திருத்த புதிய ஜென்மம் ஒருவர் எடுத்து வரவேண்டும்.
(ஒற்றுமை + சமூக சிந்தனை) - (சுயநலம் + சூழ்ச்சீ) = குறுகிய கால லாபம் + நீண்டகால சொந்த செலவில் ஆப்பூ.
ReplyDeleteதொழிலுக்காக ஒவ்வோரு பிரிவினர் போராட்டம் நடத்தும்போதும்
புகழ் பெற்ற ஏற்றுமதியாளர்கள் தங்கள் லாபம் மட்டும் முக்கியம் என போரட்டத்துக்கு ஆதரவளிக்காமல் ஆலைகளை அலுவலகங்களை இயக்கினர்.
முன்பு கழிவு நீரை திறந்து விடும்போது சுயநலம் மட்டும் முக்கியம் என செய்து காட்டினர்.
அதேபோல் அரசும் இப்போது செய்து காட்டுகிறது..
இவர்களின் ஒற்றுமையை பார்த்த அரசாங்கம் கொடுத்த பதில் இது.
இலங்கை பிரச்சனையை கொஞ்சம் உற்று நோக்கினால்....
ReplyDeleteதமிழர்கள் திரண்டு இருந்தால் மணித்துளிகளில் இலங்கை அரசு பணிந்து இருக்கும். ஆனால் தமிழன் என ஒன்றுபடாமல் பதவி, பணம், சாதி என தலைவர்களின் ஒற்றுமை இன்மையால் இன்றும் லட்சக்கணக்கில் மக்கள் முட் கம்பிகளுக்கு பின்னால் உள்ளனர்.
ஒற்றுமையிருந்திருந்தால் தமிழினம் உலகின் ஆளும் இனமாக.. இருந்திருக்க தமிழ் உலக ஆட்சி மொழியாக கூட இருந்திருக்க வாய்ப்புள்ளது...
ஆனால் ஒற்றுமையிமை யார் கொடுத்த சாபமோ போங்க..
தவறான சமயத்தில் சரியான விழிப்புணர்வு.//
ReplyDeleteசரியான பதிவு.
எல்லா பிரச்சினைகளையும் பணம் மூலமாகவே தீர்த்துவிடலாம் என்று நினைக்கும் ஆலை அதிபர்கள் இம்முறை வழக்குப் போட்ட விவசாயிகளிடம் பணம் கொடுக்கலாம் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். வேலை வாய்ப்பு என்ற அளவில் இந்த பிரச்சினையை அளவிட முடியாது. எல்லோரும் நிழலில் வேலை செய்ய வேண்டும் ஃபேனுக்கு அடியில் சொகுசாக இருக்க வேண்டும் என்ற சிந்தனையின் பரவல் தான் இந்த நிலைக்கு காரணம் அதைப் பயன் படுத்தி இந்த அதிபர்கள் வேலை வாய்ப்பு வேலை வாய்ப்பு என்று பூச்சாண்டி காட்டுகிறார்கள்.
ReplyDeleteநக்கீரனில் ஒருவர் தனக்கு ஆறு குழந்தைகள் என்றும் அதில் மூன்று பேர் பெரியவர்களாகி இதே தொழிலில் வேலைக்கு வந்து வாழ்கையை எளிதாக வாழ்ந்து வந்ததாக சொல்கிறார். இதிலிருந்து சில உண்மைகளை புரிந்து கொள்ளலாம்.
இப்பொழுது வேறு இடங்களுக்கு நகர்த்தி அந்த இடங்களையும் நாறடிக்க முடிவு செய்வார்கள். இதில் நீதிபதி என்ன செய்ய முடியும் அவர் முடிவு சரியானது தான். அவரை இழிவு படுத்துவது மாதிரியான தலைப்பு தேவை அற்றது. முதலில் அப்படி சொன்ன நபரின் தட்டில் அந்த தண்ணீரில் இருந்து விளைந்த காய்கறியை வைக்கலாம் அவர் சாப்பிடட்டும் அந்த தண்ணீரை அவர் குடிக்கட்டும் பின்னர் ஜட்ஜ் அய்யா ஜட்டி போடுவதைப் பற்றி யோசிக்கலாம்.
செந்தில்
ReplyDeleteகர்நாடகத்தில் இருந்தாலும் சரியா சில விசயங்களை கணித்து இருக்கீங்க. உண்மைதான். கடலூர் பக்கம் பல ஏக்கர்களை வளைத்துப் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
கடைசி வரியை ஒத்துக் கொள்வதை தவிர வேறு ஏதும் சொல்லத் தெரியல.
இது குறித்து கொ மு க பதிவில் எழுதுகின்றேன்.